ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 6

pommu

Administrator
Staff member
மழை 6

அந்த கல்லூரியில் ராகிங் என்பது பாரதூரமான குற்றமாக கருதப்பட்டது...

அதுவும் கை நீட்டி அடித்து இருக்கின்றான்... ஆதாரம் வேறு கையில் இருக்கின்றது... தப்ப முடியுமா?

அடுத்த கணமே நரேன் விசாரணைக்காக அழைக்கப்பட்டான்...

ஆரம்பத்தில் அவனுக்கு எதற்கு அழைக்கிறார்கள் என்று புரியவில்லை... ஆனால் பிரபுவை பார்த்ததுமே துல்லியமாக புரிந்தது... அதுவும் பிரபுவுக்கு பக்கத்தில் வசிஷ்டனை பார்த்ததும் அவன் தான் இதனை கேஸ் ஆக மாற்றி இருப்பான் என்று அறிந்துக் கொண்டான்...

இறுகிய முகத்துடன் நின்று இருந்தான்...

"திஸ் இஸ் எ சீரியஸ் இஸ்ஸு... ராகிங் பண்ண கூடாதுன்னு சொல்லியும் கேட்காம ஒருத்தன் மேல கையை வச்சு இருக்க நரேன்... இதுக்கு என்ன பதில் சொல்ல போற?" என்று பிரின்சிபால் எகிறினார்...

இல்லை என்று வாதாட முடியாத போல கையில் ஆதாரம் சிக்கி இருக்க, "ஏதோ விளையாட்டு தனமா பண்ணிட்டேன் மேம்" என்றான்...

"இது விளையாடுற விஷயமா? எத்தனை பசங்க ராகிங் காரணமா தற்கொலை பண்ணி இருக்காங்கன்னு உனக்கு தெரியும் தானே... அடுத்தவன் உயிர்னா உனக்கு விளையாட்டா போச்சுல்ல" என்று சற்று கடுமையாகவே திட்டினார்... மௌனமாக தலையை குனிந்தபடி நின்று இருந்தான்...

"ஐ ஆம் கோய்ங் டு சஸ்பெண்ட் யூ" என்றார்...

ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே, "டிஸ்மிஸ் பண்ணிடுங்க மேம்" என்றான்...

அனைவருக்கும் அதிர்ச்சி வசிஷ்டன் உட்பட...

தற்காலிகமாக அவனை நிறுத்த யோசித்தால் அவன் நிரந்தரமாகவே நின்று விடுகிறேன் என்று சொல்கின்றான் அல்லவா?

தன்னை அதிர்ந்து பார்த்தவரிடம், "சஸ்பென்ஸன் முடிஞ்சு திரும்ப வரும் போது ஸ்டுடென்ட்ஸ் என்னை பார்க்கிற பார்வை மாறும்... ஐ ஹேட் தட்... டிஸ்மிஸ் பண்ணுங்க... கெத்தா வெளியே போறேன்" என்றவன் விழிகள் ஒரு கணம் வசிஷ்டனில் படிந்து மீண்டது...

"ஆர் யூ கிரேசி" என்று அவர் திட்ட, "அப்படியும் வச்சுக்கலாம்" என்றான்...

இப்படி எதையுமே சீரியஸ் ஆக எடுக்காமல் பேசுபவனிடம் அவர் என்ன தான் பேசி விட முடியும்?

"உன் பேரன்ட்ஸ் ஐ அழைச்சிட்டு வா இன்னைக்கே" என்றார் அவர்...

தோள்களை உலுக்கி விட்டு, "அவங்கள கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்த போறீங்களா? இன்னைக்கு நீங்க டிஸ்மிஸ் பண்ணினாலும் பண்ணலைன்னாலும் நாளைல இருந்து நானே காலேஜுக்கு வர மாட்டேன்..." என்று சொன்னவன் நிமிர்வாகவே வெளியேறி இருந்தான்...

கார் பார்க்கிங்க்கு சென்று காரில் சாய்ந்து நின்று சிகரெட்டை பிடிக்க, அவன் அருகே அவன் நண்பர்கள் வந்து ஆளுக்கொரு கருத்தை சொல்லிக் கொண்டு இருந்தார்கள்...

நரேன் மௌனமாக தான் நின்று இருந்தான்... அப்போது, "சாரி சீனியர்" ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தான் பிரபு நின்று இருந்தான்... அவனை நோக்கி வந்தவன், "என்னடா?" என்று கேட்டுக் கொண்டே அவனது சிவந்த கன்னத்தை தொட்டு பார்த்தவன், "அடிச்சானா?" என்று கேட்டான்...

"ம்ம், உங்க மேல ஏதோ தனிப்பட்ட கோபம் இருக்கும் போல" என்றான்...

"ஓகே, அத விடு, நல்லா படிச்சு நீயாவது எஞ்சினியர் ஆகு" என்றான்...

"எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு" என்றான்...

"அடேய்... அவங்க என்ன நிறுத்தல... நானா தான் நின்னேன்... எனக்கு இந்த காலேஜ் லாம் செட் ஆகாது... ஜாலியா அப்பாவோட பிசினஸ் ஐ பார்த்துட்டு இருப்பேன்... எனக்கு நீ நல்லது தான் பண்ணி இருக்க" என்றான்...

பிரபுவுக்கு இப்போது தான் இதழ்கள் சிரித்தது...

"எப்படி எல்லாமே பாசிட்டிவ் ஆஹ் எடுத்துகிறீங்க?" என்று கேட்டான்...

"அழுது புரண்டு நடந்ததை மாத்த முடியாது... ஆனா நடக்க போறத நாம நினச்சா மாத்தலாம்... அதுக்கு முடிஞ்சத நினச்சு அழாம தெளிவா சிந்திக்கணும்... அத தான் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொன்னவனை பிரமிப்பாக பார்க்க, அவனோ பிரபுவை அணைத்து விடுவித்தவன் நண்பர்களிடமும் சொல்லி விட்டு காரில் ஏறிக் கொண்டான்...

காரை ஓட்டிக் கொண்டே வெளியேச் சென்றவனின் கண்கள் அங்கே அவன் காரையே கலக்கமாக பார்த்துக் கொண்டு நின்ற வசுந்தராவில் படிந்து அருகே நின்று இருந்த வசிஷ்டனில் நிலைத்தது...

அவன் இதழ்க்கடையில் எதையோ சாதித்த போல ஒரு வன்ம புன்னகை... நரேன் கண்டு கொண்டான்...

ஆனாலும் கோபத்தை அடக்கிக் கொண்டே அங்கிருந்து மின்னல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றான்...

வீட்டுக்கு வந்துமே, "ராகிங் பண்ணினேன்னு என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க" என்று கூலாக சொன்னவன் பாரதி அருகே சோபாவில் அமர, அவளோ அதிர்ச்சியுடன் அவனை திரும்பி பார்த்தாள்.

செல்லதுரையோ, "என்னடா சொல்ற?" என்று அதிர, அவனோ, "நாளைக்கு உங்க கூட ஆபீஸ் வரேன்" என்றான்...

லக்ஷ்மியோ, "பீல் பண்ணாதே நரேன்... வேற காலேஜ்" என்று ஆரம்பிக்க, "எனக்கு எதிரி வெளியே இல்ல... உள்ள தான் இருக்கீங்க... நான் நாளைக்கே அப்பா கூட ஆபீஸ் போறேன்" என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டு அருகே இருந்த பாரதியை பார்த்தவன், "ஏய் வாலு கேம் விளையாடலாம் வர்றியா?" என்று கேட்டான்...

"நான் வரலப்பா, நான் உன்னை போல ட்ராப் அவுட் ஆகாம படிச்சு கோல்ட் மெடல் எடுக்கணும்" என்றாள்.

"கோல்ட் மெடல் எடுக்கிற மூஞ்சை பாரு, எல்லா பாடமும் என்னை போல பார்டர் ல பாஸ் பண்ணி இருக்க... ஏதோ பெர்ஸ்ட் பென்ச் ஸ்டுடென்ட் போல பில்ட் அப் பண்ணாம வாடி" என்று அவளை இழுத்துச் சென்றான்...

என்ன தான் அவன் சகஜமாக இருந்த போல காட்டினாலும் மனதில் ஒரு வித ஏமாற்றம் பரவி தான் இருந்தது...

அவனுக்கு பிசினஸ் என்கின்ற ஊன்று கோல் இருந்ததால் இதனை கவனத்தில் கூட எடுக்கவில்லை... ஆனால் இது வேறு ஒரு ஏழ்மை மாணவனுக்கு நடந்து இருந்தால் அவன் நிலை என்ன ஆகி இருக்கும் என்று யோசித்தான்...

"என் மேல இவ்ளோ வன்மம் னா லவ் மேட்டர் தெரிஞ்சு இருக்கு" என்று சரியாக யூகித்தவன் இன்னும் வசுந்தராவை காதலிக்கிறான் தான்...

ஆனால் அவள் சம்மதம் சொல்லாமல் அவளை தொந்தரவு செய்ய விரும்பாதவன் பிசினஸில் இறங்கி விட்டான்...

இதே சமயம் வசுந்தராவுக்கும் அவனை சந்திக்கவோ காதலை சொல்லவோ வழி இருக்கவில்லை...

வசிஷ்டனை மீறி அவளால் எதுவும் செய்யவும் முடியவில்லை...

நரேனை பார்க்க வேண்டும் போலவே அவளுக்கு இருக்கும்...

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை படிப்பில் ஈடுபடுத்தி அவன் நினைவை மறக்க முற்பட்டாள்.

இப்படியே அனைவரின் வாழ்க்கையும் நகர, நாட்கள் வாரங்கள் ஆக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்கள் ஆனது...

வசிஷ்டனுக்கு பிசினசில் எல்லாம் ஈடுபாடு இல்லை...

பி.எச். டி படிக்க வேண்டும் என்கின்ற வெறி...

காலேஜ் டாப்பர் ஆனான்... அப்படியே பி.எச். டி முடிக்க அமெரிக்காவுக்கு கிளம்பி விட்டான்.

இதே சமயம் வசுந்தராவோ தந்தையின் காஸ்மெட்டிக் பிசினஸை கையில் எடுத்துக் கொண்டவள், அதனையும் வெற்றிகரமாக நடத்த ஆரம்பித்து இருந்தாள்.

பாரதியோ காலேஜில் சேர்ந்து முதல் வருடத்தை முடித்தவள் இரண்டாம் வருடத்தில் காலடி வைத்த சமயம் அது...

நரேன் பிசினஸில் கொடி கட்டி பறந்துக் கொண்டு இருந்தான்...

இதன் போது தான் புதைந்து போன நரேன் மற்றும் வசுந்தராவின் காதல் மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது...

அன்று அலுவலகத்தில் அமர்ந்து இருந்த வசுந்தராவோ மேனேஜரிடம், "அடுத்த வருஷ சப்ளையர்ஸ் டீடெய்ஸ்ல் வந்துடுச்சா?" என்று கேட்க, அவரும், "ஆமா மேடம், கமிட்டி சப்ளையர சூஸ் பண்ணிட்டாங்க." என்றார்...

"யாரு சப்ளையர்?" என்று கேட்க, "வேர்ல்ட் ஒப் மினரல்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ்... வழமையா அவங்க நமக்கு கொட்டேஷன் தர மாட்டாங்க... ரொம்ப பெரிய கம்பெனி தான்... ஆனா இந்த முறை தந்து இருக்காங்க" என்று சொல்ல, "ஓகே அக்ரீமண்ட் சைன் பண்ணிடலாம்" என்று சொன்னவள் அறியவில்லை அது நரேனின் கம்பெனி என்று... ஆனால் அவனுக்கு தெரியும்...

தெரிந்து தானே கொட்டேஷனே மிக குறைந்த விலைக்கு கொடுத்து இருந்தான்...

அதுவரை அவள் தந்தை தான் கம்பனியை பார்த்துக் கொண்டார்... அதனால் மௌனமாக விலகி இருந்தான்... கம்பெனி எப்போது அவள் கைக்கு வந்ததோ அன்றில் இருந்து நெருங்க ஆரம்பித்து விட்டான்...

அக்ரிமெண்ட் சைன் பண்ணும் நாளும் வந்தது...

"எப்படிடி இருக்கேன்" என்று பாரதியிடம் இத்தோடு மூன்றாம் தடவை கேட்டு இருந்தான் நரேன்...

"அடேய்... என்னால முடியல... ஹீரோ மாதிரி இருக்க போதுமா?" என்று திட்டினாள் அவள்...

"தேங்க் யூ" என்று கண் சிமிட்டி சொல்லி விட்டு புறப்பட்டு இருந்தான் தன்னவளை பார்ப்பதற்காக...

அவளும் அக்ரிமெண்ட் சைன் பண்ணும் அறைக்குள் காத்துக் கொண்டே நேரத்தைப் பார்த்தவள், "என்ன இன்னும் காணோம்" என்று சலிக்க ஆரம்பிக்க, கதவை வேகமாக திறந்துக் கொண்டே, "சாரி போர் தெ டிலே" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் நரேன்...

அவனைக் கண்டதுமே அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிய, "குட் மார்னிங் மேம்" என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தான்...

உணர்வுகளை காட்ட முடியவே இல்லை அவளால்...

சுற்றி ஊழியர்கள் இருந்தார்கள்...

"குட் மார்னிங்" என்றாள் வலுக்கட்டாயமாக சிரித்தபடி...

இருக்கையில் சாய்ந்து இருந்தபடி அவளை ரசித்து பார்த்தான்...

சுடிதாரில் கண்டு இருக்கின்றான்... இன்று , புடவை அணிந்து கொண்டை போட்டு இருந்தாள். நெற்றியில் பொட்டு வைத்து மிதமான மேக்கப் போட்டு இருந்தாள்...

"ரொம்ப அழகா இருக்க" என்றான் தன்னை மறந்து...

அவன் பார்வையில் ஏற்கனவே சங்கடப்பட்டு போனவளுக்கு அவன் பேசியது இன்னும் சங்கடமாக இருந்தது...

"எக்ஸ்கியூஸ்மீ" என்றாள் அழுத்தமாக...

"ம்ம், நத்திங்" என்று கண் சிமிட்டி சொல்ல, அவளோ அவனை மேலிருந்து கீழ் பார்த்தாள்...

அவள் விழிகளிலும் அதே ரசனை...

தாடி,மீசை என்று முதல் இருப்பவன்... இப்போது ட்ரிம் பண்ணி இருந்தான்...

எப்போதும் அவன் இதழ்களில் இருக்கும் புன்னகை இப்போதும் இருந்தது...

பார்வையாலேயே அவளை மீண்டும் மயக்கி இருந்தான்...

குரலை செருமிக் கொண்டே, "பிசினஸ் பேசலாமா?" என்று கேட்க, "ஷோர்" என்று சொன்னான்.

இருவரும் வியாபாரத்தை பற்றி பேசி விட்டு அக்ரிமென்டில் கையெழுத்தும் இட்டார்கள்...

அவன் கையெழுத்துக்கு அருகே கையெழுத்தை இடும் போது தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

அனைத்தும் முடிய எழ போனவனிடம், "காஃபி குடிச்சு போகலாமே" என்றாள் அவள்...

சிரித்தபடி மீண்டும் இருந்தவன், "காஃபி குடிக்கிறது இல்லை... ஜூஸ் ப்ளீஸ்" என்றான்... அவளும் சிரித்துக் கொண்டே, "சாருக்கு ஒரு ஜூஸ்" என்று சொல்ல, இருவருக்கும் தனிமை கிடைத்தது...

"எப்படி இருக்க?" என்று கேட்டான்...

"பைன், நீ?" என்று கேட்டாள்.

இருவரின் கண்ணிலும் ஒரு வித எதிர்பார்ப்பு, காதல் இருக்க தான் செய்தது...

"நல்லா இருக்கேன்... ஆமா உன் அண்ணா என்ன பண்ணுறான்?" என்று கேட்க, "அமெரிக்காவிலே பி.எச்.டி பண்ணுறான்... இன்னும் ஆறு மாசத்துல வந்திடுவான்" என்றாள்.

"ஓஹ் வந்திடுவானா?" என்று மார்க்கமாக கேட்க, "ஏன்?" என்று கேட்டாள்.

"அங்கேயே ஒரு பாரின் பொண்ணோட செட்டில் ஆகலாம்ல" என்று கேட்க, சிரித்து விட்டாள்.

"அவன் அப்படி எல்லாம் பண்ண மாட்டான்... கல்யாணம் எல்லாம் இப்போ இஷ்டம் இல்லை..." என்றாள்.

"பட் எனக்கு இஷ்டம்" என்றான்...

"யாரையும் லவ் பண்ணுறியா?" என்று ஒரு தயக்கத்துடன் வந்தது அவள் கேள்வி...

"எஸ்" என்றதுமே முகம் சுருங்கி போனது...

"ஓகே" என்றாள் வலுக்கட்டயமாக புன்னகைத்துக் கொண்டே...

"ரொம்ப பீல் பண்ணாதே... இப்போவும் உன்ன தான் லவ் பண்ணுறேன்" என்றான்...

"நான் ஒண்ணும் பீல் பண்ணல" என்று சொல்லும் போதே அவள் இதழ்கள் சிரித்துக் கொண்டன...

இப்படி எல்லாம் சிரித்து பேசுபவள் அல்ல....

ஆனால் அவன் அருகே அவன் பேசுவதை கேட்டால் சிரிக்காமல் இருக்க முடியவே இல்லை...

அவனோ, "அப்புறம்" என்று சொல்ல, அவள் கண்கள் அவன் பாக்கெட்டில் பதிய, அதில் லைட்டரை கண்டு கொண்டவள், "இன்னும் தம் அடிக்கிறியா?" என்று கேட்டாள்.

"நீ ஓகே சொன்னா விட்டுடுவேன்" என்று சொல்ல, "அப்போ விட்ரு" என்றாள் நேரடியாக...

சட்டென தலையை உலுக்கிக் கொண்டவன், "வாட்?" என்க, "அப்போ சிகரெட், தண்ணி எல்லாம் விட்ரு" என்றாள் மீண்டும்...

சத்தமாக மனம் விட்டு சிரித்தே விட்டான்...

"ஆர் யூ சீரியஸ்?" என்று நம்பாமல் கேட்க, "எஸ்" என்று சொன்னவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பேறி போயின...

அவனை மீண்டும் அவள் இழக்க விரும்பவில்லை...

மனதில் இத்தனை வருட காதலை சுமந்தவள் எதற்காக மறைக்க வேண்டும்?

அவனை காக்க வைக்கவும் அவள் விரும்பவில்லை...

காதலை மறைமுகமாக உரைத்து விட்டாள்.

இதனை எதிர்பார்க்காதவனோ, "உன்னை கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கணும் போல இருக்கு, இங்க வச்சு தான் நீ ஓகே சொல்லணுமா?" என்று ஆபீசை சுற்றி பார்த்துக் கொண்டே சொல்ல, "ஹெலோ சார், எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்" என்றாள்.

"அப்போ இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றான்....

"என்ன ஜெட் ஸ்பீட் ல இருக்க?" என்று கேட்டவளோ, "வசி வரட்டும்" என்றாள்.

"போச்சு போ" என்று இப்போது அவன் சலிப்பாக சொல்லிக் கொண்டான்.

 

CRVS2797

Active member
மழையாக நீ... மழலையாக நான்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 6)

அட... காலேஜ் சஸ்பென்சன் விஷயத்துல தன்னால ஒரு மாணவனோட படிப்பு ட்ராப் அவுட்டாகுதேங்குற ஃபீலிங் கொஞ்சம் கூட வசிக்கு இல்லையா..? பிரபு ஃபீல் பண்ற அளவுக்கு கூட வசி ஃபீல் பண்ணாதது கொஞ்சம் வருத்தமா இருக்கு. நரேன் நல்லா படிக்கிறானோ, இல்லையோ... ஆனா, வசி கொஞ்சம் ஓவர் ரீயாக்ட் பண்ணிட்டான்னுத்தான் தோணுது.

ஆனா ஒண்ணு, நரேன் ஜென்ட்டிலா காலேஜ் சஸஃபென்சன் விஷயத்தை ஹேண்டில் பண்ணி வேற மாதிரி கொண்டு போயிட்டான். ஐ அப்ரிசியேட் ஹிம்.
எனக்கு இந்த நரேனை ரொம்ப பிடிச்சிருக்கு.
பட்... விட்டதை இப்ப பிடிச்சிட்டான்,
அட... அவனோட லவ்வர் வசுவை திரும்ப பிடிச்சதைத் தான் சொல்றேங்க.
அப்படி விடாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணவன், இப்ப ஏன் பிருஞ்சிருக்கான்னுத் தான் புரியலை ..?

😀😀😀
CRVS (or) CRVS2797
 
Top