மழை 5
சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டே, "கிரீட்டிங் கார்ட் ல ப்ரோபோசல் இருக்கே" என்றாள்.
"ஓகே சொல்லு, பெரிய கிஃப்ட் கொடுக்கிறேன்... இப்போ கிஃப்ட் கொடுத்து நீ ஓகே சொன்னா அது எனக்கு என்னவோ போல இருக்கும்... சோ கிரீட்டிங் கார்ட் மட்டுமே" என்றான்...
அவனை முறைத்தது போல பார்த்தவள், "ஹெலோ சார், நான் ஓகே சொல்லுவேன்னு அவ்ளோ கான்பிடென்ட் ஆஹ்?" என்று கேட்க, அவனோ, "பிடிக்கலன்னா என் கூட இருந்து இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்க மாட்ட" என்றான்.
"அது சரி கவிதை எல்லாம் எழுத வருமா?" என்று அவள் கேட்க, அவனோ, "அப்படி எல்லாம் பொய் சொல்ல மாட்டேன். கூகிள் ல ஆட்டைய போட்டேன்" என்றான்.
மீண்டும் சிரிப்பு வந்தது அடக்கிக் கொண்டாள்.
"வசியை பத்தி தெரியாம பேசிட்டு இருக்க... அவனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிடுச்சுன்னா நடக்கிறதே வேற" என்றாள்.
"அடிப்பானா? உனக்காக வாங்கிக்கிறேன்" என்றான் அவன்...
"இப்படி எல்லாம் ஏன் டா பேசி மயக்குற?" என்று கேட்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு...
அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "அடிக்க எல்லாம் மாட்டான்... ஒருத்தன பிடிக்கலன்னா வச்சு செய்வான்... மெண்டல் ஆஹ் டாச்சர் பண்ணுவான்..." என்று சொல்லிக் கொண்டே ஒற்றை விரலை எடுத்து மார்பில் வைத்தவள், "அவன் இத சொல்றத கேக்கிற ஆள் இல்ல" என்று சொன்னபடி தனது தலையை சுட்டிக் காட்டியவள், "இத சொல்றதை மட்டும் தான் கேப்பான்" என்றாள்.
இதழ்களை பிதுக்கிய நரேனோ, "இன்ட்ரெஸ்ட்டிங்... அப்போ போராடி தான் காதல் ல ஜெயிக்கணும் போல... அதுவும் கிக் தான்" என்று சொல்ல, இப்போது சிரித்தே விட்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டு, "சிரிக்கும் போது இன்னும் அழகா இருக்க" என்றான்...
பதில் சொல்லவில்லை அவள், ஆனால் கிரீட்டிங் கார்டை கையில் இருந்த புத்தகத்தினுள் பத்திரப்படுத்திக் கொண்டவள், பையில் இருந்து ஒரு சாக்லெட்டை எடுத்து அவனிடம் நீட்டி, "மை ட்ரீட்" என்றாள்.
"தேங்க் யூ" என்று சிரித்தபடியே அதனை வாங்கிக் கொண்டவன் அவளையே ரசனையாக பார்த்துக் கொண்டு இருக்க, அவனுடன் கண்களாலேயே பேசி விட்டு அவளும் அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
இவை அனைத்துமே போன் மூலம் அன்று மாலை வசிஷ்டனின் காதுக்குச் சென்றது அவன் நண்பன் மூலம்...
"ம்ம்" என்று சொன்னபடி வைத்து விட்டான்...
வீட்டிற்கு வசுந்தராவை அழைத்து வந்த போதும் கூட அவளிடம் அவன் எதுவும் கேட்கவே இல்லை...
அவளும் அவன் கண்களை பார்க்க தயங்கினாள்...
அந்த தயக்கமே அவனுக்கு அவள் மனதை அப்பட்டமாக உரைக்க, வீட்டை அடைந்ததும் அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
அறைக்குள் நுழைந்துக் கொண்ட வசிஷ்டனோ ஜன்னல் அருகே நின்று வெளியே நீண்ட நேரம் வெறித்தபடி நின்று இருந்தான்...
அவனது கூர்மையான மூளை பல பக்கங்களில் யோசித்துக் கொண்டு இருந்தது...
இதே சமயம் குளித்து விட்டு மேசையில் அமர்ந்த வசுந்தராவோ புத்தகத்தை திறக்க அதற்குள் நரேன் கொடுத்த கிரீட்டிங் கார்ட் இருந்தது...
அதனை சிரிப்புடன் எடுத்தவள் அவன் கையெழுத்தை வெட்கத்துடன் வருடிக் கொண்டாள்.
அவன் எழுதி இருந்த "ஐ லவ் யூ" வின் கீழே, "மீ டூ" என்று எழுதி மூன்று புள்ளிகள் வைத்து முடிய, "வசுந்தரா" என்று வசிஷ்டன் கதவை தட்டும் சத்தம் கேட்டது...
சட்டென்று கார்டை புத்தகத்தினுள் வைத்து விட்டு, எழுந்துச் சென்று கதவை திறந்தாள்...
"தலை வலிக்குது... மாத்திரை இருந்தா கொடு" என்றான்...
அவளும், "ஓகே" என்று சொல்லிக் கொண்டே, மாத்திரையை அலுமாரிக்குள் தேட, அவனோ மேசையில் இருந்த புத்தகத்தை அழுத்தமாக பார்த்தான்...
அவன் நண்பன் சொன்ன அதே எலெக்ட்ரோனிக்ஸ் புத்தகம்...
கையை நீட்டி அதனை வருடிக் கொண்டான், மாத்திரையுடன் அவனை நோக்கி வந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
உணர்வுகளை அடக்கிக் கொண்டே, அவனிடம் மாத்திரையை நீட்ட, அதனை வாங்கிக் கொண்டவனோ, "இந்த புக்கை படிச்சிட்டு கொடுக்கிறேன்" என்று சொன்னபடி எடுக்க, அவளோ, "வசி" என்று பதறி விட்டாள்.
"வாட்?" என்று கேட்டவனிடம், "இல்ல நான் படிச்சிட்டு இருந்தேன்" என்றாள்.
"டென் மினிட்ஸ் கொடு" என்று சொன்னவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் அதனை எடுத்துக் கொண்டேச் செல்ல, அவளுக்கோ இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது...
அறைக்குள்ளேயே பேயறைந்த போல நின்று இருந்தவளுக்கு அவனுடன் சண்டை போட்டும் பழக்கம் இல்லை... அப்படி அவர்கள் வளர்ந்தவர்களும் இல்லை...
பேசிக் கொள்வதே அபூர்வம் என்னும் போது சண்டை போட வருமா அவளுக்கு?
நீண்ட நேரம் அப்படியே அவள் யோசித்துக் கொண்டு இருக்க, அறைக்குள் வந்து கதவை தாழிட்ட வசிஷ்டன் வேகமாக புத்தகத்தை பிரித்து கிரீட்டிங் கார்டை எடுத்து பார்த்தான்...
அதில் அவன் கண்களை உறுத்தியது என்னவோ "மீ டூ" என்கின்ற வசுந்தராவின் பதில் தான்...
அதனையே பார்த்துக் கொண்டு இருக்க, அவன் அறைக் கதவு தட்டப்பட்டது... கார்டை உள்ளே வைத்துக் கொண்டே கதவை திறந்தான்...
அவன் கையில் இருந்த புத்தகத்தை பார்த்த வசுந்தராவோ, "ப்ளீஸ் வசி, படிக்கணும், கொடுத்துடு" என்று கையை நீட்ட, "ஓகே பைன்" என்று அவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே புத்தகத்தை நீட்ட, அதனை வாங்கிக் கொண்டே அறைக்குள் வந்தவள் அவசரமாக திறந்து கிரீட்டிங் கார்டை பார்த்தாள்.
அது உள்ளே இருக்கவும் தான் அவளுக்கு மூச்சே வந்தது...
அடுத்த நாள் இருந்து வசிஷ்டன் அவளை விட்டு விலகுவது இல்லை...
அவளை தனியாக விடுவது இல்லை...
அவள் விழிகளும் நரேனின் விழிகளும் பேசிக் கொள்வதும் அவன் விழிகளுக்கு தப்பவில்லை...
காத்துக் கொண்டு இருந்தான் வெறி கொண்ட வேங்கையாக.
சமயம் பார்த்து காத்துக் கொண்டு இருந்தான்...
'பொறுக்கி மேல காதல், குடி தம் என்று இருப்பவன் மீது காதல்... தட்டு தடுமாறி பாஸ் பண்ணும் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட் மீது காதல்...' என்று நினைக்க நினைக்க வசிஷ்டனுக்கு வெறியேறியது...
ஆனால் அடக்கிக் கொண்டு இருந்தான்...
இரையை வேட்டையாட வேங்கை போல பதுங்கி இருந்தவனுக்கு இரையை வேட்டையாடும் நாளும் வந்து சேர்ந்தது...
அவனிடம் வந்த அவன் நண்பன் ஒருத்தன், "நம்ம பேட்ச் பசங்க ராக்கிங் பண்ணி இருக்கானுங்க... நம்ம பையன் ஒருத்தன் வீடியோ எடுத்து இருக்கான்" என்றான்.
"லெட் மீ வாட்ச்" என்று சொல்ல, அந்த வவீடியோவை வசிஷ்டனிடம் காட்டினான் அவன் நண்பன்...
ஆழ்ந்து பார்த்தவன் கண்களில் ஒரு பளபளப்பு...
அந்த வீடியோவில் இருந்தது வேறு யாருமல்ல நரேன் தான்... வாயில் சிகரெட்டுடன் ஒருத்தனை கலாய்த்து படுத்தி எடுப்பது மட்டும் அல்லாமல், அவன் கன்னத்திலும் அறைந்து இருந்தான் அந்த வீடியோவில்... ஆனால் ஓங்கி எல்லாம் அறையவில்லை, விளையாட்டாக தான் அறைந்து இருக்கின்றான் என்று நன்றாகவே தெரிந்தது வசிஷ்டனுக்கு...
தெரிந்தாலும் விடுவானா அவன்?
"விக்டிம் ஐ அழைச்சு வா" என்றான்...
அடி வாங்கியவன் சற்று நேரத்தில் வசிஷ்டன் முன்னே நின்றான்...
அவர்கள் காலேஜில் இருக்கும் தனியறைக்குள் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது...
"பிரபு உன் மேல நரேன் கையை வச்சு இருக்கான் ரைட்?" என்று கேட்டுக் கொண்டே வீடியோவை காட்ட, கண்களை விரித்து அதிர்ந்து பார்த்தான் அந்த ஜூனியர் பையனான பிரபு...
சட்டென்று, "அப்புறம் ஜாலிக்கு பண்ணினதா சாரி கேட்டார் சீனியர்... அவர் அறைஞ்சதும் கூட வலிக்கல" என்றான்...
"ஆஹான்" என்றான் நக்கலாக...
வசிஷ்டனிம், "ஒரு வார்னிங் கொடுத்து விட்ரலாம் வசி" என்றான்...
"வார்னிங் கொடுத்தா போல அடங்குவானா? மறுபடியும் பண்ணுவான்... சோ" என்று வன்மத்துடன் கூறியவன் பிரபுவிடம், "இத நீ கேஸ் ஆக்கணும்" என்றான்...
"சீனியர்" என்று அதிர்ந்த பிரபுவுக்கு ஏனோ நரேன் மீது கோபம் இருக்கவில்லை...
ராக்கிங் பண்ணி விட்டு மன்னிப்பும் கேட்டு அவனுக்கு சாப்பாடும் வாங்கி கொடுத்து இருந்தான் நரேன்... காமெடியாக பேசுபவன் பேச்சையும் பிரபு ரசித்து இருக்கின்றான்... அதனால் கூட இருக்கலாம்...
"வாட்?" என்று அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே வசிஷ்டன் கேட்க, அவன் நண்பனோ, "கேஸ் எல்லாம் வேணாம் வசி... அப்புறம் அவன் டிராப் அவுட் ஆக கூட வாய்ப்பிருக்கு" என்றான்...
"தட் இஸ் வாட் ஐ வாண்ட்" என்றான் வசிஷ்டன்...
"இது உன்னோட பெர்சனல் வெஞ்சன்ஸ் போல தெரியுது" என்று அவன் நண்பன் சொல்ல, "இல்லன்னு நான் சொல்லவே இல்லையே" என்றான் கூலாக...
பிரபுவோ என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்க, அவனை பார்த்த வசிஷ்டனோ, "என்ன சொல்ற?" என்று கேட்டான்...
"கேஸ் வேணாம் சீனியர், அவர் அடிச்சது வலிக்கவே இல்லை" என்று முடிக்க முதல் அவன் கன்னத்தில் இடியாக இறங்கியது வசிஷ்டனின் கரம்...
கன்னத்தை பொத்தியபடி அவனை பிரபு அதிர்ந்து பார்க்க, "இப்போ வலிக்குதுல்ல, கேஸ் கொடு" என்றான்...
அவன் அறைந்ததை அவன் நண்பனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...
"வசி ஐ ஆம் லீவிங், இது தப்பா தோணுது" என்றான்...
"பட் இட்ஸ் ரைட் போர் மீ... எனக்கு ஒருத்தன பிடிக்கலன்னா அவன் என் கண் முன்னாடி இருக்கவே கூடாது" என்று சொல்ல, அவன் நண்பன் அவனை முறைத்துக் கொண்டே வெளியேற, அதனை சட்டை செய்யாமல் பிரபுவை பார்த்தவன், "கேஸ் கொடுக்கலாமா?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க, இன்னுமே கன்னத்தில் கையை வைத்து இருந்தவன், "ஓகே சீனியர்" என்று அழும் குரலில் சொன்னான்...
அவன் கன்னத்தில் இருந்த கையை விலக்கியவன், அதில் பதிந்து இருந்த தனது கைவிரல் அடையாளத்தை பார்த்துக் கொண்டே, "யார் பிரபு அடிச்சது?" என்று தெரியாத தொனியில் கேட்க, அவனோ, "அது" என்று இழுக்க, "நரேன் தானே அடிச்சது?" என்று அவன் சொல்ல வேண்டிய பதிலை மறைமுகமாக சொல்ல, அவனோ இதழ்கள் நடுங்க, "ஆமா சீனியர்" என்றான்...
"தட்ஸ் குட்" என்று சொன்னவன் அவனை அழைத்துக் கொண்டு அடுத்த கணமே காலேஜின் பிரின்சிபால் முன்னாடி நின்று இருந்தான்...
வசுந்தரா காதலை சொல்ல முதலே அந்த காதலை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் அவள் அண்ணன் வசிஷ்டன்...