ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 29

pommu

Administrator
Staff member
வேல்விழி 29

நேரே அறைக்குள் நுழைந்த பார்வதியோ ஷங்கரின் கையில் இருந்த குழந்தையை தூக்கிக் கொள்ள, அவனோ சட்டென்று நிலத்தில் இருந்து எழுந்தவன் வெளியேற போனான். அவளோ வாசல் வரை சென்றவனை, "பாவா" என்று அழைக்க, சட்டென்று திரும்பி பார்த்தவனோ, "பாவாவா?" என்று கேட்டான்.

அவளோ, "ம்ம், பக்கத்து தெரு தெலுங்கு கார பொண்ணு அவ புருஷன பாவான்னு கூப்பிடுவா… கேட்கவே நல்லா இருக்கும், நானும் உங்கள அப்படி கூப்பிடவா?" என்று கேட்க, அவனோ, "பேர் சொல்லி கூப்பிடுறதுல என்ன பிரச்சனை?" என்று கேட்டான். பார்வதியோ, "ஏதோ விலகி இருக்கிற போலவே தோணுது பாவா" என்க, அவனோ பெருமூச்சுடன், "சரி உன் இஷ்டப்படியே கூப்பிடு" என்று சொல்லிக் கொண்டே வெளியே போய் விட, அவளோ குழந்தைக்கு பசியாற்ற ஆரம்பித்து விட்டாள்.

இதே சமயம், ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரகாஷுக்கும் மதனாவுக்கும் படத்தில் வரும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்க, அதனை தள்ளி இருந்து ஸ்ருதியுடன் பார்த்துக் கொண்டு இருந்த ஸ்ரீயோ, "என்னடி இது? எப்போ பார்த்தாலும் சண்டை தான் போட்டுட்டே இருக்காங்க" என்று சலிப்பாக கேட்டான்.

அவளோ, "பிரகாஷுக்கு மதனா எழுதுற ஸ்க்ரீன் பிளேல குறை சொல்றதே வேலையா போச்சு" என்று சொல்ல, அவனோ, "டைரெக்ஷன் அண்ட் ஸ்க்ரீன் பிளே அவனே பண்ணுறதா தானே சொன்னான், ஆனா யுவா தான் மதனாவை சஜஸ்ட் பண்ணுனான்." என்க, "அவ நல்ல ஸ்க்ரீன் பிளே ரைட்டர் ஸ்ரீ" என்றாள் ஸ்ருதி.

ஸ்ரீயோ, "புரியுது ஸ்ருதி, ஆனா ரெண்டு பேருக்கும் அண்டர்ஸ்டாண்ட் இல்லன்னா இப்படி தான் ஆகும், நிறைய நாள் கழிச்சு யுவா வேற நடிக்க ஓகே சொல்லி இருக்கான்… இந்த நேரம் பார்த்து சண்டை போடணுமா என்ன?" என்று கேட்டவனோ, மூடி இருந்த கேரவேனை ஒரு கணம் பார்த்து விட்டு பிரகாஷை நோக்கி சென்றான்.

மதனாவோ, "இந்த சீனுக்கு என்ன குறைச்சல் பிரகாஷ்" என்று கேட்க, அவனோ, "ரொம்ப மொக்கையா இருக்கு மதனா, நான் சொல்றபடி எழுது" என்க, "நீ சொல்றபடி எழுத நான் என்ன உன் கிளார்க் ஆஹ்?" என்று கேட்டாள். இப்படியான வாக்குவாதம் நடுவே சென்ற ஸ்ரீயோ, அங்கே நின்ற பிரகாஷ் தோளில் கையை போட்டபடி, "என்னடா பிரச்சனை? கொஞ்சம் இன்னைக்கு அடஜஸ்ட் பண்ணிக்கோங்களேன்டா, அவன் நிறைய நாள் கழிச்சு நடிக்க ஓகே சொல்லி இருக்கான்ல" என்று சொல்ல,

பிரகாஷோ, "எனக்கு புரியுது ஸ்ரீ, இவ தான் மொக்கை சீன் ஆஹ் எழுதி கொண்டு வந்து கொடுத்து டைரக்ட் பண்ண சொல்றா" என்க, அவளோ ஒற்றை விரலை நீட்டியவள், "இன்னொரு தடவை மொக்கை சீன்னு சொன்ன கடிச்சு வச்சிடுவேன்… நீயே எழுதி நீயே படம் எடு" என்று எரிச்சலாக கையில் இருந்த பேப்பரை கீழே வீசி விட்டு சென்றவளோ ஸ்ருதி அருகே அமர்ந்து பிரகாஷுக்கு திட்ட ஆரம்பித்து விட்டாள்.

பிரகாஷோ அவளை முறைத்துப் பார்த்து விட்டு, கீழே இருந்த பேப்பரை தூக்கி எடுத்தவன், "இதையே டைரெக்ட் பண்ணி தொலைக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே செல்ல, ஸ்ரீயோ, "இத முதலே பண்ணி இருக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே யுவராஜ்ஜின் கேரவனை நோக்கி சென்றான்.

ஒருவருடத்தில் எத்தனையோ மாற்றங்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்க, ஸ்ருதியும் ஸ்ரீயும் இன்னும் இரு மாதங்களில் திருமணம் செய்ய ஆயத்தமாகிக் கொண்டு இருந்த தருணம் அது. நந்திதாவின் இறப்பின் பின்னர் அனைவரும் மொத்தமாக ஒடிந்து போய் இருக்க, அவர்களை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி அதற்கு ஏற்பாடு செய்தது என்னவோ யுவராஜ் தான்.

இதனிடையே நந்திதாவின் தந்தை பூபாலசிங்கமும் சொத்து முழுவதையும் நந்திதாவின் மகள் ஆதித்ரியின் பெயரில் எழுதி வைத்து விட்டு இமயமலைக்கு சென்று விட்டார். இவ்வளவு நாட்கள் வாழ்ந்த சிற்றின்ப வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் மனமோ ஆன்மீகத்தை தான் விரக்தியின் விளிம்பில் நாடியது.

சொத்து விஷயத்தில் விஷ்வாவும் எதுவும் பேசவில்லை. அவனுக்கு வெளிநாட்டு வாழ்க்கையே இணக்கமாகி விட, சொந்த நாட்டையே முற்றாக மறந்து போய் விட்டான். ஆதித்ரியை வளர்க்கும் பொறுப்பை யுவராஜ்ஜின் தாய் தந்தை தான் எடுத்துக் கொண்டு இருக்க, அவனுமே ஒரு வருடங்களாக அவள் அருகாமையில் தான் நந்திதா விட்டு சென்ற காயத்துக்கு மருந்தை தேடிக் கொண்டு இருந்தான்.

அவள் இறந்த பின்னர் அவன் இன்னுமே கோபமும் மூர்க்கமுமாக தான் இருக்க, அவனை அப்படியே விட்டு விட கூடாது என்று கஷ்டப்பட்டு அவனிடம் பல திட்டுக்களை வாங்கி அவன் ஆசைப்பட்ட வரலாற்றுப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்து இருந்தார்கள்.

அவனும் முதலில் தயங்கியவன், அப்படியே இருந்தால் தன்னுடைய குழந்தையின் எதிர்காலமும் பாழாகி விடும் என்று உணர்ந்து அவளுக்காக வலியில் இருந்து மீண்டு வர நினைத்து இருந்தான். தனக்குள் அழுவான், உடற்பயிற்சி, நீச்சல் என்று ஈடுபட்டு கோபத்தையும் வலியையும் தீர்த்துக் கொள்ள பழகிக் கொண்டான்.

நீலாம்பரி கூட, "நடிக்கிறது சரி யுவராஜ், இந்த படம் தானா நடிக்கணும்?" என்று கேட்டவருக்கு அவன் மீண்டும் இந்த படத்தினால் மூர்க்கமாகி விடுவானோ என்கின்ற பயம் தான். அவனோ, "நந்திதா இல்லன்னாலும் அவ வரலாறு கண்டிப்பா இந்த உலகத்தில நிலைச்சு இருக்கணும்" என்று சொன்னவனோ அதில் ஈடுபட ஆரம்பித்து விட்டான்.

இந்த படத்தில் மித்ராவாக புது முக நடிகை நடிக்க, நந்திதாவாக அக்ஷரா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாள். பிரகாஷே அனைத்தையும் பார்த்து செய்ததால் நடிகர்கள் விஷயத்தில் யுவராஜ் தலையிடவே இல்லை. இதே சமயம், தனியே இந்த படத்தை எடுப்பது கடினம் என்று உணர்ந்து பிரகாஷ் தனக்கு உதவியாக அழைத்து இருந்தது வேறு யாருமல்ல ராம் தான்...

யுவராஜ் இருக்கும் நிலைமையில் அவனிடம் வரலாறு சம்பந்தமாக சந்தேகங்களை கேட்க முடியாது. அதனாலேயே இந்த முடிவை எடுத்து இருந்தான் பிரகாஷ். ராமும் நந்திதாவின் இறப்பின் பின்னர் மொத்தமாக இடிந்து போய் ஊரில் தனிமையில் வாடிக் கொண்டு தான் இருந்தான். அவனுமே நந்திதாவின் வரலாறு என்று சொன்னதுமே புறப்பட்டு அவர்களுக்கு உதவியாக வந்து இருந்தான்.

இன்று செட் போட்டு முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பித்து இருக்க நேரத்துக்கு வந்து கேரவேனுக்குள் புகுந்து கொண்ட யுவராஜ்ஜோ தனக்காக அலங்காரங்களை கண்ணாடி முன்னே நின்று பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் முகமோ இறுகி போய் இருக்க, கண்களில் வலி அப்பட்டமாக தெரிந்தது.

அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து யுவராஜ்ஜை கண்ணாடியூடு பார்த்த ராம்மோ, "ஷேவ் பண்ணலயா யுவா?" என்று கேட்க, அவனோ, "ம்ம் பண்ணனும்" என்று சொல்லிக் கொண்டே அலங்காரம் செய்ய வந்தவனிடம், "ஷேவ் பண்ணி மீசை மட்டும் வச்சிடு" என்று சொல்லிக் கொண்டே கண் மூடி அமர, அதனை செய்ய ஆரம்பித்து இருந்தான் அலங்கார நிபுணன்.

இதே சமயம் கேரவன் தட்டப்படும் சத்தம் கேட்க, எழுந்து வந்து திறந்தான் ராம். வாசலில் நின்ற ஸ்ரீயோ உள்ளே நுழைந்து, "என்ன யுவா ஷேவிங் ஆஹ்?" என்று கேட்க, அவனோ கண்களை மூடிக் கொண்டே, "மீசை மட்டும் தான் வைக்கணும்" என்று சொல்ல, அவனும், "ம்ம்" என்று சொன்னவனோ, "நான் அக்ஷராவை பார்த்துட்டு வரேன், ராம் நீயும் வா, எனக்கு அவளோட மேக்கப் சரியா இருக்குமான்னு பார்க்க தெரியாது" என்று சொல்ல,

அவனும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அவனுடன் புறப்பட்டு இருந்தான் ராம். அக்ஷராவோ அலங்காரங்களை சரி செய்து கொண்டே கேரவேனில் இருந்து கீழே இறங்கவும் ராமும், ஸ்ரீயும் அந்த இடத்தை அடையவும் நேரம் சரியாக இருந்தது.

அவள் மான் குட்டியுடன் விளையாடுவது போலவும் அவளை யுவராஜனும் ராமும் குதிரையில் இருந்தபடி பார்ப்பது போலவும் அன்றைய ஷூட்டிங்கில் எடுக்க ஆயத்தமாகி இருக்க, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே வந்த ராமோ, கண்களை ஒரு கணம் மூடி திறந்தவன், "ஏதோ ஒன்னு குறையுதே" என்றான். பிரகாஷோ, "என்ன குறையுது?" என்று கேட்க,

அக்ஷராவோ, "எல்லாமே கரெக்ட் ஆஹ் தானே இருக்கு" என்று சற்று கடுப்பாகி விட்டாள் தான்… அவளுக்கு ராம் சட்டென்று குறை சொன்னது பிடிக்கவும் இல்லை. ராமோ, "இல்ல ஏதோ ஒன்னு இல்ல" என்று சொல்லிக் கொண்டே அடிமேல் அடி வைத்து பின்னே வந்தவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "அலங்காரம் எல்லாம் சரியா இருக்கு… ஆனா இந்த பொட்டு இவ்ளோ சின்னதா கண்ணுக்கே தெரியாத போல இருக்கே" என்றான்.

ஸ்ரீயோ, அவள் பொட்டை பார்த்தவன், "இது கண்ணுக்கு தெரியலையா ராம்?" என்று கேட்க, அவனோ, "இத விட பொட்டு கொஞ்சம் பெருசா தான் இருக்கும்" என்றான். அக்ஷராவுக்கோ சுர்ரென்று கோபம் எகிற, "இத விட பெருசா வச்சா ராணி போல இருக்க மாட்டேன், பூச்சாண்டி போல இருப்பேன்" என்று சொல்ல,

ராமோ, "நந்திதாவோட காரெக்டரை பண்ண போறனீங்க சரியா பண்ணுங்க" என்று அவனும் சற்று கடுப்பாக பேசி விட, நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ஸ்ரீயோ, "ஹேய் கூல் கூல்! இப்போ எதுக்கு இந்த வாக்குவாதம்? பேசாம யுவா கிட்டயே கேட்போம்" என்று சொல்ல, இருவரும் அமைதியாகி விட்டார்கள்.

ராமோ பெருமூச்சுடன் முன்னே செல்ல, பின்னே வந்த ஸ்ரீயிடம், "இவன் யாரு ஸ்ரீ என்னை கமெண்ட் பண்ணுறதுக்கு?" என்று கடுப்பாக கேட்க, அவனோ, "இந்த படத்தில நீ லவ் பண்ண போறது அவனோட கேரெக்டரை தான்" என்று சொல்ல, அவளோ அதிர்ச்சியாக விழி விரித்தவள், "ராமா?" என்று கேட்க, அவனும் "ம்ம்" என்று சொன்னான்.

அவளோ, "ம்ம் அப்போவே நினச்சேன்… நந்திதா இறந்த நேரம் இவ்ளோ பீல் பண்ணுறானேன்னு, இப்போ புரிஞ்சு போச்சு" என்று சொல்ல, ஸ்ரீ ஒரு வெற்றுப் பார்வை பார்த்தான் தவிர எதுவும் சொல்லவே இல்லை. அக்ஷராவுக்கும் நந்திதாவின் இறப்பு கஷ்டமாக இருந்தாலும் அவளுடன் அந்தளவு நெருக்கமாக பழகவில்லை என்பதனால் அவ்வளவு தாக்கம் உண்டாகிவில்லை. அது ஒரு செய்தியாகவே அவளுக்கு இருந்தது.

ஆனால் நந்திதாவுடன் நெருங்கி பழகியவர்களுக்கு அது பெரிய இழப்பு அல்லவா? சிறிது நேரத்தில் அனைவருமே செட்டுக்குள் நுழைந்து இருக்க, ராஜ தோற்றத்தில் உள்ளே நுழைந்தான் யுவராஜ். அவனைக் கண்டதுமே அங்கே இருந்தவர்கள் எழுந்து நிற்க, பிரகாஷோ, "பெர்பெக்ட்" என்று இதழ் அசைத்து சொல்ல, அவனோ அங்கே நிற்க வைத்து இருந்த குதிரையில் பாய்ந்து ஏறிக் கொண்டான்.

அவன் அருகே ராமின் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகனோ, "வணக்கம் சார்" என்க, அவனோ ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்தவன், அங்கே நின்று இருந்த அக்ஷராவைப் பார்த்து, "ஏதோ குறையுதே" என்றான்.

ஸ்ரீயோ ராமை திரும்பி பார்க்க, அவனோ, "நான் சொன்னேன் ல" என்றான். அக்ஷராவோ மனதுக்குள், "கடவுளே பொட்டுன்னு மட்டும் சொல்லிட கூடாது… அவன் முன்னாடி அசிங்கமா போயிடும்" என்று நினைக்க, அவள் வேண்டுதல் பலிக்கவில்லை போலும் அடுத்த கணமே, "பொட்டை கொஞ்சம் பெருசா வைக்கணும்" என்றான்.

அக்ஷராவோ, "சரி மானமே போச்சு" என்று நினைக்க, அவளை மேக்கப் பண்ணிய பெண்ணோ ஓடி வந்து அவள் பொட்டை சரி செய்ய, அவளோ கடைக்கண்ணால் ராமைப் பார்க்க, அவனோ அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

அவளோ குரலை செருமி விட்டு அங்கும் இங்கும் பார்த்தவள், "டயலாக் பேப்பர்ஸ்" என்று கேட்க, அங்கே இருந்த அசிஸ்டன்ட் ஒருவன் பேப்பரை கொண்டு வந்து அவனிடம் நீட்ட, ஸ்ரீயோ யுவராஜனிடம் பேப்பரை கொண்டு வந்து நீட்ட, அவனோ, "எனக்கு தேவைப்படாது" என்று சொல்ல, அவனுமே டயலாக் பேப்பர்ஸ் ஐ அடுத்தவர்களுக்கு கொடுத்தான்.

அப்போது ஸ்ரீயோ அருகே நின்ற பிரகாஷிடம், "ராம் கேரேக்டருக்கு ராமையே நடிக்க வச்சு இருக்கலாமே" என்று கேட்க, அவனோ, "கேட்டு பார்த்தேன் ஸ்ரீ, அவன் முடியாதுன்னு சொல்லிட்டான்" என்று சொல்ல, ஸ்ரீக்கு மறுபக்கம் நின்ற ராமோ, "அதெல்லாம் எனக்கு சரி வராது… சொதப்பிட்டாலும் பிரச்சனை, இந்த படம் முடியுற வரைக்கும் உங்க கூடவே இருக்கேன், ஆனா நடிக்க மட்டும் சொல்லாதீங்க" என்று சொல்ல, ஸ்ரீயோ, "ஓகே" என்று தோள்களை உலுக்கிக் கொண்டான்.

முதலாவது ஷாட்டில் யுவராஜ்ஜை தவிர அனைவரும் தடுமாறி தான் போனார்கள். சும்மாவே யுவராஜ் அற்புதமாக நடிப்பவன், இதில் அவனது கதாபாத்திரம் என்றால் கேட்கவும் வேண்டுமா? தத்ரூபமாக தான் அவன் நடிப்பு இருந்தது. இடையில் கட் சொல்லி களைத்து போனது என்னவோ பிரகாஷ் தான்...

ஒரு கட்டத்தில், "பிரேக்" என்று சொல்லி விட்டு ஸ்ரீ அருகே வந்து அமர்ந்த பிரகாஷோ, "இந்த அக்ஷராவ திட்டவும் முடியல, பெரிய இடத்து பொண்ணு வேற... கட் சொல்லியே டயர்ட் ஆஹ் இருக்கு மச்சி" என்று சொல்ல, ஸ்ரீயோ, "யுவா கிட்ட சொல்லி பார்க்கலாமா?" என்று கேட்க, ராமோ, "யுவா ரெஸ்ட் எடுக்கட்டும், நான் அவங்க கிட்ட பேசுறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்து அக்ஷராவின் கேரவேனை நோக்கி சென்றான்.

ஸ்ரீயோ, "போறது சரி, சண்டை போடாம வந்தான்னா ஓகே" என்று சொல்ல, பிரகாஷோ, "அவன் எங்கடா சண்டை போட போறான்?" என்று கேட்க, ஸ்ரீயோ, "அவன் போட மாட்டான், ஆனா அவ போடுவா பாரு" என்று சொல்லிக் கொண்டான்.

பிரகாஷோ, "சாமரம் வீசுற பொண்ணு கேரெக்டருக்கு இங்க இருக்கிற யாரையும் பிக் பண்ணனும்" என்று சொல்ல, ஸ்ரீயோ, "இவள பிக்ஸ் பண்ணிடு" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் ஸ்ருதியைக் காட்ட, அவளோ அவனை முறைத்தபடி, "ஸ்ரீ" என்று அவன் தோளில் செல்லமாக தட்டியவள் முகமோ சட்டென்று இறுகி போக கண்ணில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

உடனே ஸ்ரீ, "ஹேய் என்னாச்சு? நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்" என்க, அவளோ கண்களை துடைத்துக் கொண்டே, "அதுக்கு இல்ல ஸ்ரீ, நந்திதா நினைவு வந்திடுச்சு" என்று சொல்ல, இரு ஆண்களின் கண்களும் கலங்கி தான் போனது. பிரகாஷோ, "நமக்கே இப்படி இருக்குன்னா யுவா ரொம்ப பாவம்ல" என்று சொன்னான்.

யுவராஜ்ஜோ கண்ணாடி முன்னே நின்று மார்பில் இருந்த டாட்டூவை வருடியவனுக்கு நந்திதா அதில் முத்தம் பதித்த நினைவு வர, "சத்தியமா முடியலடி" என்று சொல்லிக் கொண்டவனுக்கு கண்கள் கலங்கி போனது.

இதே சமயம், அக்ஷராவின் கேரவனை தட்டினான் ராம். அவளோ கேரவனை திறக்க, "உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" என்க, அவளோ, "ம்ம் உள்ள வாங்க" என்று சொன்னவளுக்கு அவனை தவிர்க்க வழியும் தெரியவே இல்லை.

அவள் உதவியாளரான பெண்ணும் அங்கே நின்று இருந்ததால் அவனை பயம் இன்றி உள்ளே அழைத்து இருந்தாள் அவள். அவனோ உள்ளே வந்து அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தவன், அவளை, "இருங்க, மரியாதை எல்லாம் வேணாம்" என்று சொல்ல, அவளோ, "மரியாதையா? நினைப்பு தான்" என்று முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்தவள், "என்ன விஷயம்?" என்று கேட்டாள்.

அவனோ அருகே நின்ற பெண்ணைப் பார்த்து விட்டு, "தனியா பேசலாமா?" என்று கேட்க, அவளோ, "அது ஒண்ணும் தேவல, இங்கயே சொல்லுங்க" என்று சொன்னாள் இறுகிய குரலில். அவனோ குரலை செருமிக் கொண்டே, "உண்மையை சொல்லணும்னா உங்களுக்கு நடிக்கவே வரல, ரொம்ப கேவலமா நடிக்கிறீங்க" என்று சொல்ல,

கோபமாக எழுந்தவள், "ஷாட் அப்! யார் கிட்ட வந்து என்ன பேசிட்டு இருக்க? நான் யார் தெரியுமா?" என்று கேட்க, அவனோ, "எதுக்கு இவ்ளோ கோபப்படுறீங்க? நீங்க யாரா இருந்தாலும் உண்மையை நான் சொல்லணும்ல, நிஜமாவே உங்களுக்கு நடிக்க வரல... நான் சொல்ற போல முயற்சி பண்ணுங்க" என்று சொன்னான்.

அவளோ அவனை நோக்கி சொடக்கிட்டவள், "ஹலோ மிஸ்டர் எந்திரிங்க, யுவா சாருக்கு வேண்டப்பட்டவர் என்கிறதால தான் இங்க வச்சு பேசிட்டு இருக்கேன், ஜஸ்ட் கெட் அவுட்... நான் எப்படி நடிக்கணும்னு எனக்கு நீங்க சொல்லி தர தேவல" என்று சொல்ல, அவனோ எழுந்தவன், "இந்த கேரெக்டர் எவ்ளோ முக்கியம் தெரியுமா? நந்திதா போல பண்ண சொன்னா என்னவோ போல பண்ணுறீங்க" என்று கேட்க,

"முதல வெளியே போங்க" என்று வாசலைக் காட்ட, "நல்லதுக்கே காலம் இல்லப்பா" என்று முணுமுணுத்துக் கொண்டே இறங்கினான். அக்ஷராவோ, "இவன் யாரு எனக்கு அட்வைஸ் பண்ண?" என்று அருகே நின்ற பெண்ணிடம் சீறியவள், இருக்கையில் அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஷாட்டுக்கு அழைத்த போதும் அக்ஷரா தடுமாறி போக, அவள் அருகே வந்த யுவராஜ்ஜோ, "நான் ஸ்டெபில் ஆஹ் இருந்தா சொல்லி கொடுத்துடுவேன்… நந்திதாவோட மெனரிஸம் கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ணு" என்று சொல்லிக் யோசித்தவன், அங்கே நின்ற ராமைக் காட்டி, "அவனுக்கு நல்லா தெரியும், டூ வீக்ஸ் அவன் கிட்ட கேட்டு பழகிட்டு வா, அப்புறம் உன் ஷாட் எடுக்கலாம்…

அது வரைக்கும் என்னோட ஷாட் எடுத்து முடிச்சிடலாம், பிரகாஷ் என்ன சொல்ற?" என்று கேட்க, அவனுமே, "கரெக்ட் சார்" என்று சொல்ல, ஒரு தலையசைப்புடன் செட்டில் இருந்து கிளம்பி விட்டான் யுவராஜ். அக்ஷராவோ, "மறுபடியும் அசிங்கமா போச்சே" என்று நினைத்துக் கொண்டே, பிரகாஷிடம், "எப்போ எங்க பிராக்டிஸ் பண்ண வரணும்னு கேட்டு சொல்லுங்க" என்று கடைக்கண்ணால் ராமை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

பிரகாஷோ, "அவன் என் கூட தான் ஸ்டே பண்ணுறான், டெய்லி ஸ்டூடியோவுக்கு வந்திடுங்க... அங்கே இருக்கிற ரூம்ல இதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ண சொல்லிடுறேன், ராம்மை அங்கே நானே அனுப்பி வச்சிடுறேன்" என்று சொல்ல, அவளும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே யாரையும் பார்க்காமல் விறுவிறுவென நடந்து சென்று தனது காரில் ஏறிக் கொண்டாள்.
 
Super sis
 
Top