பிரம்மா 11
அவன் உள்ளே நுழைந்த கணத்தில், பேசிக் கொண்டு இருந்த சித்தார்த்துக்கு பக்கவாட்டாக நின்ற ராமோ அங்கிருந்த போலீஸ்காரர்கள் நடுவே புகுந்து கொண்டு இடுப்பில் இருந்த பிஸ்டலை தூக்கி கையில் எடுத்து இருந்தான். அஜய்யோ சற்று பதட்டமாகவே உள்ளே நுழைந்து அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே நடக்க, பின்னால் வந்த போலீஸ்காரன் "அங்க நிக்கிறான் சார்" என்று கூட்டமாக இருந்தவர்கள் நடுவே நின்ற ராமைக் காட்ட, சட்டென திரும்பி அவன் காட்டிய திசையில் பார்க்க ராமோ கையில் இருந்த பிஸ்டலை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே மேலே உயர்த்த யோசித்துக் கொண்டு இருந்தான். அந்த நேரம் சித்தார்த்தும் பேச்சை முடித்துக் கொள்ள, அவனது கண்டுபிடிப்பை பாராட்டும் பொருட்டு மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் கூட எழுந்து நின்று கையை தட்ட போலீஸ்காரர்களும் கையை தட்டிக் கொண்டு இருந்ததால் யாருமே ராமைக் கவனிக்கவில்லை அஜய்யை தவிர. அரங்கம் அமைதியாக இருந்தால் கூட ராமை இலகுவாக பிடித்து இருப்பான்.. ஆனால் இந்த சத்தங்களில் மத்தியில் அவனால் சத்தம் போடவும் முடியாமல் இருக்க, வேகமாக மேடையை நோக்கி ஓடினான் அஜய். சித்தார்த்தோ மென் புன்னகையுடன் நன்றி சொல்லிக் கொண்டு இருந்த தருணத்தில், நரேனோ ராமிடம் கண்களைக் காட்ட, ராமும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே பிஸ்டலை தூக்கி சித்தார்த்தைக் குறி பார்க்க, தன்னை நோக்கி அஜய் ஓடி வருவதை சித்தார்த் புரியாமல் பார்த்தான். அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த அஜய் "சித்தார்த் டவுன்" என்று கத்த, அவன் குரல் கேட்காவிட்டாலும் அவன் கையசைவு கீழே குனிய சொல்லி சொன்னதை உணர்ந்த சித்தார்த் அடுத்த கணமே கீழே குனிந்து கொள்ள, ராம் சுட்டது அவன் தலைக்கு மேலாக சென்று அவனுக்கு மறுபக்கம் நின்ற போலீசின் தோள் பட்டையில் பட, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.. குண்டு பட்ட போலீஸ்காரனோ தோள்பட்டையை பிடித்துக் கொண்டு கத்தியபடி கீழே விழ , ராமோ அதிர்ச்சியுடன் அங்கிருந்து ஓட ஆரம்பிக்க, அவனை சுற்றி வளைத்துப் பிடிக்க, அஜய் அருகே செல்ல முதல் அவன் மூளை வெடித்துச் சிதறி இருந்தது பிரசாத் சுட்டதில். அவன் அருகே சென்ற அஜய் முகத்தில் அந்த ரத்தம் தெறிக்க சட்டென திரும்பி பிரசாத்தைப் பார்க்க அவரோ பக்கத்தில் நின்ற கமிஷனரிடம் "சாரி சார், அவன் பண்ண இருந்த அநியாயத்தை பொறுத்துக்க முடியல, என் மேல என்ன ஆக்ஷன் வேணும்னாலும் எடுங்க" என்று சொன்னார். அதே சமயம், அங்கிருந்தவர்களை போலீசார் பத்திரமாக அழைத்து செல்ல, கீழே இருந்து சட்டென எழுந்த சித்தார்த்தையும் சூழ்ந்து கொண்ட போலீசார் அவனையும் பத்திரமாக அழைத்துச் சென்றார்கள்.
போகும் போது அவன் விழிகள் அங்கிருந்த அஜய் மீது படியே, அஜய்யின் விழிகளும் ஒரு கணம் சித்தார்த் மீது யோசனையாக படிந்தது. இடையில் ராமிடம் இருந்து உண்மையை கறக்க சந்தரப்பத்தை வழங்காமல் பிரசாத் அவனை கொன்று இருக்க, சற்றே நிம்மதியுடனும் ஒரு ஏமாற்றத்துடனும் அங்கிருந்து சென்றான் நரேன்.
அங்கிருந்த சிலரோ பிரசாத்தின் செயலை ஒரு பக்கம் புகழ, அஜய்யோ முகத்தில் இருந்த குருதியை பாக்கெட்டில் இருந்த டிஸ்ஸுவினால் துடைத்தவன் கண்கள் பிரசாத்தில் யோசனையாக படிந்து மீண்டது. அடுத்த கணமே அங்கிருந்த உடலை அகற்ற நடவடிக்கை எடுக்க, விறு விறுவென வெளியே வந்த அஜய்யோ தன் ஜீப்பில் ஏறிக் கொண்டே தனது நம்பிக்கையாக போலீஸ்காரனுக்கு அழைத்தவன் "பிரசாத்தை தூக்கணும்" என்று சொல்ல, அந்த போலீஸ்கரனோ "சார், அவர் நம்ம சுப்பீரியர் ஆச்சே" என்று பதட்டமாக சொல்ல, "டூ வாட் ஐ சே" என்று சொல்லிக் கொண்டே போனை வைத்து விட்டான். அவன் மனதில் ஆயிரம் யோசனைகள் ஓடிக் கொண்டு இருக்க, பிரசாத்தை நம்பி தான் காயத்ரி மிஷனுக்கு சென்றது வேறு உறுத்தலாக இருந்தது. அதே சமயம், ஆய்வுகூடத்தில் திரையில் விழுந்த செய்தியை படித்த காயத்ரிக்கோ இதயம் நின்று துடித்தது. "கருத்தரங்குக்கு கலந்து கொள்ளச் சென்ற டாக்டர் சித்தார்த்தைக் கொல்ல முயற்சி. மயிரிழையில் உயிர் தப்பினார்" என்று தலைப்பில் சொன்ன விடயத்தைக் கேட்டவள் பயந்து போனாள். போலீஸ் டிபார்ட்மெண்டில் இருப்பவளோ எத்தனையோ கொலைகள் பார்த்து இருக்கின்றாள் ஆனால் முதல் முறை தன்னவன் உயிருக்கு ஆபத்து என்று அறிந்ததுமே அவளால் நிற்க கூட முடியாமல் கால்கள் நடுங்க ஆரம்பித்தன.. அன்று முழுதும் அவளால் சாப்பிடவும் முடியவில்லை தூங்கவும் முடியவில்லை.. அடுத்த நாள் அதிகாலை அறைக்குள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு சித்தார்த் வந்து சேர்ந்த சத்தம் கேட்டது.. ஆம் அவனது அழுத்தமாக காலடிகள் கேட்க, சட்டென கதவை திறக்க அவனோ தனது அறைக்குள் நுழையப் போனவன் ஒரு கணம் நின்று அவளைப் பார்த்து "ஆர் யூ ஓகே?" என்று கேட்டான்.
அவளோ அடுத்த கணமே அவனை நோக்கி கண்ணீருடன் ஓடி வர அவனோ அவளை யோசனையாகப் பார்க்க, கொஞ்சமும் யோசிக்காமல் அவனை இறுக அணைத்து இருந்தாள் அவள். அவன் கண்ணீரோ அவனது ஷேர்ட்டின் ஊடு புகுந்து திண்ணிய மார்பை நனைக்க "இப்போ எதுக்கு அழுற?" என்று மென் குரலில் கேட்டாள். அவளோ விம்மியபடி "உங்களுக்கு ஏதும் ஆகலையே.. உங்கள பார்க்கும் வரைக்கும் நிம்மதியே இல்ல" என்று மனதில் உள்ள பதட்டத்தில் காதலையும் சேர்த்து சொல்லி இருக்க, அவன் இதழ்களோ மெதுவாக புன்னகைத்துக் கொண்டது.. காதலிப்பதை விட காதலிக்கப்படுவது சுகம் அல்லவா? அதிலும் தனக்காக அழ ஒரு ஜீவன் இருக்கும் போது அதில் உண்டாகும் இன்பமே தனி அல்லவா?
அவனோ அவள் தலையை வருடியவன் "ஐ ஆம் பெர்பெக்ட்லி பைன், நீ போய் தூங்கு" என்று சொல்ல, நிதானத்துக்கு வந்தவன் சட்டென விலகிக் கொண்டே "ஐ ஆம் சாரி சார்" என்று அவனைப் பார்க்காமலே சொல்லி விட்டு நகர போக அவனோ "டூ யூ லவ் மீ?" என்று மென்மையாக கேட்டான். அவன் மென்மையை முதன் முதலில் உணர்பவள் அவள் தான். அவளோ சட்டென நின்றவள் "அப்படி தான் நினைக்கிறேன்" என்று குனிந்தபடி சொல்ல, அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தவன் "ஐ டூ லவ் யூ... நிம்மதியா தூங்கு" என்று சாதாரணமாக சொல்லி விட்டு தன்னறைக்குள் நுழைந்து கொள்ள, அவளுக்கோ "இப்போ அவர் என்ன சொன்னார்? எனக்கு தான் தப்பா கேட்டிச்சோ ?" என்று நினைத்தபடி சட்டென திரும்பிப் பார்க்க அவனோ அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணை சிமிட்டி விட்டு கதவை சாத்தினான். அதைக் கண்டு அவள் மேனி சிலிர்க்க, மென்மையாக புன்னகைத்தவள் ஒரு வெட்கத்துடனேயே தனது அறைக்குள் நுழைந்து இருந்தாள்.
அடுத்த நாள் காலையில் அவளை யாருமே வேலைக்கு அழைக்கவில்லை, அவளாகவே சென்று "என்ன செய்ய வேண்டும்?" என்று அவனிடம் கேட்க, அடக்கப்பட்ட சிரிப்புடன் "ரொம்ப தான் சின்சியாரிட்டி போல" என்று நக்கலாக சொன்னான். அவளோ "நான் சின்சியர் தான் சார்" என்று சொல்ல, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே "பீட்டரைப் பார்த்துக் கொண்டே இங்கேயே இரு" என்று மறைமுகமாக தன்னுடனேயே இரு என்று உரைக்க அதை உணர்ந்தவளும் சம்மதமாக தலையாட்டினாள். அவர்கள் காதல் அடிக்கடி பார்த்துக் கொள்வது, சீண்டலாக பேசிக் கொள்வது என்று வளர, திட்டமிட்ட படி பிரசாத்தை தூக்கி இருந்தான் அஜய். அவனது ரகசிய குடோனில் பிரசாத்தை நாற்காலியுடன் வைத்து கட்டி வைத்து இருந்த அஜய், உள்ளே அவரை அழுத்தமாக பார்த்துக் கொண்டே நுழைய "அஜய் நீயா?" என்று அதிர்ச்சியாக கேட்டார் அவர். அவனோ "நானே தான்" என்று விஷம சிரிப்புடன் சொல்ல, அவரோ "எதுக்கு என்ன கடத்துன?" என்று சற்று காட்டமாகவே கேட்டார்.
அவனோ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், முன்னே இருந்த பிரசாத்தை அழுத்தமாகப் பார்த்தவன் " காயத்ரி எங்க?" என்று கேட்க அவரோ "அஜய் என்ன விடு.. ஒரு சுப்பீரியர் ஆபீசரை இப்படி கடத்தி வந்து நீ நடந்துகிறது சட்டப்படி குற்றம்" என்று சொன்னார். அவனோ முன்னே இருந்த மேசையில் பாய்ந்து ஏறி அமர்ந்து கொண்டே அவர் இருந்த நாற்காலியில் காலை தூக்கி வைத்தவன் "குற்றமாவே இருக்கட்டும்.. இப்போ எனக்கு தெரிஞ்சாகணும் காயத்ரி எங்க??" என்று அழுத்தமாக கேட்டான். அவரோ "அது சீக்ரெட் மிஷன்.. உன் கிட்ட எல்லாம் சொல்ல முடியாது" என்று சொல்ல அவனோ "நீங்க போலீஸ் தானே... போலீஸ் ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும்னு தெரியும் தானே" என்று கேட்டபடி காலை தூக்கி அவரது கட்டப்பட்டு இருந்த விரலில் வைத்து பூட்ஸினால் நசுக்க அவரோ வாய் விட்டே அலறினர். யாருக்கும் பயப்படாதவனோ தன்னை விட உயர் பதவியில் இருப்பவரிடம் மிருகத்தனமாக நடந்து கொள்ள அவரோ " அஜய்.. ப்ளீஸ் வலிக்குது" என்று கத்தினார். அவனோ " இப்போ சொன்னா விட்ருவேன்.. இல்லன்னா " என்று சொல்லிக் கொண்டே எட்டி அருகே இருந்த சுத்தியலை எடுக்க பிரசாத்தின் கண்களோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது..
அவனோ சுத்தியலை மேசையில் தட்டியவாறு "என் மேல எத்தனை கொலை கேஸ் இருக்குன்னு தெரியுமா?" என்று கேட்க அவரோ "இருபதுக்கும் மேல" என்று நடுங்கிய குரலில் சொன்னார். அவனோ " அந்த லிஸ்ட்ல நீங்களும் வர ஆசைப்படுறீங்களா சார்??" என்று கேட்க இப்பொது அவருக்கு வியர்த்து வழிந்தது. ஆம் அவன் மிரட்டி விட்டு செல்பவன் அல்ல , செய்து விட்டே நகர்பவன் தான். அவரோ எச்சிலை முழுங்கிக் கொண்டு "நான் சொல்றேன் அஜய்.. என்னை ஒன்னும் பண்ணிடாதே" என்று ஆரம்பித்தவர் "டாக்டர் நரேன் சொல்லித் தான் நான் டாக்டர் சித்தார்த் கிட்ட எல்லாரையும் அனுப்பினேன்" என்று சொல்ல அவன் விழிகளோ இப்பொது அதிர்ச்சியில் விரிய "சித்தார்த் கிட்டயா?? அவன் கிட்ட எதுக்கு அனுப்பனும்??" என்று புரியாமல் கேட்க அவரும் நடந்ததை சொல்ல அவனோ மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டே அவர் சொன்னதைக் கேட்டவன், அவர் சொல்லி முடிய அனல் தெறிக்கும் விழிகளுடன் மேசையில் இருந்து பாய்ந்து இறங்கினான். பிரசத்தோ "இப்போ எனக்கே என்ன பண்ணுறதுன்னு தெரில" என்க, கையை உதறியவன் அடுத்த கணமே ஓங்கி அவர் கன்னத்தில் இடியாக அறைந்து இருந்தான் மேலதிகாரி என்றும் பாராமல்.
அவரோ அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, "காயத்ரியைக் பத்தி கேட்கிறதுக்காக உன்னை கடத்துனேன்னு நினைச்சியா? உன்னை கடத்துனதே உன்னை போட தான். நீ செத்தா காயத்ரி பற்றி டீடெய்ல்ஸ் எடுக்க முடியாதுன்னு ஒரே காரணத்துக்காக தான் உன் கிட்ட இன்போர்மேஷன் கலெக்ட் பண்ணினேன்... டிபார்ட்மென்டுக்கே துரோகம் பண்ணுற துரோகி தானே நீ.. அந்த கொலைகாரனை உள்ளே விட்டது நீ தான்னு எனக்கு நல்லாவே தெரியும்.. உன்னை போல துரோகிகளுக்கு டிபார்ட்மெண்டுல இடம் இல்ல" என்று சொன்னவன் மேசையில் இருந்த சுத்தியலை எடுத்து ஓங்கி அவர் தலையில் அடிக்க, அவரோ தலை வெடித்து ரத்தம் பீச்சியடிக்க அந்த இடத்திலேயே உயிரை விட்டார். அவரையே வன்மமாக பார்த்துக் கொண்டே, அடுத்த கணமே தன்னிடம் இருந்த போனில் தனது நம்பிக்கையாக பொலிஸாருக்கு அழைத்தவன் "பிரசாத்தை போட்டுட்டேன்.. க்ளியர் பண்ணிடு" என்று சொல்ல அவனோ "சார் இஸ்ஸு ஆயிடாதா?" என்று கேட்க "எதுன்னாலும் நான் பார்த்துக்கிறேன்" என்று சொன்னவன் போனை வைத்து விட்டு ஜீப்பை எடுத்தவன் அடுத்து புறப்பட்டது என்னவோ சித்தார்த்தின் கோட்டைக்கு தான்.
அதே சமயம், கண்களாலும் சைகைகளாலும் காதலை வளர்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தும் காயத்திரியும் அடுத்த கட்டத்துக்கு போகும் நாளும் வந்தது. ஆராய்ச்சி ஒன்றை முடித்து விட்டு தனது அறைக்குள் வந்தவனோ "காயத்ரி எங்க?" என்று அங்கு இருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டே போட்டிருந்த வெள்ளைக் கோர்ட்டைக் கழட்டி இருக்கையில் வைக்க, அங்கிருந்தவனோ "பீட்டருக்கு சாப்பாடு வைக்க போனாங்க சார்" என்று சொன்னான். அவனும் "ம்ம்" என்று சொன்ன போதே அவன் இதழில் ஒரு குறும்பு புன்னகை. அதே புன்னகையுடன் பீட்டரின் அறைக்குள் நுழைந்து கதவை சாத்த, பீட்டருக்கு சாப்பாடு வைத்துக் கொண்டு இருந்தவளோ ஒரு மென் புன்னகையுடன் வந்தவனை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் குனிந்து கொண்டவள் "என்ன சார் ப்ரீ ஆயிட்டிங்க போல" என்று கேட்டாள்.
அவனோ பதில் சொல்லாமலே ஷேர்ட்டின் கையை முட்டி வரை மடித்துக் கொண்டே அவளை ஆழ்ந்து பார்த்த படி அடிமேல் அடி வைத்து அவளை நெருங்க அவளுக்கோ அவன் பார்வை ஏதோ உணர்த்த அவன் விழிகளை ஏறிட்டு பார்க்க பார்த்தவளோ அதில் இருந்த மோகத்தைக் கண்டு மூச்சடைக்க மறந்தாள். அப்படியே அவனையே பார்த்துக் கொண்டே பின்னால் அடி மேல் அடி வைத்து சென்றவள் முகத்தை வெட்கச் சிரிப்புடன் பக்கவாட்டாக திருப்பியபடி பின்னால் இருந்த சுவரில் சாய்ந்து நின்றாள். அவனோ அவளை நெருங்கி மூச்சு காற்று படும் தூரத்தில் ஒற்றைக் கையை சுவரில் குற்றியபடி , அடுத்த கையால் அவள் அணிந்து இருந்த ஷேர்ட்டின் காலரில் கை வைத்து இழுத்து "இது என்னோடது தானே" என்று கேட்க அவன் விழிகளை ஏறிட்டு நோக்கியவள் "ஏன் போடக் கூடாதா?" என்று கேட்டாள். அவனோ "கூடாதுன்னு நான் சொல்லலையே" என்று தோள்களை உலுக்கி சொன்ன்னவன் "மனசு கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்றான். அவளோ சற்றே பதட்டமாக "ஏன் என்னாச்சு??" என்று கேட்க "அன்னைக்கு ரொம்ப நல்லவனா இருந்திட்டேன்னு நினைக்கும் போது இன்னைக்கு பீலிங் ஆஹ் இருக்கு" என்று சொல்ல அவனை விலுக்கென அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தவள் "நீங்க ரொம்ப கண்ணியமானவர்ன்னு நினச்சேன்" என்று போலிக் கோபத்துடன் சொன்னாள். அவனோ "கண்ணியமானவன் தான் ஆனா உன் கிட்ட கண்ணியமா இருந்து என்ன பயன்?? உன் கிட்ட மட்டும் கொஞ்சமா கெட்டவன்" என்று கண் சிமிட்டி சொன்னவன் விரல்கள் தாமாக எழுந்து அவள் கன்னத்தை வருட அவளுக்கோ அவன் ஸ்பரிசத்தில் கண்கள் தாமாக மூடிக் கொண்டன. அவனோ அவளை கொள்ளையிடும் பார்வை பார்த்துக் கொண்டே அவளது கன்னத்துடன் தனது கன்னத்தை வைத்து உரச அவளோ உணர்வு மிகுதியில் எட்டி அவனது ஷேர்ட் காலரைப் பிடித்துக் கொண்டாள். அவனோ அத்துடன் நிறுத்தாது தனது பெரு விரலால் அவளது இதழ்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே வருட அவளோ அவன் நெருக்கத்தில் உணர்விழந்து போனாள். அவனோ அவள் காதருகே இதழ்கள் உரச குனிந்தவன் "ஷால் ஐ கிஸ் யூ" என்று கேட்க அவளோ "ம்ம்ம்" என்று கண்களை மூடிக் கொண்டே சம்மதம் சொன்னாள். அவனோ மென் புன்னகையுடன் நிமிர்ந்து அவளது செவ்விதழ்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே இதழ்களை தனது நாவினால் ஈரமாக்கியபடி அவள் இதழ்களையும் ஈரமாக்க குனிந்து இருந்தான். இருவரின் இதழ்களும் தொட்டு விடும் தூரத்தில் ஒன்றோடொன்று உரசிக் கொண்ட சமயம் அது, அவள் கூட அவன் இதழில் இருந்த ஈரத்தை தன்னிதழால் மென்மையாக உணர்ந்த தருணத்தில் அவனது போன் அலறியது.
அவனோ "பச்" என்று சலித்துக் கொள்ள, அவளோ விழிகளை திறந்து அவனை மென் புன்னகையுடன் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே போனை எடுத்தவன் நம்பரைப் பார்த்து விட்டு "பேசிட்டு வந்து கன்டினியூ பண்ணுறேன்" என்று அவள் இதழ்களைப் பார்த்துக் கொண்டே சொன்னவன் போனை எடுத்து காதில் வைக்க "சார், ஒருத்தன் நம்ம இடதுக்குள்ள நுழைஞ்சுட்டான் சார், யார்ன்னு கேட்டு அவன் நெஞ்சுல முன்னே இருந்த செக்யூரிட்டி கை வச்சு தள்ளி இருக்கிறார்.. அடுத்த செகண்டே செக்கியூரிட்டியோட தலையை பிடிச்சு மேசையில் அடிச்சு . இருக்கிறான். வெளிய வந்து சி.சி.டி.வில பாருங்க சார்" என்று சொல்ல, புருவம் சுருக்கியபடி வெளியே வர, அவனது யோசனையாக முகத்தைப் பார்த்துக் கொண்டே அவன் பின்னால் வந்தாள் காயத்ரி. தனது அலுவலக அறைக்குள் வந்து அங்கிருந்த சி.சி.டி.வி யைப் பார்க்க, அதில் அஜய்யோ "சீக்கிரம் பெர்ஸ்ட் எயிட் கொடு, இல்லன்னா செத்துட போறான்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த சி.சி.டி.வியைப் பார்த்து ஒற்றைக் கண்ணை அடிக்க, அவனை அடுத்த கணமே சித்தார்த்தின் காவலாளிகள் துப்பாக்கியுடன் சூழ்ந்து கொள்ள, சித்தார்த்தோ "லெட் ஹிம் இன்" என்று போனில் சொல்ல, அவனை உள்ளே அனுமதித்தார்கள் அங்கு நின்றவர்கள். அஜய்யோ "இத அப்போவே பண்ணி இருக்கலாமே, ஒரு தலை உடைஞ்சு இருக்காது" என்று சொல்லிக் கொண்டே ஷேர்ட் காலரை பின்னால் இழுத்தபடி உள்ளே சென்றான். அவன் என்னவோ மரியாதையாக தான் சித்தார்த்தை பார்க்க வேண்டும் என்று சொன்னான். ஆனால் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா? என்று கேட்டு செக்கியூரிட்டி அவன் நெஞ்சில் கை வைத்து தள்ள தான் அவன் சிலிர்த்து விட்டான். அதன் விளைவு தான் அந்த தலை உடைந்த காரணம்.
சித்தார்த்தோ முன்னே இருந்த நீளமான மேசையில் இரு கைகளையும் குற்றி "ஊப்" என்று இதழ் குவித்து ஊத, அவன் ஷேர்ட்டை பின்னால் இருந்து பற்றிப் பிடித்த காயத்ரியோ "எனக்கு பயமா இருக்கு.. நான் உங்கள விட்டு போக மாட்டேன்" என்றாள். சித்தார்த்தோ அவளை சட்டென திரும்பிப் பார்த்து "வாட்?" என்று கேட்க அவளோ "அஜய் என்னை அழைச்சு போக தான் வர்றார்.. எனக்கு அவருக்கும் கல்யாணம்னு இருந்திச்சு, ஆனா எனக்கு இஷ்டம் இல்ல, அப்பாவுக்காக தான் சம்மதிச்சேன்.. இப்போ உங்கள லவ் பண்ணிட்டு அவர எப்படி நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்? ப்ளீஸ் நம்ம லவ்வை அவர் கிட்ட சொல்லிடுங்க" என்று சொல்ல, அவனோ அவளை அதிர்ச்சியுடன் விழி விரித்துப் பார்த்தான். அவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியாதளவு அதிர்ச்சி இருக்க, "ஹலோ சித்தார்த்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் அஜய். நீளமான மேசையில் ஒரு முனையில் கையை இரு பக்கமும் ஊன்றிக் கொண்டே சற்று முன்னால் சரிந்தபடி நின்ற சித்தார்த் அவனை ஏறிட்டு நோக்க மறுமுனையில் வந்து நின்றவன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டே அவனைப் பார்த்து "நான் கட்டிக்கப்போற பொண்ணு இங்க வந்து இருக்கா" என்று சொல்ல, சித்தார்த்தோ அஜய்யை ஆழ்ந்து பார்த்துக் கொண்டேதனது முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றவன் பக்கவாட்டாக காலை நகர்த்தி வைத்து பின்னால் நின்ற காயத்ரி அவனுக்கு முழுதாக தெரியும்படி காட்டியவன் "அழைச்சிட்டு போங்க மிஸ்டர் அஜய் தேவ்" என்றான் அழுத்தமாக. அஜய்யோ இதழில் ஒரு மென் புன்னகையுடன் அவளை நோக்கி வர, அவளோ அதிர்ச்சியும் கலங்கிய கண்களுமாக சித்தார்த்தைப் பார்க்க அவனோ அவளை அனல் தெறிக்கப் பார்த்தவன் "போடி" என்று சொன்னான்.
அவளுக்கோ அவன் பேசியது மேலும் அதிர்ச்சியாக "சித்தார்த்" என்று மென் குரலில் ஆரம்பிக்க, அவள் அருகே வந்த அஜய் "காயத்ரி வா போகலாம்" என்று சொல்லிக் கொண்டே "அவ பிரெண்ட்ஸ்" என்று சித்தார்த்திடம் கேட்டான். அவனோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவன் " அவ மட்டும் தான் அல்லவுட் .. அதுவும் உங்களுக்காக மிஸ்டர் அஜய்... என்னை பிடிக்க வந்தவங்க சந்தோஷமா என் கூடவே இருக்கட்டுமே" என்று சொல்ல, இரு பக்கமும் தலையாட்டி சிரித்த அஜய் "அடுத்த மாசம் கல்யாணம்.." என்று சொன்னான். சித்தார்த்தோ இருவரையும் பார்த்துக் கொண்டே "முடிஞ்சா வரேன்" என்று சொல்லி விட்டு காயத்ரியைப் பார்த்தவன் "ஹாப்பி மேரீட் லைஃப்" என்று சொன்னான். அஜய்யும் ஒரு சிறு தலையசைப்புடன் காயத்ரியை அழைத்துக் கொண்டே அவள் கையைப் பிடித்தபடி அங்கிருந்து செல்ல, அவனோ இருவரையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருக்க, அவளோ ஏமாற்றமும் வலியுமாக கலங்கிய கண்களுடன் சித்தார்த்தை திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்து போனாள். அவன் சற்று முன் அவள் இதழில் பதித்த ஈரம் கூட காயாத நிலையில் அவள் மனதில் ஆழமான காயத்தை உண்டாக்கி இருந்தான் சித்தார்த்..