காதல்- 01
"டேய் நில்லுடா நில்லு.. மவனே கைல மாட்டின உன்னைக் கொல்லாம விடமான்டேன்டா" என்ற பெண்குரலோ அந்த கடற்கரை காற்றில் கலந்து காதைக் கிழித்திட அதற்கு எதிராய் ஒலித்தது ஆணவன் அவன் குரல்..
"ஹேய் போடி போடி சொர்ணாக்கா..முடிஞ்சா பிடிச்சிக்கோ" என்றுவிட்டு அவள் கையில் சிக்காது வளைந்து நெளிந்து ஓடினான்..
ஏற்கனவே அவன் மீது கொலைவெறி காண்டில் இருந்தவளுக்கோ மீண்டும் மீண்டும் அவன் தன்னை அழைக்கும் விதம் கடுப்பைக் கொடுக்க கோபம் பொங்க "டேய் அப்பிடி சொல்லாதடா.. இன்னொருவாட்டி அப்பிடி சொன்னேன்னு வை உன் குறவளைய கடிக்காம விடமாட்டேன்" எனக் கத்திக் கொண்டே அந்த கடற்கரை மணலில் கால் புதைய ஓடினாள் அவள் சொர்ணம் சுவர்ப்ணா..
பழமைப் பெயரில் மின்னிடும் புதுமைப் பெண்ணவள்..சொர்ணம் போன்றே பளபளக்கும் அழகோடு அடக்கம் என்பது சிறிதும் இன்றி அடாவடிக்குச் செல்லபிள்ளையாய் காற்றாய் சுழன்றிடும் துறுதுறுப் பெண்ணவள்..
அவளின் கோபத்தை சிறிதும் கண்டுக் கொள்ளாதவனாய் அவள் பிடியில் சிக்காது ஓடியவனோ அவளை நோக்கித் திரும்பியவாறே "அடியேய் நான் உன் பெயரைத் தாண்டி சொன்னேன்..இன்னும் சொல்லுவேன் சொர்ணாக்கா" என கூறிவிட்டு திரும்பிய கணம் கால் தடுக்கி கீழே விழுந்தான்.. அவன் விக்ரம் வினைய்..
நெடுநெடுவென வளர்ந்த உயரம் கட்டுக் கோப்பான உடல் ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசை என இளமை துள்ளும் அழகோடு மின்னும் ஆணவன் அவனோ மண்ணில் வீழ்ந்து முகமுழுதும் மண்துகள்கள் அப்பி கீழே கிடக்க..
அவன் நிலை கண்டவளோ சத்தமாய் சிரித்தபடி "மவனே மாட்டினியா..என்ன சொன்ன என்ன சொன்ன நான் சொர்ணாக்காவா..?? ஹாங்" என கேட்டவாறே அவன் மேலே ஏறி அமர்ந்து கொண்டவள் அவன் உச்சிமுடியை கையால் பற்றி இழுத்திட அவனோ வலியில் துடித்தான்..
"ஆஆ ஹேய் விடுடி..வலிக்குது விடுடி.." என கத்தியவன் அவள் கரத்தை விலக்கிட முயல அவளோ விடாதவளாய் ..
"விடமுடியாது..நல்லா வலிக்கட்டும்.." என்றவள் மேலும் இறுகபற்றியவாறு "என்னடா சொன்ன அவனுகள் கிட்ட.." எனக் கேட்டுக் கொண்டே அவன் காதை கடித்திட அது தந்த வலியிலோ அவள் காது சவ்வு கிழியுமாறு கத்தினான்..
"அடியேய் வலிக்குது விடுடி" எனக் கத்திக் கொண்டே அவளை திருப்பி அவள் மீது ஏறிக் கொண்டவன் "நீ மட்டும் அவளுகள் கிட்ட என்ன சொன்ன.." எனக் கேட்டிட அவளோ உதட்டைச் சுழித்துக் கொண்டவளாய் .."வேற என்னத்த சொல்லப் போறேன்.. உண்மையைச் சொன்னேன்" என்றாள்..
"ம்ம் அப்பிடியா..அப்போ நானும் அதே உண்மையைத்தான் சொன்னேன்.. அதுக்கும் இதுக்கும் சரியா போச்சி போ" என்று கூறியவனை முறைத்தாள்..
"அது எப்பிடி சரியாகும்..ம்ம் நீ எப்பிடி என்ன அப்பிடி சொல்லலாம்.. நான் என்ன சொர்ணாக்காவா என்னோட பெயர் அதுவா?? " என முறைப்பாய் கேட்டவளை தானும் முறைத்தவன்..
"அப்போ நான் என்ன வினையம் புடிச்சவனாடி என் பெயர் அதுவா??" என மாறிக் கேட்டு வைத்திட.. அதையெல்லாம் கண்டு கொள்ளாதவள் தன்னை அவன் எப்பிடி அப்பிடி சொல்லலாம் என்ற ஒன்றை வைத்தே அவன் மீது பழிசாட்டியவள் சிறு பிள்ளையாய்
" நீ எப்பிடி அப்பிடி சொல்லுவ" என அவனை அடிக்க.. அவன் தடுக்க.. என இருவரும் கடல் மண்ணில் உருண்டு புரண்டு சண்டை பிடித்தனர்.
கடல் மண்ணில் உருண்டவர்களின் சண்டையை பார்த்த பூக்காரியோ
"ஏம்மா ஏம்ப்பா என்னப் பண்றிங்க இரண்டு பேரும்" என கேட்டபடி அவர்களை நெருங்கிட அவர்களோ அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை..தங்கள் சண்டை தான் முக்கியம் என்ற ரீதியில் அதில் மூழ்கியிருந்தவர்களை கண்ட பூக்காரப் பெண்ணோ.. தலையில் அடித்துக் கொண்டவர்..
"அய்யோ என்னம்மா பண்ற அந்த தம்பியை விடு.. தம்பி நீயும் விடுப்பா" என இருவரையும் முயன்று பிரித்துவிட்டவர் மூச்சு வாங்க ஒருத்தரையொருத்தர் முறைத்து நின்றவர்களை மாறிமாறிப் பார்த்தவர்..
"ஏன்மா இப்பிடி வெட்டவெளியில தான் நீங்க லவ்வர்ஸ் எல்லாரும் சண்டை போடுவிங்களா?? அதுவும் மண்ல உருண்டு பிரண்டு" எனக் கேட்டிட அவர் கேள்வியில் அவரை பார்த்த இருவரும் ஒருசேர..
"என்னாது நாங்க Lovers ஆ" என கோரசாய் கத்தி அவரைப் பார்க்க..
அவரோ ஆமென்று தலையசைத்தவர் "பார்க்க அப்பிடித் தானே இருக்கிங்க" என்று கூறிட..
சுவர்ப்ணாவோ தன் முன்னே நின்றவனை மேலும் கீழும் ஒரு லுக்குவிட்டவள் முகத்தை சுருக்கியவள் "ச்சீ இவனையா நான் Lv பண்ணப் போறேன்..உவாக்" என்றிட..அவள் செய்கையில் காண்டாகிப் போனான் வினைய்..
"அடச்சீ இவள லவ் பண்ணா ஸ்ட்ரெய்ட்ஆ பரலோகத்துக்கு பார்சலாக வேண்டியதுதான்..இவ ஒரு எமகாதகி.." என தானும் அவளை சீண்டிவிட்டு அவளை பார்த்து முறைத்தான்..
இருவரின் பேச்சைக் கேட்ட பூக்காரப் பெண்ணோ "அப்போ நீங்க யாரு ப்ரெண்ட்ஸ்ஆ?? " என்க..
"ம்ஹூம் இல்லை" என இருவரும் மறுப்பாய் தலையசைத்தனர்..
அவரும் விடாதவளாய் "அப்போ அண்ணன் தங்கையா??" என்க..
"ச்ச்சீ ச்ச்சீ" என அதற்கும் மறுத்திட
" அப்போ எதிரியா ??" என்க..
"ம்ஹூம்" என தலையசைக்க தலையை சொறிந்து கொண்டவள் "அப்போ யாருதான்யா நீங்க.." என சலித்தபடி கேட்க..
சுவர்ப்ணாவோ " இவன் தான் எனக்கு தாலி கட்டியவன்.."
"இவள் நான் தாலி கட்டும் போது கழுத்தை நீட்டியவள்.. என ஒருத்தரையொருத்தர் சுட்டிக் காட்டியவர்கள் மேலும்
அதாவது இவன் என்னோட புருஷன்..
அவ ஏன் பொஞ்சாதி.. என கூறிட..
அதில் அதிர்ந்து நின்ற பூக்காரப் பெண்ணோ இருவரையும் மாறிமாறி பார்த்துவிட்டு தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தேவிட்டாள்..
"அய்யோ அக்கா என்னாச்சு??"
என இருவரும் ஒரு சேரக் கேட்டபடி அவரை நெருங்க..இருவரையும் நிமிர்ந்து பார்த்தவளோ
"ஏன்பா பொஞ்சாதியும் புருஷனுமா இருந்துக்கிட்டா பொது இடத்துல நீங்க இப்பிடி சண்டை போடுறிங்க.." என ஆதங்கமாய் கேட்டிட..
அவள் கேள்விக்கு பதிலாய் சுவர்ப்ணாவோ தன் முன்னே நின்றவனை முறைத்தவள் "எல்லாம் இந்தா இருக்குற காட்டேறியால தான்கா வந்தது.." என அவனை சுட்டிக்காட்டிட..
அவனோ "ஏய்... நீ...நீ தான்டி மனிச குரங்கு.." என்றான்..
"யாரு நானா... நீ தான்டா பன்னிமூஞ்சா..
என திட்ட..
அவனும் விடுவானா?? பதிலுக்கு பதில் பேச ஆரம்பித்திட மீண்டும் ஆரம்பமானது அவர்களிடையே ஓர் குட்டிப் போர்...
"போடி வெள்ளப் பன்னி"
"போடா நார வாயா"
"போடி குட்டி பிசாசு"
"போடாங்.." என ஏதோ கூற வந்தவளை தடுத்தவன்..
"ஏய் ஓவரா போறடி .."
"அப்பிடித்தான்டா போவேன் என்ன பண்ணுவ ஹாங்" என எகிறியவளை நெருங்கியவன்..
"ஹேய் உன்னை என்னப் பண்றேன் பாரு" எனக் கூறிக் கொண்டு அவளைத் தள்ளிவிட்டு மீண்டும் அடித்துப் பிடித்து உருண்டு பிரண்டிட..
அதைக் கண்ட பூக்காரப் பெண்ணோ பதறியவள்..
" அய்யோ என்ன செய்றிங்க.. தம்பி எழுந்திருப்பா.. பொண்ணு நீயும் எழுந்திரிமா" என இருவரையும் பிரித்து விட்டவர்..
"என்னப்பா வாழ்க்கை துணைங்க இப்பிடி சண்டை போட்டுக்கிறிங்க.. ச்சஹ் என்னத்த சொல்ல இந்த காலத்துப் பசங்க எல்லோரும் இப்பிடித்தானே இருக்கிங்க காதலிக்க வேண்டியது கல்யாணம் பண்ணிக்க வேண்டியது இப்பிடி அடிச்சிகிட்டு பிரியிறது இதானே பொழப்பு" என ஒரு பெருமூச்சுடன் கூற..
அவர்களோ "அய்யோ அக்கா லவ் மேரேஜ்லாம் ஒன்னும் இல்லைக்கா" என அவசரமாக மறுத்தனர்.
"ம்ஹூம் மறுப்பு சொல்றதுலயாச்சும் இரண்டும் நல்ல ஒற்றுமையா இருக்குதுங்களே" என நொடித்துக் கொண்டாள்..
வினையோ அவளிடம் "லவ் மேரேஜ்லாம் இல்லைக்கா போயும் போயும் இந்த குட்டி பிசாச போய் யாரு லவ் பண்ணுவா??..பார்த்தீங்களே உங்க முன்னாடியே என்னா அடி அடிக்குறா இவள போய் எவனாச்சும் லவ் பண்ணுவானா சொல்லுங்க" என அவளிடம் கேட்க..
சுவர்ப்ணாவிற்கோ மூக்கில் புகைவராத குறையாய் அவனையே முறைத்தவள்..
" யாருடா பிசாசு நீ தான்டா பேய் பூதம்.. உன்னெல்லாம் மனிசன் லவ் பண்ணுவானா..உனக்கெல்லாம் ஜகன் மோகினி பேய் தான் ஜோடியா வருவா" எனக் கூற அவனும் "அதான்டி நீ ஜோடியா வந்திருக்க சொர்ணாக்கா பேயி" என கூற அவளோ "ஆஆஆ" என்றவள் அவனை அடிக்க வர இருவருக்கும் குறுக்கே புகுந்த பூக்காரியோ
" அடச்சீ நிறுத்துங்க நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் சும்மா நொய் நொய்னு இருக்கிங்க.. எத பேசினாலும் சண்டையிலையே கொண்டு போய் முடிக்கிறிங்க" என சிடுசிடுப்பாய் கூறிட..
அதற்கும் ஓர் சண்டையை தொடங்கி வைத்தாள் சுவர்ப்ணா.. "எல்லாம்உன்னால தான்டா"
"உன்னால தான்டி"
என மாறி மாறி கூறிட பூக்காரிக்கு தான் தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
"அய்யோ கடவுளே இதுங்க என்ன அய்யோ எலியும் பூனையும் போல அடிச்சுக்குதுங்க.. இவங்கள பார்த்த கொஞ்ச நேரத்துக்கே எனக்கு இப்பிடி இருக்குனா இதுங்களோட வீட்டு ஆளுகள் நிலைமை ரொம்ப பாவம் தான்" என எண்ணியவள் இன்னுமே சண்டையிட்டு கொண்டிருந்தவர்களை பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு தலைதெறிக்க ஓடினாள்.
அவள் சிறிது தூரம் சென்ற பின்னரே அவரை கண்ட சுவர்ப்ணாவோ "அய்யோ அக்கா நில்லுங்க என்னுடைய கதையை கேட்டுட்டு போங்க" என அவரை அழைத்திட..
வினையோ "அக்கா அவளோட கதை வேணாம் என்னோட சோகக் கதையை கேளுங்க" என இடையிட்டவனின் மீது கொலை வெறியுடன் பாய்ந்தாள் சொர்ணாக்கா.
இருவரின் குரல் கேட்ட பூக்காரப் பெண்ணோ "அய்யோ ஆள விடுங்கடா சாமி உங்க சங்காத்தமே வேணாம் எனக்கு" என ஓடியேவிட்டாள்.
அவள் சென்ற பின்னும் "உன்னை பார்த்து தான் ஓடினாங்க" என ஒருத்தர் மீது ஒருத்தர் பலி போட அங்கே மீண்டும் உருவானது ஒரு TOM & JERRY காதல்.
காதலிலும் ஊடல் உள்ளது
நீ அந்த காதலை உணரும் வரையுலும்
காத்திருப்பதில் காதல் உள்ளது
காலங்கள் கடக்கும் வரையுலும்.
தேடலிலும் காதல் உள்ளது.
தன் துணையின் காதலை சுகிக்கும் வரையிலும்..
வரையறை அற்ற வாழ்க்கையின் ஒரு வழிப் பாதைக்கு என்னை இழுத்துச் சென்றது தன்னவன் மீதான காதல்.
எப்போதும் உன் காதலை யாசிக்கும் உன் காதலி..
...
அந்த பழங்கால வடிவியில் அரண்மனை போன்ற அமைப்பிலிருந்த வீட்டின் முன் முற்றத்தில் அமர்ந்திருந்தார் அவ்வீட்டின் மூத்த தலைவர் சிவப்பிரகாசம்..
அருகே அவரது சகபத்மினியும் அவ்வீட்டின் மூத்த தலைவியுமான ராஜாத்தி இருக்க ..அவர் அருகே அவரது மகள் மஞ்சுளா மற்றும் மருமகள் சித்ரா அமர்ந்திருந்தனர்.. அவர்களுக்கு எதிரே அவ்வீட்டின் மகன் மருமகன் ..மாணிக்கம் மற்றும் பூபதி அமர்ந்திருந்தனர்..
சிவப்பிரகாசமோ கையில் வைத்திருந்த காபியை குடித்து முடித்தவருக்கோ அவ்வீட்டின் கடைக்குட்டிகளின் நியாபகம் எழ "அம்மாடி பசங்களுக்கு போன் பண்ணி பார்த்திங்களாமா??" என தன் மகள் மருமகளிடம் கேட்டிட..
சித்ராவோ" இல்ல மாமா அதுங்க இரண்டும் நம்ம மேல கொலை வெறில இருக்குங்க இப்போதைக்கு பேசாதுங்க.." என உண்மையை கூறிட..
"ஆமாம்ப்பா போன் பண்ணாலும் காட்டுகத்து கத்துதுங்க.." என தன் பங்கிற்கும் கூறினார் மஞ்சுளா..
அவருக்கும் அது தெரிந்த விடயமே ..தன் பேரப்பிள்ளைகளின் கோபம் எந்தளவு என்பதை உணர்ந்தவர் சிரித்துக் கொண்டு "கொஞ்சம் நாள் போனா எல்லாம் சரியா போகிடும் நீங்க கவலப்படாதிங்க" எனக் கூறிட..
ராஜாத்தியோ "ம்ம் நேர்ல மட்டும் நாம கிடைத்ச்சோம்னா கடிச்சு திண்ணுடுவாங்க அந்த வாலுங்க.." என அவர்களை அறிந்தவராய் கூறினார்..
"அதுக்காகத்தானே உருட்டி மிரட்டி வெளியூர்க்கு அனுப்பி வெச்சியிருக்கோம்.. கொஞ்ச நாள் போனா தானாவே சரியாகிடுவாங்க" என்ற மாணிக்கத்தின் கூற்றை ஆமோதித்தனர் அனைவரும்..
"ஆமாம் மாப்பிள்ளை வினையை கூட சமாளிச்சிட்டோம் ஆனா அவள சமாளிக்குறதுக்குள்ள நாக்குத் தள்ளிட்டு" என மகளின் அட்டகாசத்தை நினைத்து கூறிய பூபதியின் கூற்றில் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
எல்லாம் சரி வரும் இரண்டு பேரும் ஒற்றுமையா திரும்பி வருவாங்க என்ற சிவப்பிரகாசத்தின் கூற்றிற்கு மற்றவர்கள் ஆமோதிப்பாக தலையசைத்தனர்.
"என்னவோ என் குழந்தைங்க நல்லா இருந்தா சரி தான்.." என்று ஒரு நிம்மதி பெருமூச்சுடன் கூறிய ராஜாத்தியிடம்.
"கவலைப்படாதிங்க அத்தை எல்லாம் சரியாகிடும்" என ஆறுதல் கூறினார் சித்ரா..
" பூபதி இந்த மாசத்துக்குரிய பணத்தை அனுப்பி வெச்சிட்டியாப்பா என்ற தந்தைக்கு பதிலாக அனுப்பியாச்சுப்பா என்றார் பூபதி..
"மாமா பணம் அனுப்பினதாலதான் இரண்டு பேரும் சேர்ந்து பீச்ல ஆட்டம் போட்டு இருக்காங்க.. தகவல் கிடைச்சிட்டு.. என தங்கள் பிள்ளைகளின் சேட்டைகளை அறிந்து கொண்டவராய் கூறினார் மாணிக்கம்..
"ம்க்கும் சண்டை போடுறதுல மட்டும் இரண்டும் ஒன்னுதான்.. இதுங்க எப்போதான் திருந்தப் போகுதுங்களோ என்ற மஞ்சுளாவின் கேள்வியே அங்கிருந்த அனைவருக்கும் இருக்க..
சிவப்பிரகாசத்தின் மனம் மட்டுமே அந்த ஊடல் கொள்ளும் இரு உள்ளமும் வெகுவிரைவில் காதல் கொள்ளும் என்ற நம்பிக்கையை உறுதியாய் எண்ணிக் கொண்டது..
தொடரும்...