#Twist21 #No2
#வதம்_செய்யாதே_மாதவா
வாசிப்பு பிரியனான ஆதவனின் கைகளில் ஒரு நாட்குறிப்பு வந்து சேர அதை வாசித்து, முடிவில்லாத அதனின் முடிவை தேடிய அவனின் பயணம் வெற்றி பெருமா? அது எங்கு கொண்டு அவனை சேர்க்கும்?
வெற்றி அவன் காதல் கொண்ட அருவி அவனை சில பல காரணங்களால் ஒதுக்க, அவளின் கோபச் செயலால் பல மாற்றங்கள் பலரின் வாழ்வில்... வெற்றியின் காதலும் வெறுப்பாய் மாற, விதி இணைத்து விளையாடுது..
அருவி ஏன் வெற்றியை ஒதுக்குறா? ஒதுக்கம் விருப்பம் ஆகுமா? வெற்றி வெறுக்க என்ன காரணம்? அவனின் வெறுப்பு காதலாய் மாறுமா? இவளால் யார் வாழ்வு என்ன ஆனது? நேர் ஆகுமா?
நிதானம் இல்லாது நினைத்தது எல்லாம் பேசினால் ஏற்படும் விளைவுகள், கண்ணால் காண்பது பொய் என்று யோசிக்காது விடுவதால் ஏற்படும் விளைவுகள் தான் கதை...
எனக்கு அருவி அண்ட் தென்றலின் மீது சில வருத்தங்கள் உண்டு.. அருவி மேல் அதிகம்... அவளின் பேச்சுக்கு, செயலுக்கு என்ன தான் காரணம் சொன்னாலும் கொஞ்சம் கடுப்பு தான்... எனக்கு பாவமா தெரிஞ்சது வசி தான்?? வீரா அண்ட் அரசியின் வருகையால் அவன்தான் ரொம்பவே பாதிக்கப்பட்டு விட்டான்...
தென்றல் செய்தது சரியா தவறா தெரியலை.. ஆனால் நடந்தது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று தெரியாது பண்ணியது தப்பு... என்ன தான் அவள் நிலை என்றாலும் பாவம் தான் மத்தவங்க.. வாசுவின் சொதப்பல்கள் ஒவ்வொருமுறையும் கீர்த்தியை தள்ளி போக வச்சது??? பாவம் என்ன தான் பண்ணுவான் நல்லது நினைச்சு தான் பண்ணான் இப்படி ஆகும் என்று அவனுக்கு எப்படி தெரியும்???
சரசுவின் ஆதவன் மீதான புரிதல் சூப்பர்... அவனுக்காக, அவனை அனுப்புவது சூப்பர்... கவினின் நட்பு?? இருவர் பக்கமும் பார்த்து இருக்கான்.. என்ன தான் கோபம் சொன்னாலும் அவைங்க வேலையில் சரியாத்தான் இருந்து இருக்கான்???
வினை இவன் தப்பு பண்ணிட்டு அப்பறம் என்ன குற்ற உணர்வு அதுக்கு பலிகடா வீராவா???
ஏன் டா எல்லாரும் ஓவர் ரியாக்ட் பண்ணுறீங்க.. குடும்பத்தில் ஒருவருக்கு கூடவா மயக்கம் வந்தா என்ன என்று யோசிக்க முடியாது??? ஓவர் பாசத்தை பொழியுறானுங்க, இதில் எல்லாருக்கும் பிள்ளைகள் வேற???
வெற்றி என்ன தான் நிதானமாக இருந்தாலும், இவனும் அவசரப்படுரான் தான்... நல்லவேளை தங்கை ஆக்காமல் விட்டிங்களே சந்தோஷம்??????.. அதுவும் மார்க்ஸ் எல்லாம்???
வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????