#Uma_View
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்
கதையில் பெரிதாக காதல் இல்லை, ரொமன்ஸ் இல்லை, மனதிற்கு இதம் தரும் மனிதர்கள் இல்லை இதில் சிலரின் தவறுகளும் அதற்கான தண்டனையுமே இந்த சாஸ்திரம் மீறிய கீர்த்தனம்.
வெற்றி ஆரம்பத்தில் மித்ரா மீது இவன் காட்டிய வெறுப்பும். அவளை நடத்திய விதமும் கோவத்தை வர வரவழைத்தாலும் அதற்கு எல்லாம் தகுதி உடையவள் தான் இந்த மித்ரா.
அருணா
மித்ரா இவளின் அலட்சியத்தாலும், சுயநலத்தாலும் மடிந்த ஜீவன்.
அருணா எந்த ஒரு பெண்ணுக்கும் வர கூடாத பழி. வீட்டு ஆண் மகன்கள் தவிர வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்கா பெண்ணவளுக்கு கிடைத்த பட்டம் ஒழுக்கம் கெட்டவள்.
. இவள் நல்லவள் மிக நல்லவள் அந்த குணமே இவள் உயிர் போக காரணமா அமைஞ்சி போச்சி.
.
அருணா மட்டும் அல்ல இந்த மித்ராவின் குண இயல்புகளால் அந்த காலனின் கைப்பிடிக்குள் கைதான உயிர்களின் எண்ணிக்கை இன்னும் சில.
ஆனால் அவர்களுக்கு அதுவும் ஒரு வித தண்டனையே.
சஞ்சீவ் தவறு செய்தவன் தான், பொண்ணின் நுண் உணர்வுககளை புரிந்து கொள்ளாதவன் தான் அதை மதிக்காதவன் தான். ஆனால் இவன் காதல் உண்மை தன்னவளை எந்த நிலையிலும் அப்படியே ஏற்று கொள்ளும் மாறா நேசம் கொண்டவன் இவன்.
தன்னவள் கற்று தந்த பாடத்தில் மகள் மீது இவன் காட்டிய நிதானம் சற்று ஆறுதல்.
எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு. மித்ரா செய்த பாவத்திற்கு எதிர்வினை புரிய வந்தவர்கள் தான் அமரன், ருத்ரன், ரஹீம்.
இவங்க மூணு பேரும் பெரிதா மனசில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் அமரன் இவன் தன் கொள்கைகளுக்கும் மனசாட்சிக்கும் உண்மையா நேர்மையா இருந்தான் . எப்போ ஒரு நல்லவன் என்னால பாதிக்கபடுகிறானோ அப்போவே எனகான தண்டனை ஏற்று கொள்வேனு எப்போ சொன்னானோ அப்போவே தெரிஞ்சு போச்சு இவனோட முடிவு என்ன என்று. ஆனால் கடைசி வருவான் என்று ஒரு சின்ன நட்பாசை இருந்தது
கடைசியாக ரஹீம் பண்ணியது ரொம்பவே பெரிய தப்பு.
ஆனா சும்மா சொல்ல கூடாது என்ன தான் மித்ரா பன்றது பிடிக்கல என்றாலும் இவ கிட்ட ஆச்சரியமா பார்த்தா ஒரு விசயம் அந்த மன தைரியமும் உறுதியும் தான் ருத்ரன் அவன் கை பாவையா இவளை ஆட்டுவிக்கும் போதும் அமரன் இவளிடம் அத்து மீறும் போதும் நடந்தது நடந்து விட்டது அடுத்து என்ன என்று அதை தொடச்சி போட்டு போறது எல்லாம் ஆத்தி பொண்ணா இது
.
இதுல மித்ரா மூலம் சொல்ல பட்ட விசயம் நூறு சதவீதம் உண்மை. karma is boomerang
எப்போவும்மே நான் ஸ்ட்ராங்கா நம்புர ஒரு விசயம் நம்ம பன்ற எல்லாமே Each and Every Movement இந்த universe கவனிக்கும் நல்லதோ கெட்டதோ நம்ம பண்ணியத விட பல மடங்கு நமக்கு திருப்பி கிடைக்கும் . நேரடியா சம்பந்தபட்ட ஆளுக மூலம் நமக்கு கிடைக்க வில்லை என்றாலும் வேற வடிவத்தில் வேறு ஒரு நபர் மூலம் கண்டிப்பா கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல்
.
ஒரு கதை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். ஒரு மெயின் ஹீரோ. கதாநாயகி மிக நல்லவளாக அக்கறையாக இருப்பது போல தான் பெரும்பாலும் வரும்.
இப்படி ஸ்ட்ராங்கான ஆண் கதாபாத்திரம் இல்லாமல் சுயநலவாதியாக, மற்றவர்கள் உணர்ச்சி களுடன் விளையாடும் பெண்ணாக தன்னலமே பெரிதென கருதும் இந்த மித்ரா போன்ற ஒருத்தியை மட்டும் மைய புள்ளியாக வச்சி கதை சொன்னதுக்கு எல்லாம் தில்லு வேணும். இப்படிபட்ட வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுகள் ரைட்டரரே .
மித்ரா கதையின் மைய புள்ளி என்பதால் அவள் தவறு நம்ம கண்ணுக்கு பெருசா தெரியலாம். ஆனா மற்ற கதாபாத்திரம் எல்லாம் ரொம்பவே சரி Perfect கிடையாது தான். அவரவருக்கு அவரவர் நியாயம் தர்மம். அவங்க முடிவுக்கும் நிலமைக்கும் மித்ரா மட்டும் அல்ல அவங்க அவங்க குணஇயல்புகளும் ஒரு விதத்தில் காரணம் தான்.
அருணா நல்லவள் தான் ஆனால் பலகீனமானவள்.
சஞ்சீவ் காதல் உண்மை ஆனால் அவன் தேர்ந்தேடுத்த வழி தவறு.
சாந்தினி காதலிக்க தகுதி இல்லாதவள், பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியா கோழை.
வெற்றி தான்தோன்றிதனமானவன் சிறந்த கணவன் ஆனால் நல்ல அண்ணன் இல்லை.
அமரன் அவசரகாரன். கண்ணால் கண்டதை உண்மை என்று நம்பியவன் ஆழ்ந்து யோசிக்காதவன்.
மித்ரா தாய் இவள் எல்லாம் என்ன பிறவி. இந்த கதைல ரொம்பவே மோசமான ஆளு என்றால் இவள் தான். சரியான ஈன பிறவி.
மித்ரா என்ன சொல்ல ஆரம்பத்தில் இவள் மீது அவ்ளோ கோவம் ஆனா கடைசில இவள பார்க்கிற பார்வை மொத்தமா மாறி விட்டது.
இவள் நினைச்சி இருந்தா ஈஸியா அவள் முடிவை தேடி இருக்கலாம். அவள் வலி வேதனைக்கு விடுதலை குடுத்து இருக்கலாம். ஆனா அவள் அப்படி பண்ண வில்லை அதுக்கு அவள் கூறிய இரண்டு காரணம்
. மனசை தொட்டு விட்டாள்.
மகன் மீது இவள் கொண்ட பாசம். அவன் நலனுக்காக அவனை கேட்காமல் இருப்பது. அவன் மீது உங்கான பாசம் குறைந்து விட்டது என்றால் என்னிடம் தந்து விடு அவன் தாங்க மாட்டான்.
ஒரு தாயா என் மனசில் ஜெயித்து விட்டாள்.
அது மட்டும் இல்லாமல் மித்ரா இவள் சாமானிய பெண் இல்லை. என்ன தைரியம், மன உறுதி, வாழ வேண்டும் என்ற வைராக்கியம். இதில் பாதி நமக்கு இருந்தால் கூட போதுமே நமது முழு வாழ்கையும் இந்த பூமியில் வாழ்ந்து விடலாமே .
சஞ்சீவ் கடைசியாக செய்த உதவி சொல்றதுக்கு வார்த்தை இல்லை செம்ம இவன். அவ்ளோ பிடிச்சி இருக்கு இவனை.
மித்ரா
ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக அறிமுகம் ஆகி
அநியாய பெண்ணாக நம்மில் வலம் வந்து
முடிவில் என்னை நெகிழ வைத்து பிரமிக்க வைத்த பெண்ணவள் இவள்.
சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் உண்மையிலேயே வழக்கத்தை மீறிய மாறுபட்ட ஒரு கதை தான்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்