ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மழை 13

pommu

Administrator
Staff member
மழை 13

இதனை கேட்டதும் சுற்றி இருந்த அவளது ஆண் நண்பர்களோ வாயை திறந்தபடி அவளையே பார்த்துக் கொண்டு இருக்க... ரியாவோ, "இவனுங்க இருக்காங்கன்னு பார்க்கிறியா? தனியா சொல்லு" என்றாள்...

"தனியா சொல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை... எங்க அம்மா சின்ன வயசுல ஹாஸ்டல்ல சேர்க்க போறதா மிரட்டுவாங்க... இப்போ தான் கல்யாணம் என்கிற பேர்ல ஹாஸ்டல்ல சேர்த்து இருக்காங்க...

பாட்டு ஆசைக்கு போட முடியலடி... போனை உடைச்சிடுறான்... அப்போவே என் அண்ணன் சொன்னான்... நான் தான் கேக்கல" என்றாள்...

"என்னடி புருஷனை மரியாதை இல்லாம பேசுற?" என்று அவள் நண்பர்களில் ஒருவன் கேட்க, "க்கும் அவனுக்கு அது ஒன்னு தான் குறை... பி.எச்.டி ன்னா பெரிய கொம்பா... நிம்மதியா தூங்க முடில.. படி படின்னு ஹாஸ்டல் வார்டன் போல ஒரே இர்ரிடேஷன்... கொரியன் ட்ராமா பார்க்க முடியல... இஷ்டத்துக்கு சாப்பிட கூட முடியல... அப்புறம் அத்தைன்னு ஒருத்தங்க இருக்காங்க... சத்தமா சிரிக்க முடில... இது என்ன வீடா மார்க்கெட் ஆஹ்ன்னு கேப்பாங்க... அப்புறம் மாமனார்ன்னு ஒருத்தர் விறைப்பா சுத்திட்டே இருப்பார்... வீடுன்னா ஒரு பாட்டு, படம், சீரியல் தானே போடுவாங்க... ஆனா இங்க இருபத்து நான்கு மணி நேரமும் நியூஸ் தான்... சத்தியமா முடியலடி... பேசமா நானும் இத அடிக்கவா??" என்று கையில் இருந்த சிகரெட்டை பார்த்துக் கொண்டே கேட்டாள்...

ரியாவோ, "என்னடி இவ்ளோ கொடுமையா?? ஒரு கிஸ் கூடவா இல்ல??" என்று கேட்க அவளை முறைத்தவள், "பெர்ஸ்ட் நைட்ல அதான் கண்டிஷன்... படிச்சு முடிச்சு கோல்ட் மெடல் எடுக்கும் வரைக்கும் நோ முதலிரவு... படிப்புக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது... என்னை படி படின்னு சொன்னா நான் என்னடி பண்ணுறது? நான் லாம் கொரியன் சீரியல் கிஸ் பார்த்து ஜொள்ளு விட்டவ... என் நிலைமையை பார்த்தியா?? வாழ்க்கை முழுக்க கை படாத ரோசா தான் போல" என்று கேட்டுக் கொண்டே தன்னை மறந்து சிகரெட்டை வாய்க்கு அருகே கொண்டு சென்றபடி நிமிர்ந்து பார்த்தாள்... விட்டிருந்தால் வாய்க்குள் வைத்து இருந்து இருப்பாள்... அருகே கேட்ட சலசலப்பினால் நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே வசிஷ்டன் அவளையே பார்த்துக் கொண்டு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு நின்று இருந்தவன் அவள் பார்த்ததும் ஒற்றை விரலால் அவளை அழைத்தான்... அவனை கண்டதுமே அங்கே இருந்தவர்கள் எல்லாம் தெறித்து ஓட கையில் சிகரெட்டுடன் நின்று இருந்தவள் என்னவோ பாரதி மட்டும் தான்...

அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே அடிமேல் அடி வைத்து வந்தான்... அவள் கை நடுங்கியது...

அவள் கையில் இருந்த சிகரெட்டை பார்த்துக் கொண்டே, "சிகரெட் பிடிக்கிற அளவுக்கு ரெடி ஆய்டியா?" என்று கேட்டான்...

இல்லை என்று தலையசைத்தவள், "இது தினேஷ் பிடிச்சது" என்றாள்.

அவனோ, "சோ அவன் வாய்க்குள்ள வச்சு பிடிச்சதை உன் வாய்க்குள்ள வைக்க ரெடி ஆயிட்டே ரைட்?" என்று கர்ஜிக்கும் குரலில் கேட்க, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...

சிகரெட் பிடிக்க சென்றதுக்கு அவன் திட்டி இருந்தால் கூட பரவாயில்லை... நட்பையும் சேர்த்து அல்லவா கொச்சை படுத்துவது போல பேசி விட்டான்...

அவளுக்கோ கண்கள் கலங்கியது... சிகரெட்டை கீழே போட போனாள்.

"கீழே போடாதே" என்று அதட்டினான்... அப்படியே வைத்து இருந்தபடி அவனை பார்த்தவள், "அவன் பிரென்ட் மட்டும் தான்" என்றாள்.

"நான் ஒண்ணும் தப்பா சொல்லலையே... அவன் பிடிச்ச சிகரட்டை நீ பிடிக்க போனியான்னு கேட்டேன்... அவ்ளோ தான்..." என்றான்...

பதில் பேசவில்லை மௌனித்து இருந்தாள்...

"அவன் எப்படி உன் பக்கத்துல இருந்தான்னு நானும் பார்த்தேன்... இன்னைக்கு மேல கை வைக்க நீ அல்லவ் பண்ணுனா, நாளைக்கு எங்க வேணும்னாலும் கை வைப்பான், அப்போவும் இப்படி தான் பிரெண்டுன்னு விட்டுட்டு இருப்பியா?" என்று கேட்க, அவனை ஏறிட்டு அடிப்பட்ட பார்வை பார்த்தவள், "ஏன் இப்படி பேசுறீங்க?" என்று கேட்டு விட்டாள்...

கண்ணில் இருந்து அவன் கூரிய வார்த்தைகளை தாங்க முடியாமல் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது...

அவன் கோபம் அப்போதும் தணியவில்லை...

"ஏன்னா உன்னை விட பசங்கள பத்தி எனக்கு தெரியும்... எவனும் இங்க ராமன் இல்லை... புரியுதா... பிரெண்டா இரு... ஆனா உன் மேல அட்வான்டேஜ் எடுத்துக்க விடாதே..." என்று சொன்னான்...

அவளுக்கோ அது தவறாக தான் பட்டது...

நட்பை கேவலப்படுத்துகிறான் என்று தோன்றியது...

"உங்க இஷ்டப்படி என்னால இருக்க முடியாது" என்று அகங்காரமாக சொன்னபடி சிகரெட்டை கீழே போட்டாள்...

அவளுக்கு இதற்கு மேல் அவன் சொல்வதை ஜீரணிக்க முடியவே இல்லை...

"ம்ம், பைன்" என்று சொல்லிக் கொண்டே குனிந்து சிகரெட்டை எடுத்தான்...

தன்னை மீறி ஒரு சின்ன விஷயம் நடந்தால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதவன் அவன்....

அவள் இப்படி சொன்னதுமே அவனுக்கு சுர்ரென்று எகிறியது... ஆனாலும் காட்டிக் கொள்ளவே இல்லை...

அவளோ கண்ணீரை துடைத்துக் கொண்டே அவனை பார்த்தாள்.

"சரி சிகரெட் பிடிக்க ஆசைப்பட்ட தானே... பிடி" என்றான்...

அவளுக்கோ அவனை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை...

"அது பேசிட்டு இருக்கும் போது தெரியாம வாய்க்குள்ள வைக்க போனேன் அவ்ளோ தான்" என்றாள் அவசரமாக...

"தட்ஸ் ஓகே, ஆசைக்கு பிடி" என்று சிரித்துக் கொண்டே சொன்னான்...

அவன் சிரிப்பு அவளுக்கு விசித்திரமாக இருந்தது...

அவள் அவனை புரியாமல் பார்த்துக் கொண்டே நின்று இருக்க, சட்டென அவள் கையை பிடித்து சிகரெட்டை உள்ளங்கையில் வைக்க, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது... சிகரெட் தணல் கையில் சுட்டது...

"ஆஹ்" என்று கத்திக் கொண்டே கையை உதற முதல் அவள் கையை தனது கையை கொண்டு மூடி, அழுந்த பிடித்துக் கொள்ள, அவளுக்கோ வலி....

கதறினாள்...

காலேஜில் இருக்கும் மறைவான இடம் என்பதால் வெளியே சத்தம் கேட்கவில்லை...

ஒற்றை விரலை வாயில் வைத்து, "ஷ்ஷ்" என்றான்...

அவளோ கண்ணீருடன் அவன் விழிகளை பார்க்க, "சிகரெட் பிடிக்க ஆசைப்பட்ட தானே... பிடிச்சுக்கோ" என்று சொல்லிக் கொண்டே கையை விட, அவளோ கையில் இருந்த சிகரெட்டை உதறி விட்டு கையை வருடிக் கொண்டே அவனை வெறித்துப் பார்த்தாள்...

அவன் முகம் உணர்வுகள் துடைக்கப்பட்டு தான் இருந்தது...

அவள் காயத்துக்கு சிறிய எதிர்வினை கூட ஆற்றாமல் நின்றவனோ அங்கிருந்து அகல முற்பட, வெகுண்டெழுந்து விட்டாள் பெண்ணவள்....

"மனுஷனா நீங்க?" என்று ஆத்திரத்துடன் ஆக்ரோஷமாக கத்தினாள்...

அவளை திரும்பி சாவகாசமாக பார்த்தவன், "பார்க்க எப்படி தெரியுது?" என்று நக்கலாக கேட்டான்...

அவனை மீறி ஒரு விஷயம் செய்தால் அதற்காக பழி வாங்காமல் அவன் ஓயமாட்டான்...

அவள் வேறு மறுத்து பேசி இருக்க, அதற்கான பலனை தான் இப்போது அனுபவித்துக் கொண்டு இருந்தாள்.

"லவ் பண்ணுறேன்னு எல்லாம் சொல்லி தானே கல்யாணம் பண்ணுனீங்க... பட் யூ ஆர் ஹர்ராஸிங் மீ" என்றாள். அவனோ, "லவ்வா? நான் சொன்னதை நம்பிட்டியா என்ன?" என்று கேட்டான்...

அதிர்ந்து போனாள்.

அவள் விழிகள் விரிய, "அப்படி தானே சொன்னீங்க" என்று கண்ணீருடன் வந்தது அவள் வார்த்தைகள்...

இதழ்களை பிதுக்கியவன், "உன் அண்ணாவை பழி வாங்க தான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்... காலேஜ் படிக்கும் போதே அவனை துரத்தணும்னு நினச்சு எல்லாம் பிளான் பண்ணி பண்ணினேன்... நான் யூ.எஸ்.ஏ போன நேரமா பார்த்து கேம் பிளே பண்ணி வசுந்தராவை கட்டிக்கிட்டான்... அவ கல்யாணத்தை நியூஸ் போல கேட்க வச்சுட்டான்... அதுக்கு அவன் அனுபவிக்க வேணாமா?" என்று கேட்டான் அவளை நிதானமாக பார்த்துக் கொண்டே...

அவ்வளவு நிதானமாக இருந்தான்...

ஆனால் இதழ்கள் வன்மத்தை கக்கிக் கொண்டு இருந்தன....

"அப்போ நரேன் சொன்னதெல்லாம் உண்மையா?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவளுக்கு தன் மீதே ஆத்திரம் வந்தது...

நரேன் அவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அல்லவா?

"என் லைஃப் மொத்தமா போச்சே" என்றாள் இயலாமையில்...

அவனோ, "உன் அண்ணன் ட்ராப் அவுட்னாலும் ரொம்ப பிரில்லியண்ட்... என்ன சரியா கால்குலேட் பண்ணி இருக்கான்... அவன் அவ்ளோ சொல்லியும் கேட்காம போனது உன்னோட தப்பு, ஐ காண்ட் ஹெல்ப் யூ" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "இது தான் நான்... இது தான் உன் லைஃப்... நான் சொல்றபடி கேட்டுட்டு இருந்தா சந்தோஷமா இருக்கலாம்... இன்னைக்கு பேசுன போல மாறி பேசுனா உனக்கு தண்டனை கொடுத்துட்டே இருப்பேன்... இது எல்லாம் வேணாம் விட்டு போக போறேன்னு நினச்சு நீ என்னை விட்டு கிளம்புனா... அதுக்கும் சேர்த்து அப்புறமா அனுபவிப்ப... புரியுதா?" என்றான் மிரட்டலாக...

அவளை கூடவே வைத்து இருக்க முயற்சிக்கிறான்...

ஆனால் காதலால் அல்ல.... கட்டாயத்தின் பெயரில்...

அவளோ அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்று இருக்க, "வீட்டுக்கு வா, மருந்து போட்டு விடுறேன்" என்று சொல்லிக் கொண்டே கிளம்பி விட்டான் அவன்...

அவளுக்கோ நிதானத்துக்கு வரவே முடியவில்லை...

எப்படி பட்டவனிடம் வந்து சிக்கி இருக்கோம்? என்று தான் தோன்றியது...

ஆளுமை, அழகு, என்று ஏமாந்து போய் விட்டாள் அல்லவா?

நிதர்சனம் நெற்றிப் பொட்டில் அறைந்தது...

அண்ணன் இப்போது தெய்வமாக தெரிந்தான்...

செய்த தப்புக்கு தனக்கு தானே தலையில் அடித்துக் கொண்டே போனை எடுத்தாள்.

'விட்டு பிரிஞ்ச அப்புறம் என்ன தான் அவனால பண்ணிட முடியும்? அப்படி ஏதும் பண்ணினா கூட அண்ணா பார்த்துப்பான்' என்று நினைத்துக் கொண்டே அவனுக்கு அழைத்தாள்...

இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள அவள் ஒன்றும் அந்த காலத்து பெண் அல்லவே...

வெகுண்டெழுந்து விட்டாள்... பிரிந்து விடுவது என்று முடிவெடுத்து விட்டாள்...

நரேனும் நம்பரை புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டே போனை எடுத்தான்...

"உன் கிட்ட பேசணும், காலேஜுக்கு பின் பக்கம் வர்றியா?" என்று கேட்டாள்.

அவள் அழும் குரலே அவனுக்கு ஏதோ ஒன்று தவறாக இருப்பது போல தோன்றியது...

"இதோ வரேன்" என்று சொல்லிக் கொண்டே அவளை பார்க்க புறப்பட்டு விட்டான்...

அவளோ காலேஜுக்கு பின் பக்கம் இருந்த பெஞ்சில் நிலத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்...

கல்யாணத்துக்கு முதல் நாள் கூட நரேன் வந்து பேசியது நினைவுக்கு வந்தது...

"பைத்தியக்காரி போல நடந்து இருக்கேன்" என்று தனக்கு தானே திட்டிக் கொண்டாள்.

அவளுக்கு தாம்பத்தியம் இல்லா விட்டாலும் பரவாயில்லை... முத்தமிடா விட்டாலும் பரவாயில்லை...

அன்பாக நான்கு வார்த்தைகள் பேசி இருந்தால் கூட அவனுடன் இருக்க நினைத்து இருப்பாள்...

அதுவும் இல்லாத காய்ந்து போன வாழ்க்கை வாழ வேண்டுமா? என்று தான் நினைத்தாள்...

அவனை காதலிக்கின்றாள், ஆனால் அவனுடன் அடிமை வாழ்க்கை அவளால் வாழ முடியவில்லை... அவனை சகித்துக் கொண்டே அடிமை வாழ்க்கை வாழும் அளவுக்கு பொறுமையானவளும் இல்லை அவள்...

வசிஷ்டனை பொறுத்தவரை, நரேனை பழி வாங்க திருமணம் செய்து விட்டான்...

அதில் காதல் கொஞ்சமும் இல்லை... அதன் பிறகு எப்படி நெருங்க முடியும்?

படிப்பை காரணம் காட்டி விலகியே இருந்து விட்டான்...

அவனுக்கு நேர்த்தி மிகவும் அவசியம்...

வீட்டிலும் அவளுக்கு லெக்சரர் ஆக மாறி விட்டான்...

அந்த சூழ்நிலையிலேயே வளர்ந்ததால் என்னவோ அவனுக்கு தான் செய்வது கொடுமை என்ற வகைக்குள் வரவில்லை...

ஆனால் சுதந்திர காற்றை சுவாசித்தவளுக்கு அதெல்லாம் கொடுமையாக தான் இருந்தது...

அவளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வசிஷ்டன் மனதில் இதுவரை இருந்தது... மாணவி என்கின்ற எல்லையை தாண்டி மனைவியாக அவளை அவனால் பார்க்கவே முடியவில்லை...

அதே சமயம் நரேனின் மேல் உள்ள கோபத்தை எல்லாம் அவளில் காட்ட வேண்டும் என்று நினைத்ததே இல்லை அவன்... அவன் இயல்பே இது தான்...

அவள் தனது பேச்சை கேட்காவிட்டால் அவனால் ஜீரணிக்க முடியாமல் போய் இருந்தது...

இன்று இன்னொரு பையனுடன் அவள் நெருங்கி அமர்ந்ததை கூட அவனால் ஜீரணிக்க முடியவில்லை...

அவனுக்கே தெரியாமல் அவனிடம் தோன்றிய உரிமை உணர்வின் விளைவு அது...

சிகரெட் பிடிக்க போனதை கூட அவன் மன்னித்து விடுவான்...

இன்னொருவன் குடித்து விட்டு கொடுத்த எச்சில் சிகரெட்டை வாய்க்குள் வைக்க போனதை நினைத்து அவனுக்கு சுர்ரென்று எகிறியது...

அவனுக்கும் இந்த உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை... எல்லாமே கோபமாக வெளிப்படுத்தி பழகியவன் இதனையும் கோபமாக தான் வெளிப்படுத்தினான்...

ஆனால் அவளோ அதனை கேட்காமல் எதிர்த்து பேசி விட, அவனுள் இருக்கும் மிருகம் வெளியே வந்து விட்டது... அதன் விளைவு தான் சிகரெட்டினால் சூடு வைத்தது...

இப்போது நரேனும் காலேஜின் பின் பக்கத்தை அடைந்து விட, அவளோ ஏறிட்டு அவனை பார்த்தாள்...

கண்கள் சிவந்து வீங்கி இருந்தது...

எழுந்து அவனை நோக்கி நடந்து வந்தாள்.

"என்னடி ஆச்சு?" என்று அவன் கேட்க, அவளோ சற்று குனிந்து தனது காலில் இருந்த செருப்பை எடுத்து அவனிடம் நீட்டியவள், "என்னை அடிச்சிடுடா" என்றாள் கண்ணீருடன்...
 
Top