ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 22

pommu

Administrator
Staff member
மழை 22

"உனக்கு போன் தான் இப்போ முக்கியமா? கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே இல்லையா? ஒரு போன் பண்ணி சொன்னா தான் என்ன?" என்று சீறினான்...

சரியாக தான் பேசுகின்றான்...

என்ன பதில் சொல்வது என்று அவளுக்கும் தெரியவே இல்லை...

"அண்ணா கூட போறேன்னு சொன்னா விட்டு இருப்பீங்களா? அஞ்சு மணிக்கு முதல் வந்துடலாம்னு தான் போனேன்... லேட் ஆயிடுச்சு..." என்றாள்...

அவன் அனல் பார்வையை பார்க்க அவளுக்கு சற்று பயமாக தான் இருந்தது...

ஆனாலும் அவன் விழிகளை தான் பார்த்து இருந்தாள்.

"சிம்பிள் ஆஹ் லேட் ஆய்டுச்சுன்னு சொல்ற... பைத்தியகாரன் போல காலேஜ் முழுக்க தேடுனேன் தெரியுமா? எனக்கு பிடிச்ச தலைவலி நீ... நான் இப்படியே இல்ல... உன்னால தான் இப்படி ஆயிட்டேன்… என் கிட்ட எதுவுமே உனக்கு சொல்ல தோணாதுல... ப்ரெக்னன்ட் ஆனதை கூட சொல்லல நீ... அப்போ எதுக்குடி நான் புருஷன்னு சொல்லிட்டு" என்று ஆதங்கமாக வந்தது அவனது வார்த்தைகள்...

அவன் திட்ட திட்ட அவளுக்கு கண்கள் கலங்கியது...

ஆனால் அழவில்லை...

அடக்கிக் கொண்டு நின்று இருந்தாள்.

"ஆஹ் நான் உங்களுக்கு தலைவலின்னா டைவர்ஸ் பண்ணிட்டு நிம்மதியா இருக்க வேண்டியது தானே... உங்கள யார் இப்போ மாற சொன்னாங்க? எல்லாமே நீங்க பண்ண வேண்டியது பழியை மட்டும் என் மேல போட வேண்டியது, அன்னைக்கும் இப்படி தான்... ஏதோ நான் மயக்குன போல என்னை அசிங்கமா பேசுனீங்க..." என்று சொன்னவளது ஒற்றைக் கண்ணில் இருந்து நீர் வழிய சட்டென்று துடைத்துக் கொண்டாள்.

அவள் கண்ணீரை கண்டதும் சற்று நிதானம் அடைந்தான்... அவள் வார்த்தைகளும் அவனுக்கு என்னவோ போல இருந்தது...

திட்ட வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே, "ஓகே லீவ் தட்... ஆனா இன்னைக்கு நீ பண்ணுனது தப்பு தான்... உன் அண்ணா கூட எங்கயாவது போ... ஆனா சொல்லிட்டு போ" என்று சொல்ல, அவனை முறைத்தவள், "இனி எங்க போறது? அது தான் போன் போச்சே... இனி எப்படி நான் பேசுவேன், எப்போ பார்த்தாலும் போனை உடைக்க வேண்டியது..." என்று அவனுக்கு திட்டிக் கொண்டே டவலை எடுத்தவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.

அவனோ பெருமூச்சுடன் உடைத்த போனில் இருந்த சிம்மை எடுத்து வெளியே வைத்தவன், போனை தூக்கி குப்பை கூடைக்குள் போட்டு விட்டு கட்டிலில் அமர்ந்துக் கொண்டான்...

குளித்து விட்டு அவன் முன்னே நின்று அவனுக்கு வாய்க்குள் திட்டி திட்டியே உடையை மாற்றிக் கொண்டு இருந்தாள்.

அவன் அவளையே பார்த்து இருந்தான் தவிர எதுவும் பேசவே இல்லை...

அவள் கண்ணில் இருந்து அடிக்கடி கண்ணீர் வழிந்தது...

துடைத்துக் கொண்டாள்.

அன்று பேசியது இன்று வரை அவளுக்கு வலிக்கின்றது என்று அவனுக்கு புரிந்தது...

வார்த்தைகளை விட்டு விட்டான்...

மன்னிப்பை தவிர அவனால் என்ன தான் பண்ணிவிட முடியும்...

இதுவரை மன்னிப்பு அவளிடம் கேட்டது இல்லை...

இன்று கேட்க வேண்டும் என்று தோன்றியது...

"பாரதி" என்று அழைத்தான்...

அவன் எடுத்து வைத்து இருந்த சிம்மை அவன் ஏற்கனவே கொடுத்து இருந்த பட்டன் போனில் போட்டுக் கொண்டே அவனை திரும்பி பார்த்தவள், "இப்போ என்ன? அடுத்த சண்டை போடணுமா?" என்று கேட்டாள்.

"சாரி" என்றான் சுவற்றை பார்த்துக் கொண்டு...

அவளுக்கு அது இன்னுமே கடுப்பானது...

முகத்தை பார்த்து மன்னிப்பு கேட்க கூட முடியாதா என்கின்ற கடுப்பு அவளுக்கு...

"சுவர் கிட்ட பேசிட்டு இருக்கீங்களா?" என்று கேட்டுக் கொண்டே போனில் சிம்மை போட்டு போனை ஆன் செய்தாள்.

அவளை சட்டென்று திரும்பி முறைத்தவன், "உன் கிட்ட தான் கேட்டேன்" என்றான்...

கையில் இருந்த போனை மேசையில் வைத்து விட்டு அவனை நோக்கி வந்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவனை பார்த்தவள், "அத மூஞ்சை பார்த்து கேக்கணும்... இப்படி சுவத்தை பார்த்து சாரி கேட்க கூடாது" என்று கடுப்பாகச் சொல்ல, பெருமூச்சுடன் எழுந்து அவள் முன்னே நின்றவன் அவள் கண்களை பார்த்துக் கொண்டே, "அன்னைக்கு பேசுனதுக்கு சாரி... எதுவும் மீன் பண்ணி பேசல... வாயில வந்திடுச்சு" என்றான்...

அவனை முறைத்தவள், "பேசுறதெல்லாம் பேசிட்டு, மீன் பண்ணி இறால் பண்ணினு சொல்ல வேண்டியது" என்று திட்டிக் கொண்டே, நேரத்தை பார்த்தவள், "எனக்கு பசிக்குது" என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென வெளியேற, அவனும் பெருமூச்சுடன் சாப்பிடச் சென்றான்.

சாப்பிட்டு முடியும் வரை இருவரும் பேசிக் கொள்ளவும் இல்லை...

பார்த்துக் கொள்ளவும் இல்லை.

மீண்டும் அறைக்குள் நுழைந்ததுமே, நேரத்தை பார்த்தாள். மணி ஒன்பது தான்...

"எனக்கு பத்து மணிக்கு தான் தூக்கம் வரும்... போன் வேற இல்லை... இப்போ நான் என்ன பண்ணுறது?" என்று புலம்பிக் கொண்டே போர்வையை எடுத்தாள்.

"தூக்கம் வரலைன்னா படி" என்றான் அவன்...

அவனை முறைத்து விட்டு, கட்டிலில் போர்த்தியபடி படுத்தாள்.

அவனும் லைட்டை ஆப் செய்து விட்டு படுத்தான்...

நைட் லைட் மட்டும் எரிந்துக் கொண்டு இருக்க, அவனோ விட்டத்தை பார்த்துக் கொண்டு படுத்து இருக்க, அவளோ அவன் பக்கம் தான் திரும்பி படுத்து இருந்தாள்.

இருவருமே தூங்கவில்லை...

பேசிவிட்டதால் என்னவோ மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்த உணர்வு...

அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளோ, "சாரி" என்றாள்.

அவன் விட்டத்தை பார்த்தபடியே, "ம்ம்" என்றான்...

"எதுக்குன்னு கேட்க மாட்டீங்களா?" என்று அவள் கேட்க, "சொல்றதுன்னா சொல்லு" என்றான்...

"ரொம்ப தான்" என்று முணுமுணுத்தவளோ, "ப்ரெக்னன்ட் ஆனதை சொல்லாததுக்கு ஒரு சாரி... இன்னைக்கு கால் பண்ணி சொல்லாததுக்கு இன்னொரு சாரி" என்றாள்.

அவன் பதில் பேசவில்லை...

ஆழ்ந்த மூச்சை விட்டபடி அப்படியே படுத்து இருந்தான்...

"ஏதாவது பேச வேண்டியது தானே" என்றாள் கடுப்பாக...

"பேசுறதுக்கு என்ன இருக்கு? ஓகேன்னு சொல்றத தவிர என்ன சொல்லிட முடியும்?" என்று கேட்டான்...

வாஸ்தவமான கேள்வி தான்...

ஆனால் ஏதாவது சொல்வான் என்கின்ற எதிர்பார்ப்பு அவளிடம் இருந்ததால் என்னவோ அவளுக்கு ஏமாற்றத்தை தவிர்க்க முடியவே இல்லை.

அவனை பார்த்தபடியே அவனை நோக்கி நகர்ந்தவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்...

அவளை திரும்பி பார்த்தவன் அவள் தாடையை பிடித்து அவள் இதழில் அழுத்தமாக இதழ் பதித்து இருந்தான்...

அவளோ இதனை கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை...

அவள் விழிகள் மேலும் விரிய, அவன் முத்தம் நீண்டு கொண்டே போனது...

அவன் சிகைக்குள் கை கோர்த்து நெரித்தபடியே கண்களை மூடிக் கொண்டாள் பெண்ணவள்...

அவன் கை அவள் ஆடையில் பதிய, சட்டென்று பிடித்துக் கொண்டபடி அவன் இதழில் இருந்து இதழை பிரித்து எடுத்தாள்.

அவன் கேள்வியாக பார்க்க, "நாளைக்கு ஏதும் கான்பெரன்ஸ் இருக்கா?" என்று கேட்டாள்.

பழைய காயத்தில் உண்டான வலியின் பிரதிபலிப்பு...

அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...

சட்டென அவள் இதழில் அழுந்த முத்தம் பதித்து, "அன்னைக்கு பேசுனது என் தப்பு தான்... தூங்கு" என்றபடி விலக, அவன் கையை பிடித்தவள், "நான் வேணாம்னு சொல்லவே இல்லையே" என்றாள்.

"மறுபடி பேசிடுவேன்னு பய படுற தானே... சோ தேவல..." என்றான் அழுத்தமாக...

"இப்படி எல்லாத்துக்குமே கோபப்பட்டா என்ன பண்ணுறது? அன்னைக்கு பேசுனது ஹேர்ட் ஆச்சு" என்றாள் அவள்...

அவனோ அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே, "அதுக்கு தான் இத்தனை நாள் பேசாம இருந்த... ப்ரெக்னன்ட் ஆனதை சொல்லாம இருந்த... இன்னைக்கு சொல்லாம வெளியே போன... இதுக்கு மேலயும் என்னை பனிஷ் பண்ணனும்னா பண்ணு... எப்போ நீ அந்த பீலிங்ல இருந்து வெளியே வர்றியோ அன்னைக்கு பார்த்துக்கலாம்" என்றான்...

அவன் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவள், "இதெல்லாம் உங்களுக்கு பனிஷ்மென்ட் ஆஹ் பீல் ஆச்சா? இல்லை தானே... ஜாலியா தானே இருந்தீங்க" என்றாள்.

"நான் ஜாலியா இருந்ததை நீ பார்த்தியா?" என்றான் எரிச்சலாக...

"எனக்கு தோணிச்சு" என்றாள்.

"அப்போ நீ என்னை சரியா கவனிக்கலன்னு அர்த்தம்" என்றவன் திரும்பி மறுபக்கம் படுக்க போக, அவன் கையை பற்றியவள், "பேசிட்டு இருக்கேன்ல... எதுக்கு மத்த பக்கம் திரும்பி படுக்குறீங்க?" என்று கேட்டாள்.

"பேசுனா சண்டை வரும்... சோ தூங்கலாம்" என்றான்...

அவளோ, "பேசுனா தானே சண்டை வரும்" என்று கேட்டுக் கொண்டே, அவன் இதழில் எம்பி இதழ் பதிக்க, மீண்டும் மௌனம் அரங்கேறியது...

ஊடல் முடிந்து ஒரு கூடல்...

வழமையாக இருக்கும் வேகம் அவனிடம் இல்லை...

கர்ப்பமான பெண் அல்லவா?

கண்ணாடி பாத்திரம் போல கையாண்டான்...

அவள் காதில் முத்தம் பதித்து, "வலிச்சா சொல்லுடி" என்றான்...

"ம்ம்" என்று முனகியபடி அவனுள் அடைக்கலமானாள் பெண்ணவள்...

அடுத்த நாள் அவன் நேரத்துக்கே எழுந்து ஜிம் எல்லாம் முடித்து குளித்து விட்டு வந்த பின்னரும் அவள் தூங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

போர்வைக்குள் உடலை குறுக்கி படுத்து இருந்தவளை பார்க்க பாவமாக இருந்தாலும் நேரம் போய்க் கொண்டு இருக்க, எழ வைக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு...

அவள் அருகே அமர்ந்தவன், "பாரதி" என்று அழைத்தான்...

சிறு முனகலுடன் திரும்ப தூங்க தொடங்கினாள்...

"காலேஜுக்கு லேட் ஆயிடுச்சு எந்திரி" என்றான்...

அவளோ, "எனக்கு தூக்கம் தூக்கமா வருது... நைட் நீங்க தான் தூங்க விடல" என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள்...

குரலை செருமியவன், "பொய் சொல்லாதே... நான் உன்னை பதினோரு மணிக்கே தூங்க விட்டேன்... எய்ட் ஹவர்ஸ் தூக்கம் போதாதா உனக்கு?" என்று கேட்டான்...

அவளோ மனதுக்குள், "நிம்மதியா தூங்க கூட முடியல" என்று சிணுங்கி விட்டு, "இன்னைக்கு நான் காலேஜ் லீவு" என்றாள்.

"விளையாடுறியா நீ? சும்மா சும்மா கட் அடிச்சா எப்படி படிப்ப?" என்று கேட்க, "அது தான் நீங்க இருக்கீங்களே" என்று ஒரு பதில்...

எதிலும் நேர்த்தியாக இருப்பவனுக்கு கோபம் வந்தது...

ஆனாலும் சண்டையில் முடிந்து விடும் என்று அடக்கிக் கொண்டே, "அட்டெண்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ண மாட்டியா?" என்று கடுப்பாக கேட்டான்...

"சைன் வைக்க எல்லாம் ஆட்கள் இருக்காங்க" என்று அவள் கண்களை மூடிக் கொண்டே உளறி விட, "வாட்?" என்றான் அதிர்ச்சியாக...

அவள் விழிகளோ இப்போது சட்டென்று திறந்துக் கொண்டது...

விரிவுரையாளர்களுக்கு தெரியாமல் அரங்கேறும் திருகுதாளம் அல்லவா இது?

அவனுக்கு முதுகு காட்டி படுத்தபடியே திரு திருவென விழித்தவள், "ஓட்டை வாய் பாரதி" என்று தனக்கு தானே திட்டிக் கொண்டே எழுந்து அமர்ந்துக் கொண்டே அவனை பார்த்து சிரித்தவள், "இதோ ரெடி ஆயிடுறேன்" என்றபடி எழ, அவள் கையை எட்டி பிடித்தவன், "யார் உனக்காக சைன் பண்ண போறது?" என்று அழுத்தமாக கேட்டான்...

அவளோ, "யாரும் இல்லையே" என்றாள் வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி...

"பொய் சொல்லாதடி" என்றான் அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே.

"நான் பொய் சொல்லலையே... இன்னைக்கு நான் போனா யாருமே எனக்கு சைன் பண்ண மாட்டாங்களே" என்றாள்.

"ஐ க்னோ அந்த நாலு வானரங்கள்ல ஒன்னு தான் இப்படி பண்ணும்" என்றான் எரிச்சலாக...

"என் பிரெண்ட்ஸ் உங்களுக்கு வானரங்களா?" என்று அவள் எகிற, "ஆமா அப்படி தான் சொல்லுவேன்" என்றான்...

அவளோ, "இங்க பாருங்க மறுபடி மறுபடி இப்படி சொன்னீங்க நடக்கிறது வேற" என்றாள்.

"என்னடி பண்ணுவ? நான் அப்படி தான் சொல்லுவேன்... உன் பிரெண்ட்ஸ் எல்லாம் வானரங்க... நீயும் அதுல ஒண்ணு" என்று முடிக்கவில்லை, எம்பி அவன் இதழில் இதழ் பதித்து இருந்தாள் அவள்...

அவனுக்கு பல் விலக்காமல் முத்தமிட்டால் பிடிக்காது... அது தெரிந்தே முத்தமிட்டாள்...

அவள் தோள்களை பிடித்து எட்ட நிறுத்தியவன் தனது இதழ்களை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவளை முறைத்து பார்த்தவன், "பிரஷ் பண்ணாம கிஸ் பண்ணுனா பிடிக்காதுன்னு தெரியும்ல" என்றான்.

அவளோ டவலை எடுத்துக் கொண்டே, "என் பிரெண்ட்ஸை தப்பா பேசுனா டெய்லி பண்ணுவேன்" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் நுழைய, அவள் முதுகை வெறித்துப் பார்த்தான் வசிஷ்டன்...

இதே சமயம், "நரேன் எத்தனை தடவை ப்ரஷ் பண்ணாம கிஸ் பண்ணாதேன்னு சொல்லி இருக்கேன்" என்று எகிறி கொண்டு இருந்தது வேறு யாருமல்ல வசுந்தரா தான்... நிறைமாத கர்ப்பிணியான அவளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் வளைகாப்பு ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்...

அன்று தூங்கிக் கொண்டே இருந்த நரேனை வலுக்கட்டாயப்படுத்தி எழுப்பியதன் விளைவு அவளை முத்தத்தில் மூழ்க வைத்து இருந்தான் அவன்...

அதுவும் பற்களை விலக்காமல்...

அவளை கேட்கவும் வேண்டுமா? அவனுக்கு திட்ட ஆரம்பித்து விட்டாள்.

"சும்மா இருடி" என்று மீண்டும் முத்தமிட்டு குளியலறைக்குள் நுழைந்தவன் திரும்ப வந்த போதும் திட்டிக் கொண்டு இருந்தாள்.

அவனோ விசிலடித்துக் கொண்டே உடையை மாற்ற, அவன் போன் அலறியது...

அவன் எடுக்க முதல் எட்டி அதனை எடுத்தவள், "இது யாரு கீதா?" என்று கேட்டாள்.

அவனோ யோசித்துக் கொண்டே, "தெரியல வசு... ரிஸீவ் பண்ணு, யாருன்னு பார்ப்போம்" என்றான்.

அவள் ஏற்கனவே கடுப்பாக இருந்தவள், போனை ஆன் செய்து லவுட் ஸ்பீக்கரில் போட, "ஹெலோ சார், நான் தான் கீதா" என்றாள் ஒரு பெண்...

அவனோ, "எந்த கீதா?" என்று கேட்க, "அன்னைக்கு புடவை கடைல பார்த்தீங்களே அந்த கீதா" என்றாள்.

அவனுக்கு நிஜமாக நினைவே இல்லை...

ஆனாலும், "ஓஹ் நீயா சொல்லு" என்றாள்.

உடனே வசுந்தரா முறைத்துப் பார்க்க, அவனோ கண்களை சிமிட்டி, "யாருன்னே தெரியல" என்று சைகை செய்தான்...

அந்த பெண்ணோ, "நீங்க அன்னைக்கு செலெக்ட் பண்ணி கொடுத்த புடவையை பார்த்து என் ஹஸ்பண்ட் மயங்கிட்டார் சார்... இன்னைக்கும் எனக்கு ஒரு புடவை செலெக்ட் பண்ணி கொடுக்க வர்றீங்களா?" என்று கேட்டு முடிக்கவில்லை...

"யூ இடியட், என் ஹஸ்பண்ட் உனக்கு புடவை செலக்ட் பண்ணி கொடுக்கணுமா?" என்று வசுந்தரா திட்ட, "அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்று அந்த பெண் கேட்க, வசுந்தராவுக்கு கோபம் வந்து விட்டது...

தாறு மாறாக திட்ட ஆரம்பித்து விட்டாள். மறுமுனையில் போன் கட் ஆக, வசுந்தராவோ போனை தூக்கி போட்டு விட்டு, "நரேன்" என்றாள்.

அவனோ நமட்டு சிரிப்புடன் திரும்பியவன், "இப்போ என்ன?" என்று கேட்டான்...

"ஒரு பொண்ண விட்டு வைக்க மாட்டியா நீ?" என்று கேட்க, "பேசுறது தப்பா என்ன?" என்று தோள்களை உலுக்கியபடி கேட்டான்...

"தப்பில்ல ஆனா" என்று சொல்லிக் கொண்டே தலையை ஒரு கணம் பிடிக்க, அவனோ அவள் இடையில் கையை வைத்து மறுபக்கம் திருப்பி, அவள் கழுத்தில் முகம் புதைத்தவன், "டிலிவெரியை நினைக்க பயமா இருக்கா?" எனறு கேட்டான்...

"ம்ம்" என்று முனகலுடன் பதில் வந்தது...

"பீல் பண்ணாதே... நான் இருக்கேன்ல" என்றான்...

"எனக்கு ஏதும் ஆச்சுன்னா என்ன பண்ணுவ?" என்று அவள் கேட்க, அவனோ, "ம்ம், வேற கல்யாணம் பண்ணி ஜாலியா இருப்பேன்" என்று முடிக்கவில்லை, அவன் கையை உதறி விட்டு அவனை திரும்பி முறைத்து பார்த்தவள், "என்ன பேச்சுடா பேசுற?" என்று திட்டினாள்...

அவனோ சத்தமாக சிரித்தபடி, "மறுபடி இதே கேள்வி கேட்டா இத விட கேவலமா ஒரு பதில் சொல்வேன்" என்றான்...

வசுந்தராவோ, "என் தப்பு தான்... உன் கிட்ட செண்டிமெண்ட் ஆஹ் பேசுனது என் தப்பு தான்... முதல்ல வேலைக்கு கிளம்பு" என்று அவனை வழியனுப்ப போக, அவனோ அவள் கழுத்தை பிடித்து அவள் இதழில் இதழ் பதித்தவன், "கண்டதை யோசிச்சு டென்ஷன் ஆகாதே... அம்மா கூட பேசு, தனியா இருக்காதே" என்றான்...

அவளும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து இருந்தாள்.
 
Top