ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 90

pommu

Administrator
Staff member
நிலவு 90

ஒரு முனையில் நின்று இருந்த பல்லவியோ, "ரெடியா?" என்று கையசைத்து கேட்க, கஜனும், "ரெடி." என்றான்.

அங்கே ஓரமாக நின்ற ராம்குமாரைப் பார்த்த பல்லவி, "நீங்க எங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணணும்." என்றாள்.

"இது என்ன அநியாயமா இருக்கு?" என்று அவன் சொல்ல, "சுகானாகிட்ட சொல்லி கொடுப்பேன்." என்றாள் கிண்டலாக.

ராம்குமாரும், "சரி பண்ணிடுறேன்." என்று சொன்னதும், சிரித்துக் கொண்டு, "கெட் ரெடி ஸ்டார்ட்!" என்று சொன்னதுமே, அங்கே நின்று இருந்த ஜீவிதனும் விஜய்யும் நீந்த ஆரம்பித்து விட்டார்கள்.

"மச்சான் கமான்...!" என்று நவநீதன் கத்த, "விஜய் கமான்!" என்று உணர்ச்சிவசப்பட்டு ராம்குமார் கத்த, இடையில் கையை வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் பல்லவி.

"சாரி அண்ணி, ஜீவி கமான்..." என்று அவன் சொல்ல, பல்லவி இதழ் பிரித்து சிரித்துக் கொண்டு, "ஜீவி, யூ கேன்!" என்று சத்தமாக கத்தினாள்.

ராகவி, "மாமா சீக்கிரம்..." என்று மறுமுனையில் இருந்து கத்த, அர்ஜுனோ, "ஜீவி..." என்று கத்த, கஜன் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு சிரித்தபடி நின்று இருந்தான்.

ஜீவிதன் சொன்னது போலவே விஜய்யின் வேகம் அதிகமாக இருந்தது. ஆனாலும் ஜீவிதன் போலீஸ் ட்ரெயினிங் முடித்தவன் என்பதால் அவனுக்கு ஈடுகொடுத்து நீந்தினான்.

விஜய் முதலாவதாக கஜனிடம் குச்சியைக் கொடுக்க, அதனை வாங்கிக் கொண்டு கஜன் நீந்த ஆரம்பித்து விட்டான்.

ஜீவிதனிடம் குச்சியை வாங்கியை அர்ஜுனோ, அங்கே நீந்திக் கொண்டு இருந்த கஜனை அதிர்ந்து பார்த்தான். அவன் பாதி தூரம் கடந்து விட்டான்.

"டேய் இப்போ தானேடா ஸ்விம் பண்ண ஸ்டார்ட் பண்ணுனார்..." என்று சொல்ல, சத்தமாக சிரித்த விஜய்யோ, "சூப்பரா ஸ்விம் பண்ணுவார்." என்று சொல்லிக் கொண்டு அவன் தோளில் கையை போட்டவன், "ஸ்விம் பண்ணலயா?" என்று கேட்டான் அர்ஜுனிடம்.

அவனோ பெருமூச்சுடன் குச்சியை கீழே போட்டவன், "அதுதான் முடியாதுனு தெரியுதுல, இனி பண்ணி என்ன பண்ணுறது அண்ணன்?" என்று கேட்க, ராகவி சத்தமாக சிரித்துக் கொண்டாள்.

"விட்டுக் கொடுத்தேன் உன் அண்ணாவுக்கு..." என்றான் அவன் ராகவியை பார்த்துக் கொண்டு.

"தெரியுது... தெரியுது..." என்று அவள் கிண்டலாக சொல்ல, பல்லவியோ, "அர்ஜுன் வாடா..." என்று கத்த, "ச்சீ... பே..." என்று திட்டினான் அவன்.

கஜன் நீந்தி பல்லவியை அடைந்தவன் நீருக்குள் இருந்து எழுந்து, முகத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, "எங்க அவன்?" என்று கேட்க,

"அவன் நீந்தவே இல்லை. இப்படி ஸ்பீடா நீந்துனா, அவன் என்ன பண்ணுறதாம்?" என்று கேட்க, முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் குச்சியை அவளிடம் நீட்டி, "சக்திவேல் ஃபேமிலிக்கு பயம் இல்லம்மா..." என்றான்.

"நானும் சக்திவேல் ஃபேமிலி தான் இப்போ..." என்று சொல்ல, "அடிப்பாவி!" என்று அவன் சொல்ல, "நாங்க ஜெயிச்சிட்டோம்..." என்று நவநீதன் சிரித்துக் கொண்டு ராம்குமாரிடம் சொல்ல, அவனும் சிரித்துக் கொண்டு, "நாங்க தோத்துட்டோம்..." என்று சொன்னான்.

"அண்ணா, சோகமா நீங்க சொல்லணும். அண்ணி திட்ட போறாங்க..." என்று சொல்ல, “அட! ஆமால..." என்று சொல்லிக் கொண்டு பல்லவியைப் பார்க்க, அவளோ கஜனுடன் சிரித்துப் பேசிக் கொண்டு நின்று இருந்தாள்.

"அவங்களே சிரிச்சிட்டு இருக்காங்க, அப்புறம் என்னடா?" என்று கேட்டுக் கொண்டான் அவன்.

அதனைத் தொடர்ந்து ஜீவிதன், விஜய், ராகவி மற்றும் அர்ஜுன் என்று எல்லோரும் கஜனும் பல்லவியும் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

கஜனோ, "ஃபீமேல் காம்படிஷன் வைக்கலாமே?" என்று சொல்ல, அர்ஜுனோ, "இப்போ தானே டெலிவரி ஆச்சு..." என்றான் அவசரமாக.

சத்தமாக சிரித்த கஜனோ, "இப்போ இல்ல, ஆறு மாசம் தாண்டிடுச்சு..." என்றான்.

அர்ஜுன் ராகவியைப் பார்க்க, "நான் ஸ்விம் பண்ணுவேன்." என்றாள்.

"யோர் விஷ்!" என்று அவன் தோள்களை உலுக்கிக் கொள்ள, ஜீவிதனோ, "நம்ம குடும்பமானமே உன் கைல தான் இருக்கு பல்லவி." என்றான்.

அவளும் சிரித்துக் கொண்டு, "நான் காப்பாத்துறேன்." என்று சொல்ல, கஜனோ, "கன்னுகுட்டி..." என்றான்.

"பார்த்துக்கலாம் அண்ணா." என்றாள் கண் சிமிட்டி.

இதனைக் கேட்ட அர்ஜுனோ, 'கன்னுக்குட்டியா?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவளையே இதழ்களுக்குள் சிரித்தபடி பார்த்து இருக்க,

பல்லவியோ, "அப்போ எனக்கு சப்போர்ட் பண்ண மாட்டிங்க, ரைட்?" என்று விழிகளை உருட்டிக் கேட்டாள்.

ஒரு கணம் அவனையும் மீறி அவள் இதழ்களைப் பார்த்து விட்டு விழிகளைப் பார்த்தவன், "உன் தம்பி கிட்ட கேளு..." என்று சொல்ல, "அவன் பொண்டாட்டிக்கு தான் சப்போர்ட் பண்ணுவான்." என்றாள்.

"அப்படின்னு நான் சொன்னேனா?" என்று அவன் கேட்க, "உன் முகத்தை பார்த்தாலே தெரியுது..." என்று பல்லவி சிரித்துக் கொண்டு சொல்ல,

ராகவியின் விழிகள் தன்னையும் மீறி அர்ஜுனில் படிய, அர்ஜுன் அவளைப் பார்த்து விட்டு குரலை செருமிக் கொண்டு பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

சிறிய தூரமே நிர்ணயித்து இருக்க, இருவரும் நீந்திக் கொண்டு மீண்டும் வந்து சேர வேண்டும். போட்டியும் ஆரம்பமானது.

பல்லவிக்கு கையை நீட்டிய கஜனோ, "ஆல் த பெஸ்ட்!" என்று கண் சிமிட்டி சொல்ல,

அவளும், "தேங்க்ஸ்!" என்று இதழ் அசைத்து சொல்லிக் கொண்டு, "வின் பண்ணுனா என்ன கிடைக்கும்?" என்று கேட்டாள்.

"என்ன வேணும்?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க, "வின் பண்ணிட்டு வந்து கேக்கிறேன்." என்று சொல்லிக் கொண்டு அவளும் நீந்த தயார் ஆக, "ரெடி செட் கோ!" என்று சொன்னதுமே இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள். பல்லவி, ராகவி என்று ஆளாளுக்கு சத்தம் போட்டார்கள்.

பல்லவி நீச்சலில் திறமைசாலி போலும், வேகமாக நீந்தி முதலாவதாகவே வந்து சேர்ந்து விட்டாள்.

கஜனோ, "பல்லவி யூ நெய்ல்ட் இட்!" என்று சொல்லிக் கொண்டே, கையை நீட்டி நீந்தி வந்த ராகவியை இழுத்து மேலே எடுத்தவன், "டயர்ட்டா இருக்கா?" என்று கேட்டான்.

"நிறைய நாள் அப்புறம் வேர்க் அவுட் பண்ணுறேன், அதுதான்..." என்று மூச்சிரைத்துக் கொண்டு சொல்ல, "அப்போ ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு ரெஸ்ட் எடு." என்றவனோ, அவள் கரையேறி போவதைப் பார்த்து விட்டு அர்ஜுனிடம், "இப்படியே நின்னா என்ன அர்த்தம்?" என்று கேட்டான்.

"கூட போனா உங்க தங்கச்சி திட்டுவா..." என்று அர்ஜுன் சொல்ல, "நீதான் போயாகணும்..." என்று இதழ்களைப் பிதுக்கியபடி கஜன் சொல்ல, "வேற வழி..." என்று அவனும் அவளுக்கு பின்னே சென்றான்.

இப்போது பல்லவியைப் பார்த்த கஜனோ, "என்ன வேணும்?" என்று கேட்க, "இன்னைக்கு தந்த போல கொஞ்சம் டீப்பா..." என்று ஆரம்பிக்க,

சத்தமாக சிரித்தவன், "நீ வின் பண்ணலைன்னாலும் கிடைச்சு இருக்கும்." என்று சொல்ல, அவளோ சிரிப்பும் வெட்கமுமாக வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இதே சமயம் உடை மாற்றுவதற்காக ஜீப் அருகே சென்று நின்ற ராகவி பின்னால் திரும்பிப் பார்க்க, அங்கே அர்ஜுன் வந்து கொண்டு இருந்தான்.

"இப்போ எதுக்கு பின்னாடி வர்றீங்க?" என்று அவள் கேட்க, "நான் ஒன்னும் வரல, உன் அண்ணா தான் அனுப்புனார்." என்றான்.

"அதுதானே பார்த்தேன்..." என்று தழுதழுத்த குரலில் பதில் வர, அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

காரணமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றாளே?! அவளது இறுதி பரிட்சை முடிய, அவளுடனான வாழ்க்கையை அவன் ஆரம்பித்து விடுவான். இடையில் அவன் வேண்டுமென்று சீண்டிக் கொண்டு இருக்க, அவளோ எல்லாவற்றிற்கும் சிணுங்கிக் கொண்டு இருந்தாள்.

ஜீப்பின் பின்பக்கம் ஏறியவள், "நான் ட்ரெஸ் மாத்தணும்." என்றாள்.

"நான்தான் நிக்கிறேன்ல? மாத்து, யாரும் வர மாட்டாங்க." என்றான்.

"நீங்க நிக்கிறீங்களே..." என்றாள்.

"ஆமா, நான் பார்த்ததே இல்ல பாரு..." என்று சொன்னவனை முறைத்துக் கொண்டு ஜீப்பினுள் ஏறியவளோ, "இந்த பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..." என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

உள்ளே பையில் இருந்த உடையை எடுத்து அவள் மாற்றிக் கொண்டு இருக்க, அர்ஜுனோ இடையில் கையை வைத்து சுற்றிப் பார்த்து விட்டு கண்ணாடியூடு அவளைப் பார்க்க, "ச்சீ..." என்று திட்டிக் கொண்டு தன்னை அவள் மறைத்துக் கொள்ள, அவனுக்கு கடுப்பாகி விட்டது.

சட்டென ஜீப்பின் கதவைத் திறந்து உள்ளே ஏறியவன், "நான் இங்கதான் இருப்பேன்..." என்றான்.

"என்ன விளையாடுறீங்களா?" என்று அவள் சீற, "நீ ரொம்ப பண்ணுற, ச்சீன்னா சொன்ன? ச்சீயாவே இருக்கட்டும். நீ இப்போ மாத்து." என்றான்.

அவளோ கொண்டு வந்த உடையினால் தன்னை மறைத்துக் கொண்டு, "அர்ஜுன் ப்ளீஸ்..." என்று சொல்ல, அவளைத் திரும்பிப் பார்த்தவன், "ச்சீன்னு சொன்னதுக்கு இதுதான் தண்டனை." என்றான்.

"சின்ன பையன் போல விளையாடிட்டு இருக்கீங்க." என்று திட்டினாள்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிஸ் அடிச்ச தானே? இப்போ என்னடி பிரச்சனை?" என்று கேட்டான்.

"அது வேற, இது வேற..." என்றாள்.

"எல்லாம் ஒன்னுதான்... ஏதோ நான் உன்னை பார்த்ததே இல்லை என்கிற போல பில்ட் அப் பண்ணாதே..." என்று சொல்ல,

"அப்போ வேற, இப்போ வேற..." என்று சொல்லிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, தெரிந்தும் தெரியாமல் இருந்த அவள் மேனியினை விழிகளால் அளந்து கொண்டு, "ம்ம்... கொஞ்சம் பூசுன போல இருக்கிற..." என்றான்.

"அர்ஜுன்..." என்றாள் கடுப்பாக.

"கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்திடுவாங்க, இப்படியே இருக்க போறியா?" என்று கேட்டான்.

எரிச்சலாக இருந்தது. விடாக்கண்டன் ஆயிற்றே அவன்!?

வேறு வழி இல்லாமல் உடையை மாற்ற, அவன் விழிகள் அவள் மேனியியை விட்டு ஒரு செகண்ட் கூட அகலவில்லை. சில சமயங்களில் உஷ்ண பெருமூச்சை விட்டுக் கொண்டான். சில சமயங்களில் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டான். சில சமயங்களில் கீழ் அதரங்களை ஈரமாக்கிக் கொண்டான்.

அவன் மனமோ, 'என்னடா அர்ஜுன், உனக்கு வந்த சோதனை?' என்று சொல்லிக் கொண்டது.

பழைய அர்ஜுன் என்றால் இக்கணம் அவள் மேல் பாய்ந்து இருப்பான். இப்போது அவள் பரிட்சை முடியட்டும் என்று உணர்வுகளை இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்தான். அவளுடன் சேர்ந்து அவனும் உடை மாற்றினான். அவளுக்கு ஐயோடா என்று ஆகிவிட்டது.

"நான் இறங்கும் வரைக்கும் வெய்ட் பண்ணலாம்ல?" என்றாள்.

"என்கிட்ட பெருசா ஒன்னும் மாற்றம் இல்லை, ஏற்கனவே நீ பார்த்தது தான்..." என்றான்.

"ஹையோ!" என்று திட்டிக் கொண்டு கருப்பு நிற கவுனுடன் ஜீப்பில் இருந்து இறங்கியவள், ஈரமான முடியை விரித்துவிட்டு இருந்தாள்.

அவனும் ஷார்ட்ஸ் மற்றும் கருப்பு நிற டீஷேர்ட்டுடன் இறங்கியவனோ, "நமக்குள்ள ஒரு ஒற்றுமை எப்பவும் இருக்கு ராகவி, எப்பவுமே ரெண்டு பேரும் பிளாக் ட்ரெஸ் போட்டுக்கிறோம்..." என்று சொல்ல,

"அது மட்டும் இருந்து என்ன பயன்?" என்று கேட்டுக் கொண்டு நடந்தவளோ, அங்கிருந்த பெரிய மரத்தின் கீழ் இருந்த கல்லில் அமர்ந்து கொள்ள, அவனும் சற்று தள்ளி அமர்ந்து கொண்டு அவளை மயக்கமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

சட்டென அவனைப் பார்த்தவள், "இப்போ எதுக்கு பார்க்கிறீங்க?" என்று கேட்டாள்.

"பார்க்கவும் கூடாதா?" என்று கேட்டான்.

"கூடாது." என்றாள்.

"நான் பார்ப்பேன், என் கண்." என்றான்.

"ஆனா என்னோட உடம்பு..." என்றாள்.

"எனக்கும் உரிமை இருக்குல்ல, நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கும் வரைக்கும் ரசிச்சுக்கிறேன்." என்று சொல்லிக் கொண்டு பின்னங்கழுத்தை வருட,

"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இந்த கல்லை தூக்கி மண்டைல போடணும் போல இருக்கு..." என்றாள்.

"எதுக்கு கோபப்பட்டுட்டு இருக்க?" என்று கேட்டான்.

"அர்ஜுன்..." என்று தழுதழுத்த குரலில் அழைக்க, அவளையே பார்த்து இருந்தவன், "என்னடி?" என்றான் கரகரத்த குரலில்.

"உங்க மனசுல என்னதான் இருக்கு?" என்று இயலாமையுடன் கேட்டாள்.

"உன் எக்ஸாம் முடிய உனக்கே தெரிய வரும்." என்றான்.

"அதுவரைக்கும்..." என்று அவள் கேட்க, "படிம்மா..." என்று சொல்லிக் கொண்டு வேறு எங்கோ பார்க்க, அவளோ தாடையில் கையை வைத்துக் கொண்டு சலிப்பாக பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
 
buvanababu

New member

Intresting sis
 
Top