அத்தியாயம் 1
அதிகாலை 6 மணி. மொபைல் அலாரம் சத்தம் தூக்கத்தை விரட்டி விட..
அதை அனைத்து விட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க,
தூக்கத்தின் மிச்சத்தோடு கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்திருப்பது ஒரு தனி சுகம். போர்வையை மடித்து வைத்துவிட்டு, ஜன்னலைத் திறந்து பார்க்க ஜில்லென்ற காற்று முகத்தில் மோதியது.
கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து பால் பாக்கெட் எடுத்து, தண்ணீர் மோட்டர் போட்டு , டேங்குக்கு தண்ணீர் ஏற்றி விட்டு, சமையலறை சென்று அடுப்பைப் பற்றவைக்கும்போது, பால் பாத்திரத்தின் சத்தம் கேட்கத் தொடங்கியது..
இன்னொரு அறையில் இருந்து வெளியே வந்தார் நீலவேணி..
"கிட்சன்ல சத்தம் வராத வேலை செய்யத் தெரியாத என்று அதட்டி விட்டு அன்றைக்கு வந்த பேப்பர் எடுத்து படிக்க ஆரம்பித்தார் நீலவேணி..
கிட்சனில் ,சூடான பாலில், தேவையான அளவு சர்க்கரை மற்றும் டீ டிகாக்ஷன் சேர்த்து, நுரை பொங்க டீயை ஆற்றுவது கூட ஒரு கலை தான் என்று தனக்குள் தன்னையே பாராட்டிக் கொண்டு வெளியே வந்து
"அத்தை டீ எடுத்துக்கோங்க என்று ஒரு டம்ளர் நீட்டப்பட்டது..
சுகர் கம்மியா தான போட்டு இருக்கு என்றார் நீலவேணி"..
ஆமாங்க அத்தை என்று கூற..
என்ன இது தான் டீயா .. டீ பாத்திரம் கழுவுன தண்ணி மாதிரி இருக்கு என்று குறை கூறிக்கொண்டே குடித்தார்.
இந்த டீக்கு என்ன குறைச்சல் ,
இதுக்கு டீ போட்டு தரதே பெரிய விஷயம் இதுல திமிர் பேச்சுக்கு ஒன்னும் குறை இருக்காது என்று மனதிற்குள் நினைக்க..
என்ன இப்படியே பாத்துட்டு நின்னா எப்படி ?
போ போய் சமையல் வேலையை செய்..
ஒவ்வொரு விஷயமும் நான் சொன்னால்தான் செய்யறது .. இல்லைன்னா மரம் மாதிரி நிக்க வேண்டியது என்று திட்டிவிட்டு ;
இன்னைக்கு தண்டு பொரியல்க்கு கட் பண்ணி வெச்சிட்டு, பருப்பு வேக வெச்சிடு நான் வந்து சமைக்கறேன் என்றார் நீலவேணி...
இல்லைங்க அத்தை நானே சமைக்கறேன் என்று கூறி முடிப்பதற்குள் ..
டீயே இந்த லட்சனம், சோறு எப்படி இருக்கும் . அதெல்லாம் வேண்டாம் என் பிள்ளைக்கு நானே செஞ்சு தரேன் .. நான் செஞ்சா தான் பிடிக்கும்.. நான் சொன்னத மட்டும் செஞ்சிட்டு போய் என் பிள்ளைய எழுப்பு ....
அசமஞ்சனமாட்ட நிக்காத என்று திட்டிவிட்டு அவர் அறைக்கு சென்று விட்டார்...
எல்லாம் என் தலை விதி ..
இங்க வந்து வாக்கப்பட்டு நல்லா மாட்டிக்கிட்டேன்.. இவங்க புருஷர் அதனால தான் சீக்கிரம் போய் சேர்ந்துட்டார் போல... இது கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியதா இருக்கு ...
இவங்களயெல்லாம் சீக்கிரம் கைலாசத்துக்கு அனுப்பி விட்டாத்தான் நாம நிம்மதியா இருக்க முடியும் என்று முணங்கிக் கொண்டே
நீலவேணி சொன்ன வேலைகளை பாதி முடித்து விட்டு தன் அறைக்குச் சென்று தன் சரி பாதியான , தன் மாமியாரின் செல்லப் பிள்ளையை எழுப்பிக் கொண்டு இருக்க...
அதற்க்குள் நீலவேணி கையில் பெட் காஃபியுடன் வந்தார்...
இன்னுமா எழுப்பல என்று கோபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, நீ போ நானே எழுப்பறேன் என்று கட்டிலுக்கு அருகில் சென்று செல்லக்குட்டி பேங்க் போக டைம் ஆச்சு டா எழுந்தரி டா என்று எழுப்ப அவளோ முகத்தை மூடி இருந்த போர்வையை விலக்கி விட்டு எழுந்து பார்க்க அருகில் சிரித்த முகத்துடன் தன் அம்மாவும், எப்பொழுதும் போல பாவமாக முகத்தை வைத்து இருந்தான் அவளின் கணவன்..
அவள் வைஷ்ணவி பேங்க் மேனேஜர், பாவமாக இருந்தது அவளின் காதல் கணவன் ஹர்ஸவர்தன்... அதே வங்கியில் கிளர்காக பணிபுரிகிறான் ..
"குட் மார்னிங் மம்மி " நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க?
"உனக்கு நான் செய்யாம வேற யாரு டா கண்ணு செய்வாங்க" என்றார் நீலவேணி..
அதுவும் இல்லாம டீ யவே பாத்திரம் கழுவுன தண்ணி மாதிரி இருந்துச்சு..
அப்படி இருந்தா உனக்கு பிடிக்காது; அதனால அம்மாவே காஃபி போட்டு வந்தேன் என்றார்..
உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்னால முடியல மா..
நீ எப்ப பார்த்தாலும் அவர குறை சொல்லிட்டே இருக்க என்றாள்..
நல்லா இருந்தா நான் ஏன் மா இப்படி சொல்லப் போறேன் என்று சோகமாக வாய்ஸ் மாடுலேஷன் மாற்றி பேச ..
ஓகே மா. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து குடிக்கிறேன் என்று வாஷ் ரூம் செல்ல..
"இன்னும் இங்க நின்னா எப்படி போங்க போயி வேலைய பாருங்க" என்று மருமகனுக்கு திட்டிக்கொண்டே மகளுக்கு இன்றைய நாளுக்கு அணிய வேண்டிய உடையை தேர்வு செய்யத் தொடங்கினர்...
ஹர்சா " என்ன டா இது வாழ்க்கை; நீ எப்படி இருக்க வேண்டியவன் இங்க வந்து இப்படி மாட்டிகிட்டயே டா என்று புலம்பிக் கொண்டே அடுத்தடுத்த வேலைகளை செய்து விட்டு நீலவேணியை அழைத்தான்..
அத்தை எல்லாமே ரெடி பண்ணிட்டேன் நீங்க சமைச்சிடுங்க என்று சொல்ல .
" நான் தான் செய்யனும் அப்புறம் வேற யாரு செய்வாங்க , என்று அவனிடமே சரிக்கு சரி பேசிக்கொண்டு சமைக்கத் தொடங்கினார்"..
இத்தனைக்கும் தாளித்துக் கொட்டி உப்பு , மசாலா சேர்த்து கொதிக்க விடுவது மட்டும் தான் அவர் வேலை என்னவோ அவரே முழு வேலையும் செய்தது போலத்தான் அவர் பேச்சு இருக்கும்..
ஒரு நாள் என்றால் பரவாயில்லை அவனுக்கு இதெல்லாம் தினமும் பழகிப் போன ஒன்று தான் அதனால் விட்டு விட்டான்...
அதையும் மீறி ஏதாவது சொன்னால் அவனுக்கும் , வைஷ்ணவிக்கும் அன்றைய பொழுது சண்டையில் தான் முடியும்..
எனவே நீல வேணியின் பேச்சை பொறுத்துக் கொண்டான்...
அவன் அறைக்கு வர வைஷ்ணவி பேங்க் செல்ல தயாராக இருந்தாள்..
பேபி எனக்கு பைக் சர்வீஸ் போயிருக்கு, இன்னைக்கு ஒரு நாள் ரெண்டு பேரும் சேர்ந்து போலாமா என்று கேட்க?
சீக்கிரம் ரெடியாகி வாங்க ..
இல்லைன்னா எனக்கு லேட் ஆகும்..
இன்னைக்கு ஒரு பெரிய அமௌண்ட் இன்வெஸ்ட் பண்ண க்ளையண்ட் வராங்க என்றாள்...
சரிமா நீ போ நான் சீக்கிரம் வரேன் என்றான்...
அவள் சாப்பிட்டு முடிக்க ; இருவரின் டிபன் பாக்ஸ்க்கு பேக் செய்து விட்டு காத்திருந்தாள்..
ஏன் மா இன்னும் கிளம்பல? இன்னைக்கு யாரோ வருவாங்கன்னு சொன்னியே என்று அவளிடம் கேட்க?
வண்டி சர்வீஸ் போயிருக்கு அது தான் ரெண்டு பேரும் சேர்ந்து போறோம் ம்மா என்றாள்..
அவளோ காத்திருந்து காத்திருந்து வாட்ச்சை பார்க்க அறைக் கதவை பார்க்க அரை மணி நேரம் ஆனது..
இன்று 9 மணிக்கு செல்ல வேண்டும்.. ஆனால் இப்பவே 8.45 ஆனது..
மகள் கணவனுக்காக காத்திருப்பதை பொறுக்க முடியாமல்..
"நீ கிளம்பு கண்ணு மாப்பிள்ளை அவர் ஃப்ரெண்ட் கூட வரட்டும் நீ போ என்று அவளை அனுப்பி வைத்தார்"..
வரட்டும் இன்னைக்கு வெச்சி செய்யனும் என்று மனதுக்குள் ப்ளான் போட்டுக் கொண்டு இருந்தார் நீலவேணி...
ஹர்சா இன்னைக்கு நூடுல்ஸ் ஆகி தான் பேங்க் போகவேண்டும் என்று அவன் விதி போல...