நிலவு 31
அடுத்த நாள் விடிந்தது...கஜன் மற்றும் பல்லவி திருமணம் செய்ய இருக்கும் நாள் அன்று தான்...
ஏதோ ஒரு இறுக்கம் எல்லார் மனதிலும்... சிரிக்கவே கஷ்டமாக இருந்தது...
வலுக்கட்டயமாக சிரித்துக் கொண்டார்கள்...
கண்ணாடி முன்னே அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள் பல்லவி...
சிவப்பு நிற பட்டுப் புடவை உடுத்தி தலை நிறைய மல்லிகைப் பூக்களுடன் அமர்ந்து இருந்தவளுக்கு முகத்தில் சிரிப்பு மருந்துக்கும் இல்லை...
அர்ஜுன் செய்து விட்டு போன வேலை அப்படி...
முதலில் இந்த கல்யாணத்தில் அவளுக்கு பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை.
கஜனுக்காக சம்மதித்து இருந்தாள்.
அதன் பின்னர் அவனுக்காக ஆர்வத்தை உருவாக்கியும் கொண்டாள்.
ஆனால் இப்போது எல்லாமே வடிந்த உணர்வு...
அந்த வீட்டில் எப்படி அவளால் வாழ முடியும்? குற்ற உணர்வு நெஞ்சை அரித்துக் கொண்டே இருக்குமே...
கஜன் மீது அளவு கடந்த நம்பிக்கை அவளுக்கு இருந்தது...
அர்ஜுன் செய்த தவறுக்கு ஒரு வார்த்தை கூட அவளை அவன் காயப்படுத்தவில்லையே...
ஆனாலும் அர்ஜுன் மீது நிறையவே வருத்தம் இருந்தது...
கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட, அவள் அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது...
எழுந்து சென்று திறந்தாள்.
வாசலில் பார்த்தீபன் நின்று இருந்தான்.
"வாங்கப்பா" என்று அவள் சொல்ல, உள்ளே மென் புன்னகையுடன் வந்தவன், "அழகா இருக்கம்மா" என்றான்.
கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டாள்...
அவள் எதற்காக சங்கடமாக இருக்கின்றாள் என்று அவனும் உணர்ந்தவன், "அர்ஜுனை பத்தி கவலைப்படாதே, கஜன் எல்லாம் பார்த்துப்பார்" என்றான்...
அவன் மீது எவ்வளவு நம்பிக்கை பார்த்தீபனுக்கு...
பிரமிப்பாக இருந்தது...
பிடித்தும் இருந்தது...
"ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, அவன் காலில் விழப் போக, "ச்ச ச்ச எந்திரிம்மா" என்று சொல்லி அவள் தோள்களை பற்றி எழுப்பியவன், அவள் நெற்றியில் முத்தம் பதித்த கணத்தில், அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அவள் நெற்றியை நனைத்துக் கொண்டது...
இதே சமயம், வெண்ணிற வேஷ்டி சட்டை அணிந்து, ஷேர்ட்டின் கையை முட்டி வரை மடித்துக் கொண்டே தனது அறைக்குள் இருந்து ஹாலுக்குள் வந்தான் கஜன்...
வீட்டில் இருப்பவர்களின் இதழ்களில் புன்னகைக்கு பஞ்சம் தான்...
ராகவியின் விஷயத்தில் எல்லோரும் மனமுடைந்து போய் இருந்தார்கள்...
ஹாலுக்குள் வந்த கஜனின் கண்ணில் சோஃபாவில் தொய்ந்து அமர்ந்து இருந்த சக்திவேல் தான் தென்பட்டான்.
அவன் இப்படி இருந்து கஜன் பார்த்ததே இல்லை...
மனம் பிசைய ஆரம்பிக்க, அவன் அருகே அமர்ந்து கொண்டே, சக்திவேலின் கையை பற்றியவன், "அப்பா" என்று அழைக்க, அவனை திரும்பிப் பார்த்தவன், "ராகவி வர்றேன்னு சொன்னாளா?" என்று கேட்டான்...
மனம் முழுவதும் அவள் எண்ணம் தான் என்று தெரிந்தது.
அவனுக்கும் அப்படி தானே...
"வர சொன்னேன், ஆனா தெரியல" என்றான்...
"ம்ம், சரி அப்போ கிளம்புவோம்" என்று சொல்லிக் கொண்டே சக்திவேல் எழுந்து கொள்ள, ஆயத்தமாகி இருந்த அனைவரும் கோவிலுக்கு செல்ல புறப்பட்டு விட்டார்கள்...
அனைவரின் முகத்திலும் இறுக்கம் இருந்தது. கல்யாண களை கொஞ்சமும் இல்லை.
அதே சமயம், நேத்ராவும் தனது வீட்டின் கண்ணாடி முன்னே அமர்ந்து இருந்தாள். பச்சை நிற புடவை அணிந்து இருந்தாள்.
இதயத்தை யாரோ பிழியும் உணர்வு தான்...
அவள் பருவம் அறிந்த வயதில் இருந்து காதலித்த ஒருவன் இன்று வேறு ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட போகின்றான்...
அதனை விழிகளால் பார்க்கும் சக்தி அவளுக்கு இருக்கா என்று தெரியவே இல்லை.
அதற்காக இந்த திருமணத்தை தவிர்க்கவும் முடியாது...
தான் அழுதால் நந்தினி வருத்தப்படுவார் என்று அவளுக்கும் தெரிய, கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியே வந்தவளை பரிதாபமாக பார்த்த சுரேஷோ, "கண்டிப்பா போகணுமா நேத்ரா" என்று கேட்க, "நாம நிற்காம எப்படிப்பா? ஏற்கனவே ராகவி விஷயத்துல எல்லோரும் உடைஞ்சு போய் இருக்காங்க, நாமளும் இல்லன்னா தப்பாயிடும்" என்று சொல்ல, நந்தினி எதுவும் பேசவில்லை, அவளை ஒரு கணம் அணைத்து விடுவித்தபடி, "உனக்கு நல்ல வாழ்க்கை கண்டிப்பா அமையும் மா" என்று சொன்னாள்.
அதனை தொடர்ந்து எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி விட்டார்கள்...
எல்லோருக்கும் ராகவியை பற்றி தான் கவலை...
தனிமையில் இருக்கும் அவளை கேட்கவும் வேண்டுமா?
திருமணத்துக்கு செல்ல வேண்டும்...
அவள் ஆசையாக எதிர்பார்த்த அவள் அண்ணனின் திருமணம்...
ரெண்டு நாள் முன்னர் வரை திருமணத்திற்க்கு ஆயத்தமாவது பற்றி எத்தனையோ கனவுகளில் இருந்தாள்.
இன்று எதிலும் மனம் லயிக்கவில்லை.
கஜனின் திருமணத்துக்கு எடுத்த உடைகள் தொடக்கம் எல்லாமே அவளுக்கு அனுப்பப்பட்டு இருக்க, நீல நிற பட்டு புடவையை அணிந்து கொண்டாள்.
நகைகளும் அவர்கள் கொடுத்து விட்டு இருந்த போதிலும் எதனையும் அணியும் மனநிலை கொஞ்சமும் இல்லை...
கழுத்தில் தாலி மட்டுமே அணிந்து இருந்தாள்.
நெற்றியில் குங்குமத்தை அவள் வைத்துக் கொண்டு இருந்த சமயம், கதவை தட்டாமலே திறந்து கொண்டே உள்ளே வந்து இருந்தான் அர்ஜுன்...
அவளுக்கு சற்று கடுப்பாகி விட்டது...
"கதவை தட்டிட்டு வரலாமே" என்றாள் அவனைப் பார்க்காமலே...
"ஹெலோ, நீ என்னோட பொண்டாட்டி... ஒரே ரூம் ல தான் இருக்கணும்... படிச்சு முடிக்கட்டுமேன்னு பாவம் பார்த்து விட்டு வச்சு இருக்கேன்... ரொம்ப பண்ணிட்டு இருந்தா இந்த ரூம்ல வந்து செட்டில் ஆயிடுவேன்" என்றான் மிரட்டலாக...
இவனுக்கு மிரட்டலை தவிர சாதாரணமாக பேசவே தெரியாதா? என்று யோசித்துக் கொண்டே, அவனைப் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்...
வேஷ்டியும் கருப்பு நிற ஷேர்ட்டும் அணிந்து இருந்தான்...
'கருப்பு யூனிஃபார்மை போட்டு இருக்கான்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே, "கல்யாணத்துக்கு யாரும் கருப்புல வருவாங்களா?" என்று காட்டமாக கேட்டாள்.
அவள் அண்ணனுடையே திருமணம் ஆயிற்றே...
அபசகுனம் போல அவன் வருவதை பார்க்க எரிச்சலாக இருந்தது...
"நம்ம கல்யாணமே ப்ளாக் அண்ட் ப்ளாக் ல தான்டி நடந்திச்சு... ஐ லவ் ப்ளாக்... பட் நீ சொல்றதுக்காக மாத்துறேன்... ப்ளூ கலர் லையும் ஷேர்ட் இருக்கு தான்" என்று அவள் புடவையை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டே சொன்னவன், கையில் இருந்த பார்சல் ஒன்றை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்து விட்டு, அவளைப் பார்க்க, அவளுக்கோ அவனை சற்று நெருக்கத்தில் பார்க்க என்னவோ போல இருந்தது...
ரெண்டடி பின்னால் வைத்து நகர்ந்து இருந்தாள்.
"இந்த ஜீவல்ஸ் எல்லாம் போடு, உனக்குன்னு தான் வாங்கினேன்" என்று சொன்னபடி வெளியேறி இருக்க, அவளுக்கோ அதனை தொடக் கூட இஷ்டம் இல்லை...
அவன் முதுகை வெறித்துப் பார்த்து விட்டு, முடியை பின்னி பூ மட்டும் வைத்துக் கொண்டவள் வெளியேறி வர, அங்கே வெண்ணிற வேஷ்டி மற்றும் நீல நிற ஷேர்ட் சகிதம் அமர்ந்து இருந்தான் அர்ஜுன்...
அவன் கொடுத்த எதனையும் அவள் தொட்டுக் கூட பார்க்கவில்லை என்று அவனுக்கு தெரிந்தது...
"ஓஹோ, நான் கொடுத்தா மேடம் எதுவும் போட மாட்டிங்க ரைட்?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தவன் ஷேர்ட்டை கழட்ட, அவளுக்கோ எதுவும் புரியவில்லை...
"என்னாச்சு?" என்று கேட்டாள் சற்று பதட்டமாக...
"நான் வாங்கி தந்த எல்லாமே போட்டா அழைச்சு போவேன், இல்லன்னா வீட்லயே நிற்கலாம்" என்றான்.
தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...
கஜனின் திருமணத்துக்கு போயாக வேண்டுமே...
"நான் போட்டுட்டு வர்றேன்" என்றாள் அவசரமாக...
"அது" என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு பின்னே சென்று அறைக்குள் நுழைய, அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.
"லெட் மீ ஹெல்ப் யூ" என்றான்...
அவளுக்கு மயக்கம் வாராத குறை தான்..
கண்ணாடி முன்னே நின்று, அவன் கொடுத்த பார்சலை பிரித்தாள்.
ஜிமிக்கிகள் முதலில் தென்பட்டன...
எடுத்து அணிந்து கொண்டாள்.
அவன் அவளுக்கு பின்னே நின்று அவளை தான் கண்ணடியூடு பார்த்தபடி நின்று இருந்தான்.
அவள் மீது அவனுக்கு ஆரம்பத்தில் பெரிய ஆர்வம் இல்லை...
ஆனால் அவளை முத்தமிட்டதில் இருந்தே, அவன் ஹார்மோன்கள் தாறுமாறாக தடு மாற ஆரம்பித்து விட்டன...
காதல் எல்லாம் இல்லை...
பெண் மேனியில் ஆண் மகனுக்கு தோன்றும் இயல்பான மோகம்...
அவளையே கண்ணடியூடு பார்த்துக் கொண்டு இருக்க, அவளுக்கோ சங்கடமாக இருந்தது...
அவன் விழிகளை பார்ப்பதை தவிர்த்துக் கொண்டே, காப்புக்களை எடுத்து அணிந்து கொண்டாள்.
அதனை தொடர்ந்து நெக்லசை எடுத்து, கழுத்தில் போட முயன்றாள்...
சற்று சிரமமாக இருக்க, அவனே கையை நீட்டி, அதனை பற்ற, அவளோ பதறி விலக முயல, ஒற்றைக் கையால் அவள் இடையை பற்றி, தன்னை நோக்கி இழுத்து, அவள் முதுகு பக்கம் தனது மொத்த உடலும் உரச நின்றவன், "அப்படியே நில்லுடி" என்று சொல்ல, அவளோ, "இல்ல நானே போட்டுக்கிறேன்" என்றாள்.
"கல்யாணத்துக்கு போகணுமா? இல்லையா?" என்று கேட்டான்...
வேறு வழி இல்லை அவளுக்கு...
எரிச்சலாக இருந்தது...
ஆனாலும் அப்படியே நிற்க வேண்டிய நிலை...
ஆடாமல் அசையாமல் நின்றாள்.
மிரட்டியே எல்லாம் சாதித்து விடுகின்றானே...
அவளை பற்றி கொஞ்சமும் அவன் நினைக்கவில்லையே...
அவளுக்கு நெக்லஸை அணிந்து கொண்டே, குனிந்து அவள் கழுத்து வளைவில் மோகமாக முகத்தை புதைத்துக் கொள்ள, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
விலக முயன்றாள்...
முடியவில்லை...
உரிமை இல்லாத போதே சற்றும் தயங்காமல் இதழ் அணைத்தவன் ஆயிற்றே.
இப்போது கேட்கவும் வேண்டுமா?
தன்னுடன் மேலும் அவளை நெருக்கிக் கொள்ள, அவளோ, "அர்ஜுன் ப்ளீஸ் விடுங்க" என்றாள் கண்களில் நீர் நிரம்ப...
அதனை எல்லாம் அவன் கேட்கும் நிலை தாண்டி இருக்க, அவளை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன், அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்கி, "அர்ஜுன் ப்ளீஸ்" என்று ஆரம்பித்த, அவள் இதழ்களில் தன்னிதழ்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் பொருத்திக் கொள்ள, அவள் விழிகள் முதலில் அதிர்ந்து விரிந்து, பின்னர், அவனை தடுக்க முடியவில்லை என்கின்ற ஆதங்கத்துடன், கண்ணீருடன் மூடிக் கொண்டன...
அவன் மார்பில் கை வைத்து தள்ள முயன்றும் அவனை மொத்தமாக அவளால் விலக்க முடியவே இல்லை...
கைகள் கடைசியில் தொய்ந்து விழுந்தது தான் மிச்சம்...
ஆசை தீர முத்தமிட்டு விட்டு, அவள் அழுதோய்ந்த விழிகளுடன் தனது மோக விழிகளை கலக்க விட்டவன், "உன்னை இப்போவே என்னவோ எல்லாம் பண்ணனும் போல இருக்கு, படிக்கிற பொண்ணாச்சேன்னு சும்மா விடுறேன், படிச்சு முடி, பார்த்துக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே அவள் கையை பற்றியவன், "போகலாமா?" என்று கேட்க, அவள் அவனை பார்த்து விட்டு, குனிந்து தனது சேலையைப் பார்த்தாள்.
சேலை மாராப்பு விலகி இருந்தது...
அவன் விழிகளும் அதில் படிய, "சாரி" என்று சொல்லிக் கொண்டே, கையை நீட்டி, அதனை லாவகமாக சரி செய்தான்...
அவள் மேனியில் அவன் இயல்பாக கைகளை வைத்தான்...
அவளுக்கு தான் எல்லாமே அசௌகரிகமாக இருந்தது...
சட்டென பதறி விலக முற்பட, "நான் உன் புருஷன் டி" என்று சொல்லிக் கொண்டே, அவள் கையை விட்டவன், இப்போது இடையை பற்றி தன்னுடன் நெருக்கிக் கொண்டே நடக்க, அவளுக்கு இப்போது புரிந்தது ஒன்றே ஒன்று தான்...
தான் விலகிப் போக முயன்றால் வேண்டும் என்றே வலுக்கட்டாயமாக நெருக்கிக் கொள்கின்றான்...
அது இன்னும் அவளுக்கு அவஸ்தை ஆயிற்றே...
அதனால் இனி விலகி செல்வது இல்லை என்று நினைத்துக் கொண்டே, அவனுடன் கூட நடந்து காரில் ஏறிக் கொண்டாள்.
அவனை பார்க்கவில்லை...
முன்னால் பார்த்தபடி தான் அமர்ந்து இருந்தாள்.
இன்னுமே அவன் கொடுத்த முத்தத்தினால் உண்டான எரிச்சல் இதழ்களில் இருக்க, விரல்களால் இதழ்களை வருடிக் கொண்டாள்.
காரை ஸ்டார்ட் செய்ய போன அர்ஜுனின் விழிகள் அவளில் இப்போது படிய, அவளை நெருங்கி வந்தான்...
சட்டென இருக்கையில் அவள் பதட்டத்தில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, அவளை பார்த்துக் கொண்டே, சீட் பெல்ட்டை இழுத்து போட்டு விட்டவன், "இதுக்கு மேல விலகி போக என்ன இருக்கு?" என்று கேட்டுக் கொண்டே, விரல்களால் அவள் இதழ்களை வருடிக் கொண்டே, "கொஞ்சம் முரட்டு தனமா கிஸ் அடிச்சு இருக்கேன் போல" என்றான்...
அவனுக்கு அவளை பார்க்க கூட பிடிக்கவில்லை...
அப்படியே முன்னால் பார்த்துக் கொண்டே சிலை போல இருந்தாள்.
அவள் கருமணிகள் கூட அவனை பார்க்க முயலவில்லை...
ஆனால் அவன் விழிகளோ அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்க, "சாரி" என்றான் அவள் இதழ்களை மெலிதாக வருடிக் கொண்டே...
அவளிடம் ஒரு பெருமூச்சு மட்டுமே பதிலாகி போக, இப்போது மென்மையாக ஒரு முத்தம் அவள் இதழ்களில் அவனிடம் இருந்து வந்து சேர்ந்தது.
அவனது வன்மையான முத்தத்துக்கு மருந்தாக மென்மையான முத்தம்...
'கிஸ் பண்ணிட்டே இருக்கான் ராஸ்கல்' என்று மனதுக்குள் திட்ட மட்டும் தான் அவளால் முடிந்தது...
முத்தமிட வேண்டாம் என்று சொன்னால் போல விட்டு விடுவானா என்ன?
அப்படி சொன்னால் கூட இன்னும் ஆழமான முத்தத்தை பலவந்தமாக பதிப்பான்...
அதற்கு இதுவே மேல் என்று அவள் நினைத்து இருக்க, அவளை மையலுடன் பார்த்துக் கொண்டே விலகியவன், "பொண்ணுங்கன்னாலே ஒரு போதை தான் ல" என்றான்...
என்ன மாதிரியான வார்த்தைகள்...
சட்டென அவனை பக்கவாட்டாக திரும்பி அதிர்ந்து பார்த்தாள்.
"உண்மைய தான் டி சொன்னேன்... உன்னை கல்யாணம் பண்ணிக்கனும், உன்ன கொடுமை படுத்தணும், உன் அண்ணாவை வச்சு செய்யணும்னு மட்டும் தான் நினச்சேன்... ஆனா இப்போ பாரு, நான் நினைக்காதது எல்லாம் நான் பண்ணிட்டு இருக்கேன்" என்று கண் சிமிட்டி சொன்னபடி காரை ஸ்டார்ட் செய்து உயர் வேகத்தில் கிளப்ப, அவளும் பார்வையை முன்னால் திருப்பிக் கொண்டாள்.
அவள் ஆசையாக எதிர்பார்த்த கல்யாணத்தை, மரத்துப் போன இதயத்துடன் பார்க்கப் போகின்றாள்...
மனமெல்லாம் ஒரு வகை வலி சூழ்ந்து கொள்வதை அவளால் தடுக்கவே முடியவில்லை...
தனது வீட்டினர் முன்னே எப்படி நிற்பது என்று ஒரு தடுமாற்றம் அவளுக்குள் இக்கணம் தோன்ற ஆரம்பித்து இருந்தது...