ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ப்ரவினிகாவின் "உந்தன் மூச்சு எந்தன் வாழ்வு" கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் நண்பர்களே,

புது கதையின் முன்னோட்டத்துடன் வந்துள்ளேன்.

தலைப்பு : "உந்தன் மூச்சு எந்தன் வாழ்வு"

ஹீரோ : _______
ஹீரோயின் : மதுரவாணி

முன்னோட்டம்

மதிய வேளையில் வானில் சூரியன் உச்சியை தொட்டதால் வெயில் சுள்ளென்று உச்சி மண்டையை பிளந்து கொண்டிருந்தது.

அங்கு கருப்பு போர்வையை போர்த்திக்கொண்டு முடி எல்லாம் சாம்பல் நிறத்துடன் கன்னத்தில் ஏதோ அடி பட்டு அதற்கு தக்க மருந்து இடாததால் அந்த புண்ணின் மேல் ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தது.

மங்கிய தோற்றத்துடன் இரண்டு கையிளும் சொறி சிரங்கு படை என அத்தனையும் வந்து பார்க்கவே கோராமையாக இருந்தது அவரின் தோற்றம். அந்த சிரங்கின் மேல் நீர் வடிந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு வயதானவர் போன்று இருப்பார்.

அந்த உச்சி வெயில் மண்டையை பிளந்தாலும் அது உரைக்குதோ இல்லையா என பார்ப்பவர்கள் கூட பரிதாப படுவார்கள். ஆனால் அவர் அதை உணர்வே இல்லாதது போல் அப்படியே உட்கார்திருந்தார். போவோர் வருவோர் தான் அவருக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு போவார்கள். யாரும் காசு கொடுத்தால் கூட அவர் வாங்க மாட்டார்.

அந்த பிளாட்பாரத்திலேயே உட்காருவதும் உறங்குவதுமாக தான் இருப்பார். அவரை முதியோரில்லத்தில் சேர்த்து விடுகிறோம் என்று கூறியும் வர மறுத்துவிட்டார். அதனால் அங்கு இருப்பவர்கள் தான் தினமும் ஏதாவது சாப்பிட தந்து விட்டு போவார்கள்.

அவர் உட்கார்ந்திருந்த எதிர் பக்கத்தில் இருந்த வீட்டை சுற்றிலும் மா, பலா, வாழை போன்ற மரங்களுடனும் காய்கறி செடிகள் மற்றும் வித விதமான பூ செடிகளுடன் கூடிய தோட்டம் அழகாக காட்சி அளித்து கண்ணை பறித்தது அந்த வீடு.

இரண்டு டாடா சுமோ வேகமாக அந்த வீட்டின் போர்டிகோவிற்குள் வந்து நின்றது. அதிலிருந்து நான்கு ஐந்து பேர் ஒரு பெண்ணை கூப்பிட்டு கொண்டு இறங்கினர்.

"ஏய் யாருடா நீங்களாம். எதுக்கு டா எங்களை இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க" என்று கத்தினாள் மதுர வாணி.

"இரு மா சும்மா கத்தாத. உன்ன தூக்கிட்டு வந்ததுல இருந்து நீ கத்துறதுலயே காது வலிக்குது" என்றான் ஒருவன்.

"ஏன் டா எங்களை தூக்கிட்டு வந்துருக்கீங்க. பின்ன கத்தாம உங்ககிட்ட சிரிச்சு பேச சொல்றிங்களா" என்று மீண்டும் கத்தினாள். கண்ணு கட்ட பட்டிருப்பதால் கண்ணு வலி வேறு அதிகமா இருந்தது அந்த கடுப்பு அவளுக்கு.

"உன்கூட வந்தவன் கூட சைலெண்ட்டா இருக்கான். நீ தான் கத்திகிட்டே இருக்க. கொஞ்சம் அமைதியாயிரு. எங்க பாஸ் இப்ப வந்துருவாரு" என்றான்.

அப்பொழுது தான் கூட வந்தவன் அமைதியாக இருப்பதை நினைவு கூர்ந்தாள். அவனுக்கு என்ன ஆனதோ என்ற பயம் வந்து "கமலேஷ் எங்க டா இருக்க. என்ன ஆச்சு எனக்கு கண்ண கட்டுன மாதிரி உனக்கு வாய கட்டிடங்களாடா. என்னனு ஏதாவது சொல்லுடா. எனக்கு பயமா இருக்கு" என்று பயத்தில் கண்களின் கண்ணீர் அவள் கண்களில் கட்டி இருந்த துணியிலும் நனைய துடங்கியது. ஒரு வித தடுமாற்றத்துடனேயே வார்த்தைகள் வந்தது.

ஆனால் அவள் இவ்வளவு கத்தியும் அவள் கூறுவதை காதில் வாங்கிக்கொண்டு கால் மேல் காலை போட்டுகொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்து அவளையே கண்கள் சிவக்க ரௌத்திரமாக பார்த்து கொண்டு இருந்தான் கமலேஷ்.

**********

"கூட்டிட்டு வாங்கடா அவன. இவளுக்கு அவன் தான் மேட்ச்ச்ச்ச்சா இருப்பான்" என்று குரூரமாக உரைத்தான்..

அவனை கூட்டி வந்தவர்கள் அவனை தொட கூட இல்லை ஒரு குச்சியால் அவனை தள்ளி கொண்டு வந்தனர்.

அவனை அவள் முன்னாடி நிக்க வைத்ததும் அவள் தலையை மட்டும் நிமிர்த்தி பார்த்தாள். ஏற்கனவே அவன் கூறிய வார்த்தைகளிலும் செய்தியிலும் பாதி செத்திருந்தால் இப்பொழுது தலையை உயர்த்தி எதிரில் இருப்பவனை பார்த்தவுடன் முழுமையாக வாழ்க்கையில் தோற்ற உணர்வு.

அவன் கையில் தாலியை பிடிவாதமாக திணித்தனர். கூடவே என்ன செய்ய வேண்டும் எப்படி கட்ட வேண்டும் என்று அவன் பின்னாடி இருந்து சொல்லிக்கொண்டிருந்தனர்.

அவன் கையை தூக்கியவுடன் அதில் தெரிந்த புண்ணில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.

திரும்பி கமலேஷை ஒரு முறை பார்த்து "நான் உன்னை எவ்ளோ நம்புனேன். என்ன இப்படி நீ ஏமாத்துவனு நான் நெனச்சு கூட பார்க்கல கமலேஷ்." என்ற குரலில் வலி வேதனை ஏமாற்றம் தோல்வி என்ற எல்லா உணர்வும் கலந்திருந்தது.

கண்ணில் வேதனையுடன் முன்பு எல்லா உறவுகளும் இருந்தது. இப்பொழுது ஒரு உறவு கூட நிலைக்காமல் இவனை மட்டுமே நம்பி வந்தாள். இவன் மேல் காதல் இருக்கிறதா என்று கேட்டால் கூட அவளுக்கு தெரியாது. இருந்த அணைத்து உறவுகளும் பொய்த்து போன நிலைமையில் இவன் தன்னை பாதுகாப்பான் என்று இவனை நம்பி வந்தால் இவனும் பொய்த்து போய் கடைசியில் அவன் அவளை எழவே முடியாத அளவுக்கு அவளை அடிக்க பார்க்கிறான்.

கடைசி முயற்சியாக திரும்பி கமலேஷை பார்த்து "நீ லவ் பண்றன்னு என்னை சுத்தி சுத்தி வந்ததுலாம் பொய்யா கமலேஷ்" என்று உதடு துடிக்க வந்து கொண்டிருந்த கண்ணீர் அவள் உடை முழுவதும் நனைந்து அதை துடைக்கவும் தோன்றாமல் அவனை பார்த்து நடுங்கும் குரலில் கேட்டாள்.

திரும்பி அவளை நிதானமாக பார்த்து கண்களில் அனல் பறக்க "உன் கையை இங்க கொடு" என்றான் சம்மந்தமே இல்லாமல்

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை நான் என்ன கேட்கிறேன் இவன் என்ன கேட்கிறான் என்று அவனை பார்த்தாள். ஆனால் கை மட்டும் அவள் நினைப்பதற்கு மாறாக அவனிடம் நீண்டது.

அவள் கையை இடது கையில் வைத்துக்கொண்டு எதிரில் நின்றிருந்த அந்த பிச்சைக்காரனின் கையையும் இவனே எடுத்து கொண்டு அவளிடம் காட்டி "இப்ப ரெண்டு கையும் எவ்ளோ அழக்க்கா…... மேட்சா இருக்குல்ல" என்றான்.

அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து அவள் கண்களும் முகமும் அதிர்ச்சியை காட்டியது.

உடனே "கட்ட சொல்லுடா தாலியை" என்று கர்ஜிக்கும் குரலில் அவன் பக்கத்தில் இருந்தவனிடம் உத்தரவிட்டான் அவளிடம் இருந்து பார்வையை தீர்ப்பாமலே.

அவளின் கண்கள் அதிர்ச்சியை தாங்கிக்கொண்டு கமலேஷ் கண்களையே பார்த்திருக்க அவன் பக்கத்தில் இருந்தவர்களின் வழிகாட்டுதளின் பேரில் மதுரவாணியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் அந்த பிச்சைக்காரன்.
 
Status
Not open for further replies.
Top