தடக் தடக் என இரவு நேர இரயில் சென்று கொண்டிருக்க அந்த இடத்தில் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நீலா மட்டும் தூங்கவில்லை. தூங்க பயம். முதல் முறையாக தனியாக பயணம் செய்கிறாள். இரயிலுக்கு ஏற்றது போல் அவளது இதயமும் தடக் தடக்கென அடித்துக் கொண்டிருந்தது.
'பிள்ளையாரப்பா.. பத்திரமா ஊர் போய் சேர்ந்துட்டா உனக்கு நாலு இல்ல மூணு தேங்காய் உடைக்கிறேன்.' என்று பிள்ளையாரோடு பேரம் பேச பிள்ளையார் கோபித்துக் கொண்டார்.
"நாலுனு சொல்லிட்டு மூணுனு மாத்துற? அப்படினா நானும் பாதி வழில கிளம்புறேன்" என்று விட்டார்.
இரயில் ஒரு சந்திப்பில் நின்றது. இரவு நேரமென்பதால் சிறு வியாபாரிகள் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. காபியையும் தேநீரையும் கூவி கூவி விற்றுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் போட்ட சத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை வேறு அழ ஆரம்பித்து விட்டது. சுற்றி இருந்த எல்லோரும் எரிச்சல் பட திடீரென உள்ளே நுழைந்தார் டிடிஆர்.
"இங்க நீலானு யாராவது இருக்கீங்களா?"
தூக்கிவாரிப் போட திரும்பியவள் "நான்.." என்று கையை தூக்கினாள்.
எல்லோரின் பார்வையும் அவளிடம் சென்றது.
"இறங்கி வாமா" என்று டிடிஆர் அழைக்க புரியாமல் முழித்தாள்.
"எதுக்கு?"
"உன் கூட்டிட்டு போக ஆள் வந்துருக்கு. சீக்கிரம் இறங்கு" என்று அவசர படுத்தினார்.
'நம்மல கூப்பிட யாரு வர முடியும்? சித்தி எதுவும் வந்துட்டாங்களா? வேலைக்கு போக வேணாம்னு சொல்ல போறாங்களா? அப்ப தப்பிச்சோம்' என்று சந்தோசமாக எழுந்தாள்.
இரண்டு பையையும் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டு டிடிஆரோடு இறங்கி விட்டாள்.
நள்ளிரவு நேரம் தனியாய் அந்த இடத்தில் நிற்பதை நினைத்தே அவளுக்கு திக் திக் என்று இருந்தது.
டிடிஆர் அவளை கொண்டு சென்று ஒருவனிடம் விட்டார்.
"இவங்கள தெரியுமா?" என்று நீலாவிடம் கேட்க வேகமாக இல்லை என்று தலையாட்டினாள்.
"நீங்க நீலாம்பரி தான? நீங்க வேலையில சேர தான போறீங்க?" என்று கேட்டான் போஸ் பாண்டி.
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நீலாம்பரி சோம்பலாக உடலை முறித்துக் கொண்டு எழுந்தாள். போர்வை போர்த்தி இருக்க எழுந்து கொள்ள மனம் வரவில்லை.
ஆனால் யாரோ பேசும் சத்தம் காதில் விழ மெல்ல கண்ணை திறந்து சுற்றியும் பார்த்தாள். அடுத்த நொடி அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.
'நான் எங்க இருக்கேன்? இது என்ன இடம்? கார்ல தான வந்தேன்?' என்று பதட்டமாக யோசித்தவள் உடனே கட்டிலை விட்டு இறங்கினாள்.
அறை சிறியதாக சுத்தமாக இருந்தது.
"இது யாரு வீடுனு கூட தெரியலயே.."
பதட்டத்தோடு சென்று கதவை திறக்க அது பூட்டி இருந்தது.
"யாராவது இருக்கீங்களா? கதவ திறங்க. ஹலோ.. யாராவது இருக்கீங்களா?" என்று கதவை தட்டிக் கொண்டே இருந்தாள்.
எந்த பதிலும் வரவில்லை.
"அய்யோ யாரோ தூக்கிட்டு வந்து அடைச்சு வச்சுட்டாங்களா? போச்சு.. சித்திக்கு தெரிஞ்சா கொன்னுடுமே.. அய்யோ பிள்ளையாரப்பா.. இப்படி மாட்டி விட்டுட்டியே.."
அப்போதே அழ ஆரம்பித்து விட்டாள். கதவை மீண்டும் மீண்டும் தட்டியும் ஒரு பயனும் இல்லை.
அங்கேயே உட்கார்ந்து காலை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். எவ்வளவு நேரம் அழுதாளோ திடீரென சத்தம் கேட்டது.
யாரோ கதவை திறக்கின்றனர். பரபரப்புடன் எழுந்து நின்றாள். சாவியை வைத்து கதவை திறந்து உள்ளே வந்தான் சஞ்சய் ராமசாமி. அவன் யாரென்றே தெரியாமல் முழித்தாள் நீலாம்பரி.
"சார்.. என்னை ஏன் இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க?"
அவளுக்கு பதில் சொல்லாமல் கதவை அடைத்து பூட்டினான்.
"சார்.. நான் போகனும். கதவ திறந்து விடுங்க."
அவளை நோக்கி வந்தான்.
"சார்.. யாரு? யாரு நீங்க? ப்ளீஸ் என்னை விட்டுருங்க.. நான் போகனும்.."
கையெடுத்து கும்பிட்டவளை கருத்தில் கொள்ளாமல் அவளை பிடித்து இழுத்தவன் சுவற்றில் திருப்பி சாய்த்தான்.
"அம்மா!" என்று அலறியவள் மூக்கு சுவற்றில் மோதி உடைந்தது.
அவள் கையை வளைத்து அசைய விடாமல் பிடித்துக் கொண்டு சுடிதார் ஜிப்பை கழட்டி விட "ஏய் விடுடா பொறுக்கி நாயே விடுடா" என்று பயத்தில் கத்த ஆரம்பித்தாள்.
மூக்கில் ரத்தம் வடிந்து உதட்டை சிவப்பாக்கியது. வலியிலும் கத்தினாள். விடுபட போராடினாள். ஆனால் அவன் விடவில்லை.
முன் பக்கமாக திருப்பி உடையில் கைவைக்க நீலாம்பரி அவனை அடித்திருந்தாள். அவளது மெல்லிய கைக்கு அவனது முரட்டு கன்னங்களை அடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அடித்த அவளுக்கு தான் கை வலித்தது. அவனுக்கு அது பெரிதாக வலிக்கவில்லை. ஆனால் கோபத்தோடு முறைத்தான்.
"யார் மேல கைய வைக்கிற? கொன்னுடுவேன்" என்றவள் சுடிதாரை சரிசெய்து கொண்டு வழிந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடப்பார்த்தாள்.
ஒரே கையில் அவளை பிடித்தவன் மீண்டும் சுவற்றில் சாய்த்து நிற்க வைத்தான்.
"விடு.. விடுடா" என்று அவள் அலறி அவனை அடிக்க இரண்டு கையையும் பிடித்துக் கொண்டான்.
அசைய முடியாமல் பயந்து போய் நின்று விட்டாள்.
அவளது விரிந்த கண்களை நக்கலாக பார்த்தவன் சுடிதாரின் முன் பாகத்தில் கைவைத்து நீக்கினான்.
"வேணாம்!!!" என்று அலறி விட்டாள்.
சஞ்சய் ராமசாமி அதை கவனிக்காமல் ஆராய்ந்து விட்டு "ஓகே" என்றான்.
கையை விட்டதும் உடனே சுடிதாரை பிடித்துக் கொண்டு அவனை அடிக்க கை ஓங்க கையை பிடித்து விட்டான்.
"உனக்கு கை நீலமா இருக்கே நீலாம்பரி.. என்ன பண்ணலாம்?"
"பொறுக்கி நாயே.. விடுடா. நீ எல்லாம் ஒரு மனுசனா?"
"பொறுக்கி நாயேவா? இதுவும் நல்லா தான் இருக்கு. நான் பொறுக்கினா நீ பொறுக்கிக்கு பொண்டாட்டி தெரியுமா?"
நீலாம்பரி தரையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் வாழ்க்கையே பறி போய் விட்டதாக தோன்றியது.
"பாவி பாவி நாசமா போவான்.. அவன நம்பி கார்ல வந்ததுக்கு கடத்திட்டு வந்து எவன் கிட்டயோ விட்டுட்டான். போச்சு.. எல்லாம் போச்சு.. நான் ஆசை பட்ட வாழ்க்கைய வாழவே முடியாது. வேற வேலைக்கு போக மாட்டேன்னு இதுக்கு தான் சொன்னேன். கேட்டளா அந்த சித்தி.. இப்ப நான் இங்க வந்து மாட்டிக்கிட்டேனே.. எப்படி தப்பிக்கிறது? தப்பிக்க வழியே இல்லனா?"
அழுது புலம்பிக் கொண்டே இருக்க கதவு மீண்டும் திறக்கப்பட்டது. பதறிப்போய் நிமிர்ந்து பார்த்தாள். சஞ்சய் தான் வந்திருந்தான். அவனையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருக்க சஞ்சய் மெத்தையில் உட்கார்ந்து கொண்டு அவளை பார்த்தான்.
நீலாம்பரி கதவையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
"தப்பிச்சு எல்லாம் போக முடியாது. எந்திரி"
"நீங்க எதுக்கு இப்படி என்னை கடத்திட்டு வந்துருக்கீங்க? இங்க பாருங்க.. என் கிட்ட பணமெல்லாம் இல்ல. போட்டுருக்க எதுவுமே தங்கம் இல்ல. எல்லாம் கவரிங். என்னை கடத்தி உங்களுக்கு ஒரு யூஸும் இல்ல.."
"உன்னை எந்திரிக்க சொன்னேன்"
"ப்ளீஸ்ங்க.. என்னை விட்டுருங்க.. என்னை காணோம்னு தேடுவாங்க.."
"யாரு உன் அக்கா மகளா?"
நீலாம்பரி அதிர்ச்சியோடு பார்த்தாள்.
"உன் அக்கா மக இந்து தான?"
"அவள என்ன பண்ண? அவ சின்ன புள்ள.."
சஞ்சய் கிண்டலாக பார்க்க உடனே எழுந்து அவனிடம் வந்தாள்.
"அவள எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ். அவளுக்கு உலகமே தெரியாது.. அவ.. அவ.."
நீலாம்பரி திணறினாள். பயத்திலும் பதட்டத்திலும் பேச்சு வரவில்லை.
"அவளுக்கு ஆப்ரேஷன் பண்ண பணம் வேணும் போல?"
"அது.. அது எப்படி உங்களுக்கு.."
"அதுக்காக தான வேலைக்கு கிளம்புன?"
நீலாம்பரி மேலும் கீழும் தலையை ஆட்ட "அந்த பணத்த நான் தர்ரேன்" என்றான்.
நீலாம்பரி புரியாமல் பார்த்து விட்டு "அது கொஞ்சமில்ல இருபது லட்சம் வேணும்." என்றாள்.
"அத தான் தர்ரேன்னு சொன்னேன்"
"ஏன்? நீங்க ஏன் எனக்கு பணம் கொடுக்கனும்? அதுக்கு பதிலா என்ன.. என்ன செய்வீங்க..?"
அவசரமாக கையால் தன்னை மறைத்துக் கொண்டு பயத்தோடு கேட்டாள். சற்று முன்பு தான் வந்து எல்லை மீறி விட்டு போனான் அல்லவா?
"ரொம்ப சீன் போடாத. நீ அவ்வளவு வொர்த் இல்ல." என்று சலிப்பாக சொல்லி விட்டு "கொஞ்ச நாள் என் பொண்டாட்டியா நடிக்கனும்" என்றான்.
"ஹான்? பொண்டாட்டியா?"
"பின்ன வ***ட்டியாவா நடிக்க சொன்னேன்?"
"என்ன இப்படி பேசுறீங்க.. ச்சீ"
"பொண்டாட்டியா நடிச்சுட்டு பணத்த வாங்கிட்டு போய் உன் அக்கா மகள காப்பாத்திக்க. என்ன சொல்லுற?"
அவனை கூர்ந்து பார்த்தாள். எதுவும் புரியவில்லை. கடத்தி வந்து மனைவியாக நடிக்க சொல்கிறான். எதற்கு?
"எதுக்கு? நான் ஏன் நடிக்கனும்? உலகத்துல வேற பொண்ணே இல்லயா?"
"இப்படி குறுக்க கேள்வி கேட்டா எனக்கு சுத்தமா பிடிக்காது. உனக்கு பணம் வேணுமா? வேணாமா?"
"வேணும். ஆனா நான் ஏன்? நீங்க யாருனு கூட எனக்கு தெரியாது. என்னை கடத்திட்டு வந்து இப்படி..."
"முடியல.. இங்க வா"
அவசரமாக இரண்டடி பின்னால் சென்றாள்.
சஞ்சய் அவளை முறைத்தான்.
"முன்னாடி வானு கூப்பிட்டேன்"
"எதுக்கு?"
அவள் பயந்து கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாக முறைத்தவன் "உன்னை கடிச்சு தின்ன மாட்டேன். கேள்விக்கு பதில் வேணுமா? வேணாமா?" என்று கோபமாக கேட்டான்.
"வேணும்.."
"அப்ப வந்து இத பாரு"
அவனது செல்ஃபோனில் இருந்த படத்தை காட்டினான். அதில் நீலாம்பரி இருந்தாள். ஆனால் இப்போது இருப்பதை விட சற்று குண்டாக தாலியோடும் மாலையோடும் இருந்தாள்.
"இது தான் என் பொண்டாட்டி.. புரியுதா இப்ப?"
"இதெல்லாம் நம்ப மாட்டேன். எதாச்சும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வச்சு என்னையவே இப்படி வர வச்சுருப்பீங்க.. நான் நம்ப மாட்டேன்"
"உன்னை நம்ப வைக்கிறது என் வேலை இல்ல. உனக்கு பணம் வேணும்னா நீ நடிக்கனும். வேணாம்னா.."
"விட்டுருவீங்களா?"
இடவலமாக தலையாட்டியவன் "உன் அக்கா மக உயிர எடுத்துருவேன். பரவாயில்லயா?" என்று கேட்டான்.
"என்ன.. அவ சின்ன புள்ள.." என்று அவள் அலற "என் கிட்ட இருந்து நீ போனாலும் உன் அக்கா மகள உன்னால சரி பண்ண முடியாது. அதுக்கு அவ செத்து போகட்டுமே?" என்றான்.
"நீயெல்லாம் மனுசனா?"
"அந்த ஆராய்ச்சி இப்ப அவசியமா? எனக்கு பதில் சொல்லு. நடிக்கிறியா? இல்லையா?"
தலையை தொங்க போட்டுக் கொண்டு யோசித்தாள். அவளால் இப்போது வேறு எதுவும் செய்ய முடியாது. கிட்னியை விற்க தான் நினைத்திருந்தாள். ஆனால் அதுவும் பத்தாது. வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். ஆனால் அதுவரை இந்து ?
எச்சிலை விழுங்கிக் கொண்டு "மொத்தமா கொடுப்பீங்களா?" என்று கேட்டாள்.
"எஸ்"
"எவ்வளவு நாள் நடிக்கனும்?"
"ஒரு மாசம்"
'ஒரே மாசத்துலயா?' என்று அதிர்ச்சியானாள்.
"ஒரு.. ஒரு மாசம் மட்டும் தான? நடிக்க மட்டும் தான செய்யனும்? வேற எதுவும் இல்லையே?" என்று சந்தேகமாக கேட்டாள்.
அவளது கேள்வியில் கடுப்பாகி விட்டான் சஞ்சய்.
"பொண்டாட்டியா நடிக்கிறதுனா எல்லாம் தான்." என்று வேண்டுமென்றே பதில் சொன்னான்.
"அய்யய்யோ.. அதெல்லாம் முடியாது.."
"அப்ப போ. உன் அக்கா மக இந்துவுக்கு காரியம் பண்ணிடு"
அசால்ட்டாக சொன்னவனை அழுவது போல் பார்த்து வைத்தாள். அவன் கல்லைப்போல அமர்ந்திருந்தான்.
தரையில் அமர்ந்து காலைக்கட்டிக் கொண்டவளை பார்த்து விட்டு "அப்புறமா வருவேன். பதில் சொல்லுற" என்று விட்டு கிளம்பி விட்டான்.
நீலாம்பரிக்கு அழுகை அழுகையாக வந்தது. வசமாக மாட்டிக் கொண்டாள். ஒன்று இந்துவை காப்பாற்ற வேண்டும். இல்லை என்றால் அவளை சாகவிட வேண்டும்.
நீலாம்பரியுடைய வாழ்வில் சந்தோசமே வராதா?
அவளுடைய அம்மா கோதாவரி சிறுவயதில் இறந்து விட்டார். அப்பா படையப்பா காஞ்சனாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். காஞ்சானாவுக்கு முதலிலேயே ஒரு மகள் அருந்ததி இருந்தாள். அவளுடைய கணவனை பிரிந்து தான் நீலாம்பரியின் அப்பாவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு பிள்ளை எதுவும் பிறக்கவில்லை. இரண்டு மகள்களையும் தான் வளர்த்தனர். அருந்ததி சுயநலவாதி. பள்ளி படிப்பை முடித்த போதே வீட்டுக்கு சொல்லாமல் திருமணம் செய்து கொண்டு வந்து விட்டாள். அதுவும் சொந்த அத்தை மகனை தான். அவர்களுக்கு பிறந்தவள் தான் இந்து.
அவளது திருமணம் நிலைக்கவில்லை. அருந்ததியின் மாமியார் கொடுமை படுத்தி கணவன் மனைவி இருவரையும் பிரித்து பிள்ளையோடு அருந்ததியை துரத்தி விட்டார்.
படையப்பா அந்த அதிர்ச்சியில் செத்துப்போனார். காஞ்சனா நீலாம்பரி அருந்ததி மட்டும் இருக்க அவர்களோடு வாய் பேசாத இந்துவும். பிறக்கும் போதே குறைபாடோடு தான் பிறந்தாள். அவளை பார்த்துக் கொள்வதற்கு நிறைய செலவானது.
பள்ளியை முடித்து விட்டு நீலாம்பரி வேலைக்கு சென்றாள். அருந்ததியும் தான். காஞ்சனா மட்டும் வீட்டிலிருந்து கொண்டு இந்துவை பார்த்தார்.
அருந்ததிக்கு இந்த பிச்சைக்கார வாழ்வு பிடிக்கவில்லை. வேலை செய்யும் இடத்தில் ஒருவனை பிடித்துப்போக அவனோடு வாழப்போவதாக சொல்லி விட்டாள். அவனும் பிள்ளையில்லாமல் வந்தால் வாழலாம் என்றான். உடனே மகளை காஞ்சனா நீலாம்பரி தலையில் கட்டி விட்டு கிளம்பி விட்டாள்.
நீலாம்பரியின் சம்பளம் தான் அவர்களது வாழ்வாதாரம். அப்படியே வாழ்க்கை போய் முடியாமல் சென்னையில் உனக்கு பெரிய வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி ஆசை காட்டினான் பக்கத்து தெருக்காரன்.
ஒரு ஜவுளிக்கடையில் சேல்ஸ் கேர்ள் வேலை கிடைத்ததாக தான் சொன்னார்கள். ஆனால் அவளுக்கு இந்துவை விட்டு விட்டு போக முடியவில்லை.
அவளுக்கு பேச்சை வர வைக்க ஒரு அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால் அதற்கு செலவாகும் என்று வேறு ஒரு டாக்டர் சொல்லி விட்டார். அவ்வளவு பணத்தை உடனே ஏற்பாடு செய்ய முடியாது தான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கடன் வாங்கி நகைகளை விற்று தொண்டு நிறுவன உதவியுடன் செய்யலாம் என்று தான் முடிவு செய்தனர்.
அதற்கு நீலாம்பரி தான் உழைக்க வேண்டும். அருந்ததி போனதும் தான் காஞ்சனாவும் வேலைக்கு சென்றார். ஆனால் அவரது வேலையில் வரும் பணமெல்லாம் எந்த மூலைக்கும் போதாது.
ஒரு மாசம் நடித்து விட்டு பணத்தை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியது தான்.
"சேல்ஸ் கேர்ள் வேலைக்கு கார் வச்சு கூட்டிட்டு போவாங்களானு யோசிச்சுருக்கனும். மடச்சி மடச்சி.. கூப்பிட்டாங்கனு கார்ல ஏறி உட்கார்ந்து கிளம்பிட்டேன். எல்லாம் தேவை தான். ஆனா இந்த வழியில இந்து ஆப்ரேஷனுக்கு பணம் வருதுனா? வாங்கிட்டு போகலாமா? ஆனா எப்படி நடிக்கிறது? அவன் பொண்டாட்டினு மேல கை வச்சா? அப்பாத கூட வந்து டிரஸ்ஸ கழட்டி பார்த்துட்டு போனான். பொண்டாட்டியா போயிட்டா சும்மாவா இருப்பான்?"
முடிவெடுக்க முடியாமல் திணறி போனாள். ஆனால் இதை விட்டால் வேறு வழியும் இல்லை.
"ஒரு தாலி மட்டும் கட்ட சொல்லுவோம். அப்புறம் பணத்த வாங்கிட்டு போயிட்டு இந்துவ சரி பண்ணிட்டு அவளோட காலம் முழுக்க வாழ்ந்துடுவோம். வேற வழி இல்ல"
ஒரு வழியாக முடிவுக்கு வந்தவள் தானே எழுந்து சென்று கதவை தட்டினாள். தட்டும் போதே கதவை திறந்தான் சஞ்சய்.
உண்மையை சொல்ல முடியாமல் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.
சஞ்சய் உடனே சிரித்தான்.
"ரொம்ப பயப்படாத.. நீ என் பேச்ச கேட்குற வரை உன் உயிருக்கு எதுவும் ஆகாது" என்று சிரிப்போடு சொல்ல நீலாம்பரி சம்மதமாக தலையாட்டினாள்.
"குட். இப்ப உன்னை முழுசா ஹாசினியா மாத்தனும். ஹாசினி எப்படி நடந்துப்பானு நான் சொல்லித்தருவேன். அத அப்படியே ஃப்லோவ் பண்ணுற. ஓகே?"
மேலும் கீழும் வேகமாக தலையாட்டினாள்.
"ஹாசினி உன்னை விட குண்டா இருப்பா. இட்ஸ் ஓகே. மெலிஞ்சுட்டனு சொல்லலாம். ஆனா.." என்று இழுத்தவன் அவள் கழுத்துக் கீழ் பார்த்தான்.
நீலாம்பரி உடனே தன் கைகளால் தன்னை மறைத்துக் கொண்டாள். மீண்டும் சுடிதாரில் கை வைத்து விட்டால்?
"அவளுக்கு இங்க ஒரு மச்சம் இருக்கும். அது உனக்கு இல்ல"
"எ.. என்ன சொன்னீங்க? இங்க.. மச்சமா?"
"எஸ். அது உன் கிட்ட இல்ல. இட்ஸ் ஓகே டாட்டூ போட்டுக்கலாம்"
'அடேய்.. டாட்டூவா? அய்யய்யோ!!' என்று அவள் உள்ளே அலறிக் கொண்டு வெளியே ஒன்றும் சொல்லாமல் நின்றாள்.
"மச்சம் மாதிரி போட்டுரலாம். அப்புறம்.. உன் முடி.. ரொம்ப நீளமா இருக்கு. ஹாசினிக்கு நீளமான முடி பிடிக்காது. வெட்டி விட்டுரலாம். அவ இப்படி சுடிதார் போட மாட்டா. எல்லாம் மார்டன் டிரஸ் தான். ஒரு மாசத்துக்கு மட்டும் தான? பார்த்துக்கலாம்."
சஞ்சய் அடுக்கிக் கொண்டே போக அவளுக்கு நெஞ்சமே வெடிப்பது போல் இருந்தது.
"கடைசியா அவ கையெழுத்த நீ போட்டு பழகனும். அதான் இப்ப முக்கியம்"
"இன்னும் என்னலாம் இருக்கு?" என்று மனதில் நினைப்பதாக நினைத்து வாய் விட்டு கேட்டு விட "இருபது லட்சம் வேணும் தான?" என்று இழுத்தான் அவன்.
"வேணும்" என்று பாவமாக சொன்னாள்.
"அப்ப ஒரு மாசத்துக்கு ஒழுங்கா நடி" என்று விட்டான்.
"சொல்லுங்க" என்று தலையை குனிந்து கொண்டு கேட்டாள்.
"உள்ளயே இரு. கொஞ்ச நேரத்துல வருவேன்" என்றவன் அவளை விட்டு விட்டு கதவை பூட்டி விட்டு சென்று விட்டான்.
"என்னடா கொடுமை இது? சொந்த பொண்டாட்டிய கொன்னவனுக்கு நான் பொண்டாட்டி நடிக்கவா? எதாச்சும் தப்பா பண்ணா நம்மலயும் கொன்னுடுவானா? பேசாம ஊர்லயே இருந்துருக்கலாம். எல்லாம் நேரம்" என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.
வெளியே போனவன் திரும்பி வரும் போது தரையில் படுத்துக் கிடந்தாள் நீலாம்பரி. பசியில் சுருண்டு கிடந்தாள். காலையில் எழுந்திலிருந்து எல்லாம் விபரீதமாக நடக்கிறது. ஆனால் வயிறு மட்டும் சரியான நேரத்திற்கு கத்தி விடுகிறது.
கதவை திறந்து சஞ்சய் உள்ளே வர நீலாம்பரி அவனை பார்த்துக் விட்டு உடனே எழுந்து அமர்ந்தாள்.
"ஏன் இப்படி படுத்துருக்க?"
"ஒன்னுமில்ல.."
"கேட்டா பதில் தான் வரனும். இப்படி ஒன்னுமில்லனு சமாளிப்பு வரக்கூடாது"
ஒரு நொடி அவளை கூர்ந்து பார்த்து விட்டு "எந்திரி" என்றான்.
உடனே எழுந்தவளை அந்த அறையை விட்டு வெளியே அழைத்து வந்தான்.
அது ஒரு வீடு தான். ஆனால் வீட்டின் பின் பக்கம் போல் இருந்தது.
"அதான். போ" என்றதும் திரும்பிக் கூட பார்க்காமல் உள்ளே ஓடி விட்டாள்.
முகமெல்லாம் கழுவி விட்டு வெளியே வந்தவள் அந்த வீட்டை சுற்றி சுற்றி பார்த்தாள்.
"அங்க என்ன பார்வை?" என்று சஞ்சய் அதட்ட திடுக்கிட்டு திரும்பியவள் அவனிடம் வந்தாள்.
"உட்காரு" என்று ஒரு நாற்காலியை காட்ட உடனே அமர்ந்து விட்டாள்.
"இத சாப்பிடு"
"வேணாம்" என்று பதட்டமாக கையை உதறினாள்.
"ஏன்?"
"நான் மாட்டேன்"
"ஏன்னு கேட்டேன்"
"தண்ணில எதையோ கலந்த மாதிரி இதுல எதாவது வச்சுருப்பீங்க. எனக்கு வேணாம்" என்று பயந்து போய் கூற "பரவாயில்ல.. நீ ரொம்ப பேக்குனு நினைச்சேன். உசாரா தான் இருக்க" என்று நக்கலாக கூறினான்.
'கடத்திட்டு வந்துட்டு பாராட்டு வேற' என்று எரிச்சலாக நினைத்துக் கொண்டாள்.
"உன்னை கொலை பண்ணுற ஐடியா இப்போதைக்கு இல்ல. அதுனால விசம் கலக்கல.. ம்ம்" என்று கூறி சஞ்சய் நீட்ட தட்டையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
"அப்படினா நீங்க இதுல கொஞ்சம் சாப்பிடுங்க. நம்புறேன்"
"திமிரா?"
"அதெல்லாம் இல்ல. பயம் மட்டும் தான்"
நல்லபிள்ளை போல் சொல்ல முறைத்து பார்த்தவன் உடனே அவள் முன்னால் சாப்பிட்டு தண்ணீரை குடித்தான்.
"ஒன்னுமே ஆகல. போதுமா?"
சம்மதமாக தலையாட்டி விட்டு உடனே சாப்பிட ஆரம்பித்தாள். இருந்த பசிக்கு வேகமாக சாப்பிட்டு முடித்து விட்டாள்.
"இப்ப டாட்டூ போடனும். உட்கார்"
"எ.. என்ன சொன்னீங்க? நீங்களா போடப்போறீங்க?"
"வேற யாரு போடுவா?"
அவனை மேலும் கீழும் பார்த்தவளுக்கு பயமாக இருந்தது. தப்பாக போட்டு செத்து விட்டால்?
"எனக்கு டாட்டூனா பயம்" என்று சொல்லிப் பார்த்தாள்.
"கண்ண மூடிக்க.." என்றவன் அவள் கையை பிடித்து உட்கார வைத்தான்.
"இல்ல இல்ல.. வேணாம் வேணாம்.. எனக்கு பயமா இருக்கு" என்று பதறி எழ பார்க்க அவளை பிடித்து நாற்காலியில் அமுக்கினான்.
"கண்ண மூடிக்கனு சொல்லுறேன்ல?"
"கண்ண மூடுனா? வலிக்காம போயிடுமா? வேணாம் வேணாம்"
இப்படி பேசினால் கேட்க மாட்டாள் என்று புரிந்து கொண்டவன் அவளை மொத்தமாக தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.
"அய்யய்யோ.. என்னை விடுங்க" என்று அலறினாள்.
அவன் கண்டு கொள்ளாமல் தூக்கிச் சென்று மெத்தையில் போட்டான். அவன் போட்டதும் அவள் எழப்பார்க்க எழ விடாமல் தடுத்தவன் அவளது துப்பட்டாவை வைத்து இரண்டு கையையும் கட்டினான்.
அவள் முகத்துக்கு நேராக அவன் முகம் இருக்க எச்சிலை விழுங்கி கொண்டாள்.
'பிள்ளையாரப்பா.. என்னை இப்படி கோர்த்து விட்டுருக்கியே.. நான் என்னயா பாவம் பண்ணேன்?' என்று பயந்து போய் கடவுளை துணைக்கு கூப்பிட்டாள்.
கையை கட்டி முடித்தவன் காலை ஒன்றாக சேர்த்து தன் காலால் அடக்கி விட்டு அவளை பார்த்தான்.
எச்சிலை விழுங்கியபடி இமைகள் படபடக்க அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அசைய பார்த்த.. டாட்டூவ கழுத்துல போட்டுருவேன். அப்புறம் செத்து போனாலும் என் பொறுப்பில்ல" என்றவன் அவளது சுடிதாரை மீண்டும் நீக்க "ப்ளீஸ் ப்ளீஸ் வேண்டாம்.. பயமா இருக்கு" என்று தடுத்து பார்த்தாள்.
"உஷ்ஷ்.. பேசக்கூடாது" என்று அதட்டியவன் மச்சம் இருக்க வேண்டிய இடத்தை பார்த்தான்.
கூச்சத்தில் முகத்தை திருப்பி கண்ணை மூடிக் கொண்டாள்.
அவனிடம் இருந்த பொருட்களை வைத்து டாட்டூ போட்டு முடித்து விட்டான். அதற்குள் வலி தாங்காமல் கண்ணீர் வந்து விட்டது நீலாம்பரிக்கு.
"முடிஞ்சது" என்றபடி கையுறையை கழட்டி விட்டு பார்த்தான்.
நீலாம்பரி குனிந்து பார்த்தாள். கருப்பாய் பெரிதாக ஒரு மச்சம் போலவே இருந்தது. ஆனால் மற்ற இடமெல்லாம் சிவந்து போயிருந்தது. வலி ஒரு பக்கம் இருக்க அவளுக்கு பேச்சே வரவில்லை.
"பார்ஸ்ட் டைம்ல வலிக்க தான் செய்யும். ரெண்டு நாள்ல சரியா போயிடும்." என்றவன் அவனே அவளது சுடிதாரை சரி செய்து விட்டு எழுந்தான்.
"எல்லாம் இந்துக்காக" என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.
"இத போட்டுக்க. வலி தெரியாது" என்று மாத்திரை ஒன்றை கொடுத்தான் சஞ்சய்.
வாங்கி வாயில் போட்டவள் "கொஞ்ச நேரம் தூங்குறேன்" என்று மீண்டும் படுத்துக் கொண்டாள்.
"நீ தூங்குறதுக்கு இங்க வரல" என்றவனின் அதட்டல் அவளை மிரள வைத்தது.
"இந்த சைன நீ கரெக்ட்டா போடனும்." என்றவன் ஹாசினியின் கையெழுத்தை கொடுத்து விட்டு அவள் போட்டுப்பழக ஒரு நோட்டையும் வைத்தான்.
நீலாம்பரி அப்பாவியாக பார்த்து வைத்தாள்.
"வலிக்குது.. அப்புறமா பழகவா?"
"அப்ப பணமும் அப்புறமா தான் கிடைக்கும் பரவாயில்லயா?"
"உண்மையா எனக்கு ரொம்ப வலிக்குது"
"டேப்ளட் போட்டல? போயிடும். இப்ப சைன் பண்ணு"
முகம் சுருங்க பேனாவை எடுத்தாள். இரண்டு மூன்று முறை முயற்சி செய்தாள். சுத்தமாக வரவில்லை.
"என்ன பண்ணிட்டு இருக்க நீ? உன்னை பழக சொன்னனா? விளையாட சொன்னனா?" என்று அவன் சத்தம் போட பயந்து விட்டாள்.
"முன்ன பின்ன உன்ன போல ஃபிராடு வேலை பார்த்தா தான இதெல்லாம் வரும்" என்று முணுமுணுத்து வைக்க அது அவன் காதில் விழுந்து விட்டது.
"என்ன சொன்ன? ஃபிராடா?" என்று கேட்டவன் அவளருகே வர பதறிப்போனாள்.
"இல்ல இல்ல நான் அப்படி சொல்லவே இல்ல.."
"சொல்லாம என் காதுல எப்படி விழும்?" என்று கேட்டவன் அவளருகே வந்து விட்டான்.
"இருங்க இருங்க.. நான் எனக்கு ஃபிராடு வேலை பார்த்து பழக்கமே இல்லனு தான் சொன்னேன். அதுனால இத போட்டு பழக கஷ்டமா இருக்கு"
"அதுக்கு என்ன பண்ணலாம்?" என்று அவன் தலைசாய்த்து கேட்க பேந்த பேந்த விழித்தாள்.
"உனக்கு பத்து நிமிஷம் டைம். அதுக்குள்ள போட்டு பழகுற.. இல்லனா நடக்குறதே வேற. ஸ்டார்ட்" என்றவன் கைகடிகாரத்தை வேறு பார்த்தான்.
'வெறும் பத்தே நிமிஷமா?' என்று அதிர்ந்தவள் வேறு வழி தெரியாமல் உடனே பழக ஆரம்பித்தாள்.
மளமளவென எவ்வளவு சரியாக போட முடியுமோ போட்டு பழகினாள். தப்பு தப்பாக தான் வந்தது. ஆனால் நிறுத்தவே இல்லை.
'போட்டுரனும்.. எப்படியாவது போட்டுரனும்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டு கையெழுத்திட்டாள்.
பத்து நிமிட முடிவில் அவளது நோட்டை பிடுங்கி விட்டு ஒரு காகிதத்தை கொடுத்தான் சஞ்சய்.
"இதுல போடு" என்றதும் உடனே தடுமாறாமல் ஹாசினியின் கையெழுத்தை போட்டு விட்டாள்.
"அப்பாடா.. போட்டேன்" என்று திருப்தியாய் சொல்ல அவனும் வாங்கி பார்த்து விட்டு தலையசைத்தான்.
"இத நீ நாலஞ்சு இடத்துல போட வேண்டி இருக்கும். மறந்துடாத" என்று சொல்லி விட்டு அவள் கையெழுத்து போட்டதை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
"அதுல என்ன எழுதிருக்குனு கூட படிக்காம போட்டோமே.. எதாவது எடக்கு மடக்கா இருக்குமா?" என்று இப்போது யோசித்து தலையை சொறிந்தாள்.
மெல்லிய வலி டாட்டூவால் வர "அடப்போங்கடா.. ஆள் மாறாட்டம் பண்ணுறதுக்கு ஜெயிலுக்கு போகாம இருந்தா சரி. எந்த பேப்பர்ல சைன் போட்டா என்ன?" என்றவள் எல்லாவற்றையும் தூக்கி போட்டு விட்டு தூங்கி விட்டாள்.
சஞ்சய் பீம்மிடம் வந்து நீலாம்பரி கையெழுத்து போட்டதை கொடுத்தான்.
"கொண்டு போய் கொடுத்துடு"
"நீங்க போட்டதா பாஸ்?"
"நான் போடுறதா இருந்தா அங்கயே போட்டுருக்க மாட்டனா?"
"அப்ப அந்த.. நீலா.."
"ஹாசினி.. அவ பேரு ஹாசினி.. புரியுதா?"
"புரியுது பாஸ். கொடுத்துடுறேன்" என்றவன் ஓடி விட்டான்.
டாட்டூ போட்ட இடம் சிவந்து போயிருக்கிறது. அது நாளை தான் சரியாகும். நாளை அழைத்துச் சென்றால் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தான் சஞ்சய்.
நீலாம்பரியை பார்க்க அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
'இப்படி குச்சியா இருக்காளே.. ஹாசினி மாதிரி ஏன் இல்ல இவ?' என்று யோசித்து சலித்துக் கொண்டான்.
சில மணி நேரங்கள் கனவுலகத்தில் கலர் கலராக கனவு கண்டு ஆடிப்பாடிக் கொண்டிருந்தவளை சஞ்சய் கலைத்தான்.
சுடிதாரை நீக்கி டாட்டூவை பார்க்க போக தூக்கத்திலிருந்து எழுந்தவள் அவன் செய்த காரியத்தில் அதிர்ந்தாள்.
வேறு எதுவும் யோசிக்காமல் "டேய்.." என்று கை ஓங்கி இருந்தாள்.
ஆனால் சட்டென அவனது பார்வையை அவள் முகத்துக்கு கொண்டு வந்து முறைத்தான். அவனை பார்த்ததும் தான் நிஜம் புரிந்தது. ஆனாலும் கோபம் வந்தது.
'இவன் இஷ்டத்துக்கு தோனுறப்பலாம் திறந்து பார்க்க நான் என்ன ஃபிரிட்ஜ் கதவா?' என்று நினைத்தவள் அவன் கையை தட்டி விட்டாள்.
"எதுக்கு இப்படி பண்ணுறீங்க?"
"கை ஓங்குற?" என்று பதிலுக்கு கேட்டவனின் புருவம் கோபத்தில் ஒன்று சேர்ந்தது. ஆனால் அவளுக்கும் கோபம் தான். அதனால் பயமில்லாமல் பார்த்தாள்.
"கை ஓங்காம என்ன செய்வாங்க? பொறுக்கி மாதிரி தூங்குறவ டிரஸ்ஸ திறந்து பார்ப்பீங்களா?"
"பொறுக்கி? ரெண்டாவது தடவ சொல்லுற.. உன் கிட்ட ஜென்டிலா நடந்துக்க நினைச்சா விட மாட்ட போலயே?" என்றவன் சட்டை கையை மேலே ஏற்றிக்கொண்டு அவளை பார்த்தான்.
சட்டென நீலாம்பரிக்கு பயம் வந்து விட்டது.
'என்ன பண்ண போறான்?' என்று அவள் யோசிக்கும் போதே அவளை பிடித்து நன்றாக படுக்க வைத்தவன் சுடிதாரை கிழித்திருந்தான்.
"அம்மா.. என்ன.." என்று அலறியவள் கூட இப்படி கிழிப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
பேச்சு மொத்தமாய் நின்று விட்டது. பயத்தில் விழிகள் மட்டும் விரிந்திருக்க கண்ணீரும் உருவாகியது.
கிழித்து போட்டு விட்டு எந்த உணர்ச்சியும் இல்லாமல் டாட்டூவை பார்த்தான். இன்னும் சிவந்து போய் தான் இருந்தது டாட்டூ போட்ட இடம்.
அவனது பார்வையை பொறுக்காமல் கையை கொண்டு அவள் மறைக்க போராட சஞ்சய் எரிச்சலோடு அவளது கையை பிடித்து தடுத்து விட்டு அவளை முறைத்தான்.
"செக் பண்ணுறேன்னு தெரியுதுல?" என்று அதட்ட அவளுக்கு அவமானமாக இருந்தது.
யாரென்று தெரியாத ஒருவன். இந்த கோலத்தில் அவன் முன்னால் இருப்பதே கேவலம். அவனோ அதிகாரமாக உடையை கிழித்து பார்க்கிறான்.
கண்ணீர் கரகரவென இறங்கி விட்டது. ஆனால் அதை துடைக்க அவளது கைகள் அவள் வசம் இல்லை. சஞ்சய்யும் அதை கண்டு கொள்ளவில்லை. டாட்டூவை மட்டும் தான் கவனித்தான்.
பொறுக்க முடியாமல் "ப்ளீஸ்" என்று கெஞ்சினாள். அப்போது தான் அவளது முகத்தையே நிமிர்ந்து பார்த்தான்.
"விடுங்க.. ப்ளீஸ்" என்று கெஞ்சி கேட்டவளுக்கு கண்ணீர் தான் அருவியாய் கொட்டியது. அவனோ அவளை நக்கலாக பார்த்து வைத்தான்.
"நீ தான பொறுக்கின? பொறுக்கி என்ன செய்வான்னு இப்ப தெரியுதா?" என்று கேட்க அவளுக்கு அழுகை தான் பீறிட்டு வந்தது.
அவள் கையை விட்டு அவன் எழ அவசரமாக கிழிந்து போன சுடிதாரால் தன்னை மறைக்க பார்த்தாள். அது முடியாது என்றதும் போர்வையை தூக்கி சுற்றி மறைத்துக் கொண்டாள்.
காலில் முகம் புதைத்து அவள் அழ ஆரம்பிக்க சஞ்சய் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.
அழுது அழுது கண்ணீர் வற்றி படுத்திருந்தவளுக்கு இங்கிருந்து ஓடி விடத்தான் ஆசை வந்தது. ஆனால் பூட்டியே இருக்கும் கதவை தாண்டி எப்படி ஓடுவது? சன்னலிலும் பல கம்பிகள் இருந்தது.
'ஆள் கடத்தலுக்குனே ரூம் கட்டிருப்பான் போல. பொறுக்கி.. டிரஸ்ஸ கிழிச்சுட்டான்.' என்று மனதில் வருத்தெடுத்தாள். பிறகு தூங்கி விட்டாள்.
அடுத்த நாள் காலை சஞ்சய் கதவை தட்டிக் கொண்டு நின்றிருந்தான். இரவு தூங்கும் முன்பே உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தான் தூங்கினாள். சஞ்சய் வந்து எதுவும் செய்வானோ? என்ற பயம் தான் காரணம்.
"நீலாம்பரி.." என்று வெளியிலிருந்து சஞ்சய் கத்த பதறி அடித்து எழுந்தாள்.
"கதவ திற" என்று குரல் வர நீலாம்பரிக்கு மூச்சு சீராகவே நேரம் எடுத்தது.
சஞ்சய் பொறுமை இல்லாமல் தட்டிக் கொண்டே இருக்க அவளுக்கும் கோபம் வந்தது.
'இப்ப எதுக்கு கதவை உடைக்கிற மாதிரி தட்டுறாரு?' என்று கோபமாக நினைத்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
பிறகு மெல்ல விளங்கியது. கதவை பூட்டி விட்டு படுத்திருந்தது. சுடிதார் தான் மானத்தை காக்க முடியாமல் கிழிந்து கிடக்கிறதே.
"ச்சே கதவை பூட்டிருக்கோம்னு தான் தட்டுறானா?" என்றவள் போர்வையை நன்றாக உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு சென்று கதவை திறந்தாள்.
சஞ்சய் அவளை முறைத்து பார்க்க அவளோ அவனை மேலும் கீழும் பார்த்தாள்.
"இப்ப எதுக்கு இப்படி..."
பேச ஆரம்பித்தவளை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவன் கையிலிருந்த பைகளை தரையில் எறிந்தான்.
"எதுக்குடி கதவ பூட்டுன? நான் உள்ள வரக்கூடாதுனு தான?" என்று கேட்டுக் கொண்டே அருகே செல்ல நீலாம்பரி பயந்து பின்னால் சென்றாள்.
"சொல்லுடி.."
மேலும் கீழும் தலையாட்டி விட்டு அவசரமாக இடவலமாக மாற்றினாள்.
"அப்போ இந்த பொறுக்கி ரூம்க்குள்ள வந்துடுவான்னு பூட்டிருக்க" என்று கேட்டுக் கொண்டே அடிமேல் அடி வைத்து அருகில் சென்றான்.
"இல்ல.."
"பொறுக்கி வந்து நீ தூங்கும் போது எதாச்சும் பண்ணிடுவான்னு பயம். அப்படி தான?"
அவனது பார்வைக்கே எச்சிலை விழுங்கியவள் பின்னால் சென்று சுவற்றில் மோதி நின்றாள். சுவற்றை திரும்பி பார்த்தவள் திறந்திருந்த கதவு பக்கம் ஓடப்பார்க்க சஞ்சய் தன் கையை வைத்து தடுத்து நிறுத்தினான்.
"என்ன ஓடனுமா? ஏன் ஓடுற? என்ன பண்ணிடுவேன்னு ஓடுற?"
கண்களோடு கண்கள் கலக்க விட்டு அவன் கேட்ட போது அவளுக்கு வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.