ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 4

pommu

Administrator
Staff member
மழை 4

சில வருடங்களுக்கு முன்னர்...

நரேன் எஞ்சினியரிங் காலேஜில் சேர்ந்து இரண்டாம் வருடம் படித்துக் கொண்டு இருந்த சமயம் அது...

அதே காலேஜில் அவனது வகுப்பில் தான் வசிஷ்டனும் வசுந்தராவும் படித்துக் கொண்டு இருந்தார்கள்...

ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டு வசிஷ்டன் என்றால் எப்படி இருக்க கூடாது என்பதற்கு எடுத்துக் காட்டு தான் நரேன்...

குடி, தம், கிளாஸை கட் அடித்து விட்டு படத்துக்கு போவது...

நண்பிகளுடன் அரட்டை என்று வாழ்க்கையை ரசித்தான் தவிர படிக்க தவறி இருந்தான்...

படிப்புக்கும் அவனுக்கும் எட்டாம் பொருத்தம்... பிசினஸ் செய்கிறேன் என்று சொல்லியும் கேட்காமல் அவனை, "ஒரு டிக்ரீயாவது படிடா" என்று காலேஜுக்கு அனுப்பி இருந்தார் செல்லதுரை...

வேண்டா வெறுப்பாக தான் அவனும் காலேஜுக்கு வந்தான்...

வசிஷ்டனுக்கும் நரேனுக்கும் எப்போதுமே ஆகாது...

பார்த்ததுமே இருவருக்கும் ஏனோ ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை... எதிரெதிர் குணநலன்கள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் இருவரும் காட்டிக் கொள்வது இல்லை...

வசிஷ்டன் எல்லா பாடங்களும் டாப் க்ளாசில் பாஸ் பண்ணி இரண்டாம் வருடத்துக்குள் நுழைந்தான்...

நரேனோ, திக்கி திணறி பாஸ் பண்ணி இருந்த சமயம் அது...

காலேஜின் முன்னால் இருந்த மரத்தின் கீழ் நண்பர்களுடன் அமர்ந்து இருந்தான் நரேன்...

போகும் வரும் பெண்களை ரசித்துக் கொண்டும் கமெண்ட் அடித்துக் கொண்டும் இருந்தார்கள் அவர்கள்...

அப்போது தான் அங்கே வந்து நின்றது வசிஷ்டனின் கார்... அவனுடன் சேர்ந்து வசுந்தராவும் இறங்கிக் கொள்ள, கமெண்ட் அடித்துக் கொண்டு இருந்தவர்கள் வாயை கப்பென்று மூடிக் கொண்டார்கள்...

நரேனோ போனை பார்த்தபடி இருந்தவன், அந்த இடம் நிசப்தமானதை உணர்ந்து, "என்னடா?" என்று கேட்க, அவன் நண்பனோ, "வசிடா" என்றான்...

"அவன் வந்தா இப்போ என்ன?" என்று கேட்க, இன்னொருவனோ, "அவன் தானே நம்ம பேட்ச் ஓட ரெப்ரெசெண்டேடிவ் ஆஹ் ஸ்டுடென்ட் யூனியன் ல இருக்கான்... நிறைய ரூல்ஸ் போட்டு இருக்கான்.... உனக்கு தெரியும் தானே" என்று கேட்க, நரேனும், "ம்ம், கேள்விப்பட்டேன்... சைட் அடிக்க கூடாது, பொண்ணுங்களை கிண்டல் பண்ண கூடாது, முக்கியமா ராகிங் பண்ண கூடாது... எக்செட்ரா எக்செட்ரா, ஆனா நான் இதெல்லாம் பண்ணுவேன்... அவன் யாரு என்னை கண்ட்ரோல் பண்ணுறதுக்கு? மை லைஃப் மை சாய்ஸஸ்" என்றவன் கண்கள் முன்னால் வந்த வசிஷ்டனில் அழுத்தமாக பதிந்து, பின்னால் வந்த வசுந்தராவில் நிலைத்தது...

வசிஷ்டன் யாரையும் பார்க்காமல் நேரே பார்த்துக் கொண்டு நடக்க, அவனை தொடர்ந்து அவளும் அப்படி தான் நடந்து வந்தாள்.

வெள்ளை நிற சுடிதாரில், அழகு தேவதையாக இருந்தவளை இமைக்காமல் பார்த்தவன், "செம்ம அழகுல" என்றான்...

"டேய் அவன் தங்கச்சி டா" என்றான் இன்னொருவன்...

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அழகா இருந்தா ரசிப்பேன் தான்... எவன் தங்கச்சியா இருந்தாலும் ஐ டோன்ட் கெயார்" என்று சொல்லிக் கொண்டே, அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே நாடியை வருடியபடி இருந்தான்... சிறிது தூரம் சென்றதுமே, "வசுந்தரா முன்னால போ" என்று சொன்ன வசிஷ்டன், அவள் முன்னால் சென்றதுமே சட்டென திரும்பி நரேனை அழுத்தமாக பார்த்தான்...

"டேய் உன்ன தான் பார்க்கிறான்" என்று அவன் நண்பர்கள் சொல்ல, "வீட்டுக்கு வரப் போற மாப்பிள்ளையை பார்க்கிறான் போல..." என்று நரேன் சொல்ல, அவன் இதழ் அசைவை வைத்து அவன் பேசுவதை யூகித்த வசிஷ்டனின் பார்வை இறுக அவனை பார்த்துக் கொண்டே வகுப்பினுள் நுழைந்தான்...

நரேனும் வசிஷ்டனை நமட்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருக்க, அவன் நண்பனோ, "என்னடா சொல்ற... மாப்பிள்ளையா?" என்று கேட்டான்...

நரேனோ, "பொண்ணுங்கள சைட் அடிச்சு இருக்கேன், கடலை போட்டு இருக்கேன்... ஆனா இவ கூட மட்டும் வாழணும்னு தோணுதே" என்றான்.

"எத?" என்று ஒருத்தன் அதிர்ந்து பார்க்க, "டேய் இப்போ இல்லடா.. பெர்ஸ்ட் இயர்ல இருந்தே... நான் கிளாசுக்கு வர்றதே அவளுக்காக தான்" என்றான்...

"அடேய் சொல்லவே இல்லையே" என்று அவன் நண்பன் அதிர, "அட்ராக்ஷன்னு யோசிச்சு சும்மா இருந்தேன்... பட் லவ் கூடுதே தவிர குறைய மாட்டேங்குது... வாட் டு டூ?" என்று சிரிப்புடன் இதழ் பிதுக்கி கேட்க, "வசி தங்கச்சிடா" என்றான் ஒருவன்...

"அடிங், எப்போ பார்த்தாலும் வசி குஷின்னு சொல்லிக்கிட்டு... இன்னைக்கு அவன் யூனியன் மீட்டிங்குக்கு போயிடுவான்ல... அப்போ அவளை கான்டீன்ல வச்சு பார்த்துக்கிறேன்" என்று கண் சிமிட்டி சொன்னவன், "வாங்கடா" என்று சொல்லிக் கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்தான்...

அப்போதும் இறுதி பெஞ்சில் அமர்ந்து அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

பிரேக் டைம் நெருங்கியதும், வசிஷ்டன் மீட்டிங்குக்கு போய் விட, அவள் தனியாக தான் கான்டீன் உள்ளே நுழைந்தாள்...

நண்பர்களுடன் பின்னாலயே நுழைந்தவன், அவளுக்கு பின்னால் லைனில் வந்து நின்றுக் கொண்டான்...

"டேய் இந்த ஆட்டத்துக்கு நாங்க வரல" என்று சொல்லிக் கொண்டே அவன் நண்பர்கள் கழன்று விட, தலையை கோதியபடியே குரலை செருமினான் நரேன்...

சட்டென திரும்பிப் பார்த்தாள்.

"ஹாய்" என்றான்...

"ஹாய்" என்று இறுக்கமாகவே சொல்லி விட்டு முன்னால் திரும்பிக் கொண்டாள்.

அவளை நோக்கி சற்று குனிந்து அவள் காதருகே சென்று, "ரொம்ப அழகா இருக்கீங்க" என்றான்...

விழிகளை அதிர்ந்து விரித்தபடி அவனை திரும்பிப் பார்த்த வசுந்தராவோ, "எக்ஸ்கியூஸ் மீ" என்றாள்.

"அழகா இருக்கீங்கன்னு சொன்னேன்" என்றான் அவள் கண்களை பார்த்துக் கொண்டே.

அவனை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு முன்னால் திரும்பிக் கொண்டவள் அவன் புறம் திரும்பவே இல்லை...

காஃபி ஒன்றை வாங்கியபடி அவள் செல்ல, அவனும் ஒரு காஃபியுடன் அவளை பின் தொடர்ந்துச் சென்றான்...

அவளோ ஒரு மேசையில் சென்று அமர, அவனும் அதே மேசையில் அமர்ந்துக் கொள்ள, அவளுக்கு கோபம் வந்து விட்டது...

"வாட்ஸ் யோர் ப்ராப்லம்?" என்று அவள் எகிற, "யூ ஆர் மெயின் ப்ராப்லம்" என்றான்...

"ஆர் யூ கிரேசி?" என்று கடுப்பாக கேட்டவளிடம், "வெல் லெட் மீ எக்ஸ்பிலைன்... எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு... கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்... நான் ஒண்ணும் உன் அண்ணா போல டீடோட்டலர் இல்லை... தண்ணி அடிப்பேன் தம் அடிப்பேன்... நீ ஓகே சொன்னா அத உனக்காக விட்ருவேன்... பொண்ணுங்க கூட கடலை போடுவேன்... அது என்னோட ஹாபிட் அத என்னால மாத்த முடியாது... ஆனா என் மொத்தமும் உனக்கு தான்... எனக்கு ஒரு குட்டி தங்கச்சி இருக்கா... சோ ஸ்வீட் கேர்ள்... அம்மா அப்பா எல்லாரும் கல கலன்னு இருப்போம்... உன்னை நல்லா வச்சு பார்த்துப்போம்" என்று நீளமாக பேச, அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தவளோ, "ஹேய் ஹேய் ஸ்டாப்" என்று அவனை அவசரமாக நிறுத்தினாள்.

அவனும் பேசுவதை நிறுத்தி விட்டு அவளையே பார்க்க, அவளோ, "ரிலாக்ஸ்" என்று இரு கைகளையும் நீட்டி சொன்னவளோ, "யூ ஆர் லவ்விங் மீ, அவ்ளோ தானே" என்றாள். அவனோ, "எஸ் அவ்ளோ தான்" என்றான்...

"அதுக்கு ஏன் மகாபாரதம் போல இவ்ளோ பேசுறீங்க? ஓஹ் காட்" என்று சொன்னவள் இதழ் குவித்து ஊதி விட்டு, "என் அண்ணாவை பத்தி தெரிஞ்சா இங்க இருந்து பேச மாட்டீங்க" என்றாள்.

"வசி தானே... நல்லாவே தெரியும்... படிச்சு படிச்சு, உன் அண்ணாவோட முடி எல்லாம் கொட்ட போகுது..." என்றான்...

"அவனுக்கு படிக்க மட்டும் இல்லை... அடிக்கவும் நல்லா தெரியும்... கராத்தே பிளாக் பெல்ட்" என்றாள்.

"வாவ்... வாவ், மச்சான் பிளாக் பெல்ட்டா? நானும் பிளாக் பெல்ட் தான்... அப்போ ஒரு வன் டு வன் வச்சுக்கலாமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்க, "ஓஹ் மை காட்... உனக்கு சீரியஸ் ஆஹ் பேசவே வராதா? என்ன பேசுனாலும் கிண்டல் பண்ணிட்டே இருக்க" என்று எரிந்து விழுந்தாள்...

"தட்ஸ் மை கேரக்டர் பேபி, மாத்த முடியாது" என்றான்...

"ஐ ஆம் நாட் பேபி... அண்ட் என்னோட கேரக்டர் உனக்கு நேர் ஆப்பஸிட்" என்ற அவளது கருத்துக்கு, "ஆப்பசிட் அட்ராக்ட்ஸ் ஈச் அதர்" என்ற பதில் வந்தது...

"ஓகே பைன்... பட் எனக்கு உன்னை பிடிக்கல" என்றாள் நேரடியாக...

"டேக் யோர் டைம்... எப்போவாச்சும் பிடிக்கலாம்" என்றான் கண்களை சிமிட்டி...

"ஒஹ் காட்" என்று சொல்லிக் கொண்டே காஃபியை குடித்தவள் இதழ்களை டிஸ்ஸுவினால் துடைத்தபடி குப்பை தொட்டிக்குள் போட போக, அதனை பறித்து எடுத்தான் நரேன்...

"வாட்?" என்று அவள் கேட்க, "இதெல்லாம் சேர்த்து வச்சுக்கிறேன்... அப்போவாச்சும் லவ் வருதான்னு பார்க்கலாமே" என்றான்... அவளுக்கு இப்போது சிரிப்பு வந்து விட்டது.

அடக்கிக் கொண்டாள்.

ஆனால் அவன் கண்டு கொண்டான்...

"சிரிச்ச தானே?" என்று கேட்டான்...

"இல்லையே" என்றாள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டே...

"நீ சிரிச்ச நான் பார்த்தேன்" என்றான் அவளை காதலுடன் பார்த்தபடி...

"ஹெலோ, நான் சிரிக்கல" என்று சொல்லிக் கொண்டே வேகமாக எழுந்தவள் அவனுக்கு முதுகு காட்டி நடக்க தொடங்கிய சமயம் அவள் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டது...

அடுத்த நாள் இருந்து அவன் அவளை எப்போதும் போல வகுப்பில் பார்த்துக் கொண்டு இருப்பான்... அவள் கடைக்கண்ணால் பார்த்துக் கொள்வாள்...

ஒரு நாள் மர நிழலில் நின்று சிகரெட்டை வாயில் வைத்தபடி அவளை பார்க்க, அவளோ ஒரு முறைப்புடன் அவனை கடந்துச் செல்ல, சட்டென்று சிகரெட்டை கீழே போட்டு விட்டான்...

கடைக்கண்ணால் பார்த்து சிரித்துக் கொண்டாள்.

போக போக அவனை அவளுக்கும் பிடித்து இருந்தது...

அவனை பிடிக்காமல் இருக்குமா என்ன?

பேசி பேசியே மயக்கி விடுபவன், அவளை பார்வையாலேயே மயக்கி இருக்க, அன்று வசிஷ்டனுக்கும், வசுந்தராவுக்கும் பிறந்த நாள்...

வசிஷ்டனோ ட்ரீட்டை கொடுத்து விட்டு, "எனக்கு ரிசர்ச் வேலை ஒண்ணு இருக்கு. ஐ ஆம் லீவிங், ஈவினிங் பிக்கப் பண்ணுறேன்" என்று சொல்லி விட்டு கிளம்பி விட, குஷியாகி போனது என்னவோ நரேன் தான்.

அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து அவன் செல்லும் வரை பார்த்துக் கொண்டு இருந்தவனோ பாய்ந்து இறங்கிக் கொண்டே வசுந்தராவை தேடி கான்டீனில் நுழைய, அவளோ நண்பிகளுடன் பேசிக் கொண்டு இருந்தாள்.

அவளை பார்த்தப்படியே தள்ளி இருந்த மேசையில் அமர, அவளும் நண்பிகளுடன் பேசிக் கொண்டே அவனை பார்த்தாள்.

தனது மேசையில் வந்து அமரும்படி கண்களால் சைகை செய்தான்...

அவளும், "எக்ஸ்கியூஸ் மீ" என்று சொல்லி விட்டு அவன் மேசையில் சென்று அமர, "ஹாப்பி பேர்த் டே பேபி" என்றான்.

"ஐ ஆம் நாட் பேபி" என்றாள் அவள்...

"எனக்கு எப்போவுமே நீ பேபி தான்" என்றவன் அவளிடம் ஒரு கார்டை நீட்டி, "பெர்த் டே க்ரீட்டிங்ஸ்" என்றான்...

அவனை பார்த்துக் கொண்டே அதனை வாங்கி விரித்துப் பார்க்க, அதில் அவளை வர்ணித்து ஒரு கவிதையும் கீழே "ஐ லவ் யூ" என்கின்ற வாசகமும் இருந்தது...
 
மழையாக நீ.. மழலையாக நான்...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மூ
(அத்தியாயம் - 4)

அட பரவாயில்லையே...! இந்த நரேன் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்டா இருக்கிறானே.
எல்லாத்தையும் வெளிப்படையா பேசறதோட போல்டாவும் இருக்கிறான். இப்படி இருந்தா எல்லாப் பொண்ணுக்கும் பிடிச்சிடும் தானே.

ஆனா, வசி இந்த லவ்வை ஒத்துக்குவானா..?
ஒருவேளை, வசுந்தராவோட லவ்வுக்காத் தான் பாரதியை ஈடு வைச்சு பேலன்ஸ் பண்ணிட்டானோ...?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top