ஹலோ தோழமைகளே..
யூடிகள்.. ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து தருகிறேன்.
ஒருவேளை எழுத தொடங்கி விட்டால் முன்னதாகவும் வந்துடுவேன்.
இதோ சின்ன டீசர் ..
மமதை அழிந்ததடி!
இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள சுவின்டன் நகரில் தனித்தனியாக காம்பௌன்ட் சுவருடன் கட்டப்பட்ட சிறு அழகிய வீடுகள் வரிசையாக அமைந்துள்ளன. ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் பயிலும் பல்வேறு நாட்டு மாணவர்கள்.. தனியாகவோ.. இரண்டு பேர் அல்லது நான்கு பேராகவோ ஒன்றாக அங்கு வீடு எடுத்து வசித்து வந்தார்கள்.
அங்கு இருந்த ஒரு வீட்டில் அஸ்வினி புயல் என உள்ளே நுழைந்தாள்.
“நந்து” என்று அழைத்தவாறு வேகமாக ஹர்சினி உள்ளே வந்தவளைப் பார்த்ததும் “ஹெ அதுக்குள்ள… வந்துட்டே.. அவ்வளவு பார்ஸ்ட்டா!” என்றான்.
“என்னிதிது!” என்று தனது கையில் இருந்த செல்பேசியை காட்டினாள்.
“தெளிவா தானே மேசேஜ் அனுப்பியிருக்கேன்.” என்று அசட்டையாக கூறினான்.
“டு யு அட்மிட் இட்?” என்று திகைப்புடன் கேட்டாள்.
“எஸ்!” என்று மாறாத அசட்டையுடன் கூறினான்.
“இடியட்! நாம் என்ன லவ்வா செய்கிறோம். ஈஸியா லெட்ஸ் இன்ட் திஸ் ரிலேசன் என்று அனுப்பியிருக்கே! வி ஆர் மேரிடு கப்புள்ஸ்!” என்று வெடித்தாள்.
“ஐயம் சிக் ஆஃப் திஸ் ரிலேசன்!” என்று பதிலுக்கு அவனும் வெடித்தான்.
ஹர்சினி திகைத்து நின்றிருக்க அபிநந்தன் “நீ அதிகாரம் செய்யவும்.. உன்னோட பொஷிஷ்வ்னஸை காட்டவும் நான் உன்னை மேரேஜ் செய்துக்கலை.” என்று படபடத்தான்.
தனது கணவன் என்ற உரிமையில் அவள்.. நெருக்கமாகவும் தனக்கு என்று படைத்தவன் என்ற அன்பில் பழகுவதை.. என்ன மாதிரியான வார்த்தைகளால் கூறிவிட்டான்.. என்று ஸ்தம்பித்தவளாய் நின்றாள்.
பின் அபிநந்தன் நிதானத்தை வரவழைத்து கொண்டு “ஆக்சுவலி.. நாம் லவ் செய்துட்டு இருக்கிறப்போ.. சும்மா தொட்டாலே.. கல்யாணத்து பிறகுனு சிணுங்கினே.. அதுனால மேரேஜ் தான் லைசன்ஸா என்று உன்னை மேரேஜ் செய்தேன். அதுவும் காலேஜ் கேம்பஸில் பிரெண்ட்ஸிற்கு முன்னாடி ஜஸ்ட் மாலை மாற்றி.. மோதிரம் போட்டேன்.. அவ்வளவு தான்! மற்றபடி நீ சில சமயம் வசனம் பேசுவியே! அந்த மாதிரி.. இனி நீதான் என் வாழ்வு என் உயிர்.. என்று அந்த மாதிரி இல்லை. இப்போ புரிஞ்சுதா ஏன் இந்த மேரேஜ் என்று..” என்றான்.
ஹர்சினி அதிர்ந்து நிற்கையில்.. அபிநந்தன் “நீ இந்த மாதிரி ரியாக்ஷன் கொடுப்பே என்று தான்.. பர்ஷன் டு பர்ஷனா சொல்லாம மேசேஜ் போட்டேன்.” என்றுச் சிரித்த மறு நொடி ஹர்சினி அவனை அடிக்க கையை ஓங்கியிருக்க.. அது அவனது கன்னத்தில் இறங்குவதற்கு முன்.. கரத்தை பிடித்திருந்தான்.
கோபத்துடன் அபிநந்தன் “என்ன உன் அப்பா பொலிட்டிஷன் என்கிறதாலே.. அந்த அதிகாரத்தை என் கிட்ட காட்டறீயா!” என்றுக் கேட்டான்.
அதற்கு ஹர்சினி “நீ பணக்கார திமிரை காட்டிட்ட இல்ல! எல்லாத்தையும் விலைக்கு வாங்கிற மாதிரி.. என் கூட உறவை.. கல்யாணத்தை கொடுத்து விலைக்கு வாங்கியிருக்கியா..” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.
_—-----------------------
“அப்பா! அவனை.. ஸாரி அதாவது அவரை கண்டிப்பா மீட் செய்தாகணுமா!” என்று எரிச்சலை அடக்கிய குரலில் கேட்டாள்.
அதற்கு அவர் “நீ ஜெயிக்கணும் என்றால் இந்த மாதிரி.. பிஸிசனஸ்மேனின் நட்பு தேவை ஹர்சினி!” என்றார்.
ஹர்சினி ஆத்திரம் குறையாமல் “இவனோட நட்பா!” என்று முணுமுணுத்தாள்.
_—------------_—---
இன்முகத்துடன் நின்றிருந்த ஹர்சினியிடம் வந்த அபிநந்தன் கை குலுக்க தனது கரத்தை நீட்டினான்.
அவளும் முகத்தில் இருந்த புன்னகையை பெரும்பாடு பட்டு மறையாதிருக்க முயன்றவாறு அவனோடு கை குலுக்கினாள்.
அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “என்னை மறந்திருக்க மாட்டேன்னு நினைக்கிறேன்.” என்றான்.
அதற்கு அவள் “எனக்கு துரோகம் செய்தவங்களை நான் மறக்க மாட்டேன். பழைய கதை வேண்டாம். நீங்க என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்ததும்.. பழைய கதை தான் காரணம் என்றால் நாம் இனி சந்தித்து கொள்ளவும் வேண்டாம்.” என்றாள்.
அவனோ சிறிது யோசித்து “புதுசுக்கு பழைய கதை! இதெப்படி இருக்கு..” என்றுக் கேட்டான்.
ஹர்சினி புருவம் சுழித்து பார்க்கவும், அபிநந்தன் “நீ இந்த எலக்ஷனில் நிற்க கூடாது. உனக்கு எதிரா நிற்பவர் மேல் நான் இன்வெஸ்ட் செய்திருக்கேன். அதுனால வாபஸ் வாங்கிரு..” என்றான்.
ஹர்சினி அடக்கப்பட்ட கோபத்துடன் “முடியாது!” என்றாள்.
அதற்கு அபிநந்தன் “அப்போ.. என் கூட அரை குறை ஆடையில ஆட்டம் போட்ட ஃபோட்டோஸ் எல்லாம்.. சோஷியல் மீடியாவுல வெளியிடுவேன். நீ தானா தோத்துருவே! எது பெட்டர்!” என்று புருவத்தை உயர்த்தி கேட்டான்.
அவள் அவனை பார்வையாலே எரித்து விடுபவள் போல் பார்த்தாள்.