ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 60

pommu

Administrator
Staff member

நிலவு 60

இப்படியே நாட்கள் நகர அன்று விடுமுறை நாள். ராகவியும் அர்ஜுனும் வீட்டில் தான் இருந்தார்கள். வாசல் கதவு தட்டப்பட, வாசல் கதவைத் திறந்த அர்ஜுனின் புருவம் இடுங்கியது. கையில் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் நான்கு பெண்கள் நின்று இருந்தார்கள்.

"யாரு நீங்க? யாரு வேணும்?" என்று கேட்டான்.

"நாங்க ராகவியோட ஃப்ரெண்ட்ஸ். அவளை பார்க்க வந்து இருக்கோம்." என்று சொல்ல, "ஏன் காலேஜ்ல பார்க்கிறது இல்லையா?" என்றான்.

நால்வரும் மாறி மாறி பார்த்துக் கொண்டே, "ப்ரக்னன்ட்டா இருக்கா அவ..." என்று சொன்னார்கள் இழுவையாக.

"அவ ப்ரக்னன்ட்டா இருக்கானு எனக்கு தெரியாதா? இத சொல்ல இவ்ளோ தூரம் வரணுமா?" என்று கேட்டான்.

அவர்களை சீண்டுவது அவனுக்கும் இன்று பொழுது போக்காகி விட்டது. அப்போது அவன் பேசிக் கொண்டு இருந்தது அங்கே வந்த ராகவியின் காதில் விழ, 'இவன்கிட்டயா இதுங்க சிக்கணும்?' என்று நினைத்தபடி, "உள்ளே வாங்க!" என்று வாசலில் சென்று வரவேற்க, அவளைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தான் அர்ஜுன்.

"என்னோட ஃப்ரெண்ட்ஸ்..." என்று அவனை முறைத்தபடி அவள் சொல்ல, "அது நல்லாவே தெரியுது..." என்று சொல்லிக் கொண்டே உள்ளே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

'நந்தி போல இங்கேயே இருக்கான்...' என்று மனதுக்குள் புலம்பியவளோ, நண்பிகளையும் அங்கேயே அமர வைக்க அவர்கள் கொண்டு வந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை ராகவியிடம் நீட்டினார்கள்.

அவளும் அதனை வாங்கிக் கொள்ள, "எங்க கடைல வாங்கி அவளுக்கே கொண்டு வந்து கொடுக்கிறீங்களா?" என்று அர்ஜுன் கேட்க, நால்வரும் வாயெல்லாம் பல்லாக சங்கடமாக நெளிந்தார்கள்.

அவனை முறைத்த ராகவிக்கு எங்கேயாவது முட்டி கொள்ளலாம் போல இருந்தது.

ராகவியைப் பார்த்து விட்டு நால்வரையும் பார்த்த அர்ஜுனோ, "அவளுக்கு மட்டும் தான் கொடுப்பீங்களோ?" என்று கேட்டான்.

"வேற யாருக்கு கொடுக்கணும்?" என்று அவர்கள் கேட்க, "ஹார்ட் வொர்க் போட்டது நான்மா..." என்றானே பார்க்கலாம்.

ராகவிக்கு மயக்கமே வராத குறைதான். சங்கடமும் வெட்கமுமாக நான்கு பெண்களும் நெளிய, "அர்ஜுன் ப்ளீஸ்..." என்று கெஞ்சுதலாக கேட்டாள் அவள்.

அவனும் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு எழுந்து செல்ல, "உன் புருஷன் ரொம்ப ரக்கட் போல..." என்றாள் ஒரு பெண் ரகசியமாக.

ராகவியோ, "ம்ம்..." என்று சொல்ல, இன்னொருத்தியோ, "இதுக்கு பேசாம நீ கபிலனுக்கு ஓகே சொல்லி இருக்கலாம்." என்று சொல்ல,

"யாரு கபிலன்?" என்று கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் இருந்து ஹாலுக்குள் வந்த அர்ஜுன், அங்கேயே அமர்ந்தபடி நாடியை நீவிக் கொண்டே அவர்களைப் பார்க்க, ராகவிக்கோ மயக்கம் வராத குறைதான்.

எல்லோரையும் என்ன பாடுபடுத்திக் கொண்டு இருக்கின்றான்?

"நீங்க கிளம்புங்கடி, நாளைக்கு பேசுறேன்." என்று ராகவி சொன்னதும் அவர்கள் எழுந்து கொள்ள, "ஏய் உட்காரு..." என்றான் அர்ஜுன்.

அவனை மிரட்சியாக பார்த்தபடி நால்வரும் அமர, "யாரு கபிலன்?" என்றான் அவன் மீண்டும்.

"ராகவியை ஒன் சைடா லவ் பண்ணுன பையன்." என்றாள் ஒருத்தி தட்டுத் தடுமாறி.

ராகவிக்கு பதட்டம், அவனைப் பற்றி தெரியுமே அவளுக்கு.

"அது பழைய கதை, இப்போ எதுக்கு?" என்றாள் வெடுக்கென்று.

"எனக்கு புது கதை ஆச்சே, தெரிஞ்சாகணும்." என்றான் அழுத்தமாக.

அத்துடன் நிறுத்தாமல், "ராகவிக்கும் பிடிக்குமா அவனை?" என்று கேட்டான்.

ராகவிக்கு ஆத்திரம், "திஸ் இஸ் டூ மச் அர்ஜுன்." என்று அவள் சீற, அந்த நால்வரும், "நாங்க கிளம்புறோம்." என்றபடி ஓடி தப்பி இருந்தார்கள்.

அர்ஜுனோ, "நான் அவன்கிட்ட நாளைக்கு பேசிக்கிறேன்." என்றபடி அறைக்குள் செல்ல முயல, "என்ன பேசப் போறீங்க?" என்று அவள் அவசரமாக அவன் முன்னே வந்து நின்று கேட்க,

"அதுக்கு எதுக்கு உனக்கு?" என்று அவன் கேட்டபடி நகர, "சொல்லிட்டு போங்க அர்ஜுன்." என்று அவன் டீஷேர்ட்டை பிடித்தே விட்டாள்.

"ஆஹ்!" என்று சொல்லிக் கொண்டே அவளை இரு கைகளாலும் அணைத்து இறுக்கியபடி அவள் மூக்குடன் மூக்கு உரசியவன், "என் பொண்டாட்டிகிட்ட என்ன பிடிச்சுதுன்னு கேட்க போறேன்." என்று சொல்ல,

அவனை அவள் அதிர்ந்து பார்க்க, அவளை மையலுடன் பார்த்தபடி அவள் இதழ் நோக்கி குனிய, அவள் வெடுக்கென்று முகத்தைப் பக்கவாட்டாக திருப்ப, அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் அழுந்த பதிந்தது.

"அட...!" என்று சொல்லிக் கொண்டே அவள் தாடையைப் பற்றி தன்னை நோக்கி திருப்பியவன், அவள் இதழ்களில் அழுந்த இதழ் பதித்து இருந்தான்.

அடுத்த நாள் கல்லூரியில் இருந்து வெளியே வந்த ராகவிக்கு தூக்கிவாரிப் போட்டது. அர்ஜுனோ, கபிலனின் தோளில் கை போட்டு தனது காரில் சாய்ந்து நின்று பேசிக்கொண்டு இருந்தான்.

'இவன் என்ன பேசுறானோ?' என்று நினைத்தவளோ சங்கடமாக அங்கே செல்ல,

"அப்போ நான் வர்றேன்." என்று சொன்ன கபிலனோ அங்கே வந்த ராகவியிடம், "வர்றேன் தங்கச்சி." என்று சொல்லிவிட்டு செல்ல, 'தங்கச்சியா?' என்று நினைத்துக் கொண்டே அர்ஜுனைப் பார்த்தவள், "அவன்கிட்ட என்ன சொன்னீங்க?" என்று கேட்டாள்.

"என் பொண்டாட்டி பக்கம் தலை திரும்பிச்சுன்னா தலையை திருகிடுவேன்னு சொன்னேன்." என்று சொன்னபடி காரில் ஏற, "ரௌடியா நீங்க?" என்று எரிச்சலுடன் சீறினாள்.

கண்களை சிமிட்டிக் கொண்டே, "அப்படிதான் போல..." என்று சொல்ல, முன்னால் கோபமாக திரும்பிக் கொண்டாள்.

"செக்கப் போயிட்டு வீட்டுக்கு போகலாம்." என்று சொன்னவனது வண்டி, கஜனின் வைத்தியசாலையை நோக்கிதான் சென்றது.

சற்று நேரத்தில் வைத்தியசாலையையும் அடைந்து விட்டார்கள். அவர்கள் எண்ணை அழைக்கும் வரை அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த ராகவியின் விழிகள், அங்கே மாட்டி வைக்கப்பட்டு இருந்த குழந்தைகளின் படங்களில் படிந்து மீண்டது. அவள் ரசிப்பதை அர்ஜுனும் கவனித்து இருந்தான்.

அவர்கள் எண்ணும் நெருங்க, "அர்ஜுன்!" என்றாள். திரும்பிப் பார்த்தான்.

"எதுவும் தப்பா பேசிடாதீங்க ப்ளீஸ்..." என்றாள்.

"நான் உன் அண்ணாகிட்ட என்ன தப்பா பேசுனேன்?" என்று கேட்டான்.

"போன முறை..." என்று அவள் சொல்ல முடியாமல் தடுமாற, "அதுல என்ன தப்பு இருக்கு ராகவி? அத அவர்கிட்ட தானே கேட்கணும். ஐ நீட் ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப். அதே நேரம் என்னோட பேபியும் முக்கியம். சோ யார்கிட்ட என் சந்தேகத்தை கேக்கிறது?" என்று கேட்டான்.

"அது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கும்னு உங்களுக்கு தோனவே இல்லையா?" என்று கேட்க, இதழ்களைப் பிதுக்கியவன், "ஐ டோன்ட் கேர்." என்று சொல்ல,

அவனை முறைத்துக் கொண்டே முன்னால் முகத்தைத் திருப்ப, அவனோ ஒரு அடக்கப்பட்ட புன்னகையுடன் முன்னால் திரும்பிக் கொண்டான்.

அடுத்து அவர்கள் எண்தான்.

இருவரும் உள்ளே நுழைய அவர்களை ஏறிட்டுப் பார்த்த கஜனோ, "உட்காருங்க." என்று சொன்னான், அமர்ந்தார்கள்.

"வெல், ஹெல்த் எப்படி இருக்கு?" என்று கேட்டுக் கொண்டே ரத்த அழுத்தத்தை பரிசோதித்தவன், "ப்ரெஷர் நார்மலா தான் இருக்கு, ஸ்கேன் பண்ணிடலாமா?" என்று கேட்டான்.

"எஸ்." என்றாள் பெண்ணவள்.

அவள் எழுந்து கொள்ள அர்ஜுன் அப்படியே அமர்ந்து இருந்தான்.

"உள்ளே வரலாமே?" என்றான்.

"கொஞ்ச நேரத்துல வர்றேன்." என்று சொல்லிக் கொண்டே அவன் அமர்ந்து இருக்க, அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்துவிட்டு உள்ளே சென்ற கஜனோ,

ஸ்கேனுக்காக படுத்து இருந்தவளிடம், "நமக்கு ஸ்பேஸ் கொடுக்கிறாரா உன் புருஷன்?" என்று சிரித்தபடி கேட்டான்.

ராகவியோ, "தெரியலையே..." என்று மென்மையாக புன்னகைத்தவளுக்கு, கஜனுடன் ஆத்மார்த்தமாக பேச இந்த தனிமை தேவைப்பட்டது.

அவனும் குழந்தையை பரிசோதிக்க, "எப்படி அண்ணா இருக்கீங்க?" என்று கேட்டாள்.

"நான் நல்லாதான் இருக்கேன், நீ எப்படி இருக்க?" என்று கேட்டான்.

"நல்லா இருக்கேன்." என்று சொன்னவளது கண்கள் கலங்கிப் போக, "என் மேல வருத்தம் இன்னும் இருக்கா?" என்று கேட்டாள்.

"நீ சந்தோஷமா இருக்கணும், படிச்சு வேலைக்கு போகணும். இத தவிர எனக்கு உன்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லை..." என்றான்.

"சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்ட கோபம் இல்லையா?" என்று கேட்டாள்.

"பெரிய அளவுல உன் கல்யாணம் நடத்த ஆசைப்பட்டேன். நீ எனக்கு செலவு மிச்சப்படுத்தி இத பண்ணுனது கோபம்தான்." என்று சொல்ல, அவளோ சத்தமாக சிரித்துக் கொண்டாள்.

அவள் சத்தமாக சிரிப்பது அர்ஜுனின் காதில் கேட்டது. முதல்முறை அவள் வாய் விட்டு சிரிப்பதைக் கேட்கின்றான். அவன் முன்னே அதீத பட்சம் மெலிதாக புன்னகைத்து இருக்கின்றாள், அவ்வளவு தான். இந்த சிரிப்பு அவனுக்கே புதிது. ஏதோ ஒரு அழுத்தமான உணர்வு அவனுக்கு. அவளைத் திருமணம் செய்து கொண்ட நேரம் அவள் மீது காதல் இல்லை.

அவள் அழுகை எப்போதும் அவனை பாதித்தது இல்லை. ஆனால் இப்போது காதலிக்கின்றானே? அவள் தன்னிடம் இப்படி சிரித்து பேச மாட்டாளா என்கின்ற ஆதங்கம் இருக்கதான் செய்தது.

'அதுக்கு நீ ஒழுங்கானவனா அவகிட்ட நடந்துக்கணும்.' என்று அவன் மனசாட்சியே அவனுக்கு காறித் துப்பியது.

ராகவியிடம் குழந்தையின் இதய துடிப்பைப் போட்டுக் காட்ட, அவளும் குழந்தையை சிரித்தபடி பார்த்தவள், "என்ன குழந்தைன்னு சொல்லுங்க அண்ணா." என்றாள்.

அவளைப் பார்த்து இதழ்களைப் பிதுக்கி விட்டு, "நீயும் உன் அண்ணியும் என்னை படுத்தவே இருக்கீங்க..." என்றான்.

"அப்போ சொல்ல மாட்டிங்களா?" என்று கேட்க, "வாய்பில்லம்மா..." என்றான்.

"ப்ளீஸ்..." என்றாள்.

"கெஞ்சாதடி..." என்று சொன்னவனோ வெளியே எட்டி, "அர்ஜுன்!" என்று அழைக்க, அவனும் எழுந்து உள்ளே சென்றான்.

"பேபிய பாருடா..." என்று உரிமையாக பேசினான்.

அவனுக்கே கஜனின் அழைப்பு ஒருமாதிரியாகி விட்டது.

"ம்ம்..." என்று சொல்லிக் கொண்டே ஸ்க்ரீனை பார்க்க, அவனை ஏறிட்டுப் பார்த்தாள் ராகவி. முகத்தில் இறுக்கம் இல்லை. ஒரு மென்மை இருந்தது.

அவள் இதழ்களும் மெலிதாக புன்னகைக்க, "என்ன குழந்தைன்னு உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்ல?" என்று கஜனிடம் கேட்க, அவன் இதழ்களைப் பிதுக்கிக் கொண்டே, "உன் அக்காவுக்கே நான் சொல்லலடா..." என்றபடி வெளியேற,

"உன் அண்ணா ரொம்பதான் பண்ணுறார்..." என்று அர்ஜுன் ராகவியிடம் சொன்னது கஜனுக்கும் கேட்க, அவனோ மெலிதாக சிரித்தபடி தனது இருக்கையில் சென்று அமர்ந்து விட்டான்.

அடுத்து இருவருக்கும் அறிவுரைகளை சொல்லிவிட்டு அனுப்பி வைத்தவனுக்கு, மனதில் ஒருவித நிறைவு இருந்தது. ராகவி திருமணம் செய்த போது இருந்த அழுத்தமும் பதட்டமும் குறைந்து இருந்தது.

அர்ஜுனிடம் பெரிய அளவு மாற்றங்களை கண்கூடாக பார்த்துக் கொண்டு இருக்கின்றான் கஜன். இதுவே அவனுக்கு போதுமென்று இருந்தது. அவன் நம்பிக்கை பொய்க்கவில்லை.

அடுத்த நாள் கல்லூரியில் இருந்து வந்த ராகவி அறைக்குள் நுழைந்ததுமே அதிர்ந்து நின்றாள். அறை முழுவதும் குழந்தைகளின் படங்கள் மாட்டி வைக்கப்பட்டு இருந்தன.

அவள் இதழ்கள் மெலிதாக விரிய, அவளைக் கடந்து அறைக்குள் நுழைந்த அர்ஜுனை பார்த்தவள், "தேங்க்ஸ்!" என்றாள்.

"எதுக்கு?" என்றான்.

கண்களால் புகைப்படங்களைக் காட்டினாள்.

"உனக்காக ஒன்னும் இல்ல, எனக்கு பார்க்கணும்னு தோனுச்சு." என்று சொல்ல, அவளோ சிரித்துக் கொண்டே, "ஓஹோ..." என்று சொல்ல, "நாளைக்கு லீவு தானே?" என்று கேட்டான்.

எதற்கு கேட்கின்றான் என்று புரிந்தது.

"ம்ம்..." என்றாள்.

"ஓகே." என்று அவள் இதழ்களைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னவன் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, அவளுக்கோ சட்டென கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட்டன.

அவன் அருகாமையை அவளும் இப்போதெல்லாம் ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.
 

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 60)

யாரு அர்ஜூன் ரக்கட் பாய் யா..?
பத்து ரூபா பிஸ்கெட் பாக்கெட்டுக்கு அராத்து பண்ற
குழந்தை பையன் க்யூட் அமுல் பேபி...! அவனுக்குப் போய் இந்தளவுக்கு எல்லாம் பில்டப் கொடுத்துட்டாங்களே
இந்த பொம்மு அக்கான்னு....
இப்பவெல்லாம் அடிக்கடி தோணுது. அது சரி, இவன் அம்மாம் பெரிய கடையை திறந்து வைச்சிட்டு வீட்ல எதுக்கு VOவா வேலை பார்க்கிறான்ன் தெரியலையே.? (வெட்டி ஆபிசர்)


கஜன் வாடான்னு உரிமையா கூப்பிடற அளவுக்கு மாற்றத்தை கொண்டு வந்துட்டு....
அப்புறம் எதுக்கு அவனை போட்டுத் தள்ளுற வேலையெல்லாம் பண்றாங்களோ தெரியலையே.?

மனுசனை திருந்த விடுங்கடா..!
திருந்தினா, சந்தோஷமா வாழ விடுங்கடா...!
இப்படி அற்பாயுசுக்காரனா முடிச்சிடாதிங்க தலைவி...!
😃😃😃
CRVS (or) CRVS 2797
 
Top