ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மோகினி டீசர்

Status
Not open for further replies.

T23

Moderator
மயக்கும் மோகினி! மயங்கும் மந்தாகினி!

டீசர் - 1


புயல் காற்று வேகமாக வீச, தூறல் மழையாகிப் போனது. சோ'வென்று பேய் மழை பெய்ய, சுற்றியிருந்த மரங்களெல்லாம் பேயாட்டம் கண்டது.


“ச்சை! இம்சை புடிச்ச மழ. இம்மா நேரம் நல்லாத்தேன் இருந்தது, இந்த பொணத்த தூக்கிப் போட்டு குடுசைக்குள்ள போலாம்னு பாத்தா இப்டி வெளுத்து வாங்குது. தோண்டுன குழில இப்போ தண்ணீதேன் கிடக்கு. எப்டி பொதைக்க?” என்று தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த மது போதலை எடுத்து வாய்க்குள் கவிழ்த்தவன், ஒரு முடிவு எடுத்தவனாக “சரி இப்போ மேலோட்டமா பொதச்சிட்டு, காத்தால வந்து ஆழத் தோண்டி பொதச்சிடலாம்” என்று தனக்குள் பேசிக்கொண்டே, அந்த பிணம் இருந்த பக்கம் திரும்ப, அங்கு பிணத்தைக் காணவில்லை. “ஆத்தாடி, இங்க இருந்த பொணம் எங்க போச்சு?” என்றபடி சுற்றிமுற்றித் தேட, அந்த சமயம் பளிச்சென்ற மின்னல் வெட்டியது.

அந்த வெளிச்சத்தில் இடுகாட்டின் முருங்கை மரத்தில் அவள்தான் வேட்டையாடிக் கொண்டிருந்தாள். பார்த்தவரின் கண்கள் அகல விரிந்தது. மரக்கிளையின் நடுவே அந்த பிணம் கிடத்தப்பட்டு இருக்க, அவள் இரத்ததாகம் தீர்த்துக் கொண்டிருந்தாள். பிணத்தின் கபாலம் பிளக்கப்பட்டு, இரத்தம் பீறிட்டு வர, ரசித்து ருசித்து சுவைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தாள் இரத்தத்தை அவள் மோகினி.

வருவாள் மோகினி!
டீ ஆத்திட்டேன். டெஸ்ட் எப்டின்னு சொல்லிட்டு போங்க மக்கா!
 
Last edited:
Status
Not open for further replies.
Top