மழை 17
குளித்து விட்டு வந்தவள் அவனை பார்க்காமலே படுத்து தூங்கிப் போனாள். அவளை பார்த்துக் கொண்டே இருந்தவனுக்கு தான் தூக்கம் வர தாமதமானது...
அடுத்த நாள் காலையில் எழுந்தவன் கைகளோ தன்னையும் மீறி அவளை ஐந்து மணிக்கே எழுப்பச் சென்றது... சட்டென கைகளை மூடி தன்னை அடக்கிக் கொண்டே ட்ராக் ஷூட்டை போட்டுக் கொண்டு வெளியேறி இருந்தான்...
அவன் திரும்பி வந்த போதும் அவள் கண் விழிக்கவில்லை...
குளித்து விட்டு வந்த நேரம் தான் கண் விழித்தபடி கட்டிலில் அமர்ந்து இருந்தவள், அவனை பார்த்து, "குட் மார்னிங்" என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்...
அவனோ அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே உடைமாற்றும் அறைக்குள் நுழைய, "ரொம்ப தான்" என்று கழுத்தை நெடித்துக் கொண்டே குளிக்கச் சென்றாள்.
அவனோ அங்கே அமர்ந்து லேப்டாப்பை பார்த்துக் கொண்டு இருந்தான்...
அவளும் குளித்து ஆயத்தமாகி வர, சாப்பிட்டு விட்டு இருவரும் கல்லூரிக்கு கிளம்பி விட்டார்கள்...
அவன் அவளுடன் பேசக் கூட இல்லை...
கல்லூரி முடிய அழைத்து வருவான் வீட்டுக்கு...
அவனோ லேப்டாப்பில் படிக்க அமர்ந்து விட, அவளோ வீட்டில் இருப்பதை போல பாட்டு, கொரியன் ட்ராமா என்று இருப்பாள்...
அவனுக்கு கடுப்பாக வரும்...
"படிடி" என்று திட்ட வேண்டும் போல இருக்கும்...
ஆனால் சொல்லும் நிலையில் அவன் இருக்கவில்லை...
மௌனமாக இருப்பான்...
இப்படியே நாட்கள் நகர, ஒரு நாள் இரவு வசிஷ்டன் லேப்டாப்பின் முன்னால் இருந்து நோட்ஸ் தயாரித்துக் கொண்டு இருந்தான்...
மார்பில் பூந்தூவளையுடன் குளித்து விட்டு வந்தாள் பாரதி...
அவள் இப்படி அரைகுறையாக வருவதே இல்லை...
அவளை கண்டதுமே அவன் விழிகள் அதிர்ந்து விரிய, அவளோ கட்டிலில் கிடந்த உடையை எடுத்து போட ஆயத்தமானாள்...
"ஹேய் ட்ரெஸ்ஸிங் ரூம்ல போய் மாத்த வேண்டியது தானே" என்றான் கடுப்பாக...
அவனை திரும்பி பார்த்தவள், "நான் இங்க ட்ரெஸ் சேன்ஜ் பண்ணுறதுல என்ன பிரச்சனை?" என்று கேட்க, அவனோ, "கூச்சமே இல்லையா?" என்று கடுப்பாக கேட்டான்...
"நமக்கு பெர்ஸ்ட் நைட் முடிஞ்சுதுன்னு மறந்துடீங்களா சார்?" என்று அவள் ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்க, அவளுக்கு வாய்க்குள் திட்டிக் கொண்டே லேப்டாப்பை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
அவன் கண்கள் அவன் பேச்சை கேட்கவே இல்லை... தன்னையும் மீறி அவளில் படிய, இதழ் குவித்து ஊதிக் கொண்டான்...
ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் உணர்வுகளை எல்லாம் கட்டுப்படுத்த முடியவே இல்லை...
லேப்டாப்பை மூடி விட்டு விறு விறுவென வெளியேறி இருந்தான்...
ஹாலில் சென்று சோபாவில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தான்...
"இந்த அவஸ்த்தை எத்தனை நாளுக்கோ?" என்று அவன் மனம் அவனிடமே கேட்டுக் கொண்டது...
அவளை திருமணம் செய்த நேரம் நெருங்கவில்லை...
அவனுக்கு காதலும் அந்நேரம் இருக்கவில்லை...
அவன் நெருங்கி இருக்கின்றான் என்றான் அவள் வலையில் விழ ஆரம்பித்து விட்டான் என்று அர்த்தம்...
அதனை அவனால் ஏற்றுக் கொள்ள தான் முடியவே இல்லை...
அனைத்திலும் கட்டுப்பாடாக இருப்பவனுக்கு இப்போது அதெல்லாம் மலையை பிளக்கும் வேலையாக இருந்தது...
நெற்றியை அழுந்த தேய்த்துக் கொண்டே அப்படியே இருந்தவன், நீண்ட நேரம் கழித்து தான் அறைக்குள் நுழைந்தான்...
அவளோ பைஜாமா ஷேர்ட் அணிந்து, இருக்கையில் சாய்ந்து இருந்து போன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவனோ சலிப்பாக தலையை ஆட்டி விட்டு மீண்டும் லேப்டாப் முன்னாடி அமர்ந்தான்...
பாரதியோ பேஸ்புக் ஸ்டேட்டஸை "மேரீட்" என்று மாற்றியவளோ, தான் மட்டும் இருக்கும் ப்ரொபைல் பிக்ச்சரை பார்த்தாள்.
'ஒரு கப்பில் போட்டோ போடுவோம்' என்று நினைத்தவளுக்கு அப்போது தான் புரிந்தது ஒரு செல்பீ கூட இதுவரை வசிஷ்டனுடன் எடுத்தது இல்லை என்று...
திருமண புகைப்படமும் நரேன் வாங்கிக் கொடுத்த அவளது புது போனில் இருக்கவே இல்லை...
குனிந்து போட்டிருந்த ஷேர்ட்டை பார்த்தாள்...
போட்டோ எடுக்க கூடிய போல தான் இருந்தது...
அவன் டீ ஷேர்ட்டை பார்த்தாள்...
அதுவும் திருப்தியாக இருந்தது...
போனுடன் எழுந்தவளோ அவனை நோக்கிச் சென்று, அவன் அருகே நிற்க, அவனோ, "வாட்?" என்றான் அவளை பார்க்காமல்...
"செல்பீ ஒண்ணு எடுக்கணும்" என்றாள்.
அவனோ, "ஐ ஆம் நாட் இன்ட்ரெஸ்ட்டேட்" என்றான்...
"பட் ஐ ஆம் இன்ட்ரெஸ்ட்டேட்" என்றாள்.
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? போய் தனியா எடுத்துக்கோ" என்று சொல்ல, அவளோ, "ஹெலோ கப்பில் போட்டோ எல்லாம் தனியா எடுக்க முடியாது" என்றாள்.
அவளை எரிச்சலாக பார்த்தவன், "இப்போ நான் என்ன பண்ணனும்?" என்று கேட்க, "போட்டோ எடுக்க வரணும்" என்றாள்.
"முடியாது" என்றான்.
"போட்டோ எடுக்கிறதால இப்போ என்ன குறைஞ்சிட போகுது?" என்று கேட்டவளிடம், "விருப்பம் இல்லன்னா விடேன்" என்றான்...
"உங்கள போர்ஸ் பண்ண கூடாதுன்னு தெரியுது... ஆனா ஒரு போட்டோ எடுக்க வரலாம்ல" என்றாள் சற்று கெஞ்சுதலாக...
"எடுத்து தொலை" என்று சொல்லி அடுத்த கணமே அவன் மடியில் அமர்ந்து விட்டாள்.
"ஏய் என்ன பண்ணுற?" என்று அவன் சீற, "போட்டோ க்ளோஸ் ஆஹ் எடுக்க வேணாமா?" என்று கேட்டாள்.
"க்ளோசாவா?" என்று அவன் ஒரு மார்க்கமாக கேட்க, "நீங்க நினைக்கிற போல இல்ல, கன்னத்தோட கன்னம் வச்சு எடுக்கலாம்" என்று சொன்னவள், ஒற்றைக் கையால் அவன் கழுத்தை வளைத்து பிடித்துக் கொண்டே, அடுத்த கையில் போனை பிடித்தபடி அவன் கன்னத்துடன் கன்னத்தை வைத்தாள்...
அவனோ முறைத்துக் கொண்டே சிடு சிடு என்று அமர்ந்து இருந்தான்.
அவன் கன்னத்துடன் கன்னத்தை வைத்து உரச, அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டான்...
"இப்படியே முறைச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்? கொஞ்சம் சிரிக்கிறது" என்றாள்.
"இது தான் என் சிரிப்பு" என்றான்.
"ப்பா, எல்லா பல்லும் தெரியுது" என்று நக்கலாக சொன்னவளோ அப்படியே ஒன்று இரண்டு போட்டோ எடுத்தாள்...
காற்றுப் புக முடியாத நிலையில் இருந்த இருவரின் மேனிகளும் உள்ளே தீ பற்றிக் கொண்டு தான் இருந்தன...
அவனை திரும்பி பார்த்தாள் அவள், இருவரின் மூச்சு காற்றும் கலந்து வெளியேற, அவன் இதழ்களை அவளே நெருங்க, சட்டென்று முகத்தை விலக்கியவன், "மூட் இல்ல" என்றான் வேண்டுமென்றே...
"அவள் கேட்டு நான் பண்ண வேண்டுமா?" என்கின்ற ஈகோ அவனுக்கு...
உணர்வுகளை அடக்கிக் கொண்டான்...
"ஓஹோ" என்று நக்கல் குரலில் சொல்லிக் கொண்டே, எட்டி அவன் கன்னத்தை கடிக்க, அவனோ, "ஆஹ்" என்று அலற, அதனையும் செல்பீயாக எடுத்துக் கொண்டே பாய்ந்து எழுந்தவள், "இத தான் டி பி ஆஹ் வைக்க போறேன்" என்றாள்.
"வாட்?" என்று அதிர்ந்தே விட்டான்.
அவளுடைய நட்பில் கல்லூரி மாணவர்கள் எல்லாம் இருக்கும் போது இப்படியான படம் அவனுக்கு சங்கடம் அல்லவா?
அவளோ, "ம்ம், நல்லா இருக்குல்ல?" என்று கேட்க, "லூசா நீ?" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன் அவள் போனை பறிக்கச் செல்ல, சிரித்துக் கொண்டே போனை தனக்கு பின்னால் கொண்டுச் சென்றாள்.
"கொடுடி" என்றான்...
"முடியாது" என்று சொல்ல, அவனோ, "திஸ் இஸ் டூ மச் பாரதி" என்றான் கடுப்பாக...
"ஓகே கூல், ஒரு கிஸ் கொடுங்க, இத நான் டி பி ல வைக்க மாட்டேன்... ஜஸ்ட் கிஸ் ஒன்லி" என்றாள்.
"மிரட்டுறியா?" என்று கேட்க, "எஸ்" என்றாள் சிரித்துக் கொண்டே...
"நான் தான் மூட் இல்லன்னு சொன்னேன் ல. போர்ஸ் பண்ணுறது உனக்கு தப்பா தெரியலையா? அன்னைக்கு பெரிய பேச்செல்லாம் பேசுன" என்று எகிறினான்...
அவளோ, "ஹெலோ, நான் கிஸ் மட்டும் தான் கேட்டேன்..." என்று சொல்ல, வாய்க்குள் திட்டிக் கொண்டே அவளை நெருங்கியவன், அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கி இதழில் இதழ் பதித்தான்...
சாதாரண முத்தம் ஆழ்ந்த முத்தமாக மாறியது...
நிதானத்தை இழந்தான் அவன்... கைகள் அவள் கன்னத்தில் இருந்து கீழே இறங்கி அவள் ஷேர்ட்டின் பட்டனில் படிய, சட்டென அவன் கைகளை பிடித்துக் கொண்டே அவன் இதழ்களில் இருந்து இதழ்களை பிரித்து எடுத்தவள், "மூட் இல்லன்னு சொன்னீங்க" என்று நக்கலாக கேட்டபடி அவன் கைகளை பார்த்தாள்.
பதில் சொல்ல முடியவில்லை அவனுக்கு...
"ஆமா இல்ல தான்" என்று அவளை பார்க்காமல் சொன்னவனோ ஒரு வித கடுப்பான மனநிலையில் வெளியேறி இருந்தான்... அவளோ இப்போது சத்தமாக சிரித்துக் கொண்டாள்.
ஹாலில் வந்து அமர்ந்தவனுக்கு தன் மீதே எரிச்சலாக இருந்தது...
அவனது கட்டுப்பாடு எல்லாம் எங்கே போனது என்று அவனுக்கே தெரியவில்லை...
"ஒரு கன்ட்ரோல் இல்லாம, ச்ச" என்று தனக்கு தானே திட்டிக் கொண்டவனுக்கு உணர்வுகளை அடக்க தான் முடியவில்லை... நியூஸ் சேனலை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் அமர்ந்து இருந்தான்...
அவன் மீண்டும் அறைக்குள் சென்ற போது அவள் தூங்கி இருந்தாள்.
"சரியான இம்சை" என்று அவளுக்கு திட்டி விட்டு அவனும் தூங்கி விட்டான்.
இப்படியே அவர்கள் நாட்கள் நகர, அன்று காலேஜ் முடிந்து வரும் வழியில், "நிறுத்துங்க நிறுத்துங்க" என்று கத்திய பாரதியை திரும்பி பார்த்துக் கொண்டே காரை நிறுத்திய வசிஷ்டன், "என்ன??" என்றான்.
"பிஷ் ப்ரை சாப்பிட போறேன்" என்று ரோட்டில் நின்ற தள்ளு வண்டியை காட்ட, "இங்கேயா?" என்று கேட்டான் ஒரு மார்க்கமாக...
"ஆமா... செம டேஸ்ட்டா இருக்கும்... நானும் நரேனும் ஒரு புடி புடிப்போம்" என்க, "ஸ்ட்ரீட் ஃபூட் லாம் ஹெல்த்துக்கு கூடாது" என்றான்.
"நீங்க உங்க லெக்ஷர்ஸ் ஐ காலேஜோட நிறுத்துங்க... டெய்லியா சாப்பிடுறேன். இல்ல தானே... இன்னைக்கு சாப்பிடணும்... அவ்ளோ தான்" என்றாள் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டே...
"இறங்கி தொலை" என்றபடி இறங்கியவனுக்கு அதன் அருகே கூட செல்ல முடியாதளவு குமட்டியது... மீன்களுக்கு மசாலா தடவி வைத்து இருக்க... அந்த வாடையை அவனால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை....
உடனே பாக்கெட்டில் இருந்த மாஸ்க்கை எடுத்து முகத்தில் போட்டுக் கொண்டான்.
அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள், "ரொம்ப தான்" என்றாள்...
"போடி... போய் சாப்பிட்டு வா" என்றபடி தள்ளி நின்றான். அவளோ அவனை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டே கடையை நோக்கிச் செல்ல, "யக்கா வாக்கா... பார்த்து எம்புட்டு நாள் ஆச்சு" என்றான் கடையில் நின்றவன்...
"ஆமாடா தம்பி நீ எப்படி இருக்க?? மசாலா தூக்கலா ஒரு வறுவல் கொடு... பார்க்கும் போதே நாக்கு ஊறுதே" என்றாள் எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே... அவள் பேசியதை கேட்ட வசிஷ்டனோ, "கண்ட கண்ட பொறுக்கிங்க கூட எல்லாம் பழக்கம் வச்சு இருக்கா" என்று வாய்க்குள் திட்டியபடி நின்று இருந்தான்.
சிறிது நேரத்தில் வறுவல் மீன் தட்டுடன் அவன் அருகே வந்த பாரதியோ, "வேணுமா டாக்டர் சார்??" என்று மீனின் வாலை தூக்கி அவன் முன்னாடி ஆட்ட, "சீ பே" என்றான்.
அவளோ அவன் முன்னாடியே மீனை ரசித்து சுவைத்து சாப்பிட அவனோ அவளை அருவருப்பாக பார்த்தபடி திரும்பிக் கொண்டான்.
"நீங்க கொடுத்து வச்சது அவ்ளோ தான்" என்று தோள்களை உலுக்கியபடி சாப்பிட்டு முடிய ஏப்பமும் விட்டாள்.
அவனோ அவளை திரும்பி ஒரு மார்க்கமாக பார்த்தான்.
"சூப்பரா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே தட்டை கொடுத்தவளோ கையை அங்கே இருந்த நீரினால் கழுவிக் கொண்டே, "எவ்ளோடா தம்பி?" என்றாள்...
"நூறு ரூபா கொடுக்கா" என்க அவளோ, "ம்ம்" என்றபடி வசிஷ்டன் அருகே வந்தாள்...
அவனோ போன் பேசிக் கொண்டு நின்றான்.
சட்டென்று அவன் பின் பக்கம் இருந்த பர்ஸை தூக்கி எடுக்க, "ஏய்" என்றபடி போனை கட் பண்ணியவன் அவள் கையை தட்டி விட்டபடி, "மீன சாப்பிட்டுட்டு மேல கை வைக்காதே" என்றான்.
'ஓஹோ பர்ஸை தொட்டதுக்கே வா' என்று நினைத்தவள், "நூறு ரூபா கொடுங்க" என்க பணத்தை எடுத்துக் கொடுத்தவன் அவளை முறைத்துக் கொண்டே பர்ஸை பாக்கெட்டில் வைத்தான்.
அவளும் பணத்தை அந்த பையனிடம் கொடுத்து விட்டு காரில் அவனுடன் ஏறிக் கொண்டாள்.
அவனோ மாஸ்க்கை கழட்டிய அடுத்த கணமே, எம்பி அவன் முகத்தை பிடித்த பாரதி அவன் இதழில் இதழ் பதிக்க, அவனுக்கோ குமட்டிக் கொண்டு வந்தது...
அவளை தள்ளி விட்டுக் கொண்டே அதிர்ந்து பார்த்தவன், "என்னடி பண்ணுற?" என்று கோபமாக கேட்டவனோ அழுத்தமாக தனது இதழ்களை புறங்கையால் துடைத்துக் கொண்டான்.
அவளோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "பிஷ் பிரையோட டேஸ்ட் எப்படி இருக்குன்னு பார்க்க வேணாமா?" என்று கண் சிமிட்டி கேட்க, அவளை முறைத்தவன், "அதுக்குன்னு இப்படியா பண்ணுவ... நான் தான் சொன்னேன்ல பிஷ் பிடிக்காதுன்னு" என்று திட்ட, அவள் கண்கள் மீண்டும் அவன் இதழில் நிலைக்க, சட்டென்று மாஸ்க்கை திரும்ப போட்டவன், "பக்கத்துல வந்தா சாவடிச்சுடுவேன்" என்று திட்டி விட்டு காரை எடுக்க, அவளோ சிரித்தபடியே ரேடியோவை போட்டாள்.
காதல் பாடல்கள் தான் அதில் ஒலிபரப்பாக்கிக் கொண்டு இருந்தன... அவனுக்கு எரிச்சலாக இருந்தது... ஆனாலும் கேட்க முடியாது...
மௌனமாக காரை ஓட்டினான்...