வேல்விழி 15
அன்று ராஜகோட்டையே விழாக்கோலம் பூண்டு இருந்தது. ஆம் அன்று யுவராஜனின் திருமண நாள் மற்றும் பட்டாபிஷேக நாள். இதனை விட வேறென்ன விழா வேண்டும் ஆடல்களுக்கும், பாடல்களுக்கும்? இத்தனை நாட்களும் நந்திதாவின் நாட்களோ சோகமாக தனது அறைக்குள் கழிந்து இருக்க,ராமவர்மனோ வலிகளை விழுங்கிக் கொண்டே போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தான். இதே கணம் யுவராஜனோ காதலும் ஆட்சியும் ஒரே நாளில் கிடைக்க இருக்கும் பூரிப்பில் அமர்ந்து இருக்க, மித்ரகுமாரி தான் அனலில் நிற்பது போல வெதும்பி போய் இருந்தாள். இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்ட போதிலும் யுவராஜனுக்கு எதிராக விரலை கூட அசைக்க முடியாது என்னும் காரணத்தினால் அவளால் வெதும்ப மட்டுமே முடிந்தது.
இந்த திருமணத்தில் யுவராஜனுடன் சேர்ந்து சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டு இருந்தது வேறு யாருமல்ல அவன் தந்தை விக்ரமராஜன் தான். யுவராஜன் சிறுவனாக இருக்கும் போதே காதல் மனைவியை இழந்தவரால் வேறு பெண்ணுடன் இழைய முடியவில்லை. பலரும் வற்புறுத்தி மறு விவாகத்துக்கு மறுத்தவர் அவர். அதன் விளைவு இன்று வரை அரசியின் அரியணை வெற்றிடமாக தான் இருந்தது.
அந்த அரியணையை நிரப்ப ஒரு மகாராணி வருவதை நினைத்து பூரித்து போனார் அவர். அன்று காலையில் எழுந்த நந்திதாவை அலங்காரம் செய்ய அரண்மனையில் இருந்து மங்கையர்கள் வந்து இருக்க, அவளோ முயன்று தனது வலிகளை மறைத்துக் கொண்டே தன்னை அலங்காரத்தில் ஈடுபடுத்தலானாள். இன்னும் சற்று நேரத்தில் அவள் இந்த கோட்டைக்கே அரசியாக மாறி விடுவாள். ஆனால் அந்த ஆனந்தம் துளி கூட அவள் முகத்தில் இல்லை.
அந்த பெண்களும் அவளை அலங்காரம் செய்து இருக்க, சாதாரண அழகி அவளோ இப்போது பேரழகியாக தான் தோன்றினாள். அலங்காரத்தை முடித்து விட்டு வெளியே வந்தவளை அழைத்து செல்ல, அரண்மனை தேரே வந்து இருக்க, அவளும் தாய் தந்தையுடன் தேரில் ஏறிக் கொண்டாள். அவள் செல்லும் வழியெல்லாம் தெருவின் இருபக்கமும் நின்று இருந்த பணியாளர்கள் பூக்களை தூவியபடி அவளை அழைத்து செல்ல, அவளுக்கோ இதனை எல்லாம் கிரகிக்கும் நிலை கொஞ்சமும் இருக்கவே இல்லை.
தலையை குனிந்து கொண்டே பயணம் செய்தவள், அரண்மனையில் இறங்கிய போதும், பலத்த வரவேற்பின் மத்தியில் மணமேடையை நோக்கி நடந்து வந்த போதும் கூட தலை நிமிராமல் இருக்க, மேள தாளங்கள், ஆடல் பாடல்கள் என்று அந்த இடமே கோலாகலமாக காட்சி அளித்துக் கொண்டு இருந்தது. இதே கணம் மணமேடையில் அமர்ந்து இருந்த யுவராஜனின் விழிகள் தன்னவள் மீது வஞ்சனையின்றி படிந்தது. பேரழகி பெண்ணவளை உடமை ஆக்கும் இன்பம் அவன் விழிகளிலேயே படிந்திருக்க, அவன் காதல் பார்வையை பார்த்து அங்கே இருந்த மங்கையர்களும் வெட்கப்பட்டு போனார்கள்.
"இளவரசர் இளவரசியை வஞ்சனை இன்றி ரசிக்கிறார் அல்லவா?" என்று அவர்கள் தமக்குள் பேசிக் கொள்ள, யுவராஜனின் அருகே நின்று இருந்த ராமவர்மனோ நந்திதாவை ஏறிட்டும் பார்க்கவே இல்லை. பார்க்க விரும்பவும் இல்லை. இவர்களை வன்மத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தன இரு கண்கள், வேறு யாருமல்ல அது மித்ரகுமாரியே தான்.
தந்தையிடம் வீரமாக பேசி இருந்தாலும், அவனை மீறி இந்த திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தவளுக்கு வன்மம் அதிகரித்து இருந்ததே தவிர குறையவே இல்லை. தனது விழிகளின் முன்னாலேயே அவர்கள் காதல் கொள்வதை பார்க்கும் சக்தி அவளுக்கு இருக்கவும் இல்லை.
அவன் அருகே அவள் அமர்ந்ததுமே அவளுக்கான சீர்களை அடுக்கினான் யுவராஜன்… அரசர் குடும்ப திருமணம் என்றால் கேட்கவும் வேண்டுமா? அவன் தான் அவளுக்கு சீர் கொடுத்தான். அதை பார்த்து அனைவரும் மலைத்து தான் போனார்கள். நந்திதா அதனை நிமிர்ந்து கூட பார்க்கவே இல்லை, அவனோ அதனை வெட்கம் என்று நினைத்து இருக்க, அவள் மனநிலையை அவள் மட்டுமே அறிந்து இருந்தாள். மேள தாளங்கள் மத்தியில் மந்திரங்கள் நான்கு பக்கமும் ஒலிக்க, ராமவர்மனோ கண்களை மூடி திறந்தான்.
அதே கணத்தில் நந்திதாவோ பெருமூச்சுடன் அமர்ந்து இருக்க, மங்களநாணை ஏந்திய யுவராஜனோ அவள் கழுத்தில் அதனை அணிவித்து மனைவியாக்கி கொண்டான். அவன் மங்களநாணை அணிவித்த கணத்தில் அவள் கண்கள் கலங்கி போக, தனது காதல் நினைவுகளையும் அழித்து இருந்தாள் நந்திதா.
கண்களை மூடி திறந்தவளோ அவன் மாங்கல்யம் அணிவிக்கும் கணத்தில் தான் அவனை ஏறிட்டு பார்த்தாள். அவன் விழிகளோ காதலுடன் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க, இருவரின் விழிகளும் கவ்விக் கொள்ள, அவளோ மீண்டும் தலையை தாழ்த்திக் கொண்டாள். அவன் கரம் அவள் கழுத்தினை ஸ்பரிசிக்க, அவளுள் வித்தியாசமான உணர்வு தோன்றியது. மாங்கல்யம் அணிவித்ததுமே இருவரின் அங்க வஸ்திரங்களும் இணைக்கப்பட்டு அக்கினியை சுற்றி வலம் வந்து விவாகத்தை நிறைவு செய்து இருக்க,
அவனோ அவள் கரத்தை பற்றி அதில் தனது கரத்தை வைத்தவன், "உனது இன்பத்திலும் துன்பத்திலும் எப்போதுமே கலந்து இருப்பேன்" என்று தவற போகும் வாக்கை அளித்து இருந்தான். அவளும் அவன் கரத்தை அப்போது தான் நோக்கினாள். பலம் பொருந்திய கரம் அதில் ஆபரணங்கள் மின்ன, ராஜ தோற்றத்தில் இருந்தது. இவற்றை கண் கொண்டு பார்க்க முடியாமல் மித்ரகுமாரி அங்கே இருந்து அகன்று அறைக்குள் சென்று கண்ணீர் சொரிய ஆரம்பித்து இருந்தாள்.
இதே கணம், விவாகம் நிறைவு பெற்றதும் நந்திதா மௌனமாக தனது இருக்கையில் அமர, யுவராஜனின் பட்டாபிஷேக நிகழ்வு ஆரம்பமானது. ஆபரணங்களைக் களைந்து விட்டு இடையில் வெண்ணிற வேட்டியுடன் அமர்ந்து இருந்தான் யுவராஜன். சுற்றி புரோகிதர்கள் மந்திரங்களை ஜெபிக்க, பட்டாபிஷேக நிகழ்வுகள் அடுத்தடுத்து நிறைவேற, விக்ரமராஜனோ இறுதியாக தனது மணிமகுடத்தை அவன் தலையில் அணிவிக்க, அந்த அரண்மனையே விழாக் கோலம் பூண்டது. மணிமகுடத்தை அணிவித்த கணத்தில் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு இருந்த புரோகிதரின் உடலில் ஒரு நடுக்கம் பரவ, அவர் உள்ளமோ, "அபசகுனமாக தென்படுகிறதே" என்று நினைத்தாலும் அதனை வெளியே கூறவே இல்லை.
யுவராஜன் கரத்தில் வீரவாளை கையளிக்க, அவனோ அதனை பெற்று கண்ணில் ஒற்றிக் கொண்டவன், கம்பீரமாக சிம்மாசனத்தை நோக்கி அடிமேல் அடி வைத்து படியேறினான். அந்த அரங்கமே அவன் ஒவ்வொரு பாத சுவடுக்கும் ஆர்ப்பரிக்க, இதழில் மென்புன்னகையுடன் வந்து அந்த சிம்மாசனத்தின் முன்னே நின்றவனோ, "இந்த நாட்டு மக்களின் காவலனாக இருப்பேன்" என்று கரம் நீட்டி சத்தியம் செய்தபடி அமர, அனைவருமே சந்தோஷத்தில் ஆரவாரம் செய்தார்கள்.
விக்ரமராஜனும் பூரிப்பாக மகனைப் பார்த்தவர் அப்போது அறியவில்லை அந்த ராஜ்ஜியத்தினை காக்க அல்ல அழிக்க வந்தவன் தான் அவர் புத்திரன் என்று. பக்கவாட்டாக திரும்பி அங்கே அமர்ந்து இருந்த நந்திதாவை பார்த்தவர், "அரசியின் சிம்மாசனத்தை நிரப்ப அரண்மனை குலவிளக்கை அருகே அமர வையுங்கள்" என்று அங்கிருந்த பெண்களிடம் சொல்ல, நந்திதாவும் பெண்கள் புடைசூழ எழுந்தவள் அடிமேல் அடிவைத்து படியேற தன்னவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் யுவராஜன்.
அவளும் மௌனமாக வந்து அரசியின் இருக்கையில் பலத்த ஆர்பரிப்புக்கு மத்தியில் அமர, இந்த சத்தங்களை அறைக்குள் இருந்து கேட்ட மித்ரகுமாரியோ காதினை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள். நந்திதாவுக்கான மணிமகுடத்தை அணிவித்து விட்டது என்னவோ யுவராஜன் தான்.யுவராஜன் பதவியேற்றதும் ஆடல் பாடல் விருந்து என்று அரண்மனை களை கட்ட ஆரம்பித்தது. நீண்ட நேரம் நிகழ்ச்சியை பார்த்து இருந்த நந்திதா களைத்து தான் போனாள்.
அவள் முக வாட்டத்தை அறிந்து கொண்ட யுவராஜனோ, பணிப்பெண்ணை அழைத்து, "அரசி மிகவும் களைப்பாக இருக்கின்றார். அந்தப்புரத்துக்கு அழைத்து சென்று ஓய்வெடுக்க ஏற்பாட்டை செய்யுங்கள்" என்று சொல்ல, அவர்களும் நந்திதாவிடம் வந்தவர்கள், "அரசர் தங்களை அந்தப்புரத்துக்கு சென்று ஓய்வெடுக்க சொன்னார்" என்று பவ்வியமாக சொல்ல, அவளுக்கும் அது தேவையான ஒன்றாக இருக்க, ஆழ்ந்த மூச்செடுத்தபடி யுவராஜனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ இதழ்கடையில் மென் புன்னகையுடன் செல்லும் படி விழிகளால் சைகை செய்ய, அவளும் மெதுவாக எழுந்து பணிப்பெண்களுடன் அந்தபுரத்தை நோக்கி சென்றாள்.
தனது புத்திரி அரசியார் இருக்கையில் அமர்ந்ததை கண் குளிர பார்த்துக் கொண்டு இருந்த நந்திதாவின் தந்தை அப்போது அறியவில்லை அந்த ராஜ்ஜியத்தின் அழிவு ஆரம்பமாக போவதும் அவரது புத்திரியால் தான் என்று. அந்தபுரத்துக்குள் நுழைந்த நந்திதாவோ அதன் அழகில் மெய் மறந்து தான் போனாள். அவளை அறைக்குள் அழைத்து சென்ற பணிப்பெண்கள், "அரசியே தாங்கள் நீராட அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டோம்" என்று சொல்ல,
அவளும் சம்மதமாக தலையாட்டியவள், பொய்கையில் அவர்களுடன் நீராட சென்றாள். அவள் நீராடி வந்ததுமே அவளுக்கான அலங்காரங்களை மேற்கொண்டார்கள் அரண்மனை அலங்கார நிபுண பெண்கள். அலங்காரத்தின் இறுதியில் தேவதையாக இருந்தவளை அந்த பெண்களே இமைக்க மறந்து பார்த்து இருக்க, அவளும் தனது அறைக்குள் புகுந்து கொண்டாள். நேரம் செல்ல செல்ல அவள் மனதில் இனம் புரியாத பதட்டம் உருவாக ஆரம்பித்து இருந்தது.
பிரமாண்ட அறையில் தனிமையில் அமர்ந்து இருந்தாள் அவள். இன்னும் சற்று நேரத்தில் அவளை ஆட்கொள்ள வந்து விடுவான் யுவராஜன் என்று எண்ணியவளது விழிகளோ பயத்தில் படபடக்க, விரிக்கப்பட்டு இருந்த படுக்கை விரிப்பை அழுத்தமாக பற்றிக் கொண்டாள். மனதெல்லாம் ரணம் மட்டுமே அவளிடம் நிறைந்து இருக்க, தன்னை மணந்தவன் முன்னே அதனை காட்டி விட கூடாது என்னும் வீராப்பில் கண்ணீரை இழுத்துப் பிடித்துக் கொண்டே இருந்தாள் அந்த ராஜ்ஜியத்தின் அரசி.
இதே கணம், பட்டாபிஷேகம் முடித்து பொறுப்புகளை பதவியேற்ற யுவராஜனுக்கோ மணித்துளிகள் நிமிடங்களாக தான் கடந்தன. அனைத்தையும் முடித்து விட்டு சிம்மாசன இருக்கையில் இருந்து அவன் எழுந்தவன் சென்றது என்னவோ நந்திதா இருக்கும் அந்தபுரத்தை நோக்கி தான். அவன் உள்ளே நுழைந்ததுமே அவனை வாசலில் நின்ற இளம்பெண்கள் வணங்க, அவனோ நேரடியாக தன்னவள் அறைகளை திறந்து கொண்டே உள்ளே நுழைய பதறி எழுந்து நின்றாள் பெண்ணவள்.
கதவை தாளிட்டவனோ, "என் களைப்பை உன் விழிகளாலேயே களைந்து விட்டாய் நந்திதா" என்றுரைக்க, அவளோ தலையை தாழ்த்திக் கொண்டாள்… அவன் ஆசைப்பட்ட பொக்கிஷம் இன்று அவன் மஞ்சத்தில் விழுந்து விட்டது அல்லவா?? அலங்காரம் செய்து இருந்தவளது அழகை ரசித்துக் கொண்டே அடிமேல் அடி வைத்து அவளை நெருங்க, அவனது ஒவ்வொரு பாத சுவட்டுக்கும் பெண்ணவள் இதயத்தின் துடிப்பு அதிகரித்து. குனிந்து இருந்தவளது விழிகளோ அவன் பாதத்தை கண்டதுமே அவன் தன்னை நெருங்கி விட்டான் என்று உணர்த்த மேலும் தலையை தாழ்த்திக் கொண்டாள்.
அவனோ தனது கரத்தை நீட்டி அவள் முகத்தை நோக்கி நிமிர்த்தியவன் அவள் விழிகளோடு விழிகளை கலக்க விட்டான். அவள் விழிகளோ பயத்தில் மருண்டு இருக்க அதனை கண்டு கொண்டவனோ, "பயப்படாதே நந்திதா... உன்னை எப்போதுமே என் வாழ்வில் நான் காயப்படுத்தவே மாட்டேன்" என்று அவன் அவளுக்கு அளித்த அடுத்த வாக்குறுதியை பொய்த்து போய்விடும் என்று இருவருமே அப்போது அறியவே இல்லை.
அவள் விழிகளை பார்த்து விட்டு அவள் நெற்றியில் முதல் அச்சாரத்தை அவன் பதிக்க அவள் விழிகளோ மூடிக் கொண்டது. என்ன உணர்வென்று அவளுக்கு தெரியவே இல்லை ஆனால் அவன் கையால் திருமாங்கல்யம் வாங்கிய கணத்தில் அவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று சபதம் எடுத்த பெண்ணவளோ தனது மனதில் தேங்கி இருந்த நினைவுகளை எல்லாம் அழித்து விட்டு மணாளனின் மனைவியாக மாற முயன்று கொண்டு இருந்தாள். அவன் இதழ்கள் அவள் நாசி தீண்டி மென்பஞ்சு கன்னங்களை தீண்டி அவள் செவ்விதழ்களை நெருங்கி அதில் அழுந்த பதிய, விழிகளை மூடி அவன் ஸ்பரிசத்தை உணர்ந்தவளோ அவனவளாக மாறி தான் போனாள்.
இருவருக்குமான முதல் இதழ் முத்தமே யுவராஜனின் சித்தத்தினை பித்தம் கொள்ள செய்ய வாள் தீண்டி குருதி கண்ட அவன் கரமோ பெண்ணவள் இடை தீண்டி அதனை குருதி நிறத்தில் சிவக்க வைத்து இருந்தது. அவள் இதழ் தீண்டி விட்டு அவள் விழிகளை நோக்கியவன் கரமோ அவள் கழுத்தில் தனது கரம் பதித்து அவள் ஆபரணங்களை ஒவ்வொன்றாக களைய ஆரம்பித்தது. கழுத்து, இடை என்று அவன் கரம் பயணிக்க, பெண்ணவள் மேனி வெட்கத்தில் சிவக்க, தலையை தாழ்த்திக் கொண்டாள்.
அவள் கரத்தை பற்றி அழைத்து சென்றவன் மஞ்சத்தில் அமர வைத்து விட்டு தனது ஆபரணங்களையும் களைந்து அவளை ஆழ தயாரானான். அஸ்திரம் ஏந்தும் வீரன் அவனுக்கோ எதிரிகளின் சிரத்தை கொய்வதை விட, பெண்ணவளது ஆபரணங்களையும், வஸ்திரங்களையும் களைவது கடினமாக தான் இருந்தது. மனமும் உடலும் உணர்வுகளால் ஆர்ப்பரித்துக் கொண்டு இருக்க, பொறுமையாக இவையனைத்தையும் களைவது அவனுக்கே பெரும் பாடாகி போனது.
அவன் கரம் ஒவ்வொன்றாக களைய, பெண்ணவளோ வெட்கம் தாழாமல் தன்னை அவள் மறைத்துக் கொள்ள போராட, அவன் இதழ்களோ ரகசியமாகவும் குறும்பாகவும் புன்னகைத்துக் கொண்டது. இறுதியில் அவளுக்கு அவனே வஸ்திரமாகி போக, இருவருக்குமான கலவி யுத்தம் ஆரம்பித்து இருந்தது. போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்தவன் இன்று மஞ்சத்தில் இதழ்களையும் கரங்களையும் ஆயுதமாக்கி தன்னவளுடன் தனியாக யுத்தத்தில் ஈடுபட, சாளரங்களே வெட்கம் தாளாமல் முகத்தை மூடுவது போல மூடிக் கொண்டன.
அரசனவன் ஸ்பரிசம் வலித்தாலும், அது நந்திதாவுக்கு இன்பத்தை தான் வாரி வழங்க, தன்னவனுடன் இரண்டற கலந்தாள் பெண்ணவள். அடுத்த நாள் பொழுது புலரும் வேளையில் தன்னவன் திண்ணிய மார்பை மஞ்சமாக்கி படுத்துக் கொண்டு இருந்தவளோ விழிகளால் ஏறிட்டு ஆழ்ந்த மூச்செடுத்து தூங்கிக் கொண்டு இருந்த யுவராஜனைப் பார்த்தாள்.
அரசனுக்கு உரிய அனைத்து லட்சணங்களும் பொருந்திய காளையவனை மென் புன்னகையுடன் பார்த்தவளுக்கு நாணம் பொங்கி வர, அவன் மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டாள். பல வலிகள் மனதில் இருந்தாலும் தன்னவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று தன்னை செம்மைப் படுத்தியே பெண்ணவளோ அவன் வாசத்தை நுகர்ந்தவாறு சற்று மேலே எம்பி அவன் கூரிய நாசியில் முத்தம் பதிக்க, யுவராஜனோ, "இதழ்கள் கூட வெற்றிடமாக தான் இருக்கிறது நந்திதா" என்று சொன்னதுமே வெட்கத்தில் கூசி போனவளோ அவன் கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ள,
அவன் கரமோ அவள் இடையில் இருந்து கூந்தல் வரை அழுத்தமாக பயணித்து அவளை வருடிக் கொடுத்தது. ஒற்றை வருடலிலேயே அவள் மேனி சிலிர்த்தெழ, அவள் மென் முனகல் அவன் கழுத்தடியில் கவி பாட, அவள் முகத்தை இரு கைகளாலும் பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்த அவளோ கண்களை மூடிக் கொண்டவள் திறக்கவே இல்லை.
யுவராஜனோ, "என்னை பார் நந்திதா" என்று சொல்ல, கண்களை மூடி இதழ் பிரித்து சிரித்தவள், இல்லை என்று தலையாட்டினாள். அவனோ, "அரசர் கட்டளையை அவமதிப்பதற்கு தண்டனை தர போகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவள் இதழ்களை ஆழ்ந்து கவ்விக் கொண்டவன் மீண்டும் அவளுடனான காதல் யுத்தத்தை அரங்கேற்றி இருந்தான்.
இருவருக்குமே இன்பமான தருணங்கள் அரங்கேற, ஒரு நாள் மலையில் அரண்மனை பூங்காவில் முயல்களுடன் சேர்ந்து புன்னகையுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள் நந்திதா. அதே கணம் ராமவர்மனுடன் போர்ப் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்த யுவராஜனோ அவளைக் கண்டதுமே இதழ்கள் பிரித்து சிரித்தவன், "முயல்களுடன் மான்குட்டி விளையாடுவதை பார்" என்று சொல்லிக் கொண்டே அவளை நோக்கி செல்ல, ராமவர்மனோ சங்கடமாக, "விடை பெறுகிறேன் அரசே" என்றான்.
அவனோ திரும்பி ராமவர்மனைப் பார்த்தவன், "நீயும் வா ராமா, உன்னை அவளுக்கு நான் தனிப்பட்ட வகையில் அறிமுகப்படுத்தியது இல்லை அல்லவா? தளபதி என்பதை மீறி நீ என்னுடைய உற்ற நண்பன்" என்று சொல்ல, மெலிதாக புன்னகைத்த ராமவர்மன், "இப்படியான நட்பை பெற நான் பாக்கியம் செய்தவனாவேன் அரசே, ஆனால்" என்று ஆரம்பிக்க, "இது என் கட்டளை" என்று யுவராஜன் முடித்து விட, வேறு வழி இல்லாமல் அவனை மௌனமாக பின் தொடர்ந்தான் ராமவர்மன்.