ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 7

pommu

Administrator
Staff member

வேல்விழி 7

அந்த சித்தரோ அவனை பார்த்து சத்தமாக சிரித்தவர், "செய்த தப்ப திரும்ப செய்யாதே, உன்னவள் பவித்திரமானவள்… யுவராஜா!!! யுவராஜா!!!" என்று சொல்ல, ஸ்ரீயோ, "என்னடா உளர்றார் இவர்" என்று கேட்டுக் கொண்டே தலையை சொறிந்தான். யுவராஜ்ஜோ, "சரி விடு, உளறிட்டு போகட்டும், நாம நம்ம வேலையை பார்க்கலாம்" என்று சொல்ல, அங்கிருந்து செல்ல போன சித்தரோ ராமை தாண்டி செல்ல, ராமோ சட்டென திரும்பியவன், "ஐயா" என்றான்.

சித்தரோ, "உன் தேவதைக்கு காவலா நீயும் வந்துட்டியா?" என்று கேட்க, அது அவனுக்கு புரிந்தால் தானே? தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன், "அரண்மனைக்குள்ள இன்னைக்கு போகலாம்னு இருக்கோம்… இடையூறு வருமா?" என்று கேட்க, மீண்டும் சத்தமாக சிரித்த சித்தரோ, "இடையூறு மட்டும் தான் வரும், உன் மன்னனை சாபத்துக்கு விமோச்சனம் தேட சொல்லு, காட்டு வழி தானா திறக்கும், பௌர்ணமி வரைக்கும் காத்திரு ராமா" என்று சொல்லி விட்டு செல்ல,

"மன்னனா? என் பெயர் எப்படி தெரியும்?" என்று கேட்டவனுக்கு குழப்பம் மட்டுமே எஞ்சி இருக்க, அனைவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள். பிரகாஷோ, "எனக்கு ஏதோ தப்பா படுது சார், அந்த சித்தர் சொல்றதுல ஏதோ இருக்கும்னு தோணுது" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, கஞ்சா குடிச்சிட்டு உளர்றான்" என்று சொல்லிக் கொண்டே நந்திதாவிடம், "நீ அதுல என்ன இருக்குன்னு படி" என்றான் சற்று கடின குரலில்.

அவளோ அதனை ஆழ்ந்து மறுபடி வாசித்து விட்டு, "காட்டுவழியை திறக்க உன்னவள் சுமை இறக்கி விமோச்சனம் பெற்றுவிடு, உன்னை சாபமிட்ட காரிகையுடன் கலவி கொண்டு உன் சாப விமோச்சனத்தை தேடிவிடு, பஞ்ச ஜென்ம நரக வேதனை பறந்தோடி போகுமே உன் தேவி ஸ்பரிசத்தினால், தீயாக தகிக்கும் மேனியின் தவிப்பை போக்கி விடு, இப்படி தான் கடைசியா எழுதி இருக்கு" என்று சொன்னாள்.

ஸ்ரீயோ, "எனக்கு புரிஞ்சு போச்சு, பிரகாஷ் சொன்ன போல அந்த ராணி சாபம் போட்டு இருக்கணும், அதுக்கு விமோச்சனம் வேணும்னா" என்று சொல்லி விட்டு சுற்றும் முற்றும் சங்கடமாக பார்க்க, இதழ் பிரித்து சிரித்த யுவராஜ்ஜோ, "புரிஞ்சு போச்சுடா, எனக்கும் தமிழ் தெரியும்" என்று சொல்லிக் கொண்டே பிரகாஷை பார்த்தவன், "இதெல்லாம் படத்தில வச்சுடாதே என்னால நடிக்க முடியாது" என்று சொன்னான்.

பிரகாஷோ, "ஓகே சார், ஆனா என்ன சாபம்னு உள்ளே இருக்கிற அரண்மனைக்குள்ள போனா தெரிஞ்சுக்கலாம்னு சொல்றாங்க" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "போயிடலாம்" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது, அங்கே மூடி இருந்த கோவிலின் வாசல் கதவில் கையை வைத்தாள் நந்திதா. அவள் கரம் பட்ட அடுத்த கணமே கோவில் வாசல் சட்டென திறந்து கொள்ள,

பிரகாஷின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டன. அவனோ, "இவ்ளோ நாளா இத யாரும் திறக்கவே முடியல... நீங்க எப்படி திறந்தீங்க மேடம்?" என்று கேட்க, அவளோ அவனை திரும்பிப் பார்த்தவள், "நான் ஜஸ்ட் தொட்டு தான் பார்த்தேன், உள்ளே போகலாமா?" என்று கேட்க, ஸ்ரீயோ, "வேணாம் நந்திதா, இவ்ளோ நாள் திறக்காம இருந்த கோவில்" என்று சொன்னான். உள்ளே திரும்பிப் பார்த்தவளுக்கு உள்ளே செல்ல, கால்கள் பதைபதைத்தாலும் பயத்தில் உள்ளே வைக்க போன காலை வெளியே இழுத்து எடுத்தாள்.

யுவராஜ்ஜோ, "உள்ளே ஏதும் இருக்கான்னு செக் பண்ணி பார்த்துடலாம், இப்படி ஏதும் தடயம் இருக்க வாய்ப்பிருக்கு" என்று சொல்லிக் கொண்டே தனது காவலாளிகளை பார்த்தவன், "உள்ளே போய் பாருடா" என்று சொல்ல, இருவருமே நந்திதாவை தாண்டி உள்ளே சென்று கையில் இருந்த டார்ச்சினால் சுற்றும் முற்றும் அடித்துப் பார்த்தார்கள். குகை போல இருந்த அந்த இடத்தில் வெளிச்சம் கொஞ்சமும் இருக்கவே இல்லை.

வெளியே இருக்கும் வெளிச்சம் கூட உள்ளே செல்ல தயங்கி இருக்க, ராகவானோ, "ஒண்ணுமே இல்ல சார், சுவர்ல தான் ஏதோ எழுதி இருக்கு," என்று சொல்ல, நந்திதா வலது காலை எடுத்து அந்த வாசல் படியில் வைத்த கணமே அந்த இடத்தினுள் வெளியே இருந்த வெளிச்சமும் சேர்ந்து உள்ளே நுழைய, ராகவனோ அதிர்ந்து பார்த்தான் அவளை.

அவளோ அங்கே சுவரில் இருந்த எழுத்துக்களை ஆழ்ந்து பார்த்தவளுக்கு கண்ணீர் தான் வந்தது. எதற்கு இந்த கண்ணீர் என்று அவளுக்கும் தெரியவே இல்லை. ஆம் அந்த எழுத்துக்கள் செதுக்கப்படவே இல்லை, உதிரத்தினால் வரையப்பட்டு இருந்தது. இன்னுமே அழிந்து போகாத தடயமாக, அவளை அடுத்து ஏனையவர்களும் உள்ளே நுழைந்தவர்கள் அங்கே இருந்த சுவரை அதிர்ந்து பார்த்தார்கள்.

சுருதியோ, "இது பிளட் போல தெரியுதே" என்று சொல்ல, மதனாவோ, "அமேஸிங், இவ்ளோ நாள் அழியாம இருக்கா என்ன?" என்று கேட்க, ஸ்ரீயோ, "நந்திதா என்ன எழுதி இருக்கு?" என்று கேட்டான். அவளோ தழுதழுத்த குரலில், "யுவராணியின் மரணம், இந்த சாம்ராஜ்ஜியத்தின் அழிவின் ஆரம்பம், பவித்திரமான பத்தினிப் பெண்ணவள் கரம் கொண்டு மீண்டும் தீபம் ஏற்றினால் மட்டுமே இந்த அரண்மனையின் வாயில் திறக்கும்னு எழுதி இருக்கு" என்றாள்.

உடனே பிரகாஷ், "அப்போ நாம அரண்மனைக்கு உள்ளே போக முடியாதா?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "இப்போ யாரை கொண்டு நாம விளக்கு ஏத்த விடுறது? புல்ஷிட், நாம கிளம்பலாம், பைத்தியகார தனமா யார் யாரோ என்னவோ கிறுக்கி வச்சு இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, நந்திதாவோ மூடப்பட்ட கருவறையை ஆழ்ந்து பார்த்து விட்டு அவனுடன் வெளியேறி இருந்தாள்.

வெளியே வந்த யுவராஜ்ஜோ ஷூவை போட்டுக் கொண்டே, "இது தானே அரண்மனைக்கு போற வழி" என்று காட்டு வழியைக் காட்ட, "ஆமா சார்" என்று சொல்லிக் கொண்டே அவனுடன் புறப்பட, வெளியே வந்த ஒவ்வொருவரும் ஷூவைப் போட்டுக் கொண்டே நடக்க ஆரம்பிக்க, இறுதியாக கோவிலில் இருந்து ராகவன் வந்த அடுத்த கணமே திறந்த கதவு வேகமாக மூடப்பட்டது.

சட்டென அனைவரும் திரும்பிப் பார்க்க, ராகவானோ மீண்டும் கதவை திறக்க முயல, அதனை திறக்கவே முடியவில்லை. அனைவரும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ஸ்ரீயோ, "அடிக்கிற காத்துக்கு மூடி இருக்கும், காட்டுக்குள்ள போகலாம் வாங்க" என்று சொல்லிக் கொண்டே காட்டு வழியை நோக்கி சென்றார்கள். ராமோ யோசனையுடன் தான் செல்ல, யுவராஜ்ஜோ, "மிஸ்ட்ரி எல்லாம் ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் ஆஹ் தான் இருக்கு… ஆனா இதுல எது உண்மை எது பொய்ன்னு தான் தெரிய மாட்டேங்குது" என்று சொல்லிக் கொண்டே நடந்து சென்றான்.

அவர்கள் கானகத்தை நெருங்க நெருங்க அந்த இடத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க, நடக்க சற்று சிரமம் தான் கொண்டார்கள். ஆனாலும் தளராமல் முன்னே செல்ல, ஸ்ரீயோ, "என்னடா இப்படி காத்து வீசுது" என்று கேட்டுக் கொண்டே நடந்தான். காட்டினுள் நுழைந்தவர்கள், சிறிது தூரம் தான் நடந்து இருப்பார்கள், சுருதியோ கீழேயே அமர்ந்து விட்டவள், "ஐயோ என்னால இதுக்கு மேல முடியாது சாமி, நான் திரும்பி போயிடவா?" என்று கேட்க,

அவள் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்த ஸ்ரீயோ, "கொஞ்ச தூரம் தான் வந்து இருக்கோம். இதுக்கேவா?" என்று கேட்டான். அவளோ, "காத்து வீசலைன்னா கூட நடந்திடுவேன்... ஆனா இப்படி வீசிட்டு இருக்கே, ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரீ" என்று சொல்ல, அவனோ திரும்பி யுவராஜ்ஜை பார்க்க,

அவனோ, "சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும், திரும்ப நடக்க ஆரம்பிச்சிடுவோம்" என்று சொன்னான். உடனே அங்கே ஆளுக்கொரு பக்கம் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே நின்று இருக்க, யுவராஜ்ஜோ, "உண்மையாவே உள்ளே அரண்மனை இருக்குமாடா, உன்னை நம்பி இவ்ளோ தூரம் வந்து இருக்கேன்… எதுவும் இல்லன்னா நடக்கிறது வேற" என்று மிரட்டலாக சொல்ல, அவன் சற்று பயந்து தான் போனான்.

குரலை செருமிக் கொண்டே, "கண்டிப்பா இருக்கும் சார்" என்று சொல்லிக் கொண்டே அங்கே இருக்கும் மரத்தில் சாய்ந்து நிற்க, அந்த காட்டுப் பாதைக்கு அருகே இருந்த அருவியை பார்த்த நந்திதாவுக்கு அங்கே செல்ல வேண்டும் என்று ஆசையாக இருந்தது. சிறிது தூரம் தான், நடந்து போனால் அந்த அருவியை அடைந்து விடலாம்.

அவளுக்கு யுவ்ராஜிடம் கேட்கவும் பயம், அவன் முன்னால் அடுத்தவர்களிடம் கேட்கவும் பயம், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாக அருவியை நோக்கி நடக்க ஆரம்பித்து இருந்தாள். அங்கே ஆளுக்கொரு திசையில் பார்த்துக் கொண்டு காரணத்தினால் யாரும் அவளை பெரிதாக கணக்கு எடுக்கவே இல்லை இரு ஜோடி விழிகளைத் தவிர, அதில் ஒரு ஜோடி விழிகள் ராமின் உடையது.

அவளையே பார்த்துக் கொண்டே நின்ற ராமுக்கோ அவள் கண்ணில் இருந்து மறையும் வரை யாரும் அவளை பின் தொடரவில்லை என்று உணர்ந்தவனுக்கு இதயம் படபடக்க தொடங்கியது. "இப்போ எதுக்கு தனியா போறான்னு தெரிலயே, அதுவும் இந்த காட்டுக்குள்ள" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அவளை பின் தொடர்ந்து செல்ல, இவற்றை மரத்தில் சாய்ந்து நின்று சன்க்ளாசினூடு பார்த்துக் கொண்டு இருந்தது வேறு யாருமல்ல யுவராஜ் தான்.

"இது என்னவோ புது ரூட் போல இருக்குதே" என்று சொல்லிக் கொண்டே ஸ்ரீயிடம், "கொஞ்சம் இருடா வந்திடுறேன்" என்று சொல்லிக் கொண்டே அவர்களை பின் தொடர்ந்து வர, அங்கே அருவியின் அருகே நின்று இருந்த நந்திதாவோ அதில் விளையாடும் முயல்களை பார்த்துக் கொண்டே, "எவ்ளோ அழகா இருக்கு இந்த இடம்" என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டாள்.

இந்த நேரம் அவளை தொடர்ந்து பின்னால் வந்த ராமோ, "நந்து, இங்க தனியா எதுக்கு வந்த?" என்று கேட்க, சட்டென அவனை திரும்பிப் பார்த்தவளோ, "ராம்" என்று மென்புன்னகையுடன் அழைத்துக் கொண்டாள். அவனோ பெருமூச்சுடன், "சரி வா கிளம்பலாம், இங்க நிறைய நேரம் நிற்காதே, டேஞ்சர்" என்று சொல்ல, அவளோ, "அழகா இருக்குல்ல ராம், கொஞ்ச நேரம் நின்னுட்டே வரேன்" என்று சொன்னாள். அவனோ, "சரி நானும் நிக்கிறேன், ஆமா எப்படி இருக்க?" என்று கேட்டான்.

அந்த கணம் அந்த இடத்தை அடைந்த யுவராஜோ அங்கிருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றவன், அங்கே நின்று கண்களை மூடி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே நின்று இருந்தான்.அவன் கேட்ட கேள்வியில் சற்று தடுமாறிய நந்திதாவோ, "எனக்கென்ன ராம் ரொம்ப இருக்கேன்… அன்பான புருஷன் அழகான குழந்தை" என்று சொல்ல, விரக்தியாக சிரித்த ராம், "அழகான குழந்தைன்னு வேணும்னா சொல்லு, உன் புருஷனோட அன்பை நானும் தானே பார்த்தேன்" என்று சொல்ல,

அவளோ, "அவர் வெளியே அப்படி தான், உள்ள ரொம்ப நல்லவர்" என்று தன்னவனை விட்டுக் கொடுக்காமல் சொல்ல, அவனோ, "சரி உன் புருஷன் புகழ் பாடுனது போதும், குழந்தையோட பெயர் என்ன?" என்று கேட்டான். அவளோ, "ஆதித்ரி," என்று சொல்ல, அவனோ, "பெண் குழந்தையா?" என்று இதழ் பிரித்து பூரிப்பாக தான் கேட்டான். காதல் என்பதை தாண்டி, ஒரு வித அக்கறையும் அன்புமே அவர்களிடம் இருந்தது. மாற்றான் மனைவியை தவறாக பார்க்கும் அளவுக்கு ராமும் தரம் தாழ்ந்தவன் அல்ல, நந்திதாவும் ஒழுக்கம் தவறியவள் அல்ல,

ஆனால் யுவராஜின் பார்வை தவறான கண்ணோட்டத்தில் பதிய, நந்திதாவோ, "அப்பா உங்கள ரொம்ப டாச்சர் பண்ணிட்டாரா?" என்று கேட்க, யுவராஜுக்கு சுர்ரென்று எகிறியது. அவன் மனமோ, "ஓஹ் இவன் தான் உன்னோட எக்ஸ் லவ்வர் ஆஹ்?" என்று வாய்க்குள் கேட்டுக் கொள்ள, ராமோ, "அந்த வலி கொஞ்ச மாசத்தில் சரி ஆயிடுச்சு, மனசு வலி தான் இப்போ வரைக்கும் இருக்குது… நீ சந்தோஷமா இருந்தாலே போதும்" என்று சொல்ல, "வாவ் வாவ் வாவ்" என்று கையை தட்டிக் கொண்டே மரத்தின் பின்னால் இருந்து வந்தான் யுவராஜ்.

அவனைக் கண்டதுமே இருவருக்குமே தூக்கி வாரிப் போட, ராமோ, "இல்ல சார், அது" என்று ஆரம்பிக்க, அவனை கையை நீட்டி தடுத்தவன், "உன் கிட்ட நான் பேசல" என்று சொல்லிக் கொண்டே அருகே நின்று இருந்த நந்திதாவைப் பார்த்துக் கொண்டே சன்கிளாஸை கழட்டி டீ ஷேர்ட்டில் மாட்டி இருக்க, வேங்கையவனின் அனல் கக்கும் விழிகளை பார்த்தவளுக்கோ பயத்தில் வியர்த்து வடிந்தது.

அவனோ, "சோ நீ பிளான் பண்ணி தான் உன் கள்ள காதலனை இங்க வர சொல்லி இருக்க" என்று கேட்க, அவளுக்கோ இதயம் முற்றாக நொறுங்கிய உணர்வு. அடுத்த கணமே, "அப்படி எல்லாம் இல்ல, நிஜமாவே இவர் வர்றது எனக்கு தெரியாது" என்று சொல்லும் போதே சட்டென்று கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, "நடிக்காதடி" என்று சீறிக் கொண்டே அவளை நோக்கி வந்தவனோ சற்று நின்று தலையை சிலுப்பிக் கொண்டான்.

அவன் விழிகளோ இப்போது அகன்று மேலும் விரிய, பக்கவாட்டாக திரும்பி அருகே இருந்த மரத்தில் நீண்ட காலமாக குற்றி இருந்த ஈட்டியைப் பார்த்தான். அடுத்த கணமே அருகே இருந்த மரத்தில் காலை குற்றி மின்னல் வேகத்தில் ஏறியவனோ அந்த ஈட்டியை இழுத்துக் கொண்டே கீழே பாய்ந்து இருந்தான்.அவன் இப்படி மின்னல் வேகத்தில் மரத்தில் ஏறி ஈட்டியை எடுத்தது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும், ஈட்டியுடன் அவனைப் பார்த்ததுமே ராம் மற்றும் நந்திதா என இருவருக்குமே இதயம் நின்று துடிக்க,

ராமோ, "நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க சார்" என்று முடிக்கவில்லை, அவளை நோக்கி அந்த ஈட்டியை எறிந்து இருந்தான் யுவராஜ். அவளோ தன்னை நோக்கி மின்னல் வேகத்தில் வந்த ஈட்டியைப் பார்த்து விழி விரித்து நின்றவள் பயத்தில் சட்டென கண்களை மூடிக் கொள்ள, அந்த ஈட்டியோ அவள் தோள் வளைவை ஊடறுத்துச் சென்று அவளுக்கு சரி பின்னே நின்று இருந்த சிறுத்தையின் மேனியில் பாய்ந்தது.

ஆம் கோபத்தையும் மீறி தன்னவளின் உயிரைக் காத்து இருந்தான் யுவராஜ்.அந்த சிறுத்தை கத்தும் சத்தம் கேட்டு தான் நந்திதாவும் ராமும் ஒருங்கே பின்னால் திரும்பிப் பார்க்க, யுவராஜ்ஜோ அவளை நோக்கி சொடக்கிட்டவன், "வா" என்று அழைக்க, அவளோ பயத்துடன் அடி மேல் அடி வைத்து அவனை நோக்கி நடந்தாள்.

ராமோ இருவரையும் பார்த்துக் கொண்டே நின்று இருக்க, யுவராஜ்ஜோ, "அவ மேல உன் நிழல் கூட படக் கூடாது புரியுதா?" என்று கேட்க, அவனும் சம்மதமாக தலையாட்டினான். அவனை மேலிருந்து கீழ் முறைத்துப் பார்த்த யுவராஜ்ஜோ அருகே வந்தவளிடம், "வீட்டுக்கு வா, உனக்கு இருக்குடி" என்று சொல்லிக் கொண்டே முன்னே நடக்க, அவளோ பயத்தில் உறைந்தபடி தான் பின்னே நடந்தவளுக்கு அவன் சந்தேகப்பட்டதால் இதயம் வலிக்க ஆரம்பித்தது.

அதே சமயம், சிறுத்தையின் சத்தம் கேட்டு அங்கே ஓடி வந்த அனைவருமே இறந்து கிடந்த சிறுத்தையைப் பார்த்துக் கொண்டே அதிர்ந்து நிற்க, ஸ்ரீயோ, "என்னாச்சுடா" என்று கேட்டான். யுவராஜ்ஜோ, "நான் தான் கொன்னுட்டேன், இங்க இருந்து கிளம்பலாம்" என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் இருந்த நந்திதாவை முறைத்துப் பார்த்தான். பிரகாஷோ, "சார், என்ன சார் திடீர்னு" என்று கேட்க, அவனோ, "கிளம்பலாம்னு சொல்றேன்ல" என்று சொல்லிக் கொண்டே வேகமாக காட்டேஜ் இருக்கும் திசையை நோக்கி நடக்க ஆரம்பிக்க,

ஒன்றுமே புரியாமல் அனைவரும் அவனை தொடர்ந்து நடந்தார்கள். அவன் பேச்சுக்கு மறு பேச்சு ஏது? அவன் வேகத்துக்கு அவனது காவலாளிகளுக்கே ஈடு கொடுக்க முடியவே இல்லை. அத்தனை ஆக்ரோஷமும் அவன் நடையில் பிரதிபலிக்க, நந்திதாவோ பயத்துடன் தான் அவனை பின் தொடர்ந்து நடந்து சென்றாள்.

அவனோ அந்த கோவிலை தாண்டி சென்ற கணம் அந்த சித்தரோ, "யுவராஜா நீ நினைச்சாலும் இங்க இருந்து கிளம்ப முடியாது" என்று சிரித்தபடி சொல்ல, அவரை முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தான். காட்டேஜுக்கு வந்ததுமே வாசலில் நின்ற முருகனிடம், "வண்டியை எடு, ஊருக்கு கிளம்பலாம்" என்று சொல்லிக் கொண்டே வாயிலை நோக்கி நடக்க,

அவனோ புரியவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் வண்டியை எடுக்கும் பொருட்டு, தனது உடைமைகளை எடுத்துக் கொண்டே கிளம்பினான். யுவராஜ்ஜோ தன்னை தொடர்ந்து வந்த காவலாளிகளிடம், "திங்ஸ் ஐ எடுத்துட்டு வா" என்று சொல்லிக் கொண்டே உள்ளே செல்லாமல் நேரே வண்டியை நோக்கி செல்ல, நந்திதாவோ தனது கைப்பையை மட்டுமே எடுத்துக் கொண்டே அவனை பின் தொடர்ந்தாள்.

மீதி இருப்பவர்களுக்கோ என்ன நடக்கின்றது என்றே புரியவே இல்லை. ஆனாலும் அவனை பின் தொடர்ந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் கிளம்ப, அவர்களை மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி பார்த்துக் கொண்டு இருந்தான் ராம். அவன் விழிகளோ நந்திதாவில் பரிதாபமாக படிந்தது. இதே சமயம், அவர்கள் அந்த இடத்தை தாண்டி நடந்து சென்ற கணம் மழையோ பேரிடியுடன் பெய்ய ஆரம்பிக்க,

ஸ்ரீயோ, "யுவா இந்த மழைக்குள்ள கிளம்பணுமா?" என்று கேட்டான் தொப்பென்று நனைந்த கோலத்துடன். யுவராஜும் அதே போல மொத்தமாக நனைந்து தான் இருந்தவனோ, "எஸ்" என்று மட்டும் அழுத்தமாக பதிலளித்துக் கொண்டே வண்டியை நோக்கி வேகமாக சென்ற கணம், அருகே அவன் வேகத்துக்கு ஓடி வந்த நந்திதாவின் ஷால் அங்கே இருந்த செடியில் சிக்கி இருக்க, கைப்பையை கீழே வைத்துக் கொண்டே அதனை விடுவித்தாள் அந்த கொட்டும் மழையில்.

ஷாலை எடுத்து விட்டு கைப்பையை தேடினால் அது அங்கே இருக்கவே இல்லை… அவளோ "ஐயோ என்னோட ஹாண்ட் பேக்" என்று பதற, அந்த கைப்பையை ஒரு குரங்கு எடுத்துக் கொண்டே வேகமாக காட்டினுள் சென்று மறைந்து இருந்தது. அவளோ, "ஐயோ" என்று பதற சற்று அவளை திரும்பி பார்த்த யுவராஜ்ஜோ, "வாடி" என்று உறுமலாக அழைக்க, அவளுக்கோ பதிலும் சொல்ல முடியாமல் அவனை தொடர்ந்து வேகமாக ஓடித் தான் சென்றாள்.

அவன் வேகத்தை அவள் மென் பாதங்கள் ஈடுகட்டி விடுமா என்ன? வண்டியை நெருங்கியதுமே உள்ளே ஏறியவனோ அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டே டீ ஷேர்ட்டை கழட்டி தூக்கிப் போட்டவன், உள்ளே ஏறிய ராகவனிடம் "டவல்" என்க, அவனும் அவனது பையில் இருந்து டவலை எடுத்துக் கொடுத்தான். யுவராஜும் தலையை துடைத்துக் கொண்டே இருக்க, அவனை தாண்டி சென்று மூலையில் அமர்ந்து கொண்டவளோ "என்னோட லக்கேஜ்" என்றாள்.

ராகவன் அவளுடைய உடைப் பையை தூக்கி கொடுக்க, அதனுள் இருந்து டவலை எடுத்து தலையை துடைத்துக் கொண்டு இருக்க, அனைவரும் உள்ளே ஏறி இருந்தார்கள். முருகனும் வண்டியில் ஏறி வண்டியை ஸ்டார்ட் பண்ண, அதுவோ ஒரு குலுக்கலுடன் ஸ்டார்ட் ஆனது. முருகனோ வண்டியை ஓட்ட ஆரம்பித்த கணமே, பக்கவாட்டாக ஒரு பெரிய சத்தம் கேட்க, அனைவரும் வெளியே அதிர்ச்சியுடன் எட்டிப் பார்த்தார்கள்.

ஆம் அங்கே பெரிய பாறை ஒன்று அருகே இருந்த மலையில் இருந்து உருண்டு வர, முன்னே சென்ற முருகனோ ரிவர்ஸ் கியர் போட்டு வண்டியை பின்னே எடுக்க, அதுவோ வேகமாக பின்னே சென்று ஒரு மரத்தில் மோத உருண்டு வந்த பெரிய பாறையோ அந்த பாதையை மறைத்துக் கொண்டே கீழே விழுந்து இருக்க, அந்த இடமே ஒரு கணம் அதிர்ந்தது. இந்த எதிர்பாராத விபத்தில், பயந்த நந்திதாவோ கண்களை மூடிக் கொண்டே அருகே இருந்த யுவராஜ்ஜை தான் இறுக அணைத்து இருந்தாள். அவன் வெற்று மார்பில் அவளோ முகத்தை புதைத்து இருக்க, அவன் மேனியில் ஒரு புது வித உணர்வு உண்டாக, அவன் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது.

வேகமாக வண்டி ஓடியதில் அனைவருமே கண்களை மூடிக் கொண்டே கைக்கு எட்டியதை பிடித்து தங்களை நிலைப்படுத்தி இருக்க, யுவராஜூம் முன்னே இருந்த கம்பியை அழுத்தமாக பற்றி இருக்க, அவனை அழுத்தமாக பற்றி இருந்தாள் நந்திதா. வண்டி நின்றதும் தான், அவளோ தான் அணைத்து இருப்பதை உணர்ந்து கொண்டே, சட்டென விலகிக் கொண்டவள், "ஐ ஆம் சாரி" என்று தழுதழுத்த குரலில் சொன்னவளுக்கு தன்னையே அனல் தெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தவனைப் பார்த்ததுமே பயத்தில் ஒரு சொட்டுக் கண்ணீர் கீழே விழுந்தது.

அவனோ, "டோன்ட் யூ ஹாவ் சென்ஸ்?" என்று ஆரம்பித்தவன் ஸ்ரீயின், "யுவா" என்னும் அழைப்பில் நிறுத்தியவனாக அவளை முறைத்துக் கொண்டே அவனை திரும்பிப் பார்க்க,

அவனோ, "போக முடியாது போல இருக்கு… காட்டேஜுக்கு கிளம்பலாம்" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "வேற ஒன்னும் பண்ண முடியாது தான்" என்று சொல்லிக் கொண்டே கீழே வேகமாக இறங்கியவன் வெற்று மார்புடனேயே நடந்து சென்றான்.

மழையோ சற்று நின்று இருக்க, அவனோ காட்டேஜை நோக்கி சென்ற கணம், அங்கே வேலை செய்யும் நடேசனோ, "என்ன சார் திரும்ப வந்துடீங்க" என்று கேட்க,

அவனோ, "சின்ன ஆக்சிடென்ட்" என்று சொல்லிக் கொண்டே தனது காட்டேஜினுள் நுழைய போக, நடேசனோ, "சார்" என்று அதிர்ச்சியாக அழைத்தான்.

யுவராஜ்ஜோ அவனை திரும்பிப் பார்த்து, "என்னாச்சு?" என்று கேட்க, அவனோ, "இந்த படத்தை எங்கேயோ பார்த்த போல இருக்கு சார்" என்று அவனது டாட்டூவை காட்டி சொன்னான்.

ஆம் அவன் இடது மார்பில் வரையப்பட்டு இருந்தது வேட்டையாடும் புலியின் முகமும் அதனை தொடர்ந்து இடது கை முழுக்க அந்த டாட்டூ வெவ்வேறு படங்களை உள்ளடக்கி வரையப்பட்டு இருக்க, அவனோ தனது மார்பை குனிந்து பார்த்துக் கொண்டே, "வாட்?" என்று கேட்டான்.

அவனோ வாயில் கையை வைத்தபடி அவன் பின்னே இருந்த வாயில் தூணைப் பார்த்தவனது விழிகள் மேலும் விரிந்து கொள்ள, "இது ராஜகோட்டையோட சின்னம் சார்" என்று சொல்லிக் கொண்டே வாயில் தூணை நோக்கி விரலைக் காட்ட, அவனும் அதனை திரும்பிப் பார்த்தான்.

ஆம் அந்த வாயில் தூணின் கோபுரத்தில் சீறிக் கொண்டே நின்று இருந்தது அவன் மார்பில் வரையப்பட்டு இருந்த அதே புலியின் உருவம் தான்…

அவனும் அதனை அதிர்ந்து பார்த்தவனோ, "வாட் எ கோ இன்சிடென்ட்" என்று சொல்லிக் கொள்ள, அங்கே வந்த அனைவருமே அவன் மார்பையும் அந்த சிற்பத்தையும் மாறி மாறி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள்.
 
Interesting epi sis
 
Top