ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

💖💖 என்னவள் 💖💖 18

priyalini

Member
Wonderland writer
பிரியா ஒரு வாரம் விடுப்பு எடுத்து சென்ற வள் பள்ளிக்கு வரவே வில்லை.

அவள் வரதாது ஷியாமை வெகுவாக பாதிக்க வே செய்தது. அது எதனால் என அவனை அறிய முற்படவில்லை.

ஒரு வாரம் கடக்க பொறுக்க முடியாமல் கிரீஷ் மற்றும் சுகன்யா இருவரும் சுகன்யாவின் வீட்டு தோட்டத்தில் சேர்த்து அமர்ந்து அவளுக்கு பேச முடிவு செய்தனர். அவளின் வீட்டில் அவள் சித்தி எண்ணுக்கு அழைத்தனர். சுசி அழைப்பை எடுத்து அவளுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் அதிகபடியாக இருந்தாகவும், அதன் விளைவாக அவள் வீட்டு தூரம் என்றும் வீட்டின் கொலை புறம் உள்ள ரெஸ்ட் ரூம் சென்று உள்ளாள் என்றும் வந்த வுடன் தருவதாகவும் சொல்லி வைத்தார்.

அவர் phone யை வைத்தவுடன் சுகன்யா கிரீஷ் இடம் என்னடா நிஜமாகவே உடம்பு முடியல போல இவன் பேசியதையே நினைத்து கிட்டு இருந்து இருப்பாள் போல என கூற ஆமாடி நீ லவ் பண்ணுவ , உன் தம்பி உன்கிட்ட ஏதும் பேசமாட்டான் அவளை அந்த பேச்சு பேசுவான் எப்படி தாங்குவா? என்று ஷியாமை தீட்டி தீர்க்க இவர்கள் அறிய வண்ணம் பிரியா பேச்சு வரவும் ஒட்டு கேட்டு நின்றான் மறைவாக ஷியாம்.

கிரீஷ் திட்டி முடிய பிரியா அவர்களுக்கு அழைத்தாள் இவர்கள் பதட்டத்தில் ஏய் எப்படி டி இருக்க என கோரசாக அவளிடம் கேட்டனர்.
இங்கு ஷியாம் கிரீஷ் அவளை டி போட்டு அழைப்பது எரிச்சலை கொடுத்தது.
phone Speaker யில் இருக்க மாலை வேளை ஏகாந்த நேரத்தில் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க தொடங்கினாள் பிரியா.

ஏற்கனவே பிரியாவின் குரல் மிக மென்மையாக தான் ஒலிக்கும். இப்போது அந்த குரலில் ஒருவித வேதனை கொண்டு ஒலித்தாக தோன்றியது ஷியாமிற்கு.

சுகன்யா ஏய் என்னடி ஆச்சு உடம்புக்கு? என்றாள்.

அது இல்ல பா, அனைக்கு நடத்ததை மறக்க முடியலடி , அவன் பாட்டு ரொம்ப பேசிட்டாண்டி என்னால சுத்தமா முடியலடி அவன் பேசியது தான் ஞாபகம் வருது, அதை நினைச்சலே நான் அநாதை தான் ஞாபகம் வருது. என்னை என் சித்தி சித்தப்பா இரண்டு பேரும் பூமி மாதிரி தான் பார்ப்பார்ங்க ஆனா ஏதோ தீடீர் நினைவு அதனால் உடம்பு முடியாம போகுது. அனேகமாக நான் திங்கள் ஸ்கூல் வரேன்டி என்றாள்.
கிரீஷ் சில விஷயங்கள் பேசி விட்டு Phone யை வைத்தனர்.

இங்கு பிரியா பேச பேச அவள் எவ்வளவு வேதனையில் உள்ளாள் என ஷியாமுக்கு காட்ட கிரீஷ் சொன்ன மாதிரி தான் ஏன் அவள் மீது கோபம் கொண்டோம் என அவன் மீது அவனுக்கே கோபம் வந்தது.

திங்கள் எப்போது வரும் என்று அவன் ஏங்க தொடங்கினாள்.

அன்று இரவு சுகன்யாவுக்கு தெரியாமல் பிரியா வீட்டு தொலைபேசி எண்ணை எடுத்து வந்து இரவு நேரம் என்றும் பார்க்காமல் அவளுக்கு அழைத்தான்.

நல்ல வேளையாக பிரியா தான் பாடம் படிக்க phone யை வைத்திருந்தாள்.

இரவு நேரம் புதிய எண்ணில் இருந்து அழைப்பு வர சித்திக்காக இருக்கும் என்று எண்ணிய பிரியா phoneை யை ஆன் செய்து Hello, ஒரு நிமிஷம் சித்திக்கிட்ட கொடுக்கிறேன் என சொல்ல, அந்த புறம் நான் உன்கிட தான் பேசனும் என்ற குரலில் தெரிந்தது ஷியாம் என்று.
எங்கே மீண்டும் திட்ட தான் பேறானோ என்று இல்ல நீ என்ற சொல்லி பின் இல்ல அன்னைக்கு நீங்க வந்த போ நாங்க என்ன பேசி என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் Sorry உன்னை பேசியதற்கு என்று மிடுக்காக சொல்லி phoneை யை வைத்தான்.
இவளுக்கு தான் நம் காது சரியாக தான் வேலை செய்யுதா என்ற சந்தோகம் வந்தது.

அவளிடம் பேசிய பின் என்னடி பண்ணுன என்னை உன் குரல் வேதனை எனக்கு வலிக்குது என்று முணுமுணுத்தான்.

திங்கள் காலை பள்ளிக்கு வந்தாள் பிரியா. அவளின் பால் வண்ண தேகம் சிறிது கருத்து, கண்கள் சரியான தூக்கம் இல்லாமல் சோர்ந்து, உடல் எடை நன்கு இளைத்து என்று ஏகோ போல் இருந்தாள்.

அநாதை என்ற ஒற்றை சொல் அவளை உருக்குலைத்தது.

அவளின் பல ஆண்டு ஏக்கம் அவனின் ஒற்றை சொல் வெளிப்பாடு அவள் நிலைகுலைய ேபாதுமானதாக இருந்தது.

அவளை பார்த்து அவளின் நிலை பார்த்து ஷியாமின் கண்கள் கண்ணீர் சிந்தியது யாரும் அறியாமல்.

அப்போது உணர்ந்தான் பெண்ணவள் மீதான காதலை.

காதல் கொண்டு அவனை காப்பனா?அல்லது அதே காதல் கொண்டு சிறை எடுப்பானா ? யார் அறிவார்? பார்ப்போம்.

புயலின் காதல் வீச்சை தாங்குமோ பூ 🌪️💖🌹
 
Top