ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மூன்றாம் நபர்-கதை திரி

Status
Not open for further replies.

Ela sakthi

New member
Wonderland writer
செஞ்ஞாயிறும் தன் கடமையை முடித்து வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்தது, சரி இன்றைக்கு விளையாடியது போதும் என்று தானும் வீட்டிற்கு கிளம்பளானாள் பால்மனம் மாறா எட்டு வயதான நம் இளமதி.
யம்மாஆஆஆஆ யப்பாஆஆஆஆ எங்கிருக்கிங்க என்று தன் தாய் தந்தையரை விழித்துக் கொண்டிந்தாள் இளா . இருவரும் தீவிரமாக தொலைக்காட்சியில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்த இளா அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு டிவியில் ஆழ்ந்தாள்.
மூவரும் அப்படி என்ன தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் , அது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி . ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் நிகழும் அந்நிகழ்ச்சியின் இந்த வார தலைப்பு பெண் பிள்ளை வளர்ப்பு பற்றியது.
அதில் ஒரு சிறுமி ,“ குட் டச், பேட் டச்" பற்றி விரிவாக விவரித்துக் கொண்டிருந்தாள். அதுவரை அமைதிக் காத்த நம் இளா, தன் தந்தை இராகவனிடம் " யப்பா, யப்பா அந்தப் பிள்ள சொல்றதெல்லாம் உண்மையாபா நம்ப செஸ்ட்டு , லிப்ஸ்சு, பிட்வின் த லெக்ஸ்சு யாராச்சு டச் பண்ணா தப்பாபா” என்றாள்.
தன் செல்ல மகளின் எதிர்பாரா கேள்வியில் சிறிது அதிர்ச்சி அடைந்த தாய் நர்மதா, “ சின்ன பிள்ள மாறி பேசு, எப்ப பாரு பெரிய மனுஷி மாறி கேட்டுக்கிட்டு,இங்க என்ன வேல உனக்கு உள்ள போ” என்று அதட்டினாள் .
மனைவியின் செயலால் கோபம் கொண்ட இராகவ், “இளா கேட்டதுல என்ன தப்பு, அவள ஏன் திட்டுற" என்றான். நர்மதாவோ, " அது இல்லங்க அவ வயசுக்கேத்த பேச்சு எப்பவாச்சு பேசுறாளா, இளா நம்ம பொண்ணு நமக்கு ஒன்னும் தெரியாது இதேயே வேற யாராவது கேட்ட என்ன நெனெப்பாங்க" என்றாள்.
நம்ப குறும்புக்கார இளாவோ ," நம்ம என்ன அப்டி பெருசா கோட்டுடோம் " என எண்ணிக் கொண்டிருந்தாள்.
மனைவியின் பேச்சில் எரிச்சலான இராகவ், “ என்ன பேசுர நர்மதா, நம்ப சோஷைட்டி பத்தி எல்லாம் கவலப்பட கூடாது, நீ நியூஸ் எல்லாம் பாக்கிறியா எப்பிடி, எப்ப டிவி ஆன் பண்ணாலும் ஒரு வயது,ஆறு மாசம், ஒரு மாசம் பெண் குழந்தை கற்பழிப்புனு தான் வருது" . அதுமட்டுமில்ல பொம்பள பிள்ளைங்க போற வர இடமெல்லாம் பிள்ளைங்கள அங்க தொடுரது இங்க தொடுரதுனு, பிள்ளைங்கள வெளிய அனுப்பவே பயமா இருக்கு உனக்கு இத நான் செல்லி தான் தெரியனும்னு இல்ல உனக்கே தெரியும். தெரிஞ்சும் நீ இப்டி பேசுறது தான் கஷ்டமா இருக்கு" .என்றான்.
இது எல்லாம் சரிதாங்க, ஆனா அதுக்கு நம்ப என்ன பண்ண முடியும் என்று இராகவை வெறித்துப் பார்த்தாள்.
மனைவியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே தன் மகள் இளாவை தன் மடியில் அமர்த்தி, அவள் தலையை வருடிக் கொண்டே பின்வருமாறு கூறினான்.
"இளா செல்லம் குட் கேர்ள்! எப்பவும் இப்படிதான் கேள்வி கோட்டுக்கிட்டே இருக்கனும் சரியா? ," அப்பா, அம்மா தவிர வேற யாராவது மடியில உக்கார சொன்னா உக்கார கூடாது, பாப்பாவோட பிரைவேட் பாட்ஸ், அதாவது லிப்ஸ் , ஹுப், தை, பிட்வின் த லெக்ஸ் " யாரையும் தொடவிட கூடாது. அப்படியே யாராவது தொட்டா அப்பா இல்லனா அம்மாகிட்ட வந்து சொல்லனும் சரியா? அப்பறம் யாராவது சாப்பிட எதாவது கொடுத்த வாங்க கூடாது சரியா? உன்கிட்ட வந்து உங்க அம்மா கூட்டுவர சொன்னாங்க அப்பா கூட்டு வர சொன்னாங்கனு அவங்க கூட போக கூடாது ஓகோவா , பாப்பாக்கு அப்பா சொன்னது புரிஞ்சிதா? " .
ஓஓஓஓஓ! நல்லா புரிஞ்சிசுபா, அப்பா! அப்பா! நா ஒன்னு சொல்லடுமா?
மகள் ஏதோ சந்தேகம் கேட்கபோவதாக எண்ணி இராகவோ" கேளுடா பட்டு அப்பாகிட்ட வேற என்ன கேட்கணும் பாப்பாவுக்கு" என்று செல்லம் கொஞ்சினான்.
இன்னைக்கு எதிர்வீட்டு தாத்தா என்ன பேட் டச் பன்னாறுபா ,அப்பறம் என்ன சாயங்காலம் நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்க இடிஞ்ச வீட்டுக்கு வர சொன்னாங்கபா நா அம்மா திட்டுவாங்கனு சொல்லிட்டு ஒடி வந்துடன்பா" . நா பன்னது கரேட்டாபா? என்றாள் அந்த இளங்கன்று.
அதுவரை ஒரு தயக்கத்துடன் அந்த உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த நர்மதா தன் மகளை அள்ளி அனைத்து முத்தமிட்டாள். வாடி என் தங்கம்! உன்ன போய் திட்டிடேனே, உனக்கு எதும் ஆகலயேமா என்றவள் தன் கணவனை நோக்கி ஏங்க அந்த ஆளை சும்மாவிடவே கூடாது என்றாள்.
அவனுக்கும் அந்த கிழவனின் மீது கோபம் பற்றிக் கொண்டு வந்தது. பேத்தியை போன்று பார்க்க வேண்டிய சிறு பிள்ளையை காமக் கண்ணோடு பார்த்தவனைக் கொல்லும் அளவிற்கு கோபம் மூண்டது அவனுள்.
இருப்பினும் தன் மகள் சாதுர்யமாக செயல்பட்டதை எண்ணி சந்தோஷப்பட்டான்.
இப்போ புரிஞ்சிதா நர்மதா, " நம்ம தான் நம்ப பிள்ளைங்களுக்கு எல்லாதையும் சொல்லிக் கொடுக்கனும், நம்பளே இதபத்தி பேச தயங்குனா வேற யாரு பேசுவா யாரு சொல்லிக் கொடுப்பா ? , மூனாவது மனுஷனா சொல்லிக் கொடுப்பான்?".
நல்ல வேலை இன்னைக்கு டிவில அந்த புரோகிராம் பார்த்தோம் இல்லனா நம்ம பாப்பா அப்படியொரு கேள்வி கேட்டுருக்க மாட்டா, நம்மளுக்கும் அந்த ஆள பத்தி தெரியாம போயிருக்கும். இதுக்கொல்லாம் அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தான் நாம நன்றி சொல்லனும் .
விழிப்புணர்வை வீட்டில் இருந்து தொடங்குவோம்.
நன்றி!

இது என்னுடைய முதல் சிறுகதை. தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்ப உலகில், முதல் முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்த சில பெற்றோர்கள் தயங்குவதன் வெளிப்பாடே இந்த சிறுகதை.
 
Status
Not open for further replies.
Top