ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 52

pommu

Administrator
Staff member

நிலவு 52

காலையில் பதறி எழுந்தான் ராம்குமார். நேரத்தைப் பார்த்தான், எட்டு மணி கடந்து இருந்தது. சட்டென போர்வையை விலக்கிப் பார்த்தான். இரவு அணிந்து இருந்த வேஷ்டி சட்டை அப்படியே இருந்தது. அருகே படுத்து இருந்த சுகானாவைப் பார்த்தான். அவளும் புடவையில் சின்ன கசங்கல் இல்லாமல் ஓவியமாக தூங்கிக் கொண்டு இருந்தாள்.

"ஐயோ... ஐயோ..." என்று அவன் பதறியதில், சுகானா எழுந்து அமர்ந்து, "என்னாச்சு?" என்று கேட்க, "நமக்கு நேத்து ஒன்னும் நடக்கலையா?" என்று கேட்டான்.

அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

"என்னை தூங்க வேணாம்னு சொல்லிட்டு நீங்க தூங்கிட்டிங்க." என்றாள்.

"ஓஹ் மை காட்! எழுப்பி இருக்க வேண்டியது தானே?" என்று கேட்டான்.

"எனக்கும் தூக்கம் வந்திச்சு." என்றாள் அவள்.

"நீயும் நானும் இப்படியே இருந்தா எப்படி வம்சம் விருத்தி பண்ணுறது?" என்று அவன் கடுப்பாக கேட்க,

"இப்போ எதுக்கு டென்சன்? இன்னைக்கு நைட் பார்த்துக்கலாம்." என்று சொல்ல, "நீ பாடிதான் நான் தூங்கி இருக்கேன், இனி நீ பாடவே கூடாது." என்றான்.

அவளும், "ஓகே." என்று சிரித்துக் கொண்டே சொல்ல, "சரி வா, நம்ம ஃபர்ஸ்ட் டே கொண்டாடலாம்." என்று அவளை அணைக்கப் போக, "ராம்..." என்று அவன் மார்பில் கையை வைத்து தள்ளியபடி எழுந்தவளோ,

"ஏற்கனவே லேட் ஆயிடுச்சு, வெளிய என்ன நினைப்பாங்க?" என்று சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் நுழைய, "சுகா..." என்று அவன் கத்தியது காற்றில் கரைந்து போனது.

குளித்துவிட்டு வந்தவளிடம், "ஒரு கிஸ் கூட இல்லையா சுகா?" என்று கேட்க, "முதல்ல ப்ரஷ் பண்ணி குளிச்சிட்டு வாங்க." என்று சொல்லி அவனை குளியலறைக்குள் தள்ளி விட்டவள் சிரித்துக் கொண்டே வெளியேறி இருக்க, அவளை நோக்கி வந்த பல்லவியோ, "எல்லாம் ஓகேயா?" என்று கேட்டாள்.

"என்ன ஓகேயா?" என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டு கேட்க, "ஒரு ஃபார்மாலிட்டிக்கு கேக்கிறேன்டி." என்றாள் அவள்.

"பால்ல என்ன கலந்து கொடுத்தாங்களோ தெரியல, நேத்து நல்ல தூக்கம்." என்று அவள் கிண்டலாக சொல்லிக் கொண்டே சிரிக்க, "அடிப்பாவி!" என்றாள் பல்லவி வாயில் கையை வைத்தபடி.

"ஃப்ரீயா விடு பல்லவி..." என்று அவள் கண் சிமிட்டி சொல்லிக் கொண்டு வீட்டை சுற்றி வந்தவள், மாடியேறி சென்றாள்.

அங்கே ஜெயந்தி உடையை காய வைத்துக் கொண்டு இருக்க, "குட் மார்னிங் அத்தை!" என்று ஜெயந்தி அருகே வர, "என்னம்மா எல்லாம் ஆச்சா?" என்று கேட்க, சுகானாவோ சிரித்துக் கொண்டே, "ம்ம்..." என்று சொன்னாள்.

இல்லை என்றா சொல்ல முடியும்? பல்லவி என்பதால் வெளிப்படையாக சொன்னாள். ஜெயந்தி எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியாதே? அதனால் பொய் சொல்ல வேண்டிய கட்டாயம்.

இப்படியே இருவரும் பேசிக் கொண்டே உடைகளை காயப் போட, குளித்துவிட்டு வந்த ராம்குமாரின் விழிகள் சுகானவை தேடின.

"மாடில..." என்று அவனைக் கடந்து சென்ற பல்லவி செல்ல, "தேங்க்ஸ் அண்ணி." என்று மாடியேறி சென்றான் ராம்குமார்.

வேக எட்டுக்களுடன் மொட்டை மாடி ஏறி வந்த ராம்குமாரோ, "காலைல செம்ம மூட்ல இருக்கேன்... ஒரு கிஸ் அடிச்சா தான் நல்லா இருக்கும்..." என்று முணுமுணுத்தபடி தன்னவளைத் தேடினான்.

சுகானாவோ புடவைகளை காய வைத்துக் கொண்டு நிற்க, புடவைக்கு மேல் அவள் விழிகள் தெரிந்தது.

'அட இங்க நிக்கிறா...' என்று நினைத்தபடி ராம்குமார் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே அவளை நோக்கி நடந்தான்.

வரிசையாக புடவைகள் காய்ந்து கொண்டு இருந்ததால், சுகானாவை தவிர வேறு யாரும் அவனுக்கு தெரியவில்லை. சுகானா புடவையினை காய வைத்த தருணம், வாளிக்குள் இருந்த புடவையில் இருக்கும் நீரை பிழிந்து கொண்டு இருந்தாள் ஜெயந்தி. சுகானா அடுத்த புடவையை எடுக்க போன சமயம், ஜெயந்தி பிழிந்த புடவையை காய வைக்க வந்து இருந்தாள். ராம்குமாருக்கோ இது எதுவும் தெரியாது.

யாரும் இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்தவன், புடவைக்கு மற்ற பக்கம் யார் இருக்கின்றார்கள் என்று தெரியாமல், புடவையுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு, 'பச்சக்... பச்சக்...' என்று கன்னத்தில் முத்தமிட, புடவைக்குள் இருந்த ஜெயந்தி மூச்சடைத்து திணற ஆரம்பித்து விட்டாள்.

புடவையைப் பிழிந்து கொண்டு இந்த காட்சியைப் பார்த்த சுகானா, "ராம்!" என்று சத்தமாக அழைத்ததும் நினைவுக்கு வந்தவனோ, "நீ என்ன அங்க?" என்று கேட்டபடி பட்டென விலகி புடவையால் மூடி இருந்த உருவத்தைப் பார்க்க,

புடவையை முகத்தில் இருந்து அகற்றிய ஜெயந்தியோ அவனை முறைத்துப் பார்க்க, "ஐயோ அம்மா! தெரியாம பண்ணிட்டேன்..." என்று அவன் பதட்டமாக சொல்ல,

"கொலைகார பாவி... அந்த பொண்ணயும் இப்படிதான் மூஞ்சை மூடி கொடுமை பண்ணுறியா?" என்று கேட்க, சுகானா பக்கவாட்டாக திரும்பி இதழ் கடித்து சிரிப்பை அடக்க,

"ஐயோ! அம்மா... அப்படி எல்லாம் இல்ல..." என்று அவன் பதட்டத்துடன் சொன்னான்.

"கொஞ்சம் விட்டா செத்து இருப்பேன்டா. இப்படி மூஞ்சை அமுக்கி சாக வைக்கவா அந்த பொண்ண கட்டி தந்தோம்? இதுல கிஸ்ஸு வேற? ச்சே..." என்று கன்னத்தைத் துடைத்துக் கொண்டு நகர,

"அம்மா..." என்று அவன் இழுவையாக அழைக்க, சுகானா வாயை மூடி சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

"சிரிக்காதடி..." என்று அவன் சொல்ல, "சிரிப்பு வருதே, என்ன பண்ணட்டும்?" என்றாள் அவள்.

"சரி, வா சாப்பிடலாம். ரொம்ப பசிக்குது, மூடே போயிடுச்சு..." என்று அவன் சொன்னதுமே, அவனுடன் சாப்பிட சென்றாள் சுகானா.

தனக்கு அருகே சாப்பிட்டுக் கொண்டு இருந்த சுகானா அருகே சரிந்தவன், "இன்னைக்காவது நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்குமா சுகா?" என்று கேட்டான்.

விழிகளை சுற்றி சுழல விட்டவளோ, "சுத்தி ஆட்கள் இருகாங்க ராம், என்ன பேசிட்டு இருக்கீங்க? எப்போவும் இதே நினைப்பு தானா?" என்று கேட்டாள்.

"எனக்கு என் பிரச்சனை..." என்று சொன்னவளை சிரிப்புடன் பார்த்தவள், "நேத்து தூங்குனது நீங்கதான்..." என்றாள்.

"தூங்க வச்சது நீ தான்டி." என்றான் அவன்.

"சரி, இன்னைக்கு பார்த்துக்கலாம்..." என்று முடிக்க முதல், ராம்குமாரின் கையில் இருந்த அலைபேசி அலறியது.

கஜன்தான் அழைத்து இருந்தான். அவனும் எடுத்து காதில் வைக்க, "ராம், கேக்கிறதுக்கு சங்கடமா இருக்கு. பட் ஐ டோன்ட் ஹாவ் எனி அதர் சாய்சஸ். இந்த வீக் நீ நைட் டியூட்டி பார்க்க முடியுமா? ரெண்டு டாக்டர்ஸ் லீவுல போய் இருக்காங்க. உனக்கு முடியாதுன்னா சொல்லிடு, நோ ப்ராப்ளம்." என்றான்.

புதிதாக திருமணமானவனிடம் கேட்பது கஜனுக்கு சங்கடம் தான். ஆனாலும் வேறு வழி இல்லாமல் கேட்டுவிட ராம்குமாரும், "தட்ஸ் ஃபைன் அண்ணா. ஸ்கெடியூல் பண்ணிடலாம்." என்று சொன்னான்.

"தேங்க்ஸ்!" என்று சொல்லிவிட்டு கஜன் வைத்துவிட,

சுகானாவோ, "என்னாச்சு?" என்று கேட்க, இதழ்களைப் பிதுக்கியவன், "திஸ் வீக் நைட் டியூட்டி." என்றான்.

"ம்ம்..." என்று சொன்ன அவளுக்கும் ஏமாற்றம் தான்.

"ரொம்ப ஃபீல் பண்ணுற போல நடிக்காதடி..." என்றான்.

"ஏன் எனக்கு ஃபீலிங் இருக்க கூடாதா?" என்று கேட்க, "பார்க்க அப்படி ஒன்னும் தெரியலையே?" என்றான்.

"உங்களை போல ஒபனா அலையல, அதுதான் வித்தியாசம்." என்று சொல்ல, "அடிக்கள்ளி..." என்று அவன் சொல்ல, அவளோ இதழ் பிரித்து கண்களை சிமிட்டி சிரித்துக் கொள்ள, "அடுத்த வாரம் பார்த்துக்கிறேன்." என்றான் அவன்.

***

இதே சமயம் அர்ஜுன், ராகவியை காலேஜில் விட்டு இருந்தான். காரில் இருந்து இறங்கிய ராகவியின் கண்ணில், காலேஜ் வளாகத்தினுள் நுழைந்த நவநீதன் தென்பட்டான்.

நேற்று அவனுடன் அர்ஜுன் பேசினான் தவிர, அவள் பேசவே இல்லை. நேற்று அர்ஜுன் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்க அவள் நினைத்து இருந்தாள். அர்ஜுன் பேசியது நவநீதனுக்கும் சங்கடம் தானே?

ஆனால் அவனோ முகம் கொடுத்தே பேச மாட்டான் என்கின்றானே? இன்றைக்கு பேசிவிட வேண்டும் என்கின்ற ஆர்வத்தில், "நவா!" என்று அழைத்துக் கொண்டே செல்ல, அவனோ ஒரு முறைப்புடன் அவளைக் கடந்து சென்று விட்டான்.

அவள் முகம் சட்டென சோர்ந்து விட்டது. இந்த காட்சி காருக்குள் இருந்த அர்ஜுனின் கண்ணில் தென்பட, ‘ரொம்பதான் பண்ணிட்டு இருக்கான்...’ என்று நினைத்தபடி காரில் இருந்து அதிரடியாக இறங்கினான்.

ஷேர்ட்டின் கையை மடித்து விட்டபடி நவநீதன் முன்னே வந்து நின்று விட்டான்.

நவநீதன் நடையை தளர்த்தி அவனை ஆழ்ந்து பார்க்க, "பேசுறவகிட்ட மூஞ்சை திருப்பிட்டு போற...?" என்றான்.

நவநீதன் பதில் சொல்லாமல் அவனைக் கடந்து செல்ல முற்பட, "பேசிட்டு இருக்கேன்ல...?" என்று சொல்லி அவன் மார்பில் கையை வைத்து தடுத்து இருந்தான் அர்ஜுன்.

இதனைப் பார்த்த ராகவியோ பதறி அடித்துக் கொண்டு அந்த இடத்துக்கு வந்து சேர, தனது மார்பில் இருந்த கையைப் பார்த்து விட்டு, அர்ஜுனை ஏறிட்டுப் பார்த்தான் நவநீதன்.

"அக்கா புருஷன்னு மரியாதை இல்லையா உனக்கு?" என்று கேட்க,

நவநீதனோ, "ஓஹோ... சார் அப்படியே உங்க அக்கா புருஷனுக்கு மரியாதை கொடுக்கிறீங்க போல?" என்றான்.

அர்ஜுனோ கிண்டலாக சிரித்தபடி விலகி நின்று இடையில் கையை வைத்துக் கொண்டு அவனை மேலிருந்து கீழ் பார்த்தவன், அருகே நின்ற ராகவியிடம், "அட! இவன் உன் அண்ணனோட ஜெராக்ஸா?" என்று கேட்க,

"அர்ஜுன் ப்ளீஸ் போங்க... இது காலேஜ்." என்று கெஞ்சினாள் ராகவி.

நவநீதனோ அர்ஜுனை முறைத்துப் பார்க்க, "என்னடா முறைப்பு...? மூஞ்சை பேத்திடுவேன் பார்த்துக்கோ..." என்று அவனை நோக்கி எகிறிக் கொண்டு செல்ல,

அவன் மார்பில் கையை வைத்தபடி அவனை கெஞ்சலாக பார்த்த ராகவி, "அர்ஜுன்... அர்ஜுன்... ப்ளீஸ்..." என்று கேட்டுவிட்டு அங்கே நின்ற நவநீதனிடம், "டேய்... போடா ப்ளீஸ்..." என்றாள்.

அவனும் சும்மா இருக்காமல், "பொறுக்கி!" திட்டிக் கொண்டே நகர, "அடிங்..." என்று அர்ஜுன் அவனை நோக்கி செல்ல,

"ப்ளீஸ் அர்ஜுன்... இது காலேஜ், அவன் என் தம்பி.. எதுக்கு ரௌடிதனம் பண்ணிட்டு இருக்கீங்க?" என்று கேட்டாள்.

அவன் விழிகளோ அவள் இதழ்களில் நிலைத்து அவள் விழிகளில் நிலைக்க, "கொஞ்சம் சூடாயிட்டேன், ரிலாக்ஸ் ஆகணும். காருக்குள்ள வா." என்றான்.

அவனை முறைத்தபடி விலகி நின்றவள், "எனக்கு லெக்சர்ஸுக்கு டைம் ஆகுது." என்றாள்.

"பத்து நிமிஷம் லேட் ஆனா தப்பில்லை. இப்போ நீ வரலைன்னா அந்த ஜெராக்ஸ்கிட்ட வம்பிழுப்பேன்." என்று சொல்லிக் கொண்டே நவநீதன் சென்ற திசையைப் பார்க்க,

"வந்து தொலைக்கிறேன்..." என்று சொல்லிக் கொண்டே முன்னே சென்றவளோ, "டிராப் அவுட் ஆனவனுக்கு படிக்கிற அருமை தெரியுமா?" என்று முணுமுணுக்க அது அவன் காதிலும் தெளிவாக விழுந்தது.

"ஹலோ... பாஸ் பண்ண வேண்டியது எல்லாம் பாஸ் பண்ணி ப்ரோமோஷன் கூட வாங்கிட்டேன்டி." என்றான்.

அவனைத் திரும்பி முறைத்தவள், "இதெல்லாம் என்ன பெருமையா?" என்று கேட்க,

"இல்லையா பின்ன... அவ்ளோ ஹார்ட் வொர்க் பண்ணி இருக்கேன்ல... காலர் அப் பண்ண வேணாமா?" என்று கேட்க, வெளிப்படையாகவே நெற்றியில் அடித்தபடி காரினுள் ஏறிக் கொண்டாள் பெண்ணவள்.

சற்று நேரத்தில் அவன் அவளை விட்டு விலகியதும் அவசரமாக, காரில் இருந்த கண்ணாடியில் தனது இதழ்களை ஆராய்ந்தாள். குருதி கசிந்து கொண்டு இருந்தது.

"சாரி! செம்ம மூட்ல கிஸ் அடிச்சிட்டேன்." என்று சொன்னவனை முறைத்துக் கொண்டே, இதழ்களைப் புறங்கையினால் துடைத்தபடி அவள் நடக்க, அவனோ அவள் முதுகை ஒரு மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே விசிலடித்தபடி காரை கிளப்பி இருந்தான்.

***

அன்று மாலை கஜன் முன்னே வந்து நின்று இருந்தான் நவநீதன்.

"என்னடா?" என்று அவன் கேட்க, "ராகவி புருஷன் என்கிட்ட வம்பு பண்ணுறான்." என்றான்.

"என்ன பண்ணுனான்?" என்று புருவம் சுருக்கி கேட்ட கஜனிடம், நேற்றில் இருந்து இன்றுவரை எல்லாமே சொல்ல, அவனுக்கு ஆத்திரம் வந்தது.

நவநீதனை இப்படி சங்கடப்படுத்தும் விதமாக பேசிய ஆத்திரம் அவனுக்கு.

"சொந்தக்காரனா போய்ட்டான், இல்லன்னா முகத்தை பேத்து இருப்பேன்..." என்று எரிச்சலாக சொன்னவன் மேலும், "இந்த தடவை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, இன்னொரு தடவை ஏதும் பண்ணுனா சொல்லு பார்த்துக்கிறேன்." என்று சொல்ல,

அவனும் சரி என தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
 
Top