ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மாயலீலா - கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் - 20




வருணும் ராம்பிரவுவின் மேல் வழக்கு தொடுத்திருக்கிறான் என்ற செய்தி மாயாவையும் வந்தடைய, அவளால் நம்ப முடியவில்லை. அதோடு 'என்றைக்கும் சித்தி அன்னையாக முடியாது' என்ற வருணின் பதிவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுசிலாவுக்கு பிரபலமாவதில் ஒரு போதை. இந்த போதை இப்போது பாராபட்சமின்றி அனைவரிடமும் காணப்படும் ஒன்று. இவன் படங்களில் நடக்க தொடங்கியதில் இருந்து தான் சுசிலா இவனிடம் பாசமாக நடந்து கொண்டார். என்ன இருந்தாலும் நடிகரின் அன்னை என்ற பெயரும் மதிப்பும் தனக்கு கிடைக்கும் என்ற நோக்கத்தில். இவர் நினைத்ததும் நடந்தது.

வருணை பெற்றவர் இவர் இல்லையென்றாலும் அவனுக்கு பெற்ற அன்னையாக இருக்கிறார் என்ற பெயரில் ரசிகர்களிடம் நல்பெயரை வாங்கி இவரும் பிரபலமானார். அதுவும் வருண் முன்னணி நடிகர்களுள் ஒருவனாக வந்ததில் இவரின் பங்கு தான் அதிகம் என்று பேச்சும் அடிப்பட்டு அடங்கியது.

இந்த மதிப்பையும் பெருமையையும் தான் சுசிலா எதிர்பார்த்தார். அதுவும் கிடைத்தது. இப்போது தான் அவரின் குணத்தை உணர்ந்து கொண்டிருக்கிறானோ என்னவோ இப்படியொரு பதிவை வெளியிட்டிருந்தான்.

ராம்பிரபுவை வெளியில் எடுத்தே தீர வேண்டும் என்று அவர் நிற்கும் போதெல்லாம் 'என் பையன் என் பையன்' என்று அழுத்தி அழுத்தி கூறி இப்படியொரு நிலையை ஏற்படுத்தி விட்டிருந்தார் சுசிலா.

வலித்தது. இவரின் கண்ணீருக்காக தான் இவன் குடும்பத்தையே மன்னித்து பல தடவை ராம்பிரபுவையும் காப்பாற்றி இருக்கிறான். என்ன சொன்னாலும் இவன் கேட்டு கொள்வான் என்ற அவர்களின் அலட்சியம் தான் அவர்களை இவன் ஒதுக்கிய வைக்க முதல் காரணம்.

லீலாவின் விசயத்தில் தவறுகள் செய்தவர்கள் தான். ஆனால் அவளை முற்றிலும் நம்பாமல் வெறுத்து ஒதுக்கியவன் நான் அல்லவா.? என் மேல் தவறு இருக்கும் போது இவர்களை பழி சுமர்த்தினால் இதை லீலாவே மன்னிக்க மாட்டாள். ராம்பிரபுவை மன்னித்து விட்டது கூட சுசிலாவின் கெஞ்சலுக்காக தான்.

ஆனால் அவன் இப்போது வரை அடங்கியது போலவே இல்லை. இவனே வெறுத்து விட்டான். மாயாவின் ஒதுக்கலில் குடும்பம் என்ற ஒன்றே வேண்டாம் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டு இப்போது தனியாகவும் வசிக்கிறான்.

இப்போது இவன் செய்தது மாயாவிற்காக அல்ல அவனின் லீலாவிற்காக. அவளுக்காக இவன் செய்தது இது ஒன்றாக மட்டும் இருக்கட்டுமே.! இனி ராம்பிரபு வெளியில் வர முடியாதபடி பணத்தை அள்ளி வீசி அனைத்தையும் செய்து முடித்திருந்தான். இதை மாயா செய்தாலும் இவனால் உடைத்திட முடியும் என்பதை அறிந்திருந்த திமிரு தான் ராம்பிரபுவை அடங்காமல் ஆட செய்தது.

சுசிலாவே அதிர்ந்து அவனிடம் பேச முயன்றாலும் அவன் விடவில்லை. இதில் அப்படியொரு பதிவு வேறு. அவர்களின் வீட்டில் என்ன தான் நடக்கிறது.? என்று தான் அனைத்து செய்தி ஊடகங்களும் மாறி மாறி பேசியது.

நாட்டுப் பிரச்சனைக்காக தான் செய்தி ஊடகங்கள் என்பது மாறி இப்போது நடிகை, நடிகர்கள் என்ன செய்கிறார்கள்.? ஏது செய்கிறார்கள்.? என்பதை செய்தியாக வடிக்கத்தான் ஊடகங்கள் முயல்கின்றனர். சொல்லபோனால் நடிகர், நடிகைகள் சாதாரணமாக சாப்பிடுவதையும் தூங்குவதையும் கூட ஒரு செய்தியாக தருகின்றனர். இன்றைய காலகட்டத்தின் ஊடகங்களின் வேலையே இவர்களின் பின்னால் கேமராவை தூக்கி கொண்டு சுற்றுவது தான்‌ போலும்.

இதனால் தான் என்னவோ படிப்பை விட இப்போது சினிமா துறையில் நடிக்கவே பல பேர் விரும்பி படிப்பையும் பாதியில் விடுகின்றனர். குழந்தைகளை கூட பிரபலமாக்க வேண்டும் என்று நினைத்து குழந்தையாக மகிழ வேண்டிய வயதில் நடிப்பை அவர்களுள் விதைத்து விடுகின்றனர். இதன் விளைவு அவர்கள் குழந்தை பருவத்தை இழக்க வேண்டியதாக இருக்கின்றது. அது பல பெற்றோர்களுக்கும் புரியவில்லை.

இதை கூறினால் 'எங்கள் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்... அவர்களின் திறமையை தான் வளர்கிறோம்... அது உங்களுக்கு தவறாக தெரிந்தால் நாங்கள் என்ன செய்வது.?" என்று விடுகின்றனர். இதற்கு யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்து கொள்வதே மேல்.

படப்பிடிப்பில் ஆடவனை கண்ட மாயாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஆனால் அவளுள் பெரிய படபடப்பு அரங்கேறியது மட்டும் உண்மை. அன்றைய காட்சியிலும் நடிக்க முடியாமல் தடுமாறி போனாள்.

'என்ன ஆயிற்று.?' என்று கேட்டதற்கு 'நத்திங்' என்றவள் ஓய்வறையை நோக்கி சென்றாள். கண்டிப்பாக வருணிடம் பேசியே ஆக வேண்டும் என்று தான் அவளின் மனது துடித்தது. ஆனால் அவன் விரும்பவில்லை போலும். இவளின் அலைப்பேசி அழைப்பிற்கு பதிலுரைக்காமல் இருந்து விட்டான்.

அழுகையாக வந்தது. ஏனோ அவன் தன்னை ஒதுக்கி வைக்கிறான் என்று தான் எண்ணியது. 'நான் இவ்வாறு செய்தபோது அவனுக்கும் இப்படித்தான் இருந்திருக்கும்.?' என்றதையே இப்போது தான் உணர்ந்தாள். ஓயாமல் கண்ணீர் வடித்தாள். விடாமல் அழுததில் விழிகளும் சிவந்து சற்று வீங்கி கிடக்க, சாப்பிட அழைத்த போதும் இவள் மறுத்து விட்டாள்.

ராம்பிரபுவின் வழக்கும் நீதிமன்றத்திற்கு வந்தது. தம்பியால் பாதிக்கப்பட்ட பெண்களை வருணே அழைத்து வந்திருந்தான். தைரியமாக பல பெண்கள் சாட்சியும் சொன்னார்கள். மீராவும் வருவதாக கூறினாள். ஆனால் மாயா கடுமையாக மறுத்தாள்.

கட்டாயப்படுத்தி பல பெண்களின் வாழ்வை நாசமாக்கியதற்காக ராம்பிரபுவிற்கு கடுங்காவல் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஐந்து லட்சம் நிவாரணத்தொகையும் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சினிமாவில் இது சாதாரணமாகி விட்டாலும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதும் அரிதாகி விட்டது. பல நடிகைகளின் இறப்பிற்கே இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. எந்த நடிகர்களாவது இது போல் பாதிக்கப்படுகிறார்களா.? என்று கேட்டால் என் பதில் 'அவ்வளவாக இல்லை' என்பது தான்.

தண்டனை அதிகமானால் தவறுகள் குறைய வாய்ப்புண்டு. இங்கு தண்டனை கிடைப்பதே அரிதாக இருந்தால் எங்கு தவறுகளும் குறைய முடியும்.?

ராம்பிரபுவால் யாரையும் பார்க்க முடியவில்லை. அவமானத்தில் குனிந்த தலை நிமிராமல் காவலர்களுடன் சென்றான். அண்ணன் தன்னை காப்பாற்றி விடுவான் என்று மலைபோல் நம்பி இருந்தவனின் நம்பிக்கை ஆட்டம் கண்டு விட்டது. ஒருவனுக்கு மிகப்பெரிய ஆசானே தண்டனைகள் அடங்கிய அவமானம் தான். இந்த அவமானமே அவனை பிற்காலத்தில் மீண்டும் அந்த தவறை செய்ய விடாமல் தடுக்கும் என்று நம்புவோம்.

ஏதேச்சையாக துருவனை கண்ட மாயா சிரிப்பை சிந்த, இன்னும் தன்னை ஞாபகம் வைத்திருந்து புன்னகைக்கிறாள் என்ற நினைப்பே துருவனுக்கு ஜிவ்வென்று இருந்தது.

இவனும் பதில் புன்னகையை தர, அவனிடம் கை குலுக்கியவள் "எங்க பின்னாடி சுத்தி எங்களுக்கு பாதுகாப்பு தர்றதே உங்க வேலையா போய்ருச்சு.. நாட்டுல மத்த பிரச்சனையை விட இந்த பிரச்சனை தான் இப்ப பெருசா இருக்கு" என்று ஒரே வரியில் அவனின் மன ஆதங்கத்தையும் கூறி விட்டு விடைப்பெற்றாள்.

உண்மைதான். அவள் கூறி சென்றது உண்மைதான். இவனின் எண்ணமும் அது தான். கஷ்டப்பட்டு படித்து பல தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்து பின்பு மக்களுக்கு உதவி புரியும் நோக்கில் இந்த வேலையில் இவன் அமர்ந்தான்.

ஆனால் நடப்பது என்னவோ கூத்தடிகள் என்னும் பெயரில் அரைகுறை ஆடையுடன் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு பாதுகாப்பு தருவதும் மக்களை ஏமாற்றி பிழைத்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் பின்னே சுற்றுவதும் தான் வாடிக்கையாகி போகின்றது. இந்த வேலையை அவன் வெறுத்து விட்டான் எனலாம்.

நேற்று கூட தந்தையின் நண்பர் ஒருவர் தனியாக வீட்டில் இருந்த நண்பரின் மகளை கற்பழித்து கொண்டு விட்டார் என்று ஒரு வழக்கு வந்தது. இதில் அவரை கைது செய்ய கூட இவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தான் வேதனையின் உச்சம். ஏனென்றால் அவர் தான் ஆளுங்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறாரே.. பணத்தை அள்ளி வீசி இந்த விசயம் வெளியில் வராதபடி செய்தும் விட்டாரே.?

இவனின் மனது தான் இன்னும் ஆறவில்லை. இப்படி பல வழக்குகள் அவனிடம் வந்தது. மேலிடத்தை மீறி இவன் ஏதாவது செய்தால் உடனே பணியிட மாறுதல் தான். இது போல் இவன் கிட்டத்தட்ட பல பணியிட மாறுதல்களை பெற்று விட்டான். இப்போது இங்கு வந்தது கூட இவ்வாறு தான்.

இதை எல்லாம் பார்க்கும் போது பேசாமல் இவ்வேலையை விட்டு விட்டு ஏதாவது வேறொரு வேலை செய்து பிழைத்து கொள்ளலாமா.? என்று தான் தோன்றும். மேலிடம் ஆட்டி வைக்கும் கைப்பாவைகளாக தான் இவர்கள் இருக்கிறார்களே.?

அவர்கள் உட்காரு என்றால் உட்கார வேண்டும்.. நில்லு என்றால் நிற்க வேண்டும்.. அவர்களை மீறி ஒன்றும் செய்ய கூடாது. அதுவும் படிக்காமல் அரசியலில் அமர்ந்தவர்கள் கஷ்டப்பட்டு படித்து இவ்வேலைக்கு வந்தவர்களை கேவலமாக திட்டும் போது எதுவும் செய்ய முடியாமல் போகும் நிலையை என்னவென்று சொல்வது.?

இப்போது என்னவென்றால் வருணுக்கு பாதுகாப்பு தர வேண்டி கொளுத்தும் வெயிலில் நீதிமன்றத்தின் முன்பு நிற்கிறான். இவர்களின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தால் நாடு உருப்படும் என்ற எரிச்சல் வேறு. ரசிகர்கள் என்ற பெயரில் இங்கும் கூட்டம் கூடுவதும் குறைவதுமாக தான் இருந்தது. இதில் ஒரே ஆறுதல் ராம்பிரபுவிற்கு தண்டனை கிடைத்தது தான் அதுவும் வருணே முன்னால் நின்று வாங்கி தந்தது.

வெளியில் வந்தால் அவனிடம் பேச வேண்டும் என்று இவன் இருக்க, மாயாவே இவனிடம் பேசி சென்றது தான் ஆச்சரியம். அவளும் நடிகை தான். ஆனாலும் ஏதோ ஒரு சந்தோஷம் அவனிடம்.

இறுதிவரை வருணை சந்தித்து பேசிட அவனுக்கு வாய்ப்பே கிடைக்கவே இல்லை. ஏதோ வேறு வேலையென இவன் நகர்ந்த நேரம் வருண் கிளம்பி சென்றிருந்தான்.

தொலைக்காட்சியில் ஓடும் செய்தியை பார்த்து ஒன்றும் புரியாமல் போனாலும் "அய்யோ அண்ணா அவரு பாவம்ல.?" என்று ராம்பிரபுவிற்காக வருத்தப்பட்ட லீலாவை மண்டையிலே விடாமல் கொட்டினான் வடிவேலன்.

"இவன் பாவமா.? இவன் பாவமா.? மறுபடியும் இப்படி சொல்லுவீயா.? உன் வாய்னா உன் இஷ்டத்துக்கு ஏதாவது பேசுவீயா.?" என்று கேட்டு கொட்டியவனை நிறுத்த முடியாமல் லீலா தடுமாறிட, "அவளை விடுடா.. தெரியாம பேசிட்டு இருக்கா" என்று தெய்வானை கூறியதும் தான் வடிவேலன் அடங்கினான்.

இப்படித்தான் யாரை பார்த்தாலும் பாவம் பாவம் என்று கூற வேண்டியது. இவளே மற்றவர்கள் பாவப்படும் நிலைமையில் இருந்ததை மறந்து.! பின்பு தெய்வானை தான் புரிய வைப்பாள். லீலாவும் புரிந்து கொண்டு 'நான் ஏன்மா இப்படி இருக்கறேன்.?' என்று வருத்தப்படுவாள்.

துருவன் வந்ததில் இவர்களின் பேச்சை தடைப்பட்டது. "வேலா ஒரு காஃபி" என்று விட்டு அவன் அறைக்கு சென்று விட, அவனை கண்டதும் பெண்ணவளின் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க தொடங்கி இருந்தது.

இப்போது அவனின் மீது ஆசையும் துளிர் விட்டிருந்தது. தெய்வானை தான விடாமல் "அவன் உனக்கு தான்டா.. கண்டிப்பா சம்மதம் சொல்லுவான் பாரு" என்று பேசி பேசி அவளின் மனதிலும் ஆசையை வளர்த்து விட்டிருந்தார்.

'பைத்தியம் இவளை கொண்டு போய் குடுக்க சொல்றதை விட்டுட்டு அவனே காஃபி போட போறான் பாரு' என்று வடிவேலனை கருவிய தெய்வானை வேணுமென்றே இரும்பி "மூச்சு பிடிக்கிற மாதிரி இருக்குமா.. அவனை வர சொல்லு.. நான் கொஞ்ச நேரம் வெளில நின்னுட்டு வர்றோம்" என்று வடிவேலனை அழைக்க சொன்னார் அதுவும் மெல்லிய குரலில்.

அவரின் எண்ணத்தை அறியாமல் லீலாவோ "அம்மா என்ன ஆச்சு.?" என்று உண்மையில் பதறிட, "ஒன்னுமில்லடா" என்ற நேரம் வடிவேலனை வெளியில் வந்து விட்டிருக்க, தெய்வானை கண்ணை காட்டியதில் புரிந்து கொண்டவன் "நீ கொண்டு போய் அவன்கிட்ட குடுத்துரு.. நான் அம்மாவை வெளில கூட்டிட்டு போறேன்" என்று அவள் மறுக்கும் முன்பே காஃபி கோப்பையை கையில் திணித்திருந்தான்.

அவளின் மனது படபடவென்று துடித்தது. ஒருபுறம் அவனை பார்க்க ஆசையாக இருந்தாலும் மறுபுறம் பயமும் ஆட்கொள்ள, பயத்தை ஒதுக்கி வைத்தவள் ஆடவனின் அறையை நோக்கி சென்றாள்.

அசைவின்றி கட்டலில் கண்மூடி படுத்திருந்தான். 'தூங்கறாரோ.?' என்று நினைத்து இவள் ஆசை தீர ஆடவனை விழிகளால் களவாடி கொண்டிருக்க, பட்டென்று விழிகளை திறந்து "என்ன.?" என்று கேட்டான் காட்டத்துடன்.

அவன் விழிப்பான் என்று உணராதவள் பயந்து போய் "அது.. அது.." என்று திணறியதில் கண்ணீரும் வெளிவர துடிக்க, "அது தான் வந்துட்டியே.? என்னனு சொல்லு" என்று மிரட்டியதில் காஃபி கோப்பையை அவனிடம் நீட்டினாள்.

"வெச்சுட்டு போ" என்ற அவனின் அலட்சியத்தில் பெண்ணவளின் மனது காயப்பட்டது. ஓட முயன்றவளை மீண்டும் அவனின் குரல் தடுத்து நிறுத்திட, "என் அம்மாவை கைக்குள்ள போட்டு வெச்சுட்டு என்னைய வீட்டுக்கே வர விடாம பண்ணிட்ட.? வீட்டுக்கு வந்தாலே உன்னைய கல்யாணம் பண்ணு கல்யாணம் பண்ணுனு என்னைய டார்ச்சர் பண்றாங்க.. ச்சைக் உன்னால தான் வீட்டுக்கே வராம தனியா கிடக்கறேன்.. இப்ப சந்தோசமா.?" என்று கடுகடுத்தான்.

இப்படியொரு வார்த்தையை எதிர்பார்க்காதவள் பதிலின்றி அழுகையுடன் ஓடிட, இவனோ வாய்விட்டு சிரித்தான்.

அடப்பாவி அவ பாவம்டா.. ஏன்டா இப்படி வெச்சு செய்யற.? இப்படி பேசற உன் வாயிலயே நாலு மிதி மிதிச்சா தான் என்ன.?

அறைக்குள் ஓடியவள் தேம்பினாள். 'உண்மையாகவே அவருக்கு தன்னை பிடிக்கவில்லையா.?' என்று நினைத்து நினைத்து அழுதாள். இவள் நம்பி இருந்தாள் தெய்வானை சம்மதிக்க வைத்து விடுவார் என்று.! ஆனால் இந்தளவிற்கு வற்புறுத்தி திருமணம் செய்ய இவளுக்கே இப்போது விருப்பம் வரவில்லை. இனியொரு முறை இப்பேச்சை எடுத்தால் நானே மறுத்து விட வேண்டும் என்ற உறுதியும் பூண்டாள்.

இப்போது தான் ஞாபகம் வந்தவனாக "என்ன புதுசா நாய்க்குட்டி ஒன்னு வெளில இருக்கு.? எங்கிருந்து பிடிச்சுட்டு வந்த.?" என்று துருவன் வினவிட, "அது தங்கச்சியோட ப்ரெண்டுடா" என்று வடிவேலனும் பதிலளித்தான்.

"போச்சு போச்சு மானமே போய்ருச்சு.. இந்த அண்ணா இப்ப இதைய சொல்லலனா என்னவாமா.?" என்று புலம்பினாள் லீலா.

"ஏன் உன் தொங்கச்சிக்கு மனுசன் எல்லாம் கண்ணுக்கு தெரியலயா.? இதைய எங்கிருந்து தூக்கிட்டு வந்தீங்க.?"

"தங்கச்சி வளர்த்துன நாய்க்குட்டி தான் துருவன்"

"ஓஹோ"

"இவ இங்க வந்ததும் நாய்க்குட்டியை அவ பெரியம்மா அவுத்து விட்டுருக்கு போல.. அது தெருவுல சுத்திட்டு இருந்துருக்கு.. இப்ப லீலாவை பார்த்ததும் பின்னாடி வந்து வீட்டுக்கிட்டயே இருந்துச்சு.. அப்பறம் அம்மாகிட்ட கேட்டு தான் நாய்க்குட்டியை தூக்கிட்டு வந்தோம்" என்று கூறினான்.

நக்கலாக "ம்ம்ம்ம் நல்ல வாழ்க்கை தான் நல்ல வாழ்க்கை தான்.. வாழட்டும்" என்று விட்டு துருவன் நகர, அவன் வார்த்தையில் இத்தனை நேரம் மறைந்திருந்த வலி மீண்டும் தலைதூக்கியதில் முணுக்கென்று கண்ணீரும் சுரந்தது.

துருவன் வெளியில் இருந்தால் இவள் அறைக்குள்ளயே முடங்கினாள். இனி அவனின் முன்பு சென்றும் அவனை சங்கடப்படுத்த கூடாது என்றும். வடிவேலன் அழைத்த போது தலைவலி என்று விட்டாள். பின்பும் அவனும் தொந்தரவு செய்யவில்லை. விட்டு விட்டான்.



மீண்டும் துருவன் கிளம்பும்வரை இதுவே தொடர்ந்தது. 'இப்படியே இவள் இருக்கட்டும்.. அப்போது தான் என்னை மறக்காமல் இருப்பாள்.. இல்லையென்றால் என்னை மறந்து விட்டு அண்ணா, அம்மா என்று இவர்களின் பின்னே சுற்ற தொடங்கி விடுவாள்' என்று செல்லமாக அவளிடம் கோவித்து கொண்டும் கிளம்பினான்.

இவனுக்கு சற்று கோவம் தான். நான் பேசும் போது திருப்பி பேசினால் தான் என்னவென்று.? அதை மட்டும் அவள் செய்யவே மாட்டேன் என்கிறாளே.?

வருண் ஒதுங்கி செல்வதை மாயாவால் தாங்க முடியவில்லை. இவளே வழிய சென்று பேசினாலும் ஓரிரு வார்த்தையில் கடந்து விடுகிறான். இப்படத்தில் மாயாவை நீக்கி விட்டு வேறொரு புதுநடிகையை போடலாம் என்ற இயக்குனரிடம் 'நான் மாயாவுடன் என்றால் நடிக்கிறேன்.. இல்லையென்றால் நீங்கள் வேறு நடிகரை பார்த்து கொள்ளுங்கள்' என்றவன் கூடுதலாக 'நான் கடைசியாக மாயாவுடன் மட்டும் தான் நடிக்க விரும்புகிறேன்' என்றும் குறிப்பிட்டு இருந்தான் என்பதை மாயாவும் அறிந்து குழம்பி போனாள்.

அவனின் ஒதுக்கலை விட அவனின் பேச்சு தான் அவளை மிகவும் பயப்படுத்தியது. அவனை வேண்டாம் என்று கூறியது தவறோ.? என்று நொடிக்கொரு தடவை தன்னை தானே நொந்து கொள்கிறாள். படப்பிடிப்பும் முடியும் தருவாயில் இருக்க, இனி இவனை பார்க்க முடியாதா.? என்று ஏங்கினாள்.

இவள் ஒதுக்கிய போது அந்த வலி தெரியவில்லை. அதே அவன் அதை செய்யும் போது அந்த வலியின் வீரியமும் இவளுக்கு புரிகிறது.

அடுத்து என்ன செய்வது.? என்று புரியாத புதிருடனே அவனுடன் நடித்தாள். காதல் காட்சியில் எல்லாம் ஆடவனின் விழிகளில் காதலுடன் சேர்ந்து கண்ணீரையும் காண்கிறாள். அவனின் தொடுதலில் உருக்குலைந்து போகிறாள்.

இது எல்லாம் நடிக்கும் போது மட்டும் தான். பின்பு இவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. 'ஏனடா என்னைய ஏங்க வைக்கிறாய்.?' என்று புலம்பியும் தவித்தாள். வருணின் எண்ணம் தான் என்ன.? என்பது தான் யாரும் கணிக்க முடியாத ஒன்றாக அமைந்தது.



தொடரும்..

Thread 'மாயலீலா - கருத்து திரி' https://aadvikapommunovels.com/threads/மாயலீலா-கருத்து-திரி.1803/
 
Status
Not open for further replies.
Top