ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 74

pommu

Administrator
Staff member
நிலவு 74

குளித்துவிட்டு மார்பில் பூந்தூவாலையுடன் கண்ணாடி முன்னே வந்து நின்றாள் நேத்ரா. தன்னையே பார்த்தாள். வெட்கத்தில் கன்னங்கள் மேலும் சிவந்து போயின. நேற்று அவள் மேனியை என்னவெல்லாம் பண்ணிவிட்டான் இந்தக் கள்வன்? இப்போது நினைத்தாலும் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. இப்படி அவன் ஸ்பரிசத்துக்கு உருகிக் குழைவாள், அவனுடன் ஒன்றிப் போவாள் என்று அவளே நினைத்துப் பார்த்தது இல்லை. அவனது வேகத்துக்கு ஈடு கொடுத்த தன்னை நினைத்தே அவளுக்கு ஆச்சரியம் தான்.

அவன் கட்டுடலை ரசித்தது மட்டும் அல்லாமல், ஆசையாக ஸ்பரிசித்தும் அல்லவா இருக்கின்றாள். அவளது கழுத்து வளைவானது சிவந்து போய் இருந்தது. விரல்களால் மெதுவாக வருடிப் பார்த்தாள். அவனது பற்தடங்கள் கொடுத்த அடையாளம் அது. அதனைப் பார்க்க பார்க்க வெட்கத்தில் பூமிக்குள் புதைந்து விடலாம் போல இருந்தது அவளுக்கு. ஒருவித கூச்சத்துடனேயே ஆயத்தமாகி வேலைக்கு கிளம்பி இருந்தாள்.

அங்கே சென்றாலும் அவன் நினைவுதான். அவன் முத்தமிட்டதும் மொத்தமாக கொள்ளையிட்டதும் தான் நினைவுக்கு வந்து போனது. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவளைப் போலதான் அவன் நிலைமையும்.

அவன் மலர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டு, "என்ன சார், இவ்ளோ சந்தோஷமா இருக்கீங்க?" என்று கேட்காதவர்கள் யாரும் இல்லை.

'இப்படிதானா முகத்துலயே எல்லா ரியாக்ஷன்ஸையும் காட்டி வைப்ப?' என்று தனக்குத் தானே திட்டியும் கொண்டான்.

மதிய நேரம் போல அவளுக்கு அழைத்தான். அவன் அழைப்பைப் பார்த்ததுமே சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளுக்கு என்னென்னவோ செய்தது.

'ச்ச...! எப்பவுமே இதே நினைப்பு தானா நேத்ரா?' என்று தனக்குத் தானே திட்டிக் கொண்டு அலைபேசியை எடுக்க, "என்னடி பண்ணுற?" என்று கேட்டான்.

குரலில் ஒரு மயக்கம் இருந்தது. அதனை அவளும் கண்டுகொண்டாள்.

குரலை செருமிக் கொண்டு, "சாப்பிட்டுட்டு இருக்கேன்." என்றாள்.

"எனக்கும் தான் சாப்பிடணும் போல இருக்கு..." என்றான்.

"இன்னும் சாப்பிடலையா?" என்று கேட்டாள்.

"நீ இல்லையே?" என்றான்.

"நான் எதுக்கு?" என்று அவள் கேட்க, குரலை மட்டும் செருமிக் கொண்டான்.

அவளுக்கு அவன் சொல்ல வருவது புரிய, கண்களை வெட்கத்துடன் மூடி திறந்தவள், "மதிய நேரத்துல என்ன பேச்சு...?" என்று கொஞ்சும் குரலில் கேட்டாள்.

"முடியலடி... என்னை நேத்து என்ன பண்ணி வச்சியோ தெரியல, அதே நினைப்பா இருக்கு. அதுவும் அந்த மச்சம்..." என்று ஆரம்பிக்க, "ஐயோ ப்ளீஸ்... நான் வைக்கிறேன்." என்று அலைபேசியை கட் செய்தவளுக்கு அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை.

அன்று அவன் வர தாமாதமாகும் என்று மேசேஜ் அனுப்பி இருக்க, அவள் நேரத்துக்கே கிளம்பி விட்டாள்.

குளித்துவிட்டு பைஜாமா மற்றும் ஷேர்ட் அணிந்து கொண்டவள், இரவுக்காக இருவருக்கும் தோசை சுட ஆயத்தமானாள். சமையலறைக்குள் நின்று இருந்தவளுக்கு அவன் ஜீப் வரும் சத்தம் கேட்டது. அவளை அறியாமலேயே வெட்கத்தில் இதழ்கள் விரிய, பூட்ஸ் சத்தத்தைக் கேட்டும் கேட்காதது போல அவள் வேலை செய்து கொண்டு இருக்க, அவனோ சமையலறைக்குள் ஒரு கணம் எட்டிப் பார்த்துவிட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்து கொண்டான்.

குளித்து விட்டு ஷார்ட்ஸ் மற்றும் ஆர்ம் கட் அணிந்து இருந்தவன், நேரே சமையலறைக்குள் வந்த சமயம், அவளோ தோசையை ஊற்றிக் கொண்டு, "நைட் தோசைதான்..." என்றாள்.

"ம்ம்..." என்று அவளை நெருங்கி உரசியபடி நிற்க, அவன் ஸ்பரிசம் பட்டு அவள் மேனி குறுகுறுத்தது.

தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனைப் பக்கவாட்டாக திரும்பி ஏறிட்டுப் பார்த்து, "என்ன?" என்று கேட்டாள்.

அவனது மோகமான விழிகள் அவள் இதழ்களில் படிந்து மீண்டும் விழிகளில் படிய, குரலை செருமிக் கொண்டு அவள் இடையைப் பற்றி தூக்கி அவளை சமையலறைக் கட்டில் அமர வைத்தவன், "ஜீவி..." என்று ஏதோ பேச வந்தவளின் இதழ்களில், இதழ் பொருத்தி அவள் பேச்சை நிறுத்தி இருந்தான்.

அவள் விழிகள் இந்த அதிரடி முத்தத்தில் விரிந்து பின்னர் மூடிக் கொள்ள, அவள் இதழ்களும் அவன் ஆழ்ந்த முத்தங்களுக்கு பதில் முத்தம் வழங்க ஆரம்பித்து விட்டது. இடம் மறந்தார்கள், நிலை மறந்தார்கள், தோசைக் கல்லில் தோசை இருப்பதையும் மறந்தார்கள்.

அவனோ தனது ஆர்ம் கட்டை கழட்டி அருகே போட்டுவிட்டு, மீண்டும் இதழ்களை ஆழ்ந்து கவ்விக் கொண்டான்.

அவள் கரங்கள் அவன் வெற்று முதுகில் மோகத்துடன் பயணம் செய்து அவன் சிகைக்குள் கை கோர்த்து நெரிக்க, அவள் கால்கள் அவன் இடையைக் கட்டிக் கொள்ள, அவன் கரமோ அவளது ஷேர்ட்டின் பட்டன்களுக்கு விடுதலை அளித்துக் கொண்டு இருந்தது. சற்று நேரத்தில் அவள் ஷேர்ட்டும் துணை தேடி, அவனது கீழே கிடந்த ஆர்ம் கட்டுடன் சேர்ந்து கொள்ள, ஒரே நிலையில் இருவரும் இருக்க அவனுக்கோ அடங்காத மோகம்.

அவள் மேனியை கை கொண்டு வருடி அவள் கழுத்துக்குள் முகம் புதைத்து அத்துமீற ஆரம்பித்துவிட, அவன் கொடுத்த இன்பம் தாளாமல் முனகியவளுக்கு ஏதோ கருகும் மணம் நாசியைத் துளைத்தது.

அதே மணம் அவனுக்கும் வர, "ஐயோ தோசை..." என்று அவள் சொல்ல, சட்டென அவளில் இருந்து பிரிந்து சென்று வேகமாக அடுப்பை அணைத்து விட்டு இருந்தான். தோசையோ கருகி இருந்தது.

அடுப்பை அணைத்து விட்டு அவளைப் பார்க்க, அவளோ சமையல் கட்டில் அமர்ந்து இருந்தவாறே, தன்னை கைகளால் மறைத்துக் கொண்டு, "என்ன பண்ணி வச்சு இருக்கீங்க ஜீவி...? என் ஷேர்ட்டை எடுத்து கொடுங்க..." என்று கெஞ்சினாள்.

அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

"சோ ஹாட்!" என்றான் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு.

அவன் பேச்சில் அவள் விழிகள் அதிர, "தோசையை சொன்னேன்..." என்றான் குறும்பு சிரிப்புடன்.

"அப்படின்னா தோசையை பார்த்துட்டு தான் சொல்லணும், இப்படி என்னையே பார்த்துட்டு சொல்ல கூடாது." என்றாள்.

"எப்படிடி பார்க்காம இருக்கிறது?" என்று கேட்டவன் அவளில் இருந்து விழிகளை அகற்றவே இல்லை.

தன்னை கை கொண்டு மறைக்க போரடிக் கொண்டு இருந்தவளுக்கு அந்த வெளிச்சம் வேறு கூச்சமாக இருந்தது.

அவள் தவிப்பையும் போராட்டத்தையும் ரசித்தபடி அவன் நின்று இருக்க, அவளுக்கோ ஐயோடா என்று ஆகிவிட்டது.

"ஷேர்ட்டை எடுத்து கொடுங்க ப்ளீஸ்..." என்றாள்.

குரலை செருமிக் கொண்டு, "என்னடி ரொம்ப பண்ணுற... நேத்து தான் மொத்தமா பார்த்துட்டேன்ல..." என்றான்.

"அதுக்குன்னு கிச்சன்ல இப்படியா இருக்க முடியும்?" என்று சிணுங்கலாக கேட்க, கீழே இருந்த அவன் ஆர்ம் கட்டையும் அவள் ஷேர்ட்டையும் எடுத்தவன், அதனை ஹாலில் இருக்கும் சோஃபாவில் எறிந்துவிட்டு மீண்டும் உள்ளே வர, "ஜீவி..." என்று அதிர்ந்து அழைத்தாள் அவள்.

மோகமும் குறும்பும் கலந்த புன்னகையுடன் அவள் முன்னே வந்து நின்றவன், "உனக்கு ட்ரெஸ் வேணும்னா, என்னை கட்டிப் பிடிச்சுக்கோ. மறைக்க வேண்டியது எல்லாம் நான் மறைச்சுக்கிறேன்..." என்றான்.

"திஸ் இஸ் டூ மச் ஜீவி..." என்றாள்.

"காண்ட் ஹெல்ப்மா..." என்றான்.

வெட்கத்துடன் வேகமாக அவனை அணைத்துக் கொண்டு அவன் கழுத்துக்குள் முகம் புதைக்க, அவனோ அவளை இடையில் தூக்கிக் கொண்டு, அவள் காதில் பற்தடங்களைப் பதித்தான். அவள் இதழ் பிரித்து உஷ்ண பெருமூச்சை விட, அவளை அணைத்து முதுகெல்லாம் வருடி அவளைத் தூக்கியபடி அறைக்குள் நுழைய முற்பட, அவனை அணைத்துக் கொண்டு விழிகளை உயர்த்தி அவன் விழிகளைப் பார்த்தவள், "சாப்பிடலையா?" என்று கேட்டாள்.

அவன் விழிகள் அவள் இதழ்களிலேயே படிந்து இருக்க, "சாப்பிட தானே போறேன், அதுவும் மொத்தமா..." என்றானே பார்க்கலாம்.

"ஜீவி..." என்று வெட்கத்துடன் சிணுங்கியவள் இதழ்கள் இப்போது அவன் வசமாகின.

அறைக்குள் நுழைந்தான், கதவைத் தாழிட்டான். மஞ்சத்தில் அவளுடன் விழுந்து இருந்தான். மோகத்தின் பிடியில் ஆர்ப்பரிக்கும் உணர்வுகள் மத்தியில் அவர்கள் சங்கமம் அரங்கேறியது, நிற்காமல் தொடர்ந்தது. எப்போது தூங்கினாள் என்று நேத்ராவுக்கே தெரியவில்லை. அவள் கண்களை விரித்த சமயம் நடு இரவாகி இருந்தது. ஜீவிதன் அருகே இல்லை. உடைகளை அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.

சமையலறைக்குள் சத்தம் கேட்டது, எட்டிப் பார்த்தாள். தோசை சுட்டுக் கொண்டு இருந்தான்.

"தோசை சுடுறீங்களா?" என்று அவனை நெருங்கி உரசியபடி நிற்க, "சாப்பிடலாமா?" என்று கேட்டான் அவளைப் பார்த்துக் கொண்டு.

"திரும்பவுமா?" என்று அவள் விழி விரித்துக் கேட்க, "தோசைடி..." என்றவன், தட்டில் தோசையைப் போட்டு சிரிப்புடன் நீட்ட, அவளுக்கே வெட்கமாகி விட்டது.

"ஐயோ தோசையா?" என்று வெட்க சிரிப்புடன் கேட்டுக் கொண்டு தட்டை வாங்க, அவன் சத்தமாக சிரித்துக் கொண்டு, "முதல்ல தோசையை சாப்பிடலாம், அப்புறம் மீதியை சாப்பிடலாம்." என்றான்.

"இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க? நீங்க சொன்னதை தானே நானும் சொன்னேன்..." என்று சிணுங்கியவளின் நெற்றியில் முட்டியவன்,

"ஹால்லே போய் இரு, வந்திடுறேன்." என்று சொல்ல, அவளும் மென் சிரிப்புடன் ஹாலில் சென்று உணவு தட்டுடன் அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்தில் அவனும் தட்டுடன் வந்து உணவு மேசையில் அவள் முன்னே அமர, இருவரும் சாப்பிட தொடங்கினார்கள்.

காலை நீட்டி அவள் காலை வருடிக் கொடுத்தான். இன்னுமே உணர்வுகள் அவனுக்கு அடங்கியபாடு இல்லை.

'என்ன இவ்ளோ ரொமான்டிக்கா இருக்கார்?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவளுக்கு, அவனது பார்வை வீச்சை தாங்கவே முடியவில்லை.

அவன் விழிகள் அவளிலேயே படிந்து இருக்க, "இப்படி பார்க்காதீங்க ஜீவி..." என்றாள்.

"என்னடி இவ்ளோ அழகா இருக்க?" என்று கேட்டே விட்டான்.

"ஹையோ..." என்று சொல்லி அவள் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டு சாப்பிட, "முடியல நேத்ரா... நான் என்ன பண்ணட்டும்? பார்க்க பார்க்க என்னென்னவோ பண்ண தோனுது..." என்றான்.

"அதுதான் எல்லாமே பண்ணியாச்சுல..." என்றாள் வெட்க புன்னகையுடன்.

"திரும்ப திரும்ப பண்ணுறது தப்பில்லையே...?" என்றான்.

"உங்கள எவ்ளோ நல்லவருன்னு நினைச்சேன் தெரியுமா?" என்று கேட்டாள்.

"உன்கிட்ட மட்டும் இந்த விஷயத்துல கெட்டவன்." என்றான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "இதெல்லாம் இவ்ளோ நாள் கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தீங்களா?" என்று கேட்டாள்.

"ம்ம்... உனக்காக மட்டும்! சில சமயம் இழுத்து வச்சு கிஸ் அடிக்கலாமானு தோனும். தியானம் எல்லாம் பண்ணி என்ன கன்ட்ரோல் பண்ணி இருக்கேன்." என்று சொல்ல, "சாரி!" என்றாள்.

"ஆஹ்! அதெல்லாம் செல்லாது, விட்டதெல்லாம் சேர்த்து பிடிக்கிறேன்." என்றான்.

"ஜீவி..." என்று அவள் வெட்கத்துடன் மீண்டும் தலையைத் தாழ்த்திக் கொள்ள, அவள் சிணுங்கலை ரசனையாக பார்த்தான் அவன்.

சாப்பிட்டுக் கொண்டே, "என்னை பேர் சொல்லிதான் கூப்பிடுவியா?" என்று கேட்டான்.

அவளும், "எப்படி கூப்பிடணும்?" என்று கேட்டான்.

"நீ கஜன் அண்ணன், ராம் எல்லாரையும் மாமானு கூப்பிடும் போது எனக்கு பிடிக்கும்." என்றான்.

அவளோ இதழ் கடித்துக் கொண்டு, "அப்போ பொறுக்கி மாமானு கூப்பிடட்டுமா?" என்று கண் சிமிட்டி கேட்டாள்.

சத்தமாக சிரித்துக் கொண்டு, "யாரும் கேட்டா என்னடி நினைப்பாங்க?" என்றான்.

"அப்போ போலீஸ் மாமானு கூப்பிடட்டுமா?" என்று கேட்டாள் சிரித்துக் கொண்டு.

அவனும் அழகான சிரிப்புடன், "கூப்பிடலாமே..." என்று சொல்ல, "போலீஸ் மாமா..." என்று சொல்லி அவளும் சிரித்துக் கொள்ள,

"நீ பேசாமே ஜீவின்னு கூப்பிடு, இதுவும் என்னவோ போல இருக்கு." என்றான்.

"எனக்கும் ஜீவின்னு கூப்பிடும் போது பிடிக்குது." என்றாள்.

"நான் உன்னை மச்சைக்கன்னினு தான் கூப்பிடுவேன்." என்றான்.

"ஐயோ! யாரும் கேட்டா என்ன நினைப்பாங்க?" என்று சிணுங்கலுடன் கேட்டுக் கொண்டே, தனது கண்களை தனது ஒற்றைக் கையால் மூடிக் கொள்ள, அவள் வெட்கத்தை சிரித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான் ஜீவிதன்.

அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு வந்த ஜீவிதன் முன்னே, அவனது காக்கி ஷேர்ட்டை நீட்டி இருந்தாள் நேத்ரா.

"நீயே அயர்ன் பண்ணிட்டியா என்ன?" என்று கேட்டு அதனை வாங்கிப் போட, அவளோ நெருங்கி நின்று அவன் ஷேர்ட் பட்டன்களை மூடிவிட ஆரம்பித்து விட்டாள்.

அவனுக்கு ஏற்கனவே அவள் அருகே வந்தாலே நிதானம் தவறிவிடும். இப்போது அவன் உணர்வுகளை வேறு அவள் தாறுமாறாக சோதித்தபடி இருக்க,

"ஹேய் மச்சக்கன்னி..." என்றான் அவளை மோகமாக பார்த்துக் கொண்டு.

"என்ன போலீஸ் மாமா?" என்றாள் அவனைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்திக் கொண்டு.

"கூப்பிட மாட்டேன்னு சொன்ன?" என்று கேட்டான்.

"கூப்பிடும் போது நல்லா இருக்குல்ல...?" என்றாள் இரு கண்களையும் சிமிட்டி.

"நான் ஸ்டேஷனுக்கு போக வேணாமா?" என்று கரகரத்த குரலில் கேட்டான்.

"அதுக்கு தானே ஷேர்ட் போட்டு விட்டுட்டு இருக்கேன்?" என்றாள்.

"இப்படி நின்னு போட்டா எப்படி போறதாம்?" என்றான்.

"இதுல என்ன இருக்கு?" என்று அவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,

"ரொம்ப டெம்ப்ட் பண்ணுறடி..." என்று சொல்லிக் கொண்டு அவள் முகம் தாங்கி இதழ்களைக் கவ்விக் கொள்ள, "நேரமாச்சு..." என்று அவனை விலக்கி நிறுத்த, "முடியலடி..." என்றான்.

"கொஞ்சம் நேரம் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க, நைட் பார்த்துக்கலாம்." என்று சொன்னவளை ஆசையாக பார்த்து நெற்றி முட்டிக் கொண்டான்.

அவள் கஜனுடன் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் இப்போது ஜீவிதனுடன் கிடைத்த வாழ்க்கையை ஆசைப்பட்டு வாழ ஆரம்பித்து இருந்தாள்.
 

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 74)


இப்ப எதுக்கு கஜனோட நேத்ரா வாழ்க்கையை கம்ப்பேர் பண்ணனும்...? தேவையே இல்லை. அவரவர் பாதை அவரவர்க்கு. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு...!


கஜனோட வாழ்க்கை பல்லவின்னு தேர்வாகி அவளோட மூவ்விங் ஆன் ஆகிட்டான். அதே மாதிரி, நேத்ராவோட வாழ்க்கை ஜீவியோடத்தான்னு முடிச்சுப் போட்டாச்சு. ஸோ.. இனி
அவங்க வாழ்க்கையை ஸ்மூத்தா மூவ் ஆன் பண்ணி போயிட்டே இருக்கணும்.


ரோஜா செடியில ரோஜாத்தான் பூக்கணும். மல்லி செடியில மல்லித்தான் பூக்கணும். பூக்கள் வெவ்வேறு நிறங்கிற மாதிரி, அதோட மணமும் வேறு தானே.
அதுக்காக, ஒரே மணம் இருக்கணும்ன்னோ, ஒரே நிறம் இருக்கணும்ன்னோ எதிர்பார்க்கவும் கூடாது.
ஆனா, ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதத்துல அழகு தான். அது மாதிரித்தான்
இந்த காதலும். அதுவும் வெவ்வேறா இருந்தாலும்...
ஒவ்வொரு காதலும் ஒருவித அழகுத்தான்.
😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Top