மழை 11
இதே சமயம் நரேனின் மார்பில் படுத்தபடியே கண்களை திறந்து பார்த்தாள் வசுந்தரா...
நேரம் ஒன்பது மணியை தொட்டு இருந்தது...
'இவ்ளோ நேரம் தூங்கி இருக்கேனா?' என்று நினைத்துக் கொண்டே எழ முயல, அவளை மேலும் தன்னுடன் இறுக அணைத்து இருந்தான் நரேன்...
"டேய் விடுடா" என்று அவள் சிணுங்க, "இப்போ எழுந்து என்ன பண்ண போற? கொஞ்சம் படு" என்றான்...
"இப்போவே ஒன்பது மணி ஆயிடுச்சு... விடு" என்று அவனை தள்ளி விட்டு எழுந்துக் கொண்டவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள் திரும்ப வந்த போதும் அவன் தூங்கிக் கொண்டு தான் இருந்தான்...
"இவன் இப்போதைக்கு எந்திரிக்க மாட்டான் போல" என்று சலிப்பாக தலையாட்டிக் கொண்டே கதவை திறந்தால், ஹாலில் போட்ட பாட்டு சத்தம் கொய்ங் என்றது...
அவளோ, "இது என்ன வீடே அதிர பாட்டு போட்டு இருக்காங்க" என்று சொன்னவளுக்கு இது எல்லாம் புதிது தான்...
சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்ணில் பட்டது என்னவோ, டி. வி முன்னே நின்று ஆடிக் கொண்டு இருந்த செல்லதுரை தான்...
தலையை உலுக்கிப் பார்த்தாள், அவர் தான் கைகளையும் கால்களையும் அசைத்து "அட ஆல் தோட்ட பூபதி நானடா" பாட்டுக்கு ஆடிக் கொண்டு இருந்தார்...
ஒரு மார்க்கமாக அவரை பார்க்க, அவரோ அவளை கவனிக்கவே இல்லை...
டி.வி ஸ்க்ரீனில் சிம்ரனின் உருவம் பெரிதாக தெரிந்ததும் தான் தாமதம், டி.வி அருகே சென்று முத்தம் வேறு கொடுக்க, "ஐயையே" என்று நினைத்தபடி வாயில் கையை வைத்துக் கொண்ட வசுந்தராவுக்கு இதனை ஜீரணிக்க முடியவே இல்லை...
தனது தந்தையையும் அண்ணனையும் பார்த்து வளர்ந்தவள், 'இந்த பெருசு வயசென்ன? பார்க்கிற வேலை என்ன?' என்று நினைத்துக் கொண்டே மீண்டும் அறைக்குள் நுழைந்தவளோ, குப்பற படுத்துக் கிடந்த நரேன் முதுகில் தட்டினாள்.
"என்னடி?" என்று தூக்க கலக்கத்தில் கேட்டபடி அப்படியே படுத்தான்...
"உன் அப்பா என்ன பண்ணுறார் தெரியுமா?" என்று கேட்க, அவனோ, "என்ன பண்ணுறார்?" என்று கேட்டான்... "சிம்ரனுக்கு முத்தம் கொடுக்கிறார் டா" என்று பதட்டமாக சொல்ல, அவனோ, "ஓஹ்" என்று சொல்லி விட்டு தூங்கி விட்டான்...
"ஓஹ் வா? கொஞ்சம் கூட இத பத்தி கவனிக்க மாட்டியா?" என்று கேட்க, அவனும், "கீர்த்தி ஷெட்டிக்கு கொடுத்தா மட்டும் சொல்லு, சண்டைக்கு போறேன்... அவ நம்ம ஆள்" என்று சொல்ல, அவளோ மீண்டும் வாயில் கையை வைத்துக் கொண்டே அதிர்ந்து போனாள்.
"நீயெல்லாம்" என்று கடுப்பாக திட்டிக் கொண்டே வெளியே வந்தவளிடம், "மருமகளே குட் மார்னிங்" என்று சொல்லிக் கொண்டே ஆடிக் கொண்டு இருந்தார் செல்லத்துரை...
அவளோ வலுக்கட்டயமாக சிரித்தபடி, "குட் மார்னிங்" என்று சொல்ல, அவரோ, "ஆட தெரியுமா?" அவளோ, "ஐயோ இல்ல மாமா" என்று சொல்லிக் கொண்டே வேகமாக சமயலறைக்குள் நுழைந்தாள்.
அங்கே லக்ஷ்மி வேலை செய்யும் பெண்ணுடன் சேர்ந்து நெய் தோசை ஊற்றிக் கொண்டு இருந்தார்...
அவளைக் கண்டதுமே, "வாம்மா" என்று சொல்ல, அவளும், "குட் மார்னிங் அத்தை" என்றாள்.
அவரோ, "நெய் தோசை சாப்பிடுறியா?" என்று கேட்க, "இல்ல நெய் சாப்பிட மாட்டேன்... சாதா தோசை கொடுங்க" என்று சொன்னாள்.
"நெய் சாப்பிட மாட்டியா? இப்படி ஒரு பொண்ணா?" என்று கேட்டவர் வேலைக் காரப் பெண்ணிடம், "கனகா, சாதா தோசை ஒன்னு போடும்மா" என்றார்...
அவளோ லக்ஷ்மியை நெருங்கியவள், "உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்" என்று சொல்ல, அவரோ, "ம்ம் சொல்லு" என்க, "மாமா" என்று ஆரம்பித்த சமயம் அவர் போனில் வாட்ஸ் அப் மெசேஜ் வரும் சத்தம் கேட்டது...
"அந்த போனை எடும்மா, கையெல்லாம் நெய்யா இருக்கு... இன்னைக்கு லேடீஸ் க்ளப் மீட்டிங் இருக்கு... அது சம்பந்தமா தான் மெசேஜ்னு நினைக்கிறேன்" என்று சொல்ல, அவளும் போனை எட்டி எடுக்க, "என் முகத்துக்கு நேரே வச்சு அன்லாக் பண்ணு" என்றார். அவளும் அதனை செய்து விட்டு டிஸ்பிளேயை பார்த்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
அங்கே நடிகர் விஜயையும் அவரையும் சேர்த்து எடிட் பண்ணிய புகைப்படம் முகப்பில் இருக்க, "இது" என்று தடுமாற்றத்துடன் கேட்டாள்.
அவரோ சாதாரணமாக, "நான் தளபதியோட டை ஹார்ட் பேன், என் பொண்ணு தான் எடிட் பண்ணி கொடுத்தா... ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்குல்ல" என்று கேட்க, அவளோ, "ம்ம்" என்று நான்கு பக்கமும் தலையாட்டினாள்...
லக்ஷ்மியும், "அப்படியே வாட்ஸ் அப் போய் மெசேஜ் என்ன இருக்குன்னு பாரு" என்று சொல்ல, மெசேஜை பார்த்தவளோ, "இன்னைக்கு ரெட் சாரி கட்டி வர சொல்லி இருக்கு" என்றாள்.
"ஓஹ் இதுங்க இப்படி தான் மாறி மாறி பண்ணிட்டு இருக்குங்க... நான் கிரீன் சாரி எடுத்து வச்சேன்... சரி இப்போ மாத்தணும்" என்று புலம்பியவர், "சரி விடு, மாமான்னு ஏதோ சொல்ல வந்தியே" என்று கேட்க, இல்லை என்ற ரீதியில் தலையாட்டியவள், "ஒண்ணும் இல்ல அத்தை" என்றாள்.
இந்த நேரத்தில் அவளுக்காக சுட்ட தோசையை கனகா அவளிடம் நீட்ட, அவளும் அதனை வாங்கிக் கொண்டே சாப்பிடும் அறைக்குள் சென்றாள்.
ஏழு அரைக்கே சாப்பிடுபவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது...
நரேனுக்காக காத்துக் கொண்டு இருக்கும் அளவுக்கு பொறுமை இருக்கவே இல்லை...
சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.
சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளது இடுப்பை கிள்ளிக் கொண்டே அருகே நரேன் வந்து அமர, பதறி போனவள், "நரேன், என்ன இது?" என்றாள் வெட்கமும் கோபமும் கலந்து...
அவனோ, குரலை செருமிக் கொண்டே அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் அவள் காதருகே குனிந்து, "செம்ம அழகு பேபி நீ" என்றான்...
அவள் கை முட்டியால் அவன் மார்பில் அடித்தவள், "சும்மா இரு" என்று சங்கடமாக சொல்லிக் கொண்டு இருக்கவே அங்கே நரேனுக்கு தோசையை கொண்டு வந்து வைத்தாள் கனகா...
அவனும் தோசையை எடுத்து சாப்பிட, வசுந்தராவோ, "இவ்ளோ நெய் சாப்பிடுறியே" என்று கேட்டாள். அவனோ, "ஜிம் போறேன்... வருஷா வருஷம் ஹெல்த் செக் பண்ணுறேன்... இஷ்டத்துக்கு சாப்பிடுறேன்..." என்று இயல்பாக சொல்ல, அவளும் இதற்கு என்ன பதில் தான் சொல்வாள்? பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்.
இருவரும் சாப்பிட்டு முடிய, அவளுடன் சேர்ந்து அமர்ந்து டி. வி பார்க்க ஆரம்பித்து இருந்தான்... அவளுக்கோ சலிப்பாக இருந்தது...
இதில் எல்லாம் அவளுக்கு ஆர்வம் இருக்கவே இல்லை...
"நாளைக்கு ஆபீஸ் போகலாம்னு இருக்கேன்" என்றாள் அவள்... அவனோ, "வீட்ல ஜாலியா இருடி" என்றான்...
அவளோ, "எனக்கு இப்படி என்டெர்டென்மெண்ட் எல்லாம் ஆர்வம் இல்ல நரேன்... வேலை பார்த்துகிட்டே பிசியா இருந்து பழகிட்டேன்" என்று சொல்ல, அவனோ அவளை திரும்பி மோகமாக பார்த்தவன், "வேலை தானே பார்க்கணும், ரூமுக்குள்ள வா" என்றான்...
அவளோ கண்கள் விரிய, "இப்போவா?" என்று கேட்க, அவனோ, "ம்ம், பிசியா இருக்கணும்னு ஆசைப்பட்ட தானே" என்று சொல்ல, அவளோ, "அதுக்காக பகல் நேரத்துலயா?" என்று அதிர, அவனோ, "இதுக்கெல்லாம் நேரம் காலம் இல்ல, வா பேபி, உன்னை பிஸியாவே நான் வச்சுக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவளை இழுத்துக் கொண்டே அறைக்குள் செல்ல, அவளும் சங்கடமும் வெட்கமுமாக அவனை பின் தொடர்ந்தாள்.
அடுத்த நாள் இருந்து வசுந்தரா வேலைக்கு சென்று இருக்க, அவளுக்கோ கொஞ்சம் நிம்மதியாக இருந்தது... வீட்டில் இருந்தால் தானே பாட்டு, கூத்து என்று அவளுக்கு எரிச்சலாக இருக்கும்...
இரவில் கணவனுடன் மஞ்சத்தில் நேரம் கழிந்து விடும்...
இப்படியே அவர்கள் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல ஓட ஆரம்பிக்க, குழம்பிய குட்டை போல நின்றது என்னவோ பாரதி மற்றும் வசிஷ்டனின் வாழ்க்கை தான்...
எல்லாமே நேரத்துக்கு செய்ய வேண்டும் என்று இருந்த ஹாஸ்டல் வாழ்க்கையை தான் வேண்டா வெறுப்பாக வாழ்ந்துக் கொண்டு இருந்தாள் பாரதி...
காலையில் ஜிம்மில் ஆரம்பித்து இரவில் படிப்புடன் அவள் நாள் முடியும்...
அவளது கொரியன் ட்ராமா, பாட்டு, படம் எல்லாம் எட்டாக்கனியாக தான் இருந்தது...
முதல் எல்லாம் நண்பர்களுடன் கிளாஸை கட் அடித்து விட்டு படத்துக்குச் செல்வாள்...
இப்போது வசிஷ்டன் அங்கே இருக்கும் போது அவளால் என்ன தான் செய்ய முடியும்?
சிறைக்குள் இருக்கும் உணர்வு அவளுக்கு....
சுதந்திர பறவையை கூண்டில் அடைத்தால் அந்த பறவைக்கு எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது...
வசிஷ்டன் ஒன்றுமே அவளை கொடுமை படுத்த எல்லாம் இல்லை...
வன்மத்தில் திருமணம் செய்தாலும் அவளை காயப்படுத்த நினைக்கவே இல்லை...
ஆனால் தன்னை போல அவள் இருக்க வேண்டும், தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அவன் நினைத்து இருந்தான் அவ்வளவு தான்...
அதுவே அவளுக்கு கொடுமையாக தான் இருந்தது...
இப்படியான ஒரு நாளில் படித்து முடித்து விட்டு புத்தகத்தை பையில் வைத்துக் கொண்டே, பர்ஸை திறந்தவளோ சலிப்புடன் நெற்றியை நீவிக் கொண்டாள்.
கையில் ஒரு ரூபாய் கூட இல்லை...
கேட்பது என்றால் கூட வசிஷ்டனிடம் கேட்க வேண்டும்... சங்கடமாக இருந்தது...
ஆனாலும் வேறு வழி இல்லை... ஹாலில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டு இருந்தவனின் முன்னால் போய் நின்று விட்டாள்...
"வாட்??" என்றான் காபியை குடித்துக் கொண்டே...
"பணம் வேணும்" என்று தயக்கமாக கேட்டாள்...
"எதுக்கு??" என்ற அவன் கேள்விக்கு,
"ஒரு ஆத்திர அவசரத்துக்கு கூட பணம் இல்லை" என்றாள்.
"உனக்கு அப்படி என்ன அவசரம்" என்று கேட்டான்.
"கேன்டீன்ல டீ குடிக்க கூட என் கிட்ட பணம் இல்லை" என்றாள்...
எட்டி அருகே இருந்த பர்ஸை எடுத்தான்...
அதனை துளாவ, அவளும் பார்த்துக் கொண்டே இருந்தாள்...
"லன்ச் வீட்ல இருந்து தானே கொண்டு போற" என்று கேட்க, அவளும் "ம்ம்" என்க, அவளை பார்த்துக் கொண்டே பத்து ரூபாயை எடுத்து நீட்டியவன், "பார்த்து செலவு பண்ணு" என்றான்.
அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே அதனை வாங்கியவள், "இத பார்த்து செலவு பண்ணனுமா?" என்று எரிச்சலாக கேட்டாள்...
"கண்டிப்பா... கணக்கு கேட்பேன்" என்றான். அவன் தலையில் நங்கு நங்கு என்று குட்டினால் என்ன என்று தோன்றியது...
"ஒரு அவசரம்னா பணத்திற்கு எங்க போவேன்?? இந்த பத்து ரூபாயை வச்சு என்ன பண்ணிட முடியும்" என்று கடுப்பாக கேட்டாள்.
"இங்க பாரு... காலைல உன் கூட தான் வரேன்... காலேஜ் லயும் கூடவே இருக்கேன். வீட்டுக்கும் சேர்ந்து தான் வர்றோம்... இப்படி இருபத்து நாலு மணி நேரமும் கூட இருக்கேன். அவசரம்ன்னா வந்து நேர்லயே சொல்லு. எல்லாத்துக்கும் மேல இப்படி கூடவே இருக்கிற புருஷன் எல்லாருக்கும் அமையாது... நீ ரொம்ப லக்கி" என்றான்.
அதற்கு பதில் என்ன சொல்ல முடியும்??
"ஆமா ரொம்ப தான் லக்கி" என்று கடுப்பாக சொன்னவளோ அந்த பத்து ரூபாவை அவன் கையில் திணிக்க, "உனக்கு வேணாமா?" என்று கேட்டான்.
அவளோ, "இல்லை வேணாம்" என்று கோபமாக சொல்லி விட்டு மீண்டும் அறைக்குள் நுழைய, அவன் இதழ்கள் இப்போது கேலியாக புன்னகைத்துக் கொண்டது...
"அவன் அண்ணன் பணம் கொடுத்து கெடுத்து வச்சு இருக்கான்" என்று வாய்க்குள் முணுமுணுக்க, அறைக்குள் வந்தவளோ, தலையை பிடித்துக் கொண்டே, "பத்து ரூபா கொடுக்கிறான் இந்த ரோபோ... ஆஅஆஹ்" என்று கத்தியவள், அப்படியே கட்டிலில் குப்பற படுத்துக் கொண்டாள்.
காலேஜ் நாட்களில் மட்டும் அல்ல, லீவு நாட்களில் கூட அவளுக்கு அந்த வீடு நரகமாக தான் இருந்தது...
அன்று காலையில் சாப்பிட்டு விட்டு அறைக்குள் நுழைய, வசிஷ்டனோ வெளியே செல்ல ஆயத்தமாகி இருந்தான்...
"இன்னைக்கு காலேஜ் லீவு தானே" என்று கேட்டாள் அவள்...
"ம்ம், முக்கியமான ஒரு வேலை இருக்கு... ரிசர்ச் ஒண்ணு பண்ணனும்" என்று சொல்லிக் கொண்டே அவன் புறப்பட்டு விட, அவன் புறப்படும் வரை பார்த்துக் கொண்டு இருந்தவளோ அவன் சென்றதுமே கதவை மூடி விட்டு, "யாஹூ" என்று துள்ளினாள்.
"ஷப்பா இன்னைக்கு தான் நிம்மதியா ஜாலியா இருக்கேன்" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியே வந்தவளோ, 'இன்னைக்கு நிம்மதியா டி.வி பார்ப்போம்' என்று நினைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே உட்கார்ந்தாள்...
டி.வி யில் ஆதித்யா சேனலை போட்டவளுக்கோ அந்த அழுத்தமான நேரத்தில் இப்படியான நகைச்சுவை அவசியமாக இருந்தது...
காலை தூக்கி சோஃபாவின் மேல் போட்டபடி இருந்தவள், டி. வியில் போன நகைச்சுவையை பார்த்து தன்னை மறந்து சத்தமாக சிரித்தாள்.
இந்த சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்தது என்னவோ கோமளா தான்...
சோபாவின் மேலே காலை வைத்துக் கொண்டே அமர்ந்து இருந்தவளை பார்க்க அவருக்கு கடுப்பாகி போனது...
அங்கே எல்லாமே ரூல்ஸ் அண்ட் ரேகியூலெக்ஷன்ஸ் அல்லவா???
அவளை நோக்கி வேகமாக வந்தவர், "இது என்ன மார்க்கெட் ஆஹ்? இப்படி சிரிக்கிற?" என்று கேட்க, அவள் சிரிப்பு சட்டென்று வடிய, அவளுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...
அதோடு நிறுத்தாமல், "சோஃபாவில எப்படி இருக்கணும்னு உன் வீட்ல சொல்லி வளர்க்கலயா?" என்று கேட்டதுமே அவரை அதிர்ந்து பார்த்துக் கொண்டே காலை கீழே போட்டாள்.
அவரோ, "இங்க பாரு... இருக்கிறதுன்னா ஒழுங்கா இரு" என்று சொல்லிக் கொண்டே ரிமோட்டை எடுத்தவர் சேனலை மாத்திக் கொண்டே, "பார்க்கிறதுன்னா நியூஸ் சேனல் பாரு... இந்த சினிமா மண்ணாங்கட்டி எல்லாம் இங்க பார்க்க கூடாது" என்று கண்டிப்பாக சொல்ல, அவளுக்கோ இப்போது கண்களே கலங்கி போனது...
சட்டென்று எழுந்தவள் விறு விறுவென அறைக்குள் நுழைய, அவரும் அவள் முதுகை முறைத்துப் பார்த்து விட்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.
அறைக்குள் வந்தவளுக்கு இந்த அவமானத்தை தாங்கவே முடியவில்லை...
"சிரிக்கிறது குத்தமா? என்ன குடும்பம் இது?" என்று கடுப்பாக திட்டிக் கொண்டே கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், "இவங்களுக்காக நான் எதுக்கு அழணும், ரூமுக்குள்ள வச்சு பாட்டு போடுறேன்" என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்து பாட்டு போட்டாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களில் அவள் இயல்பாகி விட்டாள்.
பாட்டுக்கு ஏற்றபடி இதழ்களை அசைத்துக் கொண்டே, மேனியையும் அசைத்தபடி உடைகளை மடித்து வைத்துக் கொண்டு இருக்க, அவள் அறைக் கதவை திறந்துக் கொண்டே வசிஷ்டன் உள்ளே நுழைந்து இருந்தான்...
உள்ளே நுழைந்தவனுக்கு பாட்டை கேட்டதுமே சுர்ரென்று கோபம் தான் வந்தது... ஏற்கனவே ரிசெர்ச் செய்த கோடிங் பிழையாகி விட்டது என்று கடுப்பு இருக்க, அவனுக்கோ இந்த சத்தத்தை சகித்துக் கொள்ள முடியவே இல்லை...
அவனைக் கண்டு அவள் சுதாரிக்க முதலே, வேகமாக, அவள் போன் அருகே வந்தவன், அதனை பிடித்து ஓங்கி மேசையில் அடிக்க, அதன் டிஸ்பிளே நொறுங்கி இருந்தது...
அவளோ அதிர்ந்து விட்டாள்.
இப்படி ஒரு ஆக்ரோஷமான செய்கையை அவள் எதிர்பார்க்கவே இல்லை...
"என்னோட போன்" என்று முடிக்க முதல், "ஷாட் அப்" என்று சீறினான்...
அவள் கண்கள் இன்னுமே விரிய, "இந்த வீட்ல இன்னொரு தடவை பாட்டு சத்தம் கேட்டிச்சு சாவடிச்சிடுவேன்" என்று சொல்லிக் கொண்டே போனை கையால் பிடித்து இரண்டாக வளைத்தவன், ஜன்னலினால் எறிந்து இருந்தான்...
அவளோ சட்டென்று கதவை திறந்துக் கொண்டே வெளியே ஓடிச் சென்றாள் போனை எடுப்பதற்கு...
கீழே வந்தவள் மோசமாக உடைக்கப்பட்டு இருந்த போனை எடுத்து பார்த்தாள்.
இனி பாவிக்கவே முடியாது என்கின்ற நிலை தான்...
நரேன் ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த விலை உயர்ந்த போன் அது...
கண்களில் கண்ணீர் வழிய சட்டென்று துடைத்துக் கொண்டே சிம் கார்டை மட்டும் கழட்டி எடுத்தபடி திரும்பி பார்க்க, அங்கே வசிஷ்டனோ ஜன்னல் ஊடாக அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்...
அவன் முகத்தில் சின்ன உணர்வுகள் கூட இருக்கவில்லை...
அவளோ இதற்கு மேல் பொறுமை இல்லை என்கின்ற ரீதியில் வேகமாக அறைக்குள் வந்தவள் கதவை தாழிட்டு விட்டு, "பாட்டை ஆப் பண்ண சொன்னா பண்ணி இருப்பேன் தானே... எதுக்கு போனை உடைச்சீங்க?" என்று கேட்டாள்.
"எனக்கு தெரியாம கூட நீ பாட்டு போட கூடாது" என்றான் சாதாரணமாக...
சற்று முன் இருந்த கோபம் அவனிடம் இப்போது இல்லை...
அவனுக்கே தெரியும் அவன் செய்தது அதிகப்படி என்று... ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ள அவன் ஈகோ இடம் கொடுக்கவே இல்லை...
"உங்களுக்கு தெரியாம போட கூடாதா? இதெல்லாம் சர்வாதிகாரம்" என்றாள்.
"அப்படியே வச்சுக்கோ" என்றான்...
பதில் சொல்ல முடியாமல் திணறியவளோ, "சரி பாட்டு போடல... இப்போ எனக்கு படிப்பு சம்பந்தமா தெரிஞ்சுக்க கூட போன் இல்லையே" என்றாள்.
அவனோ, "என் கிட்ட கேளு, கூகிளை விட விளக்கமா சொல்லி கொடுப்பேன்" என்றவன் வார்த்தைகளில் படிப்பின் திமிர் அப்பட்டமாக தெரிந்தது...
"சரி இப்போ அவசரத்துக்கு யார் கூடவும் பேசுறதுன்னா என்ன பண்ணுறது?" என்று புது போனுக்கு அடி போட்டாள்...
அவளுக்கும் வேறு வழி இல்லை...
திரும்ப போய் நரேனிடம் நிற்க முடியாது... அவனுக்கு பேசிய பேச்சு அப்படி...
வசிஷ்டனை விட்டால் வழியும் இல்லை...
அங்கே அமர்ந்து நாடியை நீவிக் கொண்டே யோசித்தவன், "வெய்ட்" என்றபடி அலுமாரியை திறந்தான்...
ஆதி காலத்து போன் ஒன்று இருந்தது...
பட்டன் கீ போர்ட் வச்ச குட்டி போன்...
அதில் பாம்பு விளையாட்டு தவிர ஒன்றும் இல்லை...
"இது நான் முதன் முதல் யூஸ் பண்ணின போன்... நினைவா வச்சு இருந்தேன்... இத யூஸ் பண்ணிக்கோ" என்று சொல்லி நீட்ட, அவளோ அதனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே வாங்கியவள், சுற்றி சுற்றி பார்த்தாள்.
"நல்ல கண்டிஷன் தான்... இதுக்குள்ள உன்னோட சிம் கார்டை போடு" என்றான்...
அவளும் போனையே பார்த்துக் கொண்டு இருக்க, அவனே போனை வாங்கி அவள் கையில் இருந்த சிம் கார்டையும் வாங்கி போட்டு அவளிடம் நீட்டியவன், "உடைச்சிடாதே... பத்திரமா யூஸ் பண்ணு" என்றான்...
சட்டென்று அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள், "இத நான் பத்திரமா யூஸ் பண்ணனுமா?" என்று கேட்க, அவனோ, "ம்ம் உடைச்சா எனக்கு எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்கணும்" என்றான்...
அவளோ, "எல்லாம் விதி" என்று மனதுக்குள் சலித்துக் கொண்டே, அந்த போனை ஆன் பண்ணினாள்.