ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 77

pommu

Administrator
Staff member
நிலவு 77

காலை வேளையில் மாமர ஊஞ்சலில் தலை சாய்த்து அமர்ந்து இருந்தாள் ராகவி. இத்தனை நாட்கள் வந்தனாவை நினைத்து தான் சக்திவேல் அதிகம் கவலைப்பட்டான். அவள் திருமணம் செய்ததுமே, அவள் வாழ்க்கை சீராகிவிடும் என்று அவனுக்கு நம்பிக்கை வந்து விட்டது.

இப்போது வீட்டினுள் இருந்தவாறே ராகவியையே பார்த்து இருந்தான் சக்திவேல். இதுவரை வீட்டில் நிம்மதியான சூழ்நிலை இருக்கவில்லை. அதனால் எதுவும் அவளிடம் அவள் வாழ்க்கையைப் பற்றி அவன் பேசவில்லை. இன்னுமே அவள் வைத்தியசாலையில் வைத்து அர்ஜுனைப் பற்றி சொன்னது மனதில் வந்து போனது. அப்படி ஒரு வாழ்க்கை அவள் ஏன் வாழ்ந்து இருக்க வேண்டும்? படிக்க வேண்டிய நேரத்தில் வயிற்றில் குழந்தையுடன் நிற்கின்றாளே?

அவளுக்கு நடந்த கஷ்டங்களை சொல்ல முடியாத அளவுக்கு தான் தூரமாகி விட்டேனா என்கின்ற எண்ணம் அவனிடம். இப்போது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எழுந்து சென்றவன் அவள் அருகே அமர, சட்டென கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தவள். "அப்பா!" என்று சொல்ல,

அவனும் அவள் தலையை வருடிக் கொண்டு, "இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கும்மா நீ வாழ்ந்து இருக்கணும்?" என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.

பதில் இல்லை அவளிடம்.

அவனைப் பார்க்க முடியாமல் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு, "ஆரம்பத்துல பயந்தேன்பா, அப்புறம் குடும்பத்துல குழப்பம் வர கூடாதுனு தான் எதுவுமே சொல்லாம விட்டேன்." என்றாள்.

"ம்ம்... நடந்ததை மாத்த முடியாது. இப்போ விவாகரத்து எடுத்துடலாம்." என்றான்.

தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. "அப்பா!" என்றாள்.

"அவன் வந்தனா விஷயத்துல தப்பு பண்ணாதவனா இருக்கலாம். ஆனா உன் விஷயத்துல அவன் பண்ணுனதை என்னால ஜீரணிக்க முடியல. இவ்ளோ கஷ்டப்பட்டு அவன் கூட வாழணும்னு இல்லை." என்றான்.

அவனுக்கு தான் அவள் மனநிலை தெரியவில்லையே? அவன் மேல் இருந்த வெறுப்பை வெளிப்படையாக கொட்டியவள், காதலை தனக்குள் தானே இன்றுவரை பூட்டி வைத்து இருக்கின்றாள். கஜனுக்கு மட்டும் தானே அவள் மனநிலை தெரியும்.

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு சக்திவேலின் விழிகளைப் பார்த்தவள், "இப்போ வாழணும்னு தோனுதே ப்பா..." என்றாள்.

அவன் விழிகளில் அதிர்ச்சி.

"என்ன பொண்ணும்மா நீ...?" என்று ஆரம்பிக்க, "தோனுதுப்பா... நான் என்ன பண்ணட்டும்? அர்ஜுன் கூட நிறைய பிரச்சனை இருந்திச்சு தான்... ஆனாலும் அர்ஜூனுக்கும் ரொம்ப நல்ல பக்கமும் இருக்கு. நான் ஒரு நாள் கூட சமைச்சது இல்லப்பா, எல்லாமே அவர் தான் பண்ணி கொடுப்பார், அன்னைக்கு கோபத்துல எனக்கு இது எதுவுமே நினைவுக்கு வரல... அவரோட மோசமான பக்கங்கள் மட்டும் தான் நினைவுக்கு வந்திச்சு... இப்போ நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு..." என்று கேட்கும் போதே, கண்ணில் கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டாள்.

கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன், அவள் தலையை வருடி விட்டு எழுந்து சென்றான். கர்ப்பமாக இருக்கும் பெண்ணை காயப்படுத்தவும் இஷ்டம் இல்லை. அவள் வேறு அவனுக்கும் நல்ல பக்கங்கள் இருக்கின்றது என்கின்றாளே. அவனுடன் வாழ ஆசைப்படுகின்றாளே. இதற்கு மேல் என்ன செய்து விட முடியும்?

காலம் எல்லாவற்றையும் மாற்றும் என்னும் நம்பிக்கையில் இந்த கணத்தை அவனும் கடந்து செல்ல நினைத்து இருக்க, அவளோ மீண்டும் ஊஞ்சலின் கயிற்றியில் தலை சாய்த்து அமர்ந்து கொண்டு, அங்கே விளையாடிக் கொண்டு இருந்த ஆட்டுக் குட்டிகளைப் பார்த்தாள்.

***

இதே சமயம், சுகானாவோ அன்று இரவு குளித்து விட்டு வந்தவள் ராம்குமார் அருகே அமர்ந்து கொண்டாள். அவனோ அவள் வந்ததுமே அலைபேசியை தள்ளி வைத்துவிட்டு, அவள் கன்னத்தைப் பெருவிரலால் வருடிக் கொண்டு, "இப்போ எப்படி ஃபீல் பண்ணுற?" என்று கேட்டான்.

"கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கு ராம்." என்று சொன்னவளது நெற்றியில் அவன் முத்தம் பதிக்க, "எனக்கு பீரியட் முடிஞ்சுது..." என்றாள்.

அவள் விழிகளைப் பார்த்தவன், "இந்த மாசம் அவசரம் ஒன்னும் இல்ல, ஆறுதலா பார்த்துக்கலாம்..." என்று சொல்ல,

"அதுக்கு இல்ல, உங்கள விட்டு ரொம்ப தூரமா போன போல இருக்கு. இவ்ளோ பிரச்சனைல நம்ம ஒழுங்கா மனசு விட்டு பேசிக்க கூட இல்லை. நமக்கான நேரத்தை நம்ம இழந்த போலவே இருக்கு ராம். நடந்ததை நினைச்சு ஒன்னுமே ஆக போறது இல்லையே? பழையபடி உங்கள நெருங்கி இருக்கணும்னு ஆசைப்படுறேன்." என்று சொன்னாள்.

அவனும் அதனைதான் நினைத்துக் கொண்டு இருந்தான். கேட்டால் என்ன நினைப்பாளோ என்றுதான் அவன் கேட்கவில்லை.

மெலிதாக புன்னகைத்தவன், "இதே தான் நானும் நினைச்சேன்." என்று சொல்ல, "பாட்டு பாடட்டுமா?" என்று கேட்டாள்.

சத்தமாக சிரித்துக் கொண்டு, "இன்னைக்கு என்னை தூங்க வைக்க ப்ளான் பண்ணுறியா? அதெல்லாம் முடியாது..." என்று அவள் கழுத்தைப் பற்றி அவள் இதழில் இதழ் பதித்து இருந்தான், அதனைத் தொடர்ந்து அவர்களது மேனியும் நெருங்கிக் கொள்ள, அழகிய சங்கமம் இருவருக்கும் நடுவே இடம்பெற்றது.

ஒரு வழியாக ராம்குமார் மற்றும் சுகானாவின் வாழ்க்கை சீராக செல்ல ஆரம்பித்து இருந்தது.

பல்லவியோ இப்போதெல்லாம் கஜனை நெருக்கமாக ரசிக்க ஆரம்பித்து இருந்தாள். ஆனால் அதனை அவனிடம் சொன்னால் அவனுக்கு அழுத்தம் கொடுப்பது போல் இருக்கும் என்று தனக்குள் புதைத்துக் கொண்டாள். முதல் எல்லாம் அவன் கை பற்றினால் சாதாரணமாக இருப்பவளுக்கு, பெண்களுக்கான உணர்வுகள் இப்போதெல்லாம் தோன்ற ஆரம்பித்து இருந்தன. அவன் நெருக்கத்தை ரசித்தாள். சிரிப்பை ரசித்தாள். அவன் ஆளுமையை ரசித்தாள். நேசத்தை ரசித்தாள். யாழினியுடன் அவன் விளையாடும் போது குழந்தையாகவே மாறி விடுவான், அதையும் ரசித்தாள்.

அவளுக்கு லெக்ஷரர் வேலைக்கு அவனே விண்ணப்பிக்க உதவியும் செய்து இருந்தான். அவளும் நேர்முக தேர்வுக்காக காத்துக் கொண்டு இருந்த தருணம் அது.

அன்று யாழினிக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தவளுக்கு அதில் உண்டான காயம் காரணமாக வலிக்க ஆரம்பித்து விட்டது.

வாய் விட்டே, "ஆஹ்!" என்று அவள் அலறிக் கொள்ள, அங்கே அலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தவனோ, "என்ன ஆச்சு?" என்று கேட்க, "இல்ல... ஒன்னும் இல்லை..." என்றாள் அவசரமாக.

மீண்டும் வலித்தது. "ஸ்ஸ்..." என்றாள்.

"என்னன்னு கேக்கிறேன்ல..." என்று சொல்லிக் கொண்டு அருகே வந்து விட்டான்.

"ஃபீட் பண்ணி காயம் ஆயிடுச்சு." என்று சொன்னாள்.

"லெட் மீ சீ." என்றான்.

அவளுக்கு மயக்கம் வராத குறைதான். அவனுக்கு அவள் அங்கங்கள் ஒன்றும் புதிது இல்லைதான். இத்தனை நாட்கள் அவனை மருத்துவனாக, நண்பனாக மட்டுமே யோசித்து இருந்தாள். இன்று அவன் இப்படி கேட்டதுமே அவளுக்கு கொஞ்சம் ஒரு தயக்கம் வந்து விட்டது.

"இல்ல... அது..." என்று சொன்னவளை முறைத்தவன், "அப்படியே விட்டா இன்ஃபெக்ஷன் ஆக்கிடும், குழந்தைக்கும் கூடாது." என்று யாழினியைத் தூக்கி எடுத்தவன், தொட்டிலில் படுக்க வைத்து விட்டு அவள் அருகே அமர்ந்துவிட, அவளுக்கோ மயக்கம் வராத குறைதான்.

'முடியாது' என்று சொன்னால் அதிகப்படியாக இருக்கும் என்று நினைத்தவள் அவனைத் தடுக்கவில்லை. அவள் காயத்தை ஆராய்ந்தான். அவன் விரல்கள் அவள் மேனியை தாராளமாக ஸ்பரிசித்தன. சற்று நெளிந்தாள். அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்தாள். அதில் ஒரு மருத்துவனாக சிகிச்சை செய்யும் முனைப்பு மட்டுமே இருந்தது.

அவள் அங்கங்கள் அவனுக்குள் எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை என்று சின்ன ஏமாற்றம் வந்தாலும், அவனைப் பற்றி தெரிந்தவள் தானே? இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டாள். அவன் கரம் பட்டதும் ஒருவகை சிலிர்ப்பு அவள் மேனியில். உணர்வுகளைக் கண்டுகொள்வானோ என்று பயந்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அவனுமே, "இதுக்கு ஆயில்மெண்ட் ஒன்னு கொடுக்கிறேன், ஓகே ஆயிடும்." என்று சொல்ல, அவள் இன்னுமே விழிகளை மூடி இருக்க, "பல்லவி!" என்றான் மென்குரலில்.

விழிகளைத் திறந்தாள்.

"ஆர் யூ ஓகே?" என்று கேட்க, "ம்ம்..." என்று அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டு சொன்னவளோ தனது ஆடையை சரி செய்ய, "டைட்டா ட்ரெஸ் பண்ணாதே..." என்று சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டான்.

இப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது. ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவளுக்கு, 'என்ன கொடுமை இது?' என்கின்ற புலம்பல் தான் மனதுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.

இப்படியே நாட்கள் நகர, அன்று விடுமுறை நாள்.

"இன்னைக்கு வெளிய போகலாமா வந்தனா?" என்று கேட்டான் விஜய்.

அவளுமே, "ஓகே விஜய், எங்க போகலாம்?" என்று கேட்க, "நம்ம ஊர்ல சுத்தி பார்த்துட்டு வரலாம்." என்று சொல்ல, அவளும் அவனுடன் வண்டியில் கிளம்பி விட்டாள்.

அவன் பச்சை நிற ஷேர்ட் மற்றும் வேஷ்டி அணிந்து இருக்க, அவள் பச்சை நிற புடவை அணிந்து இருந்தாள்.

போகும் வழியில் வண்டியை நிறுத்தி இறங்க முனைய, "எங்க போறீங்க?" என்று கேட்டாள் வந்தனா.

"வெய்ட் பண்ணு..." என்று இறங்கியவன் அவளுக்காக பூக்களை வாங்கிக் கொண்டு வந்து நீட்ட, மென் சிரிப்புடன் அதனை தலையில் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

"செம்ம அழகா இருக்க வந்தனா..." என்றான் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு.

"சைட் அடிச்சது போதும், வண்டியை எடுங்க." என்றாள் கண்களை சிமிட்டி.

"என் பொண்டாட்டியை நான் சைட் அடிக்கிறேன், இதுல என்ன இருக்கு?" என்று அவன் வண்டியைக் கிளப்பி இருந்தான்.

முதலில் கோவிலுக்கு சென்றார்கள். ஒன்றாக அவனுடன் சாமி கும்பிட்டவள் அவனுக்கு திருநீறை பூசி, அவன் விழிகளை மூடி பெரு விரலில் எம்பி ஊதிவிட, அவன் சிகை அழகாக அசைந்தது.

அதனை ரசனையாக பார்த்துக் கொண்டு விலகி நிற்க, அவனும் அவளுக்கு குங்குமத்தை வைத்து விட்டவன், "கிளம்பலாமா?" என்று கேட்க, "ம்ம்..." என்று சொல்லிக் கொண்டு அவனுடன் புறப்பட்டு இருந்தாள்.

நீண்ட நாட்கள் கழித்து வெளி உலகத்தைப் பார்க்கின்றாள். அவளை வித்தியாசமாக பார்த்துக் கொண்டு சிலர் நடந்துவர, அவர்களை ஒரு பார்வை தான் விஜய் பார்த்து இருப்பான். சட்டென அவளில் இருந்து பார்வையை அகற்றிக் கொண்டார்கள். அவர்களைப் பார்த்துக் கொண்டு வந்தனாவின் கையை அழுந்த பற்றி இருந்தான். இப்படியான கஷ்டத்தை அனுபவித்த பெண், கணவனுடன் சந்தோஷமாக வாழ்வது அவர்களுக்கு ஆச்சரியம் தானே?!

அந்த ஆச்சரியமான பார்வைதான் அது. அதனையும் அவள் கண்டுகொண்டாள். அவர்களை விஜய் உறுத்து விழித்ததையும் கண்டுகொண்டாள்.

"என்ன மாமா, கண்ணாலேயே எல்லாரையும் எரிச்சிடுவீங்க போல?" என்று அவனைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்துக் கொண்டு கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன், "நீ சொன்னா எரிச்சிடலாம்." என்றான்.

மெலிதாக சிரித்துக் கொண்டு, "நான் சந்தோஷமா உங்ககூட வர்றது அவங்களுக்கு ஆச்சரியமா இருக்கு போல? அதுதான் பார்த்துட்டு போறாங்க..." என்று சொன்னாள்.

"அதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு? எப்போ பார்த்தாலும் நாலு சுவருக்குள்ள இருந்து அழுதுட்டே இருக்கணுமா? இவங்கள போல் ஆட்களால் தான் ஆசைப்பட்டாலும் பலரால வெளிப்படையா சந்தோஷமா இருக்க முடியுறது இல்ல." என்று எரிச்சலாக சொல்லிக் கொண்டு வண்டியில் ஏற,

"எதுக்கு இவ்ளோ கோபம்?" என்று கேட்டபடியே அவளும் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

"ஒரு கிஸ் பண்ணு, கோபம் குறைஞ்சிடும்." என்றான்.

'ஐயோ..." என்று அவள் வாயில் கையை வைக்க, அவளையே பார்த்து இருந்தான்.

சுற்றிப் பார்த்துக் கொண்டு, "யாரும் பார்த்திட போறாங்க..." என்றாள்.

"யாருமே இல்லடி..." என்றான்.

அவளும் தயக்கமாக அவன் கன்னத்தில் மென் இதழ்களைப் பதித்து விலக, இதழ்களைப் பிதுக்கியவன், "அவ்ளோ தானா?" என்று கேட்டான்.

"இப்போ வேணாம், நைட் கொடுக்கிறேன்." என்றாள் வெட்க சிரிப்புடன்.

"பேச்சு மாற கூடாது..." என்றான்.

"கொடுக்கிறேன்னு சொல்றேன்ல..." என்று சொல்லிக் கொண்டு, அவன் கன்னத்தைப் பற்றி முன்னே திருப்பி விட்டாள்.

அவர்களுக்கான திருமணம் நடந்து வாரங்கள் பல கடந்து இருந்தன. அவர்களின் நேசம் இன்னுமே ஆழமாக மாறி இருந்தது. இப்போதெல்லாம் அவள் எதனைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை. 'விஜய் இருக்கின்றான்' என்று எப்போதுமே நினைத்துக் கொள்வாள். அவள் வலிகளைக் கூட அவன் நினைக்க விடுவது இல்லை. அவன் காதலால் மறக்க வைத்து விடுகின்றான்.

இப்படி தன்னை அவன் விழுந்து விழுந்து காதலிப்பான் என்று அவள் கனவில் கூட நினைத்தது இல்லை. அவளுக்கு போட்டியாக காதலித்துக் கொண்டல்லவா இருக்கின்றான். அவனுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது மட்டும்தான், அவள் மனதில் இப்போது ஆழமாக பதிந்து இருந்தது.

அவன் வண்டி ஓட்டுவதையே பார்த்துக் கொண்டு இருந்தவள், "ஷேவ் பண்ணலயா மாமா?" என்று கேட்க, "ஏன், உனக்கு தாடி, மீசை பிடிக்காதா?" என்று கேட்டான்.

"பிடிக்கும் தான், ஆனா கிஸ் பண்ணும் போது குத்துதே..." என்றாள்.

"அப்போ வீட்டுக்கு போனதும் பண்ணிடுறேன்." என்றான் மென் சிரிப்புடன்.

அவன் வண்டி நேரே அவர்களது சோளக் காட்டினுள் தான் நுழைந்தது.

"இங்க என்ன பண்ண போறோம்?" என்று கேட்க, "வீட்டுக்குப் போய் சோளம் சுட்டு சாப்பிட போறோம்." என்று அவன் இறங்க, அவளும் அவனுடன் இறங்கிக் கொண்டாள்.
 
CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 77)

எப்படியோ.. ராம் சுகானா ரூட் கிளியராயிடுச்சு, இனி அடுத்த மாசமே குழிப்புள்ளை வயித்துக்குள்ளேங்கற லாஜீக் உண்மையாயிடும் போல.

இதோ.. ராகவியும் தன் மனசுக்குள்ள இத்தனை நாளா மறைச்சு வைச்சிருந்த அர்ஜூன் மீதான காதலை, அவளோட அப்பா சக்திவேல் கிட்ட வெளிப்படுத்திட்டா. இனி அர்ஜூன் வர வேண்டியது தான். அதற்கப்புறம் அமோகமா மன்னிப்பு படலத்தை ஆரம்பிச்சு இந்த ஜோடியையும் சேர்த்து வைச்சுட வேண்டியது தான்.

அடுத்தது.... கஜன் & பல்லவி,..
இதை தடியெடுத்து அடிச்சு கனிய வைக்க முடியாது. தானா கனிய வேண்டிய கனி. ஆல்ரெடி, பல்லவி கனி கனிய ஆரம்பிச்சிட்டா. இனி கஜன்
கனிஞ்சுட்டா, மேட்டர் ஓவர்.

அடுத்தது... விஜய் & வந்தனா...
இதோ இப்பத்தான் சோளக்காட்டு கொல்லையில நுழைஞ்சிருக்காங்க. இனி சிலிமிஷா & கில்மிஷா எல்லாமே, அந்த காட்டுக்குள்ள நடக்க ஹண்ரட் பர்சென்ட் வாய்ப்பு இருக்கு மகாஜனங்களே...!
அப்படியே எல்லாரும் ஒரு ஓரமா
கொஞ்ச நேரம் குத்த வைச்சு குந்த வைச்சிங்கன்னா.....
எப்படியும் மதியக் காட்சி, அட.. அட்லீஸ்ட் ஒரு சின்ன ட்ரையலாவது கன்ஃபார்மா நடக்கும் பாருங்களேன்.
ஸோ... கொஞ்சம் பொறுமையை கடைப்பிடிச்சிங்கன்னா... அப்பத்தான் வாழ்க்கைங்கற எருமையையே மேய்க்க முடியும். பீ பேஷன்ட் !!!
😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Sugumari

New member

Hahaha 🤣 😂
 
Top