ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நானே வருவேன் - கதை திரி

Status
Not open for further replies.

pommu

Administrator
Staff member
நானே வருவேன் - அத்தியாயம் 1

அந்த மாலை வேளையில் ஒரே சனநடமாட்டமாக இருந்தது அந்த வைத்தியசாலை. அப்போது தான் மயக்கத்தில் இருந்து விழித்தான் மதன். அவன் கண் விழித்ததுமே "டாக்டர் பேஷண்ட் கண் விழிச்சாச்சு" என்று நர்ஸ் படங்களில் வருவது போல கத்திக் கொண்டு ஓட , டாக்டரும் வழமையான டயலாக் "இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில் " என்று சொல்லிக் கொண்டு மதனிடம் வந்தார். அவனும் சலிக்காமல் "நான் எங்கே இருக்கேன்?' என்று அதே பழைய டயலாக்கை கேட்க , "யூ ஆர் பெர்பெக்ட்ல்லி பைன் மிஸ்டர் மதன், ஆக்சிடென்ட் பட்டு உங்களுக்கு மேஜர் ஆபரேஷன் முடிஞ்சிது. பிழைக்க மாட்டிங்க என்று நாங்க நினைக்க, நீங்க பிழைச்சுடீங்க...இனி நீங்க ஆடலாம் பாடலாம், " என்று சொன்னார். அவனும் "ஓஹ் தன்க் யூ டாக்டர். எனக்கு ஆக்சிடென்ட் வரை நினைவிருக்கு, அதுக்கப்புறம் என்னாச்சுன்னு தெரில" என்று சொன்னவன் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.
அவன் மனமோ தனது காதலியையே தேட "என்னை தேடி யாருமே வரலையா?" என்று ஏக்கமாக கேட்டான். உடனே டாக்டர் "வாய் நாட், உங்க லவர் உங்க கூட தான் இருந்தாங்க, இப்போ தான் வெளிய போனாங்க" என்று சொல்லி முடிக்க முதல் "மதன்" என்று கத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள் ஜனனி.
அவர்கள் இருவரும் அணைத்துக் கொண்டதை பார்த்த டாக்டரும் " காதலர்கள் சேர்ந்திட்டாங்க நாம அவங்களுக்கு தனிமை கொடுப்போம் " என்று சொல்ல அனைவரும் விலகி சென்றார்கள் .. அனைவரும் சென்றதுமே தனித்து விடப்பட்டது என்னவோ மதனும் ஜனனியும் தான் " ஐ மிஸ் யூ ஜனனி " என்று அவன் அவளது முகத்தை தாங்கி இதழ் மீது இதழ் பதிக்க வர அவளோ " மதன் " என்று அலறினாள். அவனும் உணர்ச்சியெல்லாம் வடிந்து "என்னடி?? " என்று கேட்க " வரும் போது நாயர் கடையில முட்ட பப்ஸ் சாப்பிட்டேன் .. இப்போ வயிறு கலக்குது " என்றாள் .. அவளை முறைத்த அவன் " நான் சாக கிடக்கிற நேரம் உனக்கு முட்ட பப்ஸ்சா?? " என்று கேட்க அவளோ " ஐ அம் டாட்'ஸ் லிட்டில் பிரின்சஸ் .. எனக்கும் பசிக்கும்ல " என்றவள் " கொஞ்சம் தள்ளுடா.. என்னால முடில..விட்டா இங்க்கீயே போய்டுவேன் " என்று பாத்ரூமுக்குள் ஓடிச் சென்றாள் . அவள் பாத்ரூமுக்குள் சென்றதுமே கண் மூடி அமர்ந்தவனின் காதில் ஒரு குரல் கேட்டது. " மதன் " என்று அந்த பெண் அழைக்க கண் விழித்தவனுக்கு எதுவும் புலப்படவில்லை.. " பிரம்மையா இருக்கும் " என்று மீண்டும் கண்களை மூடிக் கொள்ள அவன் காதில் மீண்டும் அதே குரல் " மதன் " என்று அழைக்க கண்களை வெடுக்கென்று திறந்தவன் " யாரு ?? " என்று கேட்டான். அந்த குரலோ " நான் தான் வான்மதி " என்க " குரல் தான் கேட்குது.. யாரை இருக்கும் " என்றபடி கட்டிலின் கீழ் குனிந்து பார்த்தான். அங்கேயும் யாரும் இல்லாமல் இருக்க எழுந்தவனுக்கு நிற்க கூட முடியவில்லை.. " அந்த டாக்டர் என்னன்னா ஆடலாம் பாடலாம்னு சொன்னாரே..என்னால நடக்க கூட முடில " என்றவன் கெந்தி கெந்தி நடந்தபடி அங்கும் இங்கும் தேட " மதன் நான் உன் கண்னுக்கு தெரியமாட்டேன் " என்றாள் வான்மதி. " என்னது தெரியமாட்டியா ?? " என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு அவன் சுவரில் சாய்ந்துவிட அவளோ " எஸ் மதன். என் குரல் உனக்கு மட்டும் கேட்கும் " என்றாள் .. அவனுக்கோ அந்த ஏ சி யிலும் வியர்த்து வழிந்தது.. ஒருவாறு தைரியத்தை வரவழைத்தவன் " அப்போ நீ பேயா?? " என்று கேட்க அவளோ " இல்ல மதன் நான் உன் தேவதை " என்றாள் அவனோ " வாட்?? " என்று இதழ்கள் நடுங்க கேட்க . அவளோ " எஸ் மதன்... நான் உன் காதலி.. இப்போ இறந்துட்டேன் " என்க , அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. " இப்போ எதுக்கு இங்க வந்த? " என்று அவன் பயத்தில் கேட்க அவளோ " உன்னை பார்க்க தான் மதன் " என்றாள் . .அவனோபயத்துடன் கைகளை சத்தம் கேட்ட திசையில் துளாவ " உன் கூட ஒரு நாள் வாழனும் " என்று சொல்ல அவனுக்கோ மீண்டும் தூக்கி வாரிப் போட்டது.. " ஆத்தி என் கூடஅவனுக்கும் பேய் தன்னை கொன்று விடுமோ என்ற பயம் மனதின் ஓரத்தில் இருக்க " என்னது என் கூட வாழணுமா? " என்று அவன் நெஞ்சில் கை வைக்க " கமான் மதன் கிஸ் மீ " என்று சொன்னாள் வான்மதி.. " கிஸ்ஸ்ஸா?? எங்க இருக்கான்னு தேரிலேயே.. சரி ஒரு குத்து மதிப்பா பண்ணுவோம் ...இல்லன்னா நம்மள கொன்னாலும் கொன்னுடுவா " என்று நினைத்தவன் இதழ்களை குவித்து நின்றான். பாத்ரூமில் இருந்து வந்த ஜனனி " இந்த நாயர் கடை முட்ட பப்ஸ் சாப்பிட கூடாது " என்று நினைத்தபடி பார்க்க அங்கு மதனோ இதழ்களை குவித்தப்படி நின்றான் .. " இவன் என்ன பண்ணுறான் " என்று யோசித்தவள் அடுத்த கணமே அவன் வாயில் அடித்த ஜனனி " என்ன பண்ணிட்டு இருக்க?? " என்று கேட்க " ஒண்ணுமில்ல , விசில் வருதான்னு ஊதி பார்த்தேன் " என்றான்.
" அது சரி , வந்துச்சா? " என்று அவள் கேட்க " வரல " என்றான் அவன். இடையில் வான்மதியோ " இவ நல்லாவே இல்ல மதன்.. என்னை விட சுமார் தான் " என்று சொல்ல " கண்ணில படலன்னு தைரியத்துல பேசுறியா?? " என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ஜனனியோ " இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம் மதன்... பேஷியல் ஆன்டி வர சொல்லி இருக்காங்க ..நான் கிளம்பவா?? " என்று கேட்க அவனும் ஏமாற்றத்துடன் சரி என்று தலையாட்டினான். அவள் செல்வதை அவன் ஏமாற்றத்துடன் பார்க்க வான்மதியோ " அவ போறான்னு பீல் பண்ணாத மதன்.. நான் இருக்கேன்..உன் மதி " என்க, அவனோ " அது தான் என் பீலிங்.. நீ யார்னே எனக்கு தெரில .. என்னை ஏன் தொல்லை பண்ற? எனக்கு அடுத்த வாரம் கால்யாணம் .. நீ என்ன கொன்னிடாதே ப்ளீஸ் " என்றான். அவளோ " நோ மதன் ...உன் கூட வாழாம நான் போக மாட்டேன்... என் உயிரை நான் கொள்வேனா மதன்? " என்றாள். அவனோ " உன் பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனா சொன்னா புரிஞ்சுக்கோ...ப்ளீஸ் போய்டு " என்று சத்தம் வந்த திசையில் பேசிக் கொண்டு இருக்க கதவை திறந்த டாக்டர் " சம்திங் ராங்.. இவருக்கு மூளை நரம்பு ஏதும் டேமேஜ் ஆகி இருக்கும் போல " என்று பக்கத்தில் இருந்த நர்ஸிடம் சொன்னார்.
 

pommu

Administrator
Staff member
நானே வருவேன் - அத்தியாயம் 2
உள்ளே நுழைந்த டாக்டரை கண்டவன் பேசுவதை நிறுத்தி விட்டு அவரையே பார்க்க, அவரோ " மதன் , உங்களை கொஞ்சம் செக் பண்ணனும்" என்றவர் அவனை அழைத்துச் செல்ல அவனும் பின்னே சென்றான். அவனை முழுதாக பரிசோதித்தவருக்கு அவன் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பது போன்றே தோன்றியது. பெருமூச்சுடன் நர்ஸை பார்த்தவர் "ஹீ இஸ் பெர்பெக்ட்ல்லி ஆல்ரைட்" என்றபடி அவனை டிஸ்சார்ஜ் செய்ய உத்தரவிட்டார். அவனும் செக்கப் முடிய தனது அறைக்குள் வந்தவன் நேரே பாத்ரூமுக்குள் நுழைந்து தன்னை கண்ணாடியில் பார்த்தான். ஷேவ் செய்யப்படாத முகத்தில் சில சிராய்ப்புகள் மட்டுமே,அவனுக்கு இன்னும் ஒரு மவாரத்தில் கல்யாணம் என்று அடித்து சொன்னாலும் நம்பமாட்டார்கள்.

பெருமூச்சுடன் முகத்தை அடித்து கழுவியவன் , குளிப்பதற்காக போட்டிருந்த வைத்தியசாலை ஆடையை கழட்ட "மதன் " என்று மீண்டும் வான்மதி அழைத்தாள். அவனோ ஆடையை மறுபடி அணிந்தவன் "நீ இங்க தான் நிற்கிறியா? நான் குளிக்க வேணாமா?" என்று சீறினான். அவளோ "இல்ல மதன் உனக்கு கம்பெனிக்கு" என்று "சொல்ல அவனுக்கோ கோபம் எல்லை கடந்து போனது. "குளிக்கிறதுக்கு எதுக்கு கம்பெனி. கெட் அவுட்" என்க, அவளோ "மதன் என் முன்னாடி குளிக்க வெட்கமா?" என்று வெட்கமாக கேட்க அவனோ ஆக்ரோஷமாக "ஆமா வெட்கம் தான் போவியா??" என்று சீறினான். அவளும் "சரி மதன் உனக்காக வெளியே நிற்கிறேன்" என்று சொல்ல அவனோ "போய்டியா போய்டியா?" என்று மறுபடி மறுபடி கேட்க "நான் இங்க இருக்கேன்" என்று வெளியில் இருந்து சத்தம் வந்தது. அவனும் ஷேர்ட்டில் கை வைக்க போனவன் "நோ நோ இவளை நம்ப முடியாது. " என்றபடி உடையுடனேயே குளித்தான்.

வெளியே வந்தவன் முதலில் கண்டது அவன் தாயை தான். அவரோ ஓடி வந்து அணைத்துக் கொள்ள, "எப்போ ஊர்ல இருந்து வந்தீங்க? கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி தானே வரேன்னு சொன்னீங்க ?" என்று கேட்டாலும் அவன் மனம் தாயின் அருகாமையை நாடியது என்னவோ உண்மை தான். அவரோ "ஜனனி தான் நேற்று சொன்னாப்பா , நீ எப்படி இருக்க? வரும் போது பயந்துட்டே வந்தேன்" என்று சொன்னவர் குரலில் ஒரு நடுக்கம். அவனோ அவரை அணைத்து, "அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா,எங்க அப்பா?" என்க, அவரோ "ஹாஸ்பிடல் பில் கட்ட போய் இருக்கார்" என்றார். அவனோ "நானே கட்டி இருப்பேன், ஏன்மா?" என்று கேட்க அவரோ "இப்போவும் நீ அவருக்கு சின்ன குழந்தை தான் மதன்" என்றவனை அள்ளி அணைக்க "மதன் , அத்தை மெலிஞ்சுட்டாங்களே" என்றாள் வான்மதி. அவனோ "இவளுக்கு அம்மாவை முதலே தெரியுமா?" என்று யோசிக்க அவர் புடவை காற்றில் சற்று விலகியது. உடனே வான்மதி "நான் அத்தை கிட்ட ஆசீர்வாதம் வாங்குறேன் , நீங்களும் வாங்குங்க" என்று சொல்ல அவனோ "ரொம்ப மரியாதையான பேய் போல" என்று நினைத்தவனுக்கு இப்போதெல்லாம் அவள் சொன்னதை கேட்கவே மனம் ஆணையிட்டது. அவனும் காலில் விழ "என்னப்பா இது?" என்று எழுப்பி விட்டவர் "ரொம்ப நல்லா இருப்பா" என்று அவன் நெற்றியில் முத்தமிட்டார்.

அன்று மாலை தனது பிளாட்டுக்கு சென்றதுமே ஜனனி வந்து அனைவரையும் பார்த்து விட்டுச் சென்றாள். அதன் பிறகு ஒரு வாரம் அவள் கல்யாண வேலையில் மூழ்கி விட அவனும் கல்யாண வேலையில் மூழ்கி விட்டான். அதே சமயம் அவன் அருகேயே வான்மதி ஏதும் பேசிக் கொண்டு இருப்பாள். ஆனால் அம்மா அப்பா முன்னாடி பதில் சொல்ல முடியாமல் அவனும் எரிச்சலாக அமர்ந்து இருப்பான். இப்படியே நாட்கள் செல்ல அவன் திருமண நாளும் வந்து சேர்ந்தது. அன்று காலை வான்மதி "மதன், கல்யாணம் பண்ணிக்க போறியா?" என்று கேட்க அவனோ "ஆமா" என்றபடி ஆயத்தமானான். அவளும் "மதன் அப்போ நான்?" என்று கேட்க அவனோ "மதி நடக்கிறத பேசு,, எனக்கும் உன் நிலைமை புரியுது"என்றவன் சால்வையை எடுத்துப் போட அவன் அருகே ஒரு விம்மல் சத்தம். அவனோ "பேய் எல்லாம் அழுதே, எப்படி ஆறுதல் சொல்றதுன்னு கூட தெரில" என்று நினைத்தவன் பெருமூச்சுடன் ஆயத்தமாகி வெளியேறினான்.

கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்ததுமே , அவன் பின்னால் வந்த வான்மதி அழுது கொண்டே இருக்க , பேய்களின் தலைவன் அவளிடம் "இந்த பௌர்ணமிக்கு அப்புறம் உனக்கு சில சக்தி கிடைக்கும்.. அது மட்டும் உன்னால காற்றை மட்டுமே கட்டுப்படுத்த முடியும், " என்று சொல்ல அவளோ "அதுக்கு முதல் கல்யாணம் முடிஞ்சிடுமே" என்றாள்.உடனே தலைவன் "பெர்ஸ்ட் நைட் முடியாம பார்த்துக்கலாமே" என்க, அவளோ ஆமோதிப்பாக தலை ஆட்டியவள் மதன் தாலி கட்டுவதை பார்க்க முடியாமல் வெளியே வந்து நின்று கொண்டாள்.

மதனும் மேக்கப் நடுவே முகத்தை தேடும் அளவுக்கு அமர்ந்து இருந்த ஜனனிக்கு தாலி கட்டி தனது மறுபாதியாக ஏற்றுக் கொண்டான். அவர்கள் வரவேற்பும் நடந்து முடிய, வீட்டுக்கு ஜனனியுடன் வந்தவனுக்கு அன்று இரவு முதலிரவு ஏற்பாடு பண்ணப்பட்டு இருந்தது. அவனும் சாவகாசமாக கட்டிலில் படுத்திருந்து முதலிரவு கனவில் மிதந்தவன் வான்மதியை மறந்து போனான்.

அவன் கற்பனையை குலைக்கும் வண்ணமாக " மதன் என்ன பண்ண போற? " என்று அங்கு அமர்ந்து இருந்த வான்மதி கேட்க, சுய நினைவுக்கு வந்தவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. உடனே " ஐயோ இன்னைக்கு எனக்கு பெர்ஸ்ட் நைட் டி..இன்னைக்காச்சும் என்ன தனியா விடு ப்ளீஸ் " என்று சுவரை பார்த்து புலம்பிக் கொண்டு இருந்தான். உடனே அவள் " என்னை விட்டிட்டு பெர்ஸ்ட் நைட் கொண்டாட போறியா? " என்று கேட்க " அதுக்காக உன்ன வச்சுட்டா கொண்டாட முடியும்?? வெளிய போ " என்று சீறினான்.

" இல்ல மதன் நான் இங்க தான் இருப்பேன் " என்று அவள் சொல்ல " ஐயோ சின்ன வயசுல இருந்து இந்த நாளுக்காக ஏங்கி இருக்கேன். ப்ளீஸ் வெளிய போடி.. " என்று சொல்ல அந்நேரம் பார்த்து கதவை திறந்த ஜனனி அதிர்ந்து நின்றாள்.

மதனோ அதிர்ந்து போய் அவளை பார்க்க , அவளோ " மதன் டூ யூ வாண்ட் மீ டூ லீவ் ?? " என்று கேட்க " ஐயோ ஜனனி உன்ன சொல்லல " என்று அவள் கையை பிடித்து இழுத்து வந்தவனிடம் " அப்போ யார சொன்னீங்க ?? " என்று ஜனனி கேட்டாள்..

" அது... கொசுவை விரட்டுனேன் ... நீ வா " என்றவனிடம் " இவ மேக்கப் போட்டும் ரொம்ப சுமாரா இருக்கா மதன்.. " என்றாள் வான்மதி..

" பரவால்ல இவ தான் என் தேவதை " என்றவனிடம் " யார் கிட்ட தனியா பேசுறீங்க?? " என்று கேட்டாள் ஜனனி..

அவனோ சற்று தடுமாறி விட்டு " உன்னை போல தேவதைய கல்யாணம் முடிச்சதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்றேன் " என்றான்.

அவளோ " சீ " என்று அவன் மார்பில் சாய்ந்து கொள்ள அவனோ அவளை நிமிர்த்தி அவள் இதழ்களை நெருங்க " என்ன மதன் கிஸ் பண்ண போறியா?? " என்று கேட்டாள் வான்மதி.

" ஐயோ என் சின்ன வயசு ஆசை எல்லாம் மண்ணோட மண்ணாயிடுச்சே " என்று புலம்பியவன் " கொஞ்சம் டயர்ட் ஆஹ் இருக்கு ஜனனி நீ தூங்கு " என்று சொன்னவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

ஜனனியும் ஏமாற்றதுடன் லைட்டை அணைத்து விட்டு படுத்துக் கொள்ள வான்மதியோ "நானே வருவேன் இங்கும் அங்கும்" என்று பாட ஆரம்பித்து விட்டாள்.

"பேய் என்று சொன்னா பேய் பாட்டா பாடணும். " என்று நினைத்தவனுக்கு வாயை திறந்து பேசவும் முடியவில்லை. ஒரு பாட்டு முடிந்து "மன்னவனே அழலாமா ? கண்ணீரை விடலாமா?" என்று மீண்டும் பாட தொடங்க மதனுக்கு பொறுமை எங்கோ சென்று விட்டது. "அட ச்சீ வாய மூடு" என்று சீறியபடி அவன் எழ , அப்போது தான் தூக்க கலக்கத்தில் இருந்த ஜனனி "நீ வாய மூடுடா" என்று நித்திரை கண்ணில் புலம்பினாள். "ஐயோ ஐயோ ஐயோ, " என்று தலையில் அடித்தவன் மனமோ "இந்த பைத்தியத்துக்கு ,இந்த பேயே பரவாயில்ல போல" என்று நினைக்க வான்மதியோ "பாட்டு புடிக்கலையா மதன்" என்று கேட்டாள் . அவனோ "ஏற்கனவே கடுப்பா இருக்கேன். இன்னும் கடுப்பேத்தாத" என்றவன் அழாத குறையாக படுத்துக் கொள்ள "அவ்ளோ கேவலமாவா பாடுறோம்?" என்று ஆராய்ச்சி செய்ய தொடங்கி விட்டாள் வான்மதி.

அடுத்த நாள் காலையில் எழுந்த ஜனனி, பக்கத்தில் இருந்த மதனை பார்த்து புன்னகைத்து விட்டு அவன் நெற்றியில் முத்தமிட, மதனையே பார்த்துக் கொண்டு இருந்த வான்மதிக்கு வயிறு புகைய தொடங்கியது.

"என் மதனுக்கு கிஸ் பண்றியா? இன்னும் மூணு நாள் தான், ஸ்பெசல் பவர் வந்ததும் உன்னை வச்சு செய்றேன் பாரு " என்று நினைத்துக் கொண்டாள் வான்மதி. அவள் நெற்றியில் இட்ட முத்தத்தில் கண் விழித்தவன்,அருகே வந்த வான்மதி "மதன்" என்று மென்மையாக அழைக்க, அவனோ ஜனனி இருப்பதை மறந்து "என்ன மதி?" என்று தூக்க கலக்கத்தில் அலற ஜனனிக்கோ தூக்கி வாரிப் போட்டது. அவளோ"மதன், யாரு மதி?" என்று சீற பதறி கண்களை திறந்தவன் "ஐயோ உளறிட்டேனே" என்று நினைத்தபடி "ஹி ஹி உன் முகம் தான் மதி போல இருக்குன்னு சொல்ல வந்தேன்" என்றான். ஜனனியோ கண்ணாடியை பார்த்து "என் பிரெண்ட்ஸ் என் முகத்தை பார்த்து தேங்காய் மூஞ்சுன்னு தானே சொல்வாங்க, நீங்க சொல்றத பார்த்தா வட்டமா இருக்கா?" என்று ஆராய்ச்சியோடு கேட்க பக்கத்தில் இருந்த வான்மதி சிரித்தாள்.

மதனும் சிரிப்பு வந்த திசையை பார்த்து முறைத்தவன் "அதுங்களுக்கு கண் இல்ல ஜனனி" என்க, வான்மதியோ "உங்களுக்கு தான் கண் இல்ல மதன்" என்றாள். அவனோ மானசீகமாக நெற்றியில் அடித்தபடி "எனக்கு தூக்கம் வருது" என்று படுத்துக் கொள்ள , கண்ணாடியை பார்த்த ஜனனி, "நம்ம மூஞ்சா சந்திரன் போல இருக்கு? நம்ப முடிலயே" என்று கன்னத்தை தடவிக் கொண்டாள்
 

pommu

Administrator
Staff member
நானே வருவேன் - அத்தியாயம் 3

அதன் பிறகு குளிக்கச் சென்ற ஜனனி, சமயலறைக்குள் நுழைய அங்கு மதனின் தாய் சமைத்துக் கொண்டு இருந்தார். அவரிடம் "குட் மார்னிங் அத்தை" என்க, அவரோ "வாம்மா, காபி போடவா?" என்று கேட்க அவளும் "ம்ம்" என்றபடி அங்கு அமர்ந்தாள். அவளுக்கு காபி போட்டுக் கொண்டே "நல்லா சமைப்பியாம்மா?" என்று கேட்க அவளோ "ம்ம் சமைப்பேன் அத்தை, நூடில்ஸ் போடுவேன், சாண்ட்விச் செய்வேன், அப்புறம் முட்டை பொரிப்பேன் " என்று சொல்ல அவர் முகமோ சுருங்கிப் போனது. கஷ்டப்பட்டு தன் முகபாவத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர் "இந்த சோறு கறி எல்லாம்" என்று கேட்க , அவளோ திரு திருவென முழித்தவள் "இதுவரைக்கும் பழக்கம் இல்ல, இனி பழகிக்கலாம்" என்றாள்.

மதனின் தாயோ அதைக் கேட்டு மயங்கி விழாத குறையாக "என் பையன நீ தான் காப்பாத்தணும் முருகா" என்று வேண்டிக் கொண்டவர். இரு காபி கப்புகளை அவளிடம் நீட்ட அவளோ அதை வாங்கியபடி "உங்களுக்கு ஈவினிங் நான் ஒரு ஸ்பெஷல் காபி போட்டு தரேன் அத்தை" என்றபடி அதை மதனிடம் கொண்டு சென்றாள். மதனோ குளியலறைக்குள் இருக்க, அங்கே அமர்ந்து காபியை அருந்தியவள் "எதுக்கும் அந்த காபி போடுறதுக்கு இன்னொரு தடவை யூடியூப் பார்த்துடனும், இன்னைக்கு காபி போடுறோம் அத்தையை கைக்குள்ள போடுறோம்" என்று நினைத்தவள் வீடியோ பார்க்க தொடங்கினாள்.

குளித்து விட்டு இடையில் டவலுடன் வந்த மதனைப் பார்த்து வெட்கப்பட்ட ஜனனி "காபி இங்க இருக்கு மதன்" என்று சென்றுவிட , அவனோ அவள் முதுகை மெல்லிய சிரிப்புடன் பார்த்துக் கொண்டே தலையை துவட்டினான். உடனே "க்கும் க்கும் நான் இங்க தான் இருக்கேன்" என்று வான்மதி குரல் கொடுக்க, "ஒரு ரொமான்ஸ் கூட பண்ண முடில" என்று நினைத்த மதனுக்கு உணர்வெல்லாம் வடிந்து போக, "ஹையோ ஹையோ " என்று வெளிப்படையாகவே நெற்றியில் அடித்தான். வான்மதியோ "மதன், வலிக்க போகுது," என்று சொல்ல "ரொம்ப தான் அக்கறை " என்று முணுமுணுத்தவன் காப்பியை கடுப்பாகவே அருந்த தொடங்கினான்.

அன்றைய சமையல் மதனின் அம்மாவே முடித்து விட, ஜனனியோ ஒன்றும் தெரியாத டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் ஆக இருந்த போதிலும் அவள் கொஞ்சும் பேச்சினால் மதனின் தந்தையையும் தாயையும் கவர்ந்தது என்னவோ உண்மை தான். அன்று மதியம் சாப்பிட்டு விட்டு மதன் உள்ளே நுழைய, பின்னால் வந்த ஜனனி, கதவை தாளிட்டு விட்டு அவனை பின்னால் இருந்து இறுக அணைத்துக் கொண்டாள். அவனுக்கும் அவள் ஸ்பரிசத்தில் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் ஓட, வயிற்றில் இருந்த அவள் கைகளை பிரித்தெடுத்து அவள் பக்கம் திரும்பியவன் அவள் முகத்தை தாங்கி நெற்றியில் இதழ் பதித்தான். உடனே வான்மதி "மதன் என்ன பண்ண போற?" என்று ராகமாக கேட்க "ஐயோ கடவுளே, கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலன்னு இத தான் சொல்வார்களா?" என்று முணு முணுத்தவன் ஜனனியின் முகத்தை பார்த்தான். அவள் பார்வையில் ஒரு எதிர்பார்ப்பு, ஆனால் அதனை பூர்த்தி செய்ய முடியாத அளவில் அல்லவா அவன் இருக்கிறான் ?

பெருமூச்சுடன் "கொஞ்சம் தூங்கலாமா ?" என்று கேட்க அவள் முகமோ வெளிப்படையாகவே ஏமாற்றத்தைக் காட்டியது. வாய்க்குள் வான்மதிக்கு திட்டியவன் அப்படியே வந்து தூங்கி விட ஜனனியும் சோகமாக அவன் அருகே படுத்துக் கொண்டாள்.

இருவரும் தூங்கி எழுந்ததும் , முதலில் எழுந்து வெளியே சென்ற ஜனனி நேரத்தை பார்த்தாள் , மணி மாலை நான்கரையை காட்ட "அத்தை மாமாக்கு காபி போட்டு கொடுக்கலாம்" என்று நினைத்தபடி சமயலறைக்குள் நுழைந்தவள் காபி போட ஆயத்தமானாள். அவள் போட ஆயத்தமானது உங்க ஊர் எங்க ஊர் காபி அல்ல உலகமே வியந்து பார்த்த டல்கோனா காபி.

காபி தூள் சீனி, சுடுநீர் என்று அனைத்தையும் எடுத்து பாத்திரத்தில் போட்டவள், அவள் பார்த்த வீடியோ போல அடி அடி என்று கலந்து அடிக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் பேஸ்ட் போல அந்த மிக்ஷர் வந்து சேர குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்து க்ளாசில் ஊற்றி அந்த பேஸ்டை மேலே போட்டு விட்டு "டல்கோனா காபி ரெடி" என்று கூறியபடி வெளியே வந்தாள். அங்கு அப்போது தான் தூங்கி எழுந்த மதனின் தாயும் தந்தையும் இருக்க, சற்று தள்ளி இருந்த மதன் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான். அவளோ "எல்லாருக்கும் ஸ்பெஷல் காபி கொண்டு வந்து இருக்கேன்., மதன் போட்டோ எடுங்க, டல்கோனா காபி வித் அத்தை என்று ஸ்டேட்டஸ் ஆஹ் போடணும்" என்று சொல்ல அவனும் "இந்த சமைக்க தெரியாத டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் உடைய தொல்லை தாங்கல " என்று நினைத்தாலும் மனைவி சொன்னதை செய்து விட்டே தனது இருக்கையில் வந்து அமர்ந்தான்.

அதே சமயம் , அவள் கொண்டு வந்த கப்புகளை பார்த்த மதனின் தாய் "காபி சூப்பரா போடுவா போலவே, பார்க்கவே செமயா இருக்கே" என்று நினைத்தபடி அவள் கொடுத்ததை எடுத்துக் கொண்டார்.

உடனே அவள் "எல்லாரும் ஸ்டேட்டஸ் ஆஹ் போடுறாங்க அத்தை, இன்னைக்கு தான் நான் செய்தேன். குடிச்சு பார்த்து சொல்லுங்க" என்க, அதை வாயில் வைத்த மதனின் தாயின் முகம் கசப்பு தாங்க முடியாமல் சுருங்கி போனது. கண நேரத்தில் முகத்தின் உணர்வுகளை மறைத்தவர் பக்கத்தில் இருந்த கணவனை பார்க்க அவரோ வரும் வாந்தியை அடக்கியபடி உட்கார்ந்து இருந்தார். அவர் மனமோ "இந்த பேஸ்டை பார்த்தா மைண்ட் எங்கேயோ போகுதே" என்று நினைத்துக் கொண்டது.

மதனோ தாய் தந்தையை பார்த்துவிட்டு தனது கையில் இருந்த காபியையும் யோசனையுடன் பார்த்தான். உடனே ஜனனி "அத்தை எப்படி இருக்கு?" என்க "ம்ம்,சூப்பர்" என்று தழு தழுத்த குரலில் சொன்னவர் தனது மகனின் எதிர்காலத்தை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார். கொடுத்த காபியை குடிக்காமல் உட்கார்ந்து இருந்த மதனைப் பார்த்த ஜனனி "நீங்க குடிக்கலையா மதன்?" என்று கேட்க அவனோ "கொஞ்ச நேரம் போகட்டுமே" என்றான் வலுக்கட்டாயமாக சிரித்தபடி.

"ஓகே.. இன்னைக்கு நைட் நான் தான் சமையல் " என்ற ஜனனி சமயலறைக்குள் சென்று விட, மதனின் தாயோ அவள் போகும் வரை காத்து இருந்தவர் "ஒரு வேலைக்காரி வைடா, முடில" என்றார் அழும் குரலில். மதனின் தந்தையோ ஒரு படி மேலே போய் "இன்னைக்கே ஊருக்கு கிளம்பலாம், நமக்கு உசிரு முக்கியம் " என்க, மதனோ "காபி அவ்ளோ கேவலமாவா இருக்கு?" என்று நினைத்துக் கொண்டான். அடுத்த கணமே குளியலறைக்குள் அடுத்தடுத்து நுழைந்த மதனின் தாயும் தந்தையும் காபியை ஊற்றி விட்டு வெளியே வந்தவர்கள் அறைக்குள் நுழைந்து ஊருக்கு போக ஆயத்தமானார்கள்.

மதனோ கையில் இருந்த காபியை பார்த்தவன் "இந்த விஷ பரீட்சை வேணாம்" என்றபடி காபியை குளியலறைக்குள் ஊற்றி விட்டு வெளியே வர, அங்கு ஊருக்கு போக பெட்டியுடன் ஹாலுக்குள் வந்து அமர்ந்து

இருந்தார்கள் அவன் பெற்றோர்.

"இவ்வளவு சீக்கிரமவா?." என்று அவன் நினைத்தவன் "ஜனனி" என்று அழைக்க "வரேன் மதன்" என்றபடி சமயலறையில் இருந்து வெளியே வந்தாள் ஜனனி.

பெட்டிகளுடன் ஆயத்தமாகி இருந்த மதனின் பெற்றோரை பார்த்தவள் "எங்க போக போறீங்க?"என்று கேட்க மதனின் தந்தையோ "ஊருல முக்கியமான ஒரு வேலை இருக்கு, நாங்க அவசரமா கிளம்புறோம்மா" என்றார். அவளோ சோகமாக "சரி மாமா, என்ன ஒரு வருத்தம் என் சமையலை சாப்பிடாம கிளம்புறீங்க" என்று சொல்ல மதனின் தாயோ "அதுக்கென்னம்மா இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன்" என்க, அவர் கணவனோ "உனக்கு தைரியம் ஜாஸ்திடி" என்று நினைத்துக் கொண்டார். இருவரும் கிளம்பியதும் அறைக்குள் வந்த மதனிடம் "ஹா ஹா, காபி கொடுத்தே விரட்டி விட்டுட்டா"என்று வான்மதி சிரிக்க, "உன்னை கொல்ல போறேன் பாரு, இப்போ எதுக்கு கேக்க பெக்கன்னு சிரிக்கிற? வெளியே போ" என்று சீற அப்போது தான் அறைக்குள் நுழைந்த ஜனனியோ தனியே சுவரைப் பார்த்து பேசிக் கொண்டு இருந்த மதனை பார்த்து கொஞ்சம் அதிர்ந்து போய் விட்டாள்.

"இவர் ஏன் அடிக்கடி தனியா பேசுறார்? ஒரு வேளை ?" என்று நினைத்தவள் "கடவுளே அப்படி மட்டும் இருக்க கூடாது" என்று வேண்டிக் கொண்டபடி "மதன்" என்று அழைக்க, "ஐயோ பார்த்துட்டாளா?" என்று நினைத்தவன் "சொல்லு ஜனனி" என்றான் பதட்டத்தை முகத்தில் காட்டாது. அவளோ "இப்போ யார் கூட பேசிட்டு இருந்தீங்க?" என்று கேட்க "அது, " என்று தடுமாறியவன் "சும்மா, டிக்டாக் செய்ய ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருந்தேன்"என்றான். அவனை ஜனனி மேலிருந்து கீழ் பார்த்த சந்தேகப்பார்வையே அவன் அவளை நம்பவில்லை என்று உரைத்தது.


 

pommu

Administrator
Staff member

அன்று இரவு சமைக்கிறேன் என்று அவள் செய்த அளப்பறையில் அடுத்த நாளே ஒரு வயதான பாட்டியை சமையல் வேலைக்கு அமர்த்தி இருந்தான் மதன்.

ஒரு வாரம் திருமணம் முடிந்து வேலைக்கு லீவ் போட்ட நிலையில் அவன் ஜனனியுடன் இருந்தானோ இல்லையோ இருபத்து நான்கு மணி நேரமும் வான்மதியுடன் தான் இருந்தான். ஆக்சிடென்ட் பட்டதால் உடல் சோர்வு என்று ஜனனியை தீண்டாமல் தள்ளிப் போக, அவளுக்கும் நாளுக்கு நாள் ஏமாற்றம் அதிகமாகி கொண்டே போனது. அதே சமயம் வான்மதிக்கும் விஷேட சக்திகள் அடுத்தடுத்த வந்த பௌர்ணமி நாளில் கிடைத்து இருந்தது. அவளுக்கும் தெரியவில்லை தனக்கு என்ன என்ன பவர் கிடைத்து இருக்கிறது என்று.

கிடைத்த சக்திகளை பரிசோதிக்க நினைத்தவளுக்கு முதலில் கண்ணில் பட்டது வேலைக்கு சேர்ந்த வயசான பாட்டி தான். அன்று காலை எழுந்தபடி சமையலறையை நோக்கி வந்தான் மதன். அவன் ஜனனியை விட்டு விலகி போனாலும் அவனை மீறி அவள் மேல் மோகம் எல்லை கடந்து போவது என்னவோ உண்மை தான்.

சமயலறையில் அழகு பதுமையாக நின்று இருந்தாள் ஜனனி.. சிவப்பு நிற புடவையில் நெற்றி நிறைய குங்குமம் வைத்து கழுத்தில் புது தாலியுடன் நின்றவளை பின்னால் சென்று அணைத்த மதன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான். அவளோ அப்படியே நின்றிருக்க அவளை தன்பக்கம் திரும்பியவன் " செம அழகா இருக்க " என்று சொன்னபடி அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

மேலும் அவள் நாசியை தீடியவன் அப்படியே கீழிறங்கி அவள் கழுத்தில் முகம் புதைத்து " என்னடி இப்படி இருக்க? " என்று கிறக்கமாக சொன்னவன் அவள் இதழில் இதழ் பதிக்க போன சமயம் இருவர் இதழ் நடுவிலும் ஒரு கை வந்து தடுத்தது.. மதனோ எரிச்சலுடன் திரும்பி பார்த்தவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏன் என்றால் அங்கு பத்திரகாளியாக நின்று இருந்தது ஜனனியை தான். " ஐயோ " என்று சொன்னவன் திரும்பி அணைத்து இருந்த பெண்ணை பார்க்க அங்கு இருந்தது அவர்கள் வீட்டில் வேலை செய்யும் வயதான பாட்டி. அவரோ அவன் அணைத்த நேரத்தில் மூர்ச்சையாகி மயங்கியவர் அப்படியே உணர்வின்றி அவன் மேல் சாய்ந்து நின்றார்.

உடனே ஜனனி " ச்ச மதன் என்ன கண்றாவி இது...நீங்க இப்படி கீழ்தரமா நடந்துபீங்கனு நினைக்கவே இல்ல.. அதுவும் மயங்கி இருக்கிற பாட்டிக்கு முத்தம் கொடுப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல " என்று சீற அங்கு இருந்த வான்மதி கிளுக்கி சிரித்தாள். அவனோ ஆவேசமாக மேலே பார்த்தவன் " எல்லாம் உன் வேலை தானா? " என்று சீற ஜனனியோ " இங்க நான் பேசிட்டு இருக்கேன்..சீலிங்கை பார்த்து யார் கூட பேசுறீங்க?? " என்று கேட்க அவனோ " ஐயோ ஜனனி சொன்னா கேளு.. " என்று தடுமாறியவனுக்கு உடனே ஒரு ஐடியா பிறந்தது.

அடுத்த கணமே " பாட்டிக்கு மூச்சு கொடுக்க தான் ஜனனி .மயங்கிட்டாங்க தானே " என்க , ஜனனியோ " ஐயோ மதன் ஐ அம் சாரி..நான் கூட தப்பா நினைச்சிட்டேன் " என்று சொன்னவள் பக்கத்தில் இருந்த நீரை எடுத்து அவர் முகத்தில் தெளிக்க அவனும் " பாட்டி பாட்டி " என்று அழைத்தான்.

கண் விழித்தவர் அவன் அணைப்பில் இருந்து விடுபட போராட அவனும் அவரை விட்டான். அவனை மேலிருந்து கீழ் பார்த்தவர் பக்கத்தில் நின்ற ஜனனியிடம் " புருஷனை காயபோடாதம்மா?? " என்று சொல்லி விட்டு வெளியேற அது ஜனனிக்கு புரியவில்லை.. ஆனால் மதனுக்கு தெளிவாக புரிய " ஷீட் " என்றுதனது தலையிலேயே அடித்துக் கொண்டான். ஜனனியோ யோசித்தபடி நின்றவள் " நான் எங்க மதன் உங்கள காய போட்டேன் ..நீங்க என்ன துனியா காயபோடுறதுக்கு?? லூசு பாட்டி " என்று கை தட்டி சிரிக்க ..அவனோ " ஆமா லூசே தான் " என்று சொல்லி வலுக்கட்டாயமாக சிரித்தவன் வான்மதியின் சத்தம் கேட்ட திசையை பார்த்து முறைக்கவும் தவறவில்லை..


ஹாய் நண்பர்களே

"நானே வருவேன்"- கதைக்கான கருத்துக்களை இங்கே பதியுங்கள்

பொம்மு

 
Status
Not open for further replies.
Top