ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கதைகளின் _ டீசர் தொகுப்பு...

Mythili MP

Well-known member
Wonderland writer
நிசப்த நிலவொலி டீசர்



நிசப்த நிலவொலி


டீசர்... 1


எங்கும் வண்ண மின் விளக்குகள் ஒளிர... ரோஜா இதழ்களால் அலங்கரித்திருத்த அந்த மேடைக்கு மதியின் கரம்பற்றி அழைத்து வந்தான்... அவன்...


அவளோ ஒன்றும் புரியாமல் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருத்த அலங்காரங்களை ஆச்சர்யமாக பார்த்துகொண்டு இருந்தாள்...


அப்போது அவள் எதிர்பாராத நேரம்... அவள் முன் அவன் மண்டியிட்டு நிற்க...
அவளோ அவனை கேள்வியாக... விழிவிரித்து பார்த்தாள்...


அவனோ சற்றும் தயங்காமல் அவள் கரம்பற்றியவன் " ஐ லவ் யூ " என்று கூறி அவள் கரத்தில் முத்தமிட... பெண்ணவளின் உடல் சிலிர்த்து அடங்கியது...


அவளோ வெட்க புன்னகையுடன் அவனை நெருங்கி நிற்க... அவனோ அந்நேரம் அருகில் இருந்தவனை கண்களால் அழைக்க... அவனும் அவன் அழைப்பின் அர்த்தம் உணர்த்து அவனிடம் மோதிரத்தை நீட்டினான்... அவனும் அதனை கையில் வாங்கியவன் அவள் கரம் பற்றி அவளுக்கு அணிவித்தான்....
அவளோ எந்த மறுப்பும் கூறாமல்.... அவனை பார்த்து ஸ்நேகமாக புன்னகைத்து கொண்டாள்...


எழுந்து நின்றவன் அவள் இடையில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுக்க, அவளும் அவன் மீது மோதி நின்றாள்... வெட்கத்தில் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க தயக்கம் காட்டியவள்... அவன் பார்வையை தவிர்த்தாள்...


உயிர் உருக்கும்.....
உன் பார்வை....
தீன்டினாலே சருகாய் ....
என் தேகம் உதிரும் மன்னவா...


" என்ன வெட்கமா... இவ்ளோ நாள் இல்லாமல் இப்போ என்ன திடீர்ன்னு இந்த வெட்கம் ... ஆனால் இது கூட நல்லா தான் இருக்கு... " என்றவன் அவள் முகத்தை இரு கைகளால் தாங்கி பிடிக்க... அவளோ அவனை வெட்கம் மீதுற பார்க்க தயங்கினாள்...


" இந்த வெட்கம் ரொம்ப அழகா இருக்கு மதி " என்றவன் அவளின் இதழில் மென் முத்தமிட்டான்...


அவனின் அந்த முதல் முத்தத்தில் பெண்ணவள் உடல் நடுக்கத்துடன் சிலிர்த்தது...
" ரொம்ப அழகா இருக்க " என்றவன் மெல்ல அவள் கன்னம் வருட... உணர்ச்சியின் பிடியில் கண்கள் சொருக அவன் மீது சரிந்தாள்...


தன் மீது சரிந்தவளை கைகளில் ஏந்தியவன் அவளை தன் அறைக்குள் அழைத்து சென்று மெத்தையில் கிடத்தினான்...


அப்போதும் கண்கள் சொக்க அவனை பார்த்த மதியின் விழியில் என்ன கண்டானோ... உடனே அவள் முகம் நோக்கி குனிந்தவன்.. மீண்டும் அவள் இதழில் மெல்ல தன் இதழ் பதித்தவனால்... அவளை விட்டு விலக மனமில்லாமல் போகவே... அவள் இதழில் ஆழ்ந்து முத்தமிட்டான்... அவனின் இந்த செயலுக்கு அவளிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராமல் இருக்கவே... அவள் அருகில் சரிந்து படுத்துக்கொண்டான்...

உணர்ச்சியின் தாக்கத்தில் அவன் நெற்றியில் வடிந்த வியர்வை துளிகள்... அவள் தேகத்தை நனைக்க... அவளை மொத்தமாக கொள்ளையடித்து கொண்டான்... அவளை முழுவதுமாக தனக்கு மட்டுமென அவளை தன்னுடைமை ஆக்கி கொண்ட பின்னே அவளை விட்டு விலகினான்....


பௌர்ணமியின் பனி இரவில்..


எனை மயக்கும் இளந்தளிரே


உயிர் உருகும் நேரமெல்லாம்..


உன் அணைப்பின் யோசனையே...


தீண்டா சுவை உனை பார்க்க..


தீ பிடிக்கும் தேகமெல்லாம்...


தீண்டி கண்டபின்னும்... இது தெளியாதோ தீய்ஞ்சுடரே...


**********


அறைக்குள் நுழைந்தவளை, எதார்த்தமாக பார்த்தவன் " என்ன இந்த பக்கம் " என்று கேட்க...


" நீங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க... உங்களுக்கு என்ன தான் வேணும் "


" புரியல "


" எனக்கும் தான் புரியலை... உங்களை பார்க்கும் போது எல்லாம் என் மனசு படுறபாடு எனக்கு மட்டும் தான் தெரியும் ... ஏன் மறுபடியும் மறுபடியும் என் கண்ணு முன்னாடி வந்து என்னை ரணப்படுத்துறீங்க... "


" நான் அப்படி உன்னை என்ன பண்ணேன் " என்றவன் சாவகாசமாக... அவளை பார்க்க...


" அது தான் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை அப்படின்னு ஆகிடுச்சே அப்புறம் மறுபடியும் ஏன்... இப்படி எல்லாம் நடத்துக்குறீங்க... உங்களோட இந்த காதல்... அன்பு எதுவும் எனக்கு தேவை இல்லை... தயவு செய்து என்னை விட்டு போய்டுங்க... உங்க அன்பும் அரவணைப்பும் எனக்கு வெறுப்பா இருக்கு அது உங்களுக்கு புரியுதா இல்லையா தீஷா... "


" ம்ம்ம்ம் இப்போ ரொம்ப நல்லாவே புரியுது... எப்போ என் அன்பும், அரவணைப்பும் உனக்கு வெறுப்பா மாற ஆரம்பிச்சதோ அப்போவே நான் செத்துட்டேன்... " என்றவன் அவளின் மேடிட்ட வயிற்றின் மீது தன் கையினை அவளை தீண்டாமல் சற்று தள்ளி வைத்தவன்... " இனி என் சடலத்தை பார்க்கிற கஷ்டத்தை கூட நான் உனக்கு கொடுக்க மாட்டேன் " என்றவன் அறையை விட்டு வெளியேறி இருந்தான்...



உன் காதல் என்றும் ஒரு வலியாய்


எனக்குள் வாழும்...


அதற்கு உன் நினைவுகளே...


மருந்தாக.. மாயம் செய்யும் போது,


தான் உணர்ந்தேன், உன் காதல்,


எனக்கு வலி அல்ல வரமென்று. ...



நான் வேண்டும் மரணமும் உன் மடியில் தானடி...
 
Last edited:

Mythili MP

Well-known member
Wonderland writer
#இணைதேடும்_இதழ்கவிதை

கதை விரைவில் ஆரம்பமாகும்...

ஒரு ஜாலியான ஸ்டோரி...

கதையில் இரண்டு ஜோடி...
ஒரு ஜோடி... மறுமணம் அமைப்பில் இருக்கும்..
இன்னொரு ஜோடி... கதையில் தெரிஞ்சிக்கோங்க...

இணை தேடும் இதழ் கவிதை

" இங்க எதுக்காக மாமா அழைச்சிட்டு வந்த? இந்த ஹோட்டல்ல எதுவுமே நல்லா இருக்காது ? " என்றவள் குறைப்பட்டுக்கொண்டே அவன் காட்டிய நாற்காலியில் அமர்ந்துகொண்டாள் வாணி..

" இங்க டீ நல்லா இருக்கும்டி நம்ம என்ன சாப்பிடவா போறோம் " என்றவன் டீ ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்துகொண்டான்...

டீயை எடுத்து வந்து வைட்டர் கொடுக்க அதனை வாங்கி இருவரும் பருகினர்...

டீயை பருகிய வாணியின்,பார்வையோ தனக்கு நேர் எதிர் டேபிளில் அமர்ந்திருந்த அஷ்வினை ஓறக்கண்ணால் ரசித்த படியே இருந்தது...

" என்னடி உன் புருஷன் நான் குத்துகல்லு மாதிரி உன் முன்னாடி இருக்கேன்.. உன் பார்வை என்னென்ன ரொம்ப நேரமா அடுத்த டேபிள் மேலவே இருக்கு " என்று அவளது கணவன் சிரித்தபடியே கேட்டான் ...

" ஈ எப்படி மாமா கண்டுபிடிச்ச " என்று அவள் அசடு வழியே... இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன் " சரி அது யாருன்னு சொல்லு " என்று கேட்டான்...

" அவரு என் சீனியர்... காலேஜ் படிக்கும் போது அவரு மேல எனக்கு அவ்ளோ விருப்பம் இருந்தது... என்னோட க்ரஷ் , இன்னிக்கும் பார்க்கா அப்படியே அழகா இருக்காரு... " என்று கூறியவளின் பார்வை அஷ்வினை விட்டு சிறிதும் அகலவில்லை...

அவளது பார்வையை உணர்ந்து சிரித்தபடி
" இப்போவும் புடிச்சி இருக்கா? என்ன? " என்று அவன் கேலியாக கேட்க " அது சும்மா மாமா பயப்படாதா உனக்கு துரோகம் எல்லாம் பண்ண மாட்டேன் " என்றவளும் அவனுக்கு சளைக்காமல் பதில் கொடுத்தாள்...

இருவரும் டீயை குடித்து முடித்து எழுந்துகொள்ள... அங்கே அமர்ந்திருந்த தன் மனைவியின் சீனியரை திரும்பி பார்த்தவன் " ஹெலோ பாஸ் " என்று அவனை அழைத்தான்...

அஷ்வினோ அவன் அழைத்ததும், அவனை அமர்ந்தபடியே நிமிர்ந்து பார்த்தான்...

" அய்யோ மாமா என்ன பண்ணுற? " என்ற வாணி அவனது அருகில் செல்ல...
அவனோ " பாஸ் என் மனைவிக்கு காலேஜ் டேஸ்ல உங்க மேல பயங்கர க்ரஷ்ஆமா " என்று கூறியவனின் வாயை காயால் மூடியபடியே அங்கே அமர்ந்திருந்த அஷ்வினை பார்த்து அசைட்டு சிரிப்பு சிரித்தபடி தன் கணவனை வெளியே இழுத்து வந்தாள் வாணி " அறிவில்லையா மாமா உனக்கு " என்று அவள் தன் கணவனை திட்ட அவனோ " சும்மா தாண்டி " என்றவன் அவளை தன் தோளோடு அணைத்தபடி... தன் பைக்கில் வீட்டிற்கு அழைத்து சென்றான்...

செல்லும் அவர்களை இருபக்கமும் தலையாட்டி சிரித்தபடி அஷ்வின் பார்க்க... அவன் அருகில் வந்த அவனின் அத்தை மகள் " போலாமா மாமா " என்று அவனது கரம் பற்றி கொள்ள... " போகலாம் டா " என்றவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்...

இணை தேடும் வாழ்க்கை பயணத்தில்.

என் இதழ் எழுதிய கவிதை நீ ...
 
Top