ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

19 நிந்தன் காதல் தித்திக்குதே. கதைக்கான விமர்சனங்கள்

T21

Well-known member
Wonderland writer
19 நிந்தன் காதல் தித்திக்குதே. கதைக்கான விமர்சனங்கள்
 
கதை எண் 19

நிந்தன் காதல் தித்திக்குதே

தாரா, கிருஷ்ணா இருவரும் நண்பர்கள் அர்ஜுன் நம் நாயகன் தாராவின் முறை பையனும் இவன் தான் இவனுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் நிலையில் தாராவை காரணம் காட்டி இவனின் விஷேசம் நிற்க இவனுக்கும் தாரவிற்கும் திருமணம் நடைபெறுகிறது எதிர்பாராத இந்த திருமணம் வெற்றி அடையுமா?? அர்ஜுன் விஷேஷம் நிற்க என்ன காரணம் என்று கண்டு பிடிக்க முயற்சி செய்யும் நிலையில் திடிக்கிடும் திருப்பம் நிகழ அதனால் என்ன சம்பவங்கள் அரங்கேறுமோ??

தாரா அனைவருக்கும் ராணியாக செல்லமாக இருக்கிறாள் ?? கிருஷ்க்கு அவனின் உயிர் தோழி புஜ்ஜிமா ?? இவர்கள் இருவரின் நட்பும் எல்லாம் இடங்களிலும் உறுதுணையாக இருப்பதும் அருமை ??

திடீர் திருமணத்தை தாரா எவ்வாறு எதிர் கொள்வாள்?? தாராவிற்கு ஏற்படும் ஆபத்து சரி ஆகுமா??

அர்ஜுன் நல்ல அண்ணன் சிறந்த கணவன் அதை விட சிறந்த காதலன் இவனின் குட் நைட் ???தான் செம ?? இவனின் காதலும், பொறாமையும் அவ்வளவு அழகு ??

கிருஷ்ணா ஆரம்பம் முதல் இறுதி வரை என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் இவன் தான் மிகவும் அருமையானவன் ?? இவனின் நட்பு, காதல், தாரா மீது செலுத்தும் உன்னதமான அன்பு, அவளை தாயாய், சேயாய் மடி தாங்குவது யாரும் செய்ய யோசிக்கும் ஒரு செயலை கொஞ்சம் கூட யோசிக்காமல் செய்வது ??? இவனுக்கும் ஜனனிக்கும் நடக்கும் சுவாரசியமான சண்டைகள் ??

ஜனனி சரியான அருந்த வாலு தான் இவள் அதுவும் வருணை மரியாதை இல்லாமல் பேசி விட்டு அவங்க அம்மாவிடம் மாட்டி கொண்டு முழிப்பது செம ???

கூட்டு குடும்பத்தோடு அழகிய நட்பு, அருமையான காதல், நகைச்சுவை கலாட்டா, பாசம், துரோகம் எல்லாம் கலந்த என்டேர்டைன்மெண்ட் கதை களம் ???

உங்களின் எழுத்தும் தமிழும் அவ்வளவு அழகு அற்புதம் ?? முகத்தில் ஒரு புன்னகை வருவதை தவிர்க்க இயலவில்லை உங்கள் எழுத்து & காட்சிகள் ?? அதுவும் உங்களின் குட் நைட் தான் வேற லெவல் ???எப்போவுமே மறக்க மாட்டேன் ????

இன்னும் நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ???

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ??

லிங்க் ???

 

Ruby

Well-known member
#Twist21 #No19

#நிந்தன்_காதல்_தித்திக்குதே

நட்பையும், காதலையும் அடைப்படையாய் கொண்ட கதை...

அர்ஜுன் இவன் மனதின் காதலை மறைத்து அம்மா பார்த்த பெண்ணுடன் கல்யாணத்திற்கு தயாராக இவனின் முறைப் பெண் தாராவுடன் சேர்த்து வைத்து நிச்சயம் நின்னு போகுது.. என்ன காரணம்?

இதனால் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு எடுக்க, கூடவே அவனின் தம்பி கிரிஷ் அண்ட் ஜனனி(தாரா தங்கை) அவங்களுக்கும் சேர்த்து கல்யாணம் பண்றாங்க, கிருஷின் காதலால்...

எப்பொழுதும் அர்ஜுன் கிட்ட இருந்து ஒதுங்கி போகும் தாரா, மறுத்தும் நடக்கும் திருமணத்தை எப்படி எதிர் கொள்வாள்? அர்ஜுன் காதலுக்கு பிரதிபலிப்பு இருக்குமா?

இருவேறு சந்தர்ப்பங்களில் தாராவிற்கு ஆக்ஸிடென்ட் நடக்க நூலிழையில் தப்பிக்க, யார் என்று ஆராயும் போது அர்ஜுன் நிச்சயம் நிக்க காரணமும் அவனே என்று தெரிய வருது.. யார் அவன்? தாராவை கொல்ல என்ன காரணம்? அர்ஜுன் நிட்சயத்தை ஏன் நிறுத்தினான்?

கௌசல்யா அண்ட் அவள் அம்மா பாவம் தான்.. ஆனாலும் துவண்டு விடாது நிமிந்து நிக்கிரா??

தாரா இவளின் நண்பன் கிரிஷ் இருவருக்கும் இடையிலான நட்பு அருமை... ஒருவருக்கொருவர் பார்த்து பார்த்து செய்யுராங்க... எந்த நிலையிலும் கிரிஷ் அவனின் தோழியை விட்டு தருவதில்லை.. யாரும் செய்ய தயங்கும் செயல்கள் கூட சாதாரணமா செஞ்சிட்டு போறான்??? ஜனனியுடனான சண்டைகளும், சமாதானமும் லவ்லி

இரு குடும்பத்துக்கும் இடையிலும் சொந்தமும், நட்பும், அன்பும் அருமையா இருக்குது...

குகனின் டே மாமா?? சுவாதி அண்ட் யுகேன் பாசம் எல்லாம் சூப்பர்ப்..

ஜனனி?? இவ சரியான வாலு பிள்ளை... எப்போவும் கிரிஷ் ஆ எதுவும் சொல்லி சரியா அவ அம்மாகிட்ட மாட்டிகிட்டு முழிக்குறா??? கல்யாணம் ஆன பிறகும் நடப்பது தான் கொடுமை ?????

தாரா அண்ட் ஆத்மி இடையிலான கிரிஷின் பாசப் போராட்டம்?? எல்லாம் நல்லா இருக்கு...

அர்ஜுன் அவனின் காதல் நிறைவேற சந்தர்ப்பம் கிடைச்சதும் எல்லாம் அவனுக்கு சாதகமாக மாத்திக்கிறான்!!??? விலகி நின்றவளை அழகா கவர் பண்றான்...

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே?????
 
  • Love
Reactions: T21

Gowri

Well-known member
நிந்தன் காதல் தித்திக்குதே.....
தாரா ஓட பாய் பெஸ்டி தான் நம்ம வருண் கிருஷ்ணா & அத்தை பையனும் கூட. உடனே இவன் தான் ஹீரோனு நினைச்சா கம்பனி பொறுப்பு இல்ல???. பட் இவன் 2nd ஹீரோ.

எல்லாருக்கும் வருண் நம்ம தாராக்கு மட்டும் கிருஷ், இவ அவனுக்கு புஜ்ஜிமா. இவங்க ஜாலி ஆ எல்லார் கூடையும் கொஞ்சிட்டு சுத்ற ஃப்ரீ பறவைக்கள்.

இப்ப நம்ம ஹீரோ என்றி அர்ஜுன், அதுவும் டாக்டர் அர்ஜுன். எவ்ளோ கிருஷ் ஜாலி டைப்போ, இவன் கொஞ்சம் மூடி டைப் தான். இவனுக்கு வீட்டில் பொண்ணு பார்க்க பட் சார்க்கு தாரு மேல செம்ம லவ்ஸ். அதுவும் ரொம்ப நாளா???.

வீட்டில் பார்க்கற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிறான். எல்லாம் நல்ல போய் அர்ஜுன் நிச்சியத்தப்ப என்ன ஆச்சினா ???.

இந்த கேப்லா நம்ம கிருஷ் வீட்டில் ஒரு படம் ஓட்ட, அது தாரா கண்டுபிடிச்சி???. ஒரு வழியா அர்ஜுன் - தாரா & கிருஷ் - ஜனனிக்கு கல்யாணம் நடக்குது. அட நம்ம ஜனனி யாருனு சொல்லல இல்ல, அவ நம்ம தாரு தங்கச்சி, கிருஷ் ஓட்டினா படமே அவ தான்??? செம்ம வாலு அதுவும் அவ அம்மாகிட்ட மாட்டிட்ட முழிக்கறப்பா????. ஆன ஜனனி மாதிரி ஆளுக்கு சந்திரா அம்மா தான் கரெக்ட்.

சரி கல்யாணம் முடிஞ்சது எதுவும் சம்பவம் உண்டனு கேட்டா இருக்கு. ஆன இந்த தாரா பிள்ள தான் எதுவும் கேட்க மாட்டேன்கறா, அவன் லவ் பத்தி. அவன் என்னடானா ஏதாவது பேச வந்தாலே குட் நைட் சொல்லிறான் ???. அப்பறம் பாவம் அவ எப்படி பேசுவா???.

ஒரு வழியா அவ பேசற நாளும் வந்தது அது???.

இப்ப எல்லாரும் ஹேப்பி அண்ணாச்சி????

இதெல்லாம் இப்படி செட்டில் ஆன இந்த வில்லன் வேற அப்ப அப்ப நா இங்கதாண்ட இருக்கேன்னு குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கான். அவன் விமல் உனக்கு அவளோ சீன் எல்லாம் இல்ல ஓடிப்போ.

ரொம்ப நல்ல இருந்தது ஸ்டோரி & உங்க தமிழ் சூப்பர்????. ஸ்கூட்டிக்கு துள்ளுந்து, நல்ல இருக்கு இல்ல இந்த மாதிரி நிறைய வேர்ட்ஸ் இருக்கு????. இது ரொம்ப பிடிச்சது????.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ???
 
  • Love
Reactions: T21
வணக்கம் சகோதரிகளே ..

#நிந்தன்காதல்தித்திக்குதே

கதை எண் 19

பொம்மு நாவலின் போட்டிக் கதை

நட்பின் முதல் சந்நிதி கருவரை தொடர்பாய்
காலம் அதன் போக்கில் நட்போடு பயணித்து
வாழ்வின் இனிமை சேர்த்தனளோ..
இந்த நட்பு புறாக்கள்..

காதல் மனதோடு பதிந்து சொல்லாது நிறுத்தி
விதி செய்த ஊழ்வினையில் நன்மையாய்..
மீண்டும் காதல் பூத்திட்டது..
தெவிட்டாத தித்திப்பாய்...

நிந்தன் காதல் அழகேயடி தோழி..
தித்திக்கும் சுவை விருந்தாய்..?

முதலில் இதில் நாயகன் நாயகி என யாரையுமே குறிப்பிட்டு கூற மாட்டேன். நால்வருமே நாயகன் நாயகிகள் அவரவர் இடங்களில் ..

வருண் கிருஸ்ணா.. வாவ்.. புஜ்ஜிமா என விளிக்கும் தன் மாமன் மகளின் தோழன்,காவலன்,அரண்,தாய் என எல்லாமே ஒரே உருவத்தின் பாசமான நண்பேண்டா...??

தாரா இந்த தோழனே துணையென ஊர்சுற்றும் அழகு தேவதை. இவளின் கிருஷ் பாசத்தில் விரும்பி கரைந்துருகும் பாவை.
இவளை தவிர யாரையும் புஜ்ஜிமா என அழைக்க விடாத குறும்பு பெண். ??

இவள் வாழ்வையே திருப்பி போடும் திருமண பந்தம் அதனால் ஏற்படும் பல நிகழ்வுகள் வசந்தமா,வாடைக்காற்றா என்பதே காலத்தின் விழுக்கு.

அர்ஜூன் காதலை உள்ளுக்குள்ளே புதைத்து வைத்து அடைகாக்கும் ஆண் கோழி. இதனால் பின்னாளில் வரும் திடீர் விழைவுகள் இவனை எப்படி மாற்றியது என்பது ரசனையே..

இந்த டாக்டரின் காதல் கீதங்கள் ரசனையே.. இவரா இப்படி என அசந்த நிலைகள் ஏராளம். இரவு வணக்கம் (குட்நைட்) யாருக்கு
சொன்னாலும் இவரே நினைவில் வந்து போகிறார்.டாக்டர் நிச்சயமாக உங்களை மறக்கவே முடியாது.??????

ஜனனி குறும்பின் குத்தகை பெண். இங்கேயும் ஒரு காதல் தெறிந்தும் தெறியாமலும் நிகழ்வது அவ்வளவு ரசனை..
ஜனனி +அம்மா சூப்பரோ சூப்பர் காட்சிகள்..???

வில்லத்தனம் இல்லாத கதையா.. யாருப்பா நீ..!?? எங்கிருக்க எனும் போது... வந்தான் ஓர் அத்தியாயத்தில் யாமே...!! என சொல்லி ஓடியே விட்டான் அவன் மாமியார் வீட்டுக்கு.

அருமையான குடும்பக் கதை .உறவுகளின் உன்னதம்,பாசப்பிணைப்பு,விட்டுக் கொடுத்தல் கூட்டு குடும்பம் ,காதல் கலாட்டாக்கள், நகைச்சுவை என
அதை சுற்றி வந்த எல்லா பாத்திரபடைப்புகளும் மிகவும் அருமை.

இதோடு உங்களின் தமிழின் அழகை சொல்லியே ஆகவேண்டும் ஆசிரிய தோழியே.. என்ன ரசனையான தமிழ் வார்த்தைகள் . வசன நடைகள் என ஊர்வலமாக பயணித்தது மிகவும் அழகு.
படிக்கும் போது புன்னகையே ..??

பேசவிட்டால் காரியம் கெட்டுப்போகும் என்பதை உங்களின் அழகான எழுத்து நடையில் புரிந்துக்கொண்டேன். அழகு அழகு.???

இன்னும் உங்களின் கதைகளை உங்களின் முகவரியோடு படிக்க மிகவும் ஆவல். வாழ்த்துக்கள் மா

போட்டியில் வெற்றிபெறவும் வாழ்த்துக்கள் மா.
 
  • Love
Reactions: T21
Top