ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 15

pommu

Administrator
Staff member

நிலவு 15

அங்கே அமர்ந்து இருந்தது கஜன் ஆயிற்றே...

அவள் விழிகளில் அப்படி ஒரு அதிர்ச்சி...

அவன் சாதாரணமாக தான் பார்த்தான்...

அவளது அதிர்ந்து இருந்த விழிகளைப் பார்த்தவனுக்கு, அவள் தன்னை பற்றி தெரியாமல் தான் வந்து இருக்கின்றாள் என்று புரிய, அவளை ஒரு கணம் பார்த்து விட்டு, குரலை செருமிக் கொண்டே பைரவியை பார்த்தவனோ, "உட்காருங்க" என்று சொன்னான்...

பைரவியும் வந்து அமர்ந்து கொண்டே, மென்மையாக புன்னகைத்தவள், "ஹெலோ டாக்டர், நான் மிஸிஸ் பைரவி பார்த்தீபன்" என்று சொல்லிக் கொண்டே, பல்லவியை பார்க்க, அவளும், பைரவி அருகே அதிர்ச்சியுடன் அமர்ந்து இருந்தவள், அவனை ஏறிட்டுப் பார்க்கவே இல்லை...

மீண்டும் தலையை குனிந்து இருந்தாள்.

இவன் தான் வைத்தியர் என்று தெரிந்து இருந்தால் வந்தே இருக்க மாட்டாள் போலும்.

அவள் குழந்தையை காப்பாற்றுவது இப்போது பகல் கனவு தான் என்று தெளிவாக தெரிந்தது அவளுக்கு...

அவளை பொறுத்தவரை அவன் இரக்கமற்றவன், மோசமானவன் என்று தானே தெரியும்...

அவனது உண்மையான முகத்தை அவள் இதுவரை பார்த்ததே இல்லையே...

வைத்தியரிடம் கெஞ்சியாவது ஏதாவது செய்யலாமா? என்று இறுதி நிமிடங்களில் யோசித்தவளுக்கு இப்போது அந்த வழியும் அடைக்கப்பட்ட உணர்வு...

மேலும் தொடர்ந்த பைரவியோ, "இது என் பொண்ணு பல்லவி" என்று சொல்ல, "ஓஹ்" என்று சொன்னவனோ, "டாக்டர் எல்லாமே சொன்னார்" என்று சொல்லிக் கொண்டே, பல்லவியை பார்த்தான்...

அவள் நிமிரவே இல்லை...

சலிப்பாக தலையாட்டி விட்டு, கர்ப்பிணிகளுக்கான விண்ணப்பத்தை எடுத்தவன், "பல்லவி ரைட்?" என்று கேட்க, அதற்கு அவள் பதில் சொல்லவில்லை...

"ம்ம் பல்லவி" என்றாள் பைரவி...

அவன் புருவம் இடுங்கியது...

"உங்களுக்கு இதுல சம்மதமா?" என்று பல்லவியை பார்த்துக் கொண்டே கேட்க, "ம்ம் சம்மதம்" என்று பைரவி பதில் சொன்னாள்.

கடுப்பாகி விட்டது...

"நான் அவங்க கிட்ட கேட்டேன்" என்றான் சற்று காட்டமாக...

பைரவியோ, 'திமிர் பிடிச்சவனா இருப்பான் போல' என்று நினைத்துக் கொண்டே, "சொல்லுடி" என்றாள் பல்லவியிடம்...

"ஹான்" என்று சொல்லிக் கொண்டே ஏறிட்டு அவள் பைரவியை பார்த்த கணம், அதுவரை அவள் கண்ணில் நிரம்பி இருந்த நீர் சட்டென வழிய, வேகமாக துடைத்துக் கொண்டாள்.

கஜனின் புருவம் இடுங்கியது...

ஏதோ தவறாக பட்டது...

"எனக்கு சம்" என்று தட்டு தடுமாறிக் கொண்டு இருந்த பல்லவியை பார்த்து விட்டு பைரவியை பார்த்தவன், "வில் யூ ப்ளீஸ் ஸ்டே அவுட்?" என்று கேட்டான்.

"ஏன்?" என்று கடுப்பாக வந்தது அவள் குரல்...

"அவங்க கிட்ட பேசணும்" என்றான்.

"நான் அவ அம்மா" என்றான்...

"ஆனா அபார்ஷன் நான் தானே பண்ணனும்?" என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி...

அதற்கு என்ன சொல்லிவிட முடியும்...

வேகமாக எழுந்த பைரவியும் வெளியேறி விட, அவள் முதுகை பார்த்து விட்டு தனக்கு முன்னே இருந்த விண்ணப்பத்தை பார்த்தவன், "இப்போ நீங்க தான் பேசணும். மிஸிஸ்" என்று ஆரம்பிக்க, "மிஸ் பல்லவி பார்த்தீபன்" என்று அவள் திருந்தினாள்.

"சாரி, மிஸ் பல்லவி பார்த்தீபன்" என்று சொல்லிக் கொண்டே, "குழந்தையோட அப்பா பேர் என்ன?" என்று கேட்டான்...

சட்டென ஏறிட்டுப் பார்த்தாள்.

"ஃபோர்ம் ல நிரப்பணும்" என்று விண்ணப்பத்தை தூக்கி காட்டினான்...

"பல்லவின்னு போடுங்க" என்று சொல்ல, "ஓஹ்" என்று சொல்லிக் கொண்டே, பேனாவை விண்ணப்பத்தின் மேல் வைத்து விட்டு, கைகளை கோர்த்துக் கொண்டே, அவளை ஆழ்ந்து பார்த்தவன், "அபார்ட் பண்ணனுமா?" என்று கேட்டான்...

அவன் ஆக்ரோஷத்தை பார்த்து இருக்கின்றாள்...

மென்மையாக பேசினான்...

விசித்திரமாக இருந்தது...

கேட்ட கேள்வியில் மீண்டும் கண்ணீர், துடைத்துக் கொண்டாள்.

"தைரியமான பொண்ணுன்னு நினச்சேன்... இப்படி அழுதுட்டே இருக்க?" என்று மனதில் பட்டதை கேட்டு விட, அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "எனக்கு இந்த குழந்தை வேணும்" என்றாள்.

குரலில் அப்படி ஒரு இறைஞ்சல்...

கணவனுடன் திரும்ப சேர விரும்புகின்றாளோ என்று தான் தோன்றியது...

ஆனால் கேட்பது அழகல்ல என்று நினைத்தான்...

ஏமாற்றி இருக்கின்றான், சேர ஆசைப்படுகின்றாளே என்று சற்று காட்டமாகவும் இருந்தது...

அவள் தனிப்பட்ட வாழ்க்கை அது... கேள்வி கேட்க முடியாது...

தொண்டை வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டே, குரலை செருமியவன், "எப்போ லாஸ்ட் பீரியட் டேட்?" என்று கேட்டான்...

அவளுக்கு நினைவில்லை...

"மூணு மாசம் இருக்கும், நினைவுல இல்லை" என்றாள்.

இடையில் அதனை பற்றி எல்லாம் கவனிக்கவில்லை போலும் என்று நினைத்துக் கொண்டே, "வெல் ஸ்கான் பண்ணலாமா?" என்று கேட்க, "ம்ம்" என்று சொன்னாள்.

அவளை பார்த்து விட்டு, அருகே இருந்த மணியை அழுத்த, கதவை திறந்து கொண்டே, அவன் தாதி வந்து இருந்தாள்.

"ஸ்கான் பண்ண ரெடி பண்ணுங்க வர்றேன்" என்று சொல்ல, அந்த தாதியும் பல்லவியை அறைக்குள் அழைத்து சென்று, ஸ்கான் செய்ய அவளை ஆயத்தப்படுத்தி இருந்தாள்.

சற்று நேரத்தில் கையில் க்ளவுஸை போட்டுக் கொண்டே, அந்த அறைக்குள் நுழைந்தான் கஜன்...

அவள் அருகே நின்று கொண்டே, அவள் வயிற்றில் ஜெல்லை பூசி, அதன் மேல் ஸ்கானிங் உபகரணத்தை வைத்து, அசைத்துக் கொண்டே, அவள் அடி வயிறு வரை ஸ்கானிங் உபகரணத்தை கொண்டு சென்றவன் விழிகள் அவர்களுக்கு முன்னே இருந்த திரையிலேயே நிலைத்தது...

குட்டி குட்டி கை கால்களுடன் இருந்த குழந்தையை பார்த்துக் கொண்டே, "இட்ஸ் ஃபோர்ட்டின் வீக், பதினாலு வார வளர்ச்சில குழந்தை இருக்கு" என்று சொன்னவன் குழந்தையின் தலையளவு தொடக்கம் எல்லாவற்றையும் அளந்தான்.

பல்லவியை பார்க்கவில்லை...

விம்மலுடன் ஒரு சத்தம்...

சட்டென இப்போது பல்லவியைப் பார்த்தான்...

வாயை மூடி அழுகையுடன் படுத்து இருந்தாள்.

அவள் விழிகள் அந்த திரையில் நிலைத்து இருக்க, கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது...

அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

குழந்தையின் விம்பத்தை கண்ணீரை மறைத்தது போலும், அவளை ஒரே ஒரு கணம் தான் புருவம் சுருக்கிப் பார்த்தான்.

அதனை தொடர்ந்து, திரையையே பார்த்து இருந்தவன், எல்லாவற்றையும் பரிசோதித்து விட்டு, இதய துடிப்பைக் கேட்டான்...

அவளையும் கேட்க வைத்தான்...

"ஹார்ட் பீட் கேக்குதா?" என்றான் மென்மையாக...

தாய்மை என்றால் அவனும் உருகி விடுவான் போலும்...

விம்மலுடன் ஆம் என்று தலையாட்டினாள்...

ஒரு பெருமூச்சுடன், அவள் வயிற்றில் இருந்த ஜெல்லை டிஸ்ஸுவினால் துடைத்து விட்டு, வெளியேற, அவளும் கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியேறி வந்தாள்.

அவன் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவனோ குழந்தையின் ஸ்கானை பிரிண்ட் செய்து, கோப்பு ஒன்றில் பொருத்திக் கொண்டே, அவளை ஏறிட்டுப் பார்த்தவன், "நவ் டெல் மீ" என்றான்...

என்ன கேட்கின்றான் என்று அவளுக்கு தெரியவில்லை...

"என்ன சொல்லட்டும்?" என்று தடுமாறினாள்...

"ஊர்ல நடந்த எல்லாமே ஒதுக்கி வச்சுட்டு இங்க பேசு, அது வேற கஜன், இது வேற கஜன்..." என்றான்...

அவனை ஏறிட்டுப் பார்த்தவளோ, "எனக்கு இந்த குழந்தை வேணும்" என்றாள்.

"ம்ம், டைவர்ஸ் கிடைக்க போகுதுன்னு கேள்விப்பட்டேன்" என்றான்...

"எனக்கு குழந்தை தான் வேணும்... வேற யாரும் வேணாம்" என்றாள்.

சட்டென அவன் விழிகளில் ஒரு மெச்சுதலான பார்வை...

கணவனுக்காகத் தான் குழந்தை வேண்டும் என்று கேட்கின்றாளோ என்று நினைத்தவனுக்கு அவள் பேச்சு விசித்திரமாக இருந்தது...

பிடித்தும் இருந்தது...

"குட்" என்று சொல்லிக் கொண்டே குரலை செருமியவனோ, "பட் ஒரு விஷயம் இங்க இருக்கு... என் கிட்ட பேசி எந்த யூசும் இல்லை... நான் அபார்ட் பண்ண முடியாதுன்னு சொல்லிடுவேன்... ஆனா வேற டாக்டர்ஸ் ஊர்ல நிறைய இருக்காங்க... சோ, நீ பேச வேண்டியது உன் வீட்ல தான்" என்றான்...

அவள் எப்படி பேசுவாள்?

தலையை தாழ்த்திக் கொண்டே யோசித்தாள்.

அவன் சொல்வது சரி தான்...

அவளுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை அவள் தந்தை...

அவரே வேண்டாம் என்று சொல்லும் போது என்ன செய்ய முடியும்?

மௌனமாக இருந்தவளிடம், "உனக்கு பேச தயக்கமா இருந்தா, வீட்ல பேசுறதுக்கு வாய்ப்பு வேணும்னா நான் உருவாக்கி தர்றேன், கலகம் பிறந்தா தான் வழி பிறக்கும், கலகத்தை நான் உருவாக்குறேன், வழியை நீ தேடிக்கோ..." என்றான்...

அவனை புரியாமல் இக்கணம் புருவம் சுருக்கிப் பார்க்க, அவளை பார்த்துக் கொண்டே பெல்லை அழுத்தினான்...

தாதியும் உள்ளே எட்டிப் பார்க்க, "வெளியே உட்கார்ந்து இருக்கிற பல்லவியோட அம்மாவை வர சொல்லுங்க" என்றான்...

தாதியும் விஷயத்தை பைரவியிடம் சொல்ல, அவளும் உள்ளே வந்து பல்லவி அருகே அமர்ந்தவள், "டாக்டர் எப்போ அபார்ட் பண்ணலாம்?" என்று தான் கேட்டாள்.

அவனும் இரு கைகளையும் கோர்த்துக் கொண்டே, பைரவியை ஆழ்ந்து பார்த்தவன், "வெல் மிஸிஸ் பார்த்தீபன், உங்க பொண்ணுக்கு அபார்ட் பண்ண கொஞ்சமும் இஷ்டம் இல்லை... அவங்க இஷ்டம் இல்லாம அபார்ட் பண்ணுறது சட்டப்படி குற்றம்" என்று சொல்ல, பைரவி அதிர்ந்து அருகே இருந்த பல்லவியை பார்க்க, அவள் தலையை தாழ்த்திக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

"லெட் மீ ஃபினிஷ்" என்றான்.

இப்போது கஜனை பைரவி பார்க்க, "அதையும் மீறி பல்லவியை அபார்ட் பண்ண ஃபோர்ஸ் பண்ணுனா, ஒரு வெல் விஷரா நானே உங்க மேல கேஸ் போடுவேன்" என்றானே பார்க்கலாம்...

தூக்கி வாரிப் போட்டது பைரவிக்கு...

அவன் விழிகளில் கொஞ்சமும் பயம் இல்லை...

எவ்வளவு மிரட்டலாக பேசுகின்றான்...

பார்த்தீபன் என்று சொன்னாலே தெரியாத யாரும் அந்த ஊரில் இருக்க மாட்டார்கள்...

அர்ஜுன் முன்னே விரலை அசைக்க கூட யாருக்கும் தைரியம் இல்லை...

அடித்து நொறுக்கி விடுவான்...

அப்படி பட்ட செல்வாக்கு மிக்க இடத்தில் இருந்து வருபவளை மிரட்டுகின்றான்...

அதுவும் இனியன் தலைமை அதிகாரியாக இருக்கும் வைத்தியசாலையில் வேலை செய்து கொண்டே இப்படி அவன் பேசுவது பைரவிக்கு பேரதிர்ச்சி தான்.

சட்டென அவன் பெயர்ப் பலகையில் அவன் பெயரைப் பார்த்தாள் பைரவி...

அவனே அதனை அவளை நோக்கி நகர்த்தியபடி , "டாக்டர் கஜன் சக்திவேல்" என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்...

அந்த சக்திவேல் என்கின்ற பெயர் அவளுக்கு உறுத்தியது...

அவனை முறைத்துக் கொண்டே எழுந்து கொள்ள, பல்லவிக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை...

கஜனை பற்றி பைரவிக்கு தெரியாமல் இருக்கலாம், பல்லவிக்கு தெரியுமே...

அவனை ஒரு கணம் மென்மையாக பார்க்க, அவனும் ஒரு தலையசைப்புடன் அவளுக்கு விடை கொடுத்தான்...

பைரவி அவனை முறைத்து விட்டு விறு விறுவென வெளியேற, பல்லவியும் வெளியேறி சென்றாள்.

நடந்து செல்லும் கணம், பல்லவியை திரும்பிப் பார்த்த பைரவியோ, "என்னடி சொன்ன?" என்று ஆத்திரத்துடன் கேட்க, அவள் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்தபடியே நடந்து வர, அவளை முறைத்து விட்டு, வெளியேறி வந்தவள் அங்கே நின்ற அர்ஜுனின் காரில் ஏறிக் கொள்ள, பல்லவியும் பின்னால் ஏறிக் கொண்டாள்.

அர்ஜுனோ, "எல்லாம் ஓகே யா?" என்று பைரவியிடம் கேட்க, "வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்றாள்.

கார் ஓட்டும் கணத்தில் தேவை இல்லாத பேச்சுக்கள் பேச கூடாது என்று பார்த்தீபன் எப்போதுமே பைரவியிடம்

சொல்வான்...

கார் ஓட்டுபவர்களது கவனம் சிதறும் என்று சொல்லி இருக்கின்றான்.

அதனாலேயே இப்போது வாயை இறுக மூடிக் கொண்ட பைரவியோ, "வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்று சொல்லி விட்டாள்.

அர்ஜுனுக்கு விஷயம் தெரிந்தால் கோபப்படுவான் என்று அவளுக்கும் தெரியும்...

காரை நிறுத்தி விட்டு, ஹாஸ்பிடல் உள்ளே கஜனை தேடி சென்றாலும் சென்று விடுவான்...

அவனை பற்றி அறிந்தே அவள் மௌனமாக அமர்ந்து இருக்க, பல்லவியோ கண்ணாடியூடு வெளியே பார்த்தபடி தான் அமர்ந்து இருந்தாள்.

வீட்டுக்கு சென்றால் பிரச்சனை வரும் என்று புரிந்தது...

அது தான் அவளுக்கும் தேவை...

கஜன் சொன்ன போல, கலகம் பிறந்தால் தானே வழி பிறக்கும்...

பார்த்தீபனிடம் கெஞ்சியாவது இந்த குழந்தையை சுமக்க வேண்டும் என்கின்ற எண்ணம் தான் அவளுக்கு...

கண்ணில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது...

அடிக்கடி துடைத்துக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அவர்கள் வண்டியும் வீட்டை அடைந்து இருந்தது.
 
Top