ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 21

pommu

Administrator
Staff member

வேல்விழி 21

சாப்பிட்டு முடிய நந்திதாவை சைகையால் அழைத்துக் கொண்டே போட்டோக்கு நின்று விட்டு வேகமாக வெளியேறியவன் மீது கேமெரா லைட்ஸ் படாமல் இல்லை. எந்த அளவுக்கு பணம், புகழ் கிடைக்கின்றதோ அந்தளவுக்கு சுதந்திரத்தை இழந்து விடுவார்கள் பிரபலங்கள்... அது யுவராஜ்ஜுக்கும் பொருந்தும்.

வீடு வரும் வரை மௌனமாக தான் இருந்தாள் நந்திதா. ஆனால் அவள் மூக்கு கண்ட மேனிக்கு சிவந்து போய் இருந்தது கோபத்தில். அவர்களது பிளாட்டுக்கு வந்ததுமே காரில் இருந்து அவன் இறங்க, அவனை அடுத்து அவள் இறங்கி இருக்க, விறு விறுவென கதவை திறந்து கொண்டே உள்ளே வர, அப்போது தான் குழந்தையை தூங்க வைத்து விட்டு வந்த நீலாம்பரியோ, "ஆஹ் வந்துட்டியாம்மா, இப்போ தான் தூங்குனா, நான் அப்போ கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு வெளியேறி விட, யுவராஜ்ஜூம் உள்ளே நுழைந்து வாசல் கதவை தாளிட்டவனோ, அறைக்குள் நுழைய போனவளை, "நந்திதா" என்று அழைத்தான்.

அவளோ அவனை திரும்பி முறைத்து பார்த்தவள், "இப்போ என்ன?" என்று கேட்டுக் கொண்டே அவனை அனல் தெறிக்க பார்க்க, அவனோ, "எல்லாத்துக்கும் கோபப்படாதடி" என்று ஹஸ்கி குரலில் சொல்லிக் கொண்டே அவள் இடையை அதிரடியாக பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், அவள் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான். ஆழமான முத்தமத்தில் அவளோ திடமான அவனை தள்ள முயன்று தோற்றவளாக, அவன் கீழ் அதரங்களை அழுத்தமாக கடித்து விட, "ஸ்ஸ்" என்று சொல்லிக் கொண்டே அவளை விட்டு விலகி இருந்தான் யுவராஜ்.

காயப்பட்ட இதழ்களை பெருவிரலால் வருடிக் கொண்டே ரத்தத்தைக் கண்டவனோ, "என்னடி ரத்தம் வர்ற அளவுக்கு கடிச்சு வச்சு இருக்க?" என்று கேட்க, அவளோ கோபமாக, "அப்படி தான் கடிப்பேன்… பக்கத்தில வரவே யோசிக்கணும்" என்று சொல்லிக் கொண்டே வேகமாக அறைக்குள் சென்று தாளிட்டுக் கொள்ள, "ராட்சஷி" என்று திட்டியவனோ தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

என்ன தான் கடித்து வைத்து இருந்தாலும், அவளை முத்தமிட்டதில் இருந்தே யுவராஜ்ஜூன் தூக்கம் தொலைந்து தான் போனது அளவு கடந்த மோக உணர்வால். அவனோ கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தவன், இறுதியாக விட்டத்தைப் பார்த்துக் கொண்டே, "இந்த பீலிங்ஸ் வராமலே இருந்து இருக்கலாம் போல, கண்ட்ரோல் பண்ணவே முடியல" என்று சொல்லிக் கொண்டே தலையணையை எடுத்து முகத்தின் மீது வைத்துப் படுக்க தொடங்கியவன் தூங்கிப் போனான்.

அடுத்த நாள் இருந்து ஷூட்டிங் என்று அவன் பிசியாகி விட, வழமை போல நந்திதாவின் நாட்கள் குழந்தையுடன் தான் கடந்து போனது. அவன் கஷ்டகாலத்துக்கு அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவனுக்கு உடை டிசைன் பண்ணிய பெண்ணோ அவன் இதழில் இருந்த காயத்தைப் பார்த்து, "என்ன சார் காயம்?" என்று கேட்டே விட்டாள். ஷூட்டிங்குக்கு மேக்கப் மூலம் காயத்தை மறைத்தவன் அப்போது தான் முகத்தை கழுவி விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து இருக்க,

சற்று தடுமாறி போனாலும், சிரித்துக் கொண்டே, "பொண்டாட்டி கிஸ் பண்ணும் போது கடிச்சுட்டா" என்று எதார்த்தமாக சொல்லி விட, சுவருக்கும் காது இருக்கும் என்கின்ற ரீதியில் அன்று மாலையே, "யுவராஜ்ஜின் இதழை பதம் பார்த்த மனைவி" என்று ஆரம்பித்து இஷ்டத்துக்கு தலைப்பு வைத்து செய்திகள் வெளியாகின. போதாதற்கு அவன் இதழில் காயம் இருக்கும் புகைப்படமும் வெளியாக, அதனை எடுத்து பார்த்த யுவராஜ்ஜோ, "வாட் தெ ஹெல்" என்று வாய்க்குள் கடுப்பாக திட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு விட்டான்.

நந்திதாவோ, "என்னை ஏதோ வாம்பயர் போல எழுதி வச்சு இருக்கானுங்க பாவி" என்று கடுப்பாக முணுமுணுத்தவள், யுவராஜ் வீட்டினுள் நுழைந்ததுமே, "இப்படி தான் ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கணும்" என்று போனை தூக்கி காட்ட, அவனோ எரிச்சலாக, "ஹேய் நான் ஜாலியா ஷூட்டிங் ஸ்பாட்ல பேசுனது இப்படி ஆயிடுச்சு" என்று சொன்னான்.

அவளோ, "இதெல்லாம் ஜாலியா பேசுற விஷயமா? ப்ரைவஸின்னு ஒன்னு இல்லையா? அப்படியே பர்ஸ்ட் நைட் வீடியோ எடுத்து போட வேண்டியது தானே" என்று சொல்ல, அவனோ அவளிடம் பேசி பயனில்லை என்கின்ற ரீதியில், "சும்மா போடி, ரொம்ப டயர்ட் ஆஹ் இருக்கு" என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று தாழிட்டு விட, வாசலில் நின்று அவள் சரமாரியாக திட்டியது என்னவோ காற்றில் தான் கரைந்து போனது.

இப்படியான ஒரு விடுமுறை நாளில் காலையில் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு ஹாலில் அமர்ந்து இருக்க, அவர்கள் வீட்டினுள் நுழைந்த நீலாம்பரியோ, "குழந்தையை கொடும்மா, அவ தாத்தா பார்க்கணும்னு சொல்லிட்டு இருக்கார், பொல்லாத தன்மானம் வேற, இந்த வீட்டிற்கு வர மாட்டாராம்" என்று முணு முணுத்துக் கொண்டே குழந்தையை கேட்க, சிரித்தபடி நந்திதாவும் குழந்தையை கொடுத்தாள். அவர் சென்ற அடுத்த கணம், வாசல் கதவு தட்டப்பட, பெருமூச்சுடன் நந்திதா எழுந்து சென்று கதவை திறக்க, வாசலில் நின்றது என்னவோ ஸ்ரீ, பிரகாஷ், ஸ்ருதி மற்றும் மதனா தான்.

அவர்களை புருவம் சுருக்கி பார்த்தவளோ, "உள்ள வாங்க" என்று சொல்ல, ஸ்ரீயோ, "யுவா எங்க? இன்னைக்கு ஹிஸ்டரிக்கல் பில்ம் சம்பந்தமான டிஸ்கஷனுக்கு வர சொல்லி இருந்தான்" என்று சொல்ல, அவளோ, "ஆஹ், இங்க இருங்க, ரூமுக்குள்ள தான் இருக்கார் வர சொல்றேன்" என்று சொல்லிக் கொண்டே அவன் அறைக் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். அவனோ அப்போது தான் குளித்து விட்டு வந்தவன் உடை மாற்றிக் கொண்டு இருந்தான்.

அடுத்த கணமே, "ச்சீ சீ" என்று சட்டென மற்றயபக்கம் திரும்பிக் கொண்டவள், "உங்க பிரெண்ட்ஸ் வந்து இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டே வெளியேற போக, அவனோ, "ரொம்ப ஓவரா பண்ணாதடி புதுசா பார்க்கிற போல" என்று சொல்லிக் கொண்டே உடையை மாற்றினான். அவளோ, "கருமம் கருமம்" என்று சொல்லிக் கொண்டே வெளியேறி விட, அவனோ இதழ் பிரித்து சிரித்து விட்டு வெளியே வந்தான்.

அங்கே நண்பர்களுடன் அவன் சென்று அமர, நந்திதாவும் வந்து அமர்ந்தாள். அவளை புருவம் சுருக்கி பார்த்த யுவராஜ், "புதுசா இருக்கே" என்று சொல்ல, அவளோ, "இது என்னோட கதை, சோ நானும் இருப்பேன்" என்றாள் மிடுக்காக. அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு பிரகாஷுடம், "ம்ம் சொல்லுடா" என்று சொன்னான். பிரகாஷோ, "ஹீரோயினா யாரை சார் பிக்ஸ் பண்ணலாம்?" என்று கேட்க, ஸ்ரீயோ, "யுவா ஏதும் சஜஷன் வச்சு இருக்கியா?" என்று யுவராஜ்ஜிடம் கேட்க,

அவனோ நாடியை நீவியபடி யோசித்தவன், "இப்போ இண்டஸ்ட்ரில இருக்கிற யாரும் அந்த கடெக்டர் பண்ண சூட் ஆக மாட்டாங்க, புதுசா ஒரு பொண்ண தேடி எடுக்கலாம்... வேற மொழின்னா கூட ஓகே" என்றான். பிரகாஷ்ஷோ, "ஓகே சார், எப்படி பட்ட ஹீரோயின்??" என்று கேட்க, அவனோ சற்று திரும்பி தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த நந்திதாதாவை ஒரு கணம் பார்த்து விட்டு, "ஸீரோ சைஸ் வேணாம், ஸ்மார்ட்னெஸ் கண்டிப்பா இருக்கனும்… ஒரு அரசியோட அந்த ஆட்டிடியூட் வேணும், அதே நேரம்" என்று தொடர, "ஓஹ் என் இடத்தை ரீப்லேஸ் பண்ண ஆள் தேடுறீங்களா?" என்று நந்திதா கேட்டாள்.

அவனோ சாய்ந்த்து அமர்ந்தபடி ஸ்ரீயைப் பார்த்தவன், "தொடங்கிட்டா" என்று அவனுக்கு கேட்கும் குரலில் சொல்லிக் கொண்டே, "எஸ், ஆனா படத்துல மட்டும்" என்றான். அவளோ கேலியாக பார்த்தவள், "யாருக்கு தெரியும்? அப்படியே நிஜ வாழ்க்கைலயும் செட் ஆயிடுவீங்க" என்க, பிரகாஷுக்கு சங்கடமாக போக, "சார் நான் அப்புறம் வரவா?" என்று கேட்டான்.

யுவராஜ்ஜோ, "இது என்ன பரமரகசியமா? ஊருக்கே தெரிஞ்சது தானே? நீ இரு" என்றவன் அவளை நோக்கி திரும்பிப் பார்த்து, "அப்போ நீயே நடிக்கிறியா? எனக்கும் கட்டிபுடிச்சு நடிக்க கம்பேர்ட்டபிள் ஆஹ் இருக்கும்" என்று ஒரு கேலி புன்னகையுடன் சொல்ல, அவளோ, "என்னால கண்டவனை கட்டி பிடிச்சு எல்லாம் நடிக்க முடியாது" என்றாள்.

ஸ்ருதியோ அதனைக் கேட்டு வாயில் கை வைக்க, யுவராஜ்ஜோ பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டே, "நான் கண்டவன் எல்லாம் இல்ல... உன் புருஷன் தான்" என்றான். ஸ்ரீக்கே ஆச்சரியம் அவன் பொறுமையை பார்த்து... அவன் கோபத்தை பற்றி அறிந்தவன் அல்லவா ஸ்ரீ? நந்திதாவும் இதழ்களை பிதுக்கியவள், "வாட் எவர் என்னால முடியாது" என்க,

யுவராஜ்ஜோ, "ஓகே பைன். டோன்ட் இன்டெர்பியர் இன் மை ப்ரொபெஷன்" என்றான் சற்று கடின குரலில். அவளோ, "அதெப்படி இன்டெர்பியர் ஆகாம இருக்க முடியும்?? இது என்னோட கதை தானே... நமக்குள்ள நடந்தது எல்லாமே எடுப்பீங்க தானே?? ஒன்னும் மிஸ் பண்ண மாட்டிங்களே" கேட்ட கேள்வி மையப்படுத்தி இருந்தது என்னவோ அவன் பண்ணிய துரோகங்களை தான். அவன் நினைத்தால் அவனை நல்லவனாக காட்ட முடியும் அல்லவா?

அவனோ அவளை ஆழ்ந்து பார்த்தவன், "நமக்குள்ள நடந்த எல்லாம் எடுக்கணும்னா நான் பலான படம் தான் எடுக்கணும்" என்று வேணுமென்றே அவள் வாயை அடைக்க பேசி இருக்க, அனைவரும் அடக்க முயன்று தோற்று சிரித்து விட, அவன் இதழிலும் கண்டு கொள்ள முடியாத சின்ன புன்னகை படர்ந்தது அவள் சங்கடம் கலந்த கோபத்தைப் பார்த்து. அவனை முறைத்த நந்திதாவோ, "நான் ஒன்னும் அத கேக்கல" என்றவள் அனைவரையும் முறைத்தபடி எழுந்து விறுவிறுவென அங்கிருந்து அகல,

அவள் முதுகை வெறித்துப் பார்த்த யுவராஜ்ஜோ ஆழ்ந்த மூச்செடுத்து இதழ் குவித்து ஊதியவன், "நாம டிஸ்கஸ் பண்ணலாம்" என்றான். அவளும் அடக்கப்பட்ட கோபத்துடன் அறைக்குள் நுழைந்தவளுக்கு சலிப்பாக இருக்க, மனதை நிலைப்படுத்த அங்கே இருந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து இருந்தாள். இப்படியே நாட்கள் நகர, ஆளுயர யுவ்ராஜ்ஜின் படத்தை விரல்களினால் வருடிய பெண்ணவளோ, "எனக்கு நீ வேணும் யுவா" என்று சொல்லிக் கொண்டாள்.

அவனைப் பார்த்துக் கொண்டே போனை எடுத்தவளோ, "ஹாய் யுவா" என்று ஆரம்பித்து அவனது வெளியான படத்தைப் பற்றி புகழ்ந்து அனுப்பி இருக்க, ஷூட்டிங்கில் இருந்து அப்போது தான் கரவெனுக்குள் புகுந்தவனோ போனை எடுத்துப் பார்த்து விட்டு, "இது என்னோட பெர்சனல் நம்பர் ஆச்சே… யாருன்னு தேரிலேயே" என்று நினைத்துக் கொண்டே, "தேங்க்ஸ்" என்று மட்டும் பதில் அளித்தவன், அங்கே நின்ற அவன் உதவியாளனிடம், "இங்க தாண்டா அடிபட்டிச்சு" என்று ஸ்டாண்ட்டில் அடிபட்ட தோள்பட்டையை காட்ட, அவனும் அதற்கு சிகிச்சை அளித்தான்.

அந்நேரம் கதவை யாரோ தட்ட, உள்ளே இருந்த யுவராஜ்ஜோ சலிப்பாக, "யாருன்னு பாருடா?" என்க, அவனும் கதவை திறந்தான். அங்கே உள்ளே நுழைந்தது வேறு யாருமல்ல நந்திதா தான். அவனோ, "இவ எதுக்கு இங்க வந்து இருக்கா?" என்று நினைக்க, அவளோ சுற்றும் முற்றும் தேடியவள் அங்கே நின்ற உதவியாளனிடம், "இங்க நீ மட்டுமா இருக்க??" என்று கேட்டாள். வழமையாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நந்திதா வருவதே இல்லை அல்லவா?

யுவராஜ்ஜோ எரிச்சலாக, "அவன் மட்டும் தான் இருக்கான். இப்போ நீ எதுக்கு இங்க வந்த?" என்று கேட்க, அவளோ, "ஆமா நான் வந்தா தொந்தரவா இருக்கும் பாருங்க" என்க. யுவராஜ்ஜோ, "நீ போ" என்று உதவியாளனை அனுப்ப அவனும் வெளியேறி சென்றான். நந்திதாவோ அப்போதும் மேலே கீழே என்று தேடிக் கொண்டு இருக்க, "இப்போ என்னடி வேணும் உனக்கு" என்று கேட்டுக் கொண்டே எழுந்தவனுக்கு அவள் செயல் எரிச்சலாக தான் இருந்தது.

அவளோ அவனை ஏறிட்டு பார்த்தவள், "அந்த மித்ரா கூட கூத்தடிப்பீங்கன்னு சந்தேகமா இருக்கு" என்று சொல்ல, "மித்ரா மித்ரா மித்ரா" என்று ஆக்ரோஷமாக கத்தியபடி கையில் இருந்த போனை தூக்கி நிலத்தில் எறிய நந்திதாவே சற்று அவன் கோபத்தில் நடுங்கி தான் போனாள். சிவந்த விழிகளுடன் அவளை ஆழ்ந்து பார்த்தவன், "எப்போ பார்த்தாலும் அதே நினைப்பு தானா? நாம ரெண்டு பேரும் தான் மறுபிறவி எடுத்தோம்னா அவளும் எடுத்து இருக்கணும்னு என்ன அவசியம்? கொஞ்சம் இந்த ஜென்மத்தை பத்தி மட்டும் யோசி, அப்படி அவ வந்தா கூட உன்னை விட்டு எவ கிட்டயும் போக மாட்டேன், போதுமா?" என்று கேட்க,

அவளோ அவன் விழிகளை பார்த்த, "இப்படி தான் அன்னைக்கும் நம்புனேன்" என்று தழுதழுத்த குரலில் கூற, அவனோ மௌனியாகி போனான். அவளோ கைப்பையில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்து நீட்டியவள், "இத படிங்க" என்று சொல்ல, அவனோ புருவம் சுருக்கிக் கொண்டே அதனை வாங்கி பிரித்தான். அந்த காகிதத்திலோ, "மீண்டும் இந்த மித்ராவுடன் போராட தயாரா இரு நந்திதா" என்று ரத்தத்தினால் எழுதி இருக்க, அவனோ அதிர்ந்து தான் போனான்.

நந்திதாவோ, "எப்படி என் ஹாண்ட் பேக்ல இது வந்திச்சுன்னு தெரில... இன்னைக்கு காலைல தான் பார்த்தேன், அதனால தான் அவசரமா வந்தேன்" என்று சொல்ல, அவனோ யோசனையுடன், கடிதத்தை மடித்தவன் அவள் கன்னத்தை ஒற்றைக் கையால் பற்றி, "பயப்படாதடி நான் இருக்கேன்" என்று சொல்ல, அவளோ அவனை கலங்கிய விழிகளுடன் பார்த்தவள், "உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்ல யுவா" என்று சொல்லி விட்டு விறுவிறுவென வெளியேற, அவள் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்தவனோ கண்களை மூடி சிறிது நேரம் இருந்தான்.

அவன் இதழ்களோ, "நந்திதா உனக்கு என்னாச்சுடி" என்று தான் முணு முணுக்க அவனுக்கு இப்போதும் அவள் வலது கை சுட்டு விரலில் காயத்துக்கு மருந்து போட்டு கட்டுப்போடப்பட்டு இருந்த காட்சி வந்து போனது. "அவளே எழுதி அவளே ஹாண்ட் பேக்ல வச்சு இருப்பாளா? ஆனா ஏன்?" என்று குழம்ப ஆரம்பிக்க, நந்திதாவோ சுட்டு விரலில் போட்டபட்ட கையை பார்த்து, "இன்னுமே கத்தி வெட்டினது வலிக்குது" என்று முணுமுணுத்தபடி காரில் ஏறிக் கொண்டாள்.

மித்ரா உண்மையா பிரம்மையா
?
 
Top