ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மா 10

pommu

Administrator
Staff member
பிரம்மா 10

ஒரு நாள் பயணமதில் சித்தார்த்தும் கருத்தரங்கு நடக்க இருக்கும் ஊருக்கு தகுந்த பாதுகாப்புடன் வந்து சேர்ந்தான். அன்றிரவு தனக்கான ஹோட்டலில் தங்கி இருக்க, அன்று தூக்கம் இன்றித் தவித்தது என்னவோ அஜய்யும் போலீஸ் டிபார்ட்மெண்டை சேர்ந்தவர்களும் தான். சித்தார்த் போன்றவர்களின் பாதுகாப்புக்காக அஜய் போன்றவர்கள் இரவு பகல் பாராமல் விழித்திருந்து சேவையாற்றிய போதிலும் அந்த சேவையைக் கூட பயன் இல்லாமல் ஆக்கி விடுவார்கள் பிரசாத் போன்றவர்கள்.

அடுத்த நாள் காலையில் எழுந்த சித்தார்த்தும் தனது ஆறடி உயரத்தை இன்னும் மெருகேற்றும் விதமாக கோர்ட் ஷூட் அணிந்து இருந்தவன் முகத்தில் ஒரு மென் புன்னகை கயாத்திரியை நினைத்து. ஒரு பெண்ணை இப்படி நினைத்துக் கொண்டு இருக்கின்றான் என்று அவனுக்கே அதிர்ச்சி தான். அவள் போலீஸ் என்பதை தவிர அவனுக்கு அவளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. அவனுள் இப்போது காதல் நுழைந்த பிறகு அவளைப் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை. அவள் மீது அப்படி ஒரு குருட்டுத் தனமான நம்பிக்கை அவனுக்கு.. அவள் விழிகளில் தெரிந்த காதலில் உண்மையை அறிந்தவனுக்கு அதற்கு மேல் எதுவும் தேவைப்படவும் இல்லை. அதை மீறி விசாரித்தால் அவள் மீது நம்பிக்கை இல்லாதவன் ஆகி விடுவானோ என்கின்ற எண்ணத்தினாலேயே அவளைப் பற்றி அவளே விரும்பினால் சொல்லட்டும் என்று தான் நினைத்து இருந்தான் பின் நாட்களில் நடக்கப் போகும் விபரீதம் அறியாமல்.

அவனுக்கோ அங்கிருந்து கிளம்பியதில் இருந்தே அவள் நினைவு தான்.. பிரிவுகள் பிணைப்பை அதிகரிக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.. காதல் எப்படி வரும் எங்கிருந்து வரும் என்கின்ற உண்மை யாருக்கும் தெரியாது அல்லவா? அதே போல அவள் மீது காதல் எப்படி வந்தது என்று அவனுக்கும் தெரியவே இல்லை. மிகவும் திடமான மனத்தை உடைய அவனையே காதல் இப்பாடு படுத்துகின்றது என்றால் காயத்ரியைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

அன்றும் சித்தார்த்தின் அறையில் உடைகளை மடித்து வைத்துக் கொண்டு இருந்தவளோ அவன் ஷேர்ட்டை ரசனையுடன் கை கொண்டு வருட, பக்கத்தில் அவளை விசித்திரமாக திரும்பிப் பார்த்த ராஜ் "காயத்ரி என்ன பண்ணுற" என்று கேட்க சட்டென நிதானத்துக்கு வந்தவள் "ஒண்ணுமில்ல ராஜ்" என்று பதட்டமாக சொன்னாள். உடனே அவனோ " நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத, எனக்கு என்னவோ நீ பண்ணுறது சரியா படல" என்று சொல்ல, அவளோ அவனைத் திரும்பிப் பார்த்து "ஐ அம் இன் லவ் வித் சித்தார்த்" என்று சொல்ல, அவன் முகம் இறுகிப் போனது.

அடுத்த கணமே "உனக்கு இது தப்பா தெரியலையா காயு?" என்று சற்றே ஆதங்கமாக கேட்க, அவனை கலங்கிய கண்களுடன் ஏறிட்டவள் "எனக்கு தெரியல ராஜ். அஜய்யை என் அப்பாவுக்காக தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.. இப்போ கூட உங்கள தேடி ரிஸ்க் எடுத்து நான் வந்ததுல என்னோட சுயநலமும் இருந்திச்சு" என்று சொல்ல, அவனோ புரியாமல் பார்க்க "எஸ், இந்த கல்யாணத்தை தள்ளிப் போடணும்னு யோசிச்சேன்" என்று சொல்ல அவன் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள "என்னடி சொல்ற?" என்று கேட்டான்.

அவளோ "அஜய் நல்லவர் தான். ஆனா அந்த லவ் எனக்கு அவர் மேல வரல, கல்யாணம் பேசுனதுல இருந்து ஒரு வெறுமை.. அவர் என்னோட கையை பிடிக்க கூட நான் அனுமதிச்சது இல்ல, அதே போல எப்படி சித்தார்த் மேல லவ் வந்திச்சுன்னு எனக்கும் தெரில. இப்போ நான் அஜய்யை கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட அது அஜய்க்கு நான் பண்ணுற துரோகமா தான் இருக்கும். மனசு முழுக்க சித்தார்த் இருக்கும் போது எப்படி என்னால அஜய் கூட வாழ முடியும்னு நீயே சொல்லு?" என்று கேட்க அவனோ "எல்லாம் ஓகே, ஆனா அஜய்யை பத்தி நினச்சு பார்த்தியா? அவன் உன்ன எவ்ளோ லவ் பண்ணுறான்னு தெரியுமா?" என்று சொல்ல, அவளோ "எனக்கும் அத நினச்சு தான் மனசு கஷ்டமா இருக்கு, நான் அஜய்யை கல்யாணம் பண்ணுன அப்புறம் சித்தார்த் மேல காதல் வந்து இருந்தா அது கள்ளக் காதல், ஆனா இன்னும் நான் என் அப்பாவோட பொண்ணு தான்" என்று தன் பக்க நியாயத்தைக் கூற, அவனோ "என்னவோ எனக்கு இது சரியா படல காயத்ரி" என்றான் அவள் நண்பன். அவளோ "புரியுது ராஜ், எனக்கு இங்க இருந்து போக கூட பிடிக்கல, அஜய் மனசு மாறி வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட எனக்கு சந்தோஷம் தான்' என்று சொல்ல, அவனோ "உனக்கு காதல் பித்து ஏறி போச்சு. அது தான் கண்ட மேனிக்கு உளறிட்டு இருக்க.. நீ லவ் பண்ணுனா போதுமா அந்த சயின்டிஸ்ட் பண்ண வேணாமா? அவனே இரும்பை முழுங்குன போல இருக்கான்.. நீ லவ்வை சொல்லி கன்னம் வீங்கி திரும்பி வராத வரைக்கும் சந்தோஷம்." என்று சொல்ல, அவளோ "என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்" என்று சொல்லிக் கொண்டே அவன் ஷேர்ட்டை மென் புன்னகையுடன் மடிக்க ஆரம்பித்தாள்.

அதே சமயம், ஆயத்தமாகி உயர் ரக காரில் கருத்தரங்கு நடக்கும் இடத்துக்கு தனது இரு காவலாளிகளுடன் சித்தார்த் வந்து சேர்ந்தான். அவன் காரில் இருந்து இறங்கியதுமே அவனுக்காக அங்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு இருந்த போலீசார் சுற்றி வளைத்துக் கொள்ள, நிமிர்ந்த நடையுடன் அங்கு அவனுக்கு வணக்கம் சொன்னவர்களுக்கு ஒரு மெல்லிய தலையசைப்பை வழங்கிக் கொண்டே உள்ளே நுழைந்தான் சித்தார்த். அங்கே அவனும் அவனுடன் வந்த இரு காவலாளிகளும் நன்றாக பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட, விறு விறுவென கம்பீரமாக நடந்தவன், வி.ஐ.பி க்களுக்கான இடத்தை அடைந்து கொள்ள, அங்கிருந்த ஏனைய விஞ்ஞானிகள் அவனுடன் கை குலுக்கி கொள்ள, அவர்களிடமும் பேசி விட்டு அமர்ந்து கொண்டான். அந்த சமயம் தான் நரேனும் உள்ளே நுழைய, அவன் கண்களோ அங்கே அருகில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டு இருந்த சித்தார்த்தில் வன்மமாக படிய, சித்தார்த்தோ அருகே இருந்தவரிடம் பேசிக் கொண்டே ஒரு கணம் அழுத்தமான பார்வையை தன்னை பார்த்துக் கொண்டே நடந்த நரேனின் மீது பதிய விட்டான். அவன் கண்களோ அவனது தழும்புள்ள இதழில் கேலியாக படிந்து மீள, அதனைக் கண்ட நரேனின் மனமோ "சிரிடா சிரி.. இன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள் . சந்தோஷமா சிரி" என்று மனதுக்குள் வன்மமாக நினைத்துக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அதே சமயம், உள்ளே நுழைய எத்தனித்த பிரசாத்தோ தடுத்து நிறுத்தப்பட, அங்கு நின்றவனோ "சார் பேட்ச் இல்லாம உள்ளே போக முடியாது" என்று சொல்ல, பிரசாத்தோ "நான் யாருன்னு தெரியுமா? பேட்ச்சை வீட்ல விட்டு வந்துட்டேன்.. திரும்பி போய் எடுத்து வர சொல்றியா?" என்று மிரட்டலாக கேட்க அந்த போலீஸ்காரன் சற்று பயந்தாலும் "அஜய் சாரோட ஆர்டர் அது தான்" என்று இழுக்க, பிரசாத்தோ "அவனை விட சீனியர் ஆபீசர் என்னோட ஆர்டர் உனக்கு பெருசா தெரியல.. சரி உன் பெயர் என்ன?" என்று கேட்டபடி அவனது பெயர் பொறிக்கப்பட்டு இருந்த கார்டைப் பார்க்க, அவனோ ஒற்றைக் கை கொண்டு அதனை மறைத்தவன் "நீங்க போங்க சார்" என்று சொன்னான். பிரசாத்தோ ஒரு நக்கல் புன்னகையுடன் "அது" என்று சொல்லி விட்டுச் செல்ல, இருவருக்கும் நடந்த உரையாடலின் போது அந்த இடத்தை தாண்டி ராம் செல்ல, அந்த போலீஸ்காரனோ எட்டி ராமைப் பார்த்தான். அவனிடம் அந்த பேட்ச் இருக்க, பிரசாத்தோ "நான் இங்க பேசிட்டு இருக்கேன். நீ யாரை பார்த்துட்டு இருக்க?" என்று உறும, அவனோ சற்றே பயத்துடன் "ஐயோ இல்ல சார், அங்க போறவர் கிட்ட பேட்ச் இருக்கான்னு பார்த்தேன்.. இருக்கு" என்று சொல்ல, அவரோ "அது தான் இருக்குல்ல, உன்னோட டிசிப்ளின் சரி இல்ல, உன்னோட பெயரை சொல்லு" என்று சொல்ல, அவனோ "ப்ளீஸ் சார், வேணாம் சார், நீங்க போங்க" என்று கெஞ்சினான். அவரோ அத்துடன் நிற்காமல் "உன்னோட ட்ரான்ஸ்பெர் லெட்டர் வீடு தேடி வரும் பாரு" என்று மிரட்டி விட்டு அவன் மன நிலையை குழப்பி விட்டு செல்ல, அவரை அதிர்ந்து பார்த்தவன் அங்கிருந்த இருக்கையில் தலையில் கை வைத்துக் கொண்டே தொய்ந்து அமர்ந்தான்.

அந்நேரம் அவனுடன் டியூட்டிக்கு நின்றவன் வந்து சேர, "ஹப்பாடா வந்துட்டியா. நீ கொஞ்சம் பாரு நான் ரிலாக்ஸ் ஆகிட்டு வரேன்" என்று கிளம்பி இருந்தான். பிரசாத் கூட டியூட்டியில் ஒருவன் மட்டும் இருக்கும் நேரத்தை பார்த்தே உள்ளே நுழைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராமும் உள்ளே நுழைந்து விட, அவனை தூரத்தில் இருந்து பார்த்த நரேனுக்கு ஒரு குரூர புன்னகை அரும்பியது. நரேனோ ராமிடம் கடைக்கண்ணால் சித்தார்த்தைக் காட்ட, அவனும் கண்களை மூடித் திறந்து கொண்டான். மாணவர்கள், மேதாவிகள், விஞ்ஞானிகள் என்று அனைவரும் குழுமி இருந்த அரங்கில் ஒவ்வொரு விஞ்ஞானிகளும் தங்களது ஆராய்ச்சியைப் பற்றி விளக்கம் கொடுக்க ஆரம்பித்து இருந்தார்கள். ஒவ்வொன்றாக முடிந்து சித்தார்த்தின் வாய்ப்பு வரும் போது முட்டியில் கை குற்றி எழுந்தவனைக் கண்டதுமே கரகோஷம் வானைப் பிளந்தது. அவனது கண்டுபிடிப்புகளின் தரத்துக்கான பாராட்டு அது. அந்த கரகோஷத்தில் பாதி கூட நரேனுக்கு விழவில்லை, அதுவே அவனது கடுப்பை உயர்த்தி இருக்க, அந்த அரங்கமே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அமைதியாகி இருந்தது சித்தார்த் பேசுவதைக் கேட்பதற்காக. அவனுக்கான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பார்த்து அங்கிருந்த விஞ்ஞானிகளுக்கு பொறாமை உண்டானாலும் யாரும் அவனை கொல்ல வேண்டும் என்று நினைத்தது இல்லை நரேனைத் தவிர. அவனோ அவர்களது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவர்களுக்கான விளக்கத்தை கொடுக்க ஆரம்பித்தான்..

அந்த சமயம், அனைத்து இடங்களிலும் சுற்றி நோட்டம் இட்டு விட்டு அரங்க வாசலுக்கு வந்து சேர்ந்தான் அஜய் தேவ். அவன் காதில் சித்தார்த் மைக்கில் பேசியது விழ, "ஹீ இஸ் ஜீனியஸ்" என்று சொன்னவன் வாசலில் நின்றவர்களிடம் "ஒன்னும் இஸ்ஸு இல்லையே.. நான் சொன்னதை பொல்லோவ் பண்ணுனீங்க தானே" என்று கேட்க அங்கு இருந்தவனோ "சாரி சார், பிரசாத் சாரை மட்டும் பேட்ச் இல்லாம உள்ளே விட்டேன்.. அவர் என்னை மிரட்டி இருந்தார் சார்" என்று தயக்கமாக சொல்ல "வாட் தெ ஹெல்" என்று சீறியவன், கண நேரம் கண்ணை மூடித் திறந்து கொண்டு "தட்ஸ் ஓகே, லீவ் இட், அவர் தெரிஞ்சவர் என்கிறதால நோ இஸ்ஸு" என்று சொல்லும் போதே அடுத்தவன் "ஆனா சார், பிரசாத் சாரோட பேட்ச் ஐ டி டிடெக்ட் ஆகி இருக்கே" என்று சொன்னான். உடனே அஜய், "வாட்? எப்படி பேட்ச் இல்லாம டிடெக்ட் ஆகும்?" என்று கேட்டபடி கம்பியூட்டர் ஸ்க்ரீனில் பார்க்க, ஆம் அது டிடெக்ட் ஆகி இருந்தது. உடனே அவன் "என்ன டைம்னு பார்த்து சி.சி.டி.வியை ட்ரேஸ் பண்ணு " என்று சொல்ல, அவனும் நேரத்தைப் பார்த்தவன் "எட்டரைக்கு சார்" என்று சொல்லி விட்டு சி.சி.டி.வியைப் பார்த்தான். அந்த கணம் பிரசாத் அங்கு டிடெக்டர் அருகே நின்று பேசிக் கொண்டு இருக்க, ராம் அவரைத் தாண்டி சென்றதும் தெளிவாக தெரிய, ராம் தாண்டி சென்ற கணத்தில் தான் அந்த ஐ.டி டிடெக்ட் ஆகி இருந்தது. அதைக் கண்டு விழி விரித்த அஜய் "வாட் தெ ஹெல்? யார் இவன்?" என்று கேட்க அங்கு நின்றவனோ "பிரசாத் சார் போகும் போது வந்தவன் சார்" என்று சொன்னதுமே "அவன் முகத்தை சூம் பண்ணு "என்று சொன்னவன் அவனை அழுத்தமாக பார்த்து விட்டு, "கமான். லெட்ஸ் சேர்ச் ஹிம்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
 
Top