மன்றம் வந்த நிலவே மஞ்சம் வர தயக்கம் என்ன
விமர்சனம்.
கப்பலில் நடக்கிற கதைக்களம் கதை முழுவதும் கப்பலையையே நகர்கிறது..
யது நந்தன் கப்பலோட கேப்டன்.
அதே கப்பலில் பயணம் செய்யும் ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் மகள் சந்தனா தங்கக்கூண்டில் அடைபட்டு இருக்கும் வெளியுலகம் அறியாத அப்பாவி அமைதியான பெண்.
துவாரகேஷ் பணத்தின் மீது மதிப்பு கொண்டு பாசத்திற்கான மதிப்பை கொடுக்காமல் நல்ல கணவனாகவும் அப்பாவாகவும் மட்டும் இல்லாமல் நல்ல மனுசனாவும் இல்லாமல் இருக்கிறார்.
அபிராமி ரொம்ப அருமையான கேரக்டர் தன் தோழிக்காக தன் வாழ்க்கையும் பணயம் வைத்து தன் தோழியின் மகளை தன்மகளாக ஏற்று அவர் காட்டும் அன்பு அளப்பரியது.
நித்திலன் கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் சந்தனா மீதான இவனின் பாசம் ரொம்ப பிரமிக்க வைத்தது 15 வயது பையன் தான் அக்காவுக்காக அவன் பேசும் பேச்சும் அவனுடைய துடுக்குதனமான கோபமும் ரொம்ப அருமையா இருந்தது
தணிகாசலம் தாத்தா அவ்வளவு பணம் இருந்தும் இவரின் எளிமையும் அடுத்தவரிடம் பேசும் தன்மையான குணமும் அருமை.
வியாட்டை கண்டு எல்லாரும் நடுங்கி பயந்து கொண்டிருக்கும்போது அவனை அசால்க்காக கையாண்டு அடக்கிய தாத்தாவின் கெத்து அருமை
கேனல்,அருண் எல்லாருடைய கேரக்டர் ரொம்ப அருமையா இருந்தது ஒவ்வொரு கேரக்டரும் கதைக்கு ரொம்ப பொருத்தமாக இருந்தார்கள்.
யது வியாட் சண்டைக் காட்சிகளும் நித்திலன் யது பாசப்பிணைப்பும் சூப்பர்
சந்தனா யதுவிற்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் வைத்திருக்கலாம்
முடிவு நிறைவாக இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டரையும் கப்பல் பயணம் முடிந்து அங்கங்க கழட்டி விட்ட மாதிரி இருந்தது.
கப்பல் கதைக்களம் ரொம்ப நல்லா இருந்தது
கப்பலில் பயணம் செய்த ஒரு ஃபீல்
கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி செய்து போங்க
வாழ்த்துக்கள்