மழை 8
அதுவரை யாரையும் பார்த்து புன்னகைக்காத வசிஷ்டன் அடுத்த நாள் இருந்து அவளைப் பார்த்து புன்னகைத்தான்...
அவன் சிரிக்கும் போதெல்லாம் அவளுக்கு மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வு... வசுந்தரா மற்றும் நரேனின் திருமணத்துக்கு இன்னும் இரு வாரங்கள் இருந்தன...
ஞாயிற்றுக் கிழமை அன்று, குளிக்காமல் நரேனுடன் அமர்ந்து வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்தாள் பாரதி...
லக்ஷ்மியோ, "இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்... இப்போவும் சின்ன பையன் போல டி வி கேம் ஆஹ்?" என்று கேட்க, அவனோ, "கல்யாணத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம், நீங்க கல்யாணம் பண்ணி தளபதியை சைட் அடிக்காம விட்டீங்களா என்ன?" என்று சிரித்தபடி கேட்க, "சரி சரி நீ விளையாடு" என்று அவர் சமாளிக்க, பாரதி சத்தமாக சிரித்துக் கொண்டாள்.
இப்படியே அவர்கள் பேசி சிரித்துக் கொண்டு இருக்க, அவர்கள் வாசலில் வந்து நின்றது ஜாகுவார் கார்...
அனைவரும் திரும்பி பார்க்க, அங்கே ஷேர்ட்டின் கையை மடித்து விட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தது வேறு யாருமல்ல வசிஷ்டன் தான்...
அவனைக் கண்டதுமே நரேனின் கண்கள் மட்டும் அல்ல பாரதியின் கண்களும் விரிந்துக் கொண்டன...
நரேனின் மனமோ, 'கல்யாணத்துல மண் அள்ளி போட வந்து இருப்பானோ?' என்று யோசிக்க, பாரதியோ, 'ஐயோ குளிக்கவே இல்லையே... இப்படி பார்த்தா என்ன நினைப்பார்?' என்று யோசித்துக் கொண்டே அறைக்குள் ஓடிச் சென்றாள்.
ஓடிச் செல்பவளை அழுத்தமாக பார்த்து விட்டு, அங்கே இருந்த செல்லதுரையை பார்த்தவன், "ஹெலோ சார், என் பெயர் வசிஷ்டன்..." என்று ஆரம்பிக்க, "ஆஹ் தெரியும்... போட்டோ ல பார்த்து இருக்கேன்... நீங்க வந்து இருக்கிறதா சம்பந்தி சொன்னார்... கம் அண்ட் சிட்" என்று இருக்கையை காட்ட, அவனும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டே நரேனை நோக்கி திரும்பியவன், "ஹாய் நரேன்... ஹவ் டூ யூ டூ?" என்று வெகு வெகு இயல்பாக பேசினான்...
அவனை ஆராய்ச்சியாக பார்த்த நரேனோ, "குட், ஹவ் அபவுட் யூ" என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்...
அவன் எதற்கு வந்து இருக்கின்றான் என்று யாருக்கும் தெரியவே இல்லை...
சும்மா பார்க்க வந்து இருக்கின்றான் என்று தான் செல்லதுரை நினைத்து இருந்தார்...
லக்ஷ்மியோ, "காஃபி சாப்பிடுறீங்களா?" என்று கேட்க, "யா ஷோர்" என்று சொல்லிக் கொண்டே வலுக்கட்டாயமாக சிரித்தவன், "உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்து இருக்கேன்" என்றான்...
இந்த இடைப்பட்ட நேரத்தில் அவசர அவசரமாக முகத்தை கழுவி உடையை மாற்றிக் கொண்டே வெளியே வந்து ஓரமாக நின்று இருந்தாள் பாரதி...
செல்லதுரையோ, "என்ன விஷயம்?" என்று கேட்க, அவனோ, "வெல், உங்க பொண்ணு பாரதிக்கு நான் க்ளாஸ் எடுக்கிறேன்" என்று சொல்ல, அவரோ, "ம்ம், சொல்லி இருக்கா" என்றார்...
"கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறேன்" என்று சொல்ல, பாரதியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, நரேனோ, "வாட்?" என்று அதிர்ந்தே விட்டான்...
குரலை செருமிய வசிஷ்டனோ, "பி.எச். டி முடிச்சு இருக்கேன்... டீ டோட்டலர், பொண்ணுங்க பழக்கம் இல்லை... இதுக்கு மேல என்ன குவாலிபிகேஷன் எதிர்பார்க்கிறீங்க?" என்று நேரடியாகவே செல்லதுரையிடம் கேட்க, நரேனுக்கு கோபம் வந்து விட்டது...
"அவ இன்னும் படிச்சு முடிக்கல வசி" என்றான் அவசரமாக...
அவனை நிதானமாக திரும்பி பார்த்த வசிஷ்டனோ, "காலேஜ் ட்ராப் அவுட் உன்னை விட, பி.எச். டி படிச்ச எனக்கு படிப்போட அருமை நல்லாவே தெரியும்... கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும்" என்றான்...
நரேனோ சற்று கோபமாக, "என்ன பேசிட்டு இருக்க?" என்று கேட்க, செல்லதுரையோ, "இப்போ எதுக்குடா கோபப்படுற? நீ கேட்ட நேரம் அவங்க வீட்ல இப்படி தான் கோபப்பட்டாங்களா?" என்று கேட்க, அவனால் பதில் பேச முடியவில்லை... மௌனமாக வசிஷ்டனை முறைத்துப் பார்த்தான்...
அவன் இதழ்க்கடையில் நக்கல் புன்னகை...
யாருக்கும் புலப்படவில்லை...
ஆனால் நரேன் கண்டு கொண்டான்...
ஆழ்ந்த மூச்செடுத்தபடி கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்து இருக்க, வசிஷ்டனோ, "உங்க பொண்ணு கிட்ட கூட நான் கேட்கல சார்... அது மரியாதையும் இல்லன்னு உங்க கிட்டயே நேரே வந்து இருக்கேன்" என்றான்...
அந்த ஒரு வார்த்தையில் அவர்களை மயக்கி விட, அவனுக்கு காஃபியை கொடுத்த லக்ஷ்மியோ, மென்மையாக புன்னகைத்துக் கொண்டார்...
மேலும் தொடர்ந்த வசிஷ்டனோ, "பாரதிக்கு புடிக்கலன்னா வேணாம்" என்று சொல்ல, நரேனோ, "அது சரி, அவ வேணாம்னா விட்ருவ தானே" என்று கேட்க, வசிஷ்டனோ, "கண்டிப்பா" என்றான்...
அடுத்த கணமே பாரதியை திரும்பி பார்த்த நரேன், "சொல்லுடி" என்றான்...
அவளோ, "எனக்கு புடிச்சு இருக்கு" என்று நரேனின் தலையில் குண்டை தூக்கி போட்டாள்.
நரேனோ, "ஏய் என்ன பேசுற?" என்று கடுப்பாக கேட்க, செல்லதுரையோ, "நரேன் உனக்கு என்னாச்சு? எதுக்கு இப்படி பிஹேவ் பண்ணிட்டு இருக்க?" என்று அதட்ட, "அப்பா உங்களுக்கு புரியாது" என்றான்...
வசிஷ்டனை மறுக்க அவனுக்கு ஆதாரம் இல்லை...
ஆனால் அவனை பற்றி உணர்ந்து இருந்தான்...
அந்த உணர்வை வைத்து அவனால் என்ன செய்து விட முடியும்?
லக்ஷ்மியோ, "என்னடா புரியாது? பி.எச்.டி முடிச்சு இருக்கார்... தண்ணி, தம்னு எந்த கெட்ட பழக்கமும் இல்லை... பொண்ணுங்க விஷயத்தில கூட டீசென்ட் ஆஹ் இருக்கார்... பாரதி கிட்ட பேசாம நம்ம கிட்ட பேசி இருக்கார்... பாரதிக்கும் பிடிச்சு இருக்கு... இதுக்கு மேல என்ன வேணும்னு சொல்ற?" என்று சீறினார்...
"அவ படிக்கணும்மா" என்றான் அவன்...
"உன்னை விட அவருக்கு அவ படிப்புல அக்கறை இருக்கும்..." என்று சொன்ன செல்லதுரையோ, "அவனை விடுங்க வசிஷ்டன்... அப்பா கிட்ட பேசி முடிவு பண்ணலாம்" என்றார்... அவர்களுக்கும் நல்ல மாப்பிள்ளையை விட்டு விட கூடாது என்கின்ற எண்ணம் தான்...
ஊராரை பொறுத்தவரை அவனை போல மாப்பிள்ளை அமைவது வரம்...
ஆனால் நிதர்சனமோ வேறு அல்லவா?
வசிஷ்டனோ, "ஒரே மேடைல கல்யாணம் பண்ணிடலாம் சார், எதுக்கு உங்களுக்கு தனியா ஒரு செலவு?" என்று அவர்கள் தலையில் ஐஸை தூக்கி வைக்க, அவர்கள் மொத்தமாக குளிர்ந்து போக, நரேனுக்கு தான் உள்ளுக்குள் எரிந்துக் கொண்டு இருந்தது...
"வசி, உன் கிட்ட பேசணும்" என்றான் அவசரமாக...
அவனும், "பேசலாம் நரேன்" என்று சொல்ல, அவனை கண்களால் அழைத்துக் கொண்டே தனியாக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்...
பாரதியின் மனமோ, 'இவன் எதுக்கு இப்போ பேசணும்? பேசி கல்யாணத்தை நிறுத்திடுவானோ?' என்று நினைத்தது...
அவளுக்கும் பெரிய அளவு முதிர்ச்சி இல்லை...
படங்கள், நாவல்கள் என்று கனவுலகத்தில் வாழும் சராசரி பெண்...
அழகாக, ஆளுமையாக, படித்த மாப்பிள்ளை என்றதுமே வேறு எந்த யோசனையும் அவளுக்கு வரவில்லை...
"இவரை கல்யாணம் பண்ணி காலேஜ்ல கெத்து காட்டணும்" என்ற சிறுபிள்ளை தனமான எண்ணம் தான்...
அதனாலேயே இப்போது நரேன் அவளுக்கு வில்லனாக தெரிந்தான்...
மொட்டை மாடிக்கு வந்ததுமே, "நைஸ் லொகேஷன்" என்று சொல்லிக் கொண்டே வசிஷ்டன் கண்களை சுழல விட, "சின்ன பொண்ணுடா அவ" என்று சீறினான் நரேன்... எந்த உணர்வும் இல்லாமல் அவனை சாவகாசமாக பார்த்தவன், "குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்க தெரியாத அளவுக்கு சின்ன பொண்ணு இல்லையே" என்றான் நக்கல் தொனியில்...
"டேய்" என்று ஷேர்ட் காலரை பிடித்தே விட்டான் நரேன்.
அப்போதும் மௌனமாக அவன் கையை பார்த்தான் வசிஷ்டன்...
சட்டென்று கையை எடுத்தவன், "உனக்கு என் மேல கோபம்னா என் கிட்ட காட்டு... என்னை அடி உத... என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா அவளை விட்ரு" என்றான்.
"ஹேய் இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற... உனக்கு மட்டும் காதல் புனிதமானது... எனக்கு புனிதமா இருக்க கூடாதா?? லவ் மேன் லவ்.. உன்னை போல எல்லாம் ரகசியமா காதலிக்கல... மூஞ்சுக்கு நேரே வந்து பொண்ணு கேட்டு இருக்கேன். அதுல என்ன தப்பு கண்ட?" என்று கேட்டான்.
"நீ எதுக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க ட்ராமா போடுறேன்னு எனக்கு நல்லாவே தெரியுது..." என்று சொன்னவனிடம், "ட்ராமாவா?? ஐ லவ் ஹேர் டா..." என்றான் நக்கல் குரலில்..
"பழி வாங்குறியா வசி?" என்று நேரடியாகவே கேட்டு விட்டான். "நோ நோ என்னை பார்த்தா கெட்டவனாவா தெரியுது???" என்று கேட்டான்...
"உன்னை பத்தி யாருக்கும் தெரியாது... ஆனா எனக்கு நல்லாவே தெரியும்... உன்னோட வன்மம் பத்தி தெரியும்... ஊருக்கு நல்லவன் வேஷம் போடுறவன் நீ. என் கிட்ட நடிக்காதே" என்றான்.
"ஹேய் மச்சி ரிலாக்ஸ்" என்று அவன் நெஞ்சில் தட்டியவனோ, "என் கிட்ட இவ்ளோ பேசுற நீ உன் தங்கச்சி கிட்ட பேசலாமே" என்றான்.
"அவளுக்கு என்ன தெரியும்?? உன் ஸ்மார்ட்னெஸ் உன் ஆட்டிடியூட் பிடிச்சு இருக்கு... ஆனா உன் கூட வாழவே முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றான்.
"அத உன் தங்கச்சி வாழ்ந்து பார்த்துட்டு சொல்லட்டுமே" என்று கண் சிமிட்டி சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாக, அவன் கையை பிடித்த நரேன், "கொஞ்சம் புரிஞ்சுக்கோடா.... உனக்கும் தங்கச்சி இருக்குல்ல... அந்த பீலிங் தெரியாதா?" என்று கேட்டான்.
"ஆஹான்" என்று சொல்லிக் கொண்டே அவனை ஆழ்ந்து பார்த்தவன், "என் பீலிங் எப்படி இருக்குன்னு உனக்கு புரிய வேணாமா?" என்று கேட்டான்.
"ஹேய்... நான் உன் தங்கச்சியை லவ் பண்ணுறேன். ஆனா நீ..." என்று சொல்ல, "நானும் தான் லவ் பண்ணுறேன், லவ் அட் பெர்ஸ்ட் சைட்ன்னு சொல்வாங்களே... அது தான்..." என்று ஒற்றைக் கண்ணை அடித்தவன் தன்னை பிடித்து இருந்த அவன் கையை உதறிக் கொண்டே நடந்தான்.
அவன் செல்வதை பார்த்துக் கொண்டே நின்ற நரேனுக்கு கீழே செல்ல இஷ்டமே இல்லை... அப்படியே மொட்டை மாடியில் நின்று இருக்க, வசிஷ்டனும் அங்கிருந்து விடை பெற்று சென்று இருந்தான்...