ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன் டீசர்

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
டீசர் 1

வணக்கம் மக்களே....

நான் உங்க குட்டி பட்டாசு 11

டீசர்:

முகம் முழுவதும் வியர்வை துளிகள் வழிந்த வண்ணம் இருக்க, தலையை கவிழ்ந்துக் கொண்டு நின்றவளையே மேலிருந்து கீழ்வரை ஆராய்ச்சியாக பார்த்தான் அவன்.

அவளது பட்டுசேலையும், கழுத்தில் இருந்த ஒன்றிரண்டு நகைகளும், அழுது வடிந்த கண்களும் எதையோ உரைப்பது போல் தோன்ற தன் நெற்றியை நீவியவனோ, "ரைட்டு. உனக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வைக்க பார்த்திருக்காங்க. அதுனால வீட்டைவிட்டு ஓடி வந்துட்ட? அப்படி தானே." என்றவனது பதிலில் அதிர்ந்தவளோ, தன் தலையை நிமிர்த்தியபடி, அதிர்ச்சியோடு அவனையே பார்த்தாள்.

"சொல்லு. உன் பேர் என்ன?" என்றவன் தன் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு கேட்க,

"தே...ன் குழலி." என்றாள் எச்சிலை விழுங்கியபடி.

"ம்ம்ம். சரி நான் உனக்கு என்ன பண்ணனும்?"

"அது வந்து."

"தயங்காமல் சொல்லு."

"இன்னைக்கு ஒரு நாள் உங்க வீட்டுல தங்கிக்கட்டுமா." என்றவளின் பதிலில் அவனது இதழ்களில் மெல்லிய கீற்றாய் புன்னகை துளிர்த்தது.

"முன்பின் தெரியாத என் மேல உனக்கு எப்படி நம்பிக்கை வந்துச்சு? ஒருவேளை நான் கெட்டவனா இருந்தால்?.." என்று அவன் இழுக்க, அவளோ அவனையே பார்த்தவள்,

"இல்லை. கெட்டவரா இருந்தால் என்னை காப்பாத்திருக்க மாட்டீங்க." என்றவளின் பதிலில் வாய்விட்டே சிரித்தவன், அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

"நீ நினைக்குற மாதிரி அவ்ளோ நல்லவனெல்லாம் இல்ல." என்றவனின் பதிலில் அதிர்ந்தவளோ, பின்னோக்கி நகர, அவனோ அவளது வெற்றிடையை சுற்றி வளைத்தவள் தன் புறம் இழுத்ததில் அவன் பரந்த நெஞ்சத்தின் மீது மோதியவளுக்கு உலகமே நின்றது போன்ற உணர்வு துளிர்த்தது.
 

T21

Well-known member
Wonderland writer
#விழியோரம்சிறையானேன்

ei4TQDN55877.jpg

டீசர் 2


அவனது சட்டையை இறுகப்பற்றியவள் அவனது நெஞ்சத்தில் தன் தலையை புதைத்துக் கொண்டு அழுகத் தொடங்கினாள்.


"என்னாச்சு? தேன்குழலி" என்றவன் அவளது முதுகை ஆதரவாக பிடிக்க கைகளை தூக்கியவன், பின் என்ன நினைத்தானோ, கைகளை கீழே இறக்கியிருந்தான்.


"அவங்க என்ன கொன்னுடுவாங்க. அவங்க இங்கையும் வந்துட்டானுங்க." என்று தேம்பி தேம்பி அழுதவளை, எவ்வாறு தேற்றுவது என்று தெரியாமல் குழம்பிப் போனவனோ, "குழலி... இங்க பாரு." என்றான் அதட்டலாக.


அவனது குரலுக்கு செவி சாய்க்காதவளோ, அழுகையில் கரைய, தன் பொறுமையை இழந்தவன், அவளது தாடையை, தனது ஆள்காட்டி விரல் கொண்டு தூக்கியபடி, அவளது கண்களையே ஊடுருவிப் பார்த்தான்.


"இந்த கண்ணுல வர, அழுகையை இந்த நொடி நிறுத்திடு. நீ எதுக்கு அழுகுற? ஏன் அழுகுறனு தெரியலை. ஆனால் இதுக்கு மேல அழுது உன்னை பலவீனப்படுத்திக்காதா. இனி உன் கண்ணுல தைரியத்தை மட்டும் தான் பார்க்கனும்." என்று கூறிக்கொண்டே தனது பெருவிரலால் அவளது கண்ணீரைத் துடைக்க, அவனது கண்களையே ஆழமாக பார்த்தவளுக்கு அவனது தொடுகை புரிந்த நொடி அவளையும் அறியாமல் ஒருவித கூச்சம் தொற்றிக் கொண்டது. அப்போது தான் அவனை அணைத்திருந்தது புரிய, அவனைவிட்டு விலகி வந்தவள், அவனது முகம் பார்க்க முடியாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.


"சாரி. தெரியாமல்.." என்றவள் முடிக்கும் முன்னே, இதமாக புன்னகைத்தவனோ, "ஏய் நான் ஒன்னும் தப்பா நினைக்கல. அதுவும் பால்கொழுக்கட்டை மாறி இருக்க உனக்கு இந்த கரிக்கட்டையை பிடிக்கவா போகுது." என்றான் சிரித்துக்கொண்டே.


அவளோ, "உங்களுக்கு என்ன கொறைச்சல். நல்ல மனசு இருக்கே." என்றாள் மென்மையாக.


"ஹலோ மேடம்... சும்மா உங்களை சிரிக்க வைக்கனும்னு சொன்னேன். கருப்பாக இருந்தாலும் சும்மா கலையாக இருக்கோம்ல." என்றவன் தனது காலரை தூக்கிவிட, வாய்விட்டு சிரித்தவளோ, "எது?" என்றாள் நம்பாத பார்வை பார்த்தபடி.


"அடிங்கு... ஓய் என்ன நக்கலா?" என்றவன் முறைக்க,


"இல்லை விக்கலு." என்று விக்குவது போன்று ஒலியை எழுப்பியவாறே கூற, "வாய் ஓவர் ஆகிடுச்சு. வண்டார்குழலி." என்றவன் கடிந்தபடி அவளை நோக்கி வந்தான்.



"ஐ அம் எஸ்கேப்." என்று கூறிக்கொண்டே அறைக்குள் சென்று மறைந்தவளையே புன்னகையோடு ஏறிட்டவனுக்கு அவளது புன்னகை முகம் மனதினை நிரப்பி இருந்தாலும், அவளது அழுகைக்கு காரணம் என்ன? என்பது புரியாமல் குழம்பித்தான் போனான் வருங்கால இயக்குனர் கலையரசன் கார்த்திகேயன்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top