ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் இ(க)சையடி நீ..

Nithyapoovi

New member
Wonderland writer
ாதல் இ(க)சையடி நீ...

காதல் இசை - 1💝


சூரியன் இன்னும் தூக்கம் கலையாமல், மெல்லமாய் மேகத்துக்குள் படுத்துக் கொண்டிருந்த விடியற்காலை நேரம். சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தான் அருள்மொழிவர்மன். தொழிலதிபர் முத்துகிருஷ்ணன் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினரின் ஒற்றைப் புதல்வன்.

ஹீரோவாக, இளம் கன்னியர் மனதை கவரக்கூடிய கனகச்சித உருவம். கல்லூரி முடிந்தவுடன் தொழிலுக்குள் அடியெடுத்து வைத்தவன். இப்போது 28வயதில் தனது தந்தையின் தொழில் சாம்ராஜ்யத்தை இந்தியா மட்டுமல்லாமல் கடல் கடந்தும் விரிவுபடுத்த முயற்சித்து, அதில் வெற்றி பெற்று அது தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தியா திரும்பி இருக்கிறான்.

ஏர்போர்ட்டைவிட்டு வெளியே வந்தவன் தனக்காக காத்திருந்த பி.எம்.டபிள்யூகாரைப் பார்த்த உடனே அவனது ஒரு பக்க புருவம் உயர்ந்தது. ஏனெனில் அது அவனுடைய தந்தையின் கார். எதுக்காக ராஜ் வராமல் அப்பா வந்திருக்காரு? என்ற யோசனையுடனே காரை நெருங்கியவன் உள்ளே அமர்ந்திருந்த தந்தையை பார்த்ததும் ஹாய்! டாடி..எப்படி இருக்கீங்க? என்று கேட்டபடி அமர்ந்தான்.

வாப்பா அருள்..நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா?

எவ்ரிதிங் ஓகே பா.. அம்மா எப்படி இருக்காங்க?

அவளுக்கு என்ன?நல்லா இருக்கா. இன்னைக்கு வெள்ளிக்கிழமை, அதனால கபாலீஸ்வரர் கோயில் போய் இருக்கா, என்னையும் வர சொன்னா நான் தான் உன்னை பிக்கப் பண்ண வந்ததுனால போக முடியல.இந்நேரம் வீட்டுக்கு வந்து இருப்பா.

அஹ் டாடி..ஆமா ராஜ் எங்க? நான் டீல் பேச முன்னாடி என்கிட்ட பேசுனான்.அதுக்கப்புறம் டீல் முடிச்சு வந்து கூப்பிட்டா போன் சுவிட்ச்ஆஃப் என்று வந்தது. நானும் பிளைட்டுக்கு நேரமாச்சுனு கிளம்பிட்டேன். பிளைட் ஏறுன பிறகு ட்ரை பண்ணி பார்த்தேன் போன் சுவிட்ச் ஆஃப்னே வந்துச்சு. என்ன ஆச்சு? அவன் எங்கே?

ராஜுக்கும், தன் மகனுக்கும் உள்ள நட்பை பற்றி உணர்ந்தவர், இப்போதைக்கு இவனிடம் நடந்தவற்றை சொல்ல வேண்டாம் என நினைத்து..ராஜ்க்கு உடம்பு முடியலப்பா, கொஞ்சம் ஹைஃபீவரா இருந்ததுனால ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கு. போன் வீட்டிலேயே இருக்குமா இருக்கும் என்றார்.

வாட்? இதை ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல.. இப்ப காரை நேரா ஹாஸ்பிடலுக்கு விடுங்க என்றான்.

இல்லப்பா.. வீட்டுக்கு வந்து கொஞ்சம் ரெப்ரெஷ் ஆயிட்டு அதுக்கு அப்புறம் போய் மீட் பண்ணலாம்..ஹாஸ்பிடல்ல இருக்கிறவன போய் நீ இப்படியே பார்க்கணுமா? என்றார்.

அதுவும் சரிதான். ரொம்ப ஏதும் பிராப்ளம் இல்லையே? என்றான்.

ச்சே..ச்சே..இல்லப்பா என்றார் சற்றே திணறியபடி.

அவர்கள் கார் வீட்டை நெருங்கும் பொழுதே வாசலிலேயே நின்று கொண்டிருந்தார் லட்சுமி.

ஹாய் மாம்..எப்படி இருக்கீங்க? என்று அவரை அணைத்துக் கொண்டான்.

நல்லா இருக்கேன் கண்ணா.. என்று அவன் முகத்தை வாஞ்சையுடன் வருடியவரின் முகத்தில் ஏதோ குறைவது போல் தெரிந்தது அருளின் பார்வைக்கு..

ஏன்மா! ஏதோ மாதிரி இருக்கீங்க?

ஒன்னும் இல்லடா கண்ணா.. இந்த ராஜூ பையனுக்கு வேற உடம்புக்கு சரி இல்ல..அதான் கோயிலுக்கு போயிட்டு இப்பதான் வந்தேன். நீ சீக்கிரம் ரெப்ரெஷ் ஆயிட்டு வந்தேனா பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு நாம அவனை பார்க்கபோகலாம் என்றார் லட்சுமி.

அதன்படி 10 நிமிடத்தில் கிளம்பி வந்தவன் அவர்களுடன் அமர்ந்து காலை உணவை முடித்துவிட்டு, ஒன்றாக அவன் உயிர் நண்பனான ராஜ்யை சந்திக்க மருத்துவமனை கிளம்பினார்கள்.

டாட்..என் கார்ல போகலாம் என்றான்.

இல்லப்பா..உன்னுடைய கார் ராஜ் வீட்ல இருக்கு. அதனால இப்ப என் கார்ல போகலாம் என்றார்.

ஓகே..என்று சொல்லியபடி காரில் ஏறியவன் மருத்துவமனை வரும் வரை தொழில் சம்பந்தமாக பேசிக் கொண்டே வந்தான். அவன் கேட்டதற்கெல்லாம் பதில் அளித்தபடியே வந்தார் கிருஷ்ணன்.

கார் சென்னையில் உள்ள மிகப் பிரபலமான மருத்துவமனையில் நுழைந்தது. காரை பார்க் பண்ணிவிட்டு லிப்ட் மூலமாக ஐந்தாவது தளத்திற்கு வந்தனர்.

லிஃப்ட்டை விட்டு வெளியே வந்தவனின் புருவம் ஒரு கணம் சுருங்கி விரிந்தது.ஏனெனில் அந்த தளம் முழுவதும் க்ரிட்டிக்கல் கேர் நோயாளிகளுக்குரியது.

சட்டென தனது தந்தையை திரும்பிப்பார்த்தவனின் பார்வைக்கு பதில் அளிக்கும் விதமாக கண்களை மூடித்திறந்தார் கிருஷ்ணன்.

ஒரே ஒரு நிமிடம்தான்..கண்கள் மங்கி, உடல் ஒத்துழைக்காமல் கீழே விழப் போகிறோம் என்பதை உணர்ந்து பொத்தென அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவன் நிலைமையை உணர்ந்து அருகில் நெருங்கிய கிருஷ்ணன் அவனின் தோள்களில் கையை வைக்க சட்டென அதை தள்ளிவிட்டு ஒரு பார்வை பார்த்தான். அவன் கண்களின் கோபக்கனலில் கிருஷ்ணனே இரண்டு அடிகள் பின்னே எடுத்து வைத்துவிட்டார்.

சற்று நிதானப்படுத்திக் கொண்டு சிசியூவின் கதவினை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அங்கு ராஜ்யை கவனித்து கொண்டிருந்த நர்ஸ் அவனைப் பார்த்ததும் ஏதோ சொல்ல வந்தவர் அவனின் அழுத்தமான பார்வையில் வாயமூடிக்கொண்டார்.

பலவித கருவிகளுக்கும், குழாய்களுக்கும் நடுவில் மூச்சு விடுவதற்காக கருவிகள் பொருத்தப்பட்டு முகம் எல்லாம் வீங்கி மயக்கத்தில் இருந்தான் ராஜ்.

அவனைப் பார்த்துக் கொண்டே மெல்ல நெருங்கியவன், அவன் முகத்தினை விட்டு சற்றும் பார்வையை நகர்த்தவே இல்லை. பத்து நிமிடங்களுக்கும் மேலாக அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை தான் ராஜ் மேல் இருந்ததே ஒழிய, அவன் எண்ணங்களோ ராஜுடன் மானசீகமாக பேசிக்கொண்டு இருந்தன.

டேய் ராஜ்.. நீ இல்லாம எனக்கு ஒண்ணுமே இல்லடா.. சீக்கிரம் குணமாகி வந்துருடா.. இதுக்கு காரணமான ஒருத்தரையும் நான் சும்மா விடமாட்டேன். அவன் கைகளை பற்றி வருடியவனின் ஸ்பரிசத்தின் மூலமாக தன் உயிர் நண்பனின் வருகையை உணர்ந்து, அறிந்து கொண்டான் ராஜ்.

சிசியூ கதவை திறந்து கொண்டு வெளியே வந்த அருள்,கிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்த டாக்டரின் அருகில் வந்தான்.அவனைப் பார்த்துவிட்டு டாக்டர், ராஜ் இப்போ 90% கிரிட்டிக்கல் கண்டிஷனை தாண்டிவிட்டார். இருந்தாலும் அப்சர்வேஷன்ல இருக்கணும்ங்குறதுக்காக தான் ccu உள்ள வச்சிருக்கோம். 24 மணி நேரத்துக்குள்ள நினைவு வந்துடும். இடது காலில் பிராக்சர் அதுக்காக சர்ஜரி பண்ணிட்டோம். வலது கையில சின்ன கிராக் இருக்கு 3 வீக்ஸ் அசையாம பாத்துக்கிட்டாலே போதும். காதுக்கும், கழுத்துக்கும் நடுவுல ஒரு ஆழமான காயம் ஏற்பட்டு இருக்கு. நல்லவேளையாக அதனால எந்த பிரச்சனையும் இல்ல.. கொஞ்ச நாளைக்கு தாடைய ரொம்பவும் அசைக்காம பாத்துக்கணும் அவ்வளவுதான் என்று சொல்லியவர் கிளம்பிவிட்டார்.

அவனுக்கு இப்படி நடந்துச்சுன்னு கேள்விப்பட்ட உடனே அவனுடைய ட்ரீட்மென்ட் பத்தி பாத்துட்டு இருந்தேன். நீ அங்க இருந்து கிளம்பி வர சமயத்துல உன்னை ஏன் டென்ஷன் பண்ணனும்னு சொல்லல. அடுத்து நீ எப்படியும் இந்த விஷயம் கேள்விப்பட்டால், அவன் கண் முழிக்கிற வரைக்கும் தண்ணி கூட பல்லுல பட விட மாட்ட அதுதான் வீட்டுக்கு கூட்டிட்டு போய் ரெப்ரெஷ் ஆன பிறகு வரலாம்னு…. என்று அவனின் கடுமையான பார்வையை பார்த்து இழுவையாக சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. அண்ணா…. என்று கதறிக் கொண்டே அவன் மார்பில் வந்து விழுந்தாள் தாரணி.

இசை இசைக்கும்... 💕
 
Last edited:

Nithyapoovi

New member
Wonderland writer
காதல் இசை-2💝

தாரணியின் அந்த அழைப்பும்..அவள் கதறலும்..அவன் நெஞ்சின் அடி வரை சென்று தாக்கியது.

அவள் தலையினை மெல்ல வருடிக் கொடுத்தவன், ஒன்னும் இல்லமா..சீக்கிரம் ரெடி ஆகிடுவான் நீ பயப்படாத.. என்று சமாதானம் செய்து கொண்டே நிமிர்ந்தவனின் பார்வையில், அழுதழுது கண்கள் வீங்கிப்போய் மூலையில் நின்று கொண்டிருந்த மிருதுனி பட்டாள். அவளைப் பார்த்ததும் அதுவரை இருந்த அவன் கோபம் எரிமலை என வெடித்து சிதறியது.

கோபத்தில் அவளை ஏதேனும் செய்து விடுவோமோ?! என்று தாரணியை சமாதானம் செய்தவாறு விலக்கியவன் அங்கே நின்று கொண்டிருந்த தனது பிஏ ஆன ஆகாஷ்யை அழைத்து கொண்டு நகர்ந்தான்.

வாட் தி ஹெல்..யூ ஆர் டூயிங் ஹியர்?எது நடந்தாலும் எனக்கு இன்பார்ம் பண்ணாம தெண்டமா எதுக்கு நீ என் பி.ஏவா இருக்கிற? என்று காய்ச்சி எடுத்தான்.

இல்ல சார்..அப்பா தான்..என்று தடுமாறியவனிடம் உனக்கு நான் பாஸா? இல்லை எங்க அப்பாவா? என்றவனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் திருதிருத்தான் ஆகாஷ்.

ஷிட்.. என்னதான் நடந்துச்சு?

சார்..முந்தாநாள் நம்ம யூனிட்4 பிரச்சனை சம்பந்தமா பேச அந்த சைட் ஓனர் 10 மணிக்கு ஆபீஸ் வந்து இருந்தாரு. எப்பவும் சீக்கிரம் வர்ற ராஜ் சார் அன்னைக்கு 11 மணிக்கு தான் வந்தார்.அப்புறம் அந்த ஒனர் கிட்ட பேசி அனுப்பிட்டு, டாகுமென்ட்ஸ் பார்த்துட்டு இருந்தார். அப்பதான் நீங்க கால் பண்ணி டீல் ஓகே ஆனதை பத்தியும், கிளம்பறத பத்தியும் அவர் கூட பேசிட்டு இருந்தீங்க. உங்க கால்க்கு அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு இன்னொரு கால் வந்துச்சு.கொஞ்சம் டென்ஷனா எழுந்திருச்சு போனாரு.அந்த சமயம் பார்த்து அவர் கார் ஸ்டார்ட் ஆகல.. அதனால ஆபீஸ்ல இருந்த உங்க கார் எடுத்துட்டு கிளம்பிட்டாரு. திரும்பி ஆபீஸ் வரல..நைட் 7:00 மணிக்கு சாருக்கு ஆக்சிடென்ட்னும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கிறதாகவும் b5 போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து எனக்கு கால் வந்துச்சு. நான்தான் கிருஷ்ணன் சார் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு ஹாஸ்பிடல் போயிட்டேன். கிருஷ்ணன் சார் தான் உங்க கிட்ட இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம்னு சொன்னாரு.. சாரி சார்..

ஓகே லீவ் இட்..டார்கெட் நானா? இல்ல ராஜுவா?

ராஜ் சார் தான் நினைக்கிறேன்..ஏன்னா ஆபீஸில் இருந்து கிளம்புன ராஜ்சார் நேரா 2 மணி நேரம் கழிச்சு சந்தானம் வீட்டுக்கு போய் இருக்காரு. அங்க அவன் மகன் கிஷோரும் இருந்து இருக்கான். ராஜ்சாருக்கும் சந்தானத்துக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்கு. அதுல பிரச்சினையாகி ராஜ் சார் கிஷோரை அடிச்சிட்டாரு. அங்க இருக்கிற நம்ம ஆள் சொன்ன தகவல் இது. அதுல கோபமாகி சந்தானம் இதைப் பண்ணி இருக்கலாம் என்று நினைக்கிறேன் சார்.

அவனுகளுக்கு இருக்கு.. என் மேல இருக்க பயம் போயிடுச்சு போல..எங்க இருக்கானுக அந்த அப்பனும்..மகனும்?

சந்தானம் அவனோட மச்சினன் மினிஸ்டர் ரகுவரன் வீட்ல இருக்காருன்னு நினைக்கிறேன். ஏன்னா கிஷோருக்கு டிரீட்மென்ட் கொடுக்க சுபம் ஹாஸ்பிடல் இருந்து டாக்டர் அங்க போனதா தகவல் வந்து இருக்கு.

ஐசீ.. நீ என்ன பண்றனா...என்று அவன் பேசுவதற்குள்

சார் இன்னொரு விஷயம் தாரணி மேடம் கசின் மிருதுனி மேடம் தற்கொலை செய்ய முயற்சி பண்ணி அவங்கள காப்பாத்தி இங்கதான் அட்மிட் பண்ணி இருந்தாங்க..

வாட்? என்ன சொல்ற? தற்கொலைக்கு முயற்சித்தாளா?அதுவும் மிருதுனியா? மீண்டும் ஒரு அதிர்ச்சியில் இதயம் பட பட என அடித்துக்கொண்டது அருள்மொழிவர்மனுக்கு
.

இசை இசைக்கும்....💕
 

Nithyapoovi

New member
Wonderland writer
காதல் இசை – 3💝

மிரு..மிருதுனியா?...சூசைட் ட்ரை பண்ணுனா?..

ஆமா சார்..தூக்கமாத்திரை சாப்பிட்டுடாங்க.. நல்லவேளை சரியான நேரத்தில் பார்த்ததனால காப்பாத்தமுடிஞ்சது.ரெண்டு நாளா அன்கான்சியஸா இருந்தாங்க..நேத்து மதியம் தான் கண்ணு முழிச்சாங்க. இப்பஓகே.. ராஜ் சார்க்கு நடந்தது இப்பதான் அவங்களுக்கு சொன்னோம். அதுதான் சொல்ல சொல்ல கேட்காம பார்த்தே ஆகணும்னு நின்னுட்டு இருக்காங்க என்றான் ஆகாஷ்.

சட்டென தலையை திருப்பி பார்த்தான். கையில் டிரிப்ஸ் ஏற்றிய அடையாளத்துடன் வாடி வதங்கிப் போய் ஜன்னல் கம்பியோடு கம்பியாய் சாய்ந்து, ஓய்ந்து போய் நின்று இருந்தாள் மிருதுனி.

ரீசன்? – அருள்

தெரியல சார்..தாரணி மேடம்கிட்ட கேட்டா தெரியும்.

ஓகே.. அந்த சந்தானமும் அவன் பையனும் எப்ப வெளியே வராங்கன்னு நம்ம ஆள பார்த்து சொல்ல சொல்லு. ராஜ்க்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுக்க ஸ்பெஷலிஸ்ட் ஏற்பாடு செய்யனுமா? என்று சீப் டாக்டர்கிட்ட கேட்டுக்கோ.. அப்படி தேவைப்பட்டால் அதுக்கு ஏற்பாடு பண்ணிடு..

ஓகே சார். என்று கூறிவிட்டு அவன் நகர்ந்தான்.

தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்திருந்த தாரணியின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் அருள்.

அண்ணா.. என்று தழுதழுத்து குரலில் நிமிர்ந்து பார்த்தவளின் முதுகில் தட்டிக்கொடுத்து ஒன்னும் இல்லடா..க்ரிட்டிக்கல் கண்டிஷன் தாண்டிவிட்டான்.. அவனுக்கு ஒன்னும் ஆகாது...ஆகவும் விடமாட்டேன். நீ தைரியமா இரு என்றான்.

அவன் கைகள் கொடுத்த தைரியத்தில் பெண்ணவள் கொஞ்சம் தைரியமானாள். ஆனால் அவன் முகமோ அதற்கு மாறாக இறுக்கம் சுமந்து இருந்தது.

மிரு...மிருதுனி..ஏன் இப்படி பண்ணுனா? – அருள்

தெரியலைண்ணா.. நீங்க பிசினஸ் மீட்காக லண்டன் கிளம்பி போவதற்கு முந்தைய நாள் இரவு ஃபிரண்ட்ஸ் கூட நாங்க வெளிய போறதாக பிளான், நானும் அவ கூட போறதா தான் இருந்தது. திடீர்னு ராஜ் மீட் பண்ணலாம்னு சொன்னதுனால கடைசி நிமிஷத்துல என்னால போக முடியல. அன்னைக்கு 10:00 மணி ஆகியும் அவ வீட்டுக்கு வரலன்னு அம்மா எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. அவபோனும் நாட் ரீச்சபிள்னு வந்துட்டு இருந்தது. நானும் ராஜும் அப்பதான் வீட்டுக்கு வந்துட்டு இருந்தோம். வர்ற வழியிலேயே ஃப்ரெண்ட்ஸ் கிட்ட விசாரிச்சதுல அவ ஏழு மணிக்கே கிளம்பிட்டதாக சொன்னாங்க..

எனக்கு என்ன பண்றதுன்னு புரியல..ராஜ் தான் பார்த்துக்கலாம்..எங்க போகிடப்போறான்னு சொல்லி பிரண்ட்ஸ் ஒவ்வொருத்தரா விசாரிச்சுட்டு அப்படியே அவபோற இடம் எல்லாம் தேடிட்டு இருந்தோம். இவர் உங்களுக்கும் ட்ரை பண்ணாரு. உங்க மொபைலும் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்துச்சு..அப்பத்தான் உங்க ரெண்டு பேர் கூட படிச்ச ஏசிபி கண்ணன் அண்ணாகிட்ட பர்சனலா ஹெல்ப் கேட்டாரு..

அவரும் தேடுறதா சொல்லி அவள் டீடைல் ஸ்கேட்டாரு.. அப்பத்தான் எங்க கூட படிச்ச ஒரு பையன் 7.30 மணிக்கு ஈசிஆர் ரோட்ல இருக்கிற ஒரு சிக்னல்ல அவள கார்ல பார்த்ததா சொல்லி.. கார் கலரு, என்ன கார் அப்படிங்குற அடையாளம் எல்லாம் சொன்னான். அந்த டீடைல்ஸ் குடுத்தப்ப அதவச்சு தேடுறதா கண்ணன் அண்ணாவும் சொன்னாங்க.

இவரும் ரொம்ப நேரமானதுனால என்னைய ராத்திரி ஒரு மணிக்கு வீட்ல டிராப் பண்ணிட்டு ஈசிஆர்ல இருக்கிற சில இடங்கள்ல செக் பண்ணிட்டு வர்றதா சொல்லிட்டு போனாரு..நானும், அம்மாவும் ரொம்ப பயந்துட்டோம்ணா..தூங்கவே இல்ல..

அடுத்தநாள் காலையில் 8.00 மணிக்கு தான் அவளை கூட்டிட்டு ராஜ் வந்தாரு.. பிரண்ட்ஸ் கூட போன இடத்துல அசந்து தூங்கிட்டதாக சொன்னார்.. நானும் யார்?என்னனு? கேட்க போனப்ப ரொம்ப டயர்டா இருக்கிறா..அதுனால அவகிட்ட எதுவும் பேச வேண்டாம். தூங்கட்டும்னு சொல்லிட்டாரு.. அவளும் எதுவும் பேசல..பிரம்மை புடிச்சமாதிரி இருந்தா.. சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு நாங்களும் அவளை தொந்தரவு பண்ணல..

ரூம்குள்ள போனவ படுத்து தூங்கிட்டா.. ராஜும் தூங்கட்டும், ஈவினிங் பேசலாம்..இப்ப அர்ஜென்ட் வொர்க் இருக்குனு கிளம்பிட்டார்..நாங்களும் நைட் சரியா தூங்கலையா..அதுல லேசா கண்ணயர்ந்திட்டோம். அந்த நேரத்தில் அம்மாவோட தூக்க மாத்திரையை எடுத்துபோட்டு இப்படி பண்ணிட்டா.. நல்லவேளை நான் 10 நிமிஷத்தில் கண்ணுமுழிச்சுட்டேன்..அவளை பார்த்தப்ப அவகைல பேப்பர் இருந்ததது..அதுல என் சாவுக்கு யாரும் காரணம் இல்ல..என்னைய மன்னுசிடுங்கனு எழுதியிருந்தா..அத பார்த்த அப்புறம் தான் எனக்கு புரிஞ்சுது. அவளை மட்டும் காப்பாத்தாம போயிருந்தா?. .நினைச்சு பார்க்கவே முடியல..

ராஜுக்கு விஷயம் தெரிஞ்சு ஹாஸ்பிடல் வந்தவரு ரொம்ப உடைஞ்சுட்டாரு..அவளுக்கு ஆபத்து இல்லன்னு தெரிந்ததும் தான் நாங்க நிம்மதியானோம்..அப்புறம் கண்ணண்ணா போன் வந்துச்சுன்னு கிளம்பி போனவர் தான்.. அன்னைக்கு நைட் இவருக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு ஆகாஷ் போன் பண்ணி சொன்ன பிறகுதான் பார்..பார்த்தேன்..அதுவும் இப்படி..என்றாள் தழுதழுத்த குரலில்..

கேட்டுக்கொண்டிருந்தவன் அப்படியே கண்களை மூடியவாறு சுவற்றில் சாய்ந்து கொண்டான்.

இசை இசைக்கும்...💕
 
Top