ராட்சசனே ? என் ரட்சகனே!!? - கதை திரி
Nice?ராட்சசனா? ரட்சகனா? - 03
பிராகசமான விடியலை உலகிற்கு தருவதற்கு ஆழியிலிருந்து மெதுமெதுவாக தன் சுடர்கதிர்களை உலகத்திற்கு பரப்பிக் கொண்டிருந்தான் அந்த கதிரோன். வெளியே பறவைகளின் கூக்குரல்கள் அலாரமாக அடித்துக் கொண்டிருக்க அடித்துத் போட்டது போன்று குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர் ராட்சசனும், ராட்சசனின் அவளும்.. சூரியன் உச்சத்தை அடைந்த விட்டான்.. அனைவரும் இயங்கி கொண்டிருக்க இவர்களுக்கு மட்டும் என்ன உறக்கம் என்று மெது மெதுவாக தன்னுடைய பொன் கதிர்களை பால்கனியின் ஜன்னல் உள்ளே நுழைந்து அவள் முகத்தில் பளிச்சென்று பட வைக்க.. "அடச்சே அதுக்குள்ள யாருடா லைட்டா போட்டது என்று கண்ணை கசக்கி கொண்டே" எழுந்தவளுக்கு, ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.. பின்னே தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் திருமாங்கல்யமும், கட்டிலுக்கு பக்கத்தில் தரையில் படுத்து உறங்கும் அவளின் ராட்சசனை கண்ட பின்பு தான் அவளுக்கு நினைவு வந்தது தனக்கு திருமணம் முடிந்தது என்றே..
அவனருகே சென்றவள், அவன் மூச்சு சீராய் வருவதை வைத்து அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பது தெளிவாக புரிந்தது. "அடேய் இவ்வளவு பெரிய பெட் இருக்கே அப்புறம் ஏன்டா கீழே பரப்பிக்கிட்டு படுத்திறுக்க, நானாச்சு ஜம்முன்னு மேலே படுத்தருப்பேன்" என்று நொந்தவள்.. அவன் அருகே குனிந்து, அவன் முகத்தை பார்க்க உர்ரென்று இருந்தது.. ஏன்டா தூக்கத்தில் கூட சிரிக்கவே மாட்டியா நீ என்று அவன் உதடுகளை இழுத்து சிரித்த மாதிரி வைக்க.. அவனிடம் அசைவு தெரிய.. வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.. அப்போது தான் கீழே உடைந்திருந்த கண்ணடி துண்டுகளை பார்க்க இரவு நடந்தது எல்லாம் நினைவில் தோன்ற, அவனின் மீதான கோபமும் நியாபகத்திற்கு வந்தது.
நேற்று நைட் தான் உன்ன அந்த கிழி கிழிச்சான்.. இப்ப அவனை போய் கொஞ்சிட்டு இருக்க என்று தன் தலையில் தானே கொட்டி கொண்டவள்.. அவன் இன்னும் துயில் கொள்வதை கண்டு.. ம்ஹூம் இவன் இன்னைக்கு எழுற மாதிரி தெரியல.. எப்படி எழுவான் நேத்து தான் இரண்டு பாட்டில் பீர்ரை அப்படியே முழுங்குனானே.. என்றவள் அவனை உற்று பாரக்க, கறுப்பும் அல்லாது வெள்ளையும் அல்லாது மாநிறம் போன்ற நிறம்.. அலை அலையாய் புரளும் கேசம், அழகிய சாம்பல் கண்கள்.. கூர் நாசி.. சிவந்த அதரம்.. திடகாரமான உடல், அதனை பார்க்கும் போதே தெரியும் இவன் சரியாக உடற்பயிற்சி செய்பவன் என்று.. ஒருவேளை அதுனால தான் இவன் குடிச்சாலும் தொப்பை இல்லையோ என்று தீவிரமாக சிந்திக்க.. கோபத்திலும் அவனை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கோம் என்பதை அவள் அறியவில்லை.
காற்று அவள் மேனியை தழுவ, பால்கனி சென்று அந்த அழகிய தோட்டத்தை ரசித்தாள். அதில் அவளுக்கு பிடித்தமான செடிகளே அதிகம் இருக்க.. "பரவாயில்ல இந்த ராட்சசனுக்கும் கொஞ்சம் ரசனை நல்ல தான் இருக்கு". அதனை பார்த்து கொண்டிருந்தவளின் கண்களில் வெள்ளை ரோஜா செடி தென்பட, மனம் குழந்தையாக குதுகலித்தது. அவளுக்கு மிகவும் பிடித்த மலர் என்றால் அது வெள்ளை ரோஜா தான். அதனை கண்டவுடன் தன் வீட்டு நியபகமும் வர.. "என்ன நம்மள தேடி ஒருத்தரும் வரல, ஒருவேளை தொல்லை போயிடுச்சுனு நினைச்சிட்டாங்களோ, இல்லையே அப்படியே நம்மள விடமாட்டாங்களே, நம்ம காணாம போனவுடனே ஊரையே சல்லடை போட்டு தேடியிருபாங்களே" என்று நினைத்தவள், இப்போ நம்ம ஊரில் என்ன நடந்திட்டு இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கத் தொடங்கிவிட்டாள் பூமிகா.
*************
அந்த தென்னை மரத்தில் ஒருவன் கட்டி வைக்கப்பட்டிருக்க, அவன் உடலெங்கும் சவுக்கு அடியின் காயங்கள் இருக்க, வலியில் முனங்கிக் கொண்டிருந்தவனின் தலையை பற்றினான் முத்து என்கிற அடியாள்..
டேய் முத்து என்ன எதாச்சு வாயை தொறந்தானா என்று கேட்டபடி அங்கே அடி வாங்கியவனை பார்த்துக் கொண்டே தன் ஜீப்பில் வந்து இறங்கினார் நாறப்தைந்து வயதையோட்டிய காளிங்கன், அவரோடு அவன் தம்பி நடராஜனும் வந்தான்.
இல்லை ஐயா, என்ன அடி அடிச்சும் சின்னமா எங்கே போனங்கனு தெரியலனு சொல்றான். அடிச்ச எனக்கே கை வலி வந்திருச்சு என்றான் காளிங்கத்தின் அடியாள் முத்து.
டேய் எச்சக்கள நாயே ஒழுங்கா சொல்லிடு, பூமி எங்கடா.. உன்கூட தானே அவளை கடைக்கு அனுபிச்சு வைச்சேன் இப்போ தெரியலனு கதையா கட்டுற... சொல்லுடா.. சொல்லுடா நாயே என்று காளிங்கனும் அங்கிருந்து சவுக்கை எடுத்து வெளுக்க.. ஐயா எனக்கு நிஜமாலும் சின்னமா எங்கே போனாங்க என்று தெரியாதுங்க.. என்று கதறியவனை கண்டு சிறிதும் மனம் இரங்காதவர் அவன் தோளை உரித்து கொண்டிருந்தார்.
அண்ணே நிறுத்துங்க, அவனுக்கு தெரிஞ்சு இருந்தா நாம அடிச்ச அடிக்கு வாயிலிருந்து எதாச்சும் உண்மையை கக்கியிருப்பான். அவனுக்கு எதுவும் தெரியாதுனு நினைக்கிறேன் என்ற நடராஜன் , அடியாள் முத்துக்கு கண்ணை காட்டி விடுவிக்கச் சொல்ல அவனும் விடுவித்தான். விட்டால் போதும் என்று ஓடிவிட்டான், அடி வாங்கியவன். இதற்கு முன் அவர்கள் வீட்டில் வேலை செய்த டிரைவர் சுந்தரம்.
டேய் தம்பி இப்போ என்னடா பண்றது. இவ்ளோ நாள் அவளை கோழி அடை காக்கிற மாதிரி பொத்தி பொத்தி வீட்டுக்குள்ள வச்சிருந்தா, இப்போ இப்படி ஆகிடுச்சே.. அந்த ஓடுகாலி நாயை எப்படிக் கண்டுபிடிக்கிறது. எல்லாம் கூடி வரும்போது கடைசியில் இப்படி பண்ணிட்டாலே அந்த சிறுக்கி மவ என்று பூமிகாவை வசை பாடினார் காளிங்கன்.
அண்ணே பொறுமையா இரு, அவ எங்க போயிருப்ப இங்கன தான் எங்காய்ச்சு இருப்பா. சல்லடை போட்டு தேடுவோம், அவ கிடைச்சதுக்கு அப்புறம் இருக்கு அவளுக்கு பூசை என்றபடி தன் அண்ணனை சமாதனபடுத்தினான் நடராஜன். அவள் மீது கொலை வெறியில் இருக்கும் இவர்கள் வேறு யாரும் இல்லை பூமியின் பெரியப்பாவும், சித்தாப்பாவும் தான்.. ( இவர்கள் குடும்பம் பற்றி பின் வரும் பின்வரும் அத்தியாயங்களில் காண்போம்).
************
தூக்கம் கலைந்த ரியானுக்கு தலை வின்னென்று வலிக்க, அப்படியே தலையை பிடித்தவாரு எழுந்து அமர்ந்தான். நேற்று அடித்த பீர் சரியாக வேலையை காட்டியது. நிமிர்ந்தவன் கண்கள் தேடியது அவளை தான்.. கண்களின் கருவிழியை பம்பரம் போன்று சுழலவிட அதில் விழுந்தது.. ஓவியம் போல் காட்சியளிக்கும் பூமிகா தான். கண்ணில் மை அழிந்து கொஞ்சம் கீழ் இறங்கியிருக்க, தலைமுடி கலைந்து ஒற்றை முடி அவளின் நெற்றியில் விழுந்து உதட்டை தொட்டுக் பயணித்து கொண்டிருக்க, நேற்று அணிந்திருந்த புடவையை மாற்றாமல் அப்படியே உறங்கியதால் கசங்கி இருந்தது.. அவளை மட்டுமே பார்த்து கொண்டிருந்தான். அதில் என்ன இருந்தது என்று தான் புரியவில்லை. ஆனால் அவளை பார்த்த பின்பு தான் அவன் மனம் அமைதியானது போன்ற உணர்வு. அதன் காரணம் அவனே அறிவான்.
அவளை பின்னிருந்து நெருங்கி நின்றுக் கொண்டிருந்த ரிகான்.. "இங்க என்ன செஞ்சிட்டு இருக்க" என்று கணீர் குரலில் கேட்க, தீடிரென்று கேட்ட அவன் குரலில் பதறிக் கொண்டு திரும்ப அவனின் இதழ் அவளின் இதழை தீண்டியது. அடுத்த நொடி பதறிக் கொண்டு விலகினாள். அவனும் விலகிட, இருவரும் அவர்களின் உதட்டை நன்றாக தேய்த்து கொண்டனர்..
"காலையிலே கருமம் கருமம்.. இன்னும் ஊத்த பல்லை கூட விலக்கியிருக்க மாட்ட, இதிலே கிஸ் வேற.." ச்சே என்று தன் உதட்டை இன்னும் துடைத்து கொண்டே ரிகான் திட்ட.. "ஆமா அப்படியே எனக்கு மட்டும் தித்திப்பா இருந்துச்சு பாரு.. சரக்கு அடிச்ச உன் நார வாயால என்னை கிஸ் பண்ணிட்டு கடைசியில் என்ன சொல்றையா டா" என்று இவளும் எப்போதும் போல் மைண்ட வாய்ஸில் பேசுவதாக நினைத்து வாய்விட்டு உலறிவிட..
" ஏய் இப்ப என்ன சொன்ன.. திரும்ப சொல்லு பார்க்கலாம்"
அய்யோ மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா உளறிட்டோமோ. இவன் என்ன நம்மை இப்படி முறைச்சு பார்க்கிறான்.. அது வந்துங்க நீங்க இப்போ தானே எழுந்திங்க தூக்க கலக்கத்தில் உங்களுக்கு அப்படி கேட்டிருக்கும்.. நான் எதுவும் பேசவே இல்லைங்க என்று இடது வலதுமாக தலையாட்டியவள் அங்கிருந்து நழுவ பார்க்க..
"ஏய் நில்லு ஒரு நிமிஷம்"
அய்யோ கண்டுபிடிச்சிட்டானா என்றவாறே அவனை பயமாக திரும்பி பார்க்க, "அந்த கப்போர்டில் டிரஸ் இருக்கு போய் குளிச்சிட்டு மாத்திக்க.."
சட்டென்று கேட்டுவிட்டாள்.. நான் தான் இந்த வீட்டு வேலைக்காரிக்கு கூட தகுதியில்லாதவளாச்சே அப்புறம் எனக்கு எதுக்குங்க டிரஸ் தறிங்க என்று அமைதியாக தான் கேட்டாள். ஆனால் அவனுக்குள் ஒரு பூகம்பமே அது ஏற்படுத்தியது. அவனு மனதுள் பல தாக்த்தை ஏற்படுத்த கோபத்தை அப்படியே அவள் மீது கொட்டினான்.
"ஏய் இப்போ என்னடி உனக்கு.. ஹான்.. போ.. போய் ஒழுங்கா குளி. வந்திட்டா பெரிசா கேள்வியை தூக்கிட்டு" என்றவன் கத்தலில் திடுக்கிட்டவள், வேகமாக சென்று உடை எடுத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டு கதவை மூடிக் கொள்ள அதையும் தாண்டி ஒலித்தது அவனின் குரல்..
"ரொம்ப நேரம் அப்படியே குளிக்கிற மாதிரி ஓ.பி அடிக்காம சீக்கிரம் வா.. உனக்கு நிறைய வேலையிருக்கு", என்றவனின் பேச்சை கேட்டவள் அரக்க பரக்க வேகமாக குளித்து வந்துவிட்டாள்.. காலையிலே இவனிடம் திட்டு வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில்..
"குளிச்சேடன்ங்க என்றபடி அவன் முன் நிக்க.." "இப்போ என்ன நான் உனக்கு மேக்கப் போட்டு விடுனுமா.. ப்பே.. போய் முதலில் ஸ்டராங்க ஒரு காபியை போட்டு எடுத்திட்டு வா" என்றவனுக்கு மைண்ட வாய்ஸிலே மண்டகபடி செய்தாள்.. "டேய் பனை மரம் நீ தானடா குளிச்சிட்டு வேலை சொல்றேனு சொன்னா இப்போ அந்தர் பல்டி அடிக்கிற.."
ஏய் என்ன நின்னுட்டே இருக்க என்றவனின் குரலில்.. அது ஒன்னுமில்ல நானும் ஒரு காப்பி போட்டுக்கிட்ட என்றவளை மேலும் கீழும் பார்த்தவன்.. ம்ம் என்று தலையை மட்டும் ஆட்ட.. அங்கிருந்து கிளம்பச் சென்றவளை மறுபடியும் தடுத்து நிறுத்தினான்.
காபி ஸ்டராங்கா இருக்கனும் என்றவன் குளியலறைக்குள் தன்னை சுத்தப்படுத்தி கொள்ள புகுந்துக் கொண்டான். சமையலறைக்குள் புகுந்தவள் பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருந்தாள்.. "காபி வேனுமா காபி.. அதுவும் ஸ்ட்ராங்கா.. நான் போடப்போற காப்பியை நீ உன் வாழ்க்கையிலே மறக்கக் கூடாது டா" என்றவள் பாலை காய்ச்சிவிட்டு காபி தூளை அவன் கேட்ட மாதிரியே தூக்கலாக தூவினாள். இப்போ என்ன பண்ணலாம் உப்பு போடலாமா மிளகாய் தூள் போடலாமா என்று தன் குட்டி மூளையை குடைந்து கடைசியில் போன போது உப்போ போடுவோம் என்று கொஞ்சமே கொஞ்சமாக மூன்று ஸ்பூன் உப்பை அள்ளி போட்டவள், தனக்காக மணமணக்க சுவையான காப்பியை போட்டுக் கொண்டு அறைக்கு சென்றவள், அய்யோ ஏற்கானவே அந்த கத்து கத்தினான் இப்போ இதக்குடிச்சா சொல்லவே வேணாம். அவசரபட்டுடோமோ என்று காப்பியை பார்த்துக் கொண்டே நின்றவளை..
"ஏய் என்ன எப்போ பார்த்தாலும் சிலை மாதிரியே நிக்கிற", என்று அதட்ட, சரி எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்று உப்பு காப்பியை அவனிடம் நீட்டிவிட்டு, சுவையான காப்பியை தான் எடுத்த கொண்டு பால்கனிக்கு சென்று பூக்களை ரசிக்க ஆரம்பித்தவாரே மிடரு மிடராக காப்பியை அருந்தினாள். ரிகானும் பெட்டில் அமர்ந்தவாறு போனை பார்த்து கொண்டே எடுத்து ஒரு வாய் பருக.. தூ.. தூ என்று கீழே துப்பியவன், "போட்டிருக்க பாரு காப்பி கண்டறாவியா இத விட பாய்சனே நல்லா இருந்து இருக்கும்" என்று அவளுக்கு அர்சனையை வழங்கியவன், அவளை கண்களால் தேடினான். அவளோ அனைத்தும் மறந்து பூக்களை ரசித்தவாரே காப்பியை பருகிக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்றவனை, அவளும் திரும்பி பார்த்தாள்.
"அங்கே டேபிள் மேலே இருக்க போனை எடுத்திட்டு வா" எனச் சொல்ல.. "அங்கிருந்துதான டா வந்த நெட்டைக்கொக்கு எடுத்திட்டு வரதுக்கு உனக்கென்ன" என்று மனதினுள் புலம்பியவள் தன் கோப்பையை அங்கே வைத்துவிட்டு அவனது போனை எடுத்த வந்துக் கொடுத்தாள். அதற்குள் காபி கோப்பையை மாற்றியவன் இப்போது அவள் முகத்தை உற்று பார்த்திருந்தான். அவள் முகம் எப்படி போக போகிறது என்று ஆவலாக பார்க்க.. ஒரு வாய் குடித்தவள்.. அடுத்த நிமிடம் அதனை ரிகான் சட்டை மேலே துப்பியிருந்தாள். அடச்சீ.. என்ன ஒரு கேவலமான காப்பி.. ஆமா காபி கப்பு எப்படி மாறுச்சு என்று சிந்தித்தவள், ரிகான் முகத்தை பார்க்க கடுகு போட்டால் கூட வெடித்துவிடும் போல அப்படியிருந்தது. "ஐய்யோ இந்த ராட்சசன் வேற அப்பப்ப எரிமலையா மாறுறானே!! எப்பா முருகா கொஞ்சம் கருணை காட்டுப்பா என்று நினைத்தவாரு" வெளியே! "சா..சாரிங்க காப்பி.. உப்பு.. ச்சீ.. சக்கரை.." என்று ஏதேதோ உளறியவள். நீங்க போய் குளிங்க நான் உங்களுக்கு சாப்பாடு செய்றேன் என்றவள் அவன் பேசுவதற்கு முன் ஓடிவிட.. யூ... பிளடி இடியட் என்று அவன் கத்திய கத்தல் காற்றில் மிதந்து அவள் செவியை அடைந்தது.
எப்படியோ பூமி அந்த ராட்சசன் கிட்டேயிருந்து தப்பிச்சிட்ட, ஆனாலும் இவன் என்ன காட்சில்லாக்கு(Godzilla) தம்பியா இருந்திருப்பானா இந்த கத்து கத்துறான். நல்ல வேளை நீ அவன் நெஞ்சு அளவுக்கு உயரம் இருந்த.. கொஞ்சம் அவனை விட அதிகமா வளர்ந்திருந்த அவன் மூஞ்சிலே துப்பியிருப்ப என்று பெருமூச்சு விட்டாள்.. அடியேய் பூமி கடைசியில உன் நிலம இப்படி மைண்ட் வாய்ஸில் புலம்புறதா மாறிடுச்சே என்று அவளுக்கு அவளே சொல்ல.. பின்னே நீ வாய் திறந்த, நீ பேசுற பேச்சுக்கு உனக்கு சங்கு தான் என்றது அவள் மனம்... ஒருவேளை வாழ்க்கை முழுதும் நம்ம பொலப்பு இப்படி மைணட் வாய்ஸ் பேசிட்டே முடிஞ்சிடுமா என்று ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருந்தவளின் நினைவை கலைத்தது, வீட்டின் அழைப்பு மணியின் சத்தம். அட இப்போ யாரு வந்திருப்பாங்க என்று யோசித்த கொண்டே கதவை திறந்து பார்க்க, பார்த்தவளின் குண்டு கண்கள் இன்னும் பெரிதாக விரிந்தது. அங்கே............................
* தொடரும்...
கமன்ட் செய்யுங்க பேபிஸ்..?
ராட்சசனே ? என் ரட்சகனே கதைக்கான கருத்துகளை இத்திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..?
ராட்சசனே ? என் ரட்சகனே!!?- கருத்து திரி
ராட்சசனே ? என் ரட்சகனே கதைக்கான கருத்துகளை இத்திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..?pommutamilnovels.com