ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 24

pommu

Administrator
Staff member
மழை 24

வீட்டுக்கு வந்ததுமே அவளுடன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான்...

அவளோ கையை நீட்ட, ஷேர்ட் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அவளிடம் நீட்ட முதல் அதனை ஆராய்ச்சியாக பார்த்தான்...

"அண்ணாவோட இன்னொரு போன் ஆட்டைய போட்டேன்" என்றாள்.

ஒரு முறைப்புடன் தான் போனை கொடுத்தான்...

"போன் வாங்கி கொடுக்கலன்னா நான் என்ன பண்ணுறது? அவன் கிட்ட தான் எடுக்க முடியும்" என்று தோள்களை உலுக்கி விட்டு நகர்ந்து விட்டாள்.

அன்று குளித்து விட்டு அவர்கள் தூங்கி விட, அடுத்த நாள் லீவு என்பதால் காலை எட்டு மணி கடந்த போதிலும் பாரதி தூங்கிக் கொண்டு இருந்தாள்.

வசிஷ்டன் ஆயத்தமாகி வெளியேச் சென்று விட்டான்...

பாரதி கண் விழித்த சமயம் அவன் வீட்டில் இருக்கவில்லை...

சாப்பிட்டு விட்டு மீண்டும் அறைக்குள் வந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை...

மேசையில் இருந்த ஒரு ஆங்கில புத்தகத்தை எடுத்துக் கொண்டே கட்டிலில் படுத்து விட்டாள்.

"இதுல என்ன ஒன்னுமே புரிய மாட்டேங்குது... நம்ம இங்கிலிஷ் அளவுக்கு இவங்களுக்கு எழுத தெரியல" என்று எழுத்தாளருக்கு வேறு திட்டு...

சிறிது நேரம் கழித்து அறைக்குள் நுழைந்தான் வசிஷ்டன்...

அவன் கையில் புது போன் இருந்தது...

அவளோ, "காலைல என்னை விட்டு எங்க போனீங்க?" என்று கேட்டவள் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை...

புத்தகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளுக்கும் புத்தகத்துக்கும் நடுவே கையில் இருந்த இடைவெளியில் போனை நீட்டினான்...

அவளோ போன் பாக்ஸை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே அவனை ஏறிட்டு பார்த்தவள், "ஐ போன் ஆஹ்?" என்று கேட்டாள்.

"ம்ம், லேட்டஸ்ட் மாடல், உனக்கு தான்" என்றான்...

உடனே தனது கையில் கிள்ளி பார்த்தவள், "ஆஹ் கனவில்லை" என்று சொல்லி அவன் முறைப்பை பதிலாக பெற்றுக் கொண்டாள்.

"தேங்க்ஸ்" சொல்லிக் கொண்டே சிரித்தபடி போனை வாங்கியவளுக்கு குதூகலம் தாங்க முடியவே இல்லை...

அவன் வாங்கி கொடுத்த முதல் பரிசு...

அதுவும் விலை உயர்ந்த பரிசு...

பெட்டியை திறக்கும் முன்பு, "உள்ளுக்குள்ள டப்பா போனை வச்சு என்னை பிராங்க் பண்ண மாட்டீங்களே!" என்று கேட்க, அவனோ, "பிராங்க் பண்ண நான் என்ன பாரதியா?" என்று கேட்டான்.

அவளோ சிரித்துக் கொண்டே புது போனை பிரமிப்புடன் பார்த்தவள், அதில் மூழ்க ஆரம்பிக்க, அவனோ, "கொஞ்சம் வேலை இருக்கு... வெளியே கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான்...

முதல் நாள் அவள் எடுத்த முத்தமிடும் புகைப்படத்தை புது போனுக்கு இடம் மாற்றியவள் அதையே டிஸ்பிளேயில் வைத்து இருந்தாள்.

அவள் இதழ்கள் அதனை பார்க்கும் போதெல்லாம் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டன...

இப்படியே நாட்கள் நகர, வசுந்தராவுக்கு பிரசவ நாளும் வந்தது...

அவளுக்கு சொன்ன நாளுக்கு இரு நாட்கள் முன்னரே இடுப்பு வலி ஆரம்பிக்க, "நரேன்" என்று அப்போது தான் வேலை விட்டு வந்தவனை அழைத்தாள்.

"என்ன வசு?" என்று அவன் கேட்டுக் கொண்டே ஷேர்ட்டை கழட்ட, "எனக்கு பெயின் ஆஹ் இருக்கு... ஹாஸ்பிடல் போகலாம்" என்றாள்.

அவனும், "அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன்" என்று சொன்னபடி, "அம்மா" என்று அழைத்தவன் விடயத்தை சொல்ல, அவரோ, வசுந்தராவின் பிரசவத்துக்காக எடுத்து வைத்து இருந்த பொருட்களை வேலைக்கார பெண்ணிடம் தூக்கி காரில் வைக்கச் சொன்னவர், "சீக்கிரம் அழைச்சிட்டு வாடா கிளம்பலாம்" என்றார்...

நரேனோ, வசுந்தராவின் கையை பிடித்து எழ வைத்தவன், அவளை அழைத்துச் சென்று காரில் ஏற்றினான்...

செல்லதுரையோ, "நான் அடுத்த காரில் வரேன்... இதுல இடம் இல்லை... நீங்க கிளம்புங்க" என்று வேலைக்கார பெண் மற்றும் லக்ஷ்மியை கூட அனுப்பி வைக்க, அனைவரும் காரில் ஏறினார்கள்...

ஏறும் போது நரேனோ அவசரமாக சோபாவில் கிடந்த டீ ஷேர்ட்டை தான் அணிந்து இருந்தான்...

கீழே பேண்ட் போட்டு இருந்தான்...

காரில் ஏறிய வசுந்தராவுக்கு வலி தாங்க முடியவில்லை..

சீட் பெல்ட்டை போட போன நரேனோ சற்று நிறுத்தி, "கொஞ்சம் இரு வரேன்" என்று சொல்லிக் கொண்டே காரை திறந்தவன் மீண்டும் வீட்டினுள் நுழைய, "டேய் எங்கடா போற?? ஐயோ அம்மா" என்று கத்த ஆரம்பித்து விட்டாள் வசுந்தரா.

பின்னால் இருந்த லக்ஷ்மியோ, "ஏதும் முக்கியமான பொருளை விட்டு வந்து இருப்பான் போல, அதான் எடுக்க போறான்" என்று சொல்ல, அவனோ குட்டி ஷார்ட்ஸை போட்டுக் கொண்டே கையை விசுக்கி விசுக்கி வந்து காரில் ஏற, "என்னடி இவன்?" என்று லக்ஷ்மி வேலைக்காரியிடம் புலம்பிக் கொண்டார்.

மீண்டும் வந்து காரில் நரேன் ஏறியதும், "டேய் பேண்ட் எங்க?? அத கழட்டி போட தான் உள்ளே போனியா??" என்று வலியின் மத்தியில் வசுந்தரா திட்ட, "எப்போ குழந்தை பிறக்கும்னு தெரியாது... அது வரைக்கும் ப்ரீயா இருக்கணும்ல... அதான் ஷார்ட்ஸ் மாத்தினேன்" என்றான் அவன் கூலாக...

"மனுஷனா நீ??" என்று அவள் வாய்க்கு வந்ததை எல்லாம் திட்ட, "இங்க பாரு... பிரசவ வலின்னா அழுறது மட்டும் தான் உன் வேலை... நான் பேண்ட் போட்டேனா இல்லையான்னு செக் பண்ணுறது இல்ல உன் வேலை" என்று சொல்ல கையில் இருந்த பையால் அவனுக்கு அடிக்க ஆரம்பித்து விட்டாள்...

அவனோ, "வலிக்குதுடி" என்று கத்த பின்னால் இருந்த லக்ஷ்மியோ, "அவளை வெறுப்பேத்தாம வண்டியை எடுடா" என்று திட்டிய பின்னரே வண்டியை எடுத்தான்.

ஹாஸ்பிடலுக்கு வந்ததுமே, அவளை பரிசோதித்த வைத்தியர், "லேபர் பெயின் தான்" என்று சொன்னபடி அவளை பிரசவ அறைக்குள் மாற்ற, நரேனும் உள்ளேச் சென்று இருந்தான்...

அவளோ நரேனின் கையை இறுக பற்றி இருந்தாள். வலியை பொறுத்துக் கொள்ள முயன்றாள் முடியவே இல்லை...

சத்தம் போட்டு வலியில் கதறினாள்...

விடயம் கேள்விப்பட்டு வசுந்தராவின் பெற்றோர், பாரதி மற்றும் வசிஷ்டன் என நால்வரும் ஹாஸ்பிடலுக்கு விரைந்து இருந்தார்கள்...

வசுந்தராவோ கதறிக் கொண்டு இருக்க, நரேனுக்கும் சற்று பயமாக தான் இருந்தது...

நீண்ட போராட்டத்தின் பின்னர் அவள் ஆண் குழந்தையை ஈன்று எடுத்தாள்...

வைத்தியர் குழந்தையை தூக்கி நரேனிடம் கொடுக்க, நெகிழ்ச்சியாக குழந்தையை பெற்றுக் கொண்டவனோ சிரித்துக் கொண்டே வசுந்தராவின் மார்பில் படுக்க வைத்தான்...

வசுந்தராவும் குழந்தையை அணைத்துக் கொண்டே கண்ணீருடன் சிரித்துக் கொண்டாள்.

அங்கே நின்ற தாதிப் பெண்ணோ குழந்தையை தூக்கிக் கொண்டுச் சென்று சுத்தப்படுத்தும் வேலைகளில் ஈடுபட, உடல் நிலையை பற்றி வசுந்தராவிடம் வைத்தியர் விசாரித்துக் கொண்டே இருக்க, நரேனோ அங்கே அவனை பார்த்து அடிக்கடி சிரித்த தாதியை நோக்கி, "ஹாய்" என்று கையை காட்டினான்...

அந்த தாதியும், "ஹாய்" என்க, அவனோ, கையை காதில் வைத்து, "போன் நம்பர்" என்று சைகையால் கேட்டான்...

அந்த தாதியோ கண்களால் வசுந்தராவை காட்ட, அவனோ, சட்டென திரும்பி பார்க்க, வசுந்தராவோ அவனை முறைத்துக் கொண்டே படுத்து இருந்தாள்.

அதனைக் கண்டதும் அவன் கண்கள் விரிய, அவளை நோக்கிச் சென்றவன், "குழந்தை சம்பந்தமா ஏதும் சந்தேகம் கேட்க தான்" என்று சொல்ல, வசுந்தராவோ, "நம்பிட்டேன்டா உன்னை... நீ திருந்தவே மாட்ட" என்று கடுப்பாக திட்ட, அவனோ கண்களை சிமிட்டி சிரித்துக் கொள்ள, அவளுக்கும் சிரிப்பு தான் வந்தது...

சிறிது நேரத்தில் அவளை வார்டுக்கு மாற்றி இருக்க, குழந்தையை சுற்றி அனைவரும் மொய்த்து விட்டார்கள்...

வசிஷ்டன் அருகே நின்ற பாரதியோ, "ரொம்ப கியூட்டா இருக்கான்ல" என்று கேட்க, அதற்கும், "ம்ம்" என்ற பதில் அவனிடம் இருந்து...

"சரியான முசுடு" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டாள்.

வசுந்தராவை பார்த்து விட்டு அனைவரும் வீட்டுக்கு திரும்பி இருக்க, பாரதியோ குளித்து விட்டு படுக்க போர்வையை எடுத்தாள்.

"உனக்கு வன் வீக்ல பைனல் எக்ஸாம் ல" என்றான் வசிஷ்டன்...

"இன்னைக்கு மட்டும் தூங்குறேன்" என்று அவள் சிணுங்க, "எக்ஸ்கியூஸ் சொல்லாம வா" என்று அவன் அதட்டி அவளை படிக்க இருக்க வைத்தான்...

அவள் ஏமாற்றக் கூடும் என்பதால் அருகிலேயே அவனும் அமர்ந்து இருந்தான்...

அவளோ, 'ஐயோ பக்கத்துலயே உட்காந்துட்டாரே' என்று அவனுக்கு மனதில் திட்டிக் கொண்டே படித்தாள்.

ஒரு கட்டத்தில், "தூக்கம் வருது" என்று அவனிடம் சொல்ல, "மில்க் வேணுமா?" என்று கேட்டான்...

"எனக்கு தூங்க வேணும்" என்றாள் அவள்...

அவளை முறைத்தவன், "இப்போ படிக்க போறியா இல்லையா?" என்று மிரட்டலாக கேட்க, 'சரியான இம்சை' என்று மனதுக்குள் திட்டியவள், "எனக்கு இது புரியல" என்று சொன்னாள்.

அவனும், "கொடு சொல்லிக் கொடுக்கிறேன்" என்று சொல்ல, அவளும் புத்தகத்தை நீட்டினாள்...

அவன் அதனை விளங்க வைக்க முயல, "உங்க மடியில உட்காரவா?" என்று கேட்டாள். அவன் முறைத்துப் பார்க்க, அவன் பதிலை எதிர்பார்க்காமல், எழுந்து அவன் மடியில் அமர்ந்தே விட்டாள்.

அவனோ, பெருமூச்சுடன் கையில் புத்தகத்தை தூக்கியவன், "பாரதி, லிஸின்" என்று ஆரம்பித்து விளக்கம் சொல்லிக் கொடுக்க, அவளோ, அப்படியே அவன் கழுத்தை கட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டு இருந்தவள், அவன் மார்பில் தூங்கி இருந்தாள்.

சிறிது நேரத்தில், "பாரதி பாரதி" என்று அழைக்க, அவளோ எழும்பவே இல்லை...

குனிந்து அவளை பார்த்தவன், சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டிக் கொண்டே கையில் இருந்த புத்தகத்தை மேசையில் வைத்து விட்டு அவளை அள்ளி அணைத்து தூக்கிக் கொண்டான்.

அவளை கட்டிலில் படுக்க வைத்தவன், அவள் நெற்றியில் முத்தம் பதித்து, நாசி தீண்டி இதழ்களை நெருங்க, அவள் இதழ்கள் தானாக குவிந்தது...

அவனுக்கு கண்களை மூடிக் கொண்டே இதழ்களை குவித்தவளை பார்க்க சிரிப்பு வந்தது...

"இதுக்கு மட்டும் தூக்கம் வராதோ" என்று கேட்க, சட்டென இதழ்களை இயல்பாக்கிக் கொண்டவள் தூங்குவது போல பாசாங்கு செய்தாள்.

அவனோ அவளை ஏங்க வைக்காமல் அவள் முகம் நோக்கி குனிந்து அவள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருந்தான்.

இப்படியே நாட்கள் நகர, அவளது இறுதி பரீட்சை நாட்களும் வந்து சேர்ந்தது...

கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி, படிக்க சலித்துக் கொள்பவளை படிக்க வைக்க அவன் தான் படாத பாடு பட்டான்...

பரீட்சையை முடித்து வந்ததுமே, "எப்படி எக்ஸாம்?" என்று அவளை குடைய, அவளோ, "முடிஞ்சது முடிஞ்சு கதம் கதம்" என்று சொல்லி அவனிடம் இருந்து தப்பி ஓடி விடுவாள்...

செமெஸ்டரின் கடைசி பரீட்சைக்கான நாளும் நெருங்கி இருந்தது...

வசிஷ்டன் குளித்துக் கொண்டு இருந்தான்...

பாரதியோ, 'இன்னைக்கு பிட்டு தான், வேற வழி இல்ல' என்று நினைத்தபடி, பிட்டை மடித்து உடைக்குள் வைத்துக் கொண்டாள்.

அவளோ ஷேர்ட்டும் ப்ரெக்னங்சி ஜீன்சும் அணிந்து இருக்க, ஷேர்ட்டினுள் தான் பிட்டுகளை சொருகி இருந்தாள்.

அவள் இந்த வேலையில் மும்முரமாக இருக்க, குளித்து விட்டு வந்த வசிஷ்டனை கவனிக்கவே இல்லை...

அவனோ அவள் பின்னால் வந்து நின்று அவள் செயலை உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருந்தான்...

'அப்பாடா, எல்லா பிட்டும் எழுதியாச்சு' என்று நினைத்துக் கொண்டே திரும்பியவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

"ஐயையோ" என்று அவள் இதழ்களை அசைக்க, "என்ன பண்ணுற?" என்று கேட்டான் வசிஷ்டன்...

"ஒண்ணும் இல்லையே" என்று சொல்லிக் கொண்டே அவள் "ஹி ஹி" என்று சிரித்தபடி எழுந்து நிற்க, அவனோ, "எடு" என்று கையை நீட்டினான்...

"நான் தான் இல்லன்னு சொல்றேன்ல" என்று அவள் சொல்ல, "நீ எடுக்கலன்னா நான் எடுப்பேன்" என்றான் அவன்...

"ஓகே பைன் எடுத்து காட்டுங்க" என்று சொல்லிக் கொண்டே அவனை இடையில் கையை குற்றியபடி பார்க்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன், "நான் லெக்சரர் மட்டும் இல்லை, உன்னோட புருஷனும் கூட" என்று சொல்லிக் கொண்டே, அவளை நெருங்கியவன் அவள் கதற கதற அனைத்து பிட்டையும் வெளியே எடுத்து விட்ட பின்னர் தான் அவளை விட்டான்.

அவனை முறைத்துக் கொண்டே ஷேர்ட் பட்டனை மூடியவள், "நான் பெயில் ஆனா நீங்க தான் காரணம்" என்று திட்டினாள்...

"நான் என்னடி காரணம்? நீ படிக்கல... அதான் காரணம்" என்று சொன்னான்...

"என்னை பார்க்க பாவமா இல்லையா?" என்று கேட்டவளிடம், "இல்லை" என்று பதில் சொன்னான்...

"க்கும்" என்று இதழ்களை சுளித்தவள், "சீக்கிரம் வாங்க, எக்ஸாமுக்கு லேட் ஆகுது" என்று சொல்லிக் கொண்டே கட்டிலில் அமர அவனும் காலேஜ் செல்ல ஆயத்தமானான்...

காலேஜ் முன்னே கார் நின்றதுமே, "இன்னைக்கு தான் காலெஜ் லாஸ்ட் டே... உங்கள போல லெக்சரர்ஸ் தொல்லை இல்லன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு... ஆனா பிரெண்ட்ஸை பிரியுறதை நினைச்சா கஷ்டமா இருக்கு" என்றாள்.

"நாங்க உனக்கு தொல்லையா?" என்று கேட்டுக் கொண்டே அவன் காரில் இருந்து இறங்க, அவளும், "கண்டிப்பா" என்று சொல்லிக் கொண்டே இறங்கிக் கொண்டாள்.

அவன் முன்னே நடக்க அவள் பின்னே நடக்க, முன்னால் வந்த அவளது நண்பன் தினேஷோ, "பாரதி, புது போனோட டி.பி சூப்பர்" என்றான் வசிஷ்டனுக்கு கேட்கும் குரலில்...

அவன் பேசியதை கேட்டு அதிர்ந்து விழி விரித்த பாரதியோ, வாயில் கையை வைத்து, "பேச வேண்டாம்" என்று தினேஷிடன் சைகை செய்ய, அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டே அவளை கடந்துச் செல்ல, முன்னே சென்ற வசிஷ்டனோ இருவரையும் சட்டென திரும்பி பார்த்தான்...

பாரதியோ, "சும்மா ஏதோ" என்று சமாளிக்க, அவன் எதுவும் பேசவில்லை...

"எக்ஸ்ஸாமை ஒழுங்கா எழுது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்...

அவளும் எக்ஸாம் ஹாலினுள் நுழைந்து ஏதோ தெரிந்தது எல்லாம் எழுதி இறுதி எக்ஸாம் பேப்பரை முடித்து இருந்தாள்.
 
Top