என்று சத்ரேஷ் கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் அமர்ந்திருந்த கட்டிலுக்கு நேரெதிராக
அமைந்திருந்த ஜன்னலின் கதவு "க்ரீச்" என்ற சத்தத்துடன் திறந்து கொள்ள அதைக் கவனித்த
சத்ரேஷோ "ம்ப்ச் இது வேற முக்கியமான விஷயம் கதைக்கும்போது தான்"
என்று முணங்கிக் கொண்டே ஜன்னலை நோக்கிச் சென்றவன் கண்கள் ஓரிடத்தை பார்த்தபடி அதிர்ச்சியில் உறைந்து நின்றது.,
அவர்களது வீட்டின் வாயிற்கதவருகில் சிவப்பு நிறத்தில் லெஹெங்கா அணிந்து வெள்ளை நிற வைர கற்களாலான நகைகளை அணிந்திருந்த பெண்ணொருத்தி அவனைப் பார்த்தபடியே நின்றிருக்க,
அவனுக்கு அவளுடைய பார்வையில் தெரிந்த ஏதோவொன்று வயிற்றில் பயப்பந்தை உருளச் செய்தது.
"என்னடா அப்டி என்னத்த பார்க்குற ?" என்ற சத்யாவின் குரல் ஆடவனை நனவுலகுக்கு அழைத்து வரச் சத்யாவிடம் திரும்பி,
ப்ச் ஒண்ணுமில்ல இரு ஜன்னல அடைச்சுட்டு வாரேன் என்றவன் ஜன்னல் நோக்கித் திரும்பிய
நொடி அவன் முன்னால் வந்த அந்த முக்காடு போட்ட மணப்பெண்ணோ கையில் வைத்திருந்த
மணி போன்ற ஏதோ உபகாரணத்திலிருந்து ஒலியெழுப்பியபடி
"சீக்கிரமா வந்து எனக்கு விடுதலை கொடு சத்ரேஷ்" என்று ரத்தக்கரை படிந்த பற்களை காட்டி சிரிக்க,
பயந்தபடி அடித்துபிடித்துக் கொண்டு எழுந்த சத்ரேஷோ அப்போது தான் படுக்கையில் இருப்பதை உணர்ந்து நிம்மதியடைந்தான்.
கிராமத்திற்கு சற்று ஒதுக்குபுறமாகக் காணப்படும் அவ்ஜமீன் பங்களாவில் ஏதேதோ மந்திரங்களை
உச்சாடனம் செய்தபடி சிவப்பு நிற சாரி அணிந்த நான்கு பெண்கள் அமர்ந்திருக்க அவர்களைப் பயபக்தியுடன் வணங்கியபடி நின்றிருந்தனர்.ஜமீன்தாரும் அவரது குடும்பத்தினரும்,
அதே சமயம் அங்கிருந்த கடிகாரம் இடஞ்சுழியாகச் சுற்றி சிறிய முள் எண் ஆறையும் பெரிய முள் எண்
மூன்றையும் குறித்து நிற்க வினாடி முள்ளோ ஒன்பதை குறித்தபடி நின்று போக,
ஜமீன்தாரின் மகள் மாயாதேவி மட்டும் வெளியே பூட்டப்பட்டிருந்த சிவப்பு நிற கதவைப் பார்க்க,
அந்தக் கதவின் உள்ளிருந்த ஒரு பெண்ணின் கடைசி நிமிட மூச்சுக்களை ஒத்த அனாமத்தான ஓல குரல் ஓங்கி ஒலிக்க,
அதற்கு ஒத்து ஊதுவது போல் "பக்..ம்ம்.ம்.பக் ..பக்க் "என்ற கோட்டானின் அலறலும் அதைத் தொடர்ந்து