பிரம்மா 22
அஜய் மற்றும் ஷாந்தியின் வாழ்க்கை சீராக சென்ற போதிலும், பீட்டருடனேயே மாதக் கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருந்தது என்னவோ காயத்ரி தான். காலையில் எழுந்து பீட்டருக்கு சாப்பாடு வைப்பவள், பின்பு பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவாள். அதன் பின்னர் அங்கும் இங்கும் அலைந்து திரிபவளை எப்போதாவது சித்தார்த் கண்டால் ஒரு சின்ன தலையசைப்பு அவ்வளவு தான். ஆனாலும் அவன் சொன்ன ஒரே காரணத்துக்காக அவனை அவள் தொந்தரவு படுத்தவே இல்லை. அவள் இவ்வளவு நாள் இருந்து சாதித்த ஒரே விடயம், சித்தார்த்திடம் பேசி அவளது நண்பர்கள் வாசு, அமல் மற்றும் ராஜ்ஜை விடுவித்தது மட்டும் தான். மற்றும் படி அவள் அதிக நேரம் செலவு செய்யும் ஒரே நபர் பீட்டர் தான்.
அவளுக்கு போன வாரம் தான் ஷாந்தி மூலம் அவள் கர்ப்பமாக இருக்கும் விடயம் தெரிய வர, வானுக்கும் பூமிக்கும் குதித்தாள். ஆனால் சித்தார்த்தோ அவளிடம் இதைப் பற்றியோ தமது வாழ்க்கையை தொடங்குவதைப் பற்றியோ பேசவே இல்லை.
சித்தார்த்துக்கும் அஜய் தானும் ஷாந்தியும் இருக்கும் புகைப்படத்தை அனுப்பி "வீ ஆர் ப்ரொமோட்டட்" என்று எழுதி இருந்தான். அதை அனுப்பும் போதே ஷாந்தி "அவர் உங்க க்ளோஸ் பிரென்ட் ஆஹ்" என்று கேட்க "ம்ம்" என்று மட்டுமே சொன்னான். அவனும் சரி சித்தார்த்தும் சரி அவர்களின் ஜீனோம் எடிட்டிங் விடயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று தீர்மானித்து இருந்தார்கள் மனைவி உட்பட. சில விஷயங்களை மறைப்பதும் மறந்து போவதும் தான் வாழ்வில் பல பிரச்சனைகளை தவிர்க்கும் என்று நினைத்தவர்கள் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது. அஜய் அதில் அவ்வளவு தீவிரமாக இருக்கவில்லை என்றாலும் சித்தார்த் இந்த விடயம் யாருக்கும் தெரியக் கூடாது என்று தீவிரமாக இருந்ததால் அந்த விடயம் அவர்களுக்குள்ளேயே அடங்கி போனது. ஷாந்தியோ அஜய்யிடம் " நான் காயத்ரி கிட்ட பேசினேன். இன்னும் அவளை ஏத்துக்கலன்னு சொல்லி பீல் பண்ணுனா.. நீங்க பேசிப் பார்க்கலாமே" என்று சொல்ல, அவனோ அவளை திரும்பிப் பார்த்து "நான் பேசணும்னு அவசியம் இல்ல. அவனுக்கு எப்போ என்ன பண்ணனும்னு நல்லாவே தெரியும்.. இந்த போட்டோ கண்டிப்பா அவங்க வாழ்க்கைல மாற்றத்தை உண்டாக்கும்.. சிரிச்சிட்டு இருக்கேன்னு அவன் என்னோட வாயை பார்க்க மாட்டான். கண்டிப்பா கண்ணை தான் பார்ப்பான்.. இதுல என் கண்ணும் சிரிக்குது பாரு.. ஏன்னா எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு... அவனுக்கு இது மட்டுமே போதும், என் சந்தோசம் மட்டுமே போதும்.." என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே சொன்னவன் அவள் நெற்றியில் முத்தமிட, அவளோ அவன் தோள்களில் வாகாக சாய்ந்து கொண்டாள்.
அவன் சொன்ன போலவே சித்தார்த் பார்த்தது அஜய்யின் விழிகளை மட்டும் தான். திருமண புகைப்படத்தில் இல்லாத சந்தோசம் இன்று அவன் விழிகளில் தெரிய, அதைக் கண்ட சித்தார்த்தின் இதழ்களோ தாராளமாக புன்னகைத்துக் கொண்டன. என்ன மாதிரியான உணர்விது ? குழந்தைகள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து பெற்றோர் சந்தோஷப்படுவது போன்ற தன்னலமற்ற சந்தோஷம்.. அடுத்த கணமே அவன் "உன் கண்ணே எல்லாம் சொல்லிடுச்சு.. கங்கிராட்ஸ் டியூட்" என்று அனுப்ப, அதைப் பார்த்த அஜய் "நான் சொன்னேன் ல" என்று போனை தூக்கி காட்டினான்.
அஜய்யும் சித்தார்த்தும் உடலால் தனித்து இருந்தாலும் மனதால் இன்னும் நெருக்கமாக தான் இருந்தார்கள். மணிக்கணக்காக பேசிக் கொள்வதில்லை. அரட்டை அடிப்பது இல்லை. முக்கியமான வாழ்வில் நிகழ்வுகள் மட்டுமே பரிமாறிக் கொள்பவர்களுக்கும் அப்படி ஒரு நெருக்கம்.
சில உறவுகள் நிலைப்பதற்கு தூரம் தடையில்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் அந்த மனதின் நெருக்கம் போதுமானது. அப்படி ஒரு நெருக்கம் தான் இருவரிடத்திலும்.. அந்த புகைப்படத்தைக் கண்ட சித்தார்த்தின் மனதில் பாரம் நீங்கிய உணர்வு. ஆனாலும் அவனுக்கோ ஒரு முக்கியமான ஆராய்ச்சி வேலை இருக்க, அது முடியவே காயத்ரியிடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்தான்.
அவன் வேலையில் மும்முரமாக இருக்க அவன் பேசுவான் என்று நினைத்து ஏமாந்த காயத்ரி பேசிக் கொண்டு இருந்தது என்னவோ பீட்டரிடம் தான். காலையில் அதற்கு உணவை வைத்தவள் "இங்க பாரு பீட்டரு.. நீயும் சிங்கிள் நானும் சிங்கிள், உன்னோட சயின்டிஸ்ட் உனக்கும் ஜோடி சேர்க்க மாட்டார். அவரும் ஜோடி சேர மாட்டார்.. நம்ம ரெண்டு பேரோட லைஃப்பும் இப்படி சிங்கிள் ஆவே முடிஞ்சிடும்னு பயமா இருக்கு டா" என்று சொல்லிக் கொண்டு இருக்க, அந்த சமயம் உள்ளே நுழைந்த சித்தார்த் "யார் கிட்ட பேசிட்டு இருக்க?" என்று கேட்டுக் கொண்டே அந்த அறையில் இருந்த அலுமாரியை திறந்தான். அவன் வந்தது அவளுக்கு தூக்கி வாரிப் போட்டாலும் "அப்பாடா விளங்கல நாம பேசுனது" என்று நினைத்தவள் "நான் பீட்டர் கூட தான் பேசிட்டு இருக்கேன்.. நான் சொல்றது அவனுக்கு மட்டும் தான் புரியுது" என்று சொன்னாள். அவனோ "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த பைலை எடுக்க, அவளோ "சித்தார்த்" என்று அழைக்க, அவனும் " என்ன?" என்று கேட்டான். அவளோ "பீட்டரை பார்க்க பாவமா இல்லையா?" என்று கேட்க அவனோ "ஏன் பாவம்?" என்று கேட்டான். அவளும் "ஹி ஹி " என்று வலுக்கட்டாயமாக சிரித்தவள் "எத்தனை நாளைக்கு தான் அதுவும் தனியா இருக்கிறது? அதுக்கும் பொண்டாட்டி குழந்தைங்க கூட சந்தோஷமா இருக்கணும்னு ஆசை இருக்கும் தானே" என்று கேட்க அவளை புருவம் சுருக்கி பார்த்தவனுக்கு ஏதோ புரிவது போல இருந்தாலும் அதனை காட்டினால் தானே அவன் சித்தார்த் இல்லையே..
உடனே அவன் "க்கும்" என்று குரலை சேருமிக் கொண்டே "அவன் சந்நியாசி, என்னை போல.. என்னோட ஆராய்ச்சி முடிய ரெண்டு பேரும் இமயமலைக்கு போகலாம்னு இருக்கோம்" என்று சொல்ல, அவளோ அவனை யோசனையாக பார்த்தவள் "எத? சந்நியாசியா? உங்கள போலவா? யாரை கேட்டு சந்நியாசி ஆக போறீங்க?" என்று கேட்டாள். அவனோ "யாரைக் கேட்கணும்?" என்று கேட்க அவளோ "என்னை கேக்கணும்.. உங்களுக்காக இங்க மாசக்கணக்கில காத்துட்டு இருக்கிற என்னை கேட்கணும்.. என் கிட்ட என்ன வாக்கு கொடுத்தீங்கன்னு தெரியுமா?" என்று சொன்னாள். அவனோ "ம்ம் , நான் மனசு மாறும் வரைக்கும் ஸ்பேஸ் கேட்டேன்.. இப்போ கூட மனசு மாறி கல்யாணம் பண்ணிக்கிறேன்.. அப்படி பண்ணிக்கிட்டா கூட என்ன மாறிட போகுது? நீ உன் ரூம்ல இருந்து என் ரூமுக்கு ஷிப்ட் ஆவ.. அப்புறம் நான் டெய்லி வேர்க் பண்ணுவேன்.. நீ பீட்டரை பார்த்துப்ப.. அவ்ளோ தானே. அதுக்கு மேல என்ன இருக்கு? சோ நாங்க இமாசலம் போறதுல எந்த தடையும் இல்லயே" என்று சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தவள் அவன் முன்னே வந்து நின்று "கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ்ளோ தானா? வேற ஒண்ணுமே இல்லையா?" என்று கேட்க அவன் அந்த கணம் சிரிப்பை அடக்க படாத பாடு பட்டு போனான். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே "வேற என்ன இருக்கு?" என்று தோள்களை உலுக்கியபடி கேட்க அவளோ "அரைகுறையா சயன்ஸ் படிச்ச எனக்கே கொஞ்சம் தெரியும்.. ஒரு சயின்டிஸ்ட் உங்களுக்கு ஒண்ணும் தெரியாதா?" என்று கேட்டாள். அவளுக்கும் அவன் விளையாடுகிறானோ? அந்தளவுக்கு தெரியாம இருக்குமா? என்றெல்லாம் எண்ணம் வந்து போனது.
அவனோ மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டே அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் "சரி சொல்லு உனக்கு என்ன தெரியும்?" என்று கேட்க, அவளும் "அன்னைக்கு கிஸ் பண்ணுனீங்க தானே.. இப்போ சும்மா விளையாடுறீங்க தானே" என்று கேட்டாள். அவனோ "நான் பீட்டரை கூட தான் கிஸ் பண்ணுவேன்" என்று சொல்ல, அவள் முகமோ சுருங்கி போக "அந்த வாயாலயா என்னை கிஸ் பண்ணுனீங்க?" என்று கேட்க அவனோ சிரிப்பை அடக்கிக் கொண்டு "ம்ம்" என்று சொன்னான். அவளோ தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவள் "சரி அத, விடுங்க, அப்புறம் அது கூட கிடைக்காம போயிடும்.. கிஸ் பண்ண தெரிஞ்ச உங்களுக்கு அதுக்கு மேல ஒண்ணும் தெரியாதா? பீட்டரை கிஸ் பண்ணுறதும் என்னை கிஸ் பண்ணுறதும் ஒண்ணா?" என்று கேட்க அவனோ "ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டான். அப்போது தான் அவன் இதழ் அருகே தெரிந்த குறும்பு புன்னகையை கண்டு கொண்டவள் "நினச்சேன்.. என்ன ஒரு நடிப்பு" என்று எண்ணிக் கொண்டே "ஆஹ் ஒண்ணும் வித்யாசம் இல்ல, எல்லாமே ஒண்ணு தான்.. நீங்க பீட்டரையே கல்யாணம் பண்ணிக்கோங்க" என்று சொல்லி நகர முற்பட அவனோ அவள் கையை பிடித்தவன் "சொல்லிட்டு போ, கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்?" என்று கேட்டான். அவளுக்கும் அவள் வாயில் இருந்து எதாவது பேச வைப்பதில் அவனுக்கு அப்படி ஒரு இன்பம். அவளோ "ஒண்ணுமே நடக்காது.. நீங்க அந்த பக்கம் திரும்பி படுப்பீங்க, நான் இந்த பக்கம் திரும்பி படுப்பேன் அவ்ளோ தான்" என்று சொல்ல, அவனோ "அவ்ளோ தானா? அப்போ குழந்தை?" என்று கேட்க இடையில் கை வைத்து அவனை முறைத்தவள் "வானத்துல இருந்து விழும்.. தூக்கி வளர்க்க வேண்டியது தான்.. போதுமா?" என்று கேட்க அவன் இம்முறை அடக்க முடியாமல் இதழ் பிரித்து "ஹா ஹா " என்று சிரித்தவன் "அப்போ நானும் பீட்டரும் இமயமலைக்கு கிளம்பலாமா?" என்று கேட்க அவளோ "தாராளமா போங்க.. இமயமலைக்கு என்ன? சிங்கப்பூர் மலேஷியான்னு எல்லா இடமும் ஹனிமூன் கூட போங்க.. எனக்கு என்ன வந்தது?" என்று சொல்லிக் கொண்டே இதழ்களை சுளித்தவள்
விறு விறுவென சென்று பீட்டர் அருகே அவனை முறைத்தபடி நின்று கொள்ள, அவனோ அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு வெளியேறி இருந்தான்.
அவன் சென்றதுமே, பீட்டரைப் பார்த்தவள் "உன் சயின்டிஸ்ட் என்னடா இப்படி இருக்கிறார்.. ஒரு பொண்ணு நானே அவரை தேடி இவ்ளோ தூரம் வந்து இருக்கேன்.. ஆனா என்னை கண்டுக்கவே மாட்டேங்குறார்.. ரொமான்ஸ் என்கிறது என் வாழ்க்கைல கனவாவே போயிடுமோ" என்று புலம்பியவள் பீட்டரை பார்க்க அது தூங்கிக் கொண்டு இருந்தது. "க்கும், உனக்கு அத பத்தி கவலையே இல்ல.. பெர்ஸ்ட் உனக்கு ஒரு பொண்ணு பார்க்கணும்.. அப்போ தான் ஆக்டிவ் ஆஹ் இருப்ப" என்று சொல்லிக் கொண்டவள் வெளியேறி பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற போனாள்.
அன்று இரவு அவனும் வேலையை முடித்து விட்டு அறைக்குள் வந்த போது வாசலில் இருந்த நிலையில் சாய்ந்து நின்ற காயத்ரியோ "க்கும்" என்று குரலை சேரும, அவளை தாண்டி சென்றவன் ஒரு கணம் நின்று சலிப்பாக திரும்பி பார்த்து "என்னடி?" என்று கேட்டான். அவளோ "ஒன்னும் இல்ல, ஷேர்ட் நல்லா இருக்கு" என்று சொல்ல, அவனோ "ம்ம் அப்புறம்" என்று சொன்னான். அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள் "பாண்ட் கூட நல்லா இருக்கு" என்க, அவனோ "அதோட நிறுத்திக்கோ" என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே கூற அவளோ "பார்த்ததை மட்டும் தான் நல்லா இருக்குன்னு சொல்லுவேன்.. பார்க்காததை எப்படி நல்லா இருக்குன்னு சொல்லுறது? சொல்லனும்னா காட்டணும்" என்று கேட்க "அடிப்பாவி.. என்ன பேச்சுடி பேசுற?" என்று கேட்டுக் கொண்டே அவளை நோக்கி வர, அவளோ "அய்யய்யோ" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
அவனோ அதிர்ச்சியாக விழி விரித்து இரு பக்கமும் புன்னகையுடன் தலையாட்டியவன் "இவ போக்கே சரி இல்ல" என்று முணு முணுத்துக் கொண்டே தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.