நிலவு 57
வீட்டுக்கு வந்த அர்ஜுனும் ஹாலில் இருந்த ராகவி அருகே மாங்காய் இருக்கும் பையை வைத்துவிட்டு நகர்ந்து சென்றுவிட, அவளோ, "எனக்கு இதெல்லாம் வேணாம்." என்றாள்.வழக்கமாக சொல்வது தானே?
"உன் அப்பா கொடுத்து விட்டார். இஷ்டம் இல்லன்னா குப்பைக்குள்ள போடு." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட அவளுக்கோ அதிர்ச்சி.
"அப்பாவா? வீட்டுக்கு போனீங்களா? இல்ல, அவர் வந்தாரா?" என்று கேட்க, "கடை திறக்கிற விஷயமா போனேன்." என்றபடி குளியலறைக்குள் அவளைப் பார்க்காமலே நுழைய, அவளோ மென்சிரிப்புடன் மாங்காயை வெட்டி சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.
அவன் வெளியே வந்த சமயம் அவள் மாங்காய்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டு இருக்க, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வேணாம்னு சொன்ன?" என்று கேட்டான்.
"நீங்க கொடுத்ததால வேணாம்னு சொன்னேன்." என்று சொன்னவளை, மேலிருந்து கீழ் ஒரு கேலி புன்னகையுடன் பார்த்துவிட்டு அங்கே அமர, "இப்போ எதுக்கு இந்த சிரிப்பு?" என்று கேட்டாள்.
குரலை செருமிக் கொண்டே, "பிள்ளை கூட நான்தான் கொடுத்தேன், வேணாம்னு சொன்ன போல தெரியலையே?" என்றான்.
அவனை முறைத்தவள், “எப்போ பார்த்தாலும் இதே பேச்சுதான்...” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
***
இப்படியே நாட்கள் நகர, அன்று வழக்கம் போல சாப்பிட்டு விட்டு வந்த ராம்குமார் கட்டிலில் படுத்துக் கொண்டான். அவனைத் தொடர்ந்து உள்ளே வந்த சுகான, "ராம், நான் இன்னைக்கு தலைக்கு குளிச்சிட்டேன்." என்றாள்.
"நானும் தான் காலைல தலைக்கு குளிச்சேன்." என்று கண்களை மூடிக் கொண்டே அவன் சொல்ல, "ஹேய் ராம்..." என்று சொல்லிக் கொண்டே அவன் அருகே அமர்ந்தவள், "ரெண்டு வாரமா ரெண்டு பேருமே கன்னி கழியல..." என்றாள்.
"நம்ம வாழ்க்கை முழுக்க இப்படியே இருந்திடலாம்." என்றான். இதழ்களுக்குள் சிரிப்பு வந்தது, அடக்கிக் கொண்டான்.
அவளை சீண்ட முடிவெடுத்து விட்டான்.
"என்னது?" என்று அவள் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அவனை அடுத்த கையால் உசுப்ப, "தூங்க விடுடி..." என்றான் அவன்.
"சரியான தூங்கு மூஞ்சு..." என்று அவன் தோள்களைத் தட்ட, "அப்படியே தட்டி கொடு, தூங்கிடுறேன்." என்றான்.
"எந்திரிங்க ராம்..." என்றாள் அவள்.
மெதுவாக எழுந்தவன், "என்னடி வேணும்?" என்று கேட்க, "நீங்க தான் வேணும்." என்றாள் அவள்.
"வா, கட்டிபிடிச்சுட்டு தூங்கலாம்." என்று அவன் சொல்லிக் கொண்டே அணைக்க வர, "தூங்கவா?" என்று அவள் கேட்டுக் கொண்டே விலக, "வேற என்ன பண்ணணும்?" என்று கேட்டான்.
"புதுசா கல்யாணம் பண்ணுனவங்க என்ன பண்ணுவாங்கனு உங்களுக்கு தெரியாதா?" என்று கேட்க, "தெரியாதே... அதெல்லாம் தெரியாம எம்.பி.பி.எஸ் முடிச்சு இருக்கேன் பாரேன்..." என்று அவன் சிரித்துக் கொண்டே இதழ்களைப் பிதுக்க, அவளுக்கும் சிரிப்பு வந்து விட்டது.
விளையாடுகின்றான் என்று புரிந்தும்விட, "சரி தூங்கலாம், வாங்க." என்று சொல்லிக் கொண்டே படுக்க முற்பட, "அடிங்... சும்மா சொன்னா தூங்கிடுவியா?" என்று கேட்டுக் கொண்டே அவள் முகத்தைத் தாங்கி அவள் இதழ்களில் இதழ் பொருத்த, அவளும் விழிகளை மோகமாக மூடிக் கொண்டே அவன் முத்தத்துக்கு பதில் முத்தம் வழங்கினாள்.
அவன் விரல்கள் அவள் மேனியிலும், அவள் விரல்கள் அவன் மேனியிலும் தடைகளை அகற்றிக் கொண்டு பயணம் செய்ய, இருவரும் கட்டிலில் சரிந்து கொண்டார்கள். இத்தனை நாட்கள் ஏக்கத்தை ஈடுகட்டும் வேகம் இருவரிடமும். காட்டாற்று வெள்ளம் போல உணர்வு பேரலைகள் கிளம்பி இருந்தன. விரல்களைக் கோர்த்துக் கொண்டார்கள். இதழ்களைக் கலந்து கொண்டார்கள். மேனியை இணைத்துக் கொண்டார்கள். அவளுக்குள் அவன் மொத்தமாக சரணடைய, அவளும் அவனை மொத்தமாக உள்வாங்கிக் கொண்டாள்.
"என்னடி இவ்ளோ அழகா இருக்க?" என்று அவள் செவிகளில் முத்தமிட்டு அவன் ரகசியம் பேச, "ராம்..." என்று வெட்கத்துடன் அவன் கழுத்து வளைவுகளில் முகம் புதைத்துக் கொண்டாள்.
நீண்ட நேரம் தொடர்ந்த கலவியின் அந்தியில், அவள் இதழ்களில் முத்தமிட்டு விலகி அவள் விழிகளுடன் விழிகளை கலக்க விட்டவனோ, "ஹவ் டூ யூ ஃபீல்?" என்று கேட்டான்.
அவளுக்கு வெட்கம் வந்து விட்டது.
"இப்போ இதெல்லாம் பேசணுமா?" என்றாள் சிணுங்கலாக.
"சொல்லுடி..." என்றான்.
"சும்மா போங்க..." என்று முகத்தை வெட்கத்துடன் திருப்பிக் கொள்ள, அவள் தாடையைப் பற்றி தன்னை நோக்கி திருப்பியவன், "சொல்லு." என்றான்.
கள்ளன் அவன் போலும், விடமாட்டான் என்று தெரிந்தது.
"இட்ஸ் அமேஸிங்!" என்று சொல்லிக் கொண்டே கண்களை சட்டென மூடி இருக்க, "அப்போ திரும்பவும்?" என்றான் கேள்வியாக.
சட்டென விழிகளைத் திறந்தவளோ, "என்ன விளையாடுறீங்களா? நாளைக்கு வேலை..." என்றாள்.
"என்னை இத்தனை நாளா கெஞ்சவிட்ட தானே... இன்னைக்கு நீ கெஞ்சு, நான் மிஞ்சுறேன்." என்று சொல்ல, "ராம் ப்ளீஸ்..." என்று சொன்னவளது இதழ்களை இதழ்கள் கொண்டு அடைத்து இருந்தான்.
அடுத்த நாள் அவசரமாக தான் வேலைக்கு ஆயத்தமானார்கள்.
"எல்லாம் உங்களால தான் ராம்..." என்று அவனுக்கு திட்டும் விழுந்தது.
அவனோ அடக்கப்பட்ட புன்னகையுடன், "சுகா, இன்னுமே வேணும்னு தோனுது." என்று ஏக்கமாக சொல்லிக் கொண்டே அவள் கழுத்தில் முகம் புதைக்க,
"ஹாஸ்பிடல் போகணும் ராம்..." என்று சொல்லிக் கொண்டே விலகி நின்றவளோ, "நைட் பார்த்துக்கலாம்." என்று சொன்னபடி முத்தமிட அவனை நெருங்க, சட்டென விலகியவன் இல்லை என்கின்ற தோரணையில் தலையாட்டினான்.
"வை?" என்றாள்.
"கிஸ் பண்ணிட்டு நீ ஜாலியா கிளம்பிடுவ, நான்தான் அவஸ்தை படணும். இந்த விளையாட்டுக்கு நான் வரல, மொத்தமா நைட் பார்த்துக்கலாம்." என்று சொல்லிக் கொண்டே அவள் நெற்றியில் முட்டி சிரிக்க, அவளும் சத்தமாக சிரித்துக் கொண்டாள்.
அவர்கள் வாழ்க்கை சீராக நகர ஆரம்பித்து இருந்தது.
***
பல்லவி மற்றும் யாழினியுடன் அடுத்த நாளே வந்து இறங்கி விட்டான் கஜன். துளசி அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து இருக்க, பல்லவி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.
"குழந்தை வந்ததும் இந்த வீடே நிறைவா இருக்கும்மா..." என்றான் சக்திவேல்.
பல்லவிக்கோ அப்படி ஒரு நெகிழ்வு!
இப்படி தன்னையும் குழந்தையையும் மொத்தமாக ஏற்றுக் கொள்ளும் குடும்பம் கிடைக்கும் என்று, நினைத்துக் கூட பார்த்தது இல்லை. அருகே நின்ற கஜனை புன்னகையுடன் பார்க்க, அவனும் கண் சிமிட்டி சிரித்து அவளை வாரி சுருட்டிக் கொண்டான்.
இப்படியே நாட்கள் நகர்ந்தன...
வந்தனாவின் திருமணம் பற்றி பேச்சு வந்தது.
அவளோ, "இப்போ என்ன அவசரம்?" என்று கேட்டாள்.
"கல்யாணம் பண்ணுற வயசு ஆயிடுச்சு வந்தனா." என்று அவள் வாயை அடைத்து இருக்க, அவளுக்கு மயக்கம் வராத குறைதான்.
விஜய் எப்போது சம்மதம் சொல்லி அவள் எப்போது திருமணம் செய்வது? நினைக்கவே மலைப்பாக இருந்தது.
இப்படியான ஒரு நாளில் தான் வீட்டுக்கு பின்பக்கம் நின்று இருந்த ஜீப்பை திருத்திக் கொண்டு இருந்தான் விஜய். ஜீப்பில் சாய்ந்து நின்ற மதியழகனோ, "கல்யாணம் எப்போ விஜய்?" என்று கேட்க, அவனோ அங்கே ஆட்டுக் குட்டிகளை கொஞ்சிக் கொண்டு இருந்த வந்தனாவைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு குரலை செருமியவன்,
"தூரத்து முறைப்பொண்ணு ஒருத்தி இருக்கா, சரி வந்துச்சுன்னா கல்யாணம் தான்..." என்றான்.
அவன் பேசியது வந்தனாவுக்கு விளங்கியது. சுரென்று கோபம் வந்தது. அடக்கிக் கொண்டே ஆட்டுக் குட்டியைத் தூக்கிக் கொண்டாள்.
மதியழகனும், "ஜீப் எப்போ சரி வரும்டா?" என்று கேட்க, "இதோ முடிஞ்சிடுச்சு ஐயா." என்று சொல்லிக் கொண்டே வேலையைப் பார்க்க, "முடிச்சதும் சொல்லு, வேலை இருக்கு." என்கிறபடி மதியழகன் உள்ளே சென்று விட்டான்.
சுற்றும் முற்றும் பார்த்தாள் வந்தனா, யாரும் இல்லை. விஜய்யோ மண்டியிட்டு அமர்ந்து ஜீப்பின் டயரை பார்த்துக் கொண்டு இருக்க, ஆட்டுக்குட்டியை கீழே இறக்கி விட்டவள், அங்கே கலக்கி வைக்கப்பட்டிருந்த கால்நடை உணவு வாளியை தூக்கியவள், வேகமாக அதனை அவன் தலையில் ஊற்றி விட்டாள்.
அவனோ, "ஏய்..." என்று பதறி எழுந்து அவளை உறுத்து விழிக்க, "முறைப்பொண்ணு அது இதுன்னு வாயில வந்திச்சுன்னா கடிச்சு வச்சிடுவேன்." என்றாள்.
"பைத்தியம்..." என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே போட்டிருந்த டீஷேர்ட்டை கழட்டியவன், அருகே இருந்த கிணற்றடிக்கு சென்று நீரை அள்ளி தலையில் ஊற்றினான்.
அவளும் வாளியை கீழே வைத்து விட்டு கையை மார்புக்கு குறுக்கே கட்டியபடி அவனையே இமைக்காமல் பார்த்தவள், "மாமா உடம்பு இரும்பு மாதிரி இருக்கு..." என்றாள் கண்களை சிமிட்டி.
அவள் இப்படி இமைக்காமல் பார்ப்பது அவனுக்கே அசௌகரியமாக போனது.
"கொன்னுடுவேன் திரும்பு..." என்றான்.
"மாட்டேன்... எப்படியும் நான் தானே பார்க்கணும்." என்று சொல்ல, அவனுக்கோ ஐயோடா என்று ஆகிவிட்டது.
"கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா உனக்கு?" என்று கேட்டபடி அங்கே இருந்த துண்டினால் தலையைத் துவட்ட, "கூச்ச நாச்சம் பார்த்தா புள்ள பெத்துக்க முடியுமா?" என்று கேட்டாள்.
அவளை முறைத்தபடி முன்னே வந்து நின்றவன், இரு கைகளையும் தலைக்கு மேலே கும்பிடுவது போல வைத்துக் கொண்டு, "கொஞ்சம் வாயை மூடும்மா, புண்ணியமா போகும்." என்றான்.
"என்ன மாமா, வெட்கமா?" என்று கேட்டாள் குலுங்கி சிரித்தபடி.
"அடிங்... போடி..." என்று அவன் பொறுமை இழந்து திட்ட, எட்டி அவன் மீசை முடியை இழுத்துவிட்டு பெண்ணவள் வேகமாக ஓடிச் செல்ல, அதிர்ந்து நின்றது என்னவோ அவன்தான்.
ஓடிச் சென்றவளோ தடுக்கி கீழேயும் விழுந்து விட்டாள்.
அவனோ, "ஹேய் பார்த்து..." என்று சொல்லிக் கொண்டே அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன், "எங்கயாவது அடிபட்டுச்சா?" என்று மென்மையாக கேட்டான்.
அவனை குறும்பு சிரிப்புடன் பார்த்தவள், "இங்க..." என்று இடது மார்பைத் தொட்டுக் காட்ட, "பாவமேனு விசாரிச்சது என் தப்புதான்..." என்று சொல்லிக் கொண்டே, அவன் சலித்தபடி தனது முழு உயரத்துக்கு எழுந்து நின்றான்.
"தூக்கி விடுங்க மாமா." என்று சொல்லிக் கொண்டே கையை நீட்டினாள்.
"நீயே எந்திரி..." என்றான்.
"முடியல மாமா..." என்றாள் சிணுங்கலாக.
"மாமான்னு கூப்பிடாதே..." என்று அவன் கையை மனம் கேட்காமல் நீட்டி இருக்க, ஆடவனின் வலிய இரும்புக் கரத்தைப் பற்றிக் கொண்டது பெண்ணவளின் பூ போன்ற மென்கரம்.
அவனிடம் முழு பாரத்தையும் கொடுத்து எழுந்தவளோ அவன் எதிர்பார்க்காத சமயம், அவன் இடையில் கிள்ளிவிட்டு ஓடிச்செல்ல, அவனோ அதிர்ச்சியுடன், "ஏய்..." என்று திட்டிக் கொண்டே விலகி நின்றான்.
அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவள் வேறு நாளுக்கு நாள் அவனிடம் அத்துமீறிக் கொண்டு இருக்கின்றாள். யாரிடம் சொல்லி இதனை சரி செய்வது என்று தெரியாமல் அவன் தவித்து இருக்க, இந்த காட்சியை மாடியில் இருந்த அறைக்குள் நின்று கோபமாக பார்த்துக் கொண்டு இருந்தது வேறு யாரும் அல்ல, வந்தனாவின் தாய் விஜயாதான்.
இதனை எப்படி கையாள்வது என்று விஜயாவுக்கு யோசனை. விஜய்க்கு திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு மனம் அவளுக்கு இல்லை. அவனிடம் சென்று அவள் கஷ்டப்படுவதா என்கின்ற எண்ணம் தான். அவர்களது தராதரத்துக்கு அவன் இல்லை என்கின்ற மனநிலை தான் அவளுக்கு. இத்தனை நாட்கள் இது எப்படி கண்ணில் பாடாமல் விட்டது என்று அதிர்ச்சியாகவும் இருந்தது.
அவள் திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் இத்தனை நாட்கள் தேடிக் கொண்டு இருந்தாள். இன்று தெரிந்து விட்டதே?
ஆத்திரம் வந்தது, அடக்கிக் கொண்டாள். கோபத்தைக் காட்டி ராகவி போல திருட்டு திருமணம் செய்து விட்டால், என்ன செய்வது என்று பயம் வேறு.
இதனைப் பற்றி விஜய்யிடம் பேச வேண்டும் என்று நினைத்தவளோ வேகமாக இறங்கி சென்றாள்.
அவனும் ஜீப்பை சரி செய்து இருக்க, "விஜய்!" என்று அழுத்தமாக அழைத்தாள்.
அவனும் அவளை நோக்கி செல்ல, "இனி இந்த வீட்டுக்கு நீ வர கூடாது." என்று சொல்லி விட்டாள்.
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஏதோ புரிவது போல இருக்க ஏன், எதற்கு என்றுகூட அவன் கேட்கவில்லை.
"சரி." என்று மட்டும் சொல்லி இருக்க, "வந்தனாவுல இருந்து உன் பார்வை விலகியே இருக்கட்டும்." என்று சொல்லி விட்டு அவள் உள்ளே சென்று விட்டாள்.
அவனோ பெருமூச்சுடன் கண்களை மூடி திறந்தவன் அங்கிருந்து கிளம்பியும் விட்டான்.