ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 89

pommu

Administrator
Staff member
நிலவு 89

வெளியே வந்த கஜனின் இதழ்களில் இன்னுமே புன்னகை தேங்கி நிற்க, சக்திவேலிடம் பேசிவிட்டு அங்கே ஹாலில் அமர்ந்து விட்டான். பல்லவிக்கு இன்னுமே நிலைகொள்ள முடியவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே நின்று இருப்பாள் என்று தெரியாது. ஒற்றை முத்தத்தில் அவளை மொத்தமாக நிலைகுலைய செய்து விட்டான்.

மெதுவாக தன்னை திடப்படுத்திக் கொண்டு அவள் வெளியே வந்த சமயம், மடியில் யாழினியினை வைத்துக் கொண்டு அங்கே இருந்தவர்களுடன் பேசிக் கொண்டு இருந்த கஜனின் விழிகள், அவளில் தான் படிந்து இருந்தன. அவளுக்கோ அவனைப் பார்க்கும் அளவுக்கு தெம்பில்லை. காரணமே இல்லாத கூச்சம். விழிகள் அலைப்புற்றன. அவள் தடுமாற்றத்தை இதழ் கடித்து ரசனையாக பார்த்தவனின் விழிகள் அவள் இதழ்களில் படிந்தன.

சற்று முன்னர் அதனை ஆழ்ந்த தீண்டிய நினைவுகள் அவனை என்னன்னவோ செய்ய, இதழ் குவித்து ஊதிக் கொண்டு, "பல்லவி!" என்று அழைத்தான்.

அவளுக்கு அவனைப் பார்க்கவே அவ்வளவு கூச்சமாக இருந்தது. பெண்களுக்கு உண்டான இயல்பான கூச்சம் அது. அழைத்து விட்டான், தவிர்க்க முடியாது. அவன் விழிகளை இப்போது பார்த்தாள்.

கண்களால் கையில் இருந்த யாழினியைக் காட்டியவன், "தூக்கம் வருது போல, தூங்க வச்சுடு. இல்லன்னா போகும் போது அழுதுட்டு இருப்பா..." என்று சொன்னான்.

அவளும் அவனை நோக்கி வந்து குழந்தையைத் தூக்கிக் கொள்ள, அவன் விழிகள் அவளிலேயே படிந்து இருந்தன. 'பார்த்துட்டே இருக்காரே...' என்று மனதுக்குள் சிணுங்கிக் கொண்டு, குழந்தையுடன் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

சற்று நேரத்தில் எல்லோரும் ஆயத்தமாகி விட்டார்கள். ஷார்ட்ஸ் மற்றும் டீஷேர்ட் அணிந்து குளிக்க செல்வதற்காக ஆண்கள் எல்லோரும் ஆயத்தமாகி வர, ராகவி சுடிதாருடன் வந்து அமர்ந்து விட்டாள்.

பல்லவியும் சுடிதாரில் வந்து சேர அவளைப் பார்த்த கஜனோ, 'சுடிதார்ல ரொம்ப சின்ன பொண்ணா தெரியுறா...' என்று நினைத்துக் கொண்டு எழுந்தவன், "மொத்தம் எட்டு பேர், ரெண்டு வண்டி ஓகே தானே?" என்று கேட்டான்.

"ம்ம்..." என்று எல்லோரும் ஆமோதிக்க, "ரோட் மோசமா இருக்கும்... கார் சரி வராது, ஜீப் எடுத்துக்கலாம்." என்றான் ராம்குமார்.

அதனைத் தொடர்ந்து இரு ஜீப்புகளில் கிளம்பி இருந்தார்கள். ராகவியின் ஜீப்பில் அர்ஜுன் ஏறி ட்ரைவர் சீட்டில் அமர, அவன் அருகே நவநீதன் அமர்ந்து கொண்டான். ராகவியோ அவர்களைப் பார்த்து விட்டு கஜன் சாய்ந்து நின்ற வண்டியில் ஏறிக் கொள்ள, "அங்கே ஏறலாமே..." என்றான் அவன்.

"அப்போ என்னை உங்களால அழைச்சு போக முடியாதா?" என்று அவனுடனும் சண்டைக்கு சென்றாள்.

"அவன் மேல இருக்கிற கோபத்தை எதுக்குடி என் மேல காட்டுற?" என்று சலித்துக் கொண்ட கஜனோ, "இங்கேயே உட்காரு." என்று சொன்னவன், அங்கே வந்த ஜீவிதனிடம், "நைட் இங்க தானே ஸ்டே?" என்று கேட்டான்.

"ஒரே ரூம் தருவீங்களா?" என்று அவன் ஒரு வேகத்தில் கேட்டு விட்டான்.

சட்டென கஜன் அவனை அதிர்ந்து பார்க்க, ஜீவிதனுக்கு பின்னால் வந்த பல்லவிக்கு சிரிப்பு வந்து விட்டது.

வாயைப் பொத்தியபடி சிரித்தவள் வண்டியில் ஏற, தான் கேட்ட அர்த்தம் ஜீவிதனுக்கே அப்போதுதான் புரிந்தது. அதிர்ந்து நின்ற கஜனை தயக்கமாக பார்த்தவன், "நோ... நோ... நாட் லைக் தட்... ஏதோ ஒரு ஃப்ளோல கேட்டுட்டேன். எப்படி சொல்றதுன்னு தெரியல..." என்று தடுமாற, கஜனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

"ஒரே ரூமே கொடுக்கிறோம்..." என்று சிரித்தபடி சொல்ல, "அண்ணன், நான் சொல்ல வந்தது..." என்று அவன் தடுமாற, "சரிடா புரிஞ்சுது, நீ ஃப்ரீயா விடு..." என்று சொல்லிக் கொண்டு ஜீப்பின் ட்ரைவர் சீட்டில் சிரித்தபடி ஏறிக் கொள்ள, பல்லவியோ உள்ளே இருந்து சத்தமாக சிரித்துக் கொண்டாள்.

என்ன நடந்தது என்று புரியாத ராகவி, "இப்போ ஏன் சிரிக்கிறீங்க?" என்று கேட்க, "ஜீவிக்கு இங்க தங்குறதுன்னா ஒரே ரூம் வேணுமாம்..." என்றாள்.

"அப்படி எல்லாமா கேக்கிறார்?" என்று அவள் கேட்க, "எனக்கும் தெரியலையே..." என்று சொல்லிக் கொண்டாள் பல்லவி.

பிடரியை வருடிக் கொண்ட ஜீவிதனோ, ‘லூசுத்தனமா பேசி வச்சு இருக்கேன்...’ என்று நினைத்துக் கொள்ள, ஜீப்பின் கண்ணாடியை இறக்கிய கஜனோ, "ஜீவி இங்கேயா? அங்கேயா?" என்று கேட்டான். இதழ்களுக்குள் சிரிப்பு தேங்கி நின்றது.

"இங்க ஏறுனா கலாய்ப்பீங்க, அங்கேயே ஏறுறேன்." என்றபடி அர்ஜுனின் ஜீப்பில் ஏறினான்.

"நம்ம பாய்ஸ் கேங்கா கிளம்புவோம்." என்று நவநீதன் சொன்ன கணம், அதற்குள் ராம்குமாரும் ஏறிக் கொண்டான்.

நவநீதனோ, "மச்சான், எனக்கு வண்டி ஓட்ட சான்ஸ் தரணும்." என்று அர்ஜூனிடம் கேட்க, அர்ஜுன் அவனை அதிர்ந்து பார்க்க, "டேய் நான் அதுல வர்றேன்..." என்று சொன்ன ராம்குமாரோ வேகமாக இறங்கி கஜனின் காரில், அவன் அருகே ஏறிக் கொண்டான்.

"இப்படி ஓட வச்சுட்டியே..." என்று ஜீவிதன் நவநீதனிடம் சிரித்தபடி கேட்க,

அவனோ, "ஒரு நாளைக்கு நான் பெரிய ட்ரைவர் ஆகி காட்டுறேன்..." என்று சொன்ன கணம், விஜய் அவர்கள் வண்டியில் ஏறிக் கொண்டான்.

இப்படியே இரு வண்டிகளும் அங்கிருந்து கிளம்பின. நீர் ஓடிக் கொண்டு இருந்த அழகான இடம் அது. வண்டியும் ஓரமாக நின்று இருக்க, ஆங்காங்கே சிலர் குளித்துக் கொண்டு இருந்தார்கள். சுற்றி மரங்கள் காற்றுக்கு அசைந்து கொண்டு இருந்தன. இதமான சூழல்.

அந்த இடத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டு இறங்கிய பல்லவி, "ரொம்ப அழகா இருக்குல்ல..." என்றாள்.

"இதுல குளிச்சா ரொம்ப நல்லா இருக்கும், நாங்க முதல்ல எல்லாம் அடிக்கடி வருவோம்..." என்று ராகவி சிலாகித்துக் கொண்டு கூறினாள்.

நீரைக் கண்டதுமே டீஷேர்ட்டை கழட்டி எறிந்துவிட்டு நவநீதன் உள்ளே பாய்ந்து விட்டான். கீழே கிடந்த டீஷேர்ட்டை எடுத்த அர்ஜுனோ, "இவன் என்ன தண்ணிய கண்டா இப்படி ஹைப் ஆகுறான்..." என்று கேட்டபடி டீஷேர்ட்டை ஜீப்பினுள் போட்டு இருந்தான்.

அதனைத் தொடர்ந்து விஜய், ஜீவிதன் மற்றும் ராம்குமார் என்று எல்லோரும் நீரினுள் இறங்கி விட்டார்கள்.

ராகவியும் நீருக்குள் இறங்க செல்ல, "உங்க தங்கச்சிக்கு ஸ்விம்மிங் தெரியுமா என்ன?" என்று கேட்டான் அர்ஜுன் அங்கே நின்று இருந்த கஜனிடம்.

"நீ ஒன்னும் பயப்படாதே, அவ நல்லா ஸ்விம் பண்ணுவா." என்றான்.

"நான் ஒன்னும் பயப்படலயே..." என்று அவன் சொல்ல, "ஓஹோ..." என்று மட்டும் கிண்டலாக சொல்லிக் கொண்டான் கஜன்.

"நான் கேட்டது தப்பு தான்..." என்று சொன்ன அர்ஜுனும் நீருக்குள் பாய்ந்து விட்டான்.

இப்போது வெளியே நின்று இருந்தது என்னவோ கஜனும் பல்லவியும் தான். நீரைக் கண்களால் காட்டியவன், "இறங்கலையா?" என்று கேட்க, "நீங்களும் வாங்க." என்றாள்.

குரலை செருமிக் கொண்டு டீஷேர்ட்டை கழட்டி வண்டியினுள் போட்டு விட்டு அவளுடன் நடந்து கொண்டே, "அன்னைக்கு ட்ரெட் மில்ல ரன் பண்ணும் போது சைட் அடிச்ச தானே?" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டான்.

"நிறைய தடவை அடிச்சு இருக்கேன், அன்னைக்கு தான் நீங்க பார்த்து இருக்கீங்க." என்று அவனைப் பார்க்காமலே சொல்லிக் கொண்டு நடந்தவள், கன்னச் சிவப்பை அடக்க படாதபாடு பட்டுப் போனாள்.

"எப்போ இருந்து?" என்று கேட்டான்.

அதனை அறிந்து கொள்ள அவனுக்கும் ஆசையாக இருந்தது.

"ம்ம்... எப்போன்னு தெரியல, டெலிவரி டைம்ல ஸ்டார்ட் ஆகி இருக்கும்னு நினைக்கிறேன். அது அப்படியே இம்ப்ரூவ் ஆகி ஆகி, அடுத்த ஸ்டேஜுக்கு போயிடுச்சு." என்றாள்.

"என்ன அடுத்த ஸ்டேஜ்?" என்று அவன் புரியாமல் கேட்க, அவனைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவள், "எப்படி ஓபனா சொல்றது?" என்று சிணுங்கலாக கேட்டாள்.

"சொல்லுடி, தப்பில்ல..." என்றான்.

சட்டென விழிகளைத் தாழ்த்திக் கொண்டவள், "நீங்க எக்குத்தப்பா டச் பண்ணும் போது, ஃபீல் பண்ணுற அளவுக்கு ஆயிடுச்சு போதுமா?" என்று சொன்னாள்.

"எக்குத்தப்பாவா? நான் எங்கடி அப்படி டச் பண்ணுனேன்? இப்போ தான் கிஸ்ஸே பண்ணி இருக்கேன், இப்படி என் மேல அபாண்டமா பழி போடுற?" என்று கேட்டான்.

அவள் சொன்னது அவனுக்கு அதிர்ச்சிதான். அவன் மருத்துவன் என்பதைத் தாண்டி இதனை எல்லாம் யோசிக்கவே இல்லையே?!

"ஹையோ! நீங்க டச் பண்ணல, விடுங்க..." என்றவளுக்கு எப்படி சொல்வது என்று தெரியாத தவிப்பு. அதே தவிப்புடன் நீருக்குள் இறங்க முற்பட, அவள் கையைப் பற்றியவன், "சொல்லிட்டு போ." என்றான்.

அவனை நோக்கி திரும்பியவள், "அன்னைக்கு பால் கொடுக்கும் போது காயம் வந்திடுச்சுன்னு செக் பண்ணுனீங்க, நினைவிருக்கா?" என்று கேட்டாள்.

புருவம் சுருக்கியவன், "எஸ்..." என்றான்.

"அப்போ டச் பண்ணுனீங்க." என்றாள்.

"ஹேய், நான் ட்ரீட் பண்ணுனேன்." என்றான் அவன்.

"அது உங்களுக்கு, எனக்கு அப்படி இல்ல." என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, அவன் கொஞ்சம் அதிர்ந்து விட்டான் தான்.

"அடப்பாவி!" என்று வாய்விட்டு சொல்லிக் கொண்டு கையை விட, நீருக்குள் இறங்கிக் கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தவள், "நான் என்ன பண்ணுறது? ஃபீல் ஆச்சு..." என்று சொல்லிக் கொண்டு நீந்த ஆரம்பித்து விட,

அவனது இதழ்களுக்குள் ஒரு வெட்கம் கலந்த புன்னகை. தனது ஸ்பரிசத்தில் தனக்கே தெரியாமல் அவள் உருகி குழைந்து இருக்கின்றாள் என்று நினைக்கும் போது, ஏதோ ஒரு பரவசம். பிடரியை வருடிக் கொண்டு நீருக்குள் பாய்ந்து இருந்தான்.

நீந்திக் கொண்டு அவள் அருகே வந்தவன், "அப்போ ஏன் சொல்லல?" என்று கேட்டான்.

"எப்படி சொல்றது?" என்று கேட்டான்.

"அட்லீஸ்ட் உனக்கு பிடிச்சு இருக்குன்னு சொல்லி இருக்கலாமே?" என்றான்.

"ஒரு அண்டர் ஸ்டாண்டிங்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சட்டுன்னு என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டிங்க. இத சொன்னா உங்கள ப்ரெஷர் பண்ணுற போல ஆயிடுமோனு யோசிச்சு தான் சொல்லாம விட்டேன். ஆனா இன்னைக்கு நீங்களே சொன்ன அப்புறம் எதுக்கு மறைக்கணும்னு தோனுச்சு." என்று சொன்னாள்.

இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டு அவன் நீந்தி செல்ல, அவளோ நீருக்குள் மூழ்கி எழுந்து அவனையே பார்த்தபடி நின்று இருக்க, அவள் அருகே வந்த ராகவி, "ஜெண்ட்ஸுக்கு ஸ்விம்மிங் காம்படிஷன் வைப்போமா?" என்று கேட்டாள்.

"அட நல்லா ஐடியா! ஜாலியா இருக்கும்..." என்று சொன்னவளோ, "ஸ்விம்மிங் காம்படிஷன் வைக்கலாம்னு இருக்கோம், எல்லாரும் ரெடியா?" என்று சத்தமாக கேட்க,

நவநீதனோ, "நான் வரல, அப்புறம் நான்தான் லாஸ்ட்டா வருவேன்." என்றான்.

"அப்போ மீதி அஞ்சு பேரும்?" என்று கேட்டாள் பல்லவி.

"இவனுங்க கூட என்னால போட்டி போட முடியாது. நான் எல்லாம் ரொம்ப சாஃப்ட், மலைமாடு போல இருக்காங்க எல்லாரும்..." என்று ராம் சொல்ல,

ஜீவிதனோ, "ராம், உன்னை பார்த்தா அப்படி தெரியலையே..." என்றான்.

ராம்குமாரோ, "நான் சின்ன வயசுல நல்லா சாப்பிட்டு புசுபுசுன்னு இருந்தேன். அண்ணா தான் என்னை ஃபோர்ஸ் பண்ணி ஜிம் செய்ய வச்சு, இப்படி என்னை மாத்தி வச்சு இருக்கார். இப்போ கூட வெர்க் அவுட் செய்ய சலிப்பா இருக்கும். ஆனா அவர் என்னை விடுறதே இல்லை..." என்று சோகமாக சொல்ல, ஜீவிதன் சிரித்துக் கொண்டான்.

விஜய்யோ, "ராம் தூங்கி வழிஞ்சு ஜிம் செய்யும் போது செம்ம காமெடியா இருக்கும்..." என்று சொல்ல,

அவனோ, "என்ன பண்ணுறது? இந்த குடும்பத்துல வந்து பிறந்துட்டேன்..." என்று சொன்னவனோ, "விஜய் செம்ம ஸ்ட்ராங் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டு அவன் தோள்பட்டையை அழுத்த,

"பார்த்தாலே தெரியுது..." என்று ஜீவிதனும் சொல்லிக் கொள்ள, அங்கே வந்து சேர்ந்த கஜனோ, "என்ன நடக்குது?" என்று கேட்டான்.

"ஸ்விம்மிங் காம்படிஷனாம்..." என்று சொன்னான் ஜீவிதன்.

"வயசாயிடுச்சுப்பா, நீங்க நீந்துங்க..." என்று சொல்லி அவன் விலகி நிற்க, "அப்படி தெரியலையே... இவங்க பேசுறத பார்த்தா, பெரிய ஸ்விம்மர் போல தெரியுது. என்ன மச்சான் விட்டுக் கொடுக்குறீங்களா?" என்று சரியாக கேட்டான் அர்ஜுன்.

"ச்ச... ச்ச... உங்களுக்கு எல்லாம் நான் எதுக்கு விட்டுக் கொடுக்கணும்?" என்று கேட்டான்.

ராம்குமாரோ, "சரியா தான் சொல்லி இருக்க அர்ஜுன். அண்ணன் கூட ஸ்விம் பண்ணுறது, விஜய்க்கே கஷ்டம்." என்று சொன்னான்.

"அட! அப்போ சக்திவேல் ஃபேமிலி விஸ் பார்த்தீபன் ஃபேமிலினு போட்டி வச்சுக்கலாம்." என்று சொன்னான் அர்ஜுன்.

ஜீவிதனோ, "அட! செம இன்டெரெஸ்ட்டா இருக்கே..." என்று சொல்ல,

கஜனோ, "டேய், ஏன்டா குடும்பத்தை இழுத்து நடுவுல விடுறீங்க?" என்று சிரித்தபடி கேட்க, "அப்போ தான் நல்லா இருக்கும்." என்றான் அர்ஜுன்.

ராகவியும், "சக்திவேல் குடும்ப மானத்தை காப்பாத்துங்க அண்ணன்..." என்று சொன்னவளோ விஜய்யிடம், "மாமா, நீங்களும் தான்." என்று சொன்னாள்.

"அட சும்மா இரும்மா..." என்று விஜய் சொல்ல, "ஏன், எங்க குடும்பத்தை பார்த்து பயமா?" என்று கேட்டுக் கொண்டு பல்லவி அங்கே வந்தாள்.

"அட பாருடா..." என்று கஜன் அவளைப் பார்த்துக் கொண்டு கேட்க, "சக்திவேல் குடும்பத்துக்கு பயம் இல்லன்னா, எங்ககூட போட்டிக்கு வாங்க." என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

"அண்ணா மானத்தை வாங்காதீங்க..." என்று ராகவி சொல்ல, "இதுக்காகவே போட்டி போடலாம், வாடா விஜய்." என்று சொன்ன கஜனோ அர்ஜுனிடம், "ரூல்ஸ் சொல்லுடா..." என்றான்.

"ஒன் டு ஒன்தான், இந்தப் பக்கம் பல்லவி நிப்பா, அந்த லைன்ல உங்க தங்கச்சி நிற்பா." என்று அர்ஜுன் சொல்ல, "அவளுக்கு ராகவினு பேர் இருக்கு." என்றான் கஜன்.

"உங்க தங்கச்சி தானே?" என்றான் அர்ஜுன்.

"ஒஹோ... பேரை கூட சொல்ல மாட்டிங்களா சார்?" என்று கஜன் கேட்க, "இந்த வாயில எல்லாம் என் பேர் வரணும்னு இல்ல." என்றாள் ராகவி அர்ஜுனை முறைத்துக் கொண்டு.

அர்ஜுனும் இதழ்களுக்குள் சிரித்துவிட்டு, "ரிலே போல வைக்கலாம், அப்போ தான் நல்லா இருக்கும். பல்லவிகிட்ட ரெண்டு பேர், ராகவிகிட்ட ரெண்டு பேர் நிற்கணும். இங்க இருந்து ரெண்டு பேர் தடியை கொண்டு போய் அங்கே நிக்கிறவங்ககிட்ட கொடுக்கணும். அவங்க அங்கே இருந்து இங்க வந்து பல்லவி சைட்ல ஃபினிஷ் பண்ணணும்." என்றான்.

"இன்ட்ரெஸ்ட்டிங்!" என்று ஜீவிதன் சொல்ல, "நாங்க தான் சியர் பாய்ஸ்!" என்றான் நவநீதன்.

"டேய் நான் டாக்டர்டா, உன் கூட என்னையும் சேர்த்துக்கிற..." என்று ராம்குமார் சொல்ல, "அப்போ போட்டில கலந்துக்க வேண்டியது தானே?" என்றான் நவநீதன்.

"இல்ல, நான் சியர் பாய்யாவே நிக்கிறேன்." என்று ராம்குமார் சொல்ல, சத்தமாக சிரித்த கஜனோ, "ஓகே, விஜய் நீ ஸ்டார்ட் பண்ணுறியா? நான் ஸ்டார்ட் பண்ணட்டுமா?" என்று கேட்டான்.

"நான் ஸ்டார்ட் பண்ணுறேன், நீங்க முடிச்சிடுங்க." என்றான்.

அர்ஜுன் ஜீவிதனைப் பார்க்க, "நான் ஸ்டார்ட் பண்ணுறேன், அர்ஜுன் நீ எண்ட் பண்ணிடு. ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை." என்றான்.

"ஏன்டா ஆரம்பத்திலேயே அபசகுனமா பேசுற?" என்று அர்ஜுன் திட்ட, "டேய், நம்ம ஸ்விமிங் ஃபூல்ல ஸ்விம் பண்ணுன ஆட்கள். இவங்க ஆத்துலயும் கடலுலையும் பண்ணி இருப்பாங்க, ஈடு கொடுக்கிறது கஷ்டம்தான்." என்றான்.

கஜனோ, "அப்படி எல்லாம் இல்ல, வா ஸ்விம் பண்ணலாம்." என்று சொல்லிக் கொண்டே ராகவியுடனும் அர்ஜுனுடனும் அடுத்த முனைக்கு நடந்து சென்றான்.

ராகவியோ கஜனின் கையைப் பற்றி தனது கை மேலே வைக்க, "என்னடி?" என்றான்.

"விட்டுக் கொடுக்கிறேன், அது இதுன்னு தோற்க கூடாது, சத்தியம். புரியுதா?" என்று கேட்டாள்.

"ரொம்ப பண்ணுற... சரி, உனக்காக ஃபுல் எஃபோர்ட் போடுறேன்." என்று கஜன் சொல்லிக் கொள்ள, "அப்போ தோத்து போனா விட்டுக் கொடுத்ததாலனு சொல்ற ப்ளான் போல?" என்றான் அர்ஜுன்.

"எங்க அண்ணா ஒன்னும் தோற்க மாட்டார்." என்றாள் அவள்.

"பார்க்கலாம்... பார்க்கலாம்..." என்று அர்ஜுன் சொல்ல, "சண்டை போடாதீங்கடா..." என்று சலித்துக் கொண்டு நின்று இருந்தான் கஜன்.
 
CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 89)

பின்னே.. அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை மாதிரி, அர்ஜூனை நினைச்சு கஜன் கிட்டத்தானே கோபத்தை காட்ட முடியும்... வேற வழி...?
இந்த நவநீ வேற, அவன் ட்ரைவிங் டேலண்ட்டை சொல்லியே எல்லாரையும் கதிலங்க வைச்சிடுறான்.
எப்பா நவநீ...! நீ ட்ரைவிங்கும் பண்ண வேணாம், உன் திருவாயையும் திறக்க வேணாம்,... ஆளை விடுடாப்பான்னு சத்தமா சொன்னா அடிக்க வருவானோ ????

அடேயப்பா...! போட்டியில கலந்துக்கலைன்னாலும் உசுப்பேத்தி விட்டே கடுப்பேத்துறாங்கப்பா...!
எங்க நீங்க சொல்லுங்க ...?
சக்திவேல் குடும்பமா ...?
பார்த்தீபன் குடும்பமா...?
ஐ ஆம் ஆல்வேஸ் அர்ஜூன் சைட் .. அதாவது பார்த்தீபன் பக்கம். எங்க அணியில பெண் சிங்கம், பொறுமையின் சிகரம் பல்லவியும் இருக்கிறாள்ல...!
😄😄😄
CRVS (or) CRVS 2797
 
buvanababu

New member

Supero super sis
 
Top