பிரம்மா 6
ஏதோ குழந்தைகளுக்கு கதை சொல்வது போல அவள் சொல்லிக் கொண்டு இருக்க, அவனோ "இது எத்தனையாவது மாடி தெரியுமா?" என்று கேட்டான். அவளோ "குத்துமதிப்பா மூணாவது மாடி இருக்கும் சார்" என்று சொல்ல, அவனோ "கரெக்ட்... மூணாவது மாடில இருந்து வெளி இடத்தை சுத்தி பார்க்க ஃபான் லைட்டுக்குளால பாய்ஞ்சியா?" என்று கேட்க அப்போது தான் அவள் செய்த செயலின் வீரியம் புரிந்தது. தப்பிக்க வேண்டும் என்கின்ற முனைப்பில் அதனை மறந்து விட்டாள் அல்லவா? அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, " இதே நேரம் நீ ஆசைப்பட்ட போல வெளிப்பக்கம் இருந்து இருந்தா உன்னோட தலை இப்போ சிதறி இருக்கும், உனக்கு வேகம் இருக்கு. விவேகம் பத்தல" என்று சொல்ல, அவளோ அவமானத்துடன் குனிந்து கொண்டாள். அவனோ முட்டியில் கை குற்றி எழுந்து அவள் முன்னே வந்து நின்றவன் " நான் யாரை வேணும்னாலும் மன்னிப்பேன்.. ஆனா நான் நம்புன ஒருவன் நம்பிக்கை துரோகம் பண்ணுனா அவனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்" என்று அழுத்தமாக சொல்ல, அவளோ அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள். அவனோ "இதுக்கு தண்டனை வேணாமா?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க அவளோ "எச்சி காபி குடிக்கணுமா சார்?" என்று சற்றே அருவருப்புடன் கேட்டாள். அவனோ "உன் பிரென்ட் சொல்லி இருப்பானே" என்று ராஜ்ஜை பற்றி கூற, அவளுக்கு அப்போது தான் பீட்டரின் நினைவு வந்தது. அவள் விழிகளோ "சார்" என்று விரிந்து கொள்ள, அவளது கையை பற்றியவன் அவளை தர தரவென இழுத்துச் செல்ல அவளோ "ப்ளீஸ் சார் இனி அப்படி பண்ண மாட்டேன்.. என்னை விட்ருங்க" என்று கெஞ்சுதலாகக் கேட்டாள் . அவன் தான் அடங்கிப் போனால் ஆசானாகவும் எதிர்த்து நின்றால் ஆக்ரோஷமாகவும் ஆகி விடுபவன் அல்லவா??
தான் சொன்னதை மீறினால் அவனிடம் மன்னிப்பு என்பது கிடைக்காத விடயமாகி போக அவளை அங்கிருந்த ஒரு தனி அறைக்குள் தள்ளி விட்டவன் வாசல் கதவை சாத்த அவளோ "சார் ப்ளீஸ் சார் விட்ருங்க.. இனி இப்படி பண்ண மாட்டேன் " என்று பதட்டமாக சொன்னாள். அவளையும் மீறி அவள் கண்கள் கலங்கிப் போக அங்கே இருந்த கண்ணாடிப் பெட்டியில் இருந்த பீட்டரை சித்தார்த் தூக்கி எடுக்க அவளது விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டன.
பெண் போலீஸ் அவளுக்கு எலி என்றாலே ஒரு அருவருப்பு கலந்த பயம் இருக்க, அது கடித்ததை பற்றி ராஜ் வேறு சொல்லி இருக்க பதறிப் போனவள் "சார் ப்ளீஸ் சார் வேணாம்" என்று கெஞ்சுதலாகக் கேட்டாள். அவனோ அவளை நெருங்கி "இத நீ தப்பு பண்ண முதல் யோசிச்சு இருக்கணும்" என்று சொன்னவன் அதனை உள்ளங்கையில் வைக்க அதுவோ அவனது விரலை முகர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தது. அவன் விழிகளோ கோபத்தின் உச்சத்தில் இருக்க அவள் செய்த செயலை அவனால் மன்னிக்கவே முடியவில்லை. அவனுக்கு தான் அழுத்தமும் கோபமும் திமிரும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றது அல்லவா?? அடுத்த கணமே அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே எலியை அருகே கொண்டு செல்ல அவளோ "சார் ப்ளீஸ் வேணாம். என்னவோ போல இருக்கு சார்" என்று சொல்லிக் கொண்டே பின்னால் சென்றாள். அவனோ "ஒரு போலீஸ்காரி நீ, இந்த எலிக்கு பயப்படலாமா?? இந்த லட்சணத்தில் இங்க இருந்து தப்பிக்கிற அளவுக்கு பிளான் போட்டு இருக்க" என்று சொல்ல அவளும் எலியை விட்டு விலகி அடி மேல் அடி வைத்து பின்னால் சென்றவளுக்கு மேலும் நகர முடியாதவாறு சுவர் தடுத்துக் கொண்டு இருந்தது.
ஒரு கட்டத்தில் சுவரில் சாய்ந்து நின்று கையைக் கூப்பி "எலின்னா மட்டும் பயம் சார்.. ராஜுக்கு கடிச்ச போல எனக்கும் கடிச்சிடுமோன்னு பயமா இருக்கு" என்று கண்கள் கலங்க சொன்னாள். அவனோ "இப்போ நல்லா சாப்பிட்டு இருக்கான் பீட்டர்.. சோ கடிக்க மாட்டான். பயப்படாதே.. செக் பண்ணிடலாமா?" என்று கேட்டுக் கொண்டே அந்த எலியை அவள் கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் அவளது தோள் வளைவில் வைத்தவன் ரெண்டெட்டு பின்னே சென்று மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்க கொண்டே அவளைப் பார்த்தான்.
அவளுக்கோ எலி மேனியில் பட்டதுமே உச்சக்கட்ட பயம் உருவாக சத்தமாக கத்தியபடி கையினால் எலியை தட்டி விட முயன்றாள். ஆனால் அந்த எலியோ அவள் கழுத்தடியில் ஊர்ந்து அவள் ஆடைக்குள் புகுந்து விட விதிர் விதிர்த்துப் போனாள் பெண்ணவள். அவனோ எந்த அசைவும் இல்லாமல் இதழில் ஒரு கேலி புன்னகையுடன் அவளை பார்க்க அவளோ பயத்தில் உடையை உதறிய போதிலும் அந்த எலி வெளியே வரவில்லை. அந்தக் கணத்தில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் போட்டிருந்த ஷேர்ட்டை முற்றாக கிழித்து இருந்தாள் எலியை வெளியேற்றும் பொருட்டு. அது வரை அவளை கேலிப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்ற சித்தார்த்தின் இதழ்களோ அவளது செயலால் இறுகிப் போக அவளிடம் இருந்து பார்வையை அகற்றி விழிகளைத் தாழ்த்திக் கொண்டவன், முதல் முறை தான் செய்த செயலை நினைத்து சங்கடப்பட்டவனாக விழிகளை மூடி திறந்தான். அவளோ உடையை கிழித்து விட்டு தோள்ப் பட்டையில் ஓடிய எலியை தட்டி விட்டவளுக்கு கண்ணீர் மட்டும் ஆறாக பெருகியது. சக பெண்கள் முன்னே கூட உடை மாற்ற கூச்சப்படும் அவளுக்கு யாரென்று தெரியாத ஆடவன் முன்னே இந்த நிலைமை என்றால் அவளும் என்ன தான் செய்வாள்?
அடுத்த கணமே கீழே அமர்ந்து இரு கைகளாலும் தன்னை மறைத்துக் கொண்டே அழுதவள் "இதுக்கு தானே ஆசப்பட்டீங்க இப்போ சந்தோஷமா?" என்று கேட்க கேட்டபடி விம்ம, அவனுக்கே குற்ற உணர்வாகி போனது. அடுத்த கணமே சற்றும் யோசிக்காமல் போட்டிருந்த ஷேர்ட்டை கழட்டி அவள் மீது போர்த்தி விட்டவன் "ஐ ஆம் சாரி" என்று அவளைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டே திரும்பினான். இவ்வளவு நேரமும் அவள் கண்களை தவிர்த்து அவன் பார்வை அவளை விட்டு கீழ் இறங்கவே இல்லை. முதல் முறை அவளது பெண்மையை சீண்டி விட்டோமோ என்கின்ற தவிப்பு அவனுக்கு. அவன் முதல் முறை வாய்விட்டு மன்னிப்பு கேட்டதும் அவளிடம் தான். அவளை சீண்டத் தான் நினைத்தவன் இப்படி ஒரு விபரீதத்தை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அடுத்த கணமே கீழே ஓடிக் கொண்டு இருந்த பீட்டரை தூக்கி கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்தவன் அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்து "ஷேர்ட்டை போட்டுட்டு வா, உன்னை கொண்டு ரூம்ல விடுறேன்" என்று சொன்னான். அவளோ கண்ணீருடன் ஏறிட்டு அவனைப் பார்த்தவள் கோபத்தில் தன்னை மூடி இருந்த ஷேர்ட்டை எடுத்து அவன் முகத்தில் எறிய அவனோ கண்களை மூடித் திறந்தான். வேறு நேரம் என்றால் அவள் இப்படி உதாசீனம் செய்வதற்கு அவள் கன்னம் பழுத்து இருக்கும். ஆனால் அவன் செய்த தவறினால் அக்கணம் மௌனியாகி போனான்.
அவளோ அவனை உறுத்து விழித்து, "அது தான் இங்க இருக்கிற சி.சி.டி.வில எல்லாமே ரெக்கார்ட் ஆகி இருக்குமே, இதுக்கு மேல என் கிட்ட மறைக்க என்ன இருக்கு?" என்று கேட்க அவனோ அவள் ஷேர்ட்டை எறிந்ததில் இருந்து அவளைப் பார்க்காமல் விழிகளைத் தாழ்த்தி இருந்தவன் "இங்க சி.சி.டி.வி இல்ல" என்று சற்று கரகரத்த குரலில் கூறினான். அவளோ "சி.சி.டி.வி இல்ல, ஆனா நீங்க என் முன்னாடி தானே இருக்கீங்க, சின்ன வயசிலேயே என் அம்மா முன்னாடி கூட நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணுனது இல்ல தெரியுமா?" என்று கண்ணீருடன் சொல்ல, பெருமூச்சுடன் சட்டென நிமிர்ந்து அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன் "இப்போ வரைக்கும் என்னோட கண் உன்னோட கண்ணையும் இந்த நிலத்தையும் தவிர எதையுமே பார்க்கல" என்று சொல்லிக் கொண்டே கீழே இருந்த ஷேர்ட்டை எடுத்து மீண்டும் அவளுக்கு போர்த்தி விட்டு எழுந்தவன் "வெளியே வெய்ட் பண்ணுறேன், சீக்கிரம் வா" என்று சொல்லி விட்டு வெளியே சென்று நின்று கொண்டான். அவளுக்கோ மனம் வெதும்பி போக கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது. தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சித்தார்த் மீது வந்த கொலை வெறி இருந்த போதிலும் வேறு வழி இன்றி தன்னிலையை நினைத்து நொந்தவாறு அவனது ஷேர்ட்டை அணிந்து கொண்டாள். அது அவளுக்கு பெரிதாக இருக்க போதிலும் அவனது ஷேர்ட்டின் கையை மடித்து விட்டவளுக்கு அழுகை மட்டும் நிற்கவே இல்லை. அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடிய சம்பவம் அல்லவே அது. அவனோ இடையில் ஜீன்ஸுடன் மட்டும் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நிற்க, கதவைத் திறந்து கொண்டு வந்தாள் அவள். அவனோ முன்னே நடக்க, அவள் பின்னே நடந்து வந்தாள். இருவரும் அடுத்து ஆராய்ச்சி கூடத்தைத் தாண்டி தான் அவர்கள் அறைக்குள் செல்ல வேண்டிய கட்டாயமாக இருக்க, ஆராய்ச்சி கூடத்தினுள் நுழைந்தார்கள்.
அக்கணத்தில் வெற்று மார்புடன் சித்தார்த்தும் அருகே அவன் ஷேர்ட்டை அணிந்து கொண்டு வந்த காயத்ரியையும் கண்ட அங்கு வேலை செய்பவர்களின் விழிகளோ விரிந்து கொள்ள, அவனுக்கு தான் இப்படி நடமாடுவது சங்கடமாகி போனது. அவன் உடற்பயிற்சி மூலம் படிக்கட்டு உடலை கொண்டு இருந்தாலும் அடுத்த ஆண்கள் போல அதைக் காட்டிக் கொண்டே நடந்து திரிவது இல்லை. தனது தொழிலுக்கும் படிப்புக்கும் உரிய மதிப்பை கொடுப்பவன், இன் பண்ணிய ஷேர்ட் மற்றும் ஜீன்ஸ் தவிர்த்து எந்த உடையையும் அந்த ஆய்வுகூடத்துக்குள் அணிந்து வந்தது இல்லை. அப்படி நேர்த்தியாக உடை அணிபவனுக்கு சங்கடமாக இருந்தாலும் தான் செய்த தவறுக்கு இதை தண்டனையாக ஏற்றுக் கொண்டான். ஆனாலும் இருவரும் வரும் நிலையைக் கண்டு அவர்கள் மனதில் எப்படியான எண்ணம் ஓடும் என்று அவனுக்கு புரியாமல் இல்லை.
அவன் முகமோ நிமிர்ந்து இருக்க, "ஐ வில் பீ பக் சூன்" என்று சொல்லிக் கொண்டே முன்னே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தவனையும் பின்னால் தலையை குனிந்து கொண்டே கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வந்த காயத்ரியையும் பார்த்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். அவர்கள் அறிந்து சித்தார்த் எந்த பெண்ணுடனும் அத்து மீறி நடந்தது இல்லை.. அப்படிப்பட்டவன் இப்படி ஒரு கோலத்தில் வருவதைக் கண்டு சற்று அதிர்ச்சி தான் அவனிடம் வேலை பார்ப்பவர்களுக்கு. அதே சமயம், ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே அவளது அறையை நோக்கிச் சென்றவன் அவளை திரும்பிப் பார்க்க, அவளோ அவனைப் பார்க்காமல் அறைக்குள் புக முறைப்பட்டாள். அவனோ குரலை செருமிக் கொண்டே "காயத்ரி" என்று அழைக்க, அவளும் நடையை தளர்த்த, "ஐ ஆம் சாரி அகைன்" என்று சொன்னவன் மேலும் குரலை செருமிக் கொண்டே "நீ நம்புறியோ இல்லையோ சத்தியமா உன் கண்ணை தவிர நான் எதையுமே பார்க்கலடி" என்று சொல்ல, அவளோ விறு விறுவென உள்ளே நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள். அவனுக்கே தன்னை நினைத்து அதிர்ச்சி தான். முதல் முறை ஒரு பெண் தன்னை நம்ப வேண்டும் என்று படாத பாடு படுகின்றான் அல்லவா? கதவு அடைக்கப்பட கண்களை மூடித் திறந்தவன் தனது அறைக்குள் அழுத்தமான மனதுடன் நுழைந்து கொள்ள, கதவை சாத்தி விட்டு கதவில் சாய்ந்து நின்ற காயத்ரியோ மனதில் உண்டான வலியை கண்ணீர் கொண்டு ஆற்றிக் கொண்டு இருந்தாள்.