ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 3

pommu

Administrator
Staff member

வேல்விழி 3

வழமையாக கொஞ்சமாக குடிப்பவன், இன்று நந்திதா பேசியதை நினைத்து நினைத்தே இஷ்டத்துக்கு குடித்து நிதானத்தை இழந்து போனான். "நான் சொன்னா கேட்க மாட்டாளா?" என்கின்ற கேள்வியே அவள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. தனியாக அமர்ந்து குடித்துக் கொண்டே இருந்தவன் அருகே வந்தமர்ந்த அவன் நண்பனும் மேனேஜருமான ஸ்ரீ, "என்னடா இன்னைக்கு தனியா குடிக்க போறேன்னு வந்து இங்க இருக்க? என்னாச்சு?" என்று கேட்க,

"நத்திங்" என்று மட்டுமே பதில் அளித்து இருந்தான். ஸ்ரீயோ, "அத விடு, உன் கிட்ட கத சொல்லணும்னு ஒரு டைரக்டர் என்னை ஒரு வழியே பண்ணிட்டான்... ஒண்ணு ரெண்டு ஹிட் கொடுத்த டைரக்டர் பிரகாஷ் தான். செமயா இருக்கு ஸ்டோரி, நீ ஆசைப்பட்ட போல ஹிஸ்டாரிகல் சப்ஜெக்ட் தான், ஆளை இன்ட்ரடியூஸ் பண்ணவா?" என்று அருகே நின்ற இயக்குனரை கையால் காட்டி கேட்டான்.

யுவராஜோ போதையில் சிவந்த கண்களுடன், "ஓஹ் பிரகாஷ் ஆஹ்? கேள்விப்பட்ட பேர் போல இருக்கு" என்று சொல்லிக் கொண்டே, அங்கே தள்ளி அவனுக்காக கதை சொல்ல காத்துக் கொண்டு இருந்த டைரக்டரை ஒற்றை விரலால் அழைத்தவன், "ம்ம்" என்றபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டே தாடியை நீவிக் கொண்டான்.

அந்த டைரக்டரை அவன் இருக்க கூட சொல்லவே இல்லை. அது அவனுக்கு அவமானமாக இருந்தாலும், யுவராஜ் தான் அந்த கதையில் நடிக்க வேண்டும் என்று விரும்பியதால் பொறுத்துக் கொண்டே நின்றவனுக்கு யுவராஜ் மனது வைத்தால் பெரிய அளவான ப்ரொடக்ஷன் கம்பெனிகளையும் பிடித்து இந்த படத்தை தயாரித்து விட முடியும் என்று தான் தோன்றியது. அதனாலேயே அனைத்தையும் சகித்துக் கொண்டே பேச ஆரம்பித்தவனோ, "இது ஒரு உண்மையாக நடந்த ஹிஸ்டரிகல் ஸ்டோரி சார். கதையோட டைட்டில் யுவராஜா" என்று சொல்ல,

அவனுக்கு தன்னுடைய பெயரைக் கேட்டதுமே போதையில் ஒரு புத்துணர்ச்சி உண்டாக, "இன்டெரெஸ்ட்டிங், ஹீரோ பெயர் யுவராஜாவா??" என்று கேட்டான். அந்த இயக்குனரும், "ம்ம் ஹீரோயின் பெயர் நந்திதா ராணி" என்று சொல்ல, அதைக் கேட்டு பெருமூச்சு விட்ட யுவராஜ் பக்கத்தில் இருந்த நண்பனைப் பார்த்து, "என்னடா இது, படத்திலயாவது வேற பெயர் வைக்க சொல்லு" என்று சொன்னவனோ பிரகாஷிடம், "என்னோட கண்டிஷன்ஸ் தெரியுமா??" என்று கேட்டான்.

அவனும், "ஆமா சார், கிஸ் சீன் நடிக்க மாட்டீங்க. பெட்ரூம் சீன் நடிக்க மாட்டீங்க... உங்க பாடிய காட்டுற போல தான் ட்ரெஸ் கொடுக்கணும், நிறைய ஸ்டண்ட் இருக்கணும்" என்று சொல்ல, "குட்… இப்ப நான் குடிச்சு இருக்கேன், நாளைக்கு ஆபீசுக்கு வா பேசிக்கலாம். எனக்கும் ஒரு ஹிஸ்டரிகள் ஸ்டோரி நடிக்கணும்னு ஆசை தான், ஸ்ரீ இவனுக்கு ஷெடியூல் டைம் கொடு" என்று சொல்லிக் கொண்டான்.

ஸ்ரீயோ தனது விசிட்டிங் கார்டை அவனிடம் நீட்டியவன், "நாளைக்கு ஒன்பது மணிக்கு இந்த நம்பருக்கு கால் பண்ணு" என்று சொல்லி விட்டு அவனை அனுப்பியவன், யுவராஜிடம், "வந்ததுல இருந்து இங்க நடக்கிறது எல்லாமே பார்த்துட்டு தான் இருக்கேன், ஒன்னு கேட்டா கோபப்பட மாட்டியே" என்று கேட்க, அவனோ, "ம்ம் கேளு" என்றான்.

யுவராஜ் இயல்புக்கு மாறாக அதிகமாக குடித்து இருக்கின்றான் என்று அறிந்தவனோ, இன்று அவனிடம் சந்தேகத்தை எப்படியாவது கேட்டு விடுவது என்று நினைத்துக் கொண்டே, "நீ ரொம்ப ஹாட், உன்னை பசங்க கூட பார்த்திட்டே இருப்பாங்க, துண்டு எல்லாம் வேற கட்டிட்டு போட்டோ எடுத்து போடுற, உன் பின்னாடி அவ்ளோ பொண்ணுங்க வர்றாங்க, ஆனா ஏண்டா எந்த பொண்ணு கூடவும் க்ளோஸ் ஆஹ் இருக்க மாட்டேங்குற? சரி உனக்கு பசங்கள பிடிக்கும்னு பார்த்தா அதுவும் இல்ல, என்ன தான்டா உன் பிரச்சனை?" என்று கேட்க,

யுவராஜ் நிதானத்தில் இருந்தால் நடப்பதே வேறு… மதுவின் பிடியில் இருந்தவனோ ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே, "ஆம்பிளயான்னு சந்தேகப்படுறியா?" என்று கேட்க, அவனோ, "இல்லடா அப்படி இல்ல" என்று பயத்துடன் இழுத்தான். யுவராஜோ, "நீ கேட்கிற கேள்வி என் கிட்டயும் இருக்கு, பிசிக்கலி ஐ ஆம் வெரி பைன், ஆனா எந்த பெண்ணையும் டச் பண்ண கூட பிடிக்க மாட்டேங்குது… அருவருப்பா பீல் பண்ணுறேன், எனக்கும் ஏன்னு தெரில" என்று தனது ரகசியத்தை போதையின் பிடியில் உளறி விட,

அவனோ, "அப்போ நந்திதாக்கு எப்படி குழந்தை உருவாச்சு?" என்று தனக்குள் கேட்டவன் அவனிடம் பயத்தில் கேட்கவே இல்லை. "காரிகைகளை கண்டாலே அருவருத்து போகும் காளையவன் சுமந்து கொண்டு இருந்தான் முன் ஜென்ம சாபமதை, சாபத்தின் விமோச்சனம் அவனிடமே இருந்தாலும் அவன் இன்னுமே அதனை அறிந்திலான்"

யுவராஜோ மதுவை அருந்திக் கொண்டே அங்கே இருக்கும் விருந்து மேசையை நோக்க, அங்கே சாப்பிட ஆயத்தமாக நின்று இருந்தது என்னவோ நந்திதா தான். அவனோ, "சாப்பிட போறியா? இருடி என்ன பண்ணுறென்னு பாரு" என்று நினைத்துக் கொண்டே எழுந்தவன், "இதோ வரேன்டா" என்று சொல்லிக் கொண்டே அவளை நோக்கி சென்று, அவள் பின்னால் நின்று கொண்டவனோ, "என்ன சாப்பிட போறியா?" என்று கேட்க, அவளோ சட்டென திரும்பியவள், "ம்ம்" என்று அவனை மிரட்சியாக பார்த்துக் கொண்டே சொன்னாள்.

அவனுக்கு நிதானம் இல்லை என்றாலும் அவன் பேச்சோ, நடையோ அதனை கொஞ்சமும் காட்டிக் கொடுக்கவே இல்லை. அவளோ அவனில் இருந்து பார்வையை அகற்றி உணவை நோக்கினாள். அங்கே வைக்கப்பட்டு இருந்த உணவை பார்த்தவளோ, "ஐ பிரியாணி, பீட் பண்ணுற நேரம் இதெல்லாம் சாப்பிட வேணாம்னு அத்தை சொல்லி இருக்காங்க, ஆனா கட்டுப்படுத்த முடியலையே" என்று நினைத்துக் கொண்டே பிரியாணியை தட்டில் எடுத்து போட ஆரம்பிக்க, அவள் கையை பின்னால் இருந்து பற்றிக் கொண்டான் யுவராஜ்.

நந்திதாவோ அவனை பாவமாக முகத்தை வைத்துக் கொண்டே பார்க்க, "வீட்ல சாப்பிடுற போல சாப்பிட போறியா? இங்க டேபிள் மென்னேர்ஸ்ன்னு இருக்கு, தெரியும் தானே?" என்று கேட்க, அவளோ மனதுக்குள், "நாலு பிடி சோறை நாற்பது நிமிஷமா சாப்பிடுறது தானே" என்று நினைத்துக் கொண்டே, "ம்ம்" என்றாள்.

அவனோ, "குட், சுத்தி கேமெரா இருக்கு... நீ மட்டும் ஒழுங்கா சாப்பிடலன்னா நாளைக்கு ஹெட்லைன்ஸ் ஆஹ் தின்று தீர்த்த பிரபலத்தின் மனைவின்னு வரும். பீ கேயார்புல்" என்று சொல்ல, அவளோ "நிம்மதியாக சாப்பிட கூட முடில" என்று புலம்பியபடி உணவை எடுக்க, அவனோ, "இவ்ளோ ரைஸ் எதுக்கு?? நானே சர்வ் பண்ணுறேன்" என்று சொல்லி கரண்டியில் பாதியை தட்டில் வைக்க, "இவ்ளோ எனக்கெப்படி போதும்??" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அடுத்து சிக்கன் பக்கம் போக அவளோ நாக்கை ஈரமாக்கி கொண்டாள். அவனோ அதிலோ கோழியின் சிறிய துண்டை மட்டுமே வைத்தவன், "பீட் பண்ணும் போது அதிகமா இதெல்லாம் சாப்பிட கூடாது" என்க, அவளோ மனதுக்குள், 'ரொம்ப தான் அக்கறை' என்று நினைத்துக் கொண்டே அவனிடம், "ரொம்ப பெரிய துண்டா இருக்கு" என்றாள் நக்கலாக.

அவனோ, "ஐ.சி" என்று சொல்லிக் கொண்டே அதனை தனது தட்டுக்கு மாற்றி விட்டு கோழியின் கழுத்து துண்டை மட்டுமே வைக்க, அவளோ மனதுக்குள், "வாய வச்சுட்டு சும்மா இருந்து இருக்கலாம்" என்று நினைத்துக் கொண்டாள். இப்படியே உணவை கிள்ளி கிள்ளி வைத்தவன், அவளை அழைத்துக் கொண்டே ஒரே மேசையில் அமர்ந்து, "சாப்பிடு" என்றான்.

அவளோ கையால் சாப்பிட போக, கையை பிடித்தவன் "யூஸ் ஸ்பூன்" என்றான். அவளுக்கு கரண்டியை எடுத்து உணவை எடுத்து வாய்க்குள் வைக்க போக, மீண்டும் கரத்தை பிடித்தவன், "இவ்ளோ ரையிசை வாய்க்குள வைப்பியா? கொஞ்சமா வை" என்று அதில் இருந்த சோற்றை மீண்டும் தட்டில் போட, அந்த கரண்டியில் எண்ணி நான்கு சோற்றுப் பருக்கைகள் மட்டுமே இருக்க, "மனுஷனா இவன் தேவாங்கு" என்று திட்டிக் கொண்டே மெதுவாக சாப்பிட ஆரம்பிக்க, அவனோ, "வாய மூடி சாப்பிடு" என்றான்.

அவளோ அவனை திரும்பி பார்த்து விட்டு, "இவனை கல்யாணம் பண்ணினத்துக்கு நாலு எருமைமாட்டை மேய்ச்சு இருக்கலாம், இவனை கல்யாணம் பண்ணினத்துக்காக எனக்கு திட்டுன பொண்ணுங்கள ஒரு நாள் இவன் கூட வாழ விடணும்… அப்போ புரியும்" என்று கடுப்பாக நினைத்துக் கொண்டாள்..

அவளது இறுகி போன சிவந்த முகத்தை கடைக்கண்ணால் வன்மமாக பார்த்து சிரித்துக் கொண்ட யுவராஜுக்கு, இப்போது தான் மனதுக்குள் எரிந்து கொண்டு இருந்த தணல் அடங்கிய உணர்வு. அன்று பார்ட்டியை முடித்து விட்டு, அவர்கள் வீட்டுக்கு கிளம்பி இருக்க, அவனோ அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவள் தான் தனியாக அந்த இரவில் நீலாம்பரி அறைக் கதவை தட்டி குழந்தையை தூக்கிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.

இப்படியே அன்றைய நாள் கழிய, அடுத்த நாள் வழமை போல அவள் நேரத்தை அவளது செல்ல மகள் விழுங்கி விட, அவனுக்கோ அன்று ஷூட்டிங் இல்லை என்பதனால் அலுவலகத்தை நோக்கி சென்றான். அங்கே போனவன் கண்ணில் முதலாவதாக பட்டது என்னவோ பிரகாஷ் தான்.

அவனை கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே ஷர்ட்டை மடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவனோ, அவன் அறைக்குள் நின்று இருந்த ஸ்ரீயிடம், "நேற்று வந்தவன் தானே அவன்? உள்ள வர சொல்லு" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர, அவனும் ஸ்ரீ அழைத்ததுமே உள்ளே வந்தான். அவனை முன்னால் இருந்த இருக்கையில் கண்களால் அமரச் சொன்ன யுவராஜ், "ம்ம், நேற்று நீ சொன்னது நிஜமான ஸ்டோரியா?" என்று கேட்க,

அவனோ, "ஆமா சார், ராஜகோட்டைன்னு ஒரு இடம் இருக்கு, அது இப்போ காட்டு ஏரியா தான். மூலிகைகள் பறிக்க மட்டுமே சித்தர்கள் வந்து போற இடம்... அங்கே ஒரு பழைய கோயில் பாழடைஞ்சு இருக்கு, எனக்கு இப்படியான இடங்களை பார்க்க ரொம்ப பிடிக்கும்... அப்போ அந்த இடத்தை சுத்தி பார்க்க போன நேரம் நான் கேள்விப்பட்ட விஷயம் தான் இது சார், அந்த கோவில்ல இருக்கிற சித்தர் சொன்னார்" என்று சொல்ல,

விழிகளை விரித்த யுவராஜோ, "இன்டெரெஸ்ட்டிங், எனக்கு இப்படியான விஷயங்கள் ரொம்ப பிடிக்கும், அதனால தான் ஒரு ஹிஸ்டரிகல் ஸ்டோரி நடிக்கணும்னு யோசிச்சிட்டே இருந்தேன். ஆனா வந்தது எல்லாமே பிக்க்ஷன் தான், பட் ஒரு உண்மை கதைல நடிக்கிற பீல் செமயா இருக்கும்" என்று அவன் ஆர்வமாக பேசினான்.

அந்த ஆர்வமே பிரகாஷை குதூகலிக்க செய்தாலும் உண்மையை சொல்லி விட வேண்டும் என்று நினைத்தவனோ, "எனக்கும் பாதி கதை தான் சார் தெரியும், மீதி என்னோட கற்பனை தான்" என்றான். யுவராஜோ, "ம்ம் நீ ரொம்ப ஜெனியூவின் ஆஹ் இருக்க" என்று சொல்ல, அவனோ, "அப்போ நான் கன்டினியூ பண்ணட்டுமா சார்?" என்று கேட்க, "கோ எஹெட்" என்று பதிலளித்தான் யுவராஜ்.

மேலும் தொடர்ந்தவனோ, "அங்க காட்டுல நடுவுல பெரிய அரண்மனை இருக்குன்னு சொல்றாங்க, ஆனா யாருமே உள்ளே போனது இல்ல, போனவங்க திரும்பி வரவும் இல்லை, அதனாலேயே உள்ளே போக எல்லாருக்குமே பயம். ஆனா அந்த காட்டோட வாசலிலே இருக்கிற கோவில் கல்வெட்டுல யுவராஜாவோட படமும் நந்திதா ராணியோட படமும் செதுக்கப்பட்டு இருக்கு, அதுல சில வரலாற்று தடயங்கள் இருக்கு, அந்த பாழடைந்த கோவில்ல இருக்கிற சித்தர் சொன்ன கதை தான் இது… அந்த சாம்ராஜ்யமே பாழடைய காரணம் அந்த நந்திதா ராணியோட சாபம்னு சொன்னார்" என்று நீளமாக சொல்லிக் கொண்டு இருந்தான்.

இடையில் மறித்த யுவராஜோ அருகே நின்று இருந்த ஸ்ரீயிடம், "செம்மயா இருக்குல்ல ஸ்டோரி, இதுல கற்பனையை மிக்ஸ் பண்ணாம நிஜமாவே எடுத்தா என்ன?" என்று கேட்க, ஸ்ரீயோ, "அது தான் யாருமே உள்ளே போக முடியலையே" என்று சொல்ல, அவனோ, "நாம ஒரு தடவை போய் பார்த்துட்டு வரலாமா? இதுக்கு நந்திதாவோட அப்பா கிட்டயே கேட்கலாம் அவர் ப்ரொடியூஸ் பண்ணுவார், எனக்கு ஏனோ அங்கே போகணும்னு மனசு சொல்லிட்டே இருக்கு" என்றான்.

ஸ்ரீயோ, "யுவா, இன்னைக்கு மட்டும் தான் நமக்கு லீவ், நாளைல இருந்து ஷூட்டிங் புரியுதா?" என்று கேட்க, அவனை ஏறிட்டு பார்த்தவன், "சோ வாட்? கேன்செல் பண்ணிட்டு, பணத்தை செட்டில் பண்ணு, நாம இந்த படத்தை பண்ணுறோம், அண்டர்ஸ்டாண்ட்" என்று கேட்க, அதிர்ந்து போன ஸ்ரீயோ, "யுவா ஆர் யூ சீரியஸ்?" என்று கேட்க,

அவனோ, "டூ வாட் ஐ சே" என்று சொன்னவன் இதழ்களோ, "ராஜகோட்டை பெயரை கேட்கும் போதே ஒரு டிப்பேரென்ட் பீல் வருதுல" என்று சொல்லிக் கொண்டான். பிரகாஷ் இப்படி ஒரு பதிலை யுவராஜிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை, எவ்வளவு பெரிய நடிகன், தனது கதையினை கேட்பானா என்று தான் யோசித்துக் கொண்டே வந்தான். ஆனால் அவனோ அவ்வளவு மும்முரமாக அல்லவா இருக்கின்றான்.

யுவராஜோ பிரகாஷை நோக்கி திரும்பியவன், "அடுத்த ஒரு மாசம் நாம ராஜகோட்டைக்கு போறோம், சுத்தி பார்த்து உண்மையை கண்டு பிடிச்சு படமா எடுக்குறோம், அண்டர்ஸ்டாண்ட்" என்று கேட்க, அவனோ பூரிப்புடன், "கண்டிப்பா சார்" என்று சொல்லிக் கொண்டான். ஸ்ரீயோ மேலும் எதுவும் பேசவே முடியாதவனாக, "பிரகாஷ், அங்க நிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணனும், இத பத்தி நாம டிஸ்கஸ் பண்ணலாம், ஆமா யார் யாரை அழைச்சிட்டு போறது?" என்று கேட்க,

அவனோ, "நாம மூணு பேரும் போகலாம், ஸ்ருதி கிட்ட கேட்டு பாரு, வந்தா அவளையும் அழைச்சிட்டு போகலாம்" என்று சொன்னான். இப்படியே அந்த பயணத்துக்கான ஏற்பாட்டை பேசிக் கொண்டே இருக்க, பிரகாஷோ, "யாரும் தமிழ் பிராமி வாசிக்க தெரிஞ்ச ஒருத்தர அழைச்சிட்டு போகலாம் சார், அங்கே இருக்கிற கல்வெட்டெல்லாம் பிராமில இருக்கு, எனக்கு நிஜமா புரியல, அங்க போன் சிக்னலும் கிடைக்காது" என்று சொல்லிக் கொண்டே அவன் எடுத்த போட்டோக்களை காட்டினான் பிரகாஷ்.

யுவராஜோ அதனை தனக்கு அனுப்ப சொல்லி விட்டு, "இத வாசிக்க கூடியவங்க தெரிஞ்சவங்க யாரும் இருக்காங்களான்னு பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவனை அனுப்பியவனுக்கு ஒரு வித பரவசம் தான். அவனுக்கும் இந்த பரவசத்துக்கான காரணம் தெரியவே இல்லை.

இதே சமயம், நந்திதா காதலித்த ராமோ, காலையில் பையை தூக்கிக் கொண்டே வெளியேறி இருக்க, அவன் தாயோ, "வீட்ல இருக்கவே மாட்டியா ராம், எப்போ பார்த்தாலும் மூலிகை ஆராய்ச்சின்னு கிளம்ப வேண்டியது" என்று சொல்ல, அவனோ, "நம்ம சித்தர் கிட்ட இருந்த மூலிகை எல்லாம் தீர்ந்து வேற போச்சு… ராஜகோட்டைல போய் பறிச்சு வர சொன்னார். நடக்க முடியாத மனுஷன் பாவம், அதான் அவருக்கு உதவி பண்ண நினச்சேன்" என்று சொல்லிக் கொண்டே கிளம்பியவனுக்கு இன்னுமே நந்திதாவின் நினைவு தான்.

விரக்தியாக புன்னகைத்தவனோ அவனது பயணத்தை ராஜ்கோட்டையை நோக்கி ஆரம்பித்து இருந்தான். இதே சமயம் வீட்டில் இருக்கும் டி.வி ஸ்க்ரீனில் பிரகாஷ் அனுப்பிய கல்வெட்டின் படத்தை பெரிதாக்கி பார்த்துக் கொண்டே இருந்த யுவராஜ்ஜோ, "இது தமிழ் போலவும் இருக்கு, வடமொழி போலவும் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே இருக்க, குழந்தையை தூக்கிக் கொண்டே வெளியே வந்த நந்திதாவோ அந்த ஸ்க்ரீனை பார்த்தவள், "ராஜகோட்டை சாம்ராஜ்யத்தின் யுவராஜா, மற்றும் நந்திதாராணி" என்று வாய் விட்டே வாசித்தவள், "இப்படி ஒரு சாம்ராஜ்யம் நான் கேள்விப்பட்டதே இல்லையே" என்று சொல்ல,

அவனோ அவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான். அவளோ அவனது விழிகளை யோசனையாக பார்த்தவள், "இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பார்க்கிறார்?" என்று நினைக்க, அவளை நோக்கி எழுந்து நடந்து வந்தவன், "நீ இந்த லாங்குவேஜ் படிச்சு இருக்கியா?" என்று கேட்க, அவளோ இல்லை என்று தலையாட்டினாள்.

அவனோ, "அப்போ எப்படி வாசிக்கிற?" என்று அதிர்ச்சியுடன் கேட்க, அவளோ "எனக்கு தெரியல, ஆனா வாசிக்க கூடியதா இருக்கு" என்று பதில் சொல்லி தானே தன் தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டாள். ஆம் அடுத்த நாளே அவள் குழந்தையை நீலாம்பரியிடம் கொடுத்து விட்டு புறப்பட வேண்டிய நிலைக்கு ஆளாகி இருந்தாள். "கைக்குழந்தையை விட்டுட்டுட்டு எப்படி வர்றது" என்று கேட்டவளுக்கு, "உன்னை விட அம்மா நல்லா பார்த்துப்பாங்க" என்று பதில் வந்தது.

அவளோ, "நான் பீட் பண்ணுறேன்" என்று சொல்ல, அவனோ, "புட்டிப் பால் குடிச்சா ஒண்ணும் ஆயிடாது" என்று இரக்கம் இல்லாமல் பதிலும் கொடுத்து விட, அவளுக்கோ கண்ணீர் முட்டிக் கொண்டே வந்தாலும் அவன் தன்னை அவ்வளவு சீக்கிரம் விடமாட்டான் என்று அறிந்தவளோ குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவனுடன் கிளம்பி இருந்தாள்.

அவன் செய்யும் அடாவடிகளை பொறுத்துக் கொள்ள முடியவே இல்லை என்றாலும் அவனை மீறி பேச யாருக்கும் தைரியம் இருக்கவே இல்லை. அவர்களது முன்ஜென்ம தேடலை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.
 
Top