ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

❤️❤️ என்னவள் 19❤️❤️

priyalini

Member
Wonderland writer
பிரியா எப்போதும் போல் தான் பள்ளியில் இருந்தாள். அவளின் நட்பு , படிப்பு என்று இருந்தாள்.

இங்கு ஷியாம் தான் தன் காதல் புரிந்து அவளிடம் நெருங்க நினைத்து அவளிடம் பேச சந்தர்ப்பம் பார்க்க பிரியாவோ அடிப்பட்ட கிளியாக அவனிடம் இருந்து முற்றும் விலகினாள்.

இவன் தான் தவித்தான். தினமும் இரவில் ஏன்டி நான் தான் ஒரு கோபத்தில் பேசிட்டேன் ,அதையே பிடிச்சுக்கிட்டு பேச கூட மாட்டியா? ரொம்ப சீன் போடறா என்று புலம்புவான்.

அவன் மட்டுமே அறிவான் அவனின் காதலை. பருவ கோளாறாக இருக்கும் என்று எண்ணி அவளிடம் இருந்து விலக நினைத்தான். இப்படி இரு வேறு மனநிலையில் தவித்தான் ஷியாம். இந்த நிலையில் அனைவரும் 12th முடித்தனர். பள்ளி படிப்பின் இறுதி நாளில் அனைவரும் தங்களின் அன்பை பகிர்ந்து கொண்டனர். கீரிஷ் பிரியா ஐஸ்சு மூவரும் மீண்டும் ஒரே காலேஜில் இணைவது எப்படி என பேசி கொண்டு இருந்தார்கள். அப்போது பக்கத்து வகுப்பு மாணவன் சரவணன் பிரியாவிடம் பேச வேண்டும் என சொல்ல பிரியாவும் சென்றாள். பிரியா தனியாக சொல்ல அவளின் பின்பாக யாரும் அறிய வண்ணம் ஷியாம் பின் தொடர்ந்தான்.

சரவணன் பிரியாவை தனியாக சற்று மறைவான இடத்திற்கு அழைத்து சென்றான். சரவணன் பிரியாவை பார்த்து, அது எப்படினு சொல்ல தெரியல ஆனா நான் உங்களை சின்சியராக லவ் பண்ணறேன் .என்றவன் மறு நொடி தரையில் கிடந்தான், ஆமாம் அவர்கள் முன்பு கர்ஜிக்கும் அரிமாவாக ஷியாம் நின்றான். பிரியா அதிர்ச்சியில் சிலையாக நின்றாள்.
சரவணனை கண்ணை காட்டி மிரட்டி அங்கிருந்து அனுப்பி விட்டான்.

சிலையாக நின்றவள் முன்பு ஏய் என்ற ஒற்றை சொல்லில் அவள் நிகழ் காலத்துக்கு வந்தாள். அவனை பார்த்து அவள் விழிக்க , அந்த ஒற்றை பார்வையில் பெண்ணவள் அவள் காலில் தலை குப்பற விழுந்தான்.


அப்படி இருந்தும் தனது கெத்தை விட்டு தராது அவளிடம் ஏய் அறிவி இல்லையாடி அவன் கூப்பிட்டானு பின்னாடியே வருவியாடி? என வார்த்தைக்கு வார்த்தை டி போட அவள் தனது ஒட்டு மொத்த தைரியத்தையும் திரட்டி அவனை முறைத்தாள். அவளுக்கு வேண்டுமானால் அந்த பார்வை முறைப்பாக தோன்றும். அவனுக்கு அந்த பார்வை சில்லுனு தான் இருந்தது. தனது கைகளால் அவளின் கன்னத்தை பிடித்து அம்மு ரொம்ப அழகாக இருக்கடி , எப்படி டி இப்புடி இருக்க என மென்னமயான குரலில் வினவ அவள் அரண்டு நின்றாள்.

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு அவனே, அம்மு எப்ப நாம் ம படிப்பு முடியும் என்று இருக்குது, சீக்கிரம் முடிந்து நாம வ எப்ப கல்யாணம் பண்ணுவோம் என்று இருக்குதுடி.' என்று அவனின் மனதின் காதலை ஒவ்வொரு சொல்லிலும் ெசால்ல பிரியாவிற்கு பயம் பிடித்து கொண்டது. பயத்தில் கண்ணில் கண்ணீருடன் அவனை காண அவனும் அவளை கண்களில் மின்னும் காதலுடன் பார்த்தான்.

புயல் பூவிடம் காதலில் விழுகிறது 🌪️♥️🌹
 
Top