ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

திமிரழகே (பாவை) கதை திரி

Status
Not open for further replies.

அருண்மொழி

Well-known member
Wonderland writer
திமிரழகே -1


TextArt_1648586475063.jpg

டேய் சிதம்பரம் இந்த தடவையும் உன் பொண்டாட்டி பொட்டச்சிய தான் பெத்து போட்டு வச்சுருக்கா..

உனக்கு ஒரு வாரிசு இவ பெத்து கொடுக்க மாட்டா போல, பேசாம ரெண்டாம் கல்யாணம் உனக்கு பண்ணலாம்டா என புலம்பியவாறு அமராவதி இருந்தார்..

சிதம்பரம் தன் தாய் சொன்னதை கேட்டு கோபத்தோடு துண்டை உதறி தோளில் போட்டபடி கத்தையானா மீசையை முறுக்கி கொண்டு மனைவி பானுமதியை வசை பாடி கொண்டிருந்தார் மனதுக்குள் ...

சீமைல இல்லாத சிறுக்கிய கொண்டு வந்து உன் புருஷன் என் தலைல கட்டிப்புட்டு அந்த ஆளு நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு என தன் தாயிடம் குறைபட்டு கொண்டிருந்தான் சிதம்பரம் தந்தையை பற்றி..

சிதம்பரத்தின் அத்தை மகள் தான் பானுமதி, சொந்தம் விட்டு போக கூடாதென தன் மகனுக்கு தங்கையின் மகளையே கட்டிவைத்தார் அவரின் தந்தை சுந்தரம்..

மகனுக்கு திருமணம் முடிந்த சந்தோஷமோ இல்லை தங்கையின் மகளை கட்டிய சந்தோசமா என்னமோ ஒரே மாதத்தில் உயிரை விட்டுவிட்டார் சிதம்பரத்தின் தந்தை...

பானுமதி வந்த நேரம் சரி இல்லை என்று தினமும் திட்டும்போது தன் தாயை திட்டுவார் சிதம்பரம், எல்லாம் சில காலம் தான் என்பது போல, தனக்கு முதல் குழந்தை பிறக்கும் வரை மிகவும் பாசமாய் பார்த்து கொண்டார் மனைவியை...

முதல் வாரிசு ஆண்பிள்ளை என உறுதியாக இருந்த சிதம்பரம், அது பெண்பிள்ளை என்று பிறக்க மனைவி மேல் இருந்த பாசம் படிப்படியாக குறைந்தது...

இதோ ஆண் வாரிசு வேண்டுமென்று இருந்தவர் ஆறாவது குழந்தையும் பெண் பிள்ளையாய் பிறக்க கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்..

இப்போது போல் அப்போது மருத்துவம் என்பது கைவைத்தியம் மட்டுமே எத்தனையோ முறை பானுமதி நமக்கு இருக்க குழந்தை போதும் என்று கூறினார்...

தனக்கு ஆண் வாரிசு தான் வேண்டுமென்று இடைவெளியின்றி வருடத்திற்கு ஒரு குழந்தை பெற்றெடுத்தும் பானுமதியின் நேரம் எல்லாம் பெண்ணாய் போக மாமியாரின் பேச்சுக்கு மட்டுமின்றி கணவரின் ஏச்சு பேச்சுக்கும் ஆளாகி போனாள்...

பானுமதி பிள்ளை பெற்றுடுத்த களைப்பில் கண்ணயர்ந்து இருக்க, சிதம்பரம் சோகம் மறக்க குடியை தேடி போக அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் பானுமதிக்கு வலி எடுத்தது....

மீண்டும் அக்கம் பக்கத்தினர் கூடி கொண்டு அவளுக்கு என்ன வென்று பார்க்க, அழகான ஆண் குழந்தை ஒன்று பெற்றுடுக்க விஷயம் சிதம்பரதிற்கு தெரிவிக்கப்பட்டது...

ஆண் வாரிசு என் குடும்பத்தை தூக்கி நிறுத்த வந்துட்டான்னா என் சிங்கக்குட்டி என்று வேகமாய் வீட்டுக்கு வந்தவர் மனைவியும் பார்க்க வில்லை அதற்கு முன் பிறந்த மகளையும் பார்க்கவில்லை..

மகனை தூக்க செல்ல கொஞ்சம் நேரம் இருடா சுத்தம் பண்ணி தரேன் என அமராவதி சொல்ல சிதம்பரமும் கூடவே சென்றான்..

மடப்பையன் இந்த புள்ளைய என்ன பாடு படுத்திவச்சுருக்கான் பாரு, இந்த ஆறு புள்ளைய எப்படி கரைசேர்க்க போறானோ...

ஆம்பளை புள்ளை ஆம்பள புள்ள வச்சு கொண்டாட்டம், புள்ள பெத்தவ எப்படி இருக்கானு ஒரு எட்டு வந்து பார்த்தனா பாரு என ஊருக்காரா உறவுகள் புலம்ப....

அன்றைய தினம் முழுதும் பானுமதி இரட்டை குழந்தை பெற்றெடுத்தது தான் தலைப்பு செய்தி போல் பரவி கொண்டிருந்தது...

பானுமதியின் தாய் தந்தை மதியம் தான் விஷயம் கேள்விப்பட்டு வந்திருந்தார்.. மகள் படுக்கையிலே கிடப்பதை கண்டு பதறினார்...

பச்ச உடம்புக்காரி பத்தாததுக்கு ரெட்டை புள்ளை வேற ,ஒரு சுக்குகுச்சி ரசம் கூட இந்த வீட்டு பெரிய மனுசி வச்சுக்கொடுக்களையோ என புலம்பி தீர்த்து மகளுக்கு ரசம் சாதம் வைத்து கொடுக்க தயாரானார்...

என்ன பேர புள்ளைங்களா எங்க உங்க அப்பன் என பானுமதியின் தந்தை முருகேசன் கேட்க, அப்பா தம்பியை வச்சுக்கிட்டு அங்க பின்னாடி திண்ணையில உக்காந்திருக்காரு தாத்தா...

பாவிப்பையன் இவனுக்கு போய் என் மகள கட்டி கொடுத்து அவ வாழ்க்கையே நாசம் பண்ணிப்புட்டேன்..

என்னத்த சொல்ல எல்லாம் என் மச்சான் மனசுக்கு கொடுத்தது, அந்த சிங்கம் ஒரு கொரங்கு பெத்து வச்சுருந்துருக்கு என மனதுக்குள் புலம்பி தீர்த்தார் முருகேசன் ...

தாத்தா தாத்தா என தன் பேத்தி அழைக்க நிகழுக்கு வந்தவராய் சொல்லு கண்ணு என்ன ஆச்சு என கேட்டார்....

பசிக்கிது தாத்தா ஆயா எங்களுக்கு இன்னும் சாப்பாடு தரலை அம்மா கூட படுத்தே இருக்காங்க என மூத்தவள் கூற..

இந்த வீட்டு ஜென்மங்கள் பத்தி தெரிஞ்சும் இப்படி முட்டாள் மாதிரி அவசரத்துல ஒன்னும் வாங்காம வந்துட்டேனே...

அடியே தங்கம் புள்ளைங்களுக்கு ஏதாவது சோறு ஆக்கு டி எல்லா புள்ளையும் பசியும் பட்டினியுமா இருக்கு என கூறினார்...

இதோ இதோ முடுஞ்சுடுங்க புள்ளைங்கள கூப்பிட்டு வாங்க என்றிட அனைவரும் உணவு உண்டு முடிக்கும் வரை கூட பானுமதியின் கணவனும் மாமியாரும் வந்து அந்த பக்கம் எட்டிப்பார்க்கவில்லை...

பச்சைப்பிள்ளை என்பதால் பசிக்கு அழுக அப்போது தான் கொண்டு வந்து பானு பக்கத்தில் கிடத்திவிட்டு சிதம்பரம் வெளியில் சென்றுவிட்டார்...

ஒரு மாதம் வரை பானுமதிக்கு தான் மிகவும் சிரமம் இரண்டு கைக்குழந்தையும் வைத்து கொண்டு ஐந்து சிறு குழந்தைகளை சமாளிக்க மிகவும் திணறி போனார்...

அதுவும் மாமியார் நேரத்துக்கு உணவு வரவில்லை என்றால் அதற்கும் ஒரு வசைபாட தொடங்க மிகவும் நொந்து போனார்..

பானுமதியின் நிலை உணர்த்ததாலோ என்னவோ ஆறு பிள்ளையும் அதிகம் சேட்டை செய்வதில்லை, ஆண் வாரிசு அமராவதி இல்லை சிதம்பரம் கையில் தான் எப்போதும்...

இரட்டை குழந்தைகளுக்கு பெண்பிள்ளைக்கு அகிலா என்றும் ஆண்பிள்ளைக்கு அகிலன் என்றும் பெயர் வைத்தனர்...

பதினேழு வருடம் போனதே தெரியவில்லை அவ்வளவு வேகமாய் நகர்ந்து விட்டது..

தலைமகள் வதனி இருபத்தி ஆறு வயது இரண்டு மகன், ஏழு வயது ரகு, நான்கு வயது ரஞ்சன், கணவன் குமார் தன் மாமன் மகன்..

இரண்டாம் மகள் ரேணுகா வயது இருபத்தி நான்கு ஒரு மகள் ஒரு மகன், மகள் நிஷா வயது மூன்று, மகன் ரித்தீஷ் ஒன்றரை வயது...

மூன்றாம் மகள் ஓவியப்பாவை இருபத்தி இரண்டு வயது நிரம்பிய பெண் அனைவரும் தந்தைக்கு பயந்து ஒதுங்கி போக பாவை ஒருவள் மட்டுமே தன் தந்தையை எதிர்த்து பேசும் திறன் கொண்டு வாழ்பவள்...

பத்தாம் வகுப்பிற்கு மேல் பன்னிரெண்டாம் வகுப்பு போகவில்லை அதற்கு பதிலாக பட்டணத்தில் டிப்ளமோ ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கிறேன் என கூற சுந்தரம் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை...

ஏனோ அவள் தன் தந்தையை உரித்து வைத்து இருப்பதால் கொஞ்சம் அன்பினால் என்று கூட கூறலாம், அமராவதி கூட பாவை தன் கணவனை போல் உள்ளதால் அதிகம் திட்டுவதும் இல்லை..

ஏதாவது சொன்னாலும் பாவை வாய்க்கு வாய் பேசுவதால் ஏதும் பேசவந்தாலும் தானாய் நிறுத்தி விடுவார்...

அமராவதி எவளோ வழி செய்தும் தன்னால் இப்போது திருமணம் செய்துகொள்ள முடியாதென மறுத்துவிட்ட்டாள்.

இப்போது பட்டணத்தை விட்டு கொஞ்சம் தள்ளி பல ஊர் சேர்ந்த மாதிரி உள்ள பொது இடத்தில் சிறிதாய் ஹோட்டல் வைத்து இன்று நான்கு பேர் வேலை பார்க்கும் அளவில் நடத்தி கொண்டு வருகிறாள்..

பாவை ஹோட்டல் வைப்பதாய் தன் தாயிடம் கூற பொம்பள பிள்ளைக்கு என்ன டி ஹோட்டல் படிச்சு கிளிச்சது போதும் உங்க அப்பா மாப்பிளை பார்ப்பார் கல்யாணம் கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துற வேலைய பாரு என்றார்..

என்ன உன்ன மாதிரி என்னையும் வத வதனு பிள்ளை பெத்து போட்டுட்டு ஒன்னுமே செய்யாத புருஷன வச்சுக்கிட்டு அடுத்த வீட்டு வயக்காட்டு வேளைக்கு போய் கஷ்டப்பட்டு என் பிள்ளைங்களை படிக்க வைக்கணும்னு சொல்றியா..

உன்ன மாதிரி ஒரு வாழ்க்கை வாழறதுக்கு நான் கல்யாணமே செய்துகாம சும்மா இருந்துடுவேன் என்று பொறிந்தாள் பாவை....

அப்பா பெருசா இப்போ மாப்பிளை பார்த்து அப்டியே கட்டிவச்சுட போறாரு, அவரு இசியா மாப்பிளை கொண்டுவந்துடுறாரு கல்யாணம் கட்டி கொடுக்க கண்ணியதானம் செய்து கொடுத்தது தவற வேற என்ன செய்தாரு அக்கா ரெண்டு பேருக்கும்..

இல்லை சின்னவயசுல இருந்து அகிலனை தவிர எங்க ஆறு பேருக்கும் ஒரு மிட்டாய் வாங்கி தந்துருக்காரா..

கல்யாணம் தானே செய்துகிறேன் உன் புருஷன் என்னைக்கு எல்லா செலவையும் ஏத்துக்கிட்டு எனக்கு கல்யாணம் கட்டி கொடுக்குறாரோ அன்னைக்கு அவரு சொல்ற மாப்பிளைக்கு கழுத்தை நீட்டுறேன் இப்போ எனக்கு தாத்தா பேர்ல இருக்க அந்த இடம் வேண்டும் ஹோட்டல் கட்ட என்றாள் ....

இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அமராவதி அது என் பொண்ணுகளுக்கு தான் கொடுப்பேன் எவன் வீட்டுக்கோ போக போற பொட்டகழுத்தை உனக்கு ஏன் டி கொடுக்கணும் என்றார்...

ஹே கெழவி இப்போ சொன்னியே என் பொண்ணுன்னு அது பேருக்கு தான் பொண்ணா என்ன என்றிட,அடி கழுதை என் மகள என்ன டி சொல்ற என்றிட...

உங்களுக்கு பொறந்தது மட்டும் பொண்ணு நாங்கல்லாம் பொட்டகழுதையா நாக்கு இருக்குனு எப்படி வேணாலும் பேசினால் எனக்கும் நாக்கு இருக்கு மறந்துடாத என்றாள்...

அப்போது வெளியில் இருந்து வந்த சிதம்பரம், நாளைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் அந்த இடம் மொத்தமும் உன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிடலாம் என கூறினார்...

டேய் சுந்தரம் என்னடா பேசுற அவதான் கழுதை ஏதோ பேசுறானா உனக்கு புத்தி இல்லை என்றா, அம்மா சும்மா இரு இந்த விசயத்துல நீ தலையிடாது இருந்தால் நல்லது.. ..

என் அக்கா தங்கச்சிக்கு இதுவரை நான் செஞ்சது போதும் இனி என் பிள்ளைகளுக்குனு ஏதாவது செய்றேன் என்றிட பானுமதி வாய்பிளந்து பார்த்து கொண்டிருந்தாள் இது தன் கணவன் தான என்று...

அதன் பின் எல்லாம் முடிந்து சிறிதாய் ஹோட்டல் துவங்கி இன்று அந்த இடத்திற்குரிய மொத்த பணத்தையும் தன் தந்தையிடம் கொடுத்துவிட்டாள் நான் யாருக்கும் கடன் காரிய இருக்கலை என்று...

பாவை திருமணம் வேண்டாம் என்று முடிவாய் மறுத்துவிட, அதன்பின் தாயிடம் போராடி பல்லவிக்கு திருமணம் முடித்து வைத்தாள் பாவை, தங்கையின் மொத்த கல்யாண செலவும் பாவையே பார்த்து கொண்டாள்...

நான்காம் மகள் பல்லவி பள்ளிப்படிப்பை முடித்துவிட தேர்வு முடிவு வருவதற்குளே திருமணம் முடித்து இன்று இருபது வயதில் ஒரு வயது மகன் கார்த்திக், கணவன் ராஜேஷோடு வாழ்ந்து வருகிறாள்..

ஐந்தாம் மகள் பூங்குழலி பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துவிட இப்போது வரன் பார்த்துக்கொண்டு இருக்க எப்போதுடா திருமணம் முடிந்து செல்வோம் என்று காத்திருக்கும் பத்தொன்பது வயது பருவப்பெண்...

ஆறாம் மகள் அகிலா வயது பதினேழு அவள் அழுது புரண்டு கல்லூரி முதலாமாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறாள், அவள் கல்லூரிக்கு செல்வத்துக்கு முழு மூச்சாய் ஆதரவு கொடுத்து b.sc அக்ரி படிக்க வீட்டில் சம்மதம் வாங்கி கொடுத்து, இப்போது அவளை படிக்கவும் வைக்கிறாள் ஓவியப்பாவை...

தவபுத்திரர் அகிலன் உலகை ஆள பிறந்தவனாம் அதனால் மகனுக்கு மட்டும் சுந்தரம் அகிலன் என்ற பெயர் சூட்ட அதற்கு ஏதுவாய் மகளுக்கு அகிலா என பெயர் சூட்டினார் பானுமதி...

அகிலன் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கிறான், சிதம்பரம் எங்கேயும் வெளி வேளைக்கு செல்வதில்லை வயலில் விளைவிக்கும் மொத்த பணத்தையும் தன் செலவு போக மீதி அனைத்தையும் தன் மகனின் பேரில் அவனுக்கென்ன இருக்கும் சேமிப்பு கணக்கில் போட்டு கொண்டே வருகிறார்...

அன்று பாவை பேசியது மனம் கொஞ்சம் தெளிந்தாலும், மீண்டும் தான் சம்பாரிக்கும் பணம் அனைத்தும் தன் மகன் ஒருவனுக்கு மட்டும் தான் என்பதில் உறுதியாக இருந்தார்..

பானுமதி சிறுசிறுக சேர்த்து வைத்து தான் மகளின் திருமணம் முடித்தால் இப்போது அந்த சுமையை சுகமாய் பாவை தாங்கிக்கொண்டாள்...

அகிலன் பார்க்க தாய் போன்றே இருந்தாலும், பழக்கத்திலும் குணத்திலும் தன் தந்தையே தூக்கி சாப்பிடுபவன், அக்கா என்று யாரையும் மதிப்பதில்லை..

அதற்கு ஏற்றார் போல் கிழவியும் உன் அக்காளுங்களுக்கு சீர் செய்தே உன் வாழ்க்கைல சம்பாரிக்குற எல்லா சொத்தும் போய்டும் என்று அடிக்கடி சொல்வதால் அக்கா என்ற பாசம் யாருமேலும் இல்லாது போனது..

ஆனால் பாவை மேல் மட்டும் கொஞ்சம் பயம் உண்டு, பாவை பேசினால் தன் தந்தையே வாய் திறக்காதது ஒரு காரணம் என்றால், அவள் மற்ற அக்காக்கள் போல் இல்லாமல் சுயமாய் இருப்பது மற்றொரு காரணம்...


Pls share ur valuable comments..
கதை எழுதுறது படிக்கிற நீங்க உங்க கருத்து சொல்லுவீங்கனு நம்பிக்கைல தான், ஆனால் எதுவுமே சொல்லாம இருந்தா எப்படி, ஊக்கப்படுத்தினா தானே உடனே உடனே கதை எழுத தோன்றும், கருத்து வந்தால் தினமும் கதை வரும் இல்லைனா வாரம் ரெண்டு எபி தான், திங்கள் மற்றும் வியாழன் நன்றி..
 

அருண்மொழி

Well-known member
Wonderland writer
திமிரழகே -2


டேய் அப்பு வேலை எல்லாம் முடுஞ்சதா "இந்த மாட்டுக்கு தண்ணி வச்சுட்டு வந்துடுறேன் தாத்தா" அத ராமு பார்த்துப்பான் நீ இங்க வா...


"சொல்லுங்க தாத்தா" பக்கத்து ஊர்ல ஒரு பொண்ணு ஹோட்டல் வச்சு நடத்துது தெரியுமா.." ஹான் தெரியும் தாத்தா அந்த பக்கம் போகும் போது பார்த்துருக்கேன்" ..


அங்க போய் அந்த பொண்ணு கிட்ட சமையல் எப்படி இருக்கணும்னு என்னனென்ன சாப்பாடு போடலாம்னு கலந்து பேசிகிட்டு வா நான் ஏற்கனவே அந்த பொண்ணு கிட்ட ரெண்டு நாள் முன்னாடி பேசிட்டேன்..


இருந்தாலும் அந்த பொண்ணுக்கு இப்போதான் இந்த தொழில கால் ஊனிருக்க அதுனால வீட்டு விருப்பபடி உனக்கு ஏத்தமாதிரியும் சொல்லிட்டு அட்வான்ஸ் கைல கொடுத்துட்டு வா...


ஏன் தாத்தா நம்ம வீட்டு கல்யாணம் ஒரு கொறையும் இல்லாம நடக்கணும் அதுலயும் சாப்பாடு ஊரே மூக்கு மேல விரலை வைக்குற மாதிரி இருக்கனும் நான் பார்த்து பார்த்து டவுன்ல ஆளு கூப்பிடலாம்னு இருந்தா நீ ஏதோ பொட்ட புள்ள கடை வச்சிருக்கு அதுகிட்ட கொண்டு கொடுன்னு சொல்ற....


டேய் அப்பு சாப்பாடு ஊரு மெச்சி மூக்கு மேல விரலை வைக்கணும்னு இல்லை மனசார அவங்க வயிறு நிறையூரு அளவு இருந்த போதும்...


திருப்திகரமா தான் இருக்கும் எல்லார்க்கும் சாப்பாடு எனக்கு அந்த பொண்ணு மேல நம்பிக்கை இருக்கு..


அப்பறம் நம்மள சுத்தி இருக்கவங்களுக்கு நாம செய்றது அவங்க மேலும் வளர சிறு உதவி போல...


நாளைக்கு கல்யாண சாப்பாடு நல்லா இருந்தா இன்னும் நாலு பேரு அந்த பொண்ணு கிட்டே ஆர்டர் கொடுக்கலாம் அதுனால முகம் சுளிக்காம அங்க நல்ல முறைல பேசிட்டு வா...


பாத்துடா அப்பு அந்த பொண்ணு உன்னை விட ரொம்ப சாது என மௌனமாய் சிரிக்க.. ரொம்பத்தான் போறேன் போய் அந்த சாதுவை பார்த்து பேசிட்டு பக்குவத்தை தெரிஞ்சுக்கிட்டு வரேன் என கிளம்பிவிட்டான்..


கணேஷ் தாத்தாவின் செல்ல செல்வ பிள்ளை அவரின் அப்பு, விவசாயம் அவனது வேலை இல்லை ஆனால் விவசாயம் பற்றி அனைத்தும் தெரியும்...



கிடைக்கும் ஓய்வு நேரத்தில், ஆடு மாடுகளோடு வயலுக்கு சென்று விடுவான், நல்லவன் என்றும் சொல்ல முடியாது கெட்டவன் என்றும் சொல்ல முடியாது சராசரி மனிதன்.



மூச்சு வருதோ இல்லையோ முனுக்கென்றால் கோபம் வந்துவிடும், கோபம் கொள்ளாத ஆள் என்றால் அது கணேஷ் தாத்தாவிடம் மட்டுமே..



சொந்த ஊரைவிட்டு வெளியில் செல்ல விருப்பமில்லாததால் டவுனில் வாகனங்களுக்கு உதிரி பாகம் விற்கும் கடை வைத்திருக்கிறான்.

பாவை ஹோட்டல் வைத்திருக்கும் இடம் கிராமும் நகரமும் அல்லாத வளர்ந்து வரும் சிறிய டவுன் அளவுக்கு அதிகமான வருமானம் இல்லை என்றாலும் போதிய வருமானம் வருகிற இடம்..


மழை காலம் தவிர மற்ற நாட்களில் நன்றாகவே வியாபாரம் நடந்து வருகிறது இதுவரை வந்த வருமானத்தை கொண்டு தன் தங்கை திருமணத்திற்கு சிறுக சிறுக சேமித்து கொண்டே தனது ஹோட்டலையும் இன்னும் சற்று விரிவு படுத்தி கொண்டிருக்கிறாள்..


மதிய நேரம் என்பதால் சற்று கூட்டம் கொஞ்சம் அதிகமா தான் இருந்தது அதோடு சில கல்லூரி மாணவர்கள் அலப்பறை கூட்டி கொண்டிருந்தார்கள்..


இதுபோல் அப்போ அப்போ நடக்கும் என்பதால் அவர்கள் செய்யும் அளப்பறைகளை சிலர் கண்டும் காணாமலும் சென்றனர்..


அவர்கள் ஒரு நான்கு பேர் தேவைக்கும் அதிகமாய் உணவை ஆர்டர் செய்து கொண்டிருந்தனர்...


அதை பாவை கண்டாலும் அவர்கள் வீணடிக்கமாட்டார்கள் என எண்ணி தன் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்..


அந்த நான்கு பேரில் ஒருவன் கோகோகோலா வை நன்றாக குலுக்கிவிட்டு திறக்க அது பொங்கி வழிந்து அந்த இடத்தையே நாசம் செய்திருந்தது...


மதிய உணவுக்கு வந்த கூட்டமும் குறைந்து ஒரு சிலர் ஆங்காங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்..


இவர்கள் செய்யும் கூத்தை சிலர் முகும் சுழித்து பார்த்தனர், ஆனால் அது எதையும் கண்டு கொள்ளாமல் சிரித்து பேசி பாதி உணவை சிதறடித்து கொண்டிருக்க அதை கவனித்த படி இருந்த பாவை அவர்களை நெருங்கிருந்தால்..


மதியம் தாண்டி மாலையும் நெருங்கி கொண்டிருக்க, அந்த மாணவர்களோ கலாட்டா செய்தபடி, பேசி சிரித்து என்னென்னவோ ரெகளை செய்து கொண்டிருந்தனர்..


பார்த்தாலே தெரிந்தது எப்படியும் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களாக தான் இருப்பார்கள் என்று..


பொறுமை இழந்த பாவை அவர்களை நோக்கி சென்றிருந்தாள், ஹெலோ மிஸ்டர்ஸ் ஹோட்டல்க்கு சாப்பிட தானே வந்திங்க என்று கேட்க.. அதில் ஒருவன் " இல்லை சரக்கு அடிக்க வந்தோம் என்றான்..


" ஓஓஓஓ சூப்பர் அப்போ எனக்கும் கொஞ்சம் ஊத்துங்க என்றபடி அவர்கள் அருகில் இவளும் ஒரு ஷேர் எடுத்துப்போட்டு அமர "


ஹே என்ன திமிரா ஹோட்டல்க்கு சாப்பிட வந்தா நீ என்ன கேள்வி எல்லாம் கேக்குற என்ன இந்த இடம் கொஞ்சம் அசிங்கம் ஆகிடுச்சு அவ்ளோதானே அதுக்கும் சேர்த்து காசு வாங்கிக்கோ என்று சீறினான்...


" அட வாங்க நீங்க தான் இந்த கூட்டத்துக்கு தலைவனா பெருசா சீறிக்கிட்டு வர்றிங்க " ஓவரா பேசாத உன் உப்பு சப்பில்லாத சாப்பாட்டுக்கு பில் எவ்வளோனு சொல்லு...


" அடடா உப்பு சப்பில்லாத சாப்பாட்டை எதுக்கு இவளோ ஆர்டர் செய்திங்க என்று பாவை கேட்டிட " அது என் விருப்பம் உன் பில் கொடு என்றான்..


" பில் போடலாம் இங்க இருக்க சாப்பாடு யாரு சாப்பிடுவா என்று அவனை முறைத்தபடி கேட்க " வாங்கிட்டா எல்லாத்தையும் சாப்பிடணும்னு இல்லை எங்களுக்கு தோணினால் சாப்பிடுவோம் இல்லைனா வச்சுட்டு போவோம் உனக்கு என்ன காசு தானே தேவை வாங்கிட்டு போ என்று சத்தமிட்டான்..


"உனக்கு படிக்க தெரியுமா " வாட் என்னை பார்த்தால் என்ன மாடு மேய்கிறவன் மாதிரி இருக்கா என்று பல்லை கடித்து கொண்டு கேட்க " ஓகே அப்போ உனக்கு படிக்க தெரியும் பின்னாடி எழுதிருக்கத்தை படி....


திரும்பி பார்த்தவன் அதிலிருந்த வாசகத்தை படித்தான் " உணவு ஆரோக்கியமானது அதை ஆடம்பரமாக்கி வீண்டிக்காதீர்கள் நிறைவாக உண்டு மகிழ்ச்சியோடு வாழுங்கள் " என்ற வாசகம் எழுதிருக்க..


இப்போ அதுக்கு என்ன என்று திமிராய் அவள் புறம் திரும்ப " அதுக்கு ஒண்ணுமில்லை நீங்க ஆர்டர் செய்த எல்லாத்தையும் சாப்பிட்டு முடுச்சு தான் இடத்தை காலி செய்யணும் என்று கூறிவிட்டு நகர்ந்தாள்...


" முடியாது என்ன டி செய்வ என்று அவன் மீண்டும் எகிறிடா " கன்னத்தில் எரிச்சல் உணர்ந்து அதை தடவியவன் அப்போது தான் உணர்ந்தான் அவள் அறைந்திருப்பதை..


இது மரியாதை இல்லாம பேசினத்துக்கு சாப்பிடமா எழுந்தா அதுக்கும் தனியா கிடைக்கும் எப்படி வசதி என்றாள் பாவை திமிராக ..


கன்னத்தில் கை வைத்தபடி சுற்றி நோட்டமிட்டவன் அனைவரும் சாப்பிட்டு கிளம்பிருக்க இவர்கள் நால்வர் மட்டுமே அங்கிருக்க அவள் மீது வன்மத்தை வளர்த்து கொண்டு அவளை பார்த்த படியே நின்றான்..


" அவனை இழுத்து அமர வைத்த அவனது நண்பன் மச்சி சாப்பிட்டு போய்டலாம் வா என்று உணவை உண்டு முடித்துவிட்டு பில் கொடுத்துவிட்டு நகர்ந்தார்கள் ..


நண்பர்களை வண்டியை எடுக்க சொன்னவன் இதோ வரேன்டா என்று கூறி உள்ளே செல்ல எத்தனிக்க, அவனின் கோபத்தை அறிந்த சங்கர் என்ற நண்பன் அவனை தடுத்தான்...


" டேய் மச்சி பில் கொடுத்துட்டு வாலட்ட அங்க மறந்து வச்சிட்டேன் அதை எடுத்துட்டு வரேன் நீ பைக் ஸ்டார்ட் பண்ணு " என்று கூறிவிட்டு நகர்ந்தவன் பாவையை நெருங்கிருந்தான்..


சொடக்கிட்டு அவளை அழைக்க அவளோ அவள் வேளையில் கவனமாய் இருந்தாள், ஹெலோ என்று மீண்டும் அழைக்க என்ன என்பது போல் பாவை புருவத்தை உயர்த்தி வினாவிட.


" ஆம்பளை போடுற சட்டை பாண்ட் போட்டுக்கிட்டு தலையை எங்களமாதிரி வெட்டிக்கிட்டு இருந்தா மட்டும் நீ ஆம்பளை ஆகிட முடியாது பொம்பளை தான், நான் யாரு தெரியுமா என்கிட்டே உன் வேலைய காட்டிட்ட "என்று கேட்டான் கர்ஜனையாக...


" ஏன் உனக்கு நீ யாருனு தெரியாத அண்ட் ஐம் சாரி நான் டிடெக்ட்டிவ் ஏஜென்சிஸ் வச்சீல கண்டுபிடிச்சு சொல்றதுக்கு என்று அவளுக்கே உரிய திமிரோடு கூறிட...


" தேவை இல்லாமா என்கிட்ட மோதிட்ட தேவா டி இந்த தேவா கிட்டே மோத்திட்ட இதுக்காக நீ ரொம்ப வருத்தப்படுவ என்று கூறியவன் அவ்விடம் விட்டு நகர..


அவனை புருவம் சுருக்கி பார்த்தவள் ஏன் உனக்கு நீ யாருனு தெரியாத, அண்ட் ஐம் சாரி நான் டிடெக்ட்டிவ் ஏஜென்சிஸ் வச்சு நடத்தளை நீ யாருனு கண்டுபிடிச்சு சொல்றதுக்கு என்று அவளுக்கே உரிய திமிரோடு கூறிட



" தேவை இல்லாமா என்கிட்ட மோதிட்ட தேவா டி இந்த தேவா கிட்டே மோதிட்ட இதுக்காக நீ ரொம்ப வருத்தப்படுவ என்று கூறியவன் அவ்விடம் விட்டு நகர எத்தனிக்க ..



சார் தேவா சார் ஒரு நிமிஷம் நில்லுங்க என்றவள், இருக்கையிலிருந்து எழுந்து அவனை நோக்கி அடியெடுத்து வைக்க, என்ன என்பது போல் திமிராக பார்த்தவனை, மீண்டும் ஓங்கி அறைந்திருந்தாள் பாவை , விரல் நீட்டி எச்சரித்தவள் மரியாதை ரொம்ப முக்கியம் தம்பி..



உன் ஆம்பளை திமிரு இங்க வேண்டாம் வேற எங்கயாவது வச்சிக்கோ , சின்ன பையனா தெரியுற இல்லைனா இங்க நடக்குற சீன் வேறயா தான் இருக்கும், படிப்ப கெடுத்துக்காதீங்க தம்பி...



நல்லது மத்தவங்களுக்கு செய்யலைனாலும், சில நல்ல பழக்கங்களை முதல கத்துக்கோங்க, அதிலயும் பொது இடத்துல எப்படி நடந்துக்கணும்னு என்றவள் சென்று அவளது இருக்கையில் அமர்ந்துகொண்டாள்..



அவன் முறைத்து கொண்டு நிற்க, இவளோ போடா உன்னை மாதிரி எத்துணை பேர பார்த்திருப்பேன் என்பது போல் நினைத்துவிட்டு அடுத்த வேளையில் மூழ்கியும் போனாள்..



மீண்டும் அவளிடம் அடி வாங்கியவனுக்கு ஏதோ அவமானம் போல் தோன்றிட, ஒருநாள் என்கிட்ட மாட்டுவடி அப்போ இருக்கு உனக்கு என்று மனதுள் நினைத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்..



நண்பர்கள் யாரும் அவன் மீண்டும் அடி வாங்கியதை இப்போது பார்க்கவில்லை தான் என்றாலும், அவனுக்கு தாங்கமுடியவில்லை, வீட்டில் அடித்து வளர்க்கவில்லை என்றெல்லாம் இல்லை ஆனால் ஒரு பெண்ணிடம் அடி வாங்கிவிட்டோம் என்ற அவமானம்..



பொம்பளை புள்ள மாதிரியா இருக்குறா திமிரு புடுச்சவ ராட்சசி, ராட்சசி, ரெத்தகாட்டேரி என்று நினைத்தவனுக்கு கோபாமாய் வந்தது, என்றாவது ஒருநாள் பதிலடி கொடுப்போம் என்று நினைத்தவனுக்கு,



அப்படி ஒரு வாய்ப்பே அவள் கொடுக்க போவதில்லை, இவன் தான் அவளிடம் அதிகம் வாங்க போகிறான் என்பது அறியாமல் சபதமெல்லாம் எடுத்து கொண்டான் தேவா..

என்ன மச்சான் போலாமா என்ற நண்பனிடம் போலாம் வண்டிய எடு என்றவன், பின்னே அமர்ந்து கொண்டான், வெளியூரில் படிக்கிறான் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான் இம்முறை விடுமுறைக்கு..
 
Status
Not open for further replies.
Top