நிலவு 51
குளித்துவிட்டு வந்த ராகவிக்கு தூக்கமே வரவில்லை. மனம் எல்லாம் அழுத்தமாக இருந்தது. அவளை வீட்டில் விட்ட அர்ஜுன் வேலை விஷயமாக வெளியேறி இருக்க, தனிமையில் தான் இருந்தாள். கட்டிலில் தொய்ந்து அமர்ந்து எங்கோ வெறித்தபடி தான் இருந்தாள்.இன்று அர்ஜுன் வந்தனாவுக்கு பேசிய வார்த்தைகளை அவ்வளவு சீக்கிரம் கடந்துவிட முடியவில்லை. ஒருவித படபடப்பு. அவனைப் புரிந்துகொள்ள முடியாத தவிப்பு வேறு. எதற்காக இப்படி செய்து கொண்டு இருக்கின்றான் என்று அவளுக்கே தெரியாது. கேட்டாலும் சரியான பதில் வராது.
அவளை முத்தமிடவும் அணைக்கவும் ஆட்கொள்ளவும் மட்டுமே அவன் நெருங்குவான். மனதளவில் மிகமிக தொலைவில் தான் இருக்கின்றான். அவள் என்ன தவறு செய்தாள் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு? அவளுக்கே பதில் தெரியவில்லை. இப்படி கஷ்டப்பட்டு வாழ வேண்டுமா என்கின்ற கேள்வி, அவளிடம் மீண்டும் மீண்டும் வந்து கொண்டு இருந்தது. ஆனால் அர்ஜுன் சாதாரணமானவன் அல்ல என்று அவளுக்கு மட்டுமே தெரியும்.
ஒரு விஷயம் தேவை என்றால் எந்த எல்லைக்கும் செல்வான். அவளையும் அப்படி தானே சிறை செய்து வைத்து இருக்கின்றான். அவள் தனது பிரச்சனையை சொன்னால் கஜன் கண நேரத்தில் முடித்து வைப்பான். அவளுக்கு கஜன் மேல் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் அர்ஜுன் மூன்றாவது மனிதன் அல்லவே? பல்லவி என்கின்ற நூலிழை அவர்கள் குடும்பத்தை இணைத்து இருக்கும் போது, இதனை எப்படி கையாள்வது என்று தடுமாற்றம் தான்.
தன் ஒருத்திக்காக ஒட்டுமொத்த குடும்ப நிம்மதியும் கெட்டு விடுமோ என்று கொஞ்சம் படபடப்பு வேறு. கண் மூடி அமர்ந்து இருந்தவளது கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, அப்போதுதான் வீட்டினுள் வந்த அர்ஜுன், அவளை ஒரு கணம் பார்த்துவிட்டு குளிக்க சென்றான். குளித்து விட்டு வந்த போதும் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
அவள் அருகே அமர்ந்தவன் அவளது மூடிய விழிகளையும் அதில் இருந்து வழிந்து கொண்டு இருந்த கண்ணீரையும் பார்த்து, அவள் கன்னத்தை ஒற்றைக் கையால் பற்றினான். அருகே நெருங்கி அமர்ந்து இருக்கின்றான் என்று அவளுக்கு தெரிந்தாலும் கண்களைத் திறக்கவில்லை.
அப்படியே பெருவிரலால் கண்ணீரைத் துடைத்து விட்டவன், "இப்போ எதுக்கு அழுற?" என்று கேட்டான்.
அவளுக்கு அவன் பேசியதும் கோபம்தான் வந்தது.
சட்டென கண்களைத் திறந்தவள், "எனக்கு அதுக்கு கூட உரிமை இல்லையா?" என்று கேட்டாள்.
"இப்போ எதுக்குடி கோபப்படுற?" என்றான்.
எப்படி எதுவுமே நடக்காதது போல பேசுகின்றான் என்று அவளுக்கு தெரியவே இல்லை. அதிர்ச்சியாக இருந்தது.
"இன்னைக்கு நீங்க என்ன பண்ணுனீங்கன்னு கூடவா தெரியல அர்ஜுன்?" என்று கேட்டாள்.
"என்னடி பண்ணுனேன்?" என்று கேட்டான். வேண்டுமென்றே பேசினான், ஆத்திரம் வந்தது.
"எதுவுமே பண்ணல போதுமா?" என்று சொல்லிக் கொண்டே அவள் படுக்க, சட்டென இழுத்து தன்னுடன் நெருக்கிக் கொண்டவன், "தூங்குறதுக்கு என்ன அவசரம்?" என்று கேட்டான்.
அவளுக்கு மனசே விட்டுப் போய் விட்டது.
"நான் இவ்ளோ பேசிட்டு இருக்கேன், உங்களுக்கு இதுதான் தேவையா?" என்று கேட்டாள்.
"பொண்டாட்டிகிட்ட தானே கேட்க முடியும்." என்றான்.
"பெரிய உத்தமன் போல பேசாதீங்க, இன்னைக்கு வந்தனாவுக்கு பேசுன பேச்சை நானும் கேட்டேன் தானே?" என்று ஆதங்கமாக சொன்னாள்.
"அழகை ரசிக்கிறது தப்பா ராகவி?" என்று கிண்டலாக கேட்டான்.
"ரசிக்கிறது வேற அர்ஜுன், வக்கிரமா பேசுறது வேற..." என்றாள் பற்களை கடித்துக் கொண்டே.
"அதுல என்ன வக்கிரம் இருக்கு?" என்று கேட்க, "அவ என் அக்கா, நீங்க வேற யாரையாச்சும் ரசிச்சுக்கோங்க, யார்கூடவாச்சும் படுத்துக்கோங்க. என் குடும்பத்து ஆட்கள்கிட்ட இப்படி பண்ணாதீங்க." என்று அழுகையுடன் வந்தது அவள் குரல்.
"சோ, நான் வேற யார் கூட போனாலும் உனக்கு அத பத்தி கவலை இல்லை. உன் ஃபேமிலி சேஃப்பா இருந்தா மட்டும் போதும் ரைட்?" என்று அழுத்தமாக அவளை உறுத்து விழித்துக் கொண்டே கேட்டான்.
ஏனோ அவள் தன்னை விட்டுக் கொடுக்கும் உணர்வு. தன் மீது சின்ன பாதிப்பு கூட தோன்றவில்லையா என்கின்ற ஆதங்கம். அவளைக் காயப்படுத்த வேண்டும் என்றுதான் வந்தனாவை கொச்சையாக பேசினான். அவன் பேசியதற்காக அவள் காயப்படவில்லை, அவள் குடும்பத்து பெண்ணை பேசி விட்டான் என்கின்ற ஆதங்கம் தான் அவளுக்கு. தன்னை ஒரு பொருட்டாகவே அவள் மதிக்கவே இல்லை என்று கோபம் வந்தது.
அவன் விழிகளைப் பார்த்தவள், "நான் எதுக்கு உங்களுக்காக கவலைப்படணும்?" என்று கேட்டாள்.
"ஓஹோ..." என்று புருவத்தை ஏற்றி இறக்கியவனோ மேலும் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டே, "நான் அப்படி தான்டி பேசுவேன், இத விட பச்சையா கூட பேசுவேன், கொச்சையா கூட பேசுவேன். சந்தர்ப்பம் அமைஞ்சா ரேப் கூட பண்ணுவேன். என்னடி பண்ண முடியும் உன்னால?" என்று கேட்டான்.
அவன் நிதானம் இழந்து விட்டால், அவன் வாயில் வரும் வார்த்தைகளுக்கு கட்டுப்பாடு ஏது? இஷ்டத்துக்கு வார்த்தைகள் வெளி வந்தன.
"அர்ஜுன்...!" என்று ஆதங்கமாக அவள் வார்த்தைங்கள் வர, அவளை உறுத்து விழித்தவன், "எனக்கு இப்போ நீ வேணும்." என்றான்.
என்ன மனிதன் இவன் என்று தோன்றியது. அவனிடம் சமீப காலத்தில் வந்த கொஞ்சமான ஈர்ப்பு கூட முற்றாக அறுந்துவிட்ட உணர்வு.
"என்னால முடியாது." என்றாள் ஆத்திரத்துடன்.
"ஏன்டி முடியாது?" என்று அவன் கேட்க, "இப்படி பேசுற ஒருத்தர் கூட என்னால வாழ முடியாது." என்று சொல்ல,
"உனக்கு வேற சாய்ஸ் இல்ல ராகவி." என்றான்.
எரிச்சலாக இருந்தது. சிறைக்குள் சிக்கிக் கொண்ட உணர்வு.
"உங்களுக்கு என்னதான் வேணும்?" என்று கேட்டாள்.
"நீதான்." என்று பதில் வந்தது.
"முடியாது." என்றாள் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டே.
"நீ கோப்ரேட் பண்ணுனா, வந்தனா விஷயத்துல ஒதுங்கி இருப்பேன். இல்லன்னா இந்த அர்ஜுனை பத்தி உனக்கு தெரியும் தானே? உன்னை தூக்குன எனக்கு அவளை தூக்க ரெண்டு செகண்ட் போதும்." என்று சொடக்கிட்டு சொல்ல, "நீங்கெல்லாம் மனுஷனா?" என்று கேட்டாள்.
"கிஸ் மீ." என்றான்.
அவள் என்னவோ பேசுகின்றாள், அவன் என்னவோ பேசிக் கொண்டல்லவா இருக்கின்றான். வெறுத்து விட்டது. தடாலடியாக அவளிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டல்லவா இருக்கின்றான். அவனை நினைத்து கொஞ்சம் பதட்டம் அவளுக்கு. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவன், என்ன வேண்டும் என்றாலும் செய்வான் என்று அவளுக்கும் தெரியும்.
தன்னையே அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவளை ஆழ்ந்து பார்த்தவன், "கிஸ் மீ." என்றான் மீண்டும்.
பிடிக்காமலே அவன் முகத்தைத் தாங்கி இதழில் இதழ் பதிக்க, அவனும் ஆழ்ந்து அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டு கட்டிலில் சரிந்தவன், தனது தேவையை நிறைவேற்றிய பின்னரே அவளை விட்டு விலகி படுத்தான்.
மார்பு வரை போர்வை இருக்க விட்டத்தைப் பார்த்துக் கொண்டே படுத்து இருந்தாள். அவளுக்கென்று ஆசை இல்லையா? தேவைகள் இல்லையா? விருப்பு, வெறுப்புகள் தான் இல்லையா? இப்படியே காலம் முழுவதும் வாழ வேண்டி வந்து விடுமோ என்று பயம் வேறு. கருவில் அவள் குழந்தை வேறு. படிக்க வேண்டிய வயதில் அவள் மொத்த வாழ்க்கையையும் சீரழித்து விட்டான். இனி அழுது கரைந்து என்ன பயன்? எல்லாமே கைமீறி போய் விட்டதே?!
அவனுக்கு தேவை என்றால் மிரட்டி, உருட்டி சாதித்து விடுகின்றான். அவள் நினைத்த எதையுமே அவளால் செய்ய முடியாத நிலை. வீட்டில் இருக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். பட்டாம் பூச்சி போல பறந்து திரிந்தாளே?! இப்படி சீரழிந்து நிற்க வேண்டிய நிலை வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
'அண்ணாகிட்ட போயிடு ராகவி...' என்று இப்போதும் அவள் மனசாட்சி சொல்லிக் கொண்டு இருந்தது.
சுயநலமாக முடிவு எடுக்கவே அவளுக்கு தயக்கமாக இருந்தது. இந்த முடிவை அவன் முத்தமிட்டு மிரட்டிய அன்று எடுத்து இருக்க வேண்டும் என்று இப்போது யோசித்தாள். இன்று எல்லாமே கைமீறி போய் விட்டது. இரு குடும்பங்களும் நெருக்கமாகி விட்டார்கள். அவளும் அவன் குழந்தையை சுமக்க ஆரம்பித்து விட்டாள். இந்த வாழ்க்கையை எப்படி சீர் செய்வது என்றே அவளுக்கு தெரியவில்லை. அவன் மீது அளப்பரிய வெறுப்பு தேங்கி நின்றது. அதுவும் இன்று அவன் பேசிய வார்த்தைகள் அவ்வளவு நாராசமாக இருந்தன.
விட்டத்தைப் பார்த்துக் கொண்டே படுத்த அர்ஜுனும் பக்கவாட்டாக திரும்பி அவளைப் பார்த்தான். அவள் விழிகளில் இன்னும் நீர் வழிந்து கொண்டு இருந்தன.
கண்களை மூடி ஆழ்ந்த பெருமூச்சை விட்டவன் அவளை நோக்கி சரிந்து படுத்து அவள் கன்னத்தைப் பற்றி, "என்னை பாருடி..." என்றான்.
சற்று முன்னர் அவ்வளவு கோபமாகவும் மோசமாகவும் வக்கிரமாகவும் பேசியது இவன்தான் என்று, கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு மென்மையாக இருந்தது அவன் அழைப்பு. குரலில் நெகிழ்வும் தேங்கி நின்றது.
விட்டத்தில் இருந்து பார்வையை அகற்றி அவன் விழிகளை நோக்கியவள், "திரும்ப வேணுமா அர்ஜுன்?" என்று கேட்டாள்.
மனமெல்லாம் மொத்தமாக உடைந்துவிட்ட பெண்ணவள் வேறு என்ன கேட்டுவிட முடியும்?
அவனோ இல்லை என்று தலையை அசைத்து நெற்றியில் முத்தம் பதித்து, "சாரி!" என்றான்.
அவளிடம் மன்னிப்பு கேட்கின்றான். அதனை எல்லாம் கிரகிக்கும் நிலையில் அவள் இல்லை.
"உங்களுக்கு என்ன, மல்டி பெர்ஸ்னாலிட்டி டிஸார்டரா?" என்று கேட்டாள்.
சட்டென அவன் இதழ்கள் விரிய அவள் விழிகளைப் பார்த்தவன், "ரெண்டே பெர்ஸ்னாலிட்டி தான், கோபம் வந்தா அந்நியன் மாதிரி இருப்பேன், கோபம் இல்லன்னா ரெமோ மாதிரி இருப்பேன்." என்று சொல்ல,
அவனை முறைத்து விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள, "இன்னைக்கு ஹார்ஷா ஏதும் பண்ணல தானே?" என்று கேட்டுக் கொண்டே போர்வையை விலக்கி அவளை ஆராய்ந்தான்.
அப்படியே அசைவின்றி அவள் படுத்துக் கிடக்க, "உங்க அண்ணா சொன்ன போல ஜென்டிலா ஹேண்டில் பண்ணி இருக்கேன்." என்றான்.
அவனை முறைத்துப் பார்க்க, "எல்லாத்துக்கும் முறைச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டான்.
"உங்களுக்கு என்னதான் வேணும்?" என்று எரிச்சலுடன் கேட்டாள்.
"நீதான் வேணும், வாழ்க்கை முழுக்க..." என்றபடி அவள் இதழில் இதழ் பதிக்க, கண்ணீருடன் அவள் விழிகள் மெதுவாக மூடிக் கொண்டன.
அவளை இழுத்து அணைத்துக் கொண்டுதான் படுத்து இருந்தான்.
அடுத்த நாள் காலையில் அவள் கண் விழித்த போது, "குட் மார்னிங்!" என்று சொல்லிக் கொண்டே அவளிடம் டீ கப்பை நீட்டினான்.
அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவள், தன்னை போர்வையால் மறைத்துக் கொண்டு ஆடைகளைத் தேட, "எல்லாம் வாஷ் பண்ண போட்டுட்டேன்." என்றாள்.
"என் ட்ரெஸ் எனக்கு வாஷ் பண்ண தெரியும், டோன்ட் டச் மை ட்ரெஸ்." என்றாள்.
"ஹேய் என்னடி ஓவரா பண்ணிட்டு இருக்க? உன்னையே தொடுறேன், ட்ரெஸ்ஸை தொடுறதுல என்ன இருக்கு? வாஷிங் மெஷின்ல போட்டுட்டேன்." என்றான்.
வாய்க்குள் திட்டிக் கொண்டே எழ முற்பட்டவளுக்கு எப்படி கட்டிலில் இருந்து இறங்குவது என்று தெரியவில்லை.
அவனோ, "இத முதல்ல குடி." என்று டீயை நீட்ட, 'வந்துட்டான், மல்டி பெர்ஸ்னாலிட்டி டிஸார்டர்காரன்...' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே அதனை வாங்கி குடித்தாள்.
இல்லை என்றால் எப்படியாவது குடிக்க வைக்க ஏதாவது குரங்கு சேட்டைகள் செய்வான் என்று அவளுக்கும் தெரியும் தானே?
டீயை குடித்துக் கொண்டு இருந்தவளை நெருங்கி அமர்ந்து கொண்டவன், அவள் முகத்தில் வந்து விழுந்த முடியை எடுத்து காதிற்கு பின்னே விட்டு, அவளையே ரசனையாக பார்த்து இருந்தான். இமைகளை அவளில் இருந்து அகற்றவே இல்லை.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவள், "இப்படியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்க, "பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கே...?" என்றான்.
அவனை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. எப்போது எப்படி இருப்பான் என்றும் தெரியவில்லை. அவள் புரிதலுக்கு எல்லாம் அப்பாற்பட்டவனாக இருந்தான்.
டீயை குடித்து முடித்தவளோ, "எழும்ப கஷ்டப்படுறேன்னு தெரியுதுல, அட்லீஸ்ட் ஒரு டவலாவது எடுத்துக் கொடுங்க." என்றாள்.
குறும்பு புன்னகை இதழ்களுக்குள் தேங்கி நிற்க, "அப்படியே எந்திரிடி..." என்று அவளை விழுங்கி விடுவது போல ரகசிய குரலில் சொன்னான்.
"கொஞ்சம்கூட சென்ஸ் இல்லையா அர்ஜுன்?" என்று அவள் கடுப்பாக கேட்க, "ஹேய், உனக்கே இது ஓவரா இல்லையா? நீ ட்ரெஸ் போட்டு இந்த கட்டில்ல என்கூட படுத்த நாட்களை எண்ணலாம். அதுக்குள்ள ரொம்ப அலட்டிக்கிற..." என்றான்.
"அதுக்காக இப்படியே எந்திரிச்சி நான் போக முடியுமா?" என்று கேட்டாள்.
"நான் போறேன் தானே?" என்றான் அவன்.
கோபமாக வந்தது. கையில் இருந்த டீ கப்பினால் அவன் தலையில் டங்கென்று அடித்தால் என்ன என்று தோன்ற, "உங்கள போல இல்ல நான்... எனக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாமே இருக்கு." என்றாள்.
சத்தமாக சிரித்துக் கொண்டே, "புருஷன், பொண்டாட்டிக்குள்ள அதெல்லாம் எதுக்கு?" என்று கேட்டான்.
"அர்ஜூன் ப்ளீஸ்... ஒரு டவல் எடுத்து கொடுங்க..." என்றாள் கெஞ்சுதலாக.
"நான் கேக்கிற இடம் எல்லாம் கிஸ் பண்ணு, டவல் எடுத்து கொடுக்கிறேன்." என்றான்.
ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், "ஒன்னும் வேணாம், நான் இப்படியே எந்திரிக்கிறேன்." என்று சொன்னவளை இழுத்து அவள் இதழ்களில் ஆழ்ந்து இதழ் பதித்து விலகியவன்,
"செம்ம போதைடி நீ..." என்று சொல்லி கையை நீட்டி அருகே இருந்த டவலை எடுத்து அவளிடம் நீட்ட, அவனை முறைத்துக் கொண்டே அதனை மார்பில் முடிந்தவள், கட்டிலில் இருந்து இறங்கி குளியலறைக்குள் நுழைந்து விட்டாள்.
"சீக்கிரம் ரெடி ஆகுடி, காலேஜ்ல கொண்டு விடுறேன்." என்று சொல்லி அவனும் டீ கப்புகளை கழுவ சென்று இருந்தான்.