ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தூரிகையின் நிகரிலன் - கதை திரி

Status
Not open for further replies.

Madhusha

Well-known member
Wonderland writer
ஹாய் ப்ரண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.. என்னோட மற்ற கதைகளைப் போல் தூரிகையின் நிகரிலன் கதைக்கும் உங்களோட அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. முதல் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்..

தூரிகா 1


சலசலவென மழை பெய்து கொண்டிருக்க சேலையை தூக்கி நடந்தவளின் முகத்திலோ அப்பட்டமான எரிச்சலை காட்டியது.. "ச்சே. இந்த மழை இப்போ தான் பெய்யணுமா??.. இர்ரிட்டேட்டிங்" என புலம்பியவாறே வந்தவளை டீக்கடையில் நின்றிருந்த இரு கண்கள் விழுங்கும் பார்வையில் பார்த்ததை அறியாமலே காலேஜ் காம்பஸிற்குள் உள்ளே நுழைந்தாள்…


காலேஜிற்குள்ளே நுழையும் போதே மழை விட்டிருந்தது.. சற்று வெயிலுடன் மிதமான காற்றும் வீச, குளிரோ உடலை தழுவ.. "ஊப்ப்ப" என தன் மூச்சுக்காற்றை வெளியிட்டவள்.. ஸ்டாஃப் ரூமிற்குள் உள்ளே நுழைந்தாள்..


உள்ளே நுழைந்தவளை எதிர்கொண்டது அவளுடன் வேலை செய்யும் மானசா… "என்ன மிஸ்.தூரிகா இப்டி தெப்பமா நனைஞ்சிட்டு வந்திருக்கீங்க??" என்றவளை சலிப்பாக பார்த்தவள்..


"எல்லாம் இந்த பிரின்சியால வந்தது.. இன்னைக்கு இந்த பங்க்ஸன் வைக்கலைன்னு யார் அழுதா??" என சிடுசிடுத்தவாறே பிரின்சிபால் அறையை நோக்கி சென்றாள்..


அங்கு நுழைந்தவளை எதிர்கொண்டது "தான் தான் உலகத்திலேயே பேரழகி என்பதை காட்டுவதற்காக 2,3 கோட்டிங் அடித்து தன்னுடைய 35 வயதை குறைப்பதற்காக பெரும் போராட்டம் நடத்தி முதிர் கன்னிகை ஆனந்தி.. ***** கல்லூரியின் தாளாளர்..


"குட்மார்னிங் மேம்" என சொல்லி முடிப்பதற்குள்..


"மிஸ்..தூரிகா இது தான் காலேஜ் வர்ற டைம்மா.. பத்து நிமிஷம் லேட்.. ஓஹ்.. ஹாட்.. இப்போ நான் என்ன பண்ணுவேன்.. சீப் கெஸ்ட் ஆன் த வே தூரிகா" என புலம்பிக்கொண்டு சென்றவரை பார்த்து உதட்டை சுழித்தவள்..


"ஏதோ அரை வயசுக்கிழவன் வர போறான் போல.. அதான் மேடம் தூக்கல் மேக்கப்புல போகுது" என முணு முணுத்தவாறே வெளியே சென்றவள்.. அங்கு காம்பவுண்டில் நின்றிருந்த போலீஸ் போலீஸ் வாகனத்தை கண்கள் இடுங்க பார்த்தாள்..


"போலீஸ் ஜீப் வந்திருக்கு.. என்னவா இருக்கும்??" என யோசனையுடன் ஆடிட்டோரியத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவளை, பிரின்சியின் "மிஸ்..தூரிகா" என்ற குரலில் திரும்பியவள்.. ஆனந்தியை நோக்கி வேண்டா வெறுப்பாக சென்றாள்.. "சொல்லுங்க மேடம்" என்றவளின் கையில் அழகிய சிகப்பு நிற பொக்கையை கொடுத்தவர்.. "இதை சார்க்கு கொடுத்து வெல்கம் பண்ணு" என்றவரை உள்ளுக்குள் ஆயிரம் நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை பண்ணியவள்…


"வெல்கம் சார்" என நிமிர்ந்து பார்த்தவளின் கண்களோ அனலை கக்கியது.. "இவன் எங்கே இங்கே.. பொறுக்கி" என கடுகடுத்த முகத்துடன்.. வேண்டாவெறுப்பாக அவன் கையில் பொக்கையை திணித்தவளின் கைகளை வருடிவிட்டான் எதிரில் நின்றிருந்தவன்.. பட்டென கையை உதறியவள் வேகமாக உள்ளே நுழைய.. அவளை தொடர்ந்து உள்ளே நுழைந்தான் நிகரிலன்..


நாகர்கோவில் ஊரின் சட்ட, ஒழுங்கினை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஏசிபி..நிகரிலன்.. மேடையில் அவனை வரவேற்று, சில கலை நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுகளும் நடைபெற்றது.. நிகரிலனை பேச அழைக்க.. எந்தவித பந்தா இல்லாமல் எழுந்து நின்றவன்.. ஆயிரம் பேரின் மத்தியில் ஒருத்தியை மட்டுமே பார்வையால் விழுங்கி, கண்களாலேயே கபளீகரம் செய்து கொண்டிருந்தான்..


மைக்கின் முன்னால் நின்றவன்.. காலேஜை பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் ஓரீரு வார்த்தைகள் பேசியவன்.. உரையாடலை முடிக்கும் வேளையில் "மிஸ்ஸஸ்.தூரிகா" என கம்பீரமாக ஒலித்த வார்த்தையில் ஆடிட்டோரியமே ஒரு நிமிடம் நிசப்தமாகியது… அனைவரின் விழிகளும் ஒருத்தியை நோக்க… அவளோ ஸ்டேஜில் கம்பீரமாக நின்றவனை முறைத்துக் கொண்டிருந்தாள்…


கண்களில் அனல் கக்க பார்த்தவள் மெதுவாக ஸ்டேஜை நோக்கி செல்ல.. சிறிது தயக்கமும், அனைவரையும் எப்படி எதிர்கொள்வோம் என்கிற பயத்துடன் படபடப்பாய் கீழுதட்டை அழுந்தப் பற்றிக் கொள்ள.. அது யார் கண்ணில் சிக்கியதோ.. ஆயிரம் பேர்க்கு மத்தியில் நிற்கும் அவனின் கண்களில் தப்பாமல் சிக்கியது…


அவள் இதழ்களை தாபத்துடன் பார்த்து எச்சில் முழுங்கியவன்.. "கொல்லுறாளே" என முணுமுணுத்தவாறே வெளியில் விரைப்பாக நின்றிருந்தான்..


இதழ்களை விட்டு மெல்ல கீழிறங்கியவனின் விழிகளோ அவளின் வெண்ணிற இடையில் தேங்கி நின்றது..


அவளின் இடுப்பை கிள்ளி விளையாட வேண்டும் என பரபரத்த கைகளை அடக்கி பின்னால் கட்டியவாறு நின்றவனின் பார்வையை நொடியில் கண்டுபிடித்தவள்..


"பொறுக்கி" என முணுமுணுக்க.. அவளின் இதழசைவில் புரிந்த கொண்டவனின் இதழ்களோ தன்னையும் மீறி மலர்ந்தது.. "வாடி பொறுக்கி என்ன பண்ணுவான்னு காட்டுறேன்" என மனதோடு நினைத்தவனின் பார்வை வஞ்சிக்கொடியின் மேல் அழுத்தமாக பதிந்தது…


தூரிகா மேடைக்கு வந்ததும்.. "வாங்க மிஸ்ஸஸ்.தூரிகா"... "மிஸ்ஸஸ்" தானே என்றதும்.. 'இல்லை' எனும் விதமாய் தலையாட்டியவள்..


"இல்லை சார் நான் மிஸ்.தூரிகா" என மிஸ்ஸில் அழுத்தம் கூட்டி சொல்லியவள் பற்களை நறநறவென கடித்தாள்..


"இந்த அரென்ஜ்மெண்ட் எல்லாம்ல நீங்க தான் பண்ணதா மேடம் சொன்னாங்க.. காங்கிராட்ஸ்" என கையை நீட்ட.. மரியாதைக்காகவது கை நீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.. வேண்டா வெறுப்பாக நீட்டிய கையை.. அழகாக வருடிவிட்டவன்.. "ஸோ ஸாப்ட்" என நினைத்தவாறே அனைவரிடமும் விடைபெற்றான்..


அவன் சென்றதும் தான் நிம்மதியாக மூச்சு விட்டவள் ஆடிட்டோரியத்தை பார்க்க.. செல்லும் அவனை தான் அனைவரும் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்தனர். மானசா உள்பட..


வேகமாக மானசா அருகில் சென்றவள். அவள் கையில் கிள்ளிவிட.. "ஸ்ஸ்ஸ்.. ஏன்டி கிள்ளுன??" என கைகைளை தேய்த்தவாறே, வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவளை எரிச்சல் மீதூற பார்த்தவள்..


"ஹேய்ய்..லூசாடி நீ.. வெட்கமே இல்லாம சைட்டடிச்சிட்டு இருக்க? நீ ஒரு ப்ரொபஸர் அதை நியாபகத்துல வச்சிக்க?" என்றவளை ஒரு மார்க்கமாக பார்த்தவள்..


"நான் சைட்டடிச்சா உனக்கென்னடி.. ப்ரொபஸரா இருந்தா சைட்டிக்க கூடாதா?? அவரு அழகென்ன?? ஸ்டையிலென்ன? ஹைய்யோ கொல்லுறாருடி?" என புகழ்ந்தவாறே,


"இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.. நீதான் கடிவாளம் போட்ட குதிரை ஒரே மாதிரி பார்ப்ப.. எல்லாரும் அப்படி இருக்க முடியுமா??.. ஏன்டி இப்டி இருக்க? உனக்கு ஏதோ ஹார்மோன்ஸ் பிரச்சினைன்னு நினைக்கிறேன்" என்றவளின் பேச்சில் தன் கடந்த காலத்தை நினைத்தவளுக்கு சிறு வலி தோன்றியது…


எவ்வளவு சந்தோஷமாக இருந்த வாழ்க்கை இப்படி புயலடித்து ஓய்ந்ததை போல் இருப்பதை நினைத்து விரக்தியாக சிரித்தவள் வேகமாக வெளியேறி விட்டாள்..


சுசீந்திரம் காவல் நிலையத்தில் அனைவரும் பரபரப்பாய் ஓடி வேலை செய்ய.. அதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமில்லாமல் இன்ஸ்பெக்டர் சேரில் அமர்ந்து கால்களை தூக்கி டேபிளில் போட்டு அமர்ந்திருந்தான் நிகரிலன்…. அவன் இதழ்களோ,


ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும்

எனக்கொரு கவலையில்லே

நான்தான்டா என் மனசுக்கு ராஜா

வாங்குங்கடா வெள்ளியில் கூஜா

நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்

கேக்குற வரத்தை கேட்டுக்கோடா


என தன் கம்பீரக்குரலில் பாடியவனின் முன்பாக இருவர் வந்து நின்றனர்..சற்று பம்மிய குரலில் "ஐயா" என்கவும், அதுவரை பாடிக்கொண்டிருந்தவன்… மெல்ல தலையை சரித்து பார்த்தான்.. கால்களை டேபிளில் இருந்து எடுக்காமல்..


"யாருடா அவன்?? ஸ்டேஷன்ல வந்து கொய்யா விக்கிறது" என்றவனை பார்த்து எதிரில் இருந்த இருவரும் பேந்த பேந்த முழித்தனர்..


"என்னல.. ஆளுக ரெண்டு பேரும் திருதிருன்னு முழிக்கிறீய.. என்ன களவாணித்தனம் பண்ணீக??" என்றவனின் முன்பு பம்மியவாறே,


"ஐயா" என்றதும் தான் சட்டென கால்களை எடுத்தவாறே எழுந்து நிமிர்ந்து நின்றவனின் தோற்றத்தில் இருவரும் மிரண்டு நின்றனர்…


அலைஅலையான கேசத்தில் இருக்க வேண்டிய தொப்பியோ டேபிளின் ஓரத்தில் இருந்தது.. கஞ்சிப் போட்டு அயர்ன் பண்ணி சிறு கசங்கல் இல்லாமல் இருக்க வேண்டிய சட்டையோ, ஆங்காங்கே கசங்கல்களுடன்.. சட்டையின் முன் இரண்டு பட்டன்கள் திறந்து விடப்பட்டிருந்தது…


ஆனால் அவனின் பார்வையோ தீர்ககமாக இருந்தது.. எதிரில் இருப்பவர்களை முறைத்துப் பார்த்தால் போதும் எவனுக்கும் எதிரில் நிற்கும் தைரியம் இருக்காது..


"என்னல சைட் அடிக்கீறியளா??" என்றவனின் பதிலில் இருவரும் வலது இடது பக்கமாய் தலையாட்டியவர்கள் எரிச்சலுடன் பார்த்தான்.


"மாணிக்கம் சொன்னான்.. இதுல உங்க கமிஷன் இருக்கு சார்" என்றவர்களின் கையிலிருந்த பையை புடுங்கியவன் அதிலிருந்த ஒரு கட்டு பணத்தை எடுத்து வாசம் பிடித்தவாறே "ம்ம்ம்… வேலை முடிஞ்சிடும்னு போய் சொல்லு" என கர்ஜித்தவனின் குரலில ஓடியே விட்டனர்..


காவலனாய் இருக்க வேண்டியவன் கள்வனாய் மாறி நின்றான்..


சுசீந்திரம் ஸ்டேஷனாக பரபரபபாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அது வேலையின் காரணமாக என்று நினைத்தால் அது தவறு.. ஸ்டேஷனின் வேலை பார்க்கும் ஒரு போலீஸுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது அதற்கான ட்ரீட் தான் இங்கு நடைபெறுகிறது..


பிரியாணி பார்சலை அவனிடம் நீட்டியதும் வாங்கி டேபிளில் வைத்தவன்.. பிரிப்பதற்கு முன்பாக போன் அடிக்கும் சத்தத்தில் கலைந்தவன் போனை பார்க்க போன் ஸ்கீரினில் அவனை அணைத்தபடி நின்றிருந்தவளை பார்க்க இதழோரம் சிறு புன்னகை தோன்றியது..



போனை எடுத்து அட்டென்ட் பண்ணியவன் "தக்காளி" என சொன்னதும் தான் தாமதம்


"மாமா" என சிணுங்கியவாறே, "என்னை தக்காளின்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்" என கோபத்துடன் முடித்தாள்…


"தக்காளினு சொல்ல வேண்டாம்னா பிக்காளினு சொல்லவால" என்றவனை போனிலேயே முறைத்தவள்..

"நீ என்னை எந்த பேரும் சொல்லி கூப்பிட வேண்டாம்"

"மாம்ஸே" என குழைந்த குரலில் கூப்பிட்டவளை கண்டு ஏனோ மனதில் மெல்லிய சாரல் அடித்தது.. அவனிடம் அவளுக்கு ஏதாவது காரியம் நடக்க வேண்டுமென்றால் மட்டுமே.. இந்த பெயர் வரும். இல்லையென்றால் இவனை மாமா என்றே அழைப்பாள்..


"என்னடி இழுவை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.. ரொம்ப பெரிய காரியமோ??" என அவளை அறிந்தவனாய் கேட்க.


"இதுக்குத் தான் என் மாம்ஸு பக்கத்துலேயே இருக்கணும்ங்கிறது.. வீட்டுலேயும் இருக்குது பாருங்க தத்திங்க.. நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்காம.. லபோதிபோன்னு கத்திக்கிட்டு" என கோபத்தில் கத்தியவாறே, "மாம்ஸ்ஸு" என.மறுபடியும் இழுக்க.


"என்னடி வேணும் ஏன் இப்படி உயிரை எடுத்துக்கிட்டு இருக்க? பிரியாணியை திங்க விடுடி?" என சிடுசிடுத்தவனை கண்டு உதட்டை சுழித்தவள்..


"வர வர நீ என்னை கண்டுக்கிறதே இல்லை.. டுயூட்டி டுயூட்டின்னே சுத்துறே.. போ நான் பேச மாட்டேன்" என போனை கட் பண்ண போனவளை ஆயிரம் சமாதானம் சொல்லி நிறுத்தியிருந்தான்..


"ஆமா அக்கா, அம்மாச்சியெல்லாம் எங்கேடா??"


"சொல்ல மறந்துட்டேன் மாம்ஸு… உனக்கு தெரியாம நம்ம வுட்டுல ஒரு சிதம்பர ரகசியம் ஓடுது" என்றவளை புரியாமல் பார்த்தான்.


"சிதம்பர ரகசியமா. நம்ம வூட்டுலையா.. என்ன உளறுற"


"நான் உளறலை மாமா.. உண்மைதான்.. ஐ திங்க்.. நீ அப்பாவாக போறேன்னு நினைக்கிறேன்" என்றவளின் வார்த்தையில் அதுவரை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவனின் இதயமும் தன இதயத்துடிப்பை நிறுத்தியது போல் உணர்ந்தான்..


"என்னடி சொல்ற??" என்றவனின் குரல் தழுதழுத்து தொண்டைக்குழிக்குள் இருந்து வார்த்தைகள் சிக்கித் தவித்தது..


"ஆமா மாம்ஸு… அக்காவுக்கு நாள் தள்ளியிருக்குன்னு தான் அம்மாவும் அப்பாவும் ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போயிருக்காங்க" என்றவளின் வார்த்தையில் இதழில் ஒரு கசந்த புன்னகை படர.. ஏனோ அதற்கு மேல் பேசமுடியுமென்று தோன்றவில்லை..


"நான் வைக்கிறேன்டா செல்லக்குட்டி" என்றவனின் கலங்கிய குரலை கேட்டவளுக்கு கண்ணீர் துளிகள் வழிந்தது.. "மாம்ம்ஸு" என்பதற்கு முன்பே போனை கட் பண்ணியிருந்தான் நிகரிலன்..


போனை அணைத்து வைத்தவனின் மனமெல்லாம் ரணம் ரணம் மட்டுமே.. தாங்க முடியா வலியையும் மறைத்துக் கொண்டு வாழ்வதில் இவனுக்கு நிகர் இவனே..


சிறிது நேரத்தில் அவனின் அக்கா மரகதவீணாவிடம் இருந்து போன் வர, உடனே எடுத்து பேச தோன்றாமல், இரண்டு மூன்று அழைப்புக்கு பிறகே எடுத்து காதில் வைத்தான்..


எடுத்த எடுப்பிலேயே "கண்ணாஆஆ… நீ அப்பாவாக போறடா.. இப்போ தான் ஹாஸ்பாட்டல் போய் செக்கப் பண்ணிட்டு வந்தோம்.. இரு உன் பொண்டாட்டி கிட்ட கொடுக்கிறேன்" என தன்னருகில் நின்றிருந்தவளின் கையில் போனை திணித்தவள் நாகரீகமாக வெளியேறிட விட.. சில நிமிடங்கள் கழித்தும் இருவரிடையே மௌனம் மட்டுமே நிலைத்தது.. அவளின் மௌனம் கூட அவனை வதைத்து கொன்றது..


"இப்பக்கூட என்கிட்ட பேச உனக்கு மனசு வரலல்ல டி.. இதை விட ஒரு ஆம்பிளைக்கு வேற என்னடி செருப்படி வேணும்… என் குழந்தையை சுமக்குறது கூட அசிங்கம்னு நினைக்கிறீயா??" என சொல்லி முடிப்பதற்குள்


"மாமாஆஆஆ" என தன்னையும் மீறி அதிர்ந்து வந்த வார்த்தைகளில் கண்களில் கண்ணீருடன் இதழ்களில் கசந்த புன்னகையுடன் நின்றவனின் மனநினைவுகளில் வந்து நின்றாள் நிகரிலனின் ரோசாப்பூ..


"ஏன் மாமா என்னை வதைக்கிற??"


"யாரு நான் வதைக்கிறேனா?? நல்லா யோசிச்சி சொல்லு ரோசாப்பூ.. வதைக்கிறது நானா இல்லை நீயான்னு தெரியும்.. என்னை ஒவ்வொரு நிமிஷமும் சித்ரவதை பண்ணி கொல்லாதடி.. தக்காளிக்கு எம்மேல இருக்கிற பாசம் கூட என்மேல உனக்கு இருக்காடி" என கடுமையாக சாடிவிட்டு போனை வைத்தவனின் மனமெங்கிலும் ரணம் மட்டுமே..


ரணமாய் மன்னவனின் மனம் இருக்க!!

மாலையிட்ட மங்கையவளோ ஒற்றை வார்த்தையில் உயிர் கொன்றிருக்க..

அவர்களின் உறவுக்கு சாட்சியாய் ஓரூயிர் கருவறையில் வாசம் கொண்டு உலகத்தினை உலாவர தவித்து கொண்டிருக்க..

உயிர் கொன்றவளை உயிராய் நேசிப்பவன்

யாருக்கும் நிகரில்லாதவன்

இவனே நிகரிலன்..
 

Madhusha

Well-known member
Wonderland writer
தூரிகா 2


நிகரிலனிடம் பேசிவிட்டு வந்தவளை எதிர்கொண்டது மீனாட்சியம்மாள் தான்… ஒரு முறைக்கு அவளின் தாய்வழி பாட்டி.. இன்னொரு முறைக்கு அவளின் மாமியாரும் அவரே.. புன்னகை தவழும் முகத்துடன் ரோசாப்பூவை வாரியணைத்துக் கொண்டவர், "ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா.. இந்த சந்தோஷமான விஷயம் கேட்காம போயிருவோமோன்னு பயந்துட்டேன்.. எங்க மேல உள்ள கோபத்துல உன்கூட வாழாம போயிருவானான்னு பயந்துக்கிட்டேன் இருந்தேன்டா" என கலங்கிய குரலில் சொல்லியவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது..


"மீனாட்சி.. பேத்தி நல்ல விஷயம் சொல்லியிருக்கா.. ஏதாவது ஸ்வீட் செஞ்சிக்கொடுப்பீயா.. அதை விட்டுப்புட்டு கண்ணு கலங்குற??" என அதட்டலாக சொன்னவரை கண்டு தலையிலடித்தவாறே, "மறந்தே போயிட்டேன்.. சீம்பால் கொண்டு வந்திருக்கேன்டா.. இரு வர்றேன்" என தூக்குவாளியில் இருந்து ஸ்பூனில் எடுத்து ரோசாப்பூவிற்கு எடுத்து ஊட்டுவதற்குள் அதை தன் வாயில் போட்டுக் கொண்டாள்.. நிகரிலனால் 'தக்காளி' என செல்லமாக அழைக்கப்படும் அர்த்தனா. ரோசாப்பூவின் தங்கை..


"ஹேய்ய்ய்.. என்னோடதை ஏன்டி நீ சாப்பிடுற??" என வாயாடியவளை கண்டு சிரித்தவாறே, "நீ மட்டும் அம்மா ஆனதுக்கு ஸ்வீட் சாப்பிடுவீயா??.. நானும் தான் சித்தியாகிட்டேன்.. சோ நான் தான் பர்ஸ்ட் ஸ்வீட் சாப்பிடுவேன்" என்றவளை துரத்திக் கொண்டு ஓடினாள் ரோசாப்பூ..


"எப்போ பார்த்தாலும் எனக்கு ஏட்டிக்குப் போட்டியா வர்றதே உனக்கு பொழைப்பா போச்சி" என்றவளை பிடித்து நிறுத்தியிருந்தார் செல்வபூபதி..


"இந்த டைம்ல இப்டி ஓடக்கூடாதுடா.. கவனமா இருக்கணும்" என தலையை வருடிவிட்டவருக்கு இதுவரை இருந்த சிறு குற்றவுணர்ச்சியும் அவரை விட்டு அகல்வதை போல் உணர்ந்தார்..


காரைக்குடியில் உள்ள சிறு கிராமம் தான் செல்வபூபதியின் வீடு.. தலைமுறை தலைமுறையாக நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்பவர்கள்.. செல்வபூபதியின் தாத்தா காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியதில் ஆரம்பித்த அவர்களின் பயணம்.. இப்பொழுது நாட்டை பாதுகாப்பதில் வந்து நிற்கிறது.. அவர்கள் வீட்டில் பிறக்கும் ஆண்பிள்ளைகளை கண்டிப்பாக நாட்டிற்காக தியாகம் செய்ய வேண்டுமென்பது எழுதப்படாத விதி.. ஒன்று மிலிட்டரியில் சேர வேண்டும்.. இல்லை காவல் துறையில் சேர வேண்டுமென்பது தொன்றுதொட்டு வரும் பழக்கம்...


செல்வபூபதி.. எக்ஸ் மிலிட்டரி மேன்.. மனைவி மீனாட்சியம்மாள்.. வீட்டினை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.. செல்வபூபதி ஒழுக்கத்திற்கும், நேர்மைக்கும் பெயர் போனவர்.. அவருக்கு எதிலும் ஒழுக்கம் வேண்டுமென எண்ணுபவர்.. அவருக்கு இரு பிள்ளைகள் மரகதவீணா.. அவரின் மூத்த மகள், அவருக்கு பிறகு வேண்டிப் பெற்ற மகன் தான் நிகரிலன்.. "ஏன்டா வேண்டிக்கொண்டோம்?" என பல தடவை யோசித்திருக்கிறார்.. அதற்கு முக்கியக்காரணம் போலீஸ் வேலையை அறவே வெறுப்பவன் நிகரிலன்.. அவனுக்கு காலையில் ஆபீஸ் சென்றுவிட்டு மாலையில் வீடு வந்து சேரும் சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்படுபவன்.. ஆனால் செல்வபூபதி வலுக்கட்டாயமாக போலீஸ் வேலையில் சேர்த்து விட்டிருக்கிறார்… இதுவே அவர்களின் பகைக்கு ஒரு காரணமாகும்..


மரகதவீணாவின் பன்னிராண்டவது வயதில் தான் நிகரிலன் பிறந்தான்.. மரகதவீணாவிற்கு போலீஸ் அதிகாரி அரவிந்தை மணமுடித்து வைத்தார்.. அவருக்கு இரு பிள்ளைகள்.. ரோசாப்பூ, அர்த்தனா.. இருவருக்குமே தாய்மாமா தான் நிகரிலன்.. அதனாலேயே இருவருக்கும் அவனிடம் செல்லம் அதிகம்..


வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி இருந்தாலும் அனைவரின் மனதிலும் ஒரு வித ஏக்கமும், தவிப்பும் இருந்து கொண்டே தான் இருந்தது.. நிகரிலனை பற்றி மட்டுமே..



டியூட்டி முடித்து விட்டு போலீஸ் குவார்ட்டர்ஸ்க்குள் உள்ளே நுழைந்தான்.. காக்கிச் சட்டையில் உள்ள இரண்டு பட்டன்களை கழட்டிக் கொண்டிருந்தவனுக்கு போன் அடிக்கும் சத்தத்தில் டேபிளில் இருந்த போனை எட்டிப் பார்க்க அங்கு வீடியோ காலில் வந்தாள் அர்த்தனா.


எவ்வளவு எரிச்சலில் இருந்தாலும் இவளின் போன் மட்டும் என்றும் சலிப்பதில்லை.. சிறு புன்னகையுடன் சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டியவன்.. போனை அட்டென்ட் பண்ணி 'ஹலோ' என்பதற்குள்..


"ஹாய் மாம்ஸ்ஸ்" என்றவளின் பாசத்தில் சற்று மனமும் நெகிழ்ந்தது..


"சொல்லுடா" என்றவனுக்கு போனிலேயே மொட்டை மாடியில் சோகமே உருவாய் நின்றிருந்த தன் அக்காவை காட்டியவாறே,


"மாம்ஸ்ஸ்… நான் காலையில அப்ளிகேஷன் போட்டேன்.. நீ கேட்கவேயில்லை" என்ற பொழுது தான் காலையில் ஏதோ கேட்டாளே?? என்பதே நியாபகத்திற்கு வந்தது..


"ஸாரிடா.. உங்கக்கா கொடுத்த ஷாக்குல எனக்கு எல்லாம் மறந்திடுச்சிடா.. இப்போ சொல்லு.. என்ன கேட்க வந்த??"


"நான் நீட் எக்ஸாம்ல பாஸ் ஆகிட்டேன் மாம்ஸ்.. ஆனா பெங்களூர் போய் படிக்கணும். வீட்டுல கேட்டா யாருமே பெர்மிசன் கொடுக்க மாட்டேங்குறாங்க" என வருத்தமாக சொல்லியவளை கண்டு சிறு யோசனையுடன் அவளை பார்த்தான்.. டாக்டர் படிப்பிற்காக இரவு பகலாக படித்தது அவனுக்கு நன்றாக தெரியும்.. ஏனோ அவனால் மறுக்கவும் முடியவில்லை..


"கண்டிப்பா போயே ஆகணுமாடா"


"ஆமா மாம்ஸ்.. அங்கே உள்ள காலேஜ்ல தான் ஷீட் கிடைச்சிருக்கு.. ப்ளீஸ் மாம்ஸ் நீதான் ஏதாவது அரென்ஜ்மெண்ட் பண்ணனும்.. ப்ளீஸ் மாம்ஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்" என பல ப்ளீஸ்களை போட்டே மாமனை மலையிறக்கியிருந்தாள்..


"ம்ம்ம்.. எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுடா.. என்னோட பேட்ஜ் ஒருத்தன் பெங்களூர்ல தான் இருக்கான்.. அவன்கிட்ட விசாரிக்கிறேன்.. நீயும் மற்ற டீடெய்ல்ஸை கொடுடா" என்றதும் தான் தாமதம்,


"தாங்க்ஸ் மாமா.. தாங்க்ஸ்.. லவ் யூ டூ மாம்ஸ்.. மாம்ஸ்னா என் மாம்ஸ் தான்.. உம்மா. உம்மா.." என்றவளின் குதுகலமான குரலில் அதுவரை அவர்களின் பேச்சில் இடையில் வராமல் நின்றிருந்த ரோசாப்பூ.. தீயாய் அர்த்தனாவை முறைக்க.. அவளின் முறைப்பை கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல்,


"மாம்ஸ்.. எப்படி அக்காவை வெறுப்பேத்துறேன் பாருங்க" என கிசுகிசுப்பாய் சொல்லியவள்..


"மாம்ஸ்… நீங்க என்னை லவ் பண்றீங்க தானே??"


"அதுல என்னடா டவுட்டு??"


"அப்போ ஐ லவ் யூ சொல்லுங்க பார்க்கலாம்" என்றவளின் பார்வை முழுவதும் ரோசாப்பூவின் மேலேயே இருந்தது…


"ஐ லவ் யூடி தக்காளி" என்ற இருவரையும் அற்ப பதரை போல் பார்த்தாள்..


"என்ன மாம்ஸ் ரியாக்ஸனையே காணும்"


"அதானே.. போனை கொடு அவகிட்ட.. கேட்கலாம்" என்றதும் வலுக்கட்டாயமாக ரோசாப்பூவின் கையில் போனை திணித்தாள்..


மாடியில் இருந்தாலும் லைட்டின் வெளிச்சத்தில் அவளைப் பார்த்தவனுக்கு, கண்ணில் இருந்த காதலும், ஏக்கமும், தவிப்பும் புரிந்தது..


"ஏன்டி உன் புருஷன்.. உன் தங்கச்சிக்கு ஐ லவ் யூ சொல்றானே.. உனக்கு கோபம் வரலை??" என்றவனை அசட்டையாக பார்த்தவள்..


"ம்ஹூக்கும்… நீ இப்போ தான் அவகிட்ட சொல்ற பாரு.. பொறந்ததுல இருந்து லட்சம் முறையாவது சொல்லியிருப்ப. அவளும் உனக்கு சொல்லியிருப்பா.. இதுல நான் பொறாமை வேற படணுமாக்கும்.. ரொம்பத்தேன்.. போ மாமா" என சலிப்பாக சொன்னவளுக்கு நிகரிலனை பற்றி ஆதி முதல் அந்தம் வரை தெரியும்..


"ஐ லவ் யூ மாமா" என்றவளின் காதலில் கரைந்து தான் போனான் காவலன்.. "ஐ லவ் யூ டூ டி.. சாப்பிடு.. சந்தோஷமா இருடி" என கரகரத்த குரலில் சொல்லியவனின் பார்வைக்கு ப்ரிட்ஜ் பின்னாடி தெரிந்த நிழலில் புருவம் சுருக்கி யோசித்தான்..


நிழலை பார்க்கும் பொழுதே தெரிந்தது.. ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் இருப்பவன் என புரிந்ததும் உதட்டில் சிறு நக்கல் புன்னகையுடன் "ஷ்ஷப்ப்பாஆஆ.. இந்த கொசுத்தொல்லைங்க தாங்க முடியல" என முணுமுணுத்துக் கொண்டே போனை கட் பண்ணியவன்.. அதுவரை அணிந்திருந்த கட் பனியனை கழட்டி எறிந்தவன்.. ப்ரீட்ஜில் இருந்து ஜுஸ் பாட்டிலை எடுத்தவன். மடமடவென குடித்து முடித்தவன்…


கட்டிலில் உருண்டு எழுந்தவன் ஸ்கீரின் பின்னால் ஒளிந்து கொண்டு நின்றிருந்தவனின் கழுத்தோடு ஸ்கீரினை சேர்த்து இறுக்கியவன்.. தன் கைகளின் வலுவை கூட்டி, மேலும் இறுக்க.. கழுத்தில் உள்ள நரம்பு கட்டாகி நின்று கொண்டிருந்தவன் கீழே விழ…சட்டென எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்தது…


இருட்டின் நிழலில் யாரும் கண்களுக்கு தெரியவில்லை என்றாலும். இருட்டையும் தன் கண்களுக்குப் பழக்கப்படுத்த ஒரு நிமிடம் கண்ணை மூடியவன்.. கண் திறக்கும் பொழுது இருட்டு பழகியிருந்தது.. மெல்ல அடியெடுத்து வைத்தவனை பின்னால் இருந்து முதுகில் குத்த வந்தவனை, சட்டென திரும்பியவன் அவன் கையை இறுக பற்றி சுவற்றில் அவன் தலையை மோத.. அங்கேயே மடிந்து விழுந்தான் மாமிச மலைக்காரன்.. அவனின் அதிரடியை பார்த்த ப்ரிட்ஜின் பின்னால் இருந்தவன் வெளியே ஓடிச் செல்ல பார்க்க.. அவனின் கழுத்தில் கைப்போட்டு நெறித்தவன். "யாருடா உங்களை அனுப்புனது??" என்றவனின் கர்ஜனையில்.. நெறிப்பட்டவனின் இதழ்களோ தானாக, "எம்.எல்.ஏ.முத்துலிங்கம்" என்றவனின் பின்னால் ஓங்கி மிதித்தவன்.. "ஓடுங்கடா.. இனி யாராவது வீட்டுக்குள்ள நுழைஞ்சிங்க.. கொன்னுப்புடுவேன் கொன்னு" என எச்சரித்தவனை கண்டு அரண்டு ஓடியவனின் கையிலிருந்த கத்தி ஒன்று நிகரிலனின் தோள்பட்டையினை ஆழமாக கீறியது.. "ஸ்ஸ்ஸ்" என வலியை பொறுத்துக் கொண்டு வீட்டிலிருந்த மெடிக்கல் கிட்டை எடுத்து பேண்டேஜை வைத்து துடைத்துக் கொண்டிருந்தவனின் கைகளில் ரத்தம் வழிந்து கொண்டேயிருந்தது..


"ச்சே.. ஹாஸ்பிட்டல் தான் போகணும் போல" என முணுமுணுத்தவாறே ஹாஸ்பிட்டல் சென்று டீடி இன்ஜெக்சன் போட்டுக் கொண்டு வந்தவனுக்கு தூக்கம் கண்களை சுழட்டி அடித்தது.. தன்னை மறந்து அசந்து தூங்கியவன் போன் அடிக்கும் சத்தத்தில் கலைந்தவன் யாரென பார்க்காமலே "ஹலோ.. நிகரிலன் ஸ்பீக்கிங்" என்றவனுக்கு பதிலாக அழுகுரலே கேட்டது..


"ரோசாப்பூ" என பதறிக் கொண்டு எழுந்தவன்.. "என்னாச்சிடி.. ஏன் அழுற??"..


"நான் உன்னை பார்க்கணும் மாமா.. நீ ஊருக்கு கிளம்பி வா" என கரகரத்த குரலில் கேட்டவளை கண்டு. அதுவரை இருந்த இளக்கம் மாறி இறுகிய முகத்துடன்.. "என்னடி நினைச்சிட்டு இருக்க?? உன் மனசுல.. நீ வான்னா வர்றதுக்கும்.. போன்னா போறதுக்கும் நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா??.. எத்தனை தடவை உன்கிட்ட கெஞ்சியிருப்பேன்.. அப்போ எல்லாம் பிடிவாதமா இருந்துட்டு. இப்போ என்னடான்னா எதுவுமே தெரியாத.. வா மாமான்னு சொன்னா நான் வந்துரணுமா??.. எரிச்சலை கெளப்பாதே.. நான் அப்பாவாகிருக்கேன்னு சந்தோஷம் கூட பட முடியலைடி" என கரகரத்த குரலில் சொல்லியவாறே போனை கட் பண்ணியவனுக்கு தூக்கம் தூரப் போயிருந்தது..


காவலனின் இதயமோ

காதலை எண்ணி தவிக்க!!

காதலை மட்டுமல்ல கருவையும் சேர்ந்து சுமப்பவளின் மனதின் ரகசியத்தை அறிபவர் யாரோ??

இருவரின் காதலும் கைக்கூடுமா??
 
Last edited:

Madhusha

Well-known member
Wonderland writer
தூரிகா 3


ஸ்டாஃப் ரூமில் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த தூரிகாவை தேடி அடித்துப் பிடித்து ஓடி வந்தாள் மானசா … ஓடி வந்ததால் மூச்சிரைக்க, "ஹேய்.. தூரிகா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா??" என்றவளின் முன்பு தண்ணீர் பாட்டிலை நீட்டியவள்,

"இந்தா.. இதை குடிச்சிட்டு சொல்லு??" என சிடுசிடுத்தவளை கண்டு முறைத்தவள்..

"என்னடி எப்போ பார்த்தாலும் புக்கையே பார்த்துட்டு இருக்க??" என வேகமாக கையிலிருந்த பேனாவை பிடுங்கியவள், "நான் எவ்ளோ முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கேன் தெரியுமா??" என்றவளை சற்று கடுப்பாக முறைத்தவள்..

"அப்டி என்ன தலைமுழுகிப் போற விசயம்??"

"என்ன விஷயமாஆஆ??. நிகரிலனை கொல்ல ட்ரை பண்ணாங்களாம்??" என சற்று பதட்டமாக சொல்ல..

"ஓஹ்ஹ்.. ஆமா யாரு நிகரிலன்??" என்றவளின் வார்த்தையில் நெஞ்சில் மேல் கை வைத்து அப்படியே சரிந்து சேரில் அமர்ந்தவள்..


"என்னது யாரா??.. என்னடி அம்னீசியா வந்த மாதிரி பேசுற??" நம்ம ஏசிபி..நிகரிலன்.. சுசீந்திரம் புல்லா அவரு கண்ட்ரோல் தாண்டி" என்றவளை மேலும் கீழுமாக பார்த்தவள்..


"சரிதான் முத்திடுச்சி போல?" என்றவளை கோபத்துடன் முறைத்தவள்..


"என்ன என்னை பைத்தியம்னு சொல்ல வர்றீயா??"


"இதுல சந்தேகம் வேறயா??.. லூசு மாதிரி பினாத்தாம.. நான் சொல்றதை கேளு.. நீ அவரை லவ் பண்றேன்னு நல்லா தெரியுது.. ஆனா ஒரு உண்மையை சொல்றேன் நல்லா காதுல வாங்கிக்கோ… அவரோட குடும்பமெல்லாம் காரைக்குடியில இருக்காம். அவருக்கு கல்யாணமாகி ஆறு மாசமாகுது" என்றவளை ஆவென வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்..


"என்னடி சொல்ற?? அவருக்கு கல்யாணமாகிடுச்சா?? அவரோட டீடெய்ல்ஸ் உனக்கெப்படி தெரியும்??" என்றவளின் கேள்வியில் உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் வெளியே நிர்சலனமான முகத்துடன் "ப்ச்ச்.. லூசா நீ.. அவரைப் பத்தி ஆர்டிகல் வந்ததுல்ல போன வீக்.. அதுல தான் இதெல்லாம் போட்டிருந்தது" என்றதும் ஓவென வாயை பிளந்தவள்..


"ஓஹ்ஹ்ஹ்.. நான் அவரையே பார்த்துட்டு இருந்தேனா.. அதான் வேற எதுவும் நினைப்புல இல்ல" என்றவளை அற்ப பதரை போல் பார்த்தவள்.. "எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆகிடுச்சி.. நான் போறேன்" என்றவளை வழிமறித்து தடுத்தவள்..


"நீ ஏன்டி அவரை பத்தி பேசுனாலே டென்ஷன் ஆகுற??" என்றவளின் கேள்வியில் அதிர்ச்சியில் விழிகள் விரித்தவள்…



"எனக்கு அவரைப் பிடிக்கலை.. சுத்தமா பிடிக்கலை" என்றவளின் கண்களில் கண்ணீர் வழிய வேகமாக அங்கிருந்நு வெளியேறி விட்டாள்..


"இவ எதையோ மறைக்குறா??.. சம்திங் இஸ் ராங்க்" என முணுமுணுத்தவாறே வெளியே சென்று விட்டாள் மானசா..


மானசாவை விட்டு வெளியே வந்தவள் நேராக வகுப்பிற்கு செல்லாமல் பழைய க்ரவுண்டிற்கு சென்றவளுக்கு நிகரிலன் நடந்து கொண்ட முறையை நினைத்துப் பார்த்தவளுக்கு வலி, ஏக்கம், ஆத்திரம் என அனைத்தும் போட்டியிட.. விம்மியெழுந்த அழுகையை வாயைப் பொத்தி அடக்கியவள்.. நேராக சென்றது வாஸ் ரூமை தேடித்தான்.. தன் வலி தீரும் வரை அழுது முடித்தவள் முகத்தை கழுவ பாத்ரூமிலிருந்த கண்ணாடியை பார்த்தவளுக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்தது நிழலாக தோன்றியது..


காலேஜில் இருந்து நான்கு தெரு தள்ளியிருக்கும் மகளிர் விடுதியில் தான் தங்கியிருந்தாள் தூரிகா.. அன்று லேப்டாப் ரிப்பேர் என லேப்டாப்பை கொடுப்பதற்காக இரவு ஒன்பது மணியளவில் கடையை நோக்கி சென்றவள்.. லேப்டாப்பை ரிப்பேர் பார்ப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேலானது..


இரவு நேர கும்மிருட்டு பயமுறுத்தினாலும் வெளியில் தைரியமாக காட்டிக் கொண்டவள்.. மெல்ல நடப்பதை போல் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.. இரவு நேர ரோந்து பணிக்காக போலீஸ் ஜீப்பின் மேல் சாய்ந்து படுத்திருந்த நிகரிலனுக்கு தூரத்திலிருந்து வந்த தூரிகாவை புருவம் சுருக்கி பார்த்தவன்… தன்னருகில் நின்றிருந்த கான்ஸ்டபிளை, "யோவ்வ்வ. ஆறுமுகம்.. அங்க ஒரு பொண்ணு வருது பாரு.. என்ன ஏதுன்னு விசாரிய்யா??" என கண்களை மூடிக்கொண்டவன்..


"ரோசாப்பூ.. சின்ன ரோசாப்பூ

எம்பேரை சொல்லும் ரோசாப்பூ"


என இத்தோடு நாற்பது முறையாவது ஓட்ட டேப்ரிக்கார்டை போல் அழுது கொண்டிருந்தான்..


கான்ஸ்டபிள் ஆறுமுகம் அவளின் அருகே செல்லவும்.. அதுவரை திடமாக நடந்து வந்தவளுக்கு போலீஸ் அருகில் வரவும் சற்று பயம் கவ்விக் கொண்டது..


"ஏம்மா யாரும்மா நீ.. இந்த நேரத்துல இங்கே என்னம்மா பண்ற??" என சற்று அதிகாரமாக கேட்டவரை பார்த்து பம்மியவாறு,


"லேப்டாப் ரிப்பேர் சார்.. அதான் ரிப்பேர் பார்த்துட்டு வர்றேன்" என நிற்காமல் சொல்லிவிட்டு ஓடியவளை ஒற்றை கண்ணில் பார்த்த நிகரிலன்.. "யாருடா இவ.. இந்த ஓட்டம் ஓடுறா" என நினைத்தவாறே, "ஹேய்ய்ய்… இந்தா வெள்ளை குர்தீ.. நில்லு" என்றதும் அதுவரை ஓட்டம் எடுக்க தயாராக நின்றவளின் நடையும் தடைப்பட்டது..


எச்சில் முழுங்கியவாறே மெல்ல திரும்பியவளை பார்த்து உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்தவன்… "யாரு நீ??" என கர்ஜனைக்குரலில் சீறியவனை கண்டு.. அதுவரை அமைதியாக இருந்தவளின் தன்மானம் சீண்டப்பட, "சார் அதான் கான்ஸ்டபிள் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்.. அப்புறம் என்ன?? ஏதோ குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி மாத்தி மாத்தி விசாரிக்கிறீங்க??" என எரிந்து விழுந்தவளை கண்டு கனல் கக்கும் பார்வையில் முறைத்தவன்..


"உங்களை பாதுகாக்கிறது தான் எங்க வேலை.. யாரு கேட்டாலும் பதில் சொல்றதில்லை உங்களுக்கென்ன பிரச்சனை??" என சுள்ளென எரிந்து விழுந்தவனை கண்டு முறைத்தவள்,


"சார் நான் தான் பதில் சொல்லிட்டேனே.. திருப்பி திருப்பி கேட்டா என்ன சார் அர்த்தம்"


"கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லணும்னு அர்த்தம்.. அவர் கேட்கும் போதே ஒழுங்கா நின்னு பதில் சொல்லணும்.. அப்படியே ஓடுற.. அதுதான் பிடிச்சி வச்சிருக்கு.. அரைமணி நேரம் நில்லு.. அப்புறம் போ" என்றவனை கோபத்தில் முறைத்தவள்..


"என்ன விளையாடுறீங்களா?? நான் ஏன் அரைமணி நேரம் நிக்கணும். உங்க கான்ஸ்டபிள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டேன். அவ்ளோ தான். நான் போறேன்" என வேகமாக செல்ல முயன்றவளின் கையைப் பிடித்து அழுத்தமாக நிறுத்தியவன்..


"நீ ஓடுற வேகத்தை பார்த்தா.. ஏதோ அக்யூஸ்ட் மாதிரி தெரியுனே" என சந்தேக பார்வையில் கேட்டவளை அனல் கக்க பார்த்தவள்..


"நான் ஒரு காலேஜ்ல ப்ரோபஸர்.. ஒன்னும் அக்யூஸ்ட் கிடையாது.. லீவ் மை ஹேன்ட்ஸ்" என்றவளை சுவாரசியமாக பார்த்தவன்..


"கையை விடலன்னா என்னடி பண்ணுவ??" என்றவனின் கரங்களில் அகப்பட்டிருந்த கையை வேகமாக உதறியவள்..


"இன்னொரு தடவை டி சொன்னீங்க மரியாதை கெட்டுடும்" என்றவளின் கையை முறுக்கி முதுகின் பின்னால் கொண்டு வந்தவன்..


"திமிரா பதில் சொன்னது மட்டுமில்லாம… என்னையே கை நீட்டி வேற பேசுறீயா??" என கையை முறுக்கியவன் வேண்டுமென்றே அவளை அக்யூஸ்ட் போல் சிறைப்பிடித்து வைத்தான்.. லேடீ கான்ஸ்டபிளை துணைக்கு வைத்து அன்றிரவு முழுவதும் நடுரோட்டில் நிற்க வைத்து விட்டான்..


இதுவரை அவமானம் என்பதை அறியாத தூரிகாவிற்கு.. நிகரிலன் செய்ததை உச்சக்கட்ட அவமானமாக கருதியவள்.. நிகரிலன் மீது தீரா பகையையும் வளர்த்துக் கொண்டாள்..


இரவு சரியாக தூங்காததால் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நிகரிலனின் காதில் "மாம்ஸ்ஸுஉஉஉ" என்ற அலறலில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான் நிகரிலன்..



சரியாக தூங்காததால் ஏற்கனவே எரிச்சலில் இருந்தவன், அர்த்தனா கத்திய கத்தலில் இன்னும் கடுப்பாகியவன் அவள் தலையில் நங்கு நங்குவென்று கொட்டி வைத்தான்..


"உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன் காதுக்குள்ள கத்தாதேன்னு.. ஆளும் மூஞ்சியும் பாரு.. மூஞ்செலி மாதிரி.. நைட்ல அக்காகாரி தூங்க விடமாட்டேங்குறா.. காலையில என்னடான்னா தங்கச்சிகாரி தூங்க விடமாட்டேங்குறா.. உங்களுக்கு தாய்மாமனா பொறந்ததுக்கு நாய்மாமன் பொழைப்பா தான் இருக்கு என் பொழைப்பு" என புலம்பியவாறே குப்புற விழுந்து மறுபடியும் உறங்க ஆரம்பித்தவன் சில நிமிடங்களில் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.. "இப்பொழுது நடந்தது கனவா?? நனவா" என யோசித்தவாறே,


அறையை சுற்றிப் பார்க்க அங்கு யாரும் இருந்தததற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது… "இப்போ தக்காளி பக்கத்துல இருந்த மாதிரி இருந்திச்சி… தக்காளி.. ஹேய் தக்காளி" என கத்திக் கொண்டே வெளியே சென்றவனுக்கு இன்ப அதிர்ச்சியாக அவன் குடும்பத்தினர் அனைவரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்..


அவர்களைப் பார்த்ததும் உள்ளுக்குள் தோன்றிய சந்தோஷத்தை மறைத்தவாறே, "என்ன எல்லாரும் ஒன்னா வந்துருக்கீங்க??" என்றவனின் பார்வையோ தன் ஜோடியை தேடி தவித்தது..


"நீதான் அந்தப் பக்கமே வரமாட்டேன்னு சொல்லிட்டேன்.. ஆனா உம் பொண்டாட்டி நைட்டெல்லாம் ஒரே அழுகை.. உன்னை பார்த்தே ஆகணும்னு .. அப்புறம் என்ன பண்றது?? அதான் நாங்களே புறப்பட்டு வந்துட்டோம்??" என்ற மரகதவீணாவின் பேச்சை காதில் வாங்கினானா என்பது சந்தேகம் தான்.. அவன் மனம் தான் எப்பொழுதோ அவளிடத்தில் பறந்து சென்றிருந்ததே..


"ஆமா மாமா எங்கே??"


"அவருக்கு டுயூட்டி இருக்காம்டா.. நான் அம்மா, ரோசா, இந்த அறுந்தவாலு மட்டும் தான் வந்தோம்" என்ற வீணாவின் பேச்சில் அதுவரை அங்கு இருந்ததே பெரிது என்பதை போல் நேராக மாடிக்கு செல்ல.. அங்கு கைகளை கட்டியபடி சில்லென்ற காற்றை அனுபவித்தபடி நின்றிருந்தவளை இடுப்பில் கையிட்டு இறுக்கமாக அணைத்தவன்.. "ரோசாப்பூ" என கிசு கிசுப்பான ஒலித்த உதடுகளோ முதுகில் பயணித்தது.. அவனின் மீசை உராய்வில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்து அடங்கியது பெண்ணவளின் தேகம்.. அவனின் சூடான மூச்சுக்காற்று அவள் கழுத்தில் முட்டி மோதியது… கழுத்தில் பயணித்த உதடுகளோ தன் அச்சாரத்தை பதித்தவாறே மெல்ல மெல்ல முன்னேறி சட்டென அவளை திருப்பியவன்.. அவளின் இதழில் அழுத்தமாக கவ்விக் கொண்டான்.. இத்தனை நாள் பிரிவின் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ள நினைத்தவன் சற்று வன்மையாக இதழ்களின் போரிட.. அவனின் கரங்களோ அவளின் அங்கங்களை மெல்ல வருடி விட்டது.. தீண்டலுக்கும்.. தூண்டலுக்கும் இடையில் தவித்துப் போனாள் பெண்ணவள்.. "ம்ம்ம்.ஹும்" என மூச்சுக்காற்றுக்கு ஏங்கியவளின் இதழ்களை விட்டவன். அவளின் நெருக்கத்தை விடவில்லை.. அவளை தன் மார்புசூட்டில் முகம் புதைத்தவாறே அணைத்தவனுக்கு அப்படியொரு நிம்மதியை கொடுத்தது அவளின் அருகாமை...


இரு உள்ளங்களும் காதலில் திளைக்க

காதலே சாபமாய் மாறியது யார் செய்த சதியோ??
 

Madhusha

Well-known member
Wonderland writer
தூரிகா 4


உல்லாசமாக விசிலடித்தபடி மாடியில் இருந்து இறங்கியவனை ஒரு சின்னஞ்சிறு கரம் ஒன்று இழுத்தது.. ஆறடி ஆண்மகனை ஒரே இழுப்பில் இழுத்து விட முடியுமா?? அவன் இழுத்த இழுப்பில் எதிரில் இருந்தவள் தான் அவன் மேல் மோதி நின்றாள்..


"ஸ்ஸ்ஸ்.. அம்மாஆஆ" என மோதிய தலையை தேய்த்தபடி, "அறிவிருக்கா மாமா உனக்கு?? இப்டியா இழுப்ப.. வலிக்குது" என்றவளின் தலையை தேய்த்து விட்டவன்..


"ஸீரோ சைஸ் உடம்பை வச்சிக்கிட்டு என்னை இழுத்தா நீ தான் மோதி கீழே விழணும்.. சரி எதுக்கு இப்டி இழுத்து புடிச்சி விளையாடிட்டு இருக்க??" என்றவனின் தோள் சாய்ந்தவாறே மாடிப் படிக்கட்டில் அமர்ந்தனர் இருவரும்.


வாடியிருந்த அர்த்தனாவின் முகத்தை பார்த்தவனுக்கு ஏதோ புரிவதைப் போலிருந்தது.. "என்னாச்சிடா?? அக்கா ஏதாவது சொன்னாளா??" என்றவனின் கேள்விக்கு.


அப்பொழுது தான் மாடியில் இருந்து இறங்கி வந்த ரோசாப்பூ.. அவனின் வலது தோளில் சாய்ந்தவாறே, "அவகிட்ட ஏன் கேட்குற?? நான் சொல்றேன்.. அவ பெங்களூர் போறது யாருக்குமே புடிக்கலை மாமா.. ஆனா அவ தான் போவேன்னு பிடிவாதமாக இருக்கா!!" என்றவளை பார்த்து முறைத்தவன்..


"அவ படிக்கப் போறதுல உங்களுக்கெல்லாம் என்னதான் பிரச்சனை??" என காட்டமாக கேட்டவனை பார்த்து முறைத்தவள்,


"என்ன பிரச்சனையா??.. எல்லார்கிட்டையும் பிரச்சனை தான்.. ஊர் புல்லா பிரச்சனை பண்ணிக்கிட்டு சுத்துறா?? யார் கேட்டாலும், எங்க மாமாவும், அப்பாவும் போலீஸ்னு திமிரா சொல்லிட்டு சுத்துறா?"


"திமிரா ஒன்னு சொல்லலை.. உண்மையை தான் சொன்னேன்.. ஏன் பொய்யுன்னு சொல்லப் போறீயா நீ??" என பதிலுக்கு பதில் பேசியவளின் தலையில் கொட்டப் போன ரோசாப்பூவின் கையை இறுகப் பற்றியவன், "எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.. தக்காளியை அடிக்காதேன்னு?" என்றவனை பார்த்து முறைத்தவள்..


"நீ குடுக்கிற செல்லம் தான் இவளை ரொம்ப சேட்டை பண்ண வைக்குது.. எக்கேடோ கேட்டுப் போங்க.. ரெண்டுமே உருப்புடாத கேஸுங்க" என கத்திவிட்டு சென்றவளை பார்த்தவர்களின் இதழ்களில் சிறு சிரிப்பு தான் தோன்றியது..


அவள் செல்லும் வரை அமைதியாக இருந்தவன்.. "என்ன பண்ண??" என்றவனை பார்த்து தலை குனிந்து அமர்ந்தவாறே, "எம் பிரண்டோட அண்ணன் ஒரு பொண்ணை காதலிச்சான். அந்தப் பொண்ணும் இவனை விரும்பிச்சா.. அதான் அந்தப் பொண்ணை கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ணி வச்சிட்டேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது அவ எம்.எல்.ஏ பொண்ணுன்னு" என ஒன்றுமே தெரியாத அப்பாவி போல மூஞ்சை வைத்துக் கொண்டு சொன்னவளை பார்த்து புருவம் சுருக்கி பார்த்தவன்..


"நான் ஊர்ல இல்லைன்னா என்ன வேணும்னாலும் பண்ணுவீயா?? காதல் கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு உனக்கு கொழுப்பு கூடிருச்சி??" என காதை பிடித்து திருகியவனை கண்டு அலறிய அலறலில் வீட்டில் உள்ள மூன்று பேரும் அவன் முன்னே ஆஜாராகியிருந்தனர்..


ரோசாவோ, "இன்னும் நாலு அடி சேர்த்து போடு மாமா.. பண்றதெல்லாம் வேண்டாத வேலை" என்றவளை பார்த்து முறைத்தவன் அடுத்ததாக திரும்பியது என்னவோ தன் தமக்கை மரகதவீணா மீது தான்..


"அக்கா".


"தக்காளி படிக்க போகட்டும்.. நான் அதுக்கான எல்லா ஏற்பாடையும் பண்ணிட்டேன்.. பெங்களூர்ல இவ பெயிங் கெஸ்ட்டா தான் தங்கப் போறா?? காசு நான் கொடுத்துறேன்.. அவளோட பாதுகாப்பு என்னோட பிரச்சனை.. இதுக்கு மேல ஏதாவது விதாண்டாதவாதம் பண்ண போறீயா??" என சுள்ளென எரிந்து விழுந்தவனை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் அடுத்த வார்த்தை பேசுவதற்குள்..


"மீனாட்சி" என்ற குரலில் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நின்றது நிகரிலன் உள்பட.. இது யார் குரலென தெரிந்தவர்கள் வேகமாக கூடத்திற்கு ஓடிப் போக.. நிகரிலனிற்கு பேச்சு மூச்சற்ற நிலை தான்.. தன் தந்தையா?? தன் கர்வம், வைராக்கியம் விட்டு தன் வீட்டின் வாசல்படியை மிதிக்கிறாரா??" என உள்ளுக்குள் தோன்றிய கேள்வியை தனக்குள் புதைத்தவன்.. அவரைப் பார்த்து முறைக்க.. அவனுக்கு சிறிதும் சலிக்காமல் முறைத்தார் செல்வபூபதி..


இருவரின் பார்வையையும் பார்த்த மீனாட்சியும், வீணாவும் "இதுங்க எப்போ தான் மாறப் போகுதுங்களோ??" என பெருமூச்சு விட..


"மீனாட்சி அர்த்தனா இங்கே தான் படிப்பா. அவளுக்கு இங்கேயிருக்கிற மெடிக்கல் காலேஜ்ல சீட் வாங்கிட்டேன்" என்றவரின் வார்த்தையில் அருகிலிருந்த பூஜாடியை அடித்து நொருக்கியிருந்தான் நிகரிலன்..


"என்ன நினைச்சிட்டு இருக்காருக்கா உன் அப்பா.. இப்படித்தான் ஒருத்தர் மனசுல ஆசையை விதைச்சிட்டு அப்புறம் அதை கலைச்சி விடுறதையே பொழைப்பா வச்சிருக்காரு" என கடுமையாக சாட..


"என்னடா ஓவர் சவுண்டு கொடுத்துட்டு கிடக்குறவன்.. என்ன மீனாட்சி இது. பொம்பளை புள்ளையை எப்படி அவ்ளோ தூரம் அனுப்பி வைக்கிறது.. அவளுக்கு இன்னும் அவளையே பாத்துக்க தெரியாது.. இந்த துரை அவளுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் காவக்காத்துட்டு கிடப்பாரா??" ஏன ஓங்கி ஓலித்த குரலில் நடுங்கியது ஒட்டு மொத்த பெண்களின் கூட்டமும் தான்..


நிகரிலனிற்கு கோபம் உச்சிக்கு ஏறியது.. "இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க??"


"என்னால அர்த்தனாவை எந்த ஊருக்கும் அனுப்ப முடியாது??" என்றவரின் வார்த்தையில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க..


"நான் அனுப்பித்தான் தீருவேன்"


"நீயா அவளை பெத்த?? பெத்தவளே சும்மா இருக்கா?? நீ என்னடா ஓவரா சவுண்டு கொடுக்கிற?" என சொல்லி முடிப்பதற்குள்,


"அப்பாஆஆஆ" என கத்தியிருந்தார் வீணா..


"என்னப்பா பேசுறீங்க?? அவனை பார்த்து இப்டி ஒரு கேள்வி கேட்க உங்களுக்கு எப்டிப்பா மனசு வந்திச்சு?.. நான் கர்ப்பமான நாள்ல இருந்து அர்த்தனா பொறந்து, இப்போ வரைக்கும் அவளை பாத்துக்கிறது அவன் மட்டும் தான்.. நான் அவருக்கிட்ட பேசிட்டேன்.. கண்ணா எந்த முடிவெடுத்தாலும் அது எனக்கு சரின்னு சொல்லிட்டாரு.. எனக்கும் கண்ணா எடுத்த முடிவு சரின்னு தான் தோணுது… அவளுக்கு என்னவானாலும் அவன் பார்த்துப்பான் ப்பா" என தீர்க்கமான குரலில் சொல்லியவர் வேகமாக வெளியேறி விட்டார்.


"தாத்தா.. எனக்கு மாம்ஸு தான் எல்லாம்.. மாமா போக வேண்டாம்னு சொன்னா நான் எங்கேயும் போக மாட்டேன்.. என் மாமாவோட முடிவு தான் என்னோட முடிவு" என படபடத்தவாறே வேகமாக அறைக்குள் சென்று விட..


"இதெல்லாம் நல்லதுக்கில்ல தோணுது மீனாட்சி. அவ்ளோ தான் சொல்லிட்டேன்??" என்றவர் நிகரிலனை முறைக்க தவறவில்லை..


அவரை பதிலுக்கு பதில் முறைதது விட்டு ஸ்டேஷனிற்கு சென்றான்.. ஸ்டேஷனில் போன் அடிக்கும் சத்தத்தில் காதில் எடுத்து நிகரிலனிற்கு நாகர்கோவிலிற்கு செல்லும் காட்டுப் பகுதியில் தலை வெட்டப்பட்டு முண்டமாய் ஒரு பிணம் கிடைக்கிறது என்ற தகவலில் இரண்டு கான்ஸ்டபிளுடன் சம்பவ இடத்திற்கு சென்றான் நிகரிலன்..


ரோட்டில் வண்டியை நிப்பாட்டியவன் கம்பீரமான தன் நடை மாறாது, கருவேல மரங்கள் தன் மேல் படாதவாறு கீழே குனிந்தும், தாண்டியும் சென்றவன்.. ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்ற பின் நாலைந்து சுற்றி நின்று கொண்டிருந்தனர்.. பார்க்கும் பொழுதே தெரிந்தது.. விறகு வெட்டுபவர்கள் என்பது..


"யார் இந்த பாடியை முதல்ல பார்த்தது??" என்ற கணீரென்ற குரலில்.. முகம் முழுவதும் பயத்துடன் தன் கையிலிருந்த துண்டை துடைத்தபடி சற்று பவ்வியமாக "நாங்க தான் பாத்தோம் அய்யா.. விறகு வெட்ட வந்த இடத்துல யாருடா இது படுத்துருக்காக அப்டின்னு பாக்க வந்தோம்.. கிட்டக்க போய் பாத்தா தான் தெரியுது.. தலையை காணும்.னு. அதான் போலீஸுக்கு தகவல் சொல்லிட்டோம்யா" என்றவனின் தகவலை காதில் வாங்கியவாறே தன் கூர்மையான பார்வையில் பாடியை அளந்தவனுக்கு இறந்தவன் வயது முப்பது இல்லை முப்பத்தைந்து வயதிற்குள் இருக்கலாம் என தீர்மானித்தவன்..



கருவேலங்காட்டை சுற்றிப் பார்த்தவனுக்கு பெரியதாக எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.. குவாட்டர் பாட்டில், பழைய அறுவா ஒன்று கிடந்தது.. அதுவும் ரத்தக்கறை எதுவும் இல்லாமல் சுத்தமாக இருந்தது..


"பக்கத்துல ஆறு,குளம் கிடக்கால??" என்றவனுக்கு பவ்வியமாக


"ஆமாய்யா. பக்கத்துல சின்ன வாய்க்கால் இருக்கு.. பண்ணிங்க தான்யா அங்கன கிடக்கும்" என்றதும் அந்த வாய்க்காலை தேடி ஓடியவனுக்கு பெரியதாக எந்த ஆதாரமும் சிக்கவில்லை…


நாலைந்து பண்ணிகள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது..


"சரில.. நீங்க போய் வேலையை பாருங்க.. நாங்க கூப்பிடும் பொதெல்லாம் வரணும்??" என எச்சரிக்கையாக சொல்லி அனுப்பி விட்டான்..


ஆறுமுகம்.. இவனை போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வை.. இவன் யாரு?? என்ன பண்றான் அப்படிங்குற டீடெய்ல் எனக்கு நாளைக்குள்ள வேணும்??" என கணீர் குரலில் சொல்லிவிட்டு சென்றவனின் எதிரில் நின்றாள் தூரிகா..
 
Status
Not open for further replies.
Top